<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 03:59:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="24062026-VLR-07" position.sequence="07" ex-ref="24062026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">தொப்புள் கொடி உறவுகளைத் தொட்டில் கட்டித் தாலாட்டிய தாயுள்ளத் தலைவர்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup720953_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="WhatsAppImage_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="WhatsAppImage1_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="WhatsAppImage2_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="WhatsAppImage3_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">லப்­ப­தி­கா­ரத்­தில் கோவ­ல­னும் கண்­ண­கி­யும் தங்­கள் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட நெருக்­க­டியை சமா­ளிக்க சொந்த ஊரான சோழ நாட்­டின் பூம்­பு­காரை விட்டு பாண்­டிய நாட்­டின் மது­ரைக்­குச் செல்­கின்­ற­னர். அப்­போது மது­ரை­யின் மதில்­க­ளில் கொடி­கள் பறப்­பதை அவர்­கள் பார்க்­கி­றார்­கள். அதை இளங்­கோ­வ­டி­கள் மிக நுட்­ப­மாக, தற்­கு­றிப்­பேற்ற அணி­யில் விவ­ரிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">போரு­ழந்­தெ­டுத்த ஆரெ­யில் நெடுங்­கொடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வார­லென்­ப­ன­போல் மறித்­துக் கைக்­காட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">-கோவல­னை­யும் கண்­ண­கி­யை­யும், “வரா­தீங்க.. வரா­தீங்க” என்று அவர்­க­ளைத் தடுப்­பது போல, மதில்­க­ளில் பறக்­கின்ற கொடி­கள் அசைந்­த­ன­வாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இலங்­கை­யில் நடந்த இனப்­போ­ராட்­டத்­தி­னால் 1983ஆம் ஆண்டு முதல் ஈழத் தமி­ழர்­கள் தங்­கள் உயி­ரைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக, அனு­ம­தி­யில்­லாத பட­கு­க­ளில் கூட்­டம் கூட்­ட­மாக ஏறி, நள்­ளி­ர­வில் நடுக்­க­டல் தாண்டி, தமிழ்­நாட்­டின் இரா­மேஸ்­வ­ரம் கடற்­க­ரைக்கு வந்து சேர்ந்­து­போது, கடல் அலை­க­ளின் ஓசை­யும், சிலப்­ப­தி­கார எச்­ச­ரிக்­கைப் போலத்­தான் இருந்­தது. ஆனா­லும், கண்­ண­கி­யும் கோவ­ல­னும் பாண்­டிய நாட்டை நம்­பி­யது போல, தமிழ்­நாட்டை நம்பி வந்­த­னர் ஈழத் தமி­ழர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் உள்ள முகாம்­க­ளில் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக வாழ்­கின்ற இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கும், இங்­கேயே பிறந்­து-­­­வ­ளர்ந்து-­­ படித்­து-­­­தி­ரு­ம­ண­மான அவர்­க­ளின் வாரி­சு­க­ளுக்­கும் இந்­தி­யக் குடி­யு­ரிமை கிடைக்­க­வில்லை. சொந்த நாட்­டுக்­கும் திரும்­பிச் செல்ல முடி­ய­வில்லை. நாடற்­ற­வர்­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் தமிழ்­நாட்­டில் உள்ள இலங்­கைத் தமி­ழர்­க­ளைப் பற்றி மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் முனை­வர் ஆர்.கே.ராதா­கி­ருஷ்­ணன் Faceless People-The Journey of Tamil Refugees in India என்ற தலைப்­பில் இயக்­கி­யுள்ள ஆவ­ணப்­ப­டத்­தைப் பார்­வை­யிட்ட கழ­கத் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர் ஆர்.கே.ராதா­கி­ருஷ்­ண­னை­யும் அவர் உரு­வாக்­கி­யுள்ள ஆவ­ணப்­ப­டத்­தின் உணர்­வுப்­பூர்­வ­மா­னத் தன்­மை­யை­யும் குறிப்­பிட்டு, தன் சமூக வலை ­த­ளப் பக்­கத்­தில் பதிவு செய்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மே 17 இயக்­கத்­தின் நிறு­வ­ன­ரான தோழர் திரு­
