<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,957,1073" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 26 2026 03:44:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260626T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="26062026-MDU-05" position.sequence="05" ex-ref="26062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">26.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">நம்முடைய தலைவர் வழியில் நிற்போம்! தலைவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஒன்றிய – மாநில அரசுகளைக் கண்டித்து</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">தமிழ்நாட்டின் சிறைகள் நிரம்பும் அளவுக்குப் போராட்டம் நடத்த சித்தமாக இருப்போம்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">மாணவர்களின் உயிரைக் காவு கேட்கும் ‘நீட்’ தேர்வைக் கண்டித்து – மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து – கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. சூளுரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup616824_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup589214_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="rasanewph_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூன். 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்­னை­யில் – ஆளு­நர் மாளிகை முன்பு – கழக மாண­வ­ர­ணி­யின் 
மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தைத் தொடங்கி வைத்து கழக துணைப் பொதுச் செய­லா­ளர் ஆ.இராசா எம்.பி., பேசு­கை­யில் “நம்முடைய தலைவர் வழியில் நிற்போம்! தலைவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஒன்றிய – மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சிறைகள் நிரம்பும் அளவுக்குப் போராட்டம் நடத்த சித்தமாக இருப்போம்!” என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இக்­கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் 
ஆ.இராசா எம்.பி. பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் ஒரு புதிய ஆட்சி வந்­த­தற்­குப் பிறகு, ஒன்­றி­யத்­தில் இருக்­கும் ஆட்­சி­யில் நடை­பெ­றும் அக்­கி­ர­மங்­களை, குறிப்­பா­கத் தமிழ் இனத்­திற்கு, தமிழ் மொழிக்கு, எதிர்­கா­லத் தமிழ்ச் சமு­தா­யத்­திற்­குச் செய்து கொண்­டி­ருக்­கும் தீங்­கைக் கண்­டிப்­ப­தற்கு யோக்­கி­யதை இல்­லாத ஒரு அர­சாங்­கம் இங்கே இருக்­கி­றது. இது பொம்மை அர­சாங்­கம்­தானே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சமஸ்­கி­ரு­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய டி.கே. சிவக்­கு­மார் கர்­நா­ட­கத்­திலே முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­வு­டன், “நாங்­கள் மேக­தாது அணை­யைக் கட்­டு­வோம்; இப்­போது அங்கே ஸ்டாலின் இல்லை, அத­னால் கட்­டு­வோம்” என்று சொன்­னாரே, அப்­ப­டிப்­பட்ட துணிச்­ச­லோடு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யிலே இல்லை என்­ப­தற்­கா­கத் தொடர்ந்து ‘நீட்’ என்ற தேர்வை இந்த ஆண்­டும் ஒத்­தி­வைத்து மீண்­டும் நடத்த இருக்­கி­றது ஒன்­றிய அரசு. சி.