<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,725,817" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 25 2026 05:33:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260625T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25062026-CHN-04" position.sequence="04" ex-ref="25062026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை தனி­மைப்­ப­டுத்­தும் அர­சி­யல்   சக்தி தமிழ் மண்­ணில் என்­றும் உரு­வா­கப்­போ­வ­தில்லை! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup614286_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­திற்கு நடை­பெற்ற தேர்­த­லில் ஆளுங்­கட்­சி­யா­வ­தற்­கான எண்­ணிக்கை பலத்தை தி.மு.க. எட்­ட­வில்லை  என்­ப­த­னா­லும், தி.மு.க.வுடன் மதச்­சார்­பற்ற கூட்­ட­ணி­யில் இடம்­பெற்ற சில அர­சி­யல் கட்­சி­கள் வில­கிச் சென்­ற­மை­யா­லும், தி.மு.க தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது என்ற விமர்­ச­னம், சில அர­சி­யல் கட்­சி­க­ளால் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">இத்­த­கைய விமர்­ச­னத்தை முன்­வைப்ப­வர்­கள் தேர்­தல் கூட்­டணி பற்­றியோ அல்­லது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கட்­ட­மைப்பு பற்­றியோ, அரிச்­சு­வ­டி­கூட அறி­யா­த­வர்­க­ளா­கத்­தான் இருக்க­ முடி­யும். தேர்­தல் காலக்­கூட்­டணி என்­பது சில பொது­வான திட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில், குறிப்­பாக மத­வாத சக்­தி­க­ளுக்கு எதி­ராக அமைக்­கப்­பட்ட கூட்­ட­ணி­தான், நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உரு­வாக்­கப்­பட்ட மதச்­சார்­பற்ற கூட்­ட­ணி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்­தத் தேர்­தல் கூட்­ட­ணிக்கு ஆட்­சி­ய­மைக்­கும் வாய்ப்­பினை மக்­கள் இம்­முறை வழங்­க­வில்­லை­யெ­னில், அடுத்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­கான முயற்­சி­யி­னை­யும், ஆக்­க­ப்பூர்­வ­மான திட்­டங்­க­ளை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மேற்­கொள் ­ளும் - செயல்­ப­டுத்­தும். தேர்­தல் முடிந்த பின்­னர், மதச்­சார்­பற்ற கூட்­டணியிலி­ருந்து பிரிந்து சென்ற அர­சி­யல் கட்­சி­க­ளைப் பற்றி கவ­லைப்­பட வேண்­டிய கட்­டா­யமோ, அவ­சி­யமோ திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு உறு­தி­யாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">ஆனால் பிரிந்து சென்ற சில அர­சி­யல் கட்­சி­கள் தங்­க­ளின் தான்­தோன்­றித்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை நியா­யப்­ப­டுத்து­வதற்­கா­க­வும், கொள்கை வேறு­பா­டு­களை சுட்­டிக்­காட்ட இய­லா­மை­யா­லும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது என்ற விமர்­ச­னத்தை மட்­டும் முன்­வைக்­கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை மாறாக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலைமை வகித்த மதச்­சார்­பற்ற கூட்­ட­ணி­யி­லி­ருந்து பிரிந்து சென்­ற­மைக்கு, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் செயல்­வீ­ரர்­கள் பெரி­தும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளார்­கள். கழ­கச் செயல்­வீ­ரர்­கள் வேகத்­த­டை­யில்­லாத பந்­த­யத் திட­லில் எதி­ர­ணியை எதிர்­கொள்ள தயா­ரா­கி­ விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இனி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் மின்­னல்­வேக அர­சி­யல் செயல்­பா­டு­களை எதிர்­கொள்­ள­வி­ருக்­கும், எட்­டாக்­க­னியைஎட்­டிப்­பி­டிக்க முடி­யா­மல், ஏமாந்­து­போய், இந்­தப் பழம் புளிக்­கும், எனப் பொய்­யு­ரைத்­து­விட்டு அடுத்த தோட்­டத்து பழ­ம­ரம் நோக்­கிப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள வேடந்­தாங்­கல் விநோ­தப் பற­வை­க­ளும் அர­சி­யல் நடை­பா­தைச் சிறு­வி­யா­பா­ரி­க­ளும் வெகு­வி­ரை­வில் நிச்­ச­யம் உணர்­வார்­கள்!!