மு­ரு­கன் காந்தி அவர்­கள் இதனை விமர்­சித்து சமூக வலைத்­த­ளங்­க­ளில் பதி­விட்­டி­ருந்­தார். தி இந்து ஆங்­கில நாளேட்­டின் முன்­னாள் ஆசி­ரி­யர் என்.ராம், அந்த நாளேட்­டின் சார்­பில் இலங்­கை­யி­லி­ருந்து செய்­திக் கட்­டு­ரை­களை எழு­திய ஆர்.கே.ராதா­
கி­ருஷ்­ணன் இரு­வ­ரும் இலங்­கைப் பிரச்­சி­னை­யில் அங்­குள்ள தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­க­வும், விடு­த­லைப் ­பு­லி­க­ளுக்கு எதி­ரா­க­வும் தொடர்ந்து செய்­தி­களை வெளி­யிட்­ட­வர்­கள். அவர்­க­ளைத் தி.மு.க. தலைமை ஆத­ரிப்­ப­தைக் கண்­டிப்­ப­தாக அவ­ரது பதிவு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழ­கத்  தலை­வர் கலந்து கொண்ட ஆவ­ணப்­ப­டத் திரை­யி­டல் என்­பது இலங்­கை­யில் நடந்த இனப்­­போராட்­டம் குறித்­த­தல்ல. அந்­தப் போராட்­டத்­தி­னால் சிங்­கள இரா­ணு­வத்­தின் கொடூ­ரத்தை எதிர்­கொள்ள முடி­யா­ம­லும், போரா­ளிக் குழுக்­கள் தரப்­பின் நெருக்­க­டி­யி­னா­லும் தமிழ்­நாட்­டுக்கு வந்த இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நாடற்ற வாழ்க்கை குறித்­த ­தா­கும். அவர்­க­ளின் வாழ்க்­கை­யில் 
அக்­கறை கொண்ட எவ­ரும், கழ­கத் தலை­வர் தலை­மை­யில் 5 ஆண்­டு­கா­லம் நடைப்­பெற்ற திரா­விட மாடல் ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டில் உள்ள இலங்­கைத் தமி­ழர் முகாம் ­க­ளில் வாழும் மக்­க­ளின் மேம்­பாட்­டிற்கு எடுத்த நட­வ­டிக்­கை­க­ளைப் பாராட்­டவே செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தலை­வர் தன்­னு­டைய சமூக வலை ­த­ளப் பதி­வில், “தற்­போ­தைய அர­சும் இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகாம்­க­ளில் வசிக்­கும் மக்­க­ளுக்­கா­கத் திரா­விட மாடல் அரசு மேற்­கொண்ட திட்­டங்­க­ளைத் தொய்­வின்­றித் தொடர்ந்து நிறை­வேற்ற வேண்­டும் எனக் கேட்­டுக் கொள்­கி­றேன்’‘ என்று தெரி­வித்­தி­ருந்­தார். ஏன் இந்த வலி­யு­றுத்­தல்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் இலங்­கைத் தமி­ழர்­கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த முகாம்­கள் ஒரு காலத்­தில் எப்­படி இருந்­தன என்­பதை ஏறத்­தாழ 20 ஆண்­டு­க­ளாக இந்த முகாம்­களை ஆய்வு செய்து செய்­திக் கட்­டு­ரை­க­ளும், அந்த ஆய்­வின் அடிப்­ப­டை­யில் முனை­வர் பட்­ட­மும் பெற்று, இப்­போது ஆவ­ணப்­ப­ட­மும் 
இயக்­கி­யுள்ள பத்­தி­ரி­கை­யா­ளர் ஆர்.கே.ராதா­கி­ருஷ்­ணன் உள்­ளிட்ட பல­ரும் அறி­வார்­கள். 2006ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் அந்த முகாம்­கள் மீது அர­சாங்­கத்­தின் பார்வை வெளிச்­சம் பட்­டது. அப்­போ­தைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான விடு­தலை சிறுத்­தைக் கட்­சி­க­ளின் பொதுச்­செ­ய­லா­ளர்  ரவிக்­கு­மார் எம்.பி.யும் மற்­ற­வர்­க­ளும் முகாம்­க­ளின் நிலைமை குறித்து அளித்த ஆய்­வ­றிக்­கை­யி­னைப் பார்த்து, முகாம் மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­கள் கலை­ஞர் 
