<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,74,958,866" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 15:41:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260625T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="25062026-TRY-11" position.sequence="11" ex-ref="25062026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">ஆட்சிப் பொறுப்பு இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் இந்த தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சி­தான் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="116">நாங்கள் போட்ட பாதை­யில்தான் யாராக இருந்­தா­லும் பய­ணிக்க முடி­யும்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">கழக துணைப் பொதுச் செயலாளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Speechkanimozh_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை,ஜூன்.25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை வடக்கு மாவட்­டம் தி.மு.க. சார்­பில்  இரா­ய­பு­ரம் மேற்கு பகுதி தி.மு.க மாண­வ­ரணி பகுதி துணை அமைப்­பா­ளர் பா.சக்­தி­தா­சன் ஏற்­பாட்­டில்  நேற்று முன்தினம் (23.06.2026) முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்களின் பிறந்­த­நாளை முன்­னிட்டு 1003 நபர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் விழா சென்னை வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் ஆர்.டி.சேகர் தலை­மை­யில் சென்னை நார்த்­வால் ரோட்­டில் உள்ள முதல்­வர் திரு­மண மாளி­கை­யில் நடை­பெற்­றது. இதில், சிறப்பு அழைப்­பா­ள­ராக திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி கலந்­து­கொண்டு, நலத்­திட்ட உத­வி­கள் வழங்கி சிறப்­பு­ரை ­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்­வில், திமுக செய்தி தொடர்­புக்­குழு தலை­வர் டி.கே.எஸ்.இளங்­கோ­வன், இரா­ய­பு­ரம் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஐட்­ரீம் மூர்த்தி, திமுக மக­ளிர் அணி சமூக வலை­தள பொறுப்­பா­ளர் டாக்­டர். யாழினி, திமுக நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்விழா­வில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.  பேசியதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் இங்கே தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய பிறந்த நாளை கொண்­டாட இந்த அரங்­கத்­திலே குழுமி இருக்­கி­றோம். வேளாங்­கண்ணி அவர்­க­ளும் நம்­மு­டைய சக்தி அவர்­க­ளும் ஏறத்­தாழ ஆயி­ரத்து முன்­னூறு பேருக்கு மேல் நலத்­திட்­டங்­கள் தரு­வ­தற்­காக ஏற்­பா­டு­களை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நமக்கு வேளாங்­கண்ணி அவர்­க­ளைப் பற்றி நன்­றா­கத் தெரி­யும், உங்­க­ளுக்­கெல்­லாம் அவர்­களை பற்றி நான் சொல்ல வேண்­டிய அவ­சி­யமே இல்லை,தொடர்ந்து கழ­கத்­திற்­காக உழைக்­கக்­கூ­டிய எல்­லா­ருக்­குமே முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கக்­கூ­டிய எந்த போராட்­ட­மாக ,பொதுக்­கூட்­ட­மாக ,ஆர்ப்­பாட்­ட­மாக இருக்­கட்­டும், எது­வாக இருந்­தா­லும் முதல் வரி­சை­யில்  நின்று அங்கே குரல் கொடுக்­கக்­கூ­டிய அதற்­காக பாடு­ப­டக்­கூ­டிய ஒரு­வ­ராக வேளாங்­கண்ணி அவர்­கள் எப்­பொ­ழு­துமே இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மைப் பார்த்து இது குடும்­பம் நடத்­தக்­கூ­டிய கட்சி என்­கி­றார்­கள். வேளாங்­கண்ணி இந்த இயக்­கத்­தில்   தன்னை இணைத்­துக் கொண்­ட­வர். அவ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக அவ­ரு­டைய பிள்­ளை­கள், அவர்­க­ளு­டைய பிள்­ளை­கள் என்று வாழை­யடி வாழை­யாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை தவிர வேறு எங்­க­ளுக்கு எது­வும் தெரி­யாது என்று சொல்­லக்­கூ­டிய ஒரு குடும்­பம்,இந்த