<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,339,609,1087" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 16:49:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260625T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25062026-VLR-10" position.sequence="10" ex-ref="25062026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">தேர்­தல் சிம்­மா­ச­னத்­திலே அமர்­வ­தல்ல, கோட்­டை­யிலே உட்­கார்­வ­தல்ல! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">சமு­தா­யத்தை   எழுச்­சி­யுள்­ள­தாக   ஆக்­கு­வது- –  சுய­ம­ரி­யாதை  உள்­ள­தாக   ஆக்­கு­வது தான்  வெற்றி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25"> திரா­வி­டர் கழ­கத் தலை­வர்   கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘‘நாம் எதிர்­பார்க்­கின்ற வெற்றி தேர்­தல் சிம்­மா ச­னத்­திலே அமர்­வ­தல்ல. கோட்­டை­யிலே உட்­கார்­வ­தல்ல. இவற்­றை­யெல்­லாம் விடப் பெரி­யது. சமு­தா­யத்தை எழுச்­சி­யுள்­ள­தாக ஆக்­கு­வது, சுய­ ம­ரி­யாதை உள்­ள­தாக ஆக்­கு­வது, தமி­ழன் தமி­ழ­னாக வாழ்­கி­றான் என்ற நிலையை அவ­னுக்கு எடுத்­துக் காட்­டு­வ­து­ தான் நாம் வெற்றி பெற­வேண்­டிய, சாதிக்க வேண்­டிய தேர்­தல் என்­பதை மறந்து விடா­மல் நீங்­கள் பணி­யாற்ற வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்’’ என்று தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பேசி­ய­தைச் சுட்­டிக்­
காட்டி, திரா­வி­டர் கழ­கத் தலை­வர் தமி­ழர் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் அறிக்கை விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் அண்­மை­யில் நடை­பெற்ற சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்து, ஆட்­சி­யில் அம­ரா­விட்­டா­லும் – அது தேர்­தல் அர­சி­ய­லின் தனி விசித்­தி­ரம் தான் என்­றா­லும் – அதன் கொள்கை பல­மும் – மக்­க­
ளின் ஆத­ர­வும் குறைந்­து­ 
வி­டவில்லை என்­பதை, உணர்ச்­சியை ஒதுக்கி, அறிவை அள­வு­கோ­லாக்­கிக் கொண்டு பார்க்­கும் முதிர்ச்சி அடைந்­தோர் தெளி­வுற அறி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கெக்­க­லி­க­ளும், கிண்­டல்­க­ளும், மலி­வான நையாண்­டி­க­ளும் தி.மு.க. மீது தூசி­யாக விழுந்­தா­லும், அடுத்த ஒரு காற்று வரும்­போது அது, தானே பறந்­து­வி­டும். ஏக­டி­யம் பேசி­ய­வர்­கள் ஏமாற்­றத்­திற்கு ஆளா­கும் பரி­தா­ப­மும் தொட­ரக்­கூ­டும். ஆட்சி வெறும் காட்­சி­யாக மாறக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கூர்­மை­யான ஜன­நா­ய­கக் கரு­வி !</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் தோல்வி வேறு; கொள்­கைத் தோல்வி வேறு. தி.மு.க.வுக்கு ஏற்­பட்­டது தேர்­தல் தோல்வி; ஆட்சி அதற்­குக் கிட்­டா­மற் போயி­ருக்­க­லாம்; ஆனால், அதை­விட அதற்கு, ஆளுங்­கட்­சிக்கு அங்­கு­ச­மும், கடி­வா­ள­ மும் போடும் எதிர்க்­கட்சி என்ற ஒரு கூர்­மை­யான ஜன­நா­ய­கக் கரு­வியை மக்­கள் அளிக்­கத் தவ­ற­வில்லை என்­பதை ஆள்­வோர் மறந்­து­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வினைத் திட்­பத்­தின் தன் வலி­மையை விட மாற்­றார் வலி­மையை அறிந்து நடப்­பதே களத்­தில் எதிர் எதிரே சந்­திக்­கும் ஆளும் அணி – எதிர் அணி ஆகிய இரண்டு அணி­யி­ன­ரும் ஆழ­மா­கச் சிந்­திக்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கலை­ஞ­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வழி­காட்­டும் உரை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2.6.2008 இல், தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் தி.