<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1303" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 21 2026 03:42:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260621T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="21062026-MDU-05" position.sequence="05" ex-ref="21062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">21.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">நல்லவைகளை வரவேற்று – அல்லவைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியினர் கடமை!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">கடந்த ஆட்சியின் சிறப்பான திட்டங்களுக்கு   வேறுவடிவம் பூசி வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேச்சு! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup601679_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup589214_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Sivasankarc.jp_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூன்.21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் ஆளு­நர் உரை மீதான விவா­தத்­தில் முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் பேசு­கை­யில் ஏற்­க­னவே இருந்த ஆட்­சி­க­ளில் எவை­யெல்­லாம் சிறப்­பாக இருந்­ததோ அதை எடுத்­துப்­போட்டு அதற்கு வேறு வடி­வம் பூசி இன்­றைக்கு வெளிப்­ப­டுத்த விரும்­பு­கி­றீர்­கள் என்று குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­கு­றித்து முன்­னாள் அமைச்­சர் சா.சி. சிவ­சங்­கர் பேசி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, வணக்­கம். இருள் படிந்த தமி­ழ­கத்தை விழிப்­பு­றச்­செய்த தந்தை பெரி­யார் அவர்­க­ளை­யும், எளிய மக்­களை அர­சி­ய­லுக்கு கொண்­டு­வந்த பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு இந்­தி­யா­வில் சிறந்த மாநி­லம் தமிழ்­நாடு என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு தமிழ்­நாட்டை வடி­வ­மைத்த நவீன சிற்பி, எங்­கள் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) சமீ­பத்­தில், நடை­பெற்ற நிதி ஆயோக் கூட்­டத்­தில் இன்­றைய முதல்­வர் அவர்­கள் பேசும்­போது, இந்­தி­யா­வின் இரண்­டா­வது பொரு­ளா­தார மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்­கி­றது என பெரு­மி­த­மாக குறிப்­பி­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்த திரா­விட மாடல் முதல்­வர், (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழ­கத்­திற்கு பல்­வேறு நல­திட்­டங்­களை வழங்­கிய எங்­கள் மகத்­தான தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய வணக்­கத்தை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி தமி­ழ­கத்­தில் விளை­யாட்­டுத் துறை திரும்­பிப் பார்க்­கப்­ப­டா­மல் இருந்­ததை திரும்­பிப் பார்க்க வைத்து, தமி­ழ­கத்­திற்கு புதிய சிறப்­புத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­திய எங்­க­ளது இளம் தலை­வர், இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) மூன்­றா­வது முறை­யாக என்னை வெற்றி பெற வைத்த குன்­னம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­னு­டைய வாக்­கா­ளர் பெரு­மக்­க­ளுக்கு என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். என்­னு­டைய வெற்­றிக்கு உழைத்த கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்கு, நான் எப்­போ­தும் நன்றி மற­வா­த­வன், எனவே