நிகழ்ச்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கக்கூடிய குடும்­பம். இது­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய மக­ளி­ரணி கூட்­டத்­திலே ஒரு சகோ­தரி சொன்­னார், எங்­கள் வீட்­டில்  கூட கேட்­பார்­கள் , கட்சி கட்­சின்னு உயிர விடு­றியே கட்சி உனக்கு என்ன பண்­ணி­ருச்­சுன்னு. நான் ஒரு முறை திருச்­செந்­தூர் கோயி­லுக்கு எங்­கள்  குடும்­பத்­தோடு வண்­டி­யில்  சென்­றோம். அந்த கோவி­லுக்கு செல்­லும்  வழி­யில்  எங்­க­ளுக்கு ஒரு  விபத்து நேர்ந்­தது. அந்த நேரத்­தில்  எங்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்கு யாரை அழைக்­க­வேண்­டும் என்­ப­தும் தெரி­ய­வில்லை,யாரும் வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால் நாங்­கள் முத­லில் அழைத்­தது நம்­மு­டைய கழக  தோழர்­களை, உடன்­பி­றப்­பு­களை,மக­ளி­ரணி மற்­றும் கட்சி நிர்­வா­கி­களை அழைத்­தோம். அவர்­கள் ஓடோடி வந்து எங்­களை மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து எங்­க­ளுக்­குத் தேவை­யான அத்­தனை உத­வி­க­ளை­யும் செய்­தார்­கள்,மேலும்  என்­னு­டைய மக­னுக்­குக்  கை முறிவு ஏற்­பட்­டது ,அதற்­கான  வைத்­தி­யத்­திற்­கெல்­லாம் கூட இருந்து எங்­களை பத்­தி­ர­மாக வீட்­டிற்கு கொண்டு போய் சேர்த்­த­வர்­கள் இந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை சேர்ந்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதி­லி­ருந்து என் பையன் என்­னைப்  பார்த்து அந்த கட்சி உங்­க­ளுக்கு என்ன செய்­தது என்ற  கேள்­வியை  கேட்­ப­தில்லை.இனி வரும் காலங்­க­ளில் இந்த கட்­சியை விட்டு போக வேண­டாம் என்று என் பையன் ஒவ்­வெரு நாளும் கூறு­கி­றார் என்று அந்த சகோ­தரி சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதைத்­தான் தலை­வர் கலை­ஞ­ரி­டம் ஒரு முறை கேட்­ட­பொ­ழுது “உங்க குடும்­பம் அப்­ப­டின்னா” , என்­னு­டைய குடும்­பத்தை ஒரு புகைப்­ப­டத்­திற்­குள் அடைத்து விட முடி­யாது,தமி­ழர்­கள் எங்­கெங்கு வாழ்­கி­றார்­களோ அங்­கெல்­லாம் என் குடும்­பம் இருக்கு என்று சொல்­லிய தலை­வன்­தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மற்­ற­வர்­கள் சகோ­த­ரர்­களே தோழர்­களே என்று அழைக்­கும்­பொ­ழுது அங்கே பெண்­க­ளுக்கு இடம் இருப்­ப­தில்லை,ஆனால்  தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உடன்­பி­றப்பே என்று அழைக்­கும்­பொ­ழுது அத்­தனை பேரை­யும் சகோ­த­ரர்­கள்,சகோ­த­ரி­கள்,அண்­ணன்,தங்கை என்று அத்­தனை குடும்­பத்­தி­ன­ரை­யும் ஒன்­றாக இணைத்­துச் சொல்­லக்­கூ­டிய ஒற்றை மந்­தி­ரச் சொல்லை சொன்ன தலை­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்­லா­ரும் ஒன்று என்று  நினைத்த தலை­வர், பெண்­கள் படிக்க வேண்­டும் என்று நினைத்­த­வர்.இங்க மேடை­யிலே இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் எல்­லா­ரும் பெண்­க­ளுக்­காக எத்­தனை திட்­டங்­களை செய்­கி­றார்­கள், இன்­றைக்கு யாழினி அவர்­கள் பேசும்­பொ­ழுது குறிப்­பிட்டு சொன்­னார்­களே 42 சத­வீ­தம்,யாழினி மட்­டு­மின்றி  இன்று முத­ல­மைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய திரு.விஜய் அவர்­கள் டெல்­லி­யில் நடந்து  நிதி ஆயோக்­கில்  பேசும்­பொ­ழுது பெரு­மை­யாக சொல்­கி­றார் 42 சத­வீ­தம் பெண்­கள் தமிழ்­நாட்­டில உழைக்­கக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.அந்த உழைக்­கக் கூடிய பெண்­களை உரு­வாக்­கிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பெண்கள் படிப்பதற்கு வாய்ப்புகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உருவாக்கிய இயக்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெண்­கள் படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக பெண்­கள் திரு­மண உத­வித் திட்­டமே கொண்­டு­வ­ரப்­பட்­டது.