<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1001,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 23 2026 15:40:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="24062026-TRY-01" position.sequence="01" ex-ref="24062026-TRY-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">காவிரியில் மேகதாது அணை:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த முடிவு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ThangamTennara_01_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூன் 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சட்­ட­மன்ற வளா­கத்­தில் நேற்று முன்தினம் (22/06/2026) செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த திருச்­சுழி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும், முன்­னாள் நிதி அமைச்­ச­ரு­மான தங்­கம் தென்­ன­ரசு, மேக­தாது அணை விவ­கா­ரம் குறித்து பேசு­கை­யில், மத்­திய நீர்­வள ஆணை­யம் 22.11.2018 அன்று கர்­நா­டக அர­சுக்கு அனுப்­பிய கடி­தத்­தின் மூலம், சில நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு விரி­வான திட்ட அறிக்கை (DPR) தயா­ரிப்­ப­தற்­கான அறி­வு­றுத்­தலை வழங்­கி­யது. அந்த அறி­வு­றுத்­தலை எதிர்த்தே, அன்­றைய அ.தி.­மு.க. தலை­மை­யி­லான தமிழ்­நாடு அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த வழக்கு தொடர்­பாக (13.11.2025) அன்று வழங்­கப்­பட்ட தீர்ப்­பில், மத்­திய நீர்­வள ஆணை­யம் எந்­த­வித இறுதி அனு­ம­தி­யை­யும் வழங்­க­வில்லை. மாறாக, சில நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்ட ஒரு ஆரம்­ப­கட்ட அறி­வு­றுத்­த­லையே வழங்­கி­யுள்­ளது என்­பதை உச்­ச­நீ­தி­மன்­றம் சுட்­டிக்­காட்­டி­யது. மேலும், அந்த நிலை­யில் தமிழ்­நாடு அர­சின் கோரிக்­கையை உட­ன­டி­யாக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வது முன்­கூட்­டிய நட­வ­டிக்­கை­யாக அமை­யும் என்ற கருத்­தை­யும் நீதி­மன்­றம் பதிவு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அர­சின் ஆட்­சே­ப­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புறக்­க­ணித்த கர்­நா­டகா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதா­வது, மேக­தாது திட்­டத்­திற்கு இறுதி அனு­மதி வழங்­கப்­பட்­டு­விட்­டது என்ற நிலைப்­பாட்டை நீதி­மன்­றம் ஏற்­க­வில்லை. அதே நேரத்­தில், தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் மற்­றும் நலன்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், திட்­டத்­தின் அடுத்­த­டுத்த முன்­னேற்­றங்­களை சட்­ட­ரீ­தி­யாக எதிர்­கொள்­ளும் வாய்ப்­பும் மாநி­லத்­திற்கு இருப்­பதை அந்­தத் தீர்ப்பு மறை­மு­க­மாக உணர்த்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அது மட்­டு­மல்­லா­மல், தமிழ்­நாடு அர­சின் ஆட்­சே­ப­னை­கள் உள்­ளிட்ட மூன்று முக்­கிய நிபந்­த­னை­களை புறக்­க­ணித்து கர்­நா­டக அரசு தொடர்ந்து விரி­வான திட்ட அறிக்கை (DPR) தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டால், அதனை எதிர்த்து மீண்­டும் உச்­ச­நீ­தி­மன்­றத்தை அணு­கு­வ­தற்கு தமிழ்­நாடு அர­சுக்கு உரிமை உண்டு என்­றும் உச்­ச­நீ­தி­மன்­றம் தனது தீர்ப்­பில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நம்­மைப் பொறுத்­த­வரை, மேக­தாது அணை விவ­கா­ரத்­தில் காவிரி நதி­யின் குறுக்கே அணை கட்­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்­டில் தொடர்ந்து உறு­தி­யாக இருந்து வரு­கி­றோம். அதற்­காக இந்த சட்­டப்­பே­ர­வை­யில் பல­முறை ஒரு­ம­ன­தாக தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், பல்­வேறு கால­கட்­டங்­க­ளில் பதவி வகித்த பிர­த­மர்­க­ளை­யும், ஒன்­றிய அமைச்­சர்­க­ளை­யும் நேரில் சந்­தித்து, தமிழ்­நாட்­டின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­துள்­ளோம். அது­மட்­டு­மின்றி, அனைத்­துக் கட்­சிக் கூட்­டங்­களை நடத்தி, மேக­தாது பகு­தி­யில் காவிரி நதி­யின் குறுக்கே அணை