<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,957,816" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 20 2026 03:53:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260620T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20062026-VLR-05" position.sequence="05" ex-ref="20062026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.5">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">ஆளுநர் உரையில் ஆர்.எஸ்.எஸ். வாடை அடிக்கிறதே?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup598538_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18.5">த.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">வெ.க அர­சின் சார்­பி­லான முதல் ஆளு­நர் உரை­யில் முந்­தைய திரா­விட மாடல் அர­சின் மொழிக்­கொள்கை, தமிழ்ப் பண்­பாட்டு அடை­யா­ளங்­கள், சமூக நீதித் திட்­டங்­கள், தொழில் வளர்ச்சி, கல்­வி-­­ம­ருத்­து­வம் உள்­ளிட்ட பல­வும் அப்­ப­டியே அறி­விக்­கப்­பட்டு, அதன் மீது த.வெ.க.வின் ஸ்டிக்­கர் மட்­டும் ஒட்­டப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டின் நிர்­வா­கக் கட்­ட­மைப்­பும் - கொள்கை முடி­வு­க­ளும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தால்­தான் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன               என்­பதை இப்­போ­தைய த.வெ.க. ஆட்­சி­யில்  மட்­டு­மல்ல, முந்­தைய அ.தி.மு.க. ஆட்­சி­யி­லும் மக்­கள் பார்க்­கத்­தான் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">அதே நேரத்­தில், ஆளு­நர் உரை­யின் தொடக்­கத்­தில் தமிழ்த்­தாய் வாழ்த்­தும், உரை­யின் நிறை­வில் தேசிய கீத­மும் பாடப்­ப­டும் என்ற திரா­விட மாடல் அர­சின் உறு­திப்­பாடு, த.வெ.க. அர­சி­டம் இல்லை. தொடக்­கத்­தி­லும் நிறை­வி­லு­மாக இரண்டு முறை தேசிய கீதம் இசைக்­கப்­பட வேண்­டும் என்ற பா.ஜ.க.வின் அழுத்­தத்­திற்கு அடி­மை­யாகி, அதன்­ப­டியே செய்­தி­ருக்­கி­றது த.வெ.க. அரசு. அதா­வது, இரண்டு முறை தேசிய கீதத்­திற்கு மரி­யாதை. தமிழ்த்­தாய் வாழ்த்­துக்கு ஒரே­யொரு முறை­தான் அந்த மரி­யாதை, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">“அத­னால் என்ன?” என்று கேட்­கக்­கூ­டிய சபா­நா­ய­கர் வாய்த்­தி­ருக்­கும் அவை­யில், இவர்­க­ளி­டம் நிமிர்ந்த முது­கெ­லும்பை எதிர்­பார்க்க முடி­யா­து­தான். த.வெ.க அரசு                  என்­பது டெல்லி எஜ­மா­னர்­க­ளின் புதிய சேவ­கர்­கள். அத­னால்­தான், எதிர்க்­கட்­சித் 
தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், “பா.ஜ.க. வுக்­கும் த.வெ.க. வுக்­கு­மான இணக்­கம் தெரி­கி­றது” என்று வெளிப்­ப­டை­யாக விமர்­சித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் தனிச்­சி­றப்பு மிக்க, நூற்­றாண்டு கால இந்து அற­நி­லை­யத்­துறை தொடர்­பான நிலைப்­பாட்­டி­லும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் -பா.ஜ.க.வின் ஊது­கு­ழ­லாக த.வெ.க. அர­சின் சார்­பி­லான ஆளு­நர் உரை வெளிப்­பட்­டி­ருக்­கி­றது. நீதிக் ­கட்­சிக் காலத்­தில் தொடங்கி, ஓமந்­தூ­ரார், -­­கா­ம­ரா­ஜர் போன்ற காங்­கி­ரஸ் முத­ல­மைச்­சர்­கள் வழி தொடர்ந்து, திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி வரை­யி­லும் கோயில் சொத்­து­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக வலி­மை­யா­கக் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்து அற­நி­லை­யத்­து­றையை எப்­ப­டி­யா­வது சிதைத்து விட­வேண்­டும் என்­ப­து­தான்  ஆர்.எஸ்.எஸ். – - பா.ஜ.க. மற்­றும் அதன் பரி­வா­ரங்­க­ளின் எண்­ண­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திருக்­கோ­யில்­களை மீண்­டும் தங்­கள் விருப்­ பத்­திற்­கு­ரிய விளை­யாட்­டுப் பொரு­ளா­கப் பயன்­­படுத்த வேண்­டும் என்­ப­து­தான் அவர்­க­ளின் இந்த எண்­ணத்­தின் பின்­ன­ணி­யில் உள்ள ரக­சி­யத் திட்­டம். திரா­விட மாடல் ஆட்­சி­யில் அதற்கு இடம் கொடுக்­கப்­ப­ட­ வில்லை. 4000 திருக்­கோ­யில் ­க­ளுக்கு  குட­மு­ழுக்கு நடத்­தப்­பட்­ட­து­டன், பல­த­ரப்­பட்ட ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­            மி­ருந்த ஏறத்­தாழ 1,055 திருக்­கோ­யில்­க­ளுக்கு சொந்­த­மான 8,100 ஏக்­கர் நிலங்­கள் மீட்­கப்­பட்­டன. இதன் மதிப்பு சுமார் 8,500 கோடி ரூபாய். ஆன்­மிக அன்­பர்­க­ளின் பொற்­கா­ல­மாக திரா­விட மாடல் ஆட்சி திகழ்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தற்­போ­தைய த.