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை எந்த சக்­தி­யா­லும் தமிழ்­நாட்டு அர­சி­யல் களத்­தில் தனி­மைப்­ப­டுத்­தி­விட இய­லாது என்­பது வர­லாறு. கடந்­த­கா­லத்­தில் அப்­ப­டிப்­பட்ட விப­ரீத முயற்­சி­யில் ஈடு­பட்­ட­வர்­கள் எந்த நிலைக்­குத் தள்­ளப்­பட்­டார்­கள் என்­பதை வர­லாறு தெளி­வாக பதி­வு­செய்­தி­ருக்­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை “தரை­மட்­ட­மாக்­கு­வோம்”, “மூட்டை பூச்­சி­யைப் போல நசுக்­கி­வி­டு­வோம்” என்ற அர­சி­யல் தலை­வர்­கள் எல்­லாம் தட­யம் தெரி­யா­மலே போய்­விட்­டார்­கள் என்­பது கடந்­த­கால வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது ஒரு அர­சி­யல்­கட்சிஎன்­ப­தை­விட, தமிழ் இனத்­தை­யும், தமிழ் பண்­பாட்­டை­யும் மீட்­டெ­டுத்து போற்­றிக் காப்­பாற்­று­வ­தற்­காக பேர­றி­ஞர் அண்­ணா­வால் உரு­வாக்­கப்­பட்ட உயி­ரோட்­ட­முள்ள இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்!  இந்த இயக்­கம் அண்­ணன் - தம்பி என்ற குடும்­ப­பாச உணர்­வோடு உரு­வாக்­கப்­பட்டு, பல தலை­மு­றை­க­ளை­யும் கடந்து ஆல­ம­ரம்­போல் படர்ந்து - விரிந்து வேர்­க­ளா­லும், விழு­து­க­ளா­லும் காலத்தை வென்று இன்­றும் இன்­னும் பல­நூறு ஆண்­டு­கள் தமி­ழி­னம் உள்­ள­மட்­டும் இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். எனவே, இந்த இயக்­கம் தமி­ழி­னம் உள்­ள­மட்­டும் கால­மாற்­றங்­களை உள்­வாங்­கிக்­கொண்­டும் தொடர்ந்து இயங்­கிக் கொண்­டும்­தான் இருக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை ஏற்­றுக்­கொண்ட இந்­திய ஒன்­றி­யத்­தில் மாநி­லங்­க­ளி­லும், ஒன்­றி­யத்­தி­லும் ஒவ்­வொரு நாடா­ளு­மன்ற - சட்­ட­மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்க­ளில் ஆட்­சி­மாற்­றங்­கள் மக்­க­ளால் உரு­வாக்­கப்­ப­டு­வது இயல்­பான நட­வ­டிக்­கை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்ட இயக்­கம் மட்­டு­மல்ல, ஜன­நா­ய­கத்­திற்கு பேரா­பத்து வந்த கால­கட்­டத்­தில், ஆட்­சி­யையே விலை­யா­கக் கொடுத்து ஜன­நா­ய­கத்தை மீட்­டி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மா­கும்! இந்­தத்  தேர்­தல் பின்­ன­டைவை இயல்­பாக எடுத்­துக் கொள்­வ­தோடு, அதற்­கான கார­ணங்­க­ளை­யும், மாற்­றங்­க­ளை­யும் ஆய்­வு­செய்து உரிய தீர்­வு­கா­ணும் என்­பது மட்­டும் உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">இன்­றைய விரை­வான அறி­வி­யல் வளர்ச்­சி­யின் கார­ண­மாக “உல­கம்” என்ற  நீண்ட நிலப்­ப­ரப்பை, ஓர்­கி­ரா­மம் (Global Village) என்று சொல்­லத்­தக்க அள­விற்கு செய்­தி­கள் - தக­வல்­கள் (Information) உட­ன­டி­யாக உல­கின் ஒரு முனை­யி­லி­ருந்து அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் மின்­னல் வேகத்­தில் பர­வி­வி­டு­கி­றது. வாழ்­வி­யல் மாற்­றங்­க­ளும் விரை­வாக நடை­பெ­று­கின்­றன. உண­வில் உண்­ணும் முறை­யில்­கூட “விரை­வு­உ­ணவு” (Fast Food) முறை பிர­ப­ல­ம­டைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">எனவே,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கால­மாற்­றங்­க­ளுக்­கேற்ப எதிர் ­கால சமு­தா­யத்­தின் வார்ப்­ப­டங்­க­ளாம் இளை­ ஞர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை ஆய்­வு­செய்து, அதற்­கான சட்­டங்­க­ளை­யும், திட்­டங்­க­ளை­யும் உரு­வாக்­கக்­கூ­டிய வழி­மு­றை­ க­ளைக் கண்­ட­றிந்து இளை­ஞர்­க­ளை­யும் இணைத்­துக்­கொண்டு எதிர்­கால சமூக பொரு­ளா­தார - அர­சி­யல் கட்­ட­மைப்­பு­களை திரா­விட முன்­னேற் ­றக் கழ­கம் நிச்­ச­யம் உரு­வாக்­கும். திசை­மா­றிய இளை­ஞர்­களை விழிப்­பு­ணர்வு பெறச்­செய்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை கால மாற்­றங்­க­ளைச் எதிர்­கொள்­ளும் வல்­ல­மை­பெற்ற இயக்­க­மாக மாற்­று­வோம் என்­ப­தில் கிஞ்­சிற்­றும் ஐய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­களை மீண்­டும் மக்­க­ளி­டம் எடுத்­துச் செல்­வோம். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின், இளை­ஞர் அணி­யின் தலை­வர், தமிழ்­நாடு சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆகிய கழ­கக் காப்­பா­ளர்­க­ளின் புதிய சிந்­த­னை­யால் உரு­வா­கும் செயல் திட்­டங்­களை தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மும் குறிப்­பாக, இரு­பால் இளை­ஞர்­க­ளி­டம் எடுத்­து­ரைத்து அவர்­கள் விழிப்­பு­ணர்ச்சி பெற்­றி­டச் செய்­வோம், தமிழ்­மக்­க­ளின் உள்­ளங்­களை வெல்­வோம், நாளைய நமதுதமிழ்­நாட்டை நவீ­னப்­ப­டுத்­திட, இன்­றைய இளை­ஞர்­கள் மூலம் வழித்­த­டம் அமைப்­போம் வாரீர்! நாம் மேற்­கொண்­டுள்ள பய­ணத்­தின் வெற்றி வெகு­தொ­லை­வில் இல்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>