அர­சால் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதன்­பின்­னர்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2021ல் திரா­விட மாடல் ஆட்சி அமைந்­த­பி­றகே தமிழ்­நாட்­டில் வாழும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நலன் மீது தனிக் கவ­னம் செலுத்­தப்­பட்­டது. இலங்கை அக­தி­கள் முகாம் என்ற பெயரை, இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகாம் என மாற்­றம் செய்­த­து­டன், அது பெய­ர­ள­வி­லான மாற்­ற­மாக இல்­லா­மல், உண்­மை­யான மறு­வாழ்­வுக்­கான அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்ற முதல் கட்­ட­மாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கி­ய­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மறு­வாழ்வு முகாம்­க­ ளுக்­கான அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­க­ளான வீடு­கள், கல்வி உதவி, வேலை­வாய்ப்­புக்­கான திறன் பயிற்சி, மாதாந்­திர பணக் கொடை, பாத்­தி­ரங்­கள், துணி­ம­ணி­கள் ஆகி­ய­ வற்­று­டன் தமிழ்­நாட்­டில் ரேஷன் கார்­டு­கள் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் 20 கிலோ அரிசி, பொங்­கல் பரி­சுத் தொகை, கொரோனா பேரி­டர் கால நிவா­ர­ணம் 4000 ரூபாய், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை­யாக மாதம் 1000 ரூபாய், இவற்­று­டன் சமை­யல் எரி­வாயு சிலிண்­டர்­கள், மருத்­து­வக் காப்­பீட்­டுத் 
திட்­டம் ஆகி­ய­வற்­றை­யும் வழங்­கி­யது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2021ஆம் ஆண்டு நவம்­பர் 2ஆம் நாள் வேலூர் மாவட்­டம் மேல­மொ­ண­வூர் என்ற இடத்­தில் உள்ள இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகா­மில் இந்­தத் திட்­டங்­களை முத­ல­மைச்­ச­ரா­கக் கழ­கத் தலை­வர் அவர்­களே முன்­னின்று தொடங்கி வைத்து, முகாம்­க­ளின் தக­ரக் கொட்­டகை வீடு­க­ளில் வசித்து வந்த மக்­க­ளின் வாழ்க்கை நிலை­யை­யும் நேரில் பார்த்­தார். தமிழ்­நாடு அர­சின் மறு­வாழ்­வுத் துறை மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நிலையை மாற்­று­வ­தற்­கா­னத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­ய­து­டன், அதன் சிறப்­பான செயல்­பா­டு­க­ளுக்­கான கூடு­தல் பல­மாக, ‘இலங்­கைத் தமி­ழர் நலன் ஆலோ­ச­னைக் குழு’ ஒன்­றை­யும் துறை­யின் அமைச்­சர் தலை­மை­யில் அமைத்­தார். அந்­தக் குழு­வில் நானும் ஓர் உறுப்­பி­னர் என்ற முறை­யில், கடந்த 5 ஆண்­டு ­க­ளில் திரா­விட மாடல் ஆட்­சி­யில் இலங்­கைத் தமி­ழர்­கள் மறு­வாழ்வு முகாம்­க­ளில் ஏற்­பட்ட மறு­ம­லர்ச்­சியை நேரில் காணும் வாய்ப்பு அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2023ஆம்ஆண்டு செப்­டம்­பர் 17ஆம் நாளன்று அதே வேலூர் மாவட்­டம் மேல­மொ­ண­வூ­ரில் உள்ள மறு­வாழ்வு முகா­மில் புதி­தா­கக் கட்­டப்­பட்ட தனித்­தனி வீடு­களை அங்கு வாழும் இலங்­கைத் தமி­ழர் குடும்­பங்­க­ளி­டம் நேரில் ஒப்­ப­டைத்­தார் அன்­றைய முத­ல­மைச்­ச­ரான கழ­கத் தலை ­வர். தமிழ்­நாட்­டில் உள்ள 103 மறு­வாழ்வு முகாம்­க ­ளில் கடந்த 5 ஆண்­டு­க­ளில் ஏறத்­தாழ 7000 புதிய வீடு­கள் கட்டி வழங்­கப்­பட்­டுள்­ளன. அதில் உள்ள ஒவ்­வொரு குடும்­பத்­தின் தலை­வர் அல்­லது தலை­விக்கு மாதம் 1500 ரூபாய், குடும்­பத்­தில் உள்ள பெரி­ய­வர்­க­ளுக்கு மாதம் 1000 ரூபாய், குழந்­தை­க­ளுக்கு மாதம் 500 ரூபாய் என பணக் ­கொ­டையை உயர்த்தி வழங்­கி­ய­தும் திரா­விட மாடல் அர­சு­தான். வேலைக்­காக முகாம்­களை விட்டு வெளியே செல்­ப­வர்­க­ளுக்கு காவல் கண்­கா­ணிப்­புக் கட்­டுப்­பா­டு­க­ளில் தளர்வு உள்­ளிட்ட வாழ்­வா­தார மேம்­பாட்­டுப் பணி­கள் அனைத்­தும் மேற்­கொள்­ளப்பட்­ட­ து­டன், அவர்­க­ளின் நெடுங்­கா­லக் கோரிக்­கை­யும்-­­­வாழ்­வு­ரி­மைக்கு அடிப்­ப­டை­யு­மான குடி­யு­ரிமை பெறு­வ­தற்­கான வழி­மு­றை­க­ளும் சட்­டப்­பூர்­வ­மான வழி­யில் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய பா.