<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,456,958,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 21 2026 03:45:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260621T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="21062026-TRY-02" position.sequence="02" ex-ref="21062026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">சட்டம் ஒழுங்கு சீர்கேடு – பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – 
கட்சித் தலைவர்கள் உரையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">சட்டப் பேரவை உறுப்பினர்களின் உரையை நேரலையில் ஒளிபரப்பாதது குறித்து முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="S.S.Sivasankar_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூன் 21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் உறுப்­பி­னர்­க­ளின் உரையை நேர­லை­யாக ஒளி­ப­ரப்ப வேண்­டும் என்­றும்,ஆளு­நர் உரை மீதான விவா­தத்­தில்எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் மற்­றும் கட்­சித் தலை­வர்­கள் உரையை நேர­லை­யில் ஒளி­ப­ரப்ப வேண்­டும் என்று பேர­வைக்கு வெளியே செய்­தி­யா­ளர்­களுக்கு பேட்­டி­ய­ளிக்­கை­யில் முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­னாள் அமைச்­சர் சா.சி. சிவ­சங்­கர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை மீதான விவா­தத்­தில் தி.மு.க.சார்­பாக பேசு­கின்ற வாய்ப்பை கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும் வழங்கி இன்­றைக்கு சட்டமன்­றத்­தில் என்­னு­டைய கருத்தை பதிவு செய்­தேன். அந்­தக் கருத்­து­கள் நேர­லை­யில் வரும் என்று நாங்­கள் எதிர்­பார்த்­தோம். ஆனால் நேர­லை­யில் வழங்­கப்­ப­டா­த­தன் கார­ணத்­தி­னால் அந்­தக் கருத்­து­களை உங்­க­ளி­டத்­தில் பகிர்ந்து கொள்­ளவே உங்­களை சந்­திக்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மரபு மீறிய செயல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை மாத்­தி­ர­மல்ல, அந்த உரை நிகழ்த்­து­கின்ற நேரத்­தில் முன்­னும் பின்­னும் நடை­பெற்ற சம்­ப­வங்­க­ளை­யும், அது ஏற்­ப­டுத்தி இருக்­கின்ற தாக்­கத்­தை­யும் குறித்து சட்­டப்­பே­ர­வை­யில் நான் பதிவு செய்­தேன். பேர­வை­யில் ஆளு­நர் உரைக்கு முன்­பாக தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடு­வ­தும், அவ­ரது உரைக்கு பின்­பாக தேசிய கீதம் பாடு­வ­தும் ஒரு மர­பாக தமிழ்­நாட்­டில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­வதை மீறி நேற்­றைக்கு தேசிய கீதத்தை இரண்டு முறை பாட வேண்­டிய அவ­சி­யம் என்ன என்ற வினாவை நான் எழுப்­பி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு நேற்­றைக்கு எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் குறிப்­பிட்­ட­தைப் போல த.வெ.க. விற்­கும் பா.ஜ.க.விற்­கும் ஒரு இணக்­க­மான உறவு இருக்­கி­றதோ என்ற அந்த அய்­யம் தான் வலுப்­பெற்று இருக்­கி­றது. கார­ணம் ஆளு­நர் அவர்­கள் நேற்­றைக்கு நடந்த நிகழ்வை ஒரு சரித்­திர நிகழ்வு என்று பதிவு செய்­கி­றார். ஆளு­நர் உரை நிகழ்த்­து­வ­தற்கு ஒரு இணக்­க­மான முறை­யில் உரை நிகழ்த்­திச் சென்று இருக்­கி­றார் என்று சட்­டப்­பே­ர­வைத்­த­லை­வர் நன்றி தெரி­விக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் நன்றி தெரி­விப்­ப­தும், பாராட்­டிக் கொள்­வ­தும் இதைத்­தான்வெளிப்­ப­டுத்­து­கி­றது என்­கின்ற கருத்­தைத் தான் நாங்­கள் பதிவு செய்­தோம். இது மக்­க­ளுக்­குச் சென்று சேர வேண்­டும் என்று எதிர்­பார்த்­தோம். நேர­லை­யில் அதற்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கழக ஆட்­சி­யின் கருத்­து­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வேறு வார்த்­தை­களில் கூறு­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை­யில் இடம் பெற்­றி­ருக்­கின்ற கருத்­து­கள் ஏற்­க­னவே திரா­விட முன்­னேற்­றக் கழக திரா­விட மாடல் ஆட்சி நடை­பெற்ற நேரத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்­கை­க­ளாக பறை­சாற்­றப்­ 
