<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,78,957,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 20 2026 03:44:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260620T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20062026-MDU-06" position.sequence="06" ex-ref="20062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">பெண்­ண­டிமை விலங்­கினைத் தகர்த்த –   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">பெண் உரி­மை­களை போரா­டிப் பெற்ற போரா­ளி­கள் இயக்­கம்  தி.மு.க.!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup596793_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ச</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ங்­க­கால வாழ்­வி­யல் முறை­க­ளும், வள்­ளு­வ­ரின் வாழ்க்கை நெறி­க­ளை­யும் இரும்­புத் திரை­யிட்டு மறைத்­து­விட்டு வேத­கால வாழ்க்­கை­மு­றையை தமிழ்­நாட்­டில் ஆரி­யர்­க­ளால் பர­வ­லாக்­கப்­பட்ட கார­ணத்­தி­னால் தமி­ழர்­க­ளது உயர்ந்த நாக­ரிக வாழ்க்­கை­நெறி சித­ற­டிக்­கப்­பட்டு ஆரிய கலாச்­சா­ரம் எல்­லாத் துறை­க­ளி­லும் தலை­தூக்­கி­ய­மை­யால், பெண்­கள் அடி­மை­யாக்­கப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­க­ளது வாழ்க்­கை­முறை சிதைந்து சின்னா­ பின்­ன­மாக்­கப்­பட்­டது. சுருக்­க­மா­கச் சொன்­னால் அவர்­கள் முற்­றி­லும் உரி­மை­யி­ழந்த போகப் பொரு­ளா­கத்­தான் சமூ­கத்­தில் கரு­தப்­பட்­டார்­கள். பெண்­கள், ஆண்­க­ளுக்கு என்­றும் அடி­மை­தான். அவர்­க­ளுக்­கென எந்த தனி உரி­மை­யும் இல்லை என்ற இருண்ட காலத்­தில்­தான் தந்­தைப் பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் என்­கின்ற தமிழ்ப் பண்­பாட்­டுச் சிந்­த­னை­யா­ளர்­கள், மக­ளிர் உரி­மை­க­ளுக்­காக போராட்­டக் களங்­களை அமைத்து தமிழ்­நாட்­டில் நீண்­ட­கால போராட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் பெண்­ணு­ரி­மை­க­ளின் அடிப்­படை நியா­யங்­கள் - வாதங்­கள் எழுத்­து­வ­டி­வம் பெற்று தந்­தைப் பெரி­யா­ரின் “குடி­ய­ர­சுப்” பத்­தி­ரி­கை­யி­லும், “விடு­த­லைப்” பத்­தி­ரிக்­கை­யி­லும், பேர­றி­ஞர் அண்­ணா­வின் “திரா­விட நாடு” - “காஞ்சி” இதழ்­க­ளி­லும், ஆங்­கில இதழ்­க­ளான “Home land” - “Home Rule” ஆகிய பத்­தி­ரி­கை­க­ளி­லும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் மூத்த பிள்­ளை­யான “முர­சொ­லி­யி­லும்” பெண்­ணு­ரி­மை­க­ளுக்­கான அடிப்­படை நியா­யங்­களை உள்­ள­டக்­கிய வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளும், கட்­டு­ரை­க­ளும் பெரு­ம­ள­வில் இடம்­பெற்­றுள்­ளது என்­ப­தும் அதன்­மூ­லம் தமிழ்­நாட்டு மக்­கள் விழிப்­பு­ணர்வு பெற்று பெண்­ண­டிமை என்­கின்ற காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான பெண் ஒடுக்­கு­மு­றை­க­ளுக்­கும், கண்­ மூடி த்தன­ மான பழக்­க­வ­ழக்­கங்­க­ளுக்­கும் எதி­ரான பல் ­வேறு போராட்­டக் களங்­களை தமிழ்­நாட்­டில் அமைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த தொடர் போராட்­டங்­க­ளின் மூலம் ஓர­ளவு வெற்­றி­யும் கண்­டார்­கள். இந்­தப் போராட்­டத்­தின் ஒரு கட்­ட­மாக 1938 ஆம் ஆண்டு இந்­தித்­­­தி­ணிப்பை எதிர்த்து தந்­தைப் பெரி­யார் நடத்­திய அந்த நடைப்­ப­ய­ணப் போராட்­டத்­தில் திரா­விட இயக்­கத்­தின் புரட்­சி­க­ர­மான சிந்­த­னை­க­ளுக்கு தங்­களை ஈடு­ப­டுத்­திக் கொண்ட பெண்­கள் பலர் இந்த போராட்­டத்­திலே கலந்து கொண்­டார்­கள் என்­பது இன்­றைய இரு­பால் இளை­ஞர்­கள் அறிந்து கொள்ள வேண்­டிய மிக முக்­கி­ய­மான செய்­தி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி பல்­வேறு போராட்­டங்­க­ளைத் திரா­விட இயக்­கங்­கள் ஒன்­றி­ணைந்து தொடர்ந்து மேற்­கொண்­ட­தன் விளை­வா­கத்­தான் 