<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,721" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 23 2026 17:01:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24062026-MDU-08" position.sequence="08" ex-ref="24062026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup611496_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="19">எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ளிய மக்­க­ளின் பெரும் நம்­பிக்­கை­யாக தமிழ்­நாட்­டின் கல்வி அமைப்பு திகழ்ந்து­ கொண்­டி­ருக்­கி­றது. தங்­க­ளின் பிள்ளை­ களை­யும் தங்­க­ளது தலை­மு­றை­யை­யும் கல்­வி­யால் முன்­னேற்­றி­வி­ட­லாம் எனும் பேரா­வல் அடித்­தட்டு மக்­க­ளி­டம் இருக்­கி­றது. அதன் கார­ண­மா­கத்­தான் தாங்­கள் என்ன மாதி­ரி­யான பொரு­ளா­தார சமூக இன்­னல்­க­ளுக்கு ஆளா­னா­லும், தங்­க­ளின் பிள்­ளை­களை பள்­ளி­க­ளுக்கு அனுப்­பு­வதை முதன்மை பணி­யாக கரு­து­கி­றார்­கள் விளிம்­பு­நி­லை­யில் உள்ள மக்­கள். தங்­க­ளின் வீட்­டில் என்ன சுக துக்­கங்­கள் நிகழ்ந்­தா­லும் பிள்­ளை­களை உட­ன­டி­யாக பள்­ளி­க­ளுக்கு அனுப்­பு­வதை கட­மை­யா­கவே செய்து வரு­கி­றார்­கள் நமது மக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது­போன்ற நம்­பிக்கை அளிக்­கும் கல்வி அமைப்­பிற்கு பெரும் வெளிச்­ச­மாக இருப்­பது அர­சுப் பள்­ளி­கள்­தான்! அர­சுப் பள்­ளி­கள்­தான் எளிய மக்­க­ளின் எதிர்­கால அர­ணா­கத் திகழ்­கி­றது. விடு­த­லைக்­குப் பிற­கான தமிழ்­நாட்­டில் ஆட்சி மாற்­றங்­கள் நடந்­தா­லும், ஒவ்­வொரு ஆட்­சி­யா­ள­ரும் பள்­ளி­க­ளில் மகத்­தான சாத­னை­களை படைத்­தார்­கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இத்­தொ­டர்ச்சி என்­பது அர­சி­யல் கடந்த சிந்­த­னை­யில் மகிழ்ச்­சியை தரக்­கூ­டி­யது. ஆனால் இன்­றைய சூழ­லில் கல்வி அமைப்பை காக்­கும் அர­சுப் பள்­ளி­கள் எனும் பெருஞ்­சு­வற்றை தகர்க்­கும் வேலை­கள் நடந்­து­கொண்­டி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">சமூக ஊட­கங்­க­ளில் ‘இனி­மேல் இது­தான் கட­வுள் வாழ்த்து…’ என ஒரு படப்­பா­டலை காண்­பித்து நய்­யாண்டி செய்­கி­றார்­கள். ஆனால் இந்த நய்­யாண்டி என்­பது உண்­மை­யின் மறு­வ­டி­வ­மா­கவேஉள்­ளது என்­பதை மறுக்க முடி­ய­வில்லை. கவலை மேலோங்கு­ கிறது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘A B C D, அ ஆ இ ஈ…’ எனச் சொல்ல வேண்­டிய மாண­வச் செல்­வங்­க­ளும், தாங்­கள் படித்­ததை ஆசி­ரி­யர்­க­ளி­டம் வாசித்­துக்­காட்ட வேண்­டிய மாண­வர்­க­ளும் கைக்­கட்­டிக் கொண்டு ‘நண்பா… நண்பா…’ என படப்­பா­டலை பாடிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதனை த.வெ.கட்­சி­யி­னர் ரசித்து வீடி­யோ­வும் எடுத்­துள்­ளார்­கள் என்­பது வக்­கி­ர­மா­னது. குழந்­தை­களை பள்­ளிக்கு அனுப்­பி­விட்டு, அன்­றா­டப் பணியை செய்­து­கொண்­டி­ருக்­கும் பெற்­றோர்­க­ளுக்கு இந்த அவ­லம் அந்­நே­ரத்­தில் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. பள்ளி முடிந்து வீட்­டிற்கு வரும் குழந்­தை­களை அதட்டி ‘டிவி பார்க்­காம படி…’ என்­பார்­கள் பெற்­றோர்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஆனால் சில 
குரூ­ர­மா­ன­வர்­கள் பள்­ளிக்கு சென்ற குழந்­தை­க­ளி­டம் ‘படிக்­காதே பாட்­டுப் பாடு…’ என்­கி­றார்­கள். எளிய மக்­க­ளின் வருங்­கால நம்­பிக்­கையை, ஒரு தலை­மு­றையை கெடுக்­கும் செயல் தொடங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உயர்­கல்­வித் துறை அமைச்­சர் ஒரு பள்­ளிக்கு சென்று நட­னம் ஆடு­கி­றார். அதில் தவ­றில்லை. ஆனால், அந்­தப் பாட்­டின் வரி­க­ளும், அங்கே வெளிப்­பட்டபக்­கு­வ­மின்­மை­யும் முகம் சுளிக்க வைக்­கின்­றன. “Good Touch Bad Touch” பற்றி சொல்­லிக்­கொ­டுக்க வேண்­டிய