<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,69,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 20 2026 16:37:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260621T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="21062026-MDU-06" position.sequence="06" ex-ref="21062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">கல்வியை காவிமயமாக்கும் முயற்சிகளை முறியடித்து,</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">மாநில உரிமைகளை நிலைநாட்ட களமிறங்கும் மாணவர் அணி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup741856_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ந்­தி­யா­வின் உயர்­கல்வி கட்­ட­மைப்பு மீது இன்று 
ஒன்­றிய பா.ஜ.க. அரசு கொடுத்து வரும் அழுத்­தம்,  மாண­வர்­க­ளுக்கு பெரும் சுமை­யா­க­வும்,  கல்­விக் கட்­ட­மைப்பை சிதைக்­கும் அச்­சு­றுத்­த­லா­க­வும் மாறி­யுள்­ளது. உயர்­கல்வி கட்­ட­மைப்பை சீர­மைப்­ப­தாக ஒன்­றிய  அரசு முன்­வைத்­துள்ள “விக்­சித் பாரத் சிக்ஷா அதிஷ்­டான்” (VBSA )  மசோதா, வெறும் கல்வி நிர்­வாக மாற்­ற­மாக மட்­டும் பார்க்க முடி­யாத ஒன்­றாக உள்­ளதை கல்­வி­யா­ளர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நய­வஞ்­சக திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு (UGC), அகில இந்­திய தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் (AICTE), தேசிய ஆசி­ரி­யர் கல்­விக் கழ­கம் (NCTE) உள்­ளிட்ட அமைப்­பு­களை ஒரே குடை­யின் கீழ் கொண்டு வந்து, உயர்­கல்­வியை ஒழுங்­கு­ப­டுத்­தும் புதிய கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தாக ஒன்­றிய அரசு கூறி­னா­லும், அதன் பின்­ன­ணி­யில் கல்­வித் துறை­யின் அதி­கா­ரங்­களை ஒன்­றிய அர­சின் தனது முழு கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு செல்­லும் நய­வஞ்­ச­க­மான திட்­டம் ஒளிந்­துள்­ளது.  கல்­வியை பொதுப்­பட்­டி­ய­லில் இருந்து பறித்து, ஒன்­றி­யத்­தின் அதி­கா­ரத்­துக்­குள் கொண்டு செல்­லும் திட்­டம் என்­பதை சொல்­ல­வும் தேவை­யில்லை. அது­தான் அவர்­க­ளின் இலக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் மாநி­லங்­க­ளில் கல்வி உரிமை விவா­தம் சாதா­ரண கல்­விக் கொள்கை விவா­த­மாக மட்­டும் அல்ல;  மொழி, கல்வி, சமூ­க­நீதி, மாநில உரிமை ஆகி­ய­வற்­றோடு பின்­னிப் பிணைந்த அர­சி­யல் வர­லாற்­றின் தொடர்ச்­சி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­திய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே கல்வி என்­பது சமூக மாற்­றத்­தின் கருவி என்ற புரி­தல் தமிழ்­நாட்­டில் வலு­வாக இருந்­தது. நீதிக்­கட்சி, சுய­ம­ரி­யாதை இயக்­கம், திரா­விட இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என