<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,607,1188" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 19 2026 12:36:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260620T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="20062026-CBE-06" position.sequence="06" ex-ref="20062026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">24 மணி நேரமும் மக்களுக்காக  உழைத்த   முதலமைச்சர்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup737459_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நல்­ல­தைச் செய்­தி­ருக்­கி­றார், வெற்றி பெறு­வார். அவ­ரைப் போன்று தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய நாடி­யைப் பிடித்­துத் திட்­டங்­கள் தீட்­டு­கிற ஒரு முத­ல­மைச்­சரை சுதந்­தி­ரக் காலத்­தி­லி­ருந்து இது­வ­ரைக்­கும் இல்லை. அவர் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற உடனே பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள் கேட்­கி­ற­போது சொன்­னார், சொன்­ன­தோடு மட்­டு­மல்­லா­மல் கடைசி வரைக்­கும் அப்­ப­டித்­தான் நடந்­தார்; “எனக்கு ஓட்­டுப் போட்­ட­வர்­க­ளுக்­கும் நான்­தான் முத­ல­மைச்­சர், எனக்கு ஓட்­டுப் போடா­த­வர்­கள் கூட ஏன் ஓட்­டுப் போட­வில்லை என்று எண்­ணு­கிற அள­வுக்கு நான் ஆட்­சியை நடத்­து­வேன்” என்று சொன்­னார். எல்­லா­ருக்­கு­மான ஒரு ஆட்­சி­யாக நடத்­தி­னார். அந்த ஆட்­சி­யைப் பற்றி யாரா­வது ஒரு குறை சொல்ல முடி­யுமா? ஒரு­வ­ரா­வது சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்­குத் தெரிந்து, 24 மணி நேரத்­தில் அநே­க­மாக இரண்டு மணி நேரம்­தான் அவர் தூங்­கு­வார் என்று நினைக்­கி­றேன். ஒரு நாள் அதி­காலை இரண்­டே­கால் மணிக்கு என்­னு­டைய தொலை­பேசி அடிக்­கி­றது. அந்த நேரத்­தில் யார் அழைப்­பார்? திரு­வண்­ணா­மலை தொகு­திக்­கா­ரன் யாருக்­கா­வது பிரச்­சி­னையா என்று யோசனை செய்து தொலை­பே­சியை எடுக்­கி­றேன். பார்த்­தால், முத­ல­மைச்­ச­ரு­டைய போன்! போன் எடுத்த உடனே, “அண்­ணன் தூங்­கிட்­டீங்­களா?” என்று கேட்­கி­றார்! இரண்­டே­கால் மணிக்­குத் தூங்­கா­மல் நான் என்ன பண்ண முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் பக்­கு­வ­மா­கச் சொன்­னேன், “ஆனா 12 மணி வரைக்­கும் படித்­துக் கொண்­டு­தான் இருந்­தேன், இப்­போ­து­தான் கண் அசந்­தது” என்று சொன்­னேன்; தூங்­கி­னேன் என்று கூடச் சொல்­ல­வில்லை. ஏனென்­றால், அவர் தூங்­கா­மல் நமக்­குப் போன் செய்­கி­றார், நான் தூங்­கி­னேன் என்று எப்­ப­டிச் சொல்ல முடி­யும்? அவர் கேட்­கி­றார், “மது­ரை­யில் அண்­ணன் கலை­ஞர் பெய­ரில் அவர் நூற்­றாண்டை முன்­னிட்டு ஒரு நூல­கம் கட்­டிக் கொண்­டி­ருக்­கி­றோமே, அது எப்­போது முடி­யும்?” என்று கேட்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மது­ரை­யில் அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளு­டைய நூற்­றாண்டு விழாவை முன்­னிட்டு, தென்­ன­கப் பகு­தி­யில் இருக்­கி­ற­வர்­கள் எல்­லாம் அறி­வா­ளி­க­ளாக வேண்­டும் என்ற ஒரே அடிப்­ப­டை­யில் கட்­டப்­ப­டு­கிற, அறிவு உல­கத்­திற்­கா­கக் கட்­டப்­ப­டு­கிற