<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,410,958,1300" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 15:36:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260625T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25062026-CBE-08" position.sequence="08" ex-ref="25062026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">த.வெ.க.வினரின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் தி.மு.க.!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu1_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">‘தி.மு.க. நெருக்­கடி காலத்­திற்கே அஞ்­சாத இயக்­கம். எங்­கள் மடி­யில் கன­மில்லை. வழி­யிலே பய­மில்லை. ஆளும் த.வெ.க. அர­சின் உருட்­டல் மிரட்­டல்­க­ளுக் கெல்­லாம் பயப்­பட மாட்­டோம்’ என ஊட்­டி­யில் ‘கோவில் மல்டி லெவல் கார் பார்க்­கிங்’ பற்­றிய செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­விக்கு முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஊட்­டி­யில் அமைந்­தி­ருக்­கின்ற 52 திருக்­கோ­யில் க­ளுக்­கும் நான் ஐந்து நாட்­கள் முழு­மை­யாக ஆய்­வினை மேற்­கொண்­டேன். அந்த இடம், பத்­தா­யி­ரம் சது­ரடி பரப்­ப­ளவு கொண்ட, அந்த விநா­ய­கர் கோயி­லுக்­குச் சொந்­த­மான இடம். அந்த இடத்­தில் ஏற்­க­னவே நக­ராட்­சி­யும் ‘மல்டி லெவல் கார் பார்க்­கிங்’ கட்­டு­வ­தற்­குத் தேவை இருக்­கி­றது என்று கூறி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வகை­யில் நாம் அந்த இடத்தை ஆய்வு செய்து, அன்­றைய சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ரா­க­வும் அந்த மாவட்­டத்­தி­னு­டைய அமைச்­ச­ரா­க­வும் இருந்த அருமை அண்­ணன் ராமச்­சந்­தி­ரன் அவர்­கள் கோரி க்கை வைத்­த­தற்­கி­ணங்க, இதைப் பரி­சீ­லித்து, இக்­கோ­யி­லுக்­குத் தேவைப்­ப­டு­கின்ற நிதியை மரு­த­மலை திருக்­கோ­யி­லி­லி­ருந்து கட­னா­கப் பெறு­வ­தற்கு, அவர்­க­ளுக்கு இந்­தத் திருக்­கோ­யி­ லு­டைய செயற்­பொ­றி­யா­ளர் ஒரு தாக்­கீது அனுப்பி, அதன் அடிப்­ப­டை­யில் அந்­தத் திருக்­கோ­யி­லில் இருக்­கின்ற துணை ஆணை­யர் அவர்­கள் பரிந்­து­ரைத்து, அது இணை ஆணை­யர்  வாயி­லாக ஆணை­ய­ருக்­குச் சென்று, அன்­றைக்கு அர­சாணை பிறப்­பிக்­கப்­பட் டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்­தத் திருக்­கோ­யி­லு­ டைய நிதி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு, அந்த மரு­த­ம­லைத் திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர்­கள் அன்­றைக்­குச் சம்­ம­தம் தெரி­வித்­துத் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யி­ருக்­கின் றார்­கள். இதில் எங்கு, என்ன தவறு நடந்­தது என்று அவர் நேற்­றுச் சொன்­னார் என்றே தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மா­கச் சொல்­கி­றேன்... வணி­க­ரீ­தி­யா­னது என்­பது அந்­தத் திருக்­கோ­யி­ லுக்­குத் தேவை­யான வரு­மா­னங்­களை ஈட்­டு­கின்ற ஒரு முயற்­சி­யா­கும். குன்­னூர் என்­பது சுற்­று­லாப் பகுதி; தினந்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வந்து செல்­கின்ற பகுதி. அந்­தப் பகு­தி­யிலே வாக­னங்­கள் நிற்­ப­தற்­குக்­கூட இடங்­கள் இல்­லாத ஒரு சூழல்; பெரிய கடை­யின் முன்­பு­கூட ஒரு இரு­சக்­கர வாக­னத்­தைக் கூட