<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 03:47:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24062026-MDU-06" position.sequence="06" ex-ref="24062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">‘தீர்ந்து போன சக்தி’யிடம் திருடுகிற அளவுக்கு ‘காய்ந்து போன சக்தி’யாக மாறியிருக்கிறீர்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">சட்டப் பேரவையில் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை...   5 -ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு. செங்­கல்­பட்டு அருகே சூனாம்­பேட்­டில் கருப்­பாயி என்­கிற 75 வயது மூதாட்டி, அவர்­க­ளுக்கு உடம்பு சரி­யில்லை, வீட்­டில் வென்­டி­லேட்­டர் சப்­போர்ட்­டில் இருந்­த­பொ­ழுது, பவர் கட் ஏற்­பட்டு மூச்­சுத் திணறி இறந்து போய்­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பவர் இல்லை என்று, தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் போய் கேட்­க­லாம் என்று பார்த்­தால், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் யார் என்று மக்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. நிறைய பேருக்கு, நான் தவ­றா­கச் சொல்­ல­வில்லை, இங்கு இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் புது­மு­கங்­கள். நமக்கே பாதிப் பேரை வெளி­யில் பார்க்­கும்­பொ­ழுது இவர் சட்­ட­மன்ற உறுப்­பி­னரா, இல்­லையா என்று தெரி­ய­வில்லை, உள்ளே வந்­தால்­தான் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பள்­ளி­க­ளுக்கு விடு­முறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­ன­ரெல்­லாம் புயல், மழை நேரத்­தில் ஸ்கூலுக்கு லீவ் விடு­வார்­கள். ஆனால், இந்த ஆட்சி அமைந்த பிற­கு­தான் முதன்­மு­றை­யாக மின்­சா­ரம் இல்லை என்று பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். சென்னை, பெரம்­பூர் மற்­றும் வியா­சர்­பா­டி­யில் கடந்த ஜூன் 9–ஆம் தேதி­யன்று, நான்கு தனி­யார் பள்­ளி­க­ளுக்கு மின்­சா­ரம் இல்லை என்று விடு­முறை விட்­டார்­கள். முன்பு மழை வரும்­பொ­ழு­தெல்­லாம், பள்ளி மாண­வர்­கள் தொலைக்­காட்­சியை ஆன் பண்ணி இன்­றைக்­குப் பள்ளி இருக்­கி­றதா, இல்­லையா என்று தெரிந்­து­கொள்­வார்­கள். ஆனால், இப்­பொ­ழு­தெல்­லாம் டி.வி. ஆன் பண்­ண­வில்லை என்­றாலே தெரிந்­து­கொள்­கி­றார்­கள். சரி, இன்­றைக்கு மின்­சா­ரம் இல்லை, இன்­றைக்­குப் பள்ளி விடு­மு­றை­தான் என்று. எனவே ஒரு மிகப்­பெ­ரிய ஒரு மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தை (அட்­வான்ஸ் டெக்­னா­ல­ஜியை) இந்த அரசு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சி­யான எங்­க­ளது பொதுக்­கூட்­டத்­தில்­தான் மின்­சா­ரத் தடை ஏற்­ப­டு­கி­றதோ என்று நாங்­கள் கூட நினைத்­துக் கொண்­டி­ருந்­தோம், வருத்­தப்­பட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வ­ரான அண்­ணன் திரு தொல்.திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளும் மின்­சா­ரத் தடை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­திற்கு முன்­னாள் ஒன்­றிய அமைச்­சர் அண்­ணன் ப.சிதம்­ப­ரம் அவர்­கள் போயி­ருக்­கி­றார். அவர் உள்ளே சென்ற உடனே மின்­சா­ரம் தடை­பட்­டு­விட்­டது. கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் இரண்டு பேரும் இருட்­டி­லேயே உட்­கார்ந்து பேசி­யி­ருக்­கி­றார்­கள். மின்­சா­ரம் வருமா, வராதா என்று. ஏ.