நூல­கத்­தைப் பற்றி, அதி­காலை இரண்­டே­கால் மணிக்கு அவர்கேட்­கி­றார் என்­றால், அந்த முத­ல­மைச்­சர் தூங்­கி­னாரா? தூங்­க­வில்­லையா? என்று எப்­ப­டிச் சொல்­லச் சொல்­கி­றீர்­கள்? எனவே, நாட்டு மக்­க­ளுக்­காக இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் தூங்­கி­விட்டு நமக்­காக உழைத்த தலை­வர் அந்­தத் தலை­வர். அவர் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டார் என்று நினைக்­கி­ற­போது, எங்­கள் கண்­கள் எல்­லாம் கலங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின் வழி­யில் 70 
ஆண்­டு­கால உழைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் ஒரு விதத்­தில் நாங்­கள் யோசிக்­கி­றோம்; இந்­தச் சட்­ட­மன்­றத்­தி­லி­ருந்து உங்­கள் வாயால் ‘மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர்’ என்று சொல்ல வேண்­டுமா? இந்­தச் சட்­ட­மன்­றத்­தில் உங்­க­ளு­டைய உழைப்பு என்ன? நாட்டு மக்­க­ளுக்­காக நீங்­கள் உழைத்­தது என்ன? 73 வய­தில் இருக்­கிற நீங்­கள், எனக்­குத் தெரிந்து கிட்­டத்­தட்ட 14 வய­தி­லி­ருந்து இந்த மக்­க­ளுக்­கா­கவே, கழ­கத்­திற்­கா­கவே உழைத்­துக் கொண்­டி­ருக்­கிற உங்­கள் வாயால், ‘முத­ல­மைச்­சர்’ என்று சொல்ல வேண்­டுமா? ஒரு பக்­கம் எங்­க­ளுக்கு வருத்­தம் இருந்­தா­லும் கூட, இந்­தச் சம்­ப­வம் நடை­பெ­றா­மல் இருந்­தது ஒரு விதத்­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைத் 
தரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் முத­ல­மைச்­சர் என்ன சொல்­கி­றார்? தேர்­த­லுக்கு முன்­னால் எத்­த­னையோ பொய்­கள், புறங்­கூற்­று­ கள், கட்­டுக்­க­தை­கள் எல்­லாம் சொன்­னீர்­கள். ஆனால், முத­ல­மைச்­ச­ருக்கு என்று ஒரு கண்­ணி­யம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச ­ரா­கப் பொறுப்­பேற்று முதல்­மு­த­லா­கத் திருச்­சிக்­குச் சென்று தன்­னு­டைய உரையை அவர் ஆற்­று­கி­றார். நீங்­கள் என்ன சொல்லி இருக்க வேண்­டும்? “நான் முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், எனக்கு வழி­காட்­டி­யாக ஏற்­க­னவே முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­கி­ற­வர் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்­தி­ருக்­கி­றார்; அவர் எப்­படி எல்­லா­ருக்­கும் எல்­லா­மும் கிடைக்­கிற ஆட்சி நடத்­தி­னாரோ, அதைப் போன்று நானும் நடத்­து­வேன்” என்று சொல்லி இருந்­தால், நாம் கூட ‘சபாஷ்’ என்று பாராட்டி இருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புக­ழும் சமு­தா­யத் தொண்­டும்: ஒரு ஒப்­பீடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் நீங்­கள் அங்கே என்ன பேசு­கி­றீர்­கள்? “ஏதோ சினி­மா­வில் நடித்த கார­ணத்­தி­னால் எனக்கு வாக்­க­ளித்­தார்­கள் என்று பேசு­கி­றார்­கள், எனக்கு வாயில் ஏதா­வது வந்­து­வி­டும்” என்று பேசு­கி­றீர்­கள். நீங்­கள் சினி­மா­வில் நடித்த புகழை மைய­மாக வைத்து ரசி­கப் பெரு­மக்­கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­க­லாம்; உங்­க­ளைத் திரை­யில் பார்த்த வாக்­கா­ளப் பெரு­மக்­கள் ஓட்­டுப் போட­லாம் என்று போட்­டி­ருக்­க­லாம். அல்­லது நீங்­கள் என்ன ஏற்­க­னவே இந்­திப் போராட்­டத்­திலே “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று சொல்­லிச் சிறைக்­குப் போனது உண்டா? அல்­லது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இதே சென்னை, பெரும் மழை­யின் கார­ணத்­தி­னால் - பெரும் சீற்­றத்­தின் கார­ண­மா­கத் தத்­த­ளித்­ததே... வேளச்­சேரி போன்ற பகு­தி­யில் ஜே.