பி.எஸ்.இ. என்று சொல்­லக்­கூ­டிய ஒன்­றிய அர­சாங்­கத்­தின் பள்­ளி­க­ளில் இப்­போது சமஸ்­கி­ரு­தத்­தை­யும் சேர்க்­கி­றார்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் இதைக் கண்­டிக்க வேண்­டும் என்­ப­தற்­காக இந்த ஆர்ப்­பாட்­டம் நடைபெறுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே...ஒரு நிமி­டம் எண்­ணிப் பாருங்­கள். “எங்­க­ளுக்கு அர­சி­யல் எதிரி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்; கொள்கை எதிரி பா.ஜ.க.” என்று சொன்­னார் இன்­றைக்கு இருக்­கும் முத­ல­மைச்­சர். “அது பாசி­சம் என்­றால் இது பாயா­சமா?” என்று கேட்­டு­விட்டு ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வெட்­க­மா­க­யில்­லையா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்... தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக ஆகி­விட்­டீர்­கள், எப்­படி ஆனீர்­கள்? இப்­போது விளக்­கம் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். “எங்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட, எங்­கள்  கூட்­ட­ணி­ யிலே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அனுப்பி வைத்­தோம், ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தீர்­கள்” என்று சொன்­னார்­கள். அதற்கு அவர், “நாங்­கள் அவர்­களை அமைச்­சர்­க­ளாக ஆக்கி இருக்­கி­றோம்” என்று பதில் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அமைச்­சர்­க­ளாக ஆக்­கு­வ­தற்கு உங்­க­ளுக்­கும் வெட்­க­மில்லை; அமைச்­சர் பொறுப்பை ஏற்­றி­ருக்­கும் அந்­தக் கட்­சி­க­ளுக்­கும் வெட்­க­மில்லை. அர­சி­ய­லில் வெட்­க­மில்­லாத இரண்டு பேர் சேர்ந்து கொண்டு “நாங்­கள் ஆட்­சியை நடத்­து­கி­றோம்” என்­றால், நாங்­கள் ஏன் வருத்­தப்­பட வேண்­டும்! முத­ல­மைச்­சர் அந்த ஸ்கிரிப்ட்டை மட்­டும் பார்க்­கா­மல் படிக்­கி­றார். நேற்று இரவு முழு­வ­தும் ஒத்­திகை; மற்­றதை எல்­லாம் பார்த்­துப் படிக்­கி­றார். சரி­யாக நம்­மைத் திட்­டும்­போது மட்­டும், இரவு முழு­வ­தும் ஒத்­திகை. எனக்­குக் கிடைத்த தக­வல், நிலைக்­கண்­ணா­டிக்கு முன்­னால் நின்று பார்த்து, மூன்று முறை, நான்கு முறை மனப்­பா­டம் செய்து, என்­ன­வெல்­லாம் சொல்­ல­லாம் என்று...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்... நாங்­கள்­தான் எங்­கள் கூட்­ட­ணி­யி­லி­ருந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­தோம். ஒரு தேர்­தல் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக உங்­க­ளுக்கு அனுப்பி வைத்­தோம். ஆனால், அதற்­குப் பிறகு “அவர்­க­ளுக்கு அமைச்­சர் பொறுப்பு கொடுத்­தி­ருக்­கி­றேன் நான்” என்று மார்­தட்­டிக் கொள்­கி­றீர்­களே, இப்­ப­டிச் சொல்­லு­வ­தற்கு ஜன­நா­ய­கத்­தில் உங்­க­ளுக்கு வெட்­க­மாக இல்­லையா? போன­வர்­க­ளுக்­குத்­தான் வெட்­க­மில்லை என்­றால், உங்­க­ளுக்­குமா