தொட­ரும் சமூ­க­நீதி அர­சி­யல்,  கல்­வியை வெறும் அறிவு பெறும் துறை­யாக அல்­லா­மல் சமூக முன்­னேற்­றத்­தின் வாயி­லா­கவே பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மாநி­லங்­க­ளின் தேவை பாதிக்­கப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த அடிப்­ப­டை­யில்­தான் தமிழ்­நாடு இட­ஒ­துக்­கீடு, முதல் தலை­முறை பட்­ட­தாரி திட்­டங்­கள், பெண் கல்வி, அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்வி வாய்ப்­பு­கள் போன்ற பல முன்­னோடி முயற்­சி­களை செயல்­ப­டுத்­தி­யது. இவை அனைத்­தும் மாநி­லத்­தின் சமூக அமைப்­பை­யும் தேவை­க­ளை­யும் புரிந்­து­கொண்டு உரு­வாக்­கப்­பட்­டவை.    இன்று உயர்­கல்வி தொடர்­பான முக்­கிய முடி­வு­கள் டெல்­லி­யில் அமர்ந்­தி­ருக்­கும் ஒரு மைய அமைப்­பின் கட்­டுப்­பாட்­டுக்­குள் சென்­று­விட்­டால், மாநி­லங்­க­ளின் தனித்­து­வ­மான தேவை­கள் எவ்­வாறு பிர­தி­ப­லிக்­கப்­ப­டும் என்­பது மிகப் பெரிய கேள்­விக் குறி­யா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேசிய கல்­விக் கொள்கை 2020 அறி­மு­க­மான நாளி­லிருந்தே தமிழ்­நாடு பல எதிர்ப்­பு­களை முன்­வைத்து வந்­தது. குறிப்­பாக, கழ­கத்­தின் எதிர்ப்­பு­தான் இவ்­வ­ளவு கால­மும் ஒன்­றிய அர­சுக்கு நெருக்­க­டி­களை அளித்து வந்­தது.  மும்­மொ­ழிக் கொள்கை, நுழை­வுத் தேர்வு மையப்­ப­டுத்­தல், பாடத்­திட்ட ஒற்­று­மைப்­ப­டுத்­தல், கல்வி நிர்­வாக அதி­கா­ரக் குவிப்பு போன்ற அம்­சங்­கள் கூட்­டாட்­சித் தத்­து­வத்­துக்கு எதி­ரா­னவை என்று கழ­கம் ஆட்­சி­யில் இல்­லா­த­போ­தும்  வலி­யு­றுத்­தி­யது. ஆட்­சி­யில் இருந்­த­போ­தும் தடுத்து வைத்­தி­ருந்­தது. அந்த 
வரி­சை­யில் தற்­போது விக்­சித் பாரத் சிக்ஷா அதிஷ்­டான் மசோ­தா­வும் புதிய ஏவு­க­ணை­யாக வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசு இதை நிர்­வாக சீர்­தி­ருத்­தம் என்று கூறு­கிறது. பல்­வேறு கட்­டுப்­பாட்டு அமைப்­பு­க­ளின் அதி­கா­ரங்­கள் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வ­தால் அனு­மதி நடை­மு­றை­கள் 
எளி­மை­யா­கும், தர­நி­லை­கள் மேம்­ப­டும், உல­கத் தரத்­திற்கு இந்­திய உயர்­கல்வி செல்­லும் என்று கூறு­கி­றது.  ஆனால் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் முந்­தைய கால அனு­ப­வங்­கள் என்ன சொல்­கின்­றன. ?   கடந்த சில ஆண்­டு­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு  மாநி­லங்­க­ளின் கல்­விக் கோரிக்­கை­களை மதித்­துள்­ளதா ?  மாற்­றுக் கருத்­து­களை ஏற்­றுக் கொண்­டுள்­ளதா? என்­பது முக்­கி­ய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சந்­தே­கங்­களை வலுப்­ப­டுத்­து­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் ( NEET ) விவ­கா­ரத்­தில் தமிழ்­நாடு தொடர்ந்து எழுப்­பிய சமூ­க­நீதி சார்ந்த கேள்­வி­க­ளுக்கு என்ன பதில் கூறி இருக்­கி­றது ?  