அவர்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஆளு­நர் உரை­யில் நேற்­றைக்கு நடை­பெற்ற அந்த சம்­ப­வங்­களே இந்த அரசு எப்­படி போகப் போகி­றது. என்­பதை எடுத்­துக்­காட்டி இருக்­கி ­றது. ஆளு­நர் உரையை நிறைவு செய்த ஆளு­நர் அவர்­கள், மிகுந்த வாஞ்­சை­யோடு ஒரு தக­வலை பதி­விட்­டி­ருக்­கி­றார். தமி­ழ­கத்­தில் ஒரு வர­லாற்று நிகழ்வு நடை­பெற்­றி­ருக்­கி­றது என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். இந்த அவை­யில், கடந்த மூன்று நான்கு ஆண்­டு­க­ளாக ஆளு­ந­ராக இருந்த ஆர்.என். ரவி அவர்­கள் வரு­கைத் தந்து, ஆளு­நர் உரைக்கு உறுப்­பி­னர்­கள் வெளி­ந­டப்பு செய்­வதை பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால், ஆளு­நரே வெளி­ந­டப்பு செய்த பெரு­மைக்­கு­ரிய ஆர்.என். ரவி அவர்­கள், இந்த அவை­யில் வைத்த குற்­றச்­சாட்டு, கடந்த திரா­விட மாடல் அரசு தேசிய கீதத்தை முத­லில் ஒலிக்­க­வில்லை என்­ப­து­தான். இந்த அரசு, நீங்­கள் எடுத்­தி­ருக்­கின்ற நட­வ­டிக்­கை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநில உரி­மை­க­ளுக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உரத்த குர­லாக ஒலிப்­பது தமிழ்­நா­டு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சா.சி. சிவ­சங்­கர்: பேர­வைத் தலை­வர் அவர்­களே, நீங்­கள் ஒரு மூத்த அர­சி­யல் தலை­வர், உங்­க­ளுக்கு தெரி­யாத வர­லாறு கிடை­யாது. மாநில உரி­மை­க­ளுக்­கான உரத்த குர­லாக இன்­றைக்­கும் ஒலிப்­பது தமிழ்­நா­டு­தான். அது முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் கால­மாக இருந்­தா­லும், எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முதல்­வர் தள­பதி அவர்­கள் இருந்த கால­மாக இருந்­தா­லும், இன்­னும் சொல்­லப்­போ­னால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்­டி­ருந்த மறைந்த மரி­யா­தைக்­கு­ரிய அம்­மை­யார் அவர்­க­ளு­டைய காலத்­தி­லும் மாநில உரி­மை­க­ளுக்­கான குரல் வலுத்து ஒலித்­த­து­தான் இந்த சட்­ட­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என­வே­தான், அந்த மாநில உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்து நாங்­கள் குரல் கொடுக்­கி­றோம். தமிழ்த்­தாய் வாழ்த்தை முத­லில் பாட வேண்­டும், அவை நிறை­வின்­போ­து­தான் தேசிய கீதம் பாட வேண்­டு­மென்­கின்ற மரபு தமிழ்­நாட்­டிலே கடை­பி­டிக்­கப்­பட்டு வரு­வது. இது ஏதோ அவைக்கு மாத்­தி­ர­மல்ல, நீங்­க­ளும் நானும் பள்­ளி­யில் படிக்­கும்­போ­தும், அங்­கே­யும் இந்த நிகழ்­வு­தான் நடை­பெற்­றது என்­பதை உங்­க­ளுக்கு நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்த அரசு நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும் முத­லில் தமிழ்த்­தாய் வாழ்த்து, நிகழ்­வு­க­ளுக்கு பிறகு தேசிய கீதம். நேற்­றைக்கு தேசிய கீதம் இரு முறை ஒலிக்­கப்­ப­டு­கி­றது. அதற்­காக ஆளு­நர் நன்றி சொல்­கி­றார். ஆளு­நர் இணக்­க­மாக அவையை நடத்­திக் கொடுத்­தார் என்று அவைத் தலை­வர் நீங்­கள் நன்றி சொல்­கி­றீர்­கள். உங்­கள் இரு­வ­ருக்­கு­மான அந்த இணக்­கம்­தான் நாங்­கள் கடந்த காலத்­தில் சொன்­னதை இன்­றைக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதைத்­தான் நேற்­றைக்கு எங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளும் சுட்­டிக்­காட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­கள் இணக்­கம் எது­வரை செல்­லப்­போ­கி­றது, எப்­படி வெளிப்­பட போகி­றது என்­ப­தை­யெல்­லாம் நாங்­கள் அறிந்­தி­ருக்­கி­றோம்; உங்­கள் கூட்­ட­ணி­யில் இருக்­கின்ற