ஜ.க அர­சின் சி.ஏ.ஏ திருத்­தச் சட்­டத்­தில் அண்டை நாடு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள் தொடர்­பான குடி­யு­ரி­மை­யில், இலங்­கைத் தமி­ழர்­கள் ஏன் சேர்க்­க­வில்லை என நாடா­ளு­மன்­றத்­தில் முதல் குரல் எழுப்­பி­ய­வர் தி.மு.க. மாநி­லங்­க­ள­வைக் குழுத் தலை­வ­ரான திருச்சி சிவா எம்.பி. அவர்­கள். தமிழ்­நாடு அர­சின் இலங்­கைத் தமி­ழர் நலன் ஆலோ­ச­னைக் குழு­வின் துணைத் தலை­
வ­ரான டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி எம்.பி. மக்­க­ள­வை­யில் இதற்­கா­கக் குரல் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத்­தின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி கருணாநிதி எம்.பி., இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகாம்­க­ளில் வாழும் மக்­க­ளுக்­கா­கத் தொடர்ந்து குரல் எழுப்­பு­வ­து­டன், ஒன்­றிய பா.ஜ.க. அரசு இந்­தி­யா­வில் உள்ள அக­தி­கள் தொடர்­பாக விதித்த புதிய சட்­ட­வி­தி­களை முன்­வைத்து, நாடா­ளு­மன்­றத்­தில் உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வி­டம் நேருக்கு நேரா­கவே, தமிழ்­நாட்­டில் வாழும் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கான குடி­யு­ரி­மையை வலி
­யு­றுத்­தி­னார். குடி­யு­ரிமை தொடர்­பாக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ளது. மூத்த வழக்­க­றி­ஞர் வில்­சன் எம்.பி. அவர்­கள் இந்த வழக்­கினை நடத்தி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு அர­சின் இலங்­கைத் தமி­ழர் நலன் ஆலோ­ச­னைக் குழு உறுப்­பி­னர்­க­ளான சட்ட 
வல்­லு­நர் மனு­ராஜ், ஐ.நா.வின் அக­தி­கள் உயர் ஆணை­யத்­தின் சென்னைகள அலு­வ­லர் வளன் சச்­சி­தா­னந்­தம், பேரா­சி­ரி­யர்­கள் இளம்­ப­ரிதி, பாரி­வே­லன் உள்­ளிட்­டோர் கொண்ட குழு, முகாம்­க­ளில் வாழும் இலங்­கைத் தமி­ழர்­க­ளில் இந்­திய வம்­சா 
­வ­ளி­யைச் சேர்ந்­த­வர்­கள் தொடர்­பான ஆதா­ரங்­க­ளை­யும், இந்­தி­யா­வி­லேயே பிறந்து வளர்ந்த முகாம் வாழ் மக்­கள் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும் 
சேக­ரித்து அவர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கு­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் குறித்த இடைக்­கால அறிக்­கை­யை­யும் வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் அர­சின் சட்ட உத­வி­யு­டன், வழக்­க­றி­ஞர் ரோமியோ அவர்­கள் முன்­னெ­டுப்­பில் முதன்­முத­லாக, திருச்சி கொட்­டப்­பட்டு இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகா­மில் வசிக்­கும் நளினி என்­ப­வ­ருக்கு இந்­திய பாஸ்­போர்ட் வழங்­கிட சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை உத்­த­ர­விட்­டது. இதன் மூல­மாக, அவ­ருக்கு இந்­தி­யக் குடி­யு­ரிமை உறு­தி­யா­ன­து­டன், கடந்த 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வாக்­கா­ளர் அடை­யாள அட்­டை­யும் கிடைக்­கப்­பெற்று, தேர்­த­லில் வாக்­க­ளிக்­க­வும் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட மாடல் அர­சின் தொடர்ச்­சி­யான சட்ட 