வெட்­க­மில்லை? இப்­படி வெட்­கங்­கெட்ட ஒரு ஆட்சி இங்கே நடை­பெ­று­கிற கார­ணத்­தி­னால்­தான் மோடிக்கு இந்­தத் தைரி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உங்­க­ளைக் கேட்­கி­றேன், “பாசி­சம், பாயா­சம்?” என்று சொன்­னீர்­களே... நாங்­கள் பாசி­சத்தை எதிர்ப்­ப­தற்கு வெறும் மூன்று மாவட்­டங்­க­ளில் இருந்து 5000 மாண­வர்­கள் திரண்­டி­ ருக்­கி­றார்­கள். பாசி­சத்தை நாங்­கள் எதிர்க்­கி­றோம். சட்­ட­மன்­றம் இரண்டு முறை கூடி­விட்­டது; ஒரே ஒரு தீர்­மா­னம் போட முடிந்­ததா? ஆளு­நர் உரை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­களே, “நாங்­கள் மொழித் திரிப்பை ஒப்­புக்­கொள்ள மாட்­டோம், இந்­தித் திணிப்பை ஒப்­புக்­கொள்ள மாட்­டோம், சமஸ்­கி­ரு­தத்தை ஒப்­புக்­கொள்ள மாட்­டோம்” என்று சொன்­னீர்­களே... இந்த அர­சாங்­கத்தை எதிர்த்து சட்­ட­மன்­றத்­தில், “இந்த சி.பி.எஸ்.இ. பள்­ளிக்­கூ­டப் பாடத்­திட்­டத்தை நாங்­கள் தமிழ்­நாட்­டில் ஒப்­புக்­கொள்ள மாட்­டோம்” என்று சொல்­லும் யோக்­கி­யதை இந்த முத­ல­மைச்­ச­ருக்கு உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முதல்­வ­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தைரி­யம் உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கேட்­டால், ‘ரீல்­டை­லாக்’. “ஸ்டாலின் சார்”! யார் அந்த ஸ்டாலின் சார்? மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அர­சி­யல் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், அர­சி­யல் சட்­டத்­தைச் சொல்லி, “முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான் முத­ல­மைச்­ச­ ரா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்டு அர­சி­யல் சட்­டத்­தில் சொல்­லப்­ப­டும் கட­மை­களை நிறை­வேற்­று­வேன்” என்று சொன்ன முத­ல­மைச்­சர், அதே அர­சி­யல் சட்­டத்­தில் சத்­தி­யப்­பி­ர­மா­ணம் எடுத்­துக் கொண்­டி­ருக்­கும் பிர­த­மர் அமைச்­ச­ரவை சொல்­லும் எந்­தத் திட்­ட­மாக இருந்­தா­லும், அது எங்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை என்­றால், அது EWS-ஆ? அது வந்தே மாத­ரமா? மும்­மொ­ழிக் கொள்­கையா? நீட்-ஆ? “எங்­க­ளின் இறை­யாண்மை வேறு; ஒரே நாட்­டில் இருக்­கி­றோம், ஒரே அர­சி­யல் சட்­டம்; ஆனால் நாங்­கள் டெல்­லிக்கு ‘Out of control’ என்று சொல்­லும் ஒரு மாம­னி­தன்­தான் ஸ்டாலின் சார். அந்த ஸ்டாலின் சாரைச் சொல்­லி­விட்டு, இன்­றைக்கு ஒரே ஒரு வார்த்தை டெல்­லி­யைப் பற்­றிக் கேட்­ப­தற்கு இந்த முத­ல­மைச்­ச­ருக்­குத் தைரி­யம் உண்டா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தன்­னு­டைய கொள்­கையை விட்­டு­வி­ட­ வில்லை. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எது? இன்­றைக்­குச் சொல்­லு­கி­றார்­களே... “நீங்­கள் போய் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றீர்­களே”. தந்தை பெரி­யார் எப்­ப­டிப்­பட்ட கூட்­டணி அமைத்­தார் தெரி­யுமா? இந்­தத் தமி­ழுக்­காக 1937-இல் தொடங்­கப்­பட்­டது இந்த இயக்­கம். மறை­மலை அடி­கள் தூய சைவம் பேசி­ய­வர்; “தென்­னா­டு­டைய சிவனே போற்றி, எந்­நாட்­ட­வர்க்­கும் இறைவா” என்று தினந்­தோ­றும் பூசித்­த­வர். கா.