சி.பி. மூல­மா­கத் தான் உண­வுப் பொட்­ட­லங்­க­ளைக் கொண்டு போய் கொடுக்க வேண்­டிய நிலை எல்­லாம் இருந்­ததே; அப்­ப­டிப்­பட்ட வெள்­ளக்­கா­டாக இருக்­கிற போது நீங்­கள் படகு எடுத்­துச் சென்று அனைத்து மக்­க­ளுக்­கும் உணவு வழங்கி, மக்­க­ளுக்கு உதவி செய்­தது உண்டா? இந்­தச் சமு­தா­யத்­திற்­காக நீங்­கள் பாடு­பட்ட வர­லாறு ஏதா­வது உண்டா? எது­வுமே இல்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே, உங்­க­ளுக்கு அர­சி­யல் தொடர்பு இல்லை, சமு­தா­யத் தொடர்பு இல்லை, சமூ­கப் பணி செய்­ய­வில்லை; உங்­க­ளுக்கு இருந்த ஒரே துறை சினிமா துறை. அந்­தச் சினிமா துறை மூல­மாக ஓட்­டுப் போட்­டார்­கள் என்று சொன்­னால், அதில் உங்­க­ளுக்­குக் கோபம் வர­வேண்­டிய அவ­சி­யம் இல்­லையே? அதைச் சொல்­லி­விட்டு என்ன சொல்­கி­றீர்­கள், “எனக்கு ஏதா­வது வாயில் வந்­து­வி­டும்” என்று சொல்­கி­றீர்­கள். வள்­ளு­வர் அப்­படி சொல்­ல­வில்­லையே... ‘இனிய உள­வாக இன்­னாத கூறல் — கனி­இ­ருப்­பக் காய்­க­வர்ந் தற்று’ என்­றார். “இனி­மை­யாக எத்­த­னையோ சொல் இருக்­கி­றது. அதைச் சொல்­ல­லாம். அதை­விட்­டு­விட்டு, நீ வாயால் எதை­யா­வது சொன்­னால் உனக்கு விரோதி கிடைப்­பான்” என்­கி­றார். பழம் இருக்­கி­றது, காய் இருக்­கி­றது; எதைச் சாப்­பி­டு­வாய்? பழத்­தைத்­தானே சாப்­பி­டு­வாய், காயையா சாப்­பி­டு­வாய்? அதைத்­தானே சொல்­கி­றார், நீங்­கள் இனி­மை­யா­கச் சொல்ல வேண்­டிய எத்­த­னையோ வார்த்­தை­கள் இருக்­கிற போது, அதைச் சொல்­ல­வில்லை என்­றால், நீங்­கள் பழத்தை விட்­டு­விட்­டுக் காயைச் சாப்­பி­டு­கிற கதை என்று நான் சொல்­ல­வில்லை, வள்­ளு­வர் 
சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருக்­கு­ற­ளும் கலை­ஞர் 
கோட்­ட­மும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்­தத் திருக்­கு­றளை நீங்­கள் படிக்­க­வில்­லையா? கலை­ஞ­ருக்­குத் திருக்­கு­றள் சொந்­தம், திருக்­கு­றள் கலை­ஞ­ருக்­குச் சொந்­தம். அத­னால்­தான் இங்கே வள்­ளு­வர் கோட்­டம் கட்­டி­யி­ருக்­கி­றார் அண்­ணன் கலை­ஞர். 133 அடி சிலை கன்­னி­யா­கு­ம­ரி­யில் இருக்­கி­றது என்று சொன்­னால், அது­வும் அண்­ணன் கலை­ஞர் தானே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திருக்­கு­ற­ளுக்கு எத்­தனை பேர் உரை எழு­தி­னார்­கள்? பரி­மே­ல­ழ­க­ரி­லி­ருந்து, திருக்­கு­றள் முனு­சா­மி­ யி­லி­ருந்து, மு. வர­த­ரா­ச­னா­ரி­லி­ருந்து, இலக்­கு­வ­னா­ரி­லி­ருந்து எத்­தனை பேர் உரை எழு­தி­னார்­கள்; ஆனா­லும் இன்­றைக்­கும் பாம­ர­னுக்­குப் புரி­கிற மாதிரி உரை எழு­தி­ய­வர் என் அண்­ணன் கலை­ஞர். ... திருக்­கு­ற­ளை­ யும் அண்­ணன் கலை­ஞ­ரை­யும் மறக்க முடி­யுமா, பிரிக்க முடி­யுமா? பிரிக்க முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட