<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,64,958,654" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 22 2026 14:47:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260623T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23062026-CBE-02" position.sequence="02" ex-ref="23062026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">மாநிலங்களின் கல்வி உரிமை பறிப்பு – ஒன்றிய அரசிற்கு எதிராக</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="NasarPhoto_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர், ஜூன் 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மத்­திய மாவட்ட தி.மு.க. மாண­வர் அணி­யின் அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் ஆவடி ரயில் நிலை­யம் அரு­கி­லுள்ள மாவட்­டக் கழக அலு­வ­ல­கம் (வார் ரூம்) வளா­கத்­தில் நடை­பெற்­றது. மாவட்ட அவைத் தலை­வர் ம.இராஜி தலைமை வகித்­தார். முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் கழக ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு அணிச் செய­லா­ள­ரு­மான ஆ.கிருஷ்­ண­சாமி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் கே.ஜெ.ரமேஷ், மாநில சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப் பிரிவு இணைச் செய­லா­ளர் சி.ஜெரால்டு, மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் வி.ஜெ.சீனி­வா­சன், எஸ்.ஜெய­பா­லன், காயத்­திரி ஸ்ரீதர், வி.குமார், காஞ்­சனா சுதா­கர் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர். மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர் வே.தியா­க­ ரா­ஜன் வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­
யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர் பேசு­கை­யில், ஒன்­றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ்­நாட்­டின் மொழி உரிமை, கல்வி உரிமை மற்­றும் மாநில சுயாட்­சிக்கு எதி­ராக செயல்­பட்டு வரு­வ­தாக குற்­றம்­சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பி.எம்.ஸ்ரீ திட்­டம், சிபி­எஸ்இ பள்­ளி­க­ளில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் மும்­மொ­ழிக் கொள்கை, உயர்­கல்­விக்­கான ஒரே ஒழுங்­கு­முறை அமைப்பை உரு­வாக்­கும் நோக்­கில் கொண்டு வரப்­ப­டும் வி.பி.ஏ.எஸ். மசோதா உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் மாநி­லங்­க­ளின் உரி­மை­களை பறிக்­கும் நோக்­கத்­து­டன் மேற்­கொள்­ளப்­ படு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இவற்றை கண்­டித்து ஜூன் 23–ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள ஆளு­நர் மாளிகை முற்­று­கைப் போராட்­டத்­தில் மாண­வர் அணி நிர்­வா­கி­கள் மற்­றும் மாண­வர்­கள் பெருந்­தி­ர­ளாக பங்­கேற்க வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளின் நலனை முன்­னி­றுத்தி செயல்­பட்டு வரும் திரா­விட மாடல் அரசை திறம்­பட வழி­ந­டத்தி வரும் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், மாண­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கழக இளை­ஞ­ரணி செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு ­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் கூட்­டத்­தில் நன்றி தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழிக் கொள்­கையை மீறி கல்வி மற்­றும் நிர்­வா­கத் துறை­க­ளில் இந்­தியை மறை­மு­க­மாக திணிக்க முய­லும் ஒன்­றிய அர­சின் செயல்­பா­டு­க­ளுக்கு கூட்­டத்­தில் கடும் கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டது. தமிழ் மொழி, தமி­ழர் பண்­பாடு மற்­றும் மாநில உரி­மை­களை பாது­காக்க மாண­வர்­கள் விழிப்­பு­ணர்­வு­டன் செயல்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் மாநி­லங்­க­ளின் கல்வி உரி­மை­யைப் பறித்து சமூ­க­நீதி மற்­றும் இட­ஒ­துக்­கீட்­டுக் கொள்­கை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் புதிய கல்­விக் கொள்­கையை ஒன்­றிய அரசு திணிக்க முயல்­வது வன்­மை­யாக கண்­டிக்­கப்­பட்­டது. ஏழை, எளிய மற்­றும் கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கல்­விக் கனவை சிதைக்­கும் நீட் தேர்வை நிரந்­த­ர­மாக ரத்து செய்து, மாநில அர­சின் சேர்க்கை முறையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக மக்­க­ளின் அன்­றாட பிரச்­சி­னை­கள், மாண­வர்­க­ளின் கல்வி, வேலை­வாய்ப்பு, சமூ­க­நீதி, பெண்­கள் பாது­காப்பு உள்­ளிட்ட முக்­கிய விவ­கா­ரங்­க­ளில் தெளி­வான நிலைப்­பாடு எடுக்­கா­மல் தொடர்ந்து மவு­னம் காத்து வரு­வ­தாக தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் செயல்­பா­டு­க­ளுக்கு கூட்­டத்­தில் கடும் கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போன்று, திரா­விட மாடல் அர­சின் மக்­கள் நலத் திட்­டங்­க­ளுக்கு பெயர் மாற்­றம் செய்து விளம்­ப­ரம் தேடும் போக்­கை­யும் கூட்­டம் கண்­டித்­தது. “பிங்க் பேட்­ரோல்”, “நான் முதல்­வன்” உள்­ளிட்ட திட்­டங்­க­ளின் பெயர்­களை மாற்­று­வது சாத­னை­யா­காது என்­றும், மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­தும் திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வதே உண்­மை­யான சாதனை என்­றும் கருத்து தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து பேசிய ஆவடி சா.மு.நாசர், “சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு நடை­பெ­றும் முக்­கி­ய­மான மாண­வர் அணி கூட்­டம் இது. மாண­வர்­கள் பெருந்­தி­ர­ளாக கலந்து கொண்டு ஒன்­றிய அர­சின் மக்­கள் விரோத, மாண­வர் விரோத கொள்­கை­க­ளுக்கு எதி­ராக தங்­க­ளது ஜன­நா­யக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்­டும். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்­கை­க­ளுக்­காக உழைக்­கும் மாண­வர்­களே நாளைய தலை­மு­றை­யின் தலை­வர்­க­ளாக உரு­வெ­டுப்­பார்­கள். உங்­க­ளைப் போன்ற மாண­வர்­கள்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வலி­மை­யும் எதிர்­கால நம்­பிக்­கை­யும் ஆவீர்­கள். எனவே ஜூன் 23–ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டத்தை வெற்­றி­க­ர­மாக்க மாண­வர்­கள் அனை­வ­ரும் திரள வேண்­டும்” என்று கேட்­டுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் மாந­கர, ஒன்­றிய, நகர மற்­றும் பேரூர்க் கழ­கச் செய­லா­ளர்­கள் சன்.பிர­காஷ், ஜி.ராஜேந்­தி­ரன், ஜி.நாரா­யண பிர­சாத், பொன்.விஜ­யன், டி.தேசிங்கு, என்.இ. கே.மூர்த்தி, தி.வை.இரவி, ப.ச.கம­லேஷ், சே.பிரேம் ஆனந்த், டி.முர­ளி­ கி­ருஷ்­ணன், தி.வே.முனு­சாமி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் கே.சுரேஷ் குமார், மாவட்ட மாண­வர் அணி துணை அமைப்­பா­ளர் புரு­ஷோத்­த­மன், விக்­டர் மோகன், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் பெ.வினோத், ஷாஜ­கான், விமல் ஆனந்த், பிர­வீன் குமார், ஆதி­கே­ச­வன், சண்­மு­கம், ஜி.சி.சி.கரு­ணா­நிதி, வி.ஜெ.உமா மகேஸ்­வ­ரன், டி.பிரி­யா­கு­மார் உள்­ளிட்­டோர் மற்­றும் மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், நிர்­வா­கி­கள், மாண­வர் அணி நிர்­வா­கி­கள் என ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>