<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,730,726,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 03:59:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="24062026-VLR-08" position.sequence="08" ex-ref="24062026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! லட்டு தயாரிப்பில் மோசடி! கோயில் தங்கங்களில் முறைகேடு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">பகல் கொள்ளை வேடதாரிகளின்  ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="P.K.Sekarbabu_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ராமன் கோயில் நன்­கொ­டை­க­ளில் ஊழல்! திருப்­பதி லட்டு தயா­ரிப்­பில் மோசடி!! சப­ரி­மலை 
அய்­யப்­பன் கோயில் தங்­கங்­க­ளில் முறை­கேடு! பக்­தி­யின் பெய­ரால் பகல் கொள்­ளையா? ‘பக்தி பகல் வேட­தா­ரி’­க­ளின்  ஊழல்­களை மக்­கள் மறக்­க­மாட்­டார்­கள்.அயோத்தி ராமனை – ‘அபேஸ் ராம­னாக்­க’­லாமா? என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் தமி­ழர் தலை­வர் கி.வீர­மணிஅவர்­கள் அறிக்கை விடுத்­துள்ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அவ­ரது அறிக்கை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">12 ஆண்­டு­கள் பா.ஜ.க. ஆட்­சி­யில் ஊழல் என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று தம்­பட்­டம் அடிக்­கி­றார்­கள் பிர­த­மர் நரேந்­திர மோடி முதல் ஒன்­றிய அமைச்­சர் கிஷன் ரெட்டி வரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­க­ளின் மற­தி­யின் மீது அவ்­வ­ளவு நம்­பிக்­கையோ? வியா­பம் ஊழல் தொடங்கி பி.எம்.கேர், தேர்­தல் பாண்­டு­கள் வரை எல்லா குற்­றச்­சாட்­டு­க­ளும் மறக்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டன என்று கரு­து­கி­றார்­களோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதி­கம் முந்­தைய செய்­தி­க­ளுக்­குப் போகா­விட்­டா­லும், பா.ஜ.க. ஆட்­சி­யின் மிகப்­பெ­ரிய சாத­னை­யா­கப் பேசப்­ப­டும் அயோத்தி ராமன் கோவில் விவ­கா­ரத்­தை­யா­வது கணக்­கில் கொள்ள வேண்­டாமா? கட்­ட­வேண்­டும் என்று ஆரம்­பித்த காலத்­தில் இருந்தே ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான திட்­ட­மா­யிற்றே! மேனாள் விஷ்வ ஹிந்து பரி­ஷத் தலை­வர் அசோக் சிங்­கால் முதற்­கொண்டே ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கா­ன­வர்­கள் தானே! அதன் அடுத்த விரி­வான கட்­டம் தான், தற்­போ­தைய ராமன் கோவில் நன்­கொடை விவ­கா­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பா.ஜ.க. வெகு­மக்­க­ளி­டம் சேர்­வ­தற்­கான அர­சி­யல் அஜெண்­டா­வா­கக் கையில் எடுத்­தது அயோத்­தி­யில் பாபர் மசூதி இருக்­கும் இடத்­தில் ராமன் கோவில் கட்­ட­வேண்­டும் என்ற விவ­கா­ரத்­தைத் தான்! ஏறத்­தாழ 35 ஆண்­டு­க­ளில் அதற்­கான போராட்­டங்­கள், கல­வ­ரங்­கள், ர(த்)த யாத்­தி­ரை­கள், பாபர் மசூதி இடிப்பு, இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட அனு­ம­தித்த தீர்ப்பு, இவற்­றை­யெல்­லாம் கடந்து 2024 தேர்­தல் வரைக்­கும் ஜவ்­வாக அதனை இழுத்­துக் கொண்டு வந்து, அவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் அத­னைத் திறந்து வைத்­தார் பிர­த­மர் மோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது நடை­பெற்ற கும்­பா­பி­ஷே­கத்­திற்­குப் பிறகு ராம பக்­தர்­கள் காணிக்­கை­யாக வழங்­கிய பணம், தங்­கம் மற்­றும் நகை­கள் காணா­மல் போய்­விட்­டன அல்­லது தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் குற்­றம் சாட்­டி­னர். ஆனால், சிறீ ராம ஜென்­ம­பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்­கட்­ட­ளை­யும், உத்­த­ரப் பிர­தேச அர­சும், பா.