குற­ளை­யெல்­லாம் முத­ல­மைச்­சர் படிக்க வேண்­டும்; நீங்­கள் படித்­தால்­தான் அப்­படி எல்­லாம் சொல்ல மாட்­டீர்­கள். “என் வாயில் ஏதா­வது வந்­து­வி­டும்” என்று சொல்­கி­றீர்­களே, எதற்கு வர வேண்­டும்? எனக்­குப் புரி­ய­வில்லை. நானும் யோசித்து யோசித்து பார்க்­கி­றேன், எதற்கு வர வேண்­டும்? திரை­யு­ல­கத்­தி­னு­டைய புகழ்ச்­சி­யால் நீங்­கள் ஆட்­சி­யைப் பிடித்­தீர்­கள் என்று உண்­மை­யைச் சொன்­னால், ஏன் கோபப்­ப­டு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இங்கே பேரா­சி­ரி­யர் ஜவா­ஹி­ருல்லா இருக்­கி­றார்... எங்­கள் வட ஆற்­காடு மாவட்­டத்­தில் வாணி­யம்­பாடி இஸ்­லா­மி­யக் கல்­லூ­ரி­யிலே சிறப்­பா­கப் பணி­யாற்­றி­னார்; பல மாண­வர்­களை உரு­வாக்கி இருக்­கி­றார் என்று அவ­ருக்கு ஒரு பெருமை உண்டு; நல்ல மாண­வர்­களை உரு­வாக்­கி­னார் என்று நம்­பு­கி­றேன். அவ­ருக்­கும் எனக்­கும் கிட்­டத்­தட்ட இரு­பது ஆண்டு கால நெருக்­க­மான நட்பு; எங்­கள்ஊர் பேரா­சி­ரி­யர் என்ற நட்பு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்ற நட்பு, இப்­போது தோழ­மைக் கட்­சித் தலை­வர் என்ற நட்பு, இப்­ப­டிப்­பட்ட நட்பு எங்­க­ளுக்கு உண்டு. அவர் தொழில் பேரா­சி­ரி­யர், அதைச் சொல்­வ­தில்­தானே அவ­ருக்­குப் பெருமை; நீங்­கள் திரைத் துறை, அது உங்­க­ளுக்­குப் பெரு­மை­தானே, அதைச் சொன்­னால், ஏன் கோவப்­ப­டு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆரின் சாது­ரி­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மூகாம்­பிகை கோயி­லுக்­குச் சென்ற கார­ணத்­தி­னால் அனை­வ­ரும் மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். ஆகி­விட முடி­யுமா? அவ­ரி­டமே அந்­தக் காலத்­தில் கேட்­டார்­கள், “நீங்­கள் பெரி­யார் பெரி­யார் என்று சொல்­கி ­றீர்­களே, பெரி­யா­ருக்கே நூற்­றாண்டு விழா கொண்­டா­டு­கி­றீர்­களே, பெரி­யா­ரு­டைய எழுத்­துச் சீர்­தி­ருத்­த ங்­களை நீங்­கள்­தானே அறி­வித்­தீர்­கள், ஏன் மூகாம்­பிகை கோயி­லுக்கு சென்­றீர்­கள்?” என்று கேட்­டார்­கள். அவர்­க­ளெல்­லாம் பத்­தி­ரி­கை ­யா­ளர்­க­ளைச் சந்­திக்­கிற முத­ல­மைச்­சர். உடனே மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். சொன்­னார், “வேறு ஒன்­றும் அல்ல; நான் மூகாம்­பி­கை ­யில் எங்­கள் அம்மா சத்­யா­வைப் பார்த்­தேன்” என்று ஒரே போடு போட்­டார். அங்கே என்­னு­டைய தாயின் உரு­வத்தை நான் பார்த்­தேன்” என்று சொன்­ன­வர் மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னால் ஒன்று சொல்­கி­றேன், மிஸ்­டர் சி.எம். சார்... நல்ல ஆட்சி நடத்­துங்­கள். இங்கே நம்­மு­டைய செந்­தில்­வே­லன் குறிப்­பிட்­ட­தைப் போன்று, இன்­றைக்­குப் போட்­டி­ருக்­கிற திட்­டங்­கள் எல்­லாம் எல்­லா­ருக்­கும் 