சி. இயங்­க­வில்லை, வியர்த்­துக்­கொட்ட கொட்ட இரண்டு பேரும் பேசிக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்­கள் என்று அண்­ணன் திருமா அவர்­களே பதிவு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரத்­துக்கே இது­தான் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பவ­ரில் ஷேரிங் கொடுத்த ஆளுங்­கட்­சி­யால், அவர்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கக்­கூ­டிய கட்­சி­யி­னு­டைய அலு­வ­ல­கத்­திற்கு பவர், மின்­சா­ரம் கொடுக்க முடி­யா­மல் இன்­றைக்­குத் தடு­மா­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன், இன்­னும் சொல்­லப்­போ­னால் இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னாடி ஆளுங்­கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தி­லேயே (ஹெட் ஆபீ­ஸி­லேயே) மின்­சா­ரத் தடை ஏற்­பட்­டு­விட்­டது. அப்­பொ­ழுது அங்கு வந்­த­வர்­கள் எல்­லாம், `ஆளுங்­கட்­சி­யாக இருந்­தும், பனை­யூ­ரி­லேயே பவர் இல்­லையே’ என்று புலம்­பிக்­கொண்டு சென்­ற­தா­கத் தக­வல் வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக மொத்­தம் இன்­றைக்­குத் தமிழ்­நாடு உண்­மை­யா­கவே (லிட்­ர­லாக) ஒரு இருட்­டில் மூழ்­கிக் கிடக்­கி­றது. மின்­வெட்­டி­னால் இன்­றைக்­குப் பல நிறு­வ­னங்­கள் முடங்­கிப் போயி­ருக்­கின்­றன. குறிப்­பாக, எம்.எஸ்.எம்.இ. (MSME) என்று சொல்­லப்­ப­டு­கிற குறு, சிறு நிறு­வ­னங்­கள் எல்­லாம் என்ன செய்­வது என்று தெரி­யா­மல் புலம்­பிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஏற்­க­னவே மேட்­டூ­ரில் ஜூன் 12–ஆம் தேதி நீங்­கள் தண்­ணீர் திறந்து விட்­டி­ருக்க வேண்­டும், திறந்து விட­வில்லை. மின்­வெட்­டி­னால் மோட்­டார் பம்ப் செட் மூல­மும் விவ­சா­யம் செய்ய முடி­ய­வில்லை என்று விவ­சா­யி­கள் இன்­றைக்­குப் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­வெட்­டுக்கு ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு விளக்­கத்தை, இந்த அர­சின் சார்­பா­கக் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­கள். `லோடு அதி­க­மாக இருக்­கி­றது’ என்று சொன்­னார்­கள். இன்­னும் ஒரு படி மேலே சென்று, இன்­றைக்கு ஃபியூஸ் கரி­யரை எடுத்­துக்­கொண்டு போய்­வி­டு­கி­றார்­கள் என்று சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிச் சொன்­ன­தும், இந்த ஆட்­சிக்கு வெளி­யி­லி­ருந்து ஆத­ரவு கொடுக்­கக்­கூ­டி­யச் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த எழுத்­தா­ளர் திரு ஆத­வன் தீட்­சண்யா அவர்­கள் ஒரு பதிவு போட்­டி­ருக்­கி­றார். என்ன தெரி­யுமா எழு­தி­யி­ருக்­கி­றார்? “கரி­ய­ரின் உச்­சத்­தில் ஆரம்­பித்து டிபன் கரி­ய­ரில் போய் நின்று, இன்­றைக்கு ஃபியூஸ் கரி­ய­ரில் முடிந்­தி­ருக்­கக்­கூ­டிய ஆட்சி’’ என்று திரு ஆத­வன் தீட்­சண்யா என்ற எழுத்­தா­ளர், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தி.மு.க.தான் கார­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­சா­ரத் தடைக்கு இவர்­கள் சொல்­கிற கார­ணங்­கள் எதை­யுமே மக்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று தெரிந்­த­தும், இவர்­க­ளு­டைய வழக்­க­மான ஒரு ஆயு­தத்­தைக் கையில் எடுத்­து­விட்­டார்­கள். என்ன தெரி­யுமா அந்த ஆயு­தம்? எல்­லா­வற்­றிற்­கும் தி.மு.க. தான் கார­ணம் என்று சொல்­வது. இப்­போது பவர் கட்­டுக்­கும் தி.மு.