மு.க. தலை­வர் மான­மிகு கலை­ஞர் அவர்­கள் ஆற்­றிய உரையை அவ­ரது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில், ‘விடு­தலை’ வெளி­யிட்ட மல­ரில் பதிய வைத்­துள்­ளது. அப் பகு­தியை, தி.மு.க. சகோ­த­ரர்­கள் ஊன்­றிப் படித்து, உற்­சா­கத்­தோடு உழைக்க – கட­மை­யாற்ற – களம் காண முய­லும் இந்த சுய­ ப­ரி­சோ­தனை கால­கட்­டத்­தில், வழி­காட்­டும் கலங்­கரை வெளிச்­ச­மாக கலை­ஞர் அவர்­க­ளது கருத்­து­கள் தெள்­ளிய உரை­யாக அமைந்­துள்­ளது. அத­னைப் படித்­துச் செயல்­ப­டு­வது காலத்­தின் கட்­டா­யம். தி.மு.க.   பொறுப்­பா­ளர்­கள், தோழர்­கள் ஊன்­றிப் படித்­துப் பயன்­பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உண்­மை­யான வெற்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘‘சமு­தா­யத்­திலே நாம் பெறு­கின்ற வெற்­றி­தான் திமு­க­வின் உண்­மை­யான வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேரா­சி­ரி­யர் இங்கே எடுத்­துக் காட்­டி­ய­தைப் போல், வாக்­கு­க­ளைப் பெறு­வது – வெற்­றி­க­ளைப் பெறு­வது – அமைச்­சர்­கள் பொறுப்பை ஏற்­பது – ஆட்­சி­யிலே அமர்­வது இவை­க­ளுக்­காக மாத்­தி­ரம் திமு­க­ழ­கம் இல்லை. நான் இன்­றைக்கு கொடுத்­துள்ள பிறந்த நாள் செய்­தி­யைப் பார்த்­தால் உங்­க­ளுக்­குத் தெரி­யும். அதில் நம்­மு­டைய சாத­னை­க­ளில் எதை முன்­னி­லைப்­ப­டுத்­திச் சொல்­லி­யி­ருக்­கி­றேன். அனைத்­துச் ஜாதி மக்­க­ளும் அர்ச்­ச­க­ராக சட்­டம் இயற்­றி­யது, திமு­க­ழக அரசு பெரி­யா­ரு­டைய நெஞ்­சில் இருந்த முள்ளை எடுத்­தோம்.சமு­தா­யத் துறை­யில் அது மகத்­தான வெற்­றி­யைப் பெற்­ற­தற்கு அடை­யா­ளம் என்­று­தான் சொல்­லி­யி­ருக்­கி­றேன். ஆகவே, சமு­தா­யத்­திலே நாம் பெறு­கின்ற வெற்­றி­தான் திமு­க­ழ­கத்­துக்­குத் தேவை­யான உண்­மை­யான வெற்றி என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய அர­சி­யல் இயக்­கங்­கள் – தமி­ழ­கத்­திலே எத்­தனை இருந்­தா­லும் கூட, நாம் அவை­க­ளி­லி­ருந்து மாறு­பட்­டி­ ருப்­ப­தற்கு ஒரே­யொரு கார­ணம், அவர்­கள் ஆட்­சியை எப்­படி நடத்­து­வது என்­பது பற்றி யோசிக்­கி­றார்­கள். நாம் சமு­தா­யத்தை எப்­படி வளர்ப்­பது என்­ப­தைப் பற்றி யோசிக்­கி­றோம். நாம் ஜாதி­களை எப்­படி ஒழிப்­பது என்று சிந்­திக்­கி­றோம். அவர்­கள் ஜாதி­களை எப்­படி வளர்ப்­பது என்று நினைக்­கி­றார்­கள். இன்­ன­மும் ஜாதி­க­ளின் ஆக்­கத்­தால், ஆத­ர­வால், கட்­சி­களை நடத்தி விட முடி­யு­ மென்று எண்ணி,கட்­சித் தலை­மைக்­குப் போட்­டி­யி­டு­கி­ற­வர்­கள் எத்­தனை பேர் இருக்­கி­றார்­கள் என்­பதை நான் நன்­றாக அறி­வேன். நீங்­க­ளும் அறி­வீர்­கள். ஆனால், உங்­க­ளால் வெளியே சொல்ல முடி­யாது. சொல்­லா­த­தற்கு கார­ணம் எனக்­குத் தெரி­யும். அப்­ப­டிப்­பட்ட நிலை­மை­யி­லே­தான் இன்­றைக்கு தமிழ்­நாட்­டிலே அர­சி­யல் இருக்­கி­றது. எப்­படி உரு­வான அர­சி­யல் இது? எப்­படி உரு­வான இயக்­கம் இது? இந்த இயக்­கத்தை தந்தை பெரி­யார் அவர்­கள் துணை நின்றுகாக்க முற்­பட்ட நேரத்­தி­லும் சரி, இந்த இயக்­கம் தொடங்­கிய போதும் சரி, எத்­த­கைய எண்­ணத்­தோடு தொடங்­கப்­பட்­டது என்­பதை தயவு செய்து எண்­ணிப் பாருங்­கள். பழைய ஏடு­களை எடுத்­துப் படித்­துப் பாருங்­கள். பழைய புத்­த­கங்­களை வாங்­கிப் படித்­துப் பாருங்­கள். பழங்­கா­லத்து