<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,492,1117" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 22 2026 03:46:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260622T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22062026-TRY-04" position.sequence="04" ex-ref="22062026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">“ஹனீபா எனும் கொள்கை பாடகரை தி.மு.க.வின் தேசிய பாடகராகவே  அழகு பார்த்த இயக்கம் தி.மு.க.” சீட்டுக்காகவும் பதவிக்காகவும் புலம்பும் சில்லறைகளே துடைத்து எறியப்படவேண்டியவர்கள்!   </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup602881_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்லாமியர்களுக்கும் தி.மு.க.வுக்குமான உறவு என்பது தேர்தல்,அரசியல் சம்பந்தமான உறவு என்று எளிதாக சொல்லி கடந்துபோக கூடிய உறவல்ல ! அது நான்கு தலைமுறைகளாக தொடரும் ஒரு பந்தம்.ஆனால் தேர்தல் சீட்டுக்காகவும் ,பதவிக்காகவும்  ஆசைப்பட்டு தனக்கு வாக்களித்த  மக்களை  துஷ்ட சக்திகளிடம் அடகு வைக்கும் “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்”, யாரோ போடும்  எலும்புத்துண்டுக்காக தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போற்றுதலுக்குரிய கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்கள், தான் இறக்கும் தருவாயில் எனக்கு பிறகு இஸ்லாமியர்களை காக்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்  இருக்கிறார் என்று சொன்னபோது பிறந்துகூட இருக்காதவர்கள்  இன்று  ஒட்டுமொத்த   இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக தன்னை நினைத்துக்கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள  தி.மு.க.வை விமர்சிக்கி றார்கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்கள் பேசுவது அவர்களுக்காக “முதல்” போட்டிருக்கும்  எஜமானர்களை  மகிழ்விக்கலாம் . ஆனால் அது நன்றியோடுள்ள  ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணரவேண்டும். தனக்கு ஆட்சியில்  பொறுப்பு வழங்கினால் தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டதால்தான் இப்படிப்பட்ட கீழ்தரமான விமர்சனங்களை பேசுகிறார்கள் என்பதை இஸ்லாமியர்கள் அறியாமல் இல்லை. தி.மு.க.வை வீழத்திட நினைத்தவர்கள் வீழ்ந்த கதையை அறிந்தும் இப்படி பேசுவது அந்த பதவிமேல் மேல் உள்ள மோகமே தவிர வேறெதுவும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்படிப்பட்டவர்களுக்கு முத்தமிழ் அறிஞர்  கலைஞர்  சொன்ன ஒரு உதாரணம் இருக்கிறது “ திடீர் என்று சூறைக்காற்றில்,  குப்பையில் இருந்து பறந்துவந்து கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக்கொள்ளும் இலை போன்றவர்கள் தற்காலிகமாக அந்த பதவி சுகத்தை அடைவார்கள், காற்று நின்றவுடன் ஒட்டிக்கொண்டவர்கள் மீண்டும் கீழே பழைய இடத்திற்கு திரும்பவேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முழக்கமான ஒன்றிணைவோம் வா, வெல்வோம் ஒன்றாக என்கிற அழைப்பை ஆணையாக ஏற்று , இந்தியா முழுவதும் இருந்த இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வசித்த இஸ்லாமியர்களும் தமிழ்நாட்டிற்கு தங்களின் சொந்த செலவில் விமானம், ரயில் பஸ் என பயணித்து வந்து, தி.மு.க.