க. தான் கார­ணம் என்று சொல்ல ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப் பழி போடு­வ­தில் காட்­டு­கிற வேகத்தை, மின்­சா­ரத்தை மீண்­டும் கொண்டு வரு­வ­தில் காட்­டி­னால் கொஞ்­சம் சிறப்­பாக இருக்­கும். எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் ஏற்­ப­டாத மின்­வெட்டு, இந்த ஆட்­சி­யில் தொடர்ந்து இவ்­வ­ளவு அதி­க­மாக ஏற்­பட என்ன கார­ணம்? அர­சின் நிர்­வா­கத் திற­மை­யின்­மையா, இல்லை, உண்­மை­யி­லேயே ஏதா­வது தொழில்­நுட்­பப் பிரச்­சி­னை­கள் (Technical issues) இருக்­கின்­ற­னவா? அப்­படி ஏதா­வது இருந்­தால், அதைத் தீர்க்க, இந்த அர­சுக்கு இன்­னும் எத்­தனை நாட்­கள் தேவைப்­ப­டும்? இந்த நிலைமை தொட­ரா­மல் இருக்க, என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றீர்­கள் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் தன்­னு­டைய பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரே ஒரு ஆறு­தல், ஒரே ஒரு மகிழ்ச்­சி­யான செய்தி என்­ன­வென்­றால், ஆளு­நர் உரை­யின் பொழுது சட்­ட­மன்­றத்­தில் மின்­சா­ரத் தடை ஏற்­ப­ட­வில்லை. அதற்கு இந்த அர­சைப் பாராட்­ட­லாம் என்று நான் நினைத்­தேன். அப்­படி நினைக்­கும்­போது சட்­ட­சபை நிகழ்ச்­சியை, நேர­லை­யில் துண்­டித்­து­விட்­டார்­கள். இன்­றைக்கு நேர­லை­யில் வந்து கொண்டு இருக்­கி­றதா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. கொடுத்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்சி நடந்­த­பொ­ழுது, ஐந்து வரு­ட­மும் நாங்­கள் குறுவை சாகு­ப­டிக்­காக மேட்­டூ­ரில் இருந்து சொன்ன தேதி­யில் தண்­ணீர் திறந்து விட்­டி­ருக்­கி­றோம். ஆனால், புதிய அரசு ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்­தச் சம­யத்­தில் மேட்­டூர் அணை­யில் நீர் திறக்­கிற அள­வுக்கு, அங்கே தண்­ணீர் இல்லை. குறிப்­பாக, ஜூன் மாதத்­தில் 9.91 டி.எம்.சி. தண்­ணீ­ரைத் தமிழ்­நாட்­டுக்­குத் திறந்து விட வேண்­டும் என்று காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­யம் கர்­நா­ட­கா­வுக்கு உத்­த­ரவு போட்­டது. ஆனால், இந்த நிமி­டம் வரைக்­கும் அந்த உத்­த­ர­வைக் கர்­நா­டகா நிறை­வேற்­ற­வில்லை. அதை நிறை­வேற்ற முத­ல­மைச்­சர் என்ன செய்­யப் போகி­றார் என்று பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">டெல்­டா­வில் 6 லட்­சம் ஹெக்­டேர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல் டெல்­டா­வில் 6 லட்­சம் ஹெக்­டேர் அள­வுக்­குக் குறுவை சீச­னில் குறுவை சாகு­ப­டி­யா­கும். இந்த முறை மேட்­டூர் அணை­யில் தண்­ணீர் திறக்­கா­த­தால், அரசு அறி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய குறுவை சிறப்­புத் தொகுப்பு (Special package) 134 கோடி ரூபாய்க்கு அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். அது போத­வில்லை என்று இன்­றைக்கு விவ­சா­யி­கள் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். சிறப்­புத் தொகுப்பு கஷ்­டத்­தைப் போக்­காது, உரிய நிவா­ர­ணத்தை விரை­வாக அறி­விக்க வேண்­டும் என்று விவ­சா­யி­கள் எல்­லாம் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அத­னால், டெல்டா விவ­சா­யி­க­ளின் சார்­பாக ஒரு கோரிக்­கையை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு வைக்க விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழுக்­கப் போரா­டிக்­கொண்டு இருக்­கக்­கூ­டிய அனைத்து விவ­சாய சங்­கப் பிர­தி­நி­தி­க­ளை­யும் அழைத்து, முத­ல­மைச்­சர் அவ­ச­ர­மாக ஒரு ஆலோ­ச­னைக் கூட்­டத்தை நடத்த வேண்­டும். கால­தா­ம­தம் இல்­லா­மல் விரை­வாக அந்­தக் கூட்­டம் நடத்­தப்­பட வேண்­டும் என்று கோரிக்கை வைக்­கி­றேன். அவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை நிறை­வேற்­றிக் கொடுப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் அரசு எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முழு­மை­யான பயிர்க்­க­டன் தள்­ளு­படி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளுக்கு