தோழர்­க­ளும் அறிந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தாய்­மொழி தமிழை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாம் காத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆறு ஓடு­கி­றது, காட்­டாற்று வெள்­ளம் வரும்­போது, அத­னால் பாத­கம் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் ஆங்­காங்கே அணை கட்­டப்­ப­டு­கி­றது. கட்­டப்­ப­டு­கிற அணை­யிலே ஒரு சிறிய நீர்­க­சி­வு­தான் இருக்­கி­றது என்று நீங்­கள் சொல்­கி­றீர்­கள். அந்த நீர்­க­சிவை விட்­டால் ஒரு செங்­கல் உரு­வப்­ப­டும், படிப்­ப­டி­யாக் உரு­வப்­ப­டும், வெள்­ளம் உள்ளே போகும். அப்­படி போகா­மல் தமிழ்­நாடு காத்த கார­ணத்­தி­னால்­தான், இன்­றைக்கு தாய்­மொழி தமிழை நாம் காத்­தி­ருக்­கி­றோம். இல­கு­வாக, இன்­னொரு மொழி­தான் என்று ஏற்­றுக்­கொண்ட கார­ணத்­தி­னால்­தான் மற்ற மாநி­லங்­க­ளில் தாய்­மொ­ழியை இழந்­தி­ருக்­கி­றார்­கள். மகா­ராஷ்­டி­ரா­வில் இன்­றைக்கு மராத்­தியே காணப்­ப­ட­வில்லை, இந்­தி­தான் நிறைந்­தி­ருக்­கி­ றது. இவ்­வாறு அவர்­கள் மெல்ல விட்­டார்­கள்,அது பொத்­த­மாக உள்ளே நுழைந்­தது. உங்­க­ளுக்­குத் தெரிந்த ஓர் உதா­ர­ணத்தை சொல்­கி­றேன், ஒரு கூடா­ரத்­திலே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பொதுப் பணி மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் அவர்­கள் உங்­கள் கொள்­கை­யும், எங்­கள் கொள்­கை­யும் ஒன்­று­தான். நீங்­கள் செய்­த­தைத்­தான் நாங்­கள் செய்­கி­றோம் என்று சொன்­னார்­கள். ஆளு­நர் உரை­யும் அப்­ப­டித்­தான் இருந்­தது. உங்­க­ளுக்கு புரி­கிற மாதிரி சொல்ல வேண்­டு­மென்­றால், ஒரு படத்­திற்கு trailer மிக முக்­கி­யம். நேற்று உங்­கள் trailer எப்­படி இருந்­தது என்­றால், ஏற்­கெ­னவே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யில் இருந்­த­போது எதை­யெல்­லாம் சொன்­னதோ, அதை­யெல்­லாம்­தான் நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். மொத்­தம் 57 பத்­தி­கள். அறி­மு­கத்­தி­லேயே 30 பத்­தி­கள், ஒன்­றிய அரசை அன்­போடு, பண்­போடு வலி­யு­றுத்­து­வ­தற்கு 4 பத்­தி­கள், நிறைவு செய்­வ­தற்கு 4 பத்­தி­கள் போய்­விட்­டன. இவை­யெல்­லாம் போக மீதி­யி­ருப்­ப­திலே நீட் தேர்வு எதிர்ப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மும்­மொழி கொள்கை எதிர்ப்பு, இரு­மொழி கொள்­கை­யைப் பின்­பற்­று­ வோம், மீன­வர் பிரச்­சி­னைக்கு ஒன்­றிய அரசை அணு­கு­வோம் இவை­க­ளெல்­லாம் ஏற்­கெ­னவே திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு இருந்­த­போது எதை­யெல்­லாம் செய்­ததோ அவை­க­ளைத்­தான் வேறு வார்த்­தை­களை உப­யோ­கித்­தி­ருக்­கி­றீர்­கள். அதைத்­தான் செய்ய முடி­யும். ஏனென்­றால், தமிழ்­நாட்­டி­னு­டைய உரி­மை­யைப் பாது­காப்­ப­தற்கு என்­றென்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எடுத்து வைத்­தி­ருக் கின்ற அடித்­த­ளம்­தான் (மேசை­யைத் தட்­டும் ஒலி) என்­றைக்­கும், யாரும் நின்று பேசு­வ­தற்கு உத­வும் என்­ப­து­தான். அதைத்­தான் பொதுப் பணி மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் அவர்­கள் இங்கே ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவ­ருக்கு என்­னு­டைய பாராட்­டுக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சிங்­கப்­பெண் திட்­டம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வாக­னத்­திற்கு புதிய ஸ்டிக்­கர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதிலே, புதிய திட்­டங்­கள் என்று மூன்று, நான்கு