கிரா­மம்­க­ளில் கல்­லூ­ரி­களை உரு­வாக்கி அங்­குள்ள சாதா­ரண குடும்­பத்­தில்  இருக்­கக் கூடிய ஆண்­க­ளும் பெண்­க­ளும் படிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு  42 சத­வீ­தம் பெண்­கள் உழைக்­கக்­கூ­டி­ய­வர்­கள் தமிழ்­நாட்­டில்  இருக்­கி­றார்­கள் என்று இந்த அரசு பெரு­மை­யாக பேசு­கி­றது என்­றால் அதற்கு அடித்­த­ள­மிட்ட இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.அங்கே சென்று  பெரு­மை­யாக சொல்­லக்­கூ­டிய அத்­தனை திட்­டங்­க­ளை­யும் கொண்­டு­வந்­தது நம் திரா­விட மாடல் ஆட்சி தலை­வர் கலை­ஞர்,அது மட்­டும் இல்­லா­மல், எத்­த­னையோ முன்­மா­தி­ரித் திட்­டங்­கள் அவர்­கள் காலம் தொட்டு நாம் கொண்டு வந்­தி­ருக்­கக் கூடிய திட்­டங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அர­சி­ய­லுக்­கா­க­வும், வாக்கு வங்­கிக்­கா­க­வும் யார் வேண்­டு­மா­னா­லும் திட்­டங்­க­ளைக் கொண்டு வர­லாம். ஆனால், இந்த சமூ­கத்­தில் யாரும் அவர்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­ட­வில்லை என்று சொல்­லக்­கூ­டிய திரு­நங்­கை­க­ளுக்­கென தனி நல வாரி­யத்தை உரு­வாக்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் நாடா­ளு­மன்­றத்­தில் பெரு­மை­யா­கக் குறிப்­பிட்­டுச் சொல்­லி­யி­ருக்­கி­றேன். திரு­நங்­கை­க­ளுக்கு முதன்­மு­த­லில் அங்­கீ­கா­ரம் அளித்த மாநி­லம் எது என்­றால், அது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி நடை­பெற்ற தமிழ்­நா­டு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர்­க­ளுக்கு ரேஷன் கார்டு கிடை­யாது, பாஸ்­போர்ட் எடுக்க முடி­யாது, கல்­லூ­ரிக்­குச் சென்று படிக்க முடி­யாது. பாலின மாற்று அறு­வைச் சிகிச்சை செய்ய வேண்­டு­மென்­றால், அவர்­கள் அனு­ப­வித்த கொடு­மை­க­ளை­யும் சோகக் கதை­க­ளை­யும் கேட்­டால் மனம் பத­றி­வி­டும். உயிர் பிழைப்­பதா இல்­லையா என்ற அச்­சத்­து­டன், நெருப்­பில் நடந்து செல்­வ­தைப் போன்ற வேத­னை­யைச் சந்­தித்­து­தான் அவர்­கள் தங்­க­ளு­டைய எதிர்­கா­லத்­தைத் தீர்­மா­னிக்­கும் அந்த அறு­வைச் சிகிச்­சையை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது எவ்­வ­ளவு பெரிய ரண வேதனை என்­பதை அவர்­க­ளுக்­குத்­தான் நன்­றா­கத் தெரி­யும். அந்த அறு­வைச் சிகிச்­சையை பாது­காப்­பாக அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் மேற்­கொள்ள வழி­வ­குக்­கும் வகை­யில் சட்­டங்­க­ளை­யும் நடை­மு­றை­க­ளை­யும் மாற்றி, அவர்­க­ளின் உயி­ரைக் காத்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வாக்கு அரசியல் பற்றிக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கவலைப் படாத கலைஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாக்கு அர­சி­ய­லைப் பற்றி கவ­லைப்­ப­டா­த­வர் தலை­வர் கலை­ஞர். அதை­யும் தாண்டி, இந்த சமூ­கத்­தில் யார் யாரின் மீது யாரும் தங்­க­ளது பார்­வை­யைத் திருப்­ப­வில்­லையோ, அந்­தப் பிச்­சைக்­கா­ரர்­க ­ளாக இருக்­கட்­டும், தொழு­நோ­யா­ளி­க­ளாக இருக்­கட்­டும், மாற்­றுத் திற­னா­ளி­க­ளாக இருக்­கட்­டும், அவர்­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­பட்ட தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தன்­னு­டைய ஒவ்­வொரு பிறந்­த­நா­ளை­யும் மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­களை அறி­விக்­கும் நாளாக மாற்­றி­ய­வர் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தன்­னு­டைய கண் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­த­போ­து­கூட, அவர் தன்­னு­டைய கண்­க­ளைப் பற்­றியே மட்­டும் யோசிக்­க­வில்லை. ‘எனக்கே இப்­படி ஒரு விபத்து ஏற்­பட்­டி­ருக்­கி­றது; இதே­போல் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் இன்­னும் எத்­தனை லட்­சம் பேர் இருக்­கி­றார்­கள்? அவர்­க­ளுக்கு நாம் உதவ வேண்­டும்’ என்று சிந்­தித்­த­வர் அவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த உயர்ந்த சிந்­த­னை­யின் வெளிப்­பா­டா­கத்­தான் கண்­ணொ­ளித் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி ஒவ்­வொரு நாளும் எத்­த­னையோ திட்­டங்­களை தன் ஆட்சி காலத்­தில் எண்ணி அடக்­கி­விட முடி­யாத திட்­டங்­களை எல்­லாம் தந்த தலை­வர் கலை­ஞர். அதே வழி­யி­லே­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள் காலை 