புதிய கல்­விக் கொள்கை குறித்து மாநி­லங்­க­ளின் எதிர்ப்­பு­களை பரி­சீ­லித்­துள்­ளதா ? என்­கிற கேள்­வி­க­ளுக்கு கிடைக்­கும் பதில்­களே இந்த மசோதா குறித்த சந்­தே­கங்­களை வலுப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்வி என்­பது சாலை அமைப்­பது போல ஒரு நிர்­வா­கப் பணி­யல்ல.   மொழி, கலாச்­சா­ரம், சமூக அமைப்பு, பொரு­ளா­தார வாய்ப்பு, வர­லாற்­றுப் பின்­னணி ஆகி­ய­வற்­றோடு இணைந்த துறை. தமிழ்­நாட்­டின் உயர்­கல்வி அமைப்பு உரு­வா­கிய வித­மும், வட­இந்­திய மாநி­லங்­க­ளின் அமைப்பு உரு­வா­கிய வித­மும் ஒன்­றல்ல. அப்­ப­டி­யிருக்க, ஒரே மாதி­ரி­யான கட்­டுப்­பாட்டு அமைப்­பின் மூலம் அனைத்து மாநி­லங்­க­ளை­யும் ஒரே சட்­ட­கத்­திற்­குள் கொண்டு வர முயல்­வது கல்­வித் தரத்தை உயர்த்­தும் முயற்­சியா, அல்­லது அதி­கா­ரத்தை மையப்­ப­டுத்­தும் முயற்­சியா என்ற சந்­தே­கம் தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று  நடை­பெ­றும் விவா­தம் UGC-யை மாற்ற வேண்­டுமா வேண்­டாமா என்­பது அல்ல. கல்­விக் கொள்­கையை உரு­வாக்­கும் அதி­கா­ரம் யாரி­டம் இருக்க வேண்­டும் என்­ப­து­தான் உண்­மை­யான விவா­தம். மாநி­லங்­க­ளின் அனு­ப­வங்­க­ளும் தேவை­க­ளும் மதிக்­கப்­பட வேண்­டுமா? அல்­லது டெல்லி தீர்­மா­னிக்­கும் ஒரே மாதி­ரி­யான கட்­ட­மைப்பே நாட்­டின் எதிர்­கா­லத்தை நிர்­ண­யிக்க வேண்­டுமா? என்­பதே மைய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எதிர்­கா­லம் பற்­றிய விவா­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் பார்­வை­யில், கல்வி என்­பது நிர்­வாக வச­திக்­காக ஒப்­ப­டைக்­கப்­ப­டும் ஒரு துறை அல்ல; சமூ­க­நீதி மற்­றும் மாநில உரி­மை­யின் அடை­யா­ளம். அத­னால்­தான் 
“விக்­சித் பாரத் சிக்ஷா அதிஷ்­டான்” மசோதா குறித்த விவா­தம் கல்வி நிர்­வா­கம் பற்­றிய விவா­த­மாக மட்­டு­மல்­லா­மல், 
கூட்­டாட்சி இந்­தி­யா­வின் எதிர்­கா­லம் பற்­றிய விவா­த­மா­க­வும் மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்­வியை மேம்­ப­டுத்­து­வது அவ­சி­யம். சீர்­தி­ருத்­தங்­க­ளும் தேவை. ஆனால் சீர்­தி­ருத்­தத்­தின் பெய­ரில் அதி­கா­ரங்­கள் அனைத்­தும் ஒன்­றிய அர­சி­டம் குவிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை மாநி­லங்­கள் கேட்­பது ஜன­நா­ய­கத்­தின் அடிப்­படை உரிமை. அந்­தக் கேள்­வியை கழ­கம் மீண்­டும் எழுப்­பு­கி­றது.கடந்த ஆட்சி காலத்­தில் நம் கழ­கத் தலை­வர் பல­மான எதிர்ப்­பினை தெரி­வித்து, ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு அழுத்­தம் கொடுத்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இந்தி திணிப்பு போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொழிக் கொள்கை விவா­த­மும் இதே பாதை­யில் 