ஜ.க.வும் இந்­தக் குற்­றச்­சாட்­டு­ களை முத­லில் உறு­தி­யாக மறுத்­த­னர். ஆனால், எல்லா பக்­க­மி­ருந்­தும் நெருக்­கடி முற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அறக்­கட்­டளை ஆட்­டத்­தைத் தொடங்­கி­யது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சி.பி.அய். விசா­ரணை மற்­றும் சிஏஜி தணிக்கை கோரி பொது­நல மனுவை அல­கா­பாத்உயர் நீதி­மன்­றம் விசா­ரிக்­க­ வுள்ளநிலை­யில், விசா­ர­ணைக்­குத் தாங்­களே கோரிக்கை விடுப்­ப ­தாக அறக்­கட்­டளை தனது ஆட்­டத்­தைத் தொடங்­கி­யது. ஆனா­லும், முறை­கேடு நடந்­த­தற்­கான எந்த ஆதா­ர­மும் இல்லை என்­றும், தற்­போது நடை­பெற்று வரும் விசா­ரணை உண்­மை­களை வெளிக்­கொண்டு வரும் என்­றும் அவர்­கள் தெரி­வித்து வந்­த­னர். மாநில அர­சின் மூன்று பேர் அடங்­கிய சிறப்­புப் புல­னாய்­வுக் குழு­வும் (SIT) ஊழல் குறித்து ஆய்வு செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த விவ­கா­ரம் ஊட­கங்­க­ளில் தொடர்ந்து பேசு­பொ­ரு­ளா­கவே, சுதா­ரித்­துக் கொண்ட உத்­த­ரப்­பி­ர­தேச முத­ல­மைச்­சர் சாமி­யார் ஆதித்­ய­நாத், “ராமன் கோவில் நிதி முறை­கேடு பற்றி யாரா­வது பேசி­னால், 7 பிற­விக்­கும் பாவம் சேரும்” என்று  ‘மிரட்­டல் பானத்தை’ விடுத்­துள்­ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேதங்­கள், மனுஸ்­மி­ரு­தி­யின் பார்­வை­யில் தான், நாத்­தி­கர்­க­ளான நம் கணக்­கில் ஏரா­ள­மான பாவங்­கள் இருப்­ப­தா­கச் சொல்­வார்­களே! கூடு­த­லாக ஒன்­றி­ரண்டு சேர்ந்­தா­லும் அதைப்பற்றி கவ­லைப்­ப­டா­மல் உண்மைஉலா  வர­வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">‘இந்­தியா டுடே!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">‘இந்­தியா டுடே’ செய்தி நிறு­வ­னத்­தின் தக­வ­லின்­படி, “சிறீ ராம் ஜென்­ம­பூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்­கட்­ட­ளை­யின் வங்­கிச் செயல்­பா­டு­களை நிர்­வ­கித்­தல், கோயி­லில் பெறப்­ப­டும் ரொக்க நன்­கொ­டை­க­ளைக் கையா­ளு­தல், ராமன் கோயி­லில் பக்­தர்­கள் காணிக்­கை­யா­கச் செலுத்­திய பணத்­தாள்­க­ளைப் பிரித்­தல், அடுக்கி வைத்­தல் மற்­றும் எண்­ணு­தல் ஆகிய பணி­க­ளும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தியா வசம் ஒப்­ப­டைத்­தி­ருந்­த­தாம். அந்த வங்கி, பணத்தை எண்­ணும் பணியை வார­ணா­சி­யைச் சேர்ந்த ஒரு தனி­யார் பாது­காப்பு நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைத்­தி­ருந்­த­தா­கத் தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் ‘இந்­தியா டுடே’­வி­டம் தெரி­வித்­தன. இருப்­பி­னும், அந்த நிறு­வ­னம் இப்­ப­ணிக்­காக அயோத்­தி­யைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­தா­க­வும், ராமன் கோயில் அறக்­கட்­ட­ளை­யு­டன் தொடர்­பு­டைய நபர்­க­ளின் பரிந்­து­ரை­யின் பேரில் பல நிய­ம­னங்­கள் செய்­யப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­ கி­றது. ராமன் கோயில் அறக்­கட்­ட­ளை­யின் ஊழி­ய­ரான அனு­குல் மிஸ்ரா, தனது மைத்­து­னர் லவ்­குஷ் மிஸ்­ராவை பணத்தை எண்­ணும் குழு­வில் நிய­மிக்க உத­வி­னார் என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஊழி­யர் நிய­மன