இன்­னொரு பெரிய பிரச்­சி­னை­யும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­த­லுக்கு முன்பு நீங்­கள் சொன்ன வாக்­கு­றுதி, ஐந்து ஏக்­கர் வரைக்­கும் நிலம் வைத்­தி­ருக்­கிற விவ­சா­யி­க­ளுக்கு முழு­மை­யான பயிர்க்­க­டன் தள்­ளு­படி என்று நீங்­கள்­தான் சொன்­னீர்­கள். ஆனால் விவ­சா­யி­களை இன்­றைக்­குச் சிறு, குறு விவ­சா­யி­கள் என்று பிரித்து, அதி­லும் நிறைய அடுக்­கு­கள் (Slabs) ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றீர்­கள். ஒரு லட்­சம் அள­வுக்­குக் கடன் வாங்­கி­யி­ருந்­தால், 5,000 ரூபாய் வரைக்­கும் தான் தள்­ளு­படி கிடைக்­கும் என்ற நிலை­மையை இன்­றைக்கு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றீர்­கள். அதி­லும் ஒரு மாற்­றம் (Change) கொண்டு வந்­தீர்­கள். 75,000 ரூபாய் வரைக்­கும் வாங்­கி­ய­வர்­க­ளுக்கு முழுத் தள்­ளு­படி என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது அதில் இன்­னொரு மாற்­றம் என்­ன­வென்­றால், ஒரே குடும்­பத்­தில் உள்ள மூன்று நபர்­கள் வரை கடன் பெற்­றி­ருந்­தா­லும், தற்­போது ஒரு குடும்ப அட்­டைக்கு, ஒரு வேளாண் கடன் மட்­டுமே தள்­ளு­படி செய்ய அர­சாணை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எங்­க­ளு­டைய ஆட்­சி­யில், கடந்த கால ஆட்­சி­க­ளில் இதெல்­லாம் முழுத்­தள்­ளு­படி கொடுத்­தி­ருக்­கி­றோம். எனவே, அதை­யும் இந்த விவ­சா­யி­களை இதற்கு மேல் குழப்­பா­மல் இந்த அரசு முடி­வெ­டுக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கின்­றேன். அர­சின் இந்த ஏமாற்று அறி­விப்­பைக் கண்­டித்து, போராட்­டம் நடத்­திய விவ­சா­யி­கள் மேல் தடி­ய­டி­யும் நடத்­தி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது முத­ல­மைச்­சர் சொன்­னார், ``எனக்கு இன்­னொரு ஜென்­மம் இருந்­தால், நான் விவ­சா­யி­யா­கப் பிறக்க வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன்’’ என்று முத­ல­மைச்­சர் சொல்­லி­யி­ருக்­கி­றார். ஆனால், இன்­னொரு பக்­கம் விவ­சா­யி­கள் மேல் தடி­ய­டி­யும் நடத்­தி­யி­ருக்­கி­றீர்­கள். விவ­சா­யி­யா­கப் பிறக்க இன்­னொரு ஜென்­மம் எல்­லாம் தேவை­யில்லை, இப்­போது நினைத்­தா­லும் போய் விவ­சாயி ஆகி­வி­ட­லாம். ஆகவே, வெற்று வார்த்­தை­க­ளால் விவ­சா­யி­களை ஏமாற்­றா­மல் இந்த அரசு செயல்­பட வேண்­டும் என்று நாங்­கள் விரும்பி கேட்­டுக்­கொள்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மேக­தாது அணைப் பிரச்­சினை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேட்­டூர் அணை­யைத் திறக்­கா­தது, மேக­தாது அணைப் பிரச்­சினை, பயிர்க்­க­டன் தள்­ளு­ப­டி­யில் ஏமாற்­றம் என்று இந்த ஒரு மாதத்­தில் மட்­டும் விவ­சா­யி­கள் பல சோத­னை­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம், இந்த ஆட்­சி­யில் அர­சுப் பள்­ளி­க­ளில் நடக்­கும் கூத்­தை­யெல்­லாம் பார்க்­கும்­போது ரொம்ப அதிர்ச்­சி­யாக இருக்­கின்­றது. முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் அர­சுப் பள்­ளி­க­ளுக்­குள்ளே சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் போகி­றார்­கள். தப்பு இல்லை. போக வேண்­டும், ஆய்­வு­க­ளெல்­லாம் செய்ய வேண்­டும். ஆனால், பள்ளி மாண­வர்­கள் மத்­தி­யில் மோச­மான கருத்­துக்­க­ளைக் கொண்ட பாடல்­க­ளை­யெல்­லாம் ஒளி­ப­ரப்பி, எல்­லா­ரை­யும் நட­ன­மா­டச் சொல்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ரின் புகைப்­ப­டம் மாற்­று­வதோ, பாடல் போடு­வதோ இங்­குப் பிரச்­சினை கிடை­யாது. ஆனால், அவர்­கள் என்ன