வெ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். விரும்­பு­வது போல இந்து அற­நி­லை­யத்­­துறையை,சீர்­தி­ருத்­தம் என்ற பெய­ரில் சிதைப்­ப­தற்­கேற்ற வகை­யில் ஓர் அமைச்­சரை அந்­தத் துறைக்கு நிய­மித் ­தி­ருப்­ப­து­டன், ஆளு­நர் உரை­யில், “இந்து சமய அற­நி­லை­யத்­து­றை­யில் கட்­ட­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்­களை இந்த அரசு மேற்­கொள்­ளும். அசை­யும் மற்­றும் அசையா சொத்­து­கள் அனைத்­தும் அதன் புனி­த­மான நோக்­கங்­க­ளுக்­காக மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது இந்த அர­சால் உறுதி செய்­யப்­ப­டும்” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நிர்­வாக முறை­கே­டு­ க­ளைக் களை­வ­தற்­காக இந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தாக வெளிப்­பார்­வைக்­குத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் ஆளு­நர் உரை­யில், உள்­ளார்ந்த சதி நோக்­கம் மறைந்­தி­ருப்­­பதைக் கவ­னிக்க மறக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">புனி­த­மான நோக்­கங்­கள் என்ற சொல்­லுக்­குள் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா புதைத்­தி­ருக் ­கி­றதோ என்ற சந்­தே­கம் எழு­கி­றது. கார­ணம், திருக்­கோ­யில் சொத்­து­கள் ஆன்­மி­கப் பணி­யு­டன் அறப்­ப­ணி­களை மேற்­கொள்­வ­தற்­கும் பயன்­ப­டு­கின்­றன. ‘மக்­கள் தொண்­டும் 
மகே­சன் தொண்­டு­தான்’ என்­கிற தமிழ் அருள்­நெ­றி­யின் அடிப்­ப­டை­யில், கருணை இல்­லங்­கள், பக்­தர்­கள் நடத்­தும் நிகழ்ச்­சி­க­ளுக்­கான மண்­ட­பங்­கள், அவர்­களுக்­குத் தேவை­யான பூசைப் பொருட்­களை விற்­பனை செய்­யும் கடை­கள், ஏழைக் குடும்­பத்­துப் பிள்­ளை ­க­ளுக்­கான கல்வி நிலை­யங்­கள் எனப் பல திட்­டங்­கள், ஆன்­மி­கப் பணி­யு­டன் தொடர்­பு­டைய அறப்­ப­ணி­யா­கத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது திரா­விட மாடல் ஆட்­சி­யில் மட்­டு­மல்ல, அதற்கு முந்­தைய 
ஆட்­சிக்­கா­லங்­களி­லும் நடை­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எடுத்­துக்­காட்­டாக, பழ­நி­யில் உள்ள 
அருள்­மிகு பழ­நி­யாண்­ட­வர் ஆட­வர் கல்­லூரி, மக­ளிர் கல்­லூரி ஆகி­ய­வை­யும், குற்­றா­லத்­தில் உள்ள பரா­சக்தி கல்­லூ­ரி­யும் இந்து சமய அற­நி­லை­யத்­துறை சார்­பில் நீண்­ட ­கா­ல­மாக நடை பெற்று வரு­கின்­றன. அது­போ­லவே, சென்­னை­யில் கடந்த ஆட்­சி­யில் கற்­ப­காம்­பாள் பெண்­கள் கலை - – அறி­வி­யல் கல்­லூரி தொடங்­கப்­பட்­டது. 
முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்­சி­யில் சைவ - – வைண­வத் திருக்­கோ­யில்­க­ளில் அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­வ­தற்­கான ஆக­மப் பயிற்­சிப் பள்­ளி­கள் தொடங்­கப்­பட்­டன. திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் அனைத்து சாதி அர்ச்­ச­கர்­கள், ஓது­வார்­கள், பெண் ஓது­வார்­கள் ஆகி­யோ­ருக்­குப் பணி ஆணை வழங்கி, கோயில் கரு­வ­றைக்­குள் சமூக நீதியை நிலை­நாட்­டி­ய­ 
து­டன், ‘அன்­னைத் தமி­ழில் அர்ச்­சனை’ என்று திருக்­கோ­யில்­க­ளில் தமிழ் மந்­தி­ரங்­கள் ஒலிக்­கச் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இவை அனைத்­தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கண்­களை உறுத்­தின. கல்­லூ­ரி­கள் கட்­டு­வ­தால், திருக்­கோ­யில்­க­ளின் புனி­த­மான நோக்­கம் சிதை­வ­தா­க­வும், இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­கம் இவற்றை செய்­யக்­கூ­டாது என எதிர்ப்­புக் குரல்­கள் கேட்­டன. தனது பரி­வார அமைப்­பு­கள் மூலம் வழக்­குத் தொடுத்­துப் பார்த்­தன. இந்து சமய அற­நி­லை­யத்­து­றை­யையே கலைக்க வேண்­டும் என்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">‘கலைக்க வேண்­டும்’ என்­கிற ஆர்.எஸ்.எஸ். கொள்­கை­யின் வாடை­தான், ‘கட்­ட­மைப்­புச் சீர்­தி­ருத்­தம்’ என்ற பெய­ரில் த.வெ.க. 
அர­சின் சார்­பி­லான ஆளு­நர் உரை­யில் வெளிப்­பட்­டி­ருக்­கி­றதோ! நூற்­றாண்­டுக் கால அற­நி­லை­யத்­து­றை­யின் அறப்­ப­ணி­க­ளை­யும், கரு­வறை சமூக நீதி­யை­யும் தொடர்ந்­தி­டும்துணிச்­சல் த.வெ.க. அர­சுக்கு இருக்­கி­றதா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>