எல்­லாம் கிடைக்க வேண்­டும் என்­கிற திரா­விட மாடல் ஆட்சி போட்ட திட்­டங்­கள்­தான். எப்­படி நாம் பிறந்த மண்­ணுக்­குத் ‘தமிழ்­நாடு’ என்று பெய­ரிட்ட பேர­றி­ஞர்அண்­ணாவை நாம் மறக்­க­வில்­லையோ, அதைப்­போன்று முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை இந்­தத் தமிழ் மண் மறக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு இலக்­கி­யக் கூட்­டத்­திலே நான் சொன்­னேன், “நாட்­டிலே இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி பெற வேண்­டும் என்று திட்­டங்­கள் போட­லாம், மாநி­லம் வளர்ச்சி பெற வேண்­டும் என்று திட்­டங்­கள் போட­லாம்; ஆனால் ஒரு குடும்­பம் வளர்ச்சி பெற வேண்­டும் என்று பொரு­ளா­தார வளர்ச்­சித் திட்­டம் போட வேண்­டும் என்­றால், அது முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னால் மட்­டும்­தான் முடி­யும்.” அனைத்து வீடு­க­ளுக்­கும், நம்­மு­டைய பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் எத்­த­னையோ திட்­டங்­களை அவர் தந்­தார்; அத­னால் அவர் போட்­டி­ருக்­கிற திட்­டங்­கள் எல்­லாம் நல்ல திட்­டங்­கள். அந்­தத் திட்­டங்­க­ளைக் கூடு­மான வரைக்­கும் பின்­பற்­றுங்­கள், இப்­போது அதைத்­தான் என்­னால் சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதிய அமைச்­ச­ர­வை­யின் நிர்­வா­கத் திற­மை­யின்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் முதல் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரையே நாம் பார்க்­க­வில்லை; எப்­படி அமைச்­சர் எழப் போகி­றார், எப்­ப­டிப் பதில் சொல்­லப் போகி­றார் என்று ஒன்­னும் புரி­ய­வில்லை. சட்­ட­ச­பைக்­குப் போனால்­தான் எங்­க­ளுக்கே புரி­யும். ஏனென்­றால், இங்கே செந்­தில்­வே­லன் சொன்­ன­தெல்­லாம் பார்த்­தால் எனக்கே தலை கிறு­கி­றுக்­கி­றது. அவ­ர­வர் துறை பற்றி அவர்­க­ளுக்கே தெரி­ய­வில்லை. சுற்­றுச்­சூ­ழல் துறைக்­கும், சுற்­று­லாத் துறைக்­கும் இருக்­கிற மாறு­பாடே புரி­ய­வில்லை என்­கி­றார்; என்ன நிலை­மையோ எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இருந்­தா­லும் சட்­ட­மன்­றத்­தில் வைத்­துக் கொள்­ள­லாம் என்று சொல்லி, மிஸ்­டர் சி.எம். சார், தமிழ்­நாட்­டுக்கு நல்­ல­தைச் செய்­யுங்­கள், நல்­லது செய்­யுங்­கள். நல்­லது செய்­ய­வில்லை என்­றால் அர­சி­யல் விமர்­ச­னம் வரத்­தான் செய்­யும், அதை­யும் தாங்­கிக் கொள்­ளத்­தான் வேண்­டும். அதற்­காக “என் வாயில் எது வேண்­டு­மா­னா­லும் வரும்” என்­றால், ஏதோ ஒரு முறை நீங்­கள் சொன்­னால் நாங்­கள் பொறுத்­துக் கொள்­கி­றோம்; இல்­லை­யென்­றால் எங்­க­ளுக்­கும் வாயில் எது எதெல்­லாமோ வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீண்­டும் ஒரு­முறை எங்­களை எல்­லாம் பொத்­திப் பொத்தி வளர்த்த எங்­கள் அண்­ணன் கலை­ஞ­ருக்கு, இங்கே சிறப்­பான பிறந்­த­நாா­ளா­கக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கிற பகு­திக் கழ­கத்­திற்­கும், நன்­றி­யோடு உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளித்த இந்­தத் துறை­மு­கம் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், அதன் மூல­மாக இங்கே சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக உரு­வாகி இருக்­கிற உங்­கள் வீட்­டுப் பிள்ளை சேகர்­பாபு அவர்­க­ளுக்­கும், இந்த நிகழ்ச்­சி­யைச் சிறப்­பாக ஏற்­பாடு செய்த தலை­வர் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளுக்­கும் எனது கோடான கோடி நன்­றி­யைச் சொல்லி, உரையை நான் நிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>