சு. பிள்ளை யார் என்று தெரி­யுமா? முதன்­மு­த­லில் தமி­ழில் Non-Brahmin- இல் எம்.எல் முதல் ஆள். அவர் பெரி­யா­ருக்கு எதிர்த்­த­ரப்­பில் இருந்­தார். இப்­ப­டி­யெல்­லாம் இருந்தசைவர்­களை அழைத்­துக் கொண்­டு­தான், “நீங்­கள் சைவம் பேசு­கி­றீர்­கள்; நான் பகுத்­த­றிவு பேசு­கி­றேன்; ஆனால் நம் இரு­வ­ருக்­கும் தாய்­மொழி தமிழ். இந்­தத் தமி­ழைக் காப்­பாற்­று­வோம்” என்று1937-களில் துவங்­கப்­பட்ட 
இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சோபா செட் டப்­பா­வுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வர­லாறு தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தப் பாரம்­ப­ரி­யத்­தில் வந்த நாங்­கள், அண்­ணா­வால், கலை­ஞ­ரால், பெரி­யா­ரால், அதற்­குப் பிறகு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்ற மாம­னி­த­ருக்­குப் பின்­னால் நின்று கொண்டு, நாங்­கள் மொழிக்­கா­கப் போரா­டு­கி­றோம். முத­ல­மைச்­சர் அவர்­களே, இப்­ப­டிப் பேசு­கிற யோக்­கி­யதை, உங்­க­ளுக்கு அல்ல; உங்­க­ளி­டத்­தில் இருக்­கும் எந்த சோபா செட் டப்­பா­விற்­கா­வது இருக்­கி­றதா? இந்த வர­லாறு தெரி­யுமா? தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் பாசி­சத்தை எதிர்ப்­பது உண்­மை­யாக இருந்­தால், பாசாங்கு செய்­யா­மல், நடிக்­கா­மல், கேம­ரா­வுக்கு முன் நிற்­ப­தாக எண்­ணிக்­கொள்­ளா­மல், தமிழ்­நாட்­டின் உணர்­வு­க­ளைப் பிர­தி­ப­லிக்க வேண்­டு­மா­னால், உட­ன­டி­யா­கச் சட்­ட­மன்­றத்­தைக் கூட்டி நீங்­கள் தீர்­மா­னம் இயற்­றத் தயாரா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சிறை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிரப்­பு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோடிக்கு வரு­கி­றேன்... “தமிழ்­நாட்­டில் நீட் தேர்வை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம்” என்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் தீர்­மா­னம் போடு­கி­றது. நாடா­ளு­மன்­றம் “நீட் தேர்வு வேண்­டும்” என்று தீர்­மா­னம் போடு­கி­றது. 140 கோடி மக்­கள் இருக்­கும் நாடா­ளு­மன்­றத்­தில் எதைக் கொண்டு வரு­கி­றார்­களோ, அதை “8 கோடி மக்­கள் வாழும் நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம்” என்று சொல்­லும் ஆற்­றல் தமிழ்­நாட்­டுக்கு மட்­டும்­தான் உண்டு! இந்­தி­யா­வில் வேறு எந்த மாநி­லத்­துக்­கும் இல்லை. அதற்­குக்­கா­ர­ணம் முத்­து­ வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்ற மாம­னி­தர். இன்­றைக்கு அப்­ப­டிப்­பட்ட நிலையை உங்­க­ளால் எடுக்க 
முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, இன்­றைக்­குச் சமஸ்­கி­ரு­தத் திணிப்பு. ஏன் சமஸ்­கி­ரு­தத்தை எதிர்க்­கி­றோம்? ஆரி­யம், திரா­வி­டம் என்று பேசு­கி­றார்­களே... இந்­தி­யா­வில் இரண்டே இரண்டு பண்­பா­டு­தான்.. சமஸ்­கி­ரு­தத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு விந்­திய மலைக்கு அப்­பால் இருக்­கிற வட­மா­நி­லங்­கள்; சமஸ்­கி­ரு­தத்தை ஏற்­றுக்­கொள்­ளா­மல் தமி­ழைக் கொண்­டி­ருக்­கும் கன்­ன­ட­மும், களி­தெ­லுங்­கும், கவின்­ம­லை­யா­ள­மும், “தாயே தமிழே உதி­ரத்தே குதித்­தெ­ழுந்தே” என்று சொல்­கி­றோமே, இந்த மாநி­லங்­கள் சமஸ்­கி­ரு­தத்தை ஏற்­றுக்­கொள்­ளாது. சமஸ்­கி­ரு­தம் நான்கு வர்­ணங்­க­ளைச் சொல்­லு­கி­றது; தமிழ் “பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்” என்று சொல்­கி­றது. சமஸ்­கி­ரு­தம், பெண்ணை படிக்­காதே என்று சொல்­கி­றது; தமிழ், அந்­தக்­கா­லத்­தி­லேயே ‘சாதி இரண்­டொ­ழிய வேறில்லை’, பெண்­கள் படிக்க வேண்­டும் என்று சொன்ன மொழி. எனவே, மொழி­யால், கலாச்­சா­ரத்­தால், பண்­பாட்­டால், நிலப்­ப­ரப்­பி­ய­ லால் நாங்­கள் திரா­வி­டர்­கள் என்று இப்­போது அல்ல, அப்­போதே நாங்­கள் நிரூ­பித்­தோம்; இன்­றைக்­கும் அது தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் மோடி அவர்­க­ளுக்­குச் சொல்­கி­றேன்...திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிப் பொறுப்­பில் இல்லை என்று டி.கே. சிவ­கு­மா­ரைப் போன்று நீங்­க­ளும் கொக்­க­ரித்­தால், எங்­கள் தலை­வ­ரின் அனு­ம­தி­யைப் பெற்று விரை­வில் மாண­வர் அணி­யும், இளை­ஞர் அணி­யும் தமிழ்­நாட்­டின் சிறை­களை ஒட்­டு­மொத்­த­மாக நிரப்ப முடி­யும் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளுங்­கட்­சி­யில் இருக்­கி­ற­போது எங்­க­ளுக்கு இருக்­கிற அடக்­கம், ஆளுங்­கட்­சி­யாக இருக்­கி­ற­போது எங்­க­ளுக்கு இருக்­கின்ற அமைதி, எதிர்க்­காட்­சி­யாக இருக்­கி­ற­போது அந்­தச் சகிப்­புத்­தன்மை, அந்த அடக்­கம், அமைதி இருக்­குமா என்று எங்­க­ளால் சொல்ல முடி­யாது. தலை­வர் எங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்; ஆனால் இந்த வய­தில் கூடத் தியா­கம் செய்­வ­தற்கு முன்­வ­ரு­கி­றோம் என்­றால், என்­றைக்­கும் இந்த இனத்­தை­யும் மொழி­யை­யும் காப்­பாற்ற வேண்­டும் என்ற உணர்வு எங்­க­ளி­டத்­தில் 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">என்ன கிழிக்­கப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">போகி­றாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, இன்­றைக்­குத் தொடங்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் ஆர்ப்­பாட்­டம், மோடி அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல; அந்த மோடி அர­சாங்­கத்­திற்கு மௌனம் காத்து முட்­டுக் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றதே இந்­தச் சோபா செட் அர­சாங்­கத்­திற்­கும் சேர்த்­து­தான். முத­ல­மைச்­ச­ருக்­குத் தைரி­யம் இருந்­தால், முத­ல­மைச்­ச­ருக்கு உள்­ள­ப­டியே மொழி­யின் மீதும், இனத்­தின் மீதும், தமிழ்­நாட்­டின் மீதும் அக்­கறை இருந்­தால், எப்­போது பார்த்­தா­லும் பழைய ஆட்­சி­யைக்­குறை சொல்­லிக்­கொண்டே, குறை சொல்­லித் தானே ஆட்­சிக்கு வந்­தீர்­கள்; வந்த பிற்­பாடு “நீ என்ன கிழிக்­கப் போகி­றாய்” என்று சொல்லுங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு அர­சி­யல் கட்சி ஆட்சி மாற்­றத்­திற்கு வரு­கி­ற­போது தேர்­தல் நேரத்­தில்குறை சொல்­வார்­கள். உண்­மையா, பொய்யா? அதெல்­லாம் பிற­கு­தான். இந்­திரா காந்தி இறந்­த­வு­ட­னும்­தான் எங்­க­ளுக்கு ஓட்­டுப் போட­வில்லை; ராஜீவ் காந்தி இறந்­த­வு­ட­னும்­தான் எங்­க­ளுக்கு ஓட்­டுப் போட­வில்லை; எம்.