பாட்டை, மாண­வர்­கள் மத்­தி­யில் போடு­கி­றார்­கள் என்­ப­து­தான் இங்கு இருக்­கக்­கூ­டிய பிரச்­சினை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாண­வர்­க­ளுக்­குத் தன்­னம்­பிக்­கை­யும் ஊக்­க­மும் அளிக்­கிற மாதி­ரி­யான கருத்­துள்ள பாடல்­க­ளைப் போட்­டால் பர­வா­யில்லை. ஆனால், சினிமா படங்­க­ளில் வரும் குத்­துப்­பா­டல்­கள், தவ­றான அர்த்­தம் கொண்ட பாடல்­க­ளை­யெல்­லாம் குழந்­தை­கள் மத்­தி­யில் ஒளி­ப­ரப்­பு­வதை ஏற்­கவே முடி­யாது. எனவே முத­ல­மைச்­சர் தலை­யிட்டு, உடனே இதை நிறுத்த வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­டம் ஒழுங்கு நிலைமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து மிக முக்­கி­ய­மான ஒரு பிரச்­சி­னையை இந்த அர­சின் கவ­னத்­திற்கு கொண்டு வர விரும்­பு­கி­றேன். இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டின் சட்­டம் ஒழுங்கு நிலைமை எப்­படி இருக்­கி­றது என்று செய்­தி­க­ளைப் பார்த்­தால் அவ்­வ­ளவு கொடூ­ர­மாக இருக்­கி­றது. ஒரு மாதத்­தில் 200–க்கும் மேற்­பட்ட பாலி­யல் குற்­றங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அதில் 100–க்கும் அதி­க­மான குற்­றங்­கள் சிறு­மி­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டு­மை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜன­நா­யக நடை­மு­றைக்கு எதி­ரா­கக் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­திப் பெரி­ய­வர்­க­ளி­டம் வாக்கு கேட்­டார் இன்­றைக்குஇருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர். ஆனால், அவர் ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்­கும் பாது­காப்பு இல்லை, பெரி­ய­வர்­க­ளுக்­கும் பாது­காப்பு இல்லை என்­கிற நிலைமை இன்­றைக்கு நடந்து கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த புதிய அரசு ஆட்­சிக்கு வந்த ஒரு சில நாட்­க­ளி­லேயே, கோயம்­புத்­தூ­ரில் 10 வயது பெண் குழந்­தை­யைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்து கொலை செய்­தி­ருக்­கி­றார்­கள். முக்­கி­ய­மா­கத் தமிழ்­நாட்­டையே உலுக்­கிய ஒரு வழக்கு (கேஸ்). கும்­மி­டிப்­பூண்­டி­யில் ஒரு மூன்று வயது குழந்தை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்டு, புத­ரில் வீசப்­பட்டு, அதன்­பின்பு, அந்­தக் குழந்தை இறந்து போய்­விட்­டது. இந்­தச் சம்­ப­வத்­திற்கு நீதி கேட்டு அங்கு இருக்­கக்­கூ­டிய மக்­கள் எல்­லாம் போராட்­டத்­தில் இறங்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில்­தான் இருக்­கி­றோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோயம்­புத்­தூ­ரி­லும் சரி, கும்­மி­டிப்­பூண்­டி­யி­லும் சரி, இரண்டு சம்­ப­வத்­தி­லே­யுமே மர­ண­ம­டைந்த குழந்­தை­க­ளு­டைய உடலை, பெற்­றோ­ரி­டம் முறை­யா­கக் கொடுக்­கா­மல், வேறு இடத்­தில் காவல்­துறை மூல­மா­கவே அடக்­கம் செய்­தி­ருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் பார்க்­கி­ற­பொ­ழுது, நாம் இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில்­தான் இருக்­கி­றோமா இல்லை உத்­த­ர­பி­ர­தே­சம், மத்­திய பிர­தே­சம் மாதிரி வட­நாட்­டில் இருக்­கி­றோமா என்று எங்­க­ளுக்­குச் சந்­தே­கம் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">`சிங்­கப்­பெண் படை’ என்று ஒரு திட்­டத்தை முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்­கி­னார். அந்­தத் திட்­டம் வந்த அடுத்த நாளே, காவல்­து­றை­யைச் சேர்ந்த ஒரு பெண்­ணுக்கு மூன்று பேர் பாலி­யல் தொல்லை கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். சென்னை