விஷ­யங்­க­ளைச் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். ஏற்­கெ­னவே, கடந்த கால ஆட்­சி­க­ளில் நடை­பெற்­ற­தை­யெல்­லாம் ஒப்­பிட்டு பார்ப்­ப­வர்­க­ளுக்கு தெரி­யும். ஒவ்­வொரு ஆட்சி அமை­கின்­ற­போ­தும், கூடு­தல் எண்­ணிக்­கை­யில் இருக்­கும் மதுக் கடை­களை மூடு­வது என்­பது வழக்­க­மான ஒரு நடை­முறை, அதைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள். போதைப் பொருள் தடுப்பு என்­பது எந்த அர­சாசு இருந்­தா­லும் செய்­யும் ஒரு காரி­யம். அனைத்து ஆட்­சிக் காலத்­தி­லும் அதற்­காக எவ்­வ­ளவு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, எத்­தனை வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டி­ ருக்­கின்­றன என்­ப­தெல்­லாம் தெரி­யும். ஒரே ஒரு புது­மை­யான விஷ­யம் “சிங்­கப் பெண் சிறப்பு அதி­ர­டிப்­படை” திட்­டம். உங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யிலே சொல்­லப்­பட்ட திட்­டத்­தைக் கொண்­டு­வந்­துள்­ளீர்­கள். அது­கூட பெரிய புதிய திட்­ட­மல்ல. Uniform–ஐ மாற்றி, வாக­னத்­திற்கு புதிய sticker–ஐ ஒட்டி, இன்­றைக்கு கொண்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள். முழு­மை­யாக அந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தும்­போ­து­தான் அத­னு­டைய வெற்றி எல்­லாம் தெரி­யும். இப்­படி தொடங்­கக்­கூ­டிய படம் 5 ஆண்டு காலத்­திற்கு எப்­படி இருக்­கும் என்­ப­தற்­கான இந்த trailer–ல் பொது­மக்­கள் எதிர்ப்­பார்த்த எது­வும் இன்­னும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இடம்­பெ­ற­வில்லை என்­ப­து­தான் உங்­க­ளுக்­கான செய்தி. ஒரு trailer hit அடிக்க வேண்­டு­மென்­றால், மிக crisp ஆக இருக்க வேண்­டும். ஆனால், நேற்று எது­வுமே crisp ஆக இல்லை, அனைத்­தும் வத­வ­த­வென்று பழைய விஷ­யங்­களை வார்த்­தை­களை மாற்றி உப­யோ­கித்­துச் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். இந்த வார்த்தை விளை­யாட்டு எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று எனக்கு முன்பு சகோ­த­ரர் பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­கள் அடுக்­கு­மொழி பற்­றி­யெல்­லாம் பேசி­னார். அடுக்­கு­மொழி பேசி­ய­வர் அண்ணா. நீங்­கள் அவ­ரை­யும்­தான் ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்­கள், கிண்­டல் செய்­கின்­ற­போது, மற்­ற­வர்­களை விமர்­ச­னம் செய்­கின்­ற­போது, யாரைப் பற்­றிப் பேசு­கி­றோம் என்­பதை கவ­னித்து பேச வேண்­டும். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை மாத்­தி­ர­மல்ல, நீங்­கள் கொள்கை தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்­டுள்­ள­வர்­க­ளை­யும் சேர்த்து சில சம­யங்­க­ளில் விமர்­சித்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல, ஒரு வர­லாற்­றுச் செய்­தியை அவர் அறி­யா­மல் இங்கே பதிவு செய்­தார். பொதுத் தொகு­தி­யிலே ஒரு தலித் வேட்­பா­ளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்­தோம் என்று கூறி­னார். கோயம்­புத்­தூ­ருக்­குச் சென்று சி.டி. தண்­ட­பாணி யார் என்று கேளுங்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக அவர் எங்கே வெற்றி பெற்­றார் என்று கேளுங்­கள்.அ.தி.மு.க.