நண்­பர்­கள் சில பேர் இன்­ன­மும் உயி­ரோடு இருப்­பார்­கள். அவர்­க­ளி­டம் கேட்­டுப் பாருங்­கள். இந்த இயக்­கம் சமு­தா­யத்­திலே நமக்கு ஏற்­பட்ட இழி­வு­க­ளைத் துடைத்­துக் கொள்ள – ஏற்­றம் பெற – நாமும் மனி­தர்­கள்­தான் என்­கிற சுய­ ம­ரி­யாதை உணர்வு கொள்ள – பக்தி என்ற பெய­ரால் – பஞ்­சாங்­கம் என்ற பெய­ரால் – மூட நம்­பிக்கை என்­கின்ற பெய­ரால் – ஆண்­ட­ வன், ஆல­யம் என்­கின்ற பெய­ரால் – குருட்டு நம்­பிக்கை என்­கிற பெய­ரால் – இந்­தச் சமு­தா­யத்­திற்கு எந்த காலத்­தி­லும் வீழ்ச்சி ஏற்­பட்டு விடக் கூடாது என்­ப­தைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கா­கத் தான் இந்த ஆட்சி அமைந்த காலத்­தி­லி­ருந்து இது­வ­ரை­யில் எத்­த­னையோ எதிர்ப்­பு­க­ளைப் பற்­றி­யெல்­லாம் கவ­லைப்­ப­டா­மல், அத்­த­னை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், அனைத்து எதிர்ப்­பு­க­ளுக்­கும் ஈடு­கொ­டுத்து – பெண்­க­ளுக்­கா­கப் பாடு­ப­டு­கின்ற நேரத்­தி­லும் சரி – மக­ளிர் உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுத்த நேரத்­தி­லும் சரி – அல்­லது மூட நம்­பிக்­கை­களை வீழ்த்த வேண்­டு­மென்­ப­தற்­கா­கப் பேசு­கிற நேரத்­தி­லும் சரி – எழு­து­கிற நேரத்­தி­லும் சரி – அவற்­றைக்  கலைக் காட்­சி­க­ளா­கத் தெரி­விக்­கின்ற நேரத்­தி­லும் சரி – எல்லா நேரத்­தி­லும் கொள்­கையை விட்டுநாம் அகன்­ற­தில்லை. இம்­மி­யும் நழு­வி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நமக்கு ஒரே பெருமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஒரே செல்வாக்கு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நமக்கு இருக்­கின்ற ஒரே பெருமை – ஒரே செல்­வாக்கு – ஒரே திறமை – ஒரே சக்தி அது­தான். அதை விட்டு நாம் வில­காத வரை நம்மை யாரும் வீழ்த்த முடி­யாது என்ற நம்­பிக்­கையை நான் பெறு­கி­றேன். இன்­றைக்கு இந்த நாற்­காலி இருக்­க­லாம் – கோட்­டை­யிலே நமக்­கா­கப் போடப்­ப­டு­கின்ற சிம்­மா­ச­னம் ஓராண்டு காலம், இரண்­டாண்டு காலம் இருக்­க­லாம். எப்­போ­தும்நிரந்­த­ர­ மல்ல. அவற்­றிற்­கா­கவே இந்த இயக்­கம் தொடங்­கப்­பட்­ட­தல்ல. இந்த இயக்­கத்­திலே இருக்­கின்ற நாம் சுய­ம­ரி­யாதை உணர்­வோடு வாழ வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் எதிர்­பார்க்­கின்ற தேர்­தல் சிம்­மா­ச­னத்­திலே அமர்­வ­தல்ல. கோட்­டை­யிலே உட்­கார்­வ­தல்ல. இவற்­றை­யெல்­லாம் விடப் பெரி­யது.  சமு­தா­யத்தை எழுச்­சி­யுள்­ள­தாக ஆக்­கு­வது, சுய­ம­ரி­யாதை உள்­ள­தாக ஆக்­கு­வது, தமி­ழன் தமி­ழ­னாக வாழ்­கி­றான் என்ற நிலையை அவ­னுக்கு எடுத்­துக் காட்­டு­வ­து­தான் நாம் வெற்றி பெற­வேண்­டிய, சாதிக்க வேண்­டிய தேர்­தல் என்­பதை மறந்து விடா­மல் நீங்­கள் பணி­யாற்ற வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அறி­ஞர் அண்­ணா­வின் அரு­மை­யான எளிய கொள்கை விளக்­கத்­தி­னை­ யும் இந்­நே­ரத்­தில் கவ­னப்­ப­டுத்­திக் கொள்­வது முக்­கி­யம் என்­ப­தைத் தாய்க்­க­ழ­கம் உரிமை உற­வோடு நினை­வூட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘‘பதவி என்­பது மேல் துண்டு; கொள்கை, லட்­சி­யம் என்­பது வேட்டி போன்­றது!’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல கட்­சி­யி­ன­ருக்கு இப்­போது வேட்டி காணா­மற் போனதே அவர்­க­ளுக்­குத் தெரி­யாத பரி­தா­பமே தமிழ்­நாட்டு அர­சி­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>