மற்­றும் சுற்­றுப்­பு­றங்­க­ளில் மட்­டும், கடந்த ஜூன் 12–ஆம் தேதி 24 மணி நேரத்­தில், 12 பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கு­கள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. சிங்­கப்­பெண் படை குற்­ற­வா­ளி­க­ளைப் பின்­தொ­ட­ரு­வார்­கள் (சேஸ் பண்­ணு­வார்­கள்) என்று பார்த்­தால், அவர்­க­ளும் அமை­தி­யாக (கூலாக) ரீல்ஸ் போட்­டுப் போஸ்ட் பண்­ணிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ``மன்­னன் எவ்­வழி மக்­கள் அவ்­வழி’’ என்று சொல்­வார்­கள். அதைச் சிங்­கப்­பெண் படை ஃபாலோ பண்­ணுதோ என்று மக்­க­ளுக்­குச் சந்­தே­கம் வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளுங்­கட்­சி­யின் ஆலந்­தூர் பகு­திச் செய­லா­ளர், பெயர் குறிப்­பிட்­டுச் சொல்­கி­றேன். கண­வ­ரால் கைவி­டப்­பட்ட ஒரு பெண்­ணுக்கு பண உதவி செய்­கி­றேன் என்று சொல்லி, அவர்­க­ளைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்த முயற்சி பண்ணி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சேலத்­தில், இன்­னொரு பொள்­ளாச்சி சம்­ப­வம் மாதிரி, ஆளுங்­கட்சி ஆத­ர­வா­ள­ரான மணி­கண்­டன் எனும் நபர், 50–க்கும் அதி­க­மான பெண்­க­ளைப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திரு­வா­ரூ­ரில் ஆளுங்­கட்­சி­யின் திருத்­து­றைப்­பூண்டிஒன்­றி­யச் செய­லா­ளர், கல்­லூரி மாண­வியை ஈவ்–­­டீ­சிங் செய்து இப்­போது கம்பி எண்­ணிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது எல்­லா­வற்­றிற்­கும் மேல் ஒரு கொடுமை, தூத்­துக்­கு­டி­யில் ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த ஒரு அப்­பா­விப் பெண்ணை, இரண்டு ஆளுங்­கட்சி ஆட்­கள் காரில் அழைத்­துக்­கொண்டு போய், மயக்க மருந்து கொடுத்து, கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தச் சம்­ப­வத்­தைப் பற்­றிப் பேசிய பாதிக்­கப்­பட்ட பெண், திரு­வை­குண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் திரு.சர­வ­ணன் சொல்­லித்­தான் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தா­கத்தொலைக்­காட்­சி­யில் பேட்டி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பாதிக்­கப்­பட்ட பெண்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கட்­சி­யி­லி­ருந்து நீக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லாம் மேலி­டத்­துக்­குத் தெரி­யும் என்று பாதிக்­கப்­பட்ட பெண் பேட்டி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். யார் அந்த மேலி­டம் என்று இன்­றைக்கு மக்­கள் கேட்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். தனக்கு நேர்ந்த கொடு­மையை, ஆளுங்­கட்­சி­யி­னு­டைய அமைச்­சர்­கள், இரண்­டாம் கட்ட, மூன்­றாம் கட்­டத் தலை­வர்­க­ளி­டம் சொன்­ன­தா­க­வும் பாதிக்­கப்­பட்ட பெண் இன்­றைக்­குச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் நடந்­தது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யார் தப்பு செய்­தா­லும் நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­க­மாட்­டேன் என்று சொன்­னார் நம் முத­ல­மைச்­சர். ஆனால், இந்­தச் சம்­ப­வத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மேல் என்ன நட­வ­டிக்கை எடுத்­தார்­கள் என்று தெரி­ய­வில்லை. அதற்கு மாறாக, பாதிக்­கப்­பட்ட பெண்­ணைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யி­ருக்­கி­றீர்­கள். இதற்­குப் பேர்­தான் மாற்­றமா. இதற்­குப் பேர்­தான் தூய சக்­தியா என்று மக்­கள் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­களே, பேர­வைத் தலை­வர் அவர்­களே, நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், ஆறு