பட்­டவை. அது மும்­மொ­ழிக் 
கொள்­கைக்கு எதி­ரானகருத்­தாக இருந்­தா­லும், நீட் தேர்­வுக்கு எதிர்ப்­பாக இருந்­தா­லும் மீன­வர் நலன்­களை பாது­காப்­ப­தாக இருந்­தா­லும் எல்­லா­வற்­றி­லும் திரா­விட முன்­னேற்­றக் கழக கருத்­து­க­ளையே அவர்­கள் மீண்­டும் இங்கே வேறு வார்த்­தை­களைப்போட்டு வேறு வண்­ணம் பூசி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­கள் புதி­தாக சொன்­னது என்­றால் சிங்­கப் பெண் மாத்­தி­ரம் தான். அது­வும் ஏற்­க­னவே இருக்­கின்ற காவல் துறை­யில் பணி­யாற்­று­கின்­ற­வர்­க­ளுக்கு வேறு ஒரு சீரு­டையை அணி­வித்து அது ஏதோ புதிய திட்­டம் போல சொல்­கி­றார்­கள் என்ற கருத்­தை­யெல்­லாம் பதிவு செய்­தோம். அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் பெரு­மக்­கள் மழுப்­ப­லாக திசை­தி­ருப்­பு ­கின்ற வகை­யில் தான் பதி­ல­ளித்­தார்­கள். திங்­கட்­கி­ழமை அன்­றைக்கு எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் உரை­யாற்றஇருக்­கி­றார். அப்­படி உரை­யாற்­று­கின்ற போது, அவர் உரை­யாற்­று­வதை நேரலை செய்­ய­வேண்­டும். கார­ணம் இந்த ஆட்சி மீது நம்­பிக்கை தீர்­மா­னம் கொண்டு வரு­கின்ற போது அதிலே உரை­யாற்­றிய அனை­வ­ரு­டைய உரை­யும் நேர­லை­யில் சென்று சேர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்­வி­கள் நியா­ய­மா­னவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி சென்று சேர்ந்த நேரத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உரை நேர­லை­யில் சென்று ஒரு மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. அவர் எழுப்­பிய கேள்­வி­கள் எல்­லாம் நியா­ய­மா­னவை தங்­கள் மன­தில் இருப்­பதை என்­று­ த­மிழ்­நாட்டு மக்­கள் எண்­ணு­கின்ற அள­விற்கு அமைந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் பதி­ல­ளிக்­கா­மல் அமை­தி­யாக இருந்­தார். வீட்­டிற்­குப் போய் ஒர்க்­க­வுட் செய்து மாலை ட்விட்­ட­ரில் அதற்­குப் பதில் அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நேர­லை­யில் ஒளி­ப­ரப்ப வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அங்கே சட்­ட­மன்­றத்­தில் கேட்­கின்ற கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்­கா­மல் இருக்­கின்ற காட்­சியை மக்­கள் பார்த்து விட்­டார்­கள் என்ற கார­ணத்­தி­னால் தான் இன்­றைக்கு நேரலை செய்­யா­மல் தவிர்த்து விட்­டார்­களோ என்ற சந்­தே­கம் எங்­க­ளுக்கு எழுந்­தி­ருக்­கி­றது. எனவே சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வர் மரி­யா­தைக்­கு­ரிய உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­று­கின்ற நேரத்­தி­லும், மற்ற சட்­ட­மன்­றக் கட்­சித் தலை­வர்­கள் உரை­யாற்­று­கின்ற நேரத்­தி­லும் அவற்றை நேர­லை­யில் ஒளி­ப­ரப்ப வேண்­டும் என்­கின்ற அந்­தக் கருத்தை இந்த நேரத்­தில் நான் வலி­யு­றுத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னைத் தொடர்ந்து செய்­தி­யா­ளர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்­கு­அளித்த பதில்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் முத­லில் கேள்­வி–­ப­தில் பகு­தியை நேர­லை­யில் ஒளி­ப­ரப்பி வந்­தோம். அதை­யெல்­லாம் செய்­ய­வில்லை என்று சொல்லி தான் ஒரு மாற்­றம் வேண்­டும் என்று சொல்லி தான் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். சொன்ன மாற்­றத்தை அவர்­கள் செயல்­ப­டுத்­த­வில்லை என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கருத்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்சி அமைந்­த­தும், புதுசு புதுசு என்று பேசு­கி­றீர்­கள், எங்­கள் கழ­கத் தலை­வர் ஆறு­மா­தம் அவ­கா­சம் கொடுத்­தார். அது