–வில் தலித் எழில்­மலை அவர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றி பெற்­றி­ருக்­கி­றார். அவர் எந்­தத் தொகு­தி­யில் நின்று வெற்றி பெற்­றார். என்று கேளுங்­கள். நீங்­கள் reference எடுத்­துக் கொண்டு வந்து பேசு­கி­றீர்­கள். நாங்­கள் reference எடுத்­துக் கொண்டு வந்து பேச வேண்­டிய அவ­சி­யம் எங்­க­ளுக்கு இல்லை. நாங்­க­ளெல்­லாம் திரா­வி­டப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­ற­வர்­கள். முத்­த­மி­ ழ­றி­ஞர் கலை­ஞ­ரி­டத்­திலே பயின்­ற­வர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்த விளக்­கத்­திற்­கெல்­லாம் நாங்­கள் விளக்­கம் கொடுக்க ஆரம்­பித்­தால், நீங்­கள் பேசிய எது­வுமே முழுமை பெறாது. நீங்­கள் பேசிய எது­வும் உண்­மை­யில்லை என்­று­தான் சொல்ல வேண்டி வரும். ஒரு ஆட்சி அமை­கின்­ற­போது, இந்த ஆட்சி இந்த நோக்­கத்­திற்­காக அமைந்­தி­ருக்­கி­றது, இந்த நோக்­கத்­தில் நாங்­கள் செயல்­ப­டு­வோம், இந்­தத் திட்­டங்­களை நாங்­கள் செயல்­ப­டுத்­து­வோம் என்று சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அட்லி பட உதா­ர­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், கடந்த திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில், இன்­னும் அதற்கு மிகச் சிறந்த உதா­ர­ணம் சொல்ல வேண்­டு­மென்­றால், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர், முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு அவர்­கள் சொன்ன வார்த்தை தமிழ்­நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரத்தை One Trillion Dollar பொரு­ளா­தா­ர­மாக உயர்த்­து­வோம் என்று சொன்­னார்­கள். இன்­றைக்கு நீங்­கள் அதை பட்டி, tinkering பார்த்து 1.5 Trillion Dollar என்று சொல்லி இருக்­கி­றீர்­கள். மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் மன­திற்கு மிக நெருக்­க­மா­ன­வர் இயக்­கு­நர் அட்லி. அவர் எடுத்த படம் முழு­வ­தும் பார்த்­தீர்­க­ளென்­றால், பல சிறந்த திரைப்­ப­டங்­க­ளில் இருக்­கின்ற காட்­சி­களை எடுத்து போட்டு, hit கொடுப்­பார். நீங்­க­ளும் அப்­ப­டி­தான். ஏற்­கெ­னவே இருந்த ஆட்­சி­க­ளில் எவை­யெல்­லாம் சிறப்­பாக இருந்­ததோ அதை எடுத்­துப் போட்டு அதற்கு வேறு வடி­வம் பூசி இன்­றைக்கு வெளிப்­ப­டுத்த விரும்­பு­கி­றீர்­கள். ஒரு ஆட்சி என்­பது மக்­க­ளுக்­கான ஆட்­சி­யாக இருக்க வேண்­டும். மக்­க­ளைப் பாது­காக்­கின்ற ஆட்­சி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஆட்சி பொறுப்­பேற்ற பிறகு எதிர்க்­கட்­சி­கள் நாங்­கள் விமர்­ச­னம் செய்­யக் கூடாது என்று நீங்­கள் சொல்­கி­றீர்­கள். எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 6 மாத காலத்­திற்கு நாங்­கள் விமர்­ச­னம் செய்­ய­வில்லை அது புதிய திட்­டங்­களை நீங்­கள் தீட்­டு­வ­தற்­கும். என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை செயல்­ப­டுத்­து­வ­தற்­கு­மான கால அவ­கா­சம். ஆனால், சட்­டம்–­ஒ­ழுங்கை பாது­காப்­ப­தி­லும், தற்­போது மக்­க­ளுக்கு இருக்­கின்ற பிரச்­சி­னை ­களை, அவ்­வப்­போது நிகழ்­கின்ற பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தெற்­கெல்­லாம் 6 மாத கால அவ­கா­சம் என்­பது கிடை­யவே கிடை­யாது. இன்­றைக்­கும் சொல்ல வேண்­டு­மென்­றால், நாங்­க­ளெல்­லாம் போராட்­டக் களத்­திற்கு வர­வில்லை. உங்­கள் கூட்­ட­ணிக் கட்­சி­யில் இருக்­கி­ற­வர்­கள் போராட்­டம் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். போராட்­டக் களத்­தில் நிற்­பது மக்­கள். கோவை­யில் போராட்­டம் செய்­த­வர்­கள் மக்­கள். கும்­மி­டிப்­பூண்­டி­ யில் பாலி­யல் பிரச்­சி­னைக்கு போராட்­டம் செய்­த­வர்­கள் மக்­கள். இப்­படி திக்­கெட்­டும், திசை­யெட்­டும் எங்­கெல்­லாம் எந்த மக்­கள் உங்­களை தேர்ந்­தெ­டுத்­தார்­கள் என்று சொன்­னீர்­களோ அந்த மக்­கள்­தான் இப்­போது