வுக்கு வாக்களித்து  தனது நன்றிக்கடனை செலுத்தி திரும்பி இருக்கும்  செய்தியை இன்று வசனம் பேசுபவர்கள் அறிந்திட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கக்கத்தில் துண்டைசொருகி, காலில் செருப்பு அணியாமல் ஊர் தெருக்களில்  ஓரமாக நடக்கவைக்கப்பட்டு , ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களுக்கு,   கக்கத்தில் இருந்த துண்டினை  கழுத்தில் போட்டு காலனியோடு தெருக்களில்  தலை நிமிர்ந்து நடக்கவைத்து அடுத்த தலைமுறையை  கல்வி கற்கவைத்த பெருமை எப்படி நீதிக்கட்சியில்  திராவிட இயக்கத்தின்  மூத்த முன்னோடிகளுக்கு  இருந்ததோ,   அதைப்போல தமிழ்நாட்டில்    தலைவர் கலைஞர் அவர்கள்  இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி தொடங்கி வைத்த  அந்த சமூக அங்கீகாரம்தான்  தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களை சக மனிதர்களாக வாழ்ந்திட அதிகாரம் அளித்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இஸ்லாமிய மக்களை உருது பேசும் அடிப்படையில் பிரித்தபோது உருது பேசும் முஸ்லீம்களையும் பிற்பட்ட சமூகத்தில் இணைத்து எம்.எஸ். ஜனார்த்தனம் அறிக்கையின்படியிலான இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது, வேதம் கற்று பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு நலவாரியம் அமைத்தது , புனிதப் 
பயணமான ஹஜ் பயணத்திற்கான எண்ணிக்கையை  உயர்த்தியது, சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணாசாலை அரசு கல்லூரிக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைத்தது, இன்றைக்கு வக்பு வாரியத்தில் திருத்தம் கொண்டோரின் சூழ்ச்சியைப்போல் அல்லாமல் அன்றைக்கே வக்பு வாரிய கல்லூரிகளை பராமரிக்க, வக்புவாரிய சொத்துக்களை  பராமரிக்க  நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொடுத்த இயக்கம் தி.மு.க. ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மத மாற்ற தடை என்கிற சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை மறைமுகமாக அழிக்க நினைத்த சக்திகளை முறியடித்து இஸ்லாமியர்களின் திருமண சட்ட திருத்தம் செய்து அவர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தது, கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களுக்கு மேலும் பெரும் பெருமை சேர்க்கமணிமண்டபம், “சட்டத்தில் இடமில்லை என்றாலும் நெஞ்சத்தில் இடமிருக்கிறது” என்று உருது அக்காடமி.  இவைகள் எல்லாம் தந்து  இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்றிருப்பது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உலக தமிழ் மாநாடு நடத்துவதற்கு   அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.அவர்களை நியமித்ததும், காயிதே மில்லத் கல்லூரிக்கென மேடவாக்கத்தில் இடம், சென்னை பல்கலை கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம், சீறாப்புராணம் எழுதிய அமுத கவி அவர்களுக்கு மணிமண்டபம் இப்படி அடுக்கிக்கொண்டே செல்லும்படியான இஸ்லாமிய வளர்ச்சித்திட்டங்களை தந்தது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“சிறுபான்மையினருக்கு ஓர் தீங்கென்றால் அது என் பிணத்தை தாண்டித்தான் நடக்கும்” என்று முழங்கி இஸ்லாமியர்களை காத்த கலைஞர் அவர்களின் வழிவந்த திராவிட நாயகர் மு. க. ஸ்டாலின் அவர்கள்தான் அன்று குடியுரிமை சட்டத்தினை [CAA] எதிர்த்து தடுத்து இஸ்லாமியர்களை காத்தார், இன்றும்   வக்பு வாரிய சட்டம் உள்ளிட்டவைகளையும்   எதிர்த்து இஸ்லாமியர்களை காத்தும் வருகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கற்பவனாக இரு, அல்லது கற்பிப்பவனாக இரு அல்லது கற்பிப்பவர்களுக்கு உதவி செய்பவனாக இரு, இந்த மூன்றையும் தவிர நான்காவது நபராக கண்டிப்பாக இருந்து விடாதே என்பது நபிகள் நாயகம் சொன்ன வார்த்தை. ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று பிறருக்கும் கல்வி கற்றுக் கொடுப்பதே தான தர்மங்களில் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் அவர்களின் கருத்தை மேற்கோள் காட்டி மாண்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி இருப்பது இஸ்லாமுக்கு அவர் செய்திருக்கும் மரியாதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்வியையும்  காவிச்சாயமாக்கி, தமிழை அழித்து சமஸ்கிருதத்தை புகுத்த,  மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசே பல்கலைக் கழகங்களுக்கு  துணை வேந்தர்களை நியமிக்கலாம் என்ற ஒரு வரைவை யு.ஜி.சி. மூலம் கொண்டுவர திட்டமிட்டபோது . யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் திராவிட மாடல் அரசின் பிதாமகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்  தீர்மானமே நிறைவேற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கருணை ஜமால், எஸ்.ஜே.சாதிக் பாஷா,ஏ.ரஹ்மான்கான், துறைமுகம் உசேன், எஸ்.என்.எம்.உபயத்துல்லா, டி.பி.எம்.மைதீன்கான், கே.எஸ்.மஸ்தான், சா.மு.நாசர், வழக்கறிஞர்கள்  முகமதுஅலி ஜின்னா , அசன்முகமது ஜின்னா, அப்துல் வஹாப்  என  நீளும் பட்டியல்கள் வெறும் பெயர்கள் அல்ல,  கழகத்தில் எந்த எதிர் 
பார்ப்பும் இல்லாமல் உழைத்து, கழக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஒளிரும் இஸ்லாமிய நட்சத்தி ரங்கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதையெல்லாம்விட,  இன்றும் கழக மேடைகளில்,   அது கழக மாநாடு என்றாலும், பொதுக் கூட்டங்கள் என்றாலும், தெருமுனை பிரச்சாரம் என்றாலும், கடைக்கோடி கழக தொண்டனின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்றாலும்   “இசைமுரசு நாகூர் ஹனீபா” அவர்களின் கழக பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் தனக்கு பதவியோ பொறுப்போ வருமென்று எதிர்பாராமல் கழகத்தின் மீதும்,தலைவர் கலைஞர் மீதும் கொண்டிருந்த கொள்கைப்பற்றால் விசுவாசமாக இறுதிவரை இருந்தார். அதனால்தான்  நாகூர் ஹனீபா அவர்களை கழகத்தின் தேசிய பாடகராகவே பார்த்தது கழகம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதுமட்டுமா இன்று நம்மிடையே இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள் இல்லை என்றாலும் கூட அந்த ஏக்கத்தை போக்கும் அளவுக்கு “இறையன்பன் குத்தூஸ்”  போன்றவர் களின் பாடல்கள் நம்மிடைய ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது  என்றால் அது தி.மு.கழகத்தால் இஸ்லாமி யர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்  மிகப்பெரிய அங்கீகார மாகவே பார்க்கப்படுகிறது !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க.வை அழிப்போம் என்று முழங்கிவர்களுக்கு மலர்வளையம் வைத்து அனுப்பிய இயக்கம் தி.மு.க. என்பதை உணரவேண்டும் . தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகள் ஏதோ தனக்காகத்தான் என்கிற பொய்யான மமதையில்  அலையும் சிலர், அது தி.மு.க. எனும் ஆலமரத்தில் இளைப்பாறும் பறவைகள் செய்த நன்றிக் கடன் என்பதை மறந்து போய் பேசக்கூடாது. நீங்கள் ஒருவர் பேசும் பொய்யாலும் , வீர வசனத்தாலும், இஸ்லாமி யர்களின் தொப்புள் கொடி உறவாக தொட்டுத் தொடரும் தி.மு.க.எனும் பாரம்பரிய உறவு விட்டுப்போகாது. நீங்கள் பதவிக்காக எங்கும் தாவலாம் ,  நாங்களோ  வரப்போகும் எங்கள் தலைமுறைகளோ  தி.மு.க. எனும் ஆல மரத்தினை என்றைக்கும் உயர்த்திப்பிடிக்கும் விழுதுகளாகவேஇருப்போம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>