மாதம் டைம் எடுத்­துக்­கொண்டு வந்து சட்ட ஒழுங்கை நிலை­நாட்­டு­கிற வரைக்­கும் நாங்­கள் காத்­துக்­கொண்டு இருக்க முடி­யாது, நாடும் தாங்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைப்­பற்­றிக் கேள்வி எழுப்­பி­னால் கூட, காவல்­து­றைக்­குப் பொறுப்பு வகிக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் எது­வும் பேச­மாட்­டேன் என்­கி­றார். ``To remain silent in the face of evil is itself evil’’ என்று ஒரு பழ­மொழி உண்டு. அது யாருக்­குப் பொருந்­து­கி­றதோ இல்­லையோ, இந்த அர­சுக்­குச் சரி­யா­கப் பொருந்­து­கி­றது. ஆகவே முதல் வேலை­யா­கச் சட்ட ஒழுங்­கைக் காப்­பாற்­று­வ­தற்கு முக்­கி­யத்­து­ வம் கொடுத்து, இந்த அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, சீர்­தி­ருத்­தம் (ரிஃபார்ம்) செய்­து­கொண்டு இருக்­கி­றீர்­கள் என்று சொல்­கி­றீர்­கள், செய்­யுங்­கள். இந்த தூத்­துக்­கு­டி­யில் என்ன நட­வ­டிக்கை (ஆ­க்ஷன்) எடுத்­தி­ருக்­கி­றீர்­கள்? அது மட்­டும் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன். தூத்­துக்­கு­டி­யில் ஒரு நிகழ்வு சொன்­னேன் அல்­லவா, உங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அதற்கு மட்­டும் கொஞ்­சம் விளக்­கம் கொடுத்­தீர்­கள்என்­றால், நன்­றாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மிகப்­பெ­ரிய தொழில் முத­லீ­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு வர­வேண்­டிய மிகப்­பெ­ரிய தொழில் முத­லீ­டு­கள் எல்­லாம் இன்­றைக்­குப் பக்­கத்து மாநி­லங்­க­ளுக்­குப் போவ­தா­கப் பத்­தி­ரிக்­கை­க­ளி­லும் இதழ்­க­ளி­லும் தொடர்ந்து செய்­தி­கள் வந்­து­கொண்டு இருக்­கின்­றன. தொழில்­துறை கைடன்ஸ் தமிழ்­நாடு அமைப்­பு­க­ளில் முந்­தைய ஆட்­சி­யில் இருந்­தி­ருக்­கக்­கூ­டிய அதி­கா­ரி­க­ளைத் திடீ­ரென்று மாற்­றி­ய­தும் ஒரு தவ­றான முடிவு என்று நாங்­கள் கரு­து­கி­றோம். இத­னால், தமிழ்­நாடு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று பத்­தி­ரி­கை­யில் தொடர்ந்து அறிக்­கை­கள் எல்­லாம் வந்­து­கொண்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு இடை­யில், ஆளு­நர் உரை­யில் தலை­மைச் செய­லா­ளர் தலை­மை­யில் `தமிழ்­நாடு இன்­வெஸ்­டர் ப்ரொமோ­ஷன் கமி­ஷன்’ என்ற பெய­ரில் ஒரு புதிய அமைப்பு உரு­வாக்­கப்­ப­டும் என்று அதில் தெரி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். அப்­ப­டி­யென்­றால், இப்­போது சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கின்ற `கைடன்ஸ் தமிழ்­நாடு அமைப்பு’ என்­ன­வா­கும்என்று முத­ல­மைச்­ச­ரு­டைய பதி­லு­ரை­யில் சொல்லவேண்­டும் என்று நாங்­கள் விரும்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்த அர­சின் முன்­பாக இவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன, ஏகப்­பட்ட பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன. இவற்­றை­யெல்­லாம் தீர்க்க முயற்சி பண்­ணா­மல், அடுத்த கட்சி ஆட்­களை இழுக்­கிற வேலை­யைத்­தான் நீங்­க­ளெல்­லாம் முழு­வீச்­சில் செய்­து­கொண்டு இருக்­கி­றீர்­கள். இந்த அர­சின் மீதான நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின் போது நான் குறிப்­பிட்­டுச் சொன்­னேன், புது­மை­யான ஆட்சி என்று சொன்­னீர்­கள், கடை­சி­யில் `புஷ்பா பட ஆட்­சி’­­யைத் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்று குறிப்­பிட்­டுப் பேசி­யி­ருந்­தேன். அந்த அள­வுக்­குக் குதிரை பேரம் தொடர்ந்து நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">`த்ரீ சீட்­டர் சோபா’ இன்­றைக்கு `ஃபைவ் சீட்­டர் சோஃபா’­­வாக மேம்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றீர்­கள்.