1967ஆம் ஆண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் ஆட்சி அமைந்­த­வு­டன் மூன்று வர­லாறு போற்­றும் சட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவை­கள்­தான், சென்னை மாகா­ணம் தமிழ்­நாடு என பெயர் மாற்­றம் செய்­யப்­ப­டும். சுய­ம­ரி­யாதை திரு­ம­ணங்­கள் சட்­ட­பூர்­வ­மாக்­கப்­ப­டும். இந்­தித்­தி­ணிப்பை என்­றும் எதிர்ப்­போம். தமிழ்­நாடு என்­றும் தமிழ்,ஆங்­கி­லம் என்ற இரு மொழிக்­கொள்­கை­யைத்­தான் பின்­பற்­றும் என்ற சட்­டங்­க­ளா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச் சட்­டங்­களை வடி­வ­மைத்­தது பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் உரு­வான திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி என்­பதை இன்­றைய இரு­பால் இளை­ஞர்­க­ளும் அறிந்து விழிப்­பு­ணர்வை பெற்­றாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுய­ம­ரி­யாதை திரு­ம­ணங்­கள் சட்­ட­அங்­கீ­கா­ரம் பெற்­றது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி காலத்­தில்­தான்.  இதன்­பின்­னர்­தான், இயல்­பாக மாலை மாற்­றிக் கொண்டு மங்­கல நாண் அணி­விக்­கின்ற திரு­மண நிகழ்ச்­சி­க­ளும், மன ஒப்­பு­த­லோடு மாலை மாற்­றிக் கொள்­கின்ற திரு­ம­ணங்­க­ளும் சட்ட அங்­கீ­கா­ரம் பெற்­றது என்­பதை இன்­றைய இரு­பால் இளை­ஞர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டு­வது இக்­கட்­டு­ரை­யின் நோக்­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச் சட்­டம் வரு­வ­தற்கு முன்பு எளிய முறை­யில் மாலை மாற்றி மங்­கல நாண் அணி­விக்­கும் திரு­மண நிகழ்ச்­சி­கள் சட்­டப்­படி செல்­லத்­தக்­கவை அல்ல. மாறாக, அம்மி மிதித்து அருந்­த­திப் பார்த்து ஆரிய புரோ­கி­தர்­க­ளால் கன்­னிகா தானம் செய்­கின்ற திரு­ம­ணங்­கள்­தான் சட்­டப்­படி செல்­லத்­தக்க திரு­ம­ணங்­க­ளா­கும். இந்த அவல நிலை­யைத் தகர்த்து தரை­மட்­ட­மாக்­கி­விட்டு சுய­ம­ரி­யாதை திரு­ம­ணங்­களை சட்­ட­பூர்­வ­மாக்­கிய புரட்­சி­க­ர­மான இயக்­கம் திரா­விட முன்­னேற்ற கழ­கம் என்­பதை இரு­பால் இளை­ஞர் ­களும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.  இந்­தப் பய­ணம் முடிந்­து­வி­ட­வில்லை மாறாக, ஒன்­றி­யத்­தில் சனா­தன ஆட்சி தொட­ரு­மட்­டும், இந்­தப் பய­ண­மும் தொட­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1989 ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தலை­மை­யில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைத்த பொழுது, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் பெண்­க­ளுக்கு தங்­க­ளது பொதுக் குடும்ப பூர்­வீ­கச்­சொத்­தில் ஆண்­க­ளுக்கு  நிக­ரான சம­பங்கு உண்டு என்­பதை உறு­தி­செய்­யும் சட்­டத்தை நிறை­வேற்­றி­னார்­கள். அந்த சட்­ட­மன்­றக் கூட்­டத்­தில்­தான் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் முத்­தமி­ ழறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தனக்கு இந்­தச் சட்­டம் கொண்­டு­வர வேண்­டும் என்ற உந்­து­தல் ஏற்­ப­டு­வ­தற்­குக் கார­ணம் என்­னு­டைய தலை­வர் தந்தை பெரி­யார் அவர்­கள் 1929 ஆம் ஆண்டு செங்­கல்­பட்­டிலே நடை­பெற்ற சுய­ம­ரி­யாதை மாநாட்­டில் பெண்­க­ளுக்கு தங்­கள் குடும்ப பூர்­வீ­கச்­சொத்­தில் ஆண்­க­ளுக்கு நிக­ரான சம­பங்கு வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, அந்­தப் புரட்­சி­க­ர­மான தீர்­மா­னம்­தான் இந்­தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு எனக்கு உந்­து­சக்­தி­யாக இருந்­தது எனக் குறிப்­பிட்­டார். இந்த உரி­மை­களை முழு­வீச்­சில் பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கும் சம உரி­மைப்­பெற்ற பெண்­க­ளைக் கண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பூரிப்­பும், பெரு­ம­கிழ்ச்­சி­யும் அடை­கி­றது. இந்த வர­லாற்­றுப் பக்­கங்­களை பெண்­கள் அறிந்­திட வேண்­டும் என்­பதே இந்த கட்­டு­ரை­யின் நோக்­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் இந்த வர­லாறு பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்­வ­முள்ள இரு­பால் இளை­ஞர்­கள் இருப்­பார்­க­ளே­யா­னால், அவர்­கள் பார­தி­தா­சன் பாடல்­கள் அடங்­கிய புத்­த­கத்­தின் 81-ம் பக்­கத்­தி­லி­ருந்து படி­யுங்­கள் -  புதிய வெளிச்­சம் உங்­க­ளுக்­குத் தென்­ப­டும். (பார­தி­தா­சன் பாடல்­கள் பக்­கம் 79 தொகுப்பு டாக்­டர் தொ.