உண­வுத் திட்­டம், விடி­யல் பய­ணம் திட்­டம் உள்­ளிட்ட எண்­ணற்ற மக்­கள் நலத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் திட்­டங்­கள் வெறும் தேர்­தல் வாக்­கு­று­தி­களோ, தற்­கா­லிக உத­வி­களோ அல்ல. அவை உங்­கள் வாழ்க்­கையை மாற்­று­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட திட்­டங்­கள். உங்­கள் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்தை வள­மாக்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட திட்­டங்­கள். தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் கல்வி கற்று, நல்ல நிலை­யில் தங்­க­ளு­டைய வாழ்க்­கையை அமைத்­துக்­கொள்ள வேண்­டும்; ‘எனக்கு ஒரு நல்ல எதிர்­கா­லம் இருக்­கி­றது’ என்ற கன­வோடு வாழ வேண்­டும்; சுய­ம­ரி­யா­தை­யு­டன் வாழக்­கூ­டிய உரிமை எனக்கு இருக்­கி­றது என்­பதை உணர வேண்­டும் என்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உரிமைக்குப் போராடக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கற்றுத் தந்த இயக்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்­னு­டைய உரி­மை­க­ளுக்­காக போரா­ட­வும், என்­னு­டைய மொழிக்­காக போரா­ட­வும், என்­னு­டைய அடை­யா­ளங்­க­ளைக் காப்­பாற்­றிக்­கொள்­ள­வும் எனக்கு உரிமை இருக்­கி­றது என்­பதை இந்த மக்­க­ளுக்கு கற்­றுத் தந்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால், ஆட்சி பொறுப்பு இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் இந்த தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆட்­சி­தான் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. நாங்க போட்ட பாதை­யில் தான் யாராக இருந்­தா­லும் பய­ணிக்க முடி­யும். அதை ஆட்சி பொறுப்­பில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளும் புரிந்து கொள்ள வேண்­டும். யாரும் கேள்வி கேட்­கக் கூடாது தான் பேசும்­போது குறிக்­கி­டக் கூடாது என்று நினைக்­கக்­கூ­டிய ஒரு தலை­வர் கலை­ஞர் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது சமூக வலைத்­த­ளங்­க­ளில் ஒரு அழ­கான புகைப்­ப­டம் பரவி வரு­கி­றது. அதில் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் அமர்ந்­தி­ருப்­பார். அவ­ரைச் சுற்றி ஊட­கத் துறை­யைச் சேர்ந்த நண்­பர்­க­ளும் செய்­தி­யா­ளர்­க­ளும் நிற்­பார்­கள். அந்த அறையே செய்­தி­யா­ளர்­க­ளால் நிரம்பி வழி­யும். அவர்­கள் அனை­வ­ரும் அவ­ரைச் சுற்றி நின்­று­கொண்டு பல்­வேறு கேள்­வி­க­ளைக் கேட்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எந்­த­வித தயக்­க­மும் இல்­லா­மல் ஊட­கங்­களை சந்­தித்து அவர்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த தலை­வர் கலை­ஞர். ஆனால் இன்று, எத்­த­னையோ தலை­வர்­கள் டெல்­லி­யி­லி­ருந்து தமிழ்­நாடு வரைக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­திப்­ப­தற்கு கூட தயா­ராக இல்­லாத ஒரு நிலையை நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­க­ளு­டைய கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­லு­வ­தற்கு தயா­ராக இல்­லாத, ஜன­நா­ய­கத்­தின் மீது நம்­பிக்கை இல்­லாத ஒரு நிலையை பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஒரு உண்­மை­யான ஜன­நா­யக தலை­வ­னின் பிறந்த நாளை கொண்­டா­டு­கி­றோம் என்ற அந்த பெருமை நமக்கு அத்­தனை பேருக்­கும் இருக்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்வாறு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>