நடை­மு­றை­கள் மற்­றும் அதில் நடந்­த­தா­கக் கூறப்­ப­டும் முறை­கே­டு­கள் குறித்­தும் சிறப்பு விசா­ர­ணைக் குழு ஆய்வு செய்­துள்­ள­தாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வளா­கத்­திற்­குள் நுழை­யும் மற்­றும் வெளி­யே­றும் பணி­யா­ளர்­கள் மீது போது­மான சோத­னை­கள் இல்­லா­தது உள்­ளிட்ட பாது­காப்பு நடை­மு­றை­க­ளில் குறிப்­பி­டத்­தக்க குறை­பா­டு­கள் இருப்­பதை விசா­ர­ணைக் குழு கண்­ட­றிந்­தது. தொழி­லா­ளர்­கள் வளா­கத்­திற்­குள் கொண்டு செல்­லும் அல்­லது வெளியே கொண்டு வரும் பொருட்­க­ளைச் சரி­பார்க்க வலு­வான வழி­முறை எது­வும் இல்லை என்­றும், இது நன்­கொ­டை­க­ளைக் கையாள்­வ­தில் கண்­கா­ணிப்­புக் குறை­பாடு குறித்த கவ­லை­களை எழுப்­பு­வ­தா­க­வும் அவ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. நன்­கொ­டை­களை எண்­ணும் பணி­யில் ஈடு­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு அதற்­கெ­னத் தனி சீருடை, ஆடை விதி­மு­றை­கள் இருந்­த­போ­தி­லும், அவர்­கள் பெரும்­பா­லும் சாதா­ரண உடை­க­ளி­லேயேஅறக்­கட்­டளை அலு­வ­ல­கத்­திற்­குள்காணப்­பட்­ட­தாக ‘இந்­தியா டுடே’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருப்­பதி லட்டு தயா­ரிப்­பில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக எழுப்­பப்­பட்ட குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ரணை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">நாடு முழு­வ­தும் 
அதிர்­வலைகள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புகழ்­பெற்ற திருப்­பதி கோவில் லட்­டில் சேர்க்­கப்­ப­டும் நெய்­யில் விலங்­கு­க­ளின் கொழுப்­பைக் கலந்­த­தாக  ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் ஆட்சி மீது தற்­போ­தைய ஆந்­திர முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு குற்­றம் சாட்­டி­னார். இந்­தக் குற்­றச்­சாட்­டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் மறுப்பு தெரி­வித்து 
வந்­தது. திருப்­ப­தி­யில் கொடுக்­கப்­படும் லட்­டினை ஆய்­வுக்­குட்­படுத்தி­ய­தில்  மாட்­டுக்­கொ­ழுப்பு உள்­ளிட்ட விலங்­கு­க­ளின் கொழுப்­பு­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அதிர்ச்சி தக­வல் வெளி­யா­னது. இது நாடு முழு­வ­தும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை­ய­டுத்து நெய் விநி­யோ­கம் செய்த நிறு­வ­னங்­கள் நெய் டின்­கள் குஜ­ராத்­தில் உள்ள ஆய்­வ­கத்­துக்கு அனுப்­பப்­பட்டு சோதிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருப்­ப­திக்கு நெய் விநி­யோ­கம் செய்த திண்­டுக்­கல் மாவட்­டம் பிள்­ளை­யார் நத்­தம் பிரி­வில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறு­வ­னத்­தின் நெய்­யில் 20 சத­வீ­தம் மட்­டுமே தரம் இருப்­ப­தா­க­வும், அதில் சோயா பீன்­சில் இருந்து எடுக்­கப்­பட்ட எண்­ணெய், மீன் எண்­ணெய், மாட்­டி­றைச்சி கொழுப்பு உள்­ளிட்ட பொருட்­கள் கலப்­ப­டம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பன ஆய்­வில் தெரிய வந்­த­தாககூறப்­பட்­டது. தற்­போது இந்த நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் ராஜ­சே­க­ரின் வீடு, நிறு­வ­னம் என இரண்டு இடங்­க­ளில் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை அம­லாக்­கத் துறை­யி­னர் 12–க்கும் மேற்­பட்­டோர் நான்கு கார்­க­ளில் வந்துசோதனை மேற்­கொண்­ட­னர். அதோடு டில்லி, மும்பை, அகில்­யா­ந­கர், பிகா­னர், டேரா­டூன், குண்­டூர் மற்­றும் ரூர்க்கி ஆகிய