எதற்கு என்­றால் புதிய திட்­டங்­களை நீங்­கள் அறி­வித்த திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­ வ­தற்கு புதிய கொள்­கையை வழி வகுப்­ப­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டம் ஒழுங்­குப் பிரச்­சி­னைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வாய் திறக்­காத முதல்­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் நடை­மு­றை­யில் அன்­றா­டம் சட்­டம் ஒழுங்கு பிரச்­சி­னையை சரி செய்­வ­தற்­கும், மிகக் குறிப்­பாக மக்­கள் இன்­றைக்­குப் பாலி­யல் பிரச்­சி­னைக்குஎதி­ராக இன்­றைக்கு வெகுண்­டெ­ழுந்­தி­ருக்­கி­றார்­கள். அது கோவை­யில் நடந்­த­தாக இருந்­தா­லும், கும்­மி­டிப்­பூண்­டி­யில் நடந்­த­தாக இருந்­தா­லும், சிறு குழந்­தை­கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், அதை எதிர்த்து எதிர்க்­கட்­சி­கள் நாங்­கள் களத்­திற்கு வரு­வ­தற்கு முன்­பாக, எல்லா இடங்­க­ளி­லும் மக்­கள் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். எனவே அதற்கு வாய் திறக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் நாங்­கள் வலி­யு­றுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்­கும் முத­ல­மைச்­சர் அவர்­கள் பதில் சொல்­ல­வில்லை. காவல்துறைக்கு பொறுப்­பான அமைச்­சர் அவர். ஆனால் அவர் பதில் சொல்­லா­மல், காவல் துறைக்கு நிழல் அமைச்­சர் போல் ஆதவ் அர்­ஜூனா பதில் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். எனவே முத­ல­மைச்­சர் இதற்­கெல்­லாம் பதில் சொல்ல வேண்­டும் என்­ப­து­தான் எதிர்க்­கட்­சி­கள் என்ற முறை­யில் மக்­க­ளு­டைய குர­லாக இன்­றைக்கு நாங்­கள் இங்கே பதிவு செய்­து­கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் புதி­தாக ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றோம், புதி­ய­தாக வந்­தி­ருக்­கி­றோம் கேள்வி பதில், ஜீரோ அவர்ஸ் எல்­லாம் அடுத்த கூட்­டத் தொட­ரில் பார்த்­துக் கொள்­ள­லாம் என்று அலு­வல் ஆய்­வுக் குழு­வில் அவர்­கள் கூறி­னார்­கள். அவர்­கள் கோரிக்­கையை நாங்­கள் ஏற்­றுக் கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வரை கேள்வி கேட்­டால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆதவ் பதில் கூறு­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே இருக்­கின்ற காவல் துறை­தான் இவை எல்­லாம் செய்­துக்­கிட்டு இருக்கு. நீங்­கள் புதி­ய­தாக என்ன செய்­தீர்­கள் என்று ஆஸ்­டீன் கேட்­டார். அதற்கு முத­ல­மைச்­சர் பதில் சொல்­ல­வில்லை என்­று­தான் ஆஸ்­டின் சொன்­னார். அதற்கு பதில் சொல்­லா­மல் திசை திருப்­பு­கின்ற வகை­யில் கொளத்­தூ­ரை­யெல்­லாம் இழுத்­துப் பேசி­னார் ஆதவ் அர்­ஜூனா. நாங்­கள் எங்­கள் எதிர்ப்பை காண்­பித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாலி­யல் பிரச்­சி­னை­க­ளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">6 மாதம் கழித்து பேச­மு­டி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீண்ட திட்­டங்­க­ளுக்கு, சட்­டம் ஒழுங்கு அன்­றா­டம் பாது­காக்க காவல்துறை இருக்கு, அந்­தக் காவல் துறைக்­குத் தலை­வ­ராக முத­ல­மைச்­சர் இருக்­கி­றார். இதனை உட­ன­டி­யாக செய்ய வேண்­டும். இன்­றைக்கு ஒரு உயிர் போய்இருக்கு, அதனை 6 மாதம் கழித்து திருப்­பிக் கொடுக்க முடி­யுமா? ஒரு சிறு­மிக்கு மிகப் பெரிய கொடூ­ரம் நடந்­தி­ருக்கு 6 மாதம் கழித்து பேச முடி­யுமா? இது அன்­றா­டம் பேச வேண்­டி­யது. நாங்­கள் பேசி­ய­து­ இல்லை. பொது­மக்­கள் பேசு­கி­றார்­கள். பொது­மக்­கள் வீதி­யில் இறங்கி போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நீங்­களே பார்க்­கி­றீர்­கள். பொது­மக்­க­ளுக்கு அவர்­கள் பதில் சொல்ல வேண்­டும். அவர்­கள் பொது­மக்­க­ளை­யும் மதிப்­ப­தாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>