போராட்­டம் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். எனவே, அந்­தப் போராட்­டங்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு இந்த அரசு என்ன செய்­யப் போகி­றது என்ற கேள்வி, அதற்­கான பதில் எது­வும் இந்த ஆளு­தர் உரை­யில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஆளு­நர் உரை என்­பது உங்­க­ளுக்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் இணக்­க­மான உறவு ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் சொன்­ன­தும் வெளிப்­பா­டா­கத்­தான் அமைந்­தி­ருக்­கி­றது. இது பூனைக் குட்டி வெளியே வந்­தி­ருக்­கி­றது என்­ப­தற்­கான செய்தி. இத­னு­டைய முழு வெளிப்­பாடு வெளி­வ­ரு­கி­ற­போ­து­தான் உங்­களை நம்­பி­ய­வர்­கள், உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் இது­கு­றித்து பேசு­கின்ற நிலை வரும். அந்த நிலை வரு­வ­தற்கு நீங்­கள், பேர­வைத் தலை­வர் அவர்­கள் அனு­ம­தித்­தா­லும், அண்­ணன் கே.செங்­கோட்­டை­யன் அவர்­கள் ஆளு­ந­ரைப் பற்­றிக் கூட பேசக் கூடாது என்று சொல்­கி­றார்­கள். ஆளு­நர் என்ற வார்த்­தையே அவைக் குறிப்­புக்கு மாறா­னதா? எத்­தனை முறை நீங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், எதிர்க்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது நீங்­கள் எல்­லோ­ரை­யும் விமர்­ச­னம் செய்­தி­ருக்­கி­றீர்­கள். கடும் விமர்­ச­னம் செய்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது தீர்­மா­னத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆத­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு ஆட்சி அமை­கின்­ற­பொ­ழுது அந்த ஆட்­சிக்கு உறு­து­ணை­யாக இருப்­ப­தற்­கு­தான் இன்­றைக்கு மேக­தாது பிரச்­சி­னை­யில் நீங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கிற தீர்­மா­னத்தை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக எங்­கள் எதிர்க் கட்­சித் தலை­வர் அவர்­கள் வர­வேற்­றி­ருக்­கின்­றார்­கள். நல்­ல­வை­களை வர­வேற்­போம், அல்­ல­வை­களை சுட்­டிக்­காட்ட வேண்­டும். இது­தான் சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யின் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளுக்­கும், எங்­க­ளுக்­கு­மான வாக்கு வித்­தி­யா­சம் 17 இலட்­சம் தான். எங்­க­ளை­யும் இந்த மக்­கள் நம்­பித்­தான் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, அவர்­க­ளு­டைய குர­லாக, அவர்­க­ளு­டைய குரலை இங்கு ஒலிக்­கின்­ற­வர்­க­ளாக நாங்­கள் இருக்க வேண்­டிய எங்­க­ளு­டைய கடப்­பாட்டை நாங்­கள் செய்­வோம். அவை­யெல்­லாம் அவை மர­புக்கு மாறா­னது என்று–– கடந்த 2011–2016 ஆட்­சி­யில் நான் பேசி­ய­தெல்­லாம் கே.ஏ. செங்­கோட்­டை­யன் அவர்­கள் நியா­ப­கம் வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்று நினைக்­கி­றேன். அவர் அன்­றைக்கு இருந்­த­போது எப்­படி பேசி­னாரோ அதே தொனி­யில் இப்­போது பேசு­கி­றார். காலங்­கள் மாறும், உங்­கள் காட்­சி­கள் மாறும். எல்­லா­வற்­றை­யும் நீங்­கள் பார்த்­த­வர், ரசித்­த­வர். எனவே, அதற்கு தகுந்­த­படி பேச வேண்­டு­மென்று உங்­க­ளுக்கு அன்­பான வேண்­டு­கோள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அட்­லியை பற்றி மட்­டு­மல்ல, Put Chutney–யைப் பற்­றி­யும் பேசி­னார்­கள். நான் உங்­க­ளை­யும் follow செய்­தி­ருக்­கி­றேன். அனை­வ­ரை­யும் follow செய்­தால்­தான் அர­சி­ய­லில் இருக்க முடி­யும்; சட்­ட­மன்­றத்­தில் விவா­திக்க