நிறுத்த அனு­ம­திக்க முடி­யாத ஒரு சூழல். திருக்­கோ­யி­லுக்கு வரு­கின்ற பக்­தர்­கள் பயன்­பாட்­டிற்கு மாத்­தி­ர­மல்­லா­மல், அங்கு வரு­கின்ற சுற்­று­லாப் பய­ணி­க­ளு­டைய பயன்­பாட்­டிற்­கும் அந்த ‘மல்டி லெவல் கார் பார்க்­கிங்’ கட்­டிக் கொடுக்­கப்­பட்­டால், அதில் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்ற அந்­தக் கட்­ட­ணத்தை வைத்து, ஊட்­டி­யில் நலி­வ­டைந்த நிலை­யில் உள்ள 52 திருக்­கோ­யில்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளுக்கு, அதில் வரு­கின்ற வரு­வாயை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்த முடி­யும் என்ற தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதை முழு­மை­யாக உண­ரா­மல், புரி­யா­மல் ஒரு அமைச்­சர் அவ­சர கதி­யில் பேசு­கி­றார். எனவே, இந்­தப் பேட்­டி­யைப் பார்த்த பிற­கா­வது, அந்­தத் திட்­டம் ஏன் கொண்டு வரப்­பட்­டது, அந்­தத் திட்­டம் ஏன் செயல்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப் பட்­டது என்ற உண்மை நிலையை அவர் உணர வேண்­டும். இது­வ­ரை­யில் அந்­தத் திட்­டத்­திற்கு உண்­டான அனு­மதி ரத்து செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் இந்த நேரத்­தில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">‘மல்­டி­லெ­வல் கார் பார்க்­கிங்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்­தி­ரி­கை­யா­ளர்: அமைச்­சர் குறிப்­பா­கச் சொல்­லும்­போது, 500 பேர் கூட வராத ஒரு இடத்­திற்கு எதற்கு ‘மல்டி லெவல் கார் பார்க்­கிங்’ என்று கேட்­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">500 பேர் கோயி­லுக்கு வரு­வ­தற்­காக மட்­டு­மல்ல; ஐந்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள், ஐம்­ப­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள், லட்­சத்­திற்­கும் மேற்­பட்­ட­ வர்­கள் விடு­மு­றைக் காலங்­க­ளி­லும், கோடைக் காலங்­க­ளி­லும் சுற்­று­லாப் பய­ணி­க­ளாக வரு­ப­வர்­க­ளுக்­கா­கத் தான் அந்த கார் பார்க்­கிங் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதே தவிர, வெறும் திருக்­கோ­யி­லுக்கு வரு­ப­வர்­க­ளின் பயன்­பாட்­டிற்கு மாத்­தி­ரம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதோடு, நலி­வ­டைந்த திருக்­கோ­யில்­க­ளு­டைய நிலையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும், வரு­கின்ற பக்­தர்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­க­ளைச் செய்­வ­ தற்கு உண்­டான வரு­வாயை உயர்த்­து­வ­தற்­கா­க­வும் தான் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அறிவு சார்ந்த அனை­வ­ரும் இதை வர­வேற்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்­தி­ரி­கை­யா­ளர்: சட்­ட­ச­பை­யில் விளக்­கம் கொடுப்­ப­தற்கே இட­ம­ளிக்­கா­தது குறித்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மாக... சட்­ட­மன்­றத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், நீங்­கள் அறி­யா­தது ஒன்­று­மில்லை; தெரி­யா­தது ஒன்­று­மில்லை. முழு விளக்­கம் கிடைக்­கும் அல்­லது அமைச்­சர்­கள் கூறிய கருத்­திற்கு எதிர்­க­ருத்து வாதம் சரி­யாக இருக்­கும் என்­றால், எப்­போ­துமே அனு­மதி தர மாட்­டார்­கள், அனு­மதி மறுப்­பார்­கள். அது­தான் நேற்­றைக்கு முழு­மை­யாக அனு­மதி மறுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">நாங்கள் அடிக்க அடிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">உயர்­கிற பந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்­தி­ரி­கை­யா­ளர்: மக்­கள் பணத்தை ஒரு பைசா கூட தொட மாட்­டோம்; தொட்­ட­வர்­க­ளை­யும் சும்மா விட­மாட்­டோம்... ஊழலை வெளிப்­ப­டுத்­தப் போகி­றோம். குறித்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொஞ்­சம் நாள் பொறுத்த பிறகு இதை­யெல்­லாம் சந்­திக்­க­லாம் என்று இருந்­தோம். இது நெருக்­கடி காலத்­திற்கே அஞ்­சாத இயக்­கம்; இது போன்ற உருட்­டல், மிரட்­டல்­க­ளுக்­கெல்­லாம் பயப்­ப­டு­வோமா! மடி­யிலே கன­மில்லை, வழி­யிலே பய­ மில்லை. ஏதா­வது அவர்­க­ளி­டம் குற்­றங்­கள் ஆதா­ர­பூர்­வ­மாக இருந்­தால், நிச்­ச­ய­மாக அதன் மீது அவர்­கள் என்ன நட­வ­டிக்கை எடுத்­தா­லும் சட்­டப்­படி சந்­திக்­கத் தயா­ராக இருக்­கின்­றோம். இன்­னும் அடிக்க அடிக்க உயர்­கின்ற பந்­தா­கத்­தான் திரா­ விட முன்­னேற்­றக் கழ­கம் மேலும் மேலும் எழுந்து, நிமிர்ந்து, திமிறி நிற்­கும். இது போன்ற உருட்­டல், மிரட்­டல்­க­ளுக்­கெல்­லாம் அஞ்­சு­கின்ற இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பதி­லடி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்­தி­ரி­கை­யா­ளர்: சட்­ட­ச­பை­யில் முத­ல­மைச்­சர் பேசும்­போது, ஒரு ‘சைகை’ ஒன்று காண்­பித்­தார். ‘அப்­பா­வைக் காணோம்’ என்று ஒரு குட்­டிக் கதை சொன்­னார். குறித்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதற்­குத் தகுந்த பதி­ல­டியை, எங்­க­ளு­டைய முன்­னாள் துணை முதல்­வர், இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் ஆளு­மை­யோடு அனைத்­தை­யும் பதிவு செய்­தி­ருக்­கின்­றார். அவர் பேசு­வ­தற்கு உண்­டான வாய்ப்பை முழு­மை­யாக நல்­கி­யி­ருந்­தால், நிச்­ச­ய­மாக அங்­கேயே பேசி­யி­ருப்­பார்; அங்­கேயே அதற்­குத் தகுந்த பதி­லடி தந்­தி­ருப்­பார். எனவே, நானும் ஐந்­தா­வது முறை­யா­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்­றேன். சட்­ட­மன்­றத்­தில் ஜன­நா­யக முறைப்­படி கடந்த காலங்­க­ளில் பல்­வேறு முத­ல­மைச்­சர்­கள் பேசு­கின்ற பொழுது, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் குறுக்­கீட்டை எல்­லாச் சபா­நா­ய­கர்­க­ளும் அனு­ம­திப்­பார்­கள். அதே­போல் எதிர்க்­கட்­சி­யி­ன­ரின் குறுக்­கீ­டு­களை முத­ல­மைச்­சர்­க­ளும் ஏற்­றுக்­கொண்டு, அவ­ரு­டைய குறு க்­கீ­டு­க­ளைக் கேட்டு அதற்கு விளக்­கம் அளிப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏன், கடந்த காலங்­க­ளில் ஜன­நா­ய­கத்­தின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக இருந்த எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யின் தலை­வர், எதிர்க்­கட்­சி­யி­னு­டைய துணைத்­த­லை ­வர், கொறடா போன்­ற­வர்­கள் கூட முத­ல­மைச்­சர்­கள் பேசு­கின்ற பொழுது எழுந்து குறுக்­கீடு செய்­தால், அனு­ம­தித்து அதற்­குப் பதி­ல­ளிப்­பார். ஆனால், இவர் தயா­ரித்து வந்­த­தைத் தவிர வேறு எதை­யும் பேசு­கிற நிலை இல்­லா­த­தால், சபா­நா­ய­கர் அதற்கு அனு­மதி அளிக்­க­வில்லை; அனு­மதி மறுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பி.கே.சேகர்­பாபு தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>