<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,67,956,917" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 25 2026 14:42:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260626T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="26062026-CBE-03" position.sequence="03" ex-ref="26062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">பெ.சண்முகத்தின் உண்மை முகம் – -3</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup753368_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ThirumaCopy_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘இந்த ஆட்சி மாற்­றம், தி.மு.க., அ.தி.மு.க. அல்­லாத ஒரு ஆட்சி வேண்­டும் என்­ப­தற்­காக மக்­கள் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்’’ என்­கி­றார் மார்க்­சிஸ்ட் செய­லா­ளர் பெ.சண்­மு­கம். அந்த 
நோக்­கத்­தோடு மக்­கள் வாக்­க­ளித்து இருந்­தால் விஜய் கட்சி 160 இடங்­க­ளுக்கு மேல் வெற்றி பெற்­றி­ருக்க வேண்­டும். பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கத் தேவை­யான 117 இடத்­தையே பெறா­த­வர் தான் விஜய். 16 தொகு­தி­க­ளில் மிகக் குறை­வான வாக்­கு­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது அவர் கட்சி. எட்டு மாவட்­டங்களில் எந்­தத் தொகு­தி­யை­யும் கைப்­பற்­ற­வில்லை அவர் கட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1.55 கோடி வாக்­கு­களை தி.மு.க.கூட்­ட­ணி­யும், 1.34 கோடி வாக்­கு­களை அ.தி.மு.க. கூட்­ட­ணி­யும் பெற்­றுள்­ளன. தி.மு.க. கூட்­ட­ணியை விட 17 லட்­சம் வாக்­கு­களை தான் கூடு­த­லா­கப் பெற்­றுள்­ளார் விஜய். எனவே இதில் சண்­மு­கம் மகிழ்ச்சி அடைய எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே சண்­மு­கம்  தான், ‘ஆட்சி அமைக்க எந்­த­வொரு கட்­சிக்கோ அணிக்கோ தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­க­வில்லை’ என்­றும் அதே கட்­டு­ரை­யில் சொல்­கி­றார். தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­காத விஜய், தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற கட்­சி­க­ளுக்கு அமைச்­சர் பதவி கொடுத்­தும், அ.தி.மு.க.வின­ருக்கு அமைச்­சர் பதவி தரப்­போ­வ­தாக நடித்­தும் தனக்கு பெரும்­பான்மை இருப்­ப­தைப் போல காட்டி முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில்  இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆத­ரவு தந்த கட்­சி­களை நம்­பா­மல் அ.தி.மு.க.வின் நான்கு உறுப்­பி­னர்­களை ராஜி­னாமா செய்ய வைத்­துள்­ளார் விஜய்.இன்­னும் அதே பேரங்­களை நடத்தி வரு­கி­றார் விஜய். அவர்­கள் கணக்­குப் படி 15 தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் வர வைக்க வேண்­டு­மாம். அதில் விஜய் கட்­சியே வெற்றி பெறு­மாம். வெற்றி பெற்­ற­தும் இந்த நான்கு கட்­சி­க­ளுக்­கும் அல்வா தரப்­ப­டு­மாம்.  இத்­த­கைய கேவ­ல­மான குதிரை பேர ஆட்­சியை ஆத­ரிப்­பது அவ­மா­ன­மாக இல்­லையா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க. ஆட்சி மீது குற்­றச்­சாட்­டு­களை இந்­தக் கட்­டு­ரை­யில் அடுக்­கு­கி­றார்  சண்­மு­கம். இது எது­வும் மே 4 ம் தேதிக்கு முன்பு வரை தெரி­ய­வில்­லையா? இரண்டு சீட் ஜெயிப்­ப­தற்கு வாயை மூடிக் கொண்டு இருந்­தாரா? தி.மு.க. ஆட்­சியை ஆத­ரித்து அவர் பேசிய பேச்­சு­களே அவ­ருக்­கான பதில்­கள். ‘ தி.மு.­க.­வின் தொடர் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தும் 20 கார­ணி­கள்’ என்று ‘தீக்­க­தி­ரில்’ ஒரு பக்­கத்­துக்கு 