உத­வி­கள் மூலம், 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கொட்­டப்­பட்டு நளினி, கோகு­லேஸ்­வ­ரன், சிவ­கங்கை மாவட்­டம் ஒக்­கூர் முகா­மில் உள்ள மேரி ஷாலினி, திரு­நெல்­வேலி மாவட்­டம் கோபா­ல­ச­முத்­தி­ரம் முகா­மில் வசிக்­கும் ரவிச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரும் பவா­னி­சா­கர், கன்­னி­யா­கு­மரி முகாம்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளு­மாக 10 பேர் வாக்­க­ளித்­துள்­ள­னர். மறு­வாழ்வு முகாம்­க­ளில் வசிக்­கும் இலங்­கைத் தமி­ழர்­கள் சட்­டப்­பூர்­வ­மா­கக் குடி­யு­ரி­மைப் பெற  முடி­யும் என்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளை­யும் தொடர்ந்து மேற்­கொண்டு, அதில் முதல்­கட்ட                     வெற்­றி­யை­யும் பெற்­றது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குடி­யு­ரி­மை­யும் வாக்­கு­ரி­மை­யும் இல்­லாத மறு­வாழ்வு முகாம் வாழ் இலங்­கைத் தமி­ழர்­களை உள்­ளாட்­சித் தேர்­த­லில் கவுன்­சி­லர் பத­விக்­குப்போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கூட எட்­டிப்­பார்க்­காத நிலை இருந்­ததை மாற்றி, இலங்­கைத் தமி­ழர்­கள் நம் சொந்­தங்­கள் என்ற உணர்­வு­டன் முத­ல­மைச்­சரே மறு­வாழ்வு முகாம்­க­ளுக்கு நேரில் சென்று, அவர்­க­ளின் நிலை­யைக் கேட்­ட­றிந்து, வாழ்­வா­தா­ரத் திட்­டங்­களை நிறை­வேற்றி, வாழ்­வு­ரி­மைக்­கான சட்ட உத­வி­க­ளை­யும் வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட வர­லாறு திரா­விட மாடல் அர­சுக்கே உரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மறு­வாழ்வு முகாம்­க­ளில் வசிக்­கும் தொப்­புள் கொடி உற­வு­க­ளான இலங்­கைத் தமி­ழர்­க­ளைத் தொட்­டில் கட்­டித் தாலாட்­டும் தாயுள்­ளத்­து­டன் செயல்­பட்­ட­வர் கழ­கத் தலை­வர். தமிழ் மண்ணை நம்பி வந்த தமி­ழர்­கள் எவ­ரை­யும் திரா­விட மாடல் அரசு கைவி­டாது என்­பதை நிரூ­பித்­த­வர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வர­வி­ருக்­கும் நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொட­ரி­லும் தமிழ்­நாட்­டில் உள்ள மறு­வாழ்வு முகாம்­க­ளில் வசிக்­கும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் குடி­யு­ரி­மைக்­காக  நாடா­ளு­மன்ற இரு அவை­க­ளி­லும் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்­கும். உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லும் சட்­டப்­போ­ராட்­டத்­தைத் தொட­ரும் என உறு­தி­ய­ளித்­துள்ள கழ­கத் தலை­வர் அவர்­கள், மறு­வாழ்வு முகாம் ஒவ்­வொன்­றி­லும் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பை­யும், அங்கு வசிக்­கும் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத் திட்­டங்­க­ளை­யும் தற்­போ­தைய அர­சும் தொடர வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார். 
இந்த உண்­மை­யான உணர்வு வேறு எந்­தத் தலை­வ­ரி­டம் வெளிப்­ப­டும்?</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8130907087644">முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது,  கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன்,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் 
கோவி. செழியன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 
(கோப்பு படம் 22.01.2025)</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>