அமைச்­சரே குழந்­தை­க­ளி­டம் நடந்­து­கொள்­ளும் விதம் என்­பது அமைச்­ச­ருக்­கா­னது அல்ல. அநா­க­ரி­க­மான செயலை அமைச்­சரே செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">யாரை குளிர்­விக்க மாண­வர்­களை பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் ஆளுங்­கட்­சி­யி­னர் என்­பது புரி­ய­வில்லை. மாண­வர்­களை கொண்டு முத­ல­மைச்­ச­ரின் படத்தை வரை­வது! முத­ல­மைச்­சர் படத்தை வரைந்து அதில் மாண­வர்­களை அமர வைத்து சாத­னை­கள் நிகழ்த்­து­வது என்­பது யாருக்­காக? மாண­வர்­கள் தங்­க­ளின் திற­மை­யின் மூலம் சாதனை படைக்க ஊக்­கு­விக்க வேண்­டும் எனும் எண்­ணம் உங்­கள் அர­சுக்­கும் உங்­கள் கட்­சிக்­கும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. இது­போன்ற செயல்­கள் மாண­வர்­க­ளின் திசை­வ­ழியை மடை­மாற்­று­வது மட்­டு­மல்­லா­மல், தமிழ்­நாட்­டின் நம்­பிக்­கையை சிதைப்­பது ஆகும். “வாழ்க” கோஷத்­தை­யெல்­லாம் மாண­வர்­கள் சொல்ல தூண்­டும் சமூக விரோ­தி­கள் யார்? அவர்­கள் மீது எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன? தய­வு­செய்து பள்­ளி­களை விட்டு வெளியே போய்­வி­டுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பள்­ளி­க­ளுக்­குள் நுழைய வேண்­டும் என்­றால் மக்­கள் பிர­தி­நி­தி­கள்­தான் செல்ல வேண்­டும். கட்சி பிர­தி­நி­தி­க­ளுக்கு அங்கே எவ்­வித அனு­ம­தி­யும் கிடை­யாது! பள்ளி நிர்­வா­கம் அனு­ம­தித்­தா­லும் அங்கே முத­ல­மைச்­ச­ரின் போட்­டோவை காட்டி மாண­வர்­களை உணர்ச்சி வசப்­ப­டுத்த எந்த அதி­கா­ர­மும் உங்­க­ளுக்கு கிடை­யாது! படிப்­ப­றை­யில் மாண­வர்­கள் – ஆசி­ரி­யர்­களை தவிர உங்­க­ளுக்கு என்ன வேலை? உங்­க­ளின் வெற்று புரட்­சி­களை மக்­க­ளி­டம் வந்து காண்­பி­யுங்­கள். உங்­க­ளின் செயல் மாண­வர்­க­ளின் கைக­ளில் இருந்து புத்­த­கத்தை பிடுங்­­குவது போல் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">இதை எடுத்­துச் சொல்­வ­தற்கு அக்­கட்­சி­யில் எவ­ருமே இல்லை என்­ப­து­தான் சகித்­துக்­கொள்ள முடி­யாத உண்­மை­யா­க­வும் இருக்­கி­றது. பாசிச மனப்­பான்­மை­யில் முத­ல­மைச் ­சரும் த.வெ.க தலை­வ­ரு­மான  விஜய் உள்­ளாரா? எனும் சந்­தே­கம் எழு­கி­றது. அடுத்த தலை­மு­றை­யின் கண்­கள் புத்­த­கத்­தை­யும் கரும்­ப­ல­கை­யை­யும் மட்­டுமே பார்க்க வேண்­டுமே தவிர, உங்­க­ளின் அநா­க­ரி­யங்­களை பார்க்­கக் கூடாது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘கடமை கண்­ணி­யம் கட்­டுப்­பாடு’என்ற பேர­றி­ஞர் அண்­ணாவை மேற்­கோள் காட்­டும் தாங்­கள், தங்­க­ளின் கட்­சி­யி­ன­ருக்கு கட்­டுப்­பாடு என்­றால் என்ன? என ஒரு அறிக்­கை­யா­வது விட்­டுள்­ளீர்­களா? கொஞ்­சம் கூட நாக­ரி­கம் இல்­லா­மல் பள்­ளி­க­ளுக்கு  த.வெ.க கொடியை கட்­டு­வ­தெல்­லாம் உங்­க­ளின் கண்­க­ளுக்கு தெரி­கி­றதா சி.எம். சார். இதற்கு கூட வாயைத் திறக்க மாட்­டீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உங்­களை நான் விமர்­சிக்­க­வில்லை. உங்­கள் குற்­றங்­களை சுட்­டிக்­காட்­ட­வில்லை! அன்­பான வேண்­டு­கோள் மட்­டுமே விடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">‘தய­வு­செய்து அர­சுப் பள்ளி மாண­வர்­களை தொந்­த­ரவு செய்ய வேண்­டாம்’ என்று மட்­டும் சொல்­லுங்­கள். ‘அவர்­கள் பகுத்­த­றிவு கொண்ட மனி­தர்­க­ளாக உரு­வாக வேண்­டும். அத­னால் அவர்­களை தொந்­த­ரவு செய்­யா­தீர்­கள் நண்பா நண்­பீஸ்’ என ஒரு முறை­யே­னும் சொல்­லி­
வி­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இனி­மே­லும் அரசு கண்­ணைக் கட்­டிக்­கொண்டு இருக்­கக் கூடாது! எளிய மக்­க­ளின் நம்­பிக்கை காப்­பாற்­றப்­பட வேண்­டும். அர­சுப் பள்ளி வளா­கங்­க­ளுக்­குள் அநா­க­ரி­மான செயல்­களை அரங்­கேற்­றம் செய்­யா­தீர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>