( 19.4.2026) எழுதி இருக்­கி­றார்­கள். அதை எடுத்து அவரே படிக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘கடந்த 2021-இல் ஆட்­சிப் பொறுப்­பேற்­றது முதல் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஒரு திற­மை­யான நிர்­வா­கி­யா­கத் தன்னை நிலை­நி­றுத்­திக் கொண்­டுள்­ளார். எவ்­வி­தப் பாகு­பா­டு­மின்றி அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் சீரான வளர்ச்­சியை உறுதி செய்­துள்­ளார். குறிப்­பாக, பேரி­டர் காலங்­க­ளில் நேர­டி­யா­கக் களத்­தில் இறங்­கிப் பணி­யாற்­றிய விதம் மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு ஒரு ‘பாது­கா­வ­லர்’ என்ற பெய­ரைத் தந்­துள்­ளது. அரசு இயந்­தி­ரத்­தைச் சுணக்­க­மின்றி இயக்­கி­ய­து­டன், கட்­சித் தலை­வ­ரா­க­வும் கூட்­டணி கட்­சி­களை அர­வ­ணைத்­துச் செல்­வ­தில் அவர் காட்­டிய முதிர்ச்சி, இந்­தத் தேர்­த­லில் அவ­ருக்கு மிகப்­பெ­ரிய பல­மாக உரு­வெ­டுத்­துள்­ளது” என்று தான் தொடங்­கி­யது இந்­தக் கட்­டுரை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை வாழ்­வா­தார மாற்­றம், விடி­யல் பய­ணம், முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டங்­கள், சிதை­யாத மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி பலம், தொழில் வளர்ச்சி மற்­றும் வேலை­வாய்ப்பு உரு­வாக்­கம், மாநில சுயாட்­சி­யும் ஒன்­றிய அர­சின் நிலைப்­பா­டும், நீட் தேர்­வுக்கு எதி­ரான போராட்­டங்­கள், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் என்­பது ஒரு முன்­னோ­டித் திட்­டம், 
சமூ­க­நீதி, சிறு­பான்­மை­யி­ன­ரின் 
முழு­மை­யான ஆத­ரவு, ஆன்­மீ­க­மும் கோயில் நிர்­வா­கச்  சீர்­தி­ருத்­தங்­க­ளும், நவீன உட்­கட்­ட­மைப்பு, நகர்ப்­புற வளர்ச்சி - என்று தனித்­தனி தலைப்­பு­கள் போட்டு திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­களை விவ­ரித்­த­தும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அதி­கா­ரப்­பூர்வ நாளி­தழ் தான். ஒரே மாதத்­தில் சண்­மு­கம் மனம் போன போக்­கில் எழு­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தி.மு.க. ஆட்சி நவீன தாரா­ள­மய பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யைக் கடைப்­பி­டித்­த­தாம். இத­னால் மக்­க­ளுக்கு அதி­க­மான பாதிப்­பு­கள் ஏற்­பட்­ட­தாம். மக்­கள் கோபப்­பட்­டார்­க­ளாம். கேர­ளா­வில் மார்க்­சிஸ்ட் அர­சாங்­கம் கடைப்­பி­டித்­த­தும் நவீன தாரா­ள­மய பொரு­ளா­தா­ரக் கொள்கை தான். அத­னால் கோபம் அடைந்த இளை­ஞர்­கள் தான் மார்க்­சிஸ்ட் அர­சாங்­கத்தை கேர­ளா­வில் தூக்கி வீசி­னார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கேர­ளா­வில் அதானி குழு­மத்­தின் முத­லீ­டு­களை மார்க்­சிஸ்ட் அரசு அனு­ம­தித்­தது. விழிஞ்­சம் துறை­மு­கம் அதானி கையில். கல­மச்­சேரி தள­வாட பூங்கா அதானி குழு­மத்­தால் தொடங்­கப்­பட்­டது. பிர­த­மர் மோடி­யும் - முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­ய­னும் - அதா­னி­யும் ஒன்­றாக நின்று பேசிக் கொள்­ளும் படமே வெளி­யா­னது. நலி­வ­டைந்த பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார் மூல­மாக மேம்­ப­டுத்­த­லாம் என்ற கேரள  மார்க்­சிஸ்ட் அர­சின் நிலைப்­பாட்டை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சியே ( மார்ச் 7,2005)  ஆத­ரித்­துள்­ளது. ‘நவ கேர­ளத்­துக்­கான புதிய பாதை­கள்’ என்­பது பின­ராயி விஜ­யன் தயா­ரித்த ஆவ­ணத்தை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஏற்­றுக் கொண்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘In a slight shift from the Communist Party of India (Marxist) [CPI(M)]’s long-held position on public sector units, the New Pathways for a Nava Keralam document presented by Chief Minister Pinarayi Vijayan, polit bureau member of the party, at the 24th State conference in Kollam, advocates restructuring of struggling PSUs under a public private partnership (PPP) model’’ ( மார்ச் 7,2025, தி இந்து)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சி.பி.எம். கட்­சி­யின் 24 ஆவது அகில இந்­திய மாநாட்டை ஒட்டி பல்­வேறு இடங்­க­ளில் கருத்­த­ரங்­கு­கள் நடத்­தப்­பட்­டது. கேரள மாநில தொழில்­துறை அமைச்­சர் பி.ராஜீவ், ‘வர்த்­தக முத­லீ­டு­க­ளும் தொழி­லா­ளர் உரி­மை­க­ளும்’ என்ற தலைப்­பில் சென்­னை­யில் 13.3.2025 அன்று சென்­னை­யில் உரை­யாற்­றி­னார். அவர் பேசி­யது சோச­லி­சமா? நவ­தா­ரா­ள­ம­யமா? என்­பதை சண்­மு­கம் பார்க்க வேண்­டும். தனது உரை­யில் பி.ராஜீவ் ஒரு மேற்­கோள் காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘என்­னு­டைய மூச்சு கம்­யூ­னி­சத்­தைக் கட்­ட­மைப்­பது தான். ஆனால் என்­னு­டைய இந்த அர­சாங்­கம் கம்­யூ­னிச சமு­தா­யத்­தைக் கட்­ட­மைப்­ப­தற்­கா­கப் பணி­யாற்­ற­வில்லை. மத்­தி­யில் ஆளும் காங்­கி­ர­சின்கொள்­கை­க­ளில் முற்­போக்­கான அம்­சங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நாங்­கள் முயற்சி செய்­கி­றோம். கட்­சி­யின் திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வதுஇய­லாது” என்று சொன்­ன­வர் யார் தெரி­யுமா? கேரள முத­ல­மைச்­சர் ஈ.எம்.எஸ். நம்­பூ­தி­ரி­பாத். ‘பெரு­மு­த­லா­ளி­க­ளுக்கு எதி­ராக நாங்­கள் முழக்­க­மிட்ட காலத்­தில், கேர­ளா­வில் தொழில் தொடங்­கு­வ­தற்கு பிர்­லா­வைத் தான் அழைத்து வந்­தார் ஈ.எம்.எஸ்.’ என்று தனது உரை­யில் குறிப்­பி­டு­கி­றார் மார்க்­சிஸ்ட் அமைச்­சர் பி.ராஜீவ். இந்­தக் கட்­டு­ரை­க­ளை­யும் தொகுத்து ‘பாரதி புத்­த­கா­ல­யம்’ தான் வெளி­யிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘காவி மய­மா­கும் சிவப்பு’ - என்று 
‘தின­மணி’ மகிழ்ந்து அப்­போதே 
தலை­யங்­கம் தீட்­டி­ய­தை­யும் மறக்க முடி­யாது. எனவே நவ தாரா­ள­ம­யம் போன்ற வார்த்­தை­களை வைத்­துக் கொண்டு கொம்பு சுற்­று­வதை 
சண்­மு­கம் போன்­ற­வர்­கள் குறைத்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தங்­க­ளது சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல் நிலைப்­பா­டு­க­ளுக்கு தத்­து­வார்த்த முலாம் பூசு­வ­தைக் குறைத்­துக் கொள்ள வேண்­டும். செய­லும் செயல் தந்­தி­ர­மும் அற்ற நிலைப்­பா­டு­க­ளுக்­காக ரத்­தம் கக்­கும் வகை­யில் பேசு­வ­தை­யும் குறைத்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="13">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>