பய­ணிக்­கி­றது. இந்­தி­யா­வில் எந்த மொழிக்­கும் எதி­ராக தமிழ்­நாடு போரா­ட­வில்லை. ஆனால் எந்த மொழி­யை­யும் திணிப்­ப­தற்கு எதி­ராக நூற்­றாண்டு கால வர­லாற்­றுப் போராட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கி­றது. 1938 முதல் 1965 வரை நடை­பெற்ற இந்தி எதிர்ப்­புப் போராட்­டங்­கள் தமிழ்­நாட்­டின் அர­சி­யல் 
வர­லாற்றை வடி­வ­மைத்­தன. அந்த வர­லாற்றை நினை­வு­படுத்­தும் வகை­யி­லேயே சமீ­பத்­தில் சி.பி.எஸ்.இ. பாடத்­திட்­டங்­க­ளில் இந்தி கற்­பித்­தல் தொடர்­பாக எழும் விவா­தங்­க­ளும் பார்க்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­ப­தாம் வகுப்பு அள­வில் இந்தி கற்­பித்­தலை வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­கள், மூன்­றா­வது மொழி கற்­றலை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அழுத்­தங்­கள், தேசிய அள­வி­லான ஒரே கல்வி அணு­கு­முறை ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைத்­துப் பார்க்­கை­யில்,  இயல்­பா­கவே ஒரு சந்­தே­கம் எழு­கி­றது. இந்தி, சமஸ்­கி­ருத மொழி ஆதிக்­கத்தை மீண்­டும் உரு­வாக்­கும் திட்­டம் தீட்­டப்­பட்டு வரு­வதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சுட்­டிக்­காட்டி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்த நிலை­யில்­தான்  இன்று முக்­கி­ய­மான கேள்வி எழுந்­துள்­ளது.   தமி­ழ­கத்­தின் அர­சி­யல் எதிர்­கா­லம் இன்று ஆட்சி பொறுப்­பில் உள்ள  தமி­ழக வெற்­றிக் கழ­கம், கல்வி மற்­றும் மாநில உரிமை போன்ற அடிப்­படை விவ­கா­ரங்­க­ளில் என்ன நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது என்­பது இன்­னும் தெளி­வா­க­வில்லை. ஆனால்,  பா.ஜ.க. கொண்­டுள்ள நிலை­பா­டு­தான் அவர்­க­ளின் நிலை­பாடு என்­பதை சொல்­ல­வும் வேண்­டுமா ? என்­கிற நிலை­யில்­தான் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் , புதிய கல்­விக் கொள்கை, மொழிக் கொள்கை, மாநி­லங்­க­ளின் நிதி உரி­மை­கள், ஆளு­நர் தலை­யீடு, மத்­திய அமைப்­பு­க­ளின் அதி­கார விரி­வாக்­கம் போன்ற விவ­கா­ரங்­க­ளில் தமிழ்­நாட்­டின் அர­சி­யல் கட்­சி­கள் தங்­க­ளது நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டை­யாக பதிவு செய்து வரு­கின்­றன. ஆனால் உயர்­கல்வி நிர்­வா­கத்தை ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டுக்­குள் மேலும் கொண்டு செல்­லக்­கூ­டிய “விக்­சித் பாரத் சிக்ஷா அதிஷ்­டான்” போன்ற திட்­டங்­கள் குறித்து தமிழ்­நாடு அறிய விரும்­பும் பதில் த.வெ.க. அர­சி­ட­மி­ருந்து இன்­னும் கிடைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மெள­ன­மும் நிலைப்­பா­டு­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்வி என்­பது வெறும் நிர்­வா­கத் துறை அல்ல; அது சமூ­க­நீதி, மொழி உரிமை மற்­றும் மாநில சுயாட்­சி­யின் நீட்­சி­யா­கும். எனவே ஒன்­றிய அரசு கொண்டு வரும் ஒவ்­வொரு கல்­விக் கொள்­கை­யை­யும், அதன் அர­சி­யல் விளை­வு­ 