­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊழல் சக்தி, ஊழல் சக்தி என்று சொல்­லிட்டு அதே சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்­றைக்கு ஒரு மச்­சத்தை மட்­டும் வைத்­து­விட்டு, தூய சக்­தி­யாக நீங்­கள் மாற்­றி­விட்­டீர்­கள். அத­னால்­தான் எங்­க­ளு­டைய தலை­வர் சமீ­பத்­தில் சொன்­னார், தீர்ந்து போன சக்­தி­க­ளி­டம் திரு­டுற அள­வுக்­குக் காய்ந்து போன சக்­தி­யாக இன்­றைக்கு இந்த ஆட்­சி­யா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். ஆகவே, இந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் தன் பதி­லு­ரை­யில் அவர் விளக்­கம் அளிப்­பார் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். முக்­கி­ய­மாக, இந்த ஆள் பிடிக்­கிற வேலையை நிறுத்­தி­விட்டு, இனி­யா­வது ஆட்சி நிர்­வா­கத்­தில் நீங்­கள் கவ­னம் செலுத்­துங்­கள் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உட­ன­டி­யான ஒரு தீர்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, உங்­க­ளு­டைய முக்­கி­ய­மான தேர்­தல் வாக்­கு­று­தி­கள், படித்து வேலை­யில்­லாத இளை­ஞர்­கள்வ் அவர்­க­ளுக்­கெல்­லாம் மாதம் 4,500 ரூபாய் தரு­வேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள், அதைச் சீக்­கி­ரம் ஆறு மாதத்­தில் கொடுக்க வேண்­டும். கொடுங்­கள். மக­ளி­ருக்கு நீங்­கள் சொன்ன உரி­மைத்­தொகை, மாதம் 2,500 ரூபாய் உரி­மைத்­தொகை, வரு­டத்­திற்கு ஆறு சமை­யல் கேஸ் சிலிண்­டர், தாய்­மா­மன் சீர், இதெல்­லாம் ஆறு மாதத்­தில் கொடுப்­பீர்­கள் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். ஆனால், இதை­யெல்­லாம் எப்­ப­டிக் கொடுக்­கப் போகி­றீர்­கள் என்று ஒரு டைம் லைனை முத­ல­மைச்­சர் தன்­னு­டைய பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல் சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு, மின்­வெட்டு, விவ­சா­யி­கள் பிரச்­சினை ஆகி­ய­வற்­றில் முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­யிட்டு உட­ன­டி­யாக ஒரு தீர்வு காண வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை­யில் இதற்­கான விளக்­கம் இல்­லா­த­தால், முத­ல­மைச்­ச­ரின் பதி­லு­ரை­யி­லா­வது இவை­யெல்­லாம் இருக்­கும் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம். இப்­போது வழக்­கம்­போல் பழக்­க­தோ­ஷத்­தில் எல்­லா­வற்­றுக்­கும் தி.மு.க.தான் கார­ணம் என்று எங்­கள் மீது பழி­யைத் தூக்கி போட்டு, தப்­பித்­துக் கொள்­ளா­மல் தீர்வை நோக்­கி­யே­தான் முத­ல­மைச்­ச­ரின் பதில் இருக்­க­வேண்­டும் என்று விரும்பி கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை­யில் இரு­மொ­ழிக் கொள்கை, மாநில உரிமை, சமூக நீதி, மக­ளிர் முன்­னேற்­றம் என்று தி.மு.க சொன்­ன­தையே ப்ளுபி­ரிண்­டாக ஃபாலோ செய்து, இந்த அர­சின் கொள்கை முடி­வு­க­ளாக அறி­வித்து இருக்­கி­றீர்­கள். இதை நாங்­கள் வர­வேற்­கி­றோம். மற்­ற­படி ஆளு­நர் உரை­யில் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கான ரோடு மேப் எது­வும் இல்லை என்று கூறிக்­கொண்டு, முழுக்க முழுக்க முத­ல­மைச்­ச­ரின் புகழ் உரை­யா­கத்­தான் இந்த ஆளு­நர் உரை அமைந்­தி­ருக்­கி­றது என்று சொல்லி, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­ றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு ஆளு­ந­ரின் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>