முடி­யும். (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்த் துறை­யில் மாபெ­ரும் புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­வர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், பரா­சக்தி திரைப்­ப­டத்­தில் அன்­றைக்கு பேசப்­பட்ட வச­னம்­தான் இன்­றைக்கு எல்­லோ­ரா­லும், எல்லா இடங்­க­ளி­லும் பேசப்­ப­டு­கி­றது. எனவே, திரைப்­ப­டத்­தினை ரசிப்­ப­தை­யும், அதில் இருக்­கின்ற நல்ல செய்­தி­களை எடுத்­துக்­கொள்­வ­தும் தவ­றல்ல; இது வார்த்தை விளை­யாட்­டல்ல; அவை நட­வ­டிக்கை என்­பது பொது­மக்­கள் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கின்ற நட­வ­டிக்­கை­யா­கும். வர­லாற்­றில் இடம்­பெ­றக்­கூ­டிய செய்­தி­க­ளைக் கொண்ட நட­வ­டிக்­கை­யா­கும். இந்த அவை­யில் நான் ஏற்­கெ­னவே பேசி­யி­ருக்­கின்ற பேச்­சு­களை நீங்­கள் சிறிது கவ­னித்­துப் பார்த்­தீர்­க­ளா­னால் தெரி­யும். மேலும், எதிர்­கா­லத்­தில் உங்­க­ளுக்கு சுவை­யான செய்­தி­க­ளைச் சொல்­வேன் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளு­நர் உரை என்­பது, உங்­க­ளுக்கு உவப்­பா­ன­தாக இருக்­க­லாம்; தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு உவப்­பா­ன­தல்ல; அவர்­கள் எதிர்­பார்த்­தது வேறு; அவர்­கள் எதிர்­பார்த்­தது. கோயம்­புத்­தூர் மாவட்­டத்­தில் ஒரு பெண்­மணி கத­றும்­போது சொன்­னார்­களே, நாங்­கள் உங்­களை action hero என்று நம்­பி­னோம் என்று. மக்­கள் ஒரு Action Film–ஐ எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது செய்­யக்­கூ­டி­ய­தல்ல என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். கார­ணம், எதிர்க்­கட்சி மேடை­யி­லி­ருந்து பேசு­கின்ற வச­னம் வேறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளுங்­கட்­சி­யாக வந்து நிற்­கின்­ற­ போது, செயல்­ப­டுத்­து­வது என்­பது வேறு. அவற்­றை­யெல்­லாம் பொறுப்­போடு உணர்ந்த கார­ணத்­தி­னால்­தான், நாங்­கள் மேலும் சில விஷ­யங்­க­ளைப் பேசா­மல், இந்த அவை­யில் பொதுக் கூட்ட மேடை­க­ளில் பேசி­ய­வற்­றிற்­கெல்­லாம் பதில் சொல்­லா­மல் தவிர்க்­கி­றோம், சட்­ட­மன்­றப் பேர­வை­யில் எவற்றை பேச வேண்­டுமோ, அவற்றை மட்­டும் பேசு­கி­றோம். அப்­படி அது தேவை­யென்­றால் எதிர்­கா­லத்­தில் அவற்றை பேசு­கின்ற சூழ்­நி­லையை நீங்­கள் ஏற்­ப­டுத்த வேண்­டாம் என்­றும், ஆக்­கப்­பூர்­வ­மான ஆட்­சி­யைத் தரு­வ­தற்கு எந்­தப் பணி இருக்­கின்­ற­னவோ அந்­தப் பணி­க­ளைப் பாருங்­கள் என்று கூறி, வாய்ப்­ப­ளித்­த­மைக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எங்­கள் கூட்­டணி வாக்­கு­க­ளால்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆட்சி தாங்கி நிற்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் அவர்­கள் கூறிய கருத்­து­கள் சரி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் தேர்­த­லில் தனி­யாக நின்று பெற்ற வாக்­கு­கள்­தான். ஆனால், எங்­க­ளோடு கூட்­ட­ணி­யில் இருந்து வாக்­கு­க­ளைப் பெற்று வெற்றி பெற்­ற­வர்­கள்­தான் இன்று உங்­க­ளு­டைய ஆட்­சி­ யைத் தாங்கி நிற்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) “வரும் காலத்­தி­லும், நாங்­கள் தனி­யாக நிற்­போம்; தனி­யாக வாக்­கு­க­ளைப் பெறு­வோம்” என்று நீங்­கள் சொல்­லத் தயாரா? இவ்­வாறு விவா­தித்­தால் அந்த விவா­தம் எங்கு சென்று முடி­யும் என்­பதை நீங்­கள் தய­வு­செய்து ஆழ்ந்து சிந்­தித்து பதி­ல­ளிக்க வேண்­டு­மென்று அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு சா.சி. சிவ­சங்­கர் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>