க­ளை­யும் ஆய்வு செய்து கேள்வி கேட்­பது அவ­சி­ய­மா­கி­றது.  அந்த வகை­யில், தமிழ்­நாட்டை வழி­ந­டத்த விரும்­பும் எந்த அர­சி­யல் சக்­தி­யும், “ஒன்­றிய அரசு கொண்டு வரும் திட்­டங்­களை ஏற்­கி­றோமா, எதிர்க்­கி­றோமா” என்­ப­தைக் கடந்து, “தமிழ்­நாட்­டின் தனித்­து­வ­மான கல்வி மற்­றும் சமூ­க­நீதி மாதி­ரியை எவ்­வாறு பாது­காப்­போம்?” என்ற கேள்­விக்­குப் பதில் அளிக்க வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு கழ­கம் தனது பதி­லைத் தெளி­வா­கக் கூறு­கி­றது: கல்வி மீது மாநி­லங்­க­ளின் உரிமை குறை­யக் கூடாது; கூட்­டாட்­சித் தத்­து­வம் பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டக் கூடாது; சமூ­க­நீதி அடிப்­ப­டை­யி­லான கல்வி வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­ப­டக் கூடாது. ஆனால் ஆட்­சிக்­கான மாற்று என்று தன்னை முன்­வைக்­கும் சக்­தி­கள், குறிப்­பாக தமிழ்­நாடு உரி­மை­கள் மற்­றும் ஒன்­றிய அர­சின் கொள்­கை­கள் தொடர்­பாக எந்­தப் பக்­கம் நிற்­கி­றது என்­பதை மக்­கள் அறிய விரும்­பு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எங்கே இருந்­தார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் நீட்-க்கு  எதி­ராக உறு­தி­யாக போரா­டி­ய­போது அவர்­கள் எங்கே இருந்­தார்­கள்? புதிய கல்­விக் கொள்கை விவா­தத்­தில் என்ன நிலைப்­பாடு எடுத்­தார்­கள்? மொழிக் கொள்கை தொடர்­பாகஏன் பூட­க­மான பதில்­கள்? மாநில உரிமை மீதான ஒன்­றிய அர­சின் தலை­யீ­டு­கள் குறித்து எவ்­வாறு எதிர்­வி­னை­யாற்­றி­னார்­கள்? எதிர்­வி­னை­யாற்ற உள்­ள­னர்? இந்­தக் கேள்­வி­க­ளுக்­கான பதில்­களே நாளைய ‘விக்­சித் பாரத் சிக்ஷா அதிஷ்­டான்’ போன்ற முயற்­சி­கள் குறித்த அவர்­க­ளின் நிலைப்­பாட்டை முன்­கூட்­டியேஉணர்த்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘‘அர­சி­ய­லில் மௌன­மும் ஒரு நிலைப்­பா­டு­தான்“ என்­ப­தற்கு ஏற்ப, தமிழ்­நாட்டை ஆள்­ப­வர்­க­ளின் கள்ள மெள­னத்தை நாம் வேடிக்கை பார்க்க மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கழ­கம் இந்தி மொழி ஆதிக்­கத்­தை­யும், ஆரிய படை­யெ­டுப்­ப­டை­யும் உறு­தி­யு­டன் என்­றும் எதிர்த்து நிற்­கும். ஆனால், தமிழ்­நாட்டை ஆள்­கி­றோம் என்­கிற பெய­ரில் ஆரி­யத்­து­டன் சம­ர­சங்­கள் செய்­ப­வர்­க­ளுக்கு சொல்­லிக் கொள்­வது ஒன்­று­தான். பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் வர­லாற்­றில் 1965 ஆம் ஆண்­டினை புரட்­டிப் பாருங்­கள். அந்­தப் படை முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் எந்த அணி­வ­குப்­புக்­கும் தயா­ரா­கவே உள்­ளது என்­பதை சொல்லி வைப்­போம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>