பர­ம­சி­வன்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­கள் எல்­லாத் துறை­க­ளி­லும் ஆண்­க­ளுக்கு நிக­ரான சம­உ­ரிமை பெற்­ற­வர்­கள் என்­பதை சித்­தாந்த அடிப் ­படை­யி­லும், சட்ட அடிப்­ப­டை­யி­லும் உறுதி செய்த இயக்­கம் “திரா­விட இயக்­கம்”. ஆம்!  திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்­பதை இன்­றைய மக­ளிர் சமூ­கம் வர­லாற்றை திரும்­பிப் பார்த்து விழிப்­பு­ணர்ச்சி பெற வேண்­டும். இது­மட்­டு­மல்ல, இனி­யும் பெண்­க­ளின் உரி­மைக்­கா­க­வும், பாது­காப்­பிற்­கா­க­வும் தொய்­வின்றி தொடர்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கும் பெண்­கள் பாது­காப்பு இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதை விழிப்­புள்ள பெண் இனம் நினை­வில் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய அர­சி­யல் சட்­டப்­படி உரு­வாக்­கப்­பட்­டுள்ள நாடா­ளு­மன்­றம், சட்­ட­மன்­றங்­கள், உள்­ளாட்சி மன்­றங்­கள் ஆகிய மக்­கள் பிர­தி­நி­தித்­துவ மன்­றங்­க­ளில் பெண்­க­ளுக்­கான 33 சத­வீத ஒதுக்­கீடு உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தோழமை கொண்ட இயக்­கங்­க­ளோடு இணைந்து தொடர்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கும் இயக்­கம் “திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்”. ஆனால் இந்த மசோதா நாடா­ளு­மன்­றத்­திலே நிறை­வேற்­றப்­ப­டா­மல் தடுத்­து­நி­றுத்­து­கின்ற கட்சி ஒன்­றிய ஆட்­சி­யிலே உள்ள பார­திய ஜனதா கட்சி என்­பதை தமிழ்­நாட்­டில் உள்ள பெண்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். ஆட்சி அதி­கா­ரத்தை ஜன­நா­ய­கத்­திலே கைப்­பற்­று­வது என்­பது ஒரு கட்­டம். அதில் மக்­க­ளின் பெரும்­பான்மை எடுக்­கும் முடிவே இறு­தி­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சி­யல் வெற்­றிக்­காக மட்­டுமே போரா­டு­கின்ற இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இல்லை. மாறாக, தேர்­தல் முடி­வு­களை புறந்­தள்­ளி­விட்டு, மக்­க­ளின் வாழ்­விற்­கா­க­வும், வளர்ச்­சிக்­கா­க­வும் தொடர்ந்து தொய்­வின்றி பய­ணம் மேற்­கொள்­ளும் ஒரு போராளி இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். எனவே, இரு­பால் இளை­ஞர்­க­ளும் உங்­கள் உரி­மை­களை தக்­க­வைத்­துக் கொள்­ள­வும், எஞ்­சிய உரி­மை­களை ஈட்­டிப்­பெ­ற­வும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­கின்ற இந்­தப் போரா­ளி­கள் நிறைந்த இயக்­கம் உங்­களை வழி­ந­டத்­தும். உங்­க­ளோடு இணைந்து போரா­டும்,  விளை­வு­க­ளைப்­பற்றி கவ­லைப்­ப­டா­மல் உங்­க­ளுக்கு என்­றும் துணை­நிற்­கும். இரு­பால் இளை­ஞர்­க­ளும் விழிப் ­புணர்­வு­பெற்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சித்­தாந்த வழி­யி­னை­யும், வழி­காட்­டு­த­லை­யும் பின்­பற்­றுங்­கள். உங்­கள் உரி­மை­களை பாது­காத்­துக் கொள்­ளுங்­கள். எதிர்­கால சமு­தா­யத்­தின் வார்ப்­ப­டங்­க­ளாம் இரு­பால் இளை­ஞர்­க­ளும் தங்­கள் உரி­மை­க­ளைப் பாது­காத்­திட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­து­டன் தங்­களை இணைத்­துக் கொள்ள விரைந்து வாரீர்!  களம் காண்­போம் - காப்­போம் நம் உரி­மை­களை!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>