ஜி.ஆர். மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும்­போ­தும் எங்­க­ளுக்கு ஓட்­டுப் போட­வில்லை. அதெல்­லாம் உணர்ச்சி வசப்­பட்­டுப் போட்­டார்­கள். ஆனால், அதற்­கா­கத் திரும்­ப­வும் இந்­தி­ரா­காந்­தி­யைச் சாக­டிப்­பீர்­களா? திரும்­ப­வும் எம்.ஜி.ஆரை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்ப வேண்­டுமா? லூசு­களா நீங்­க­ளெல்­லாம்?  உண்­மையா, பொய்யா என்று சட்­ட­மன்­றத்­தில் சொல்; ஆனால் வந்­த­தற்­குப் பிறகு, பாசி­சத்தை எதிர்த்து என்ன செய்­யப் போகி­றாய்? என்று சொல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் கொள்­கைத் தலை­வர்­க­ளாக தந்தை பெரி­யார், காம­ரா­ஜர், வேலு­நாச்­சி­யார் ஆகி­யோரை நீங்­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­களே... நான் சொல்­லட்­டுமா, எனக்­குச் சந்­தே­கம் இருக்­கி­றது. சாதியை ஒழிக்க அல்ல; தமிழை வளக்க அல்ல; இந்­தத் தலை­வர்­க­ளை­யெல்­லாம் சாதிக்­குள் அடக்க வேண்­டும் என்­ப­தற்­காக, அந்­தச் சாதி வாக்­கு­க­ளைப் பெற­லாம் என்­ப­தற்­காக இதெல்­லாம் செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­களா நீங்­கள் என்று கேட்க மாட்­டார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மிகப்­பெ­ரிய போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என­வே­தான் சொல்­லு­கி­றேன்... இந்த மண் திரா­விட மண், தமிழ் மண். பெரி­யா­ரும், அண்­ணா­வும், கலை­ஞ­ரும் பண்­ப­டுத்­திய இந்த மண்­ணில், இன்­றைக்­குக் கல்­லூ­ரி­யிலே படித்­துக் கொண்­டி­ருக்­கும், கல்­லூ­ரியை விட்­டுச் சற்றே வெளி வந்­தி­ருக்­கும் அன்­பிற்­கு­ரிய மாண­வக் கண்­ம­ணி­களே, இளை­ஞர்­களே! நம்­மு­டைய தலை­வர் வழி­யிலே நிற்­போம். தலை­வர் ஆணைக்­குக் கட்­டுப்­பட்டு விரை­வில் ஒன்­றிய அர­சாங்­கத்தை எதிர்த்து, மாநில அர­சாங்­கத்தை எதிர்த்து, தலை­வர் அனு­ம­தித்­தால் இதை­விட இன்­னும் பெரிய போராட்­டத்தை நாடு தழு­விய அள­வில், தேவைப்­பட்­டால் தமிழ்­நாட்­டின் சிறை­கள் முழு­வ­தும் நிரம்­பும் அள­வில், தலை­வ­ரு­டைய அனு­ம­தி­யைப் பெற்று நடத்­து­வ­தற்கு நாம் சித்­த­மாக இருக்க வேண்­டும் என்று சொல்லி, இந்த அரு­மை­யான ஏற்­பாட்­டைச் செய்­தி­ருக்­கும் அத்­தனை மாண­வர் அணி நிர்­வா­கி­க­ளை­யும், தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில், தலை­வ­ரின் சார்­பில் உங்­க­ளைப் பாராட்டி, வணங்கி, விடை­ பெற்று, இதை நான் தொடங்கி வைக் கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக துணைப் பொதுச் செய­லா­ளர் ஆ.ராசா எம்.பி. உரை­
யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>