கட்­டும் முயற்­சிக்கு தமிழ்­நாட்­டின் கடு­மை­யான எதிர்ப்பை ஒரு­மித்த குர­லில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால், கர்­நா­டக மாநி­லத்­தைப் பொறுத்­த­வரை, அங்கு எந்­தக் கட்சி ஆட்­சி­யில் இருந்­தா­லும், அது பாஜக அர­சாக இருந்­தா­லும், காங்­கி­ரஸ் அர­சாக இருந்­தா­லும் காவிரி நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­பின் உணர்­வுக்­கும், தமிழ்­நாட்­டின் நலன்­க­ளுக்­கும் முர­ணாக மேக­தாது அணையை கட்­டியே தீரு­வோம் என்ற பிடி­வா­த­மான நிலைப்­பாட்டை தொடர்ந்து கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். இந்த விவ­கா­ரத்­தில் அவர்­கள் தொடர்ந்து மேற்­கொண்டு வரும் நட­வ­டிக்­கை­கள், கூட்­டாட்சி தத்­து­வத்­திற்­கும் மாநி­லங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லு­ற­விற்­கும் உகந்­த­தாக இல்லை.  மேலும், மேக­தாது அணைத் திட்­டம் தொடர்­பான பிரச்­சினை என்­பது காவிரி நடு­வர் மன்­றம் அல்­லது உச்­ச­நீ­தி­மன்­றம் ஏற்­க­னவே தீர்ப்­ப­ளித்­துள்ள விவ­கா­ரங்­க­ளின் தொடர்ச்­சி­யாக மட்­டும் பார்க்­கப்­பட முடி­யாது. இது­வரை நீதி­மன்­றங்­க­ளால் இறு­தி­யா­கத் தீர்­மா­னிக்­கப்­ப­டாத ஒரு புதிய நதி­நீர் தாவா என்­ப­தை­யும் நான் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான நதி­நீர் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக நடை­மு­றை­யில் உள்ள சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் பரிந்­து­ரை­யு­டன் மூன்று நீதி­ப­தி­கள் கொண்டோ அல்­லது உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி தலை­மை­யிலோ புதிய நடு­வர் மன்­றம் அமைக்­கப்­ப­டு­வ­து­தான் இந்த விவ­கா­ரத்­திற்கு பொருத்­த­மான தீர்­வாக இருக்­கும் என்று, இந்த வழக்­கில் தொடர்ந்து தமிழ்­நாடு அர­சின் சார்­பில் ஆஜ­ராகி வாதாடி வரும் மூத்த உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்­க­ளும், நீண்­ட­கா­ல­மாக அர­சுக்கு ஆலோ­சனை வழங்கி வரும் வல்­லு­நர்­க­ளும் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மேக­தாது அணைத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதிய நதி­நீர் தாவா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவர்­க­ளு­டைய ஆலோ­ச­னை­யின்­படி, மேக­தாது அணைத் திட்­டம் ஒரு புதிய நதி­நீர் தாவா என்­ப­தால், இதற்­கென புதிய நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை தமிழ்­நாடு அரசு கடந்த 2026 மார்ச் 4ஆம் தேதி ஒன்­றிய அர­சி­டம் அதி­கா­ரப்­பூர்­வ­மாக முன்­வைத்­துள்­ளது. இத்­த­கைய புதிய நடு­வர் மன்­றம் அமைக்­கப்­ப­டு­வ­தால், ஏற்­க­னவே உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் உறுதி செய்­யப்­பட்­டுள்ள காவிரி நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­புக்கு எந்­த­வித பாதிப்­பும் ஏற்­ப­டாதுஎன்­பதை நான் தெளி­வாக பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதியநடு­வர் மன்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அமைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புதிய நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்கை திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலத்­தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், அது ஒரு அர­சி­யல் கட்­சி­யின் முடி­வாக அல்ல; தமிழ்­நாடு அர­சின் முடி­வா­கும். தமிழ்­நாட்டு மக்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காக்­க­வும், மாநி­லத்­தின் உரி­மை­களை நிலை­நி­றுத்­த­வும், குறிப்­பாக காவிரி நீர் உரி­மையை உறு­திப்­ப­டுத்­த­வும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆக்­கப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­ யா­கவே இதைப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த அடிப்­ப­டை­யில்­தான், புதிய நடு­வர் 
மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி முத­ல­மைச்­சர் சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் ஒன்றை கொண்டு வந்­த­போது, அதனை அனைத்து தரப்­பி­ன­ரின் உணர்­வு­க­ளை­யும் ஒன்­றி­ணைக்­கும் வகை­யில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அத­னைத் தொடர்ந்து, பேர­வை­யில் முன்­வைக்­கப்­பட்ட கருத்­து­கள் மற்­றும் திருத்­தங்­கள் அனைத்­தும் பரி­சீ­லிக்­கப்­பட்டு, இறு­தி­யில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளின் ஒரு­மித்த ஆத­ர­வு­டன் கடந்த 19ஆம் தேதி அந்த தீர்­மா­னம் ஒரு­ ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், புதிய நடு­வர் மன்­றம் அமைக்­கப்­ப­டு­வது எந்த வகை­யி­லும் 2018ஆம் ஆண்டு பிப்­ர­வரி 16ஆம் தேதி உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கிய காவிரி நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்பை பாதிக்­காது. அந்­தத் தீர்ப்பை மறு­ப­ரி­சீ­லனை செய்­யவோ, மீண்­டும் திறக்­கவோ இந்த 
நடை­மு­றை­யால் இய­லாது என்­ப­தை­யும் நான் உறு­தி­யா­கத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முன்­ன­தாக ஏற்­க­னவே கர்­நா­டக அரசு தென்­பெண்ணை ஆற்­றின் குறுக்கே அணை கட்ட முயற்­சித்­த­போது, அதனைதமிழ்­நாடு அரசு கடு­மை­யாக எதிர்த்­தது. இது தொடர்­பாக 2018ஆம் ஆண்டு அதி­முக ஆட்­சிக் காலத்­தில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­கும் தொட­ரப்­பட்­டது. அந்த வழக்கை விசா­ரித்த உச்­ச­நீ­தி­மன்­றம், இந்த விவ­கா­ரத்­தில் புதிய நடு­வர் மன்­றம் அமைக்க மத்­தியஅரசை தமிழ்­நாடு அரசு அணு­க­லாம் என்று அனு­மதி வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதன் அடிப்­ப­டை­யில்­தான், கடந்த 30.11.2019 அன்று தென்­பெண்ணை ஆற்­றின் குறுக்கே கர்­நா­டக அரசு அணை கட்­டும் முயற்­சி­யைத் தடுக்க புதிய நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை தமிழ்­நாடு அரசு ஒன்­றிய அர­சி­டம் முன்­வைத்­தது. எனவே, புதிய நதி­நீர் தாவாக்­க­ளில் நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற அணு­கு­முறை 
என்­பது புதி­தான ஒன்று அல்ல; ஏற்­க­னவே தமிழ்­நாடு பின்­பற்­றி­யுள்ள சட்­ட­ரீ­தி­யான வழி­ மு­றை­யா­கும் என்­பதை இந்த அவை­யின் 
கவ­னத்­திற்கு கொண்டு வர விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதைப்­போ­லவே, மேக­தாது அணை தொடர்­பாக புதிய நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி, முத­ல­மைச்­சர் இந்த சட்­டப்­பே­ர­வை­யில் கொண்டு வந்த தீர்­மா­னத்­து­டன், நாங்­கள் முன்­வைத்­தி­ருந்த திருத்­த­மும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, திருத்­தத்­து­டன் அந்­தத் தீர்­மா­னம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் நலன் பாது­காப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தீர்­மா­னத்­தின் அடிப்­படை நோக்­கம் தமிழ்­நாட்டு மக்­க­ளின் நல­னைப் பாது­காப்­ப­தும், குறிப்­பாக டெல்டா மாவட்ட மக்­க­ளும் விவ­சா­யப் பெருங்­குடி மக்­க­ளும் சார்ந்­துள்ள காவிரி நீர் 
உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தும்­தான். இதுவே இந்­தத்தீர்­மா­னத்­தின் உண்­மை­யான 
நோக்­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, ஏற்­க­னவே இந்த அவை­யில் வெளிப்­பட்­டுள்ள ஒற்­றுமை உணர்வை பாதிக்­கும் வகை­யில்,இந்த விவ­கா­ரத்தை மீண்­டும் அர­சி­யல் விவா­தப் பொரு­ளாக மாற்­று­வது யாருக்­கும் பயன்அளிக்­காது. மாறாக, தமிழ்­நாட்­டிற்­குள் அர­சி­யல் கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­க­ளும் பிள­வு­க­ளும் இருப்­ப­தாக ஒரு தோற்­றத்தை உரு­வாக்­கும் அபா­யம் உள்­ளது. அத்­த­கைய நிலை உரு­வா­னால், அது தமிழ்­நாட்­டின் நல­னுக்கு சாத­க­மாக அல்ல; கர்­நா­டக 
அர­சின் நிலைப்­பாட்­டிற்கே வலு சேர்க்­கக்­கூ­டி­ய­தாக அமைந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் கட்சி வேறு­பா­டு­க­ளைத் தாண்டி 
ஓர­ணி­யில் நின்று, ஒரு­மித்த குர­லு­டன் செயல்­பட வேண்­டும் என்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு தங்கம் தென்னரசுதெரிவித்தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>