நக­ரங்­க­ளில் இந்த நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான 15 இடங்­க­ளில் இந்­தச் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இந்­தச் சோத­னை­யில்­போது, கணக்­கில் வராத பணம் மற்­றும் நெய் கலப்­பட ஊழல் மூலம் ஈட்­டப்­பட்­டப் பணத்­தில் வாங்­கிய சொத்­து­களை அம­லாக்­கத்­துறை கைப்­பற்­றி­யுள்­ள­தாகதக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">  நெய்­யும், மெய்­யும் படும்­பாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­ப­டியே கேரளா பக்­கம் வந்­தால், அம் மாநி­லத்­தில் உள்ள சப­ரி­மலை அய்­யப்­பன் கோவி­லில் தங்­கக் கவ­சங்­க­ளால் செய்­யப்­பட்டு உள்ள  கரு­வ­றைக் கத­வு­கள், துவார பால­கர் சிலை, மேற்­கூ­ரை­கள் ஆகி­ய­வற்­றில் முறை­கே­டு­கள் நடந்­துள்­ளனஎன்று பிரச்­சினை கிளம்­பி­யுள்­ளது.முத­லில் கவ­சங்­க­ளில் முறை­கேடு நடந்­த­தாக கூறப்­பட்ட வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது. எஸ்­அய்டி விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. சில நாட்­க­ளுக்குமுன்பு தான் கேரளா உயர்­நீ­தி­மன்­றத்­தின் அனு­ம­தி­யு­டன் எஸ்­அய்டி அதி­கா­ரி­கள் சப­ரி­மலை கோவி­லில் ஆய்வு மேற்­கொண்­ட­னர். இந் நிலை­யில் தற்­போது சப­ரி­மலை அய்­யப்­பன் கோவி­லின் தங்க மேற்­கூ­ரை­யின் நிறம் திடீ­ரென்று மாறி உள்­ளது. தங்க மேற்­கூ­ரை­யின் ஒரு பகுதி கருப்பு நிற­மாக மாறி உள்­ளது. தங்­கத்தை பிரித்­தெ­டுக்க யாரா­வது அந்த மேற்­கூரை மீது திரா­வ­கம் ஏதே­னும் வீசி­னார்­களா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது.ஆனால், பக்­தர்­கள் நெய் வீசி இருப்­பார்­கள் அத­னால் நிறம் மாறி­யி­ருக்­க­லாம் என்று கோவில் நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­ன­ராம். தங்­கம் அவ்­வ­ளவு எளி­தில் நெய்க்கு எல்­லாம் நிறம் மாறும் உலோ­கம் அல்ல என்­பது வேதி­யி­யல் படித்த எல்­லோ­ருக்­கும் தெரி­யும். நெய்­யும், மெய்­யும் படும்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி, அவர்­க­ளால் பெரி­தும் கொண்­டா­டப்­ப­டும் பெரும்­பெ­ரும் கோவில்­கள் எல்­லாம் ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி, ராமன், வெங்­க­டே­சன், அய்­யப்­பன் எல்­லாம் விசா­ரணை வளை­யத்­திற்­குள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவற்­றுக்கு இடை­யில் தான்எந்த ஊழ­லும் நடை­பெ­ற­வில்லைஎன்று ஒன்­றிய அரசு ஊட­கங்­க­ளுக்­குச் செய்தி கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­கள் விழிப்பு பெற்றே தீரு­வார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஊழல் கூட்­டம் விலை­யைக் கொடுத்தே தீரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">A முதல் Z வரை மோடி ஆட்­சி­யில் என்­னென்ன ஊழல்­கள் நடந்­தி­ருக்­கின்­றன என்று முன்பு ஓர் இணை­ய­த­ளத்­தில் (www.corruptmodi.com) முழுப் பட்­டி­யல் வெளி­யிட்­டி­ருந்­தார்­களே! அந்த இணை­ய­த­ளத்தை எல்­லாம் முடக்­கி­விட்­டோம், மற்ற ஊட­கங்­களை வாய­டைத்­து­விட்­டோம் என்ற தைரி­யத்­தில் பேசு­கி­றார்­களோ? அந்த விவ­ரங்­கள் எல்­லாம் அழிந்­து­வி­ட­வில்லை. இன்­னும் பல ஊட­கங்­கள் வாயி­லா­கப் பாது­காக்­கப்­பட்டே உள்­ளன. மக்­கள் விழிப்பு பெற்றே தீரு­வார்­கள்!ஊழல் கூட்­டம் அதற்­கு­ரிய விலை­யைக் கொடுத்தே தீர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கி.வீர­மணி தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>