<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,68,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 26 2026 23:25:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260627T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27062026-MDU-05" position.sequence="05" ex-ref="27062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">தொழில் முதலீடுகளுக்குத் தேவை நம்பகத் தன்மை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">இலக்கும் நோக்குமில்லாத நாயகத் தன்மையல்ல!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup618802_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரு குற்­றச்­சாட்டை முன்­வைப்­பது எளிது. ஆனால் அந்­தக் குற்­றச்­சாட்டை நிரூ­பிப்­ப­து­தான் நம்­ப­கத்­தன்­மைக்­கான சான்று. த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்­பேற்­றது முதல், முந்­தைய தி.மு.க. ஆட்சி குறித்து 
குற்­றச்­சாட்டு வைப்­ப­தி­லேயே முனைப்பு காட்­டு­கி­றது.  குறிப்­பாக, தனி­ந­பர்­கள் மீது மட்­டு­மல்ல; ஒரு மாநி­லத்­தின் வளர்ச்சி வர­லாற்­றின் மீது சுமத்­தப்­ப­டும் குற்­றச்­சாட்டு என்­றால், அதற்­கான ஆதா­ரங்­கள் இன்­னும் உறு­தி­யா­ன­தாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. அர­சின் தொழில்­துறை அமைச்­சர் கீர்த்­தனா,  தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரும் குற்றச் சாட்­டு­கள் அபத்­த­மா­க­வும், முதிர்ச்­சி­யற்று உள்­ள­தா­க­வும் கரு­து­கி­றேன்.  முந்­தைய திமுக ஆட்­சிக் காலத்­தில் ஊழல் மற்­றும் நிர்­வா­கத் தாம­தங்­கள் கார­ண­மாக 25 பெரிய முத­லீட்­டுத் திட்­டங்­கள் தமிழ்­நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளன, 3.3 லட்­சம் கோடி ரூபாய் கோடி ரூபாய் மதிப்­பி­லான முத­லீ­டு­க­ளும், 2.3 லட்­சம் வேலை­வாய்ப்­பு­க­ளும் பறி­போய்­விட்­ட­தா­க­வும் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தக் குற்­றச்­சாட்­டைக் கேட்­ட­வு­டன் எழும் கேள்­வி­கள் மிக­வும் எளி­மை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த 25 திட்­டங்­கள் எவை?   எந்த நிறு­வ­னங்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எவ்­வ­ளவு முத­லீடு?  எப்­போது தமிழ்­நாட்டை விட்டு வெளி­யே­றின?  ஏன் வெளி­யே­றின?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவற்­றின் அதி­கா­ரப்­பூர்வ அறி­விப்­பு­கள் எங்கே? எனக் கேள்­வி­கள் எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆவ­ணங்­கள் தர­வு­கள் இல்லை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழில்­துறை அமைச்­ச­ரின் வாயி­லி­ருந்து இத்­த­கைய குற்­றச்­சாட்டு வந்த பிற­கும், இது­வரை முழு­மை­யான பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. வெள்ளை அறிக்கை இல்லை.  ஊழல் கார­ண­மாக வெளி­யே­றி­னார்­கள் என்­பதை நிரூ­பிக்­கும் ஆவ­ணங்­க­ளும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் தொழில் முத­லீ­டு­கள் குறித்த பேச்சு  என்­பது தேர்­தல் மேடை பிரச்­சா­ரம் அல்ல. அது பல லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பொரு­ளா­தார நட­வ­டிக்கை.  மாநி­லத்­தின் வளர்ச்சி, வேலை­வாய்ப்பு சார்ந்த  நம்­பிக்கை உரு­வாக்­கம். அதில் சிறு­பிள்­ளைத் ­தன­மான அர­சி­யல் செய்­வது பெரும் இழப்­பு­களை கொண்டு வந்து சேர்க்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு நிறு­வ­னம் எந்த மாநி­லத்­தில் முத­லீடு செய்ய வேண்­டும் என்று முடிவு எடுக்­கும்­போது, நிலம், துறை­மு­கம், மின்­சா­ரம், தொழி­லா­ளர் திறன், விநி­யோ­கச் சங்­கிலி, சந்தை அணு­கல், வரிச்­ச­லுகை, உல­க­ளா­விய பொரு­ளா­தார நிலை உள்­ளிட்ட நூற்­றுக்­க­ணக்­கான கார­ணி­களை கணக்­கில் எடுத்­துக்­கொள்­கி­றது.  தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்ய ஒப்­பந்­தம் செய்த பின்­னர், வேறு மாநி­லத்­திற்கு மாறி­னால், அதற்­கான ஒரே கார­ணம் ஊழல் என்று மட்­டும் கூறி­விட முடி­யுமா?   அமைச்­சர் கீர்த்­தனா குறிப்­பிட்ட நிறு­வ­னங்­கள் ஏற்­கெ­னவே, அந்­தந்த மாநி­லங்­க­ளில் தொழில் முத­லீடு செய்­துள்ள நிலை­யில், அவர்­கள் தமிழ்­நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­னார்­கள் என்று எப்­ப­டிச் சொல்ல முடி­யும் ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது தொடர்­பாகஅந்த நிறு­வ­னங்­கள் ஏதும் விளக்­கங்­கள் அளித்­துள்­ள­னவா எனத் தேடி­னால் எது­வும் இல்லை. தவிர, அமைச்­சர் கீர்த்­த­னா­வும் எந்த விளக்­கங்­க­ளும் அளிக்­க­வில்லை.  இந்­தக் கேள்­வி­களை எதிர்க்­கட்­சி­கள் மட்­டு­மல்ல; தொழில்­துறை வட்­டா­ரங்­க­ளும் எழுப்­பு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு முத­லீடு அறி­விக்­கப்­ப­டு­வது, புரிந்­து­ணர்வு 
ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கு­வது, நிலம் ஒதுக்­கப்­ப­டு­வது, தொழிற்­சாலை கட்­டப்­ப­டு­வது, உற்­பத்தி தொடங்­கு­வது என பல ஆண்­டு­கள் எடுக்­கும்.  அப்­ப­டி­யும், கடந்த திமுக ஆட்சி காலத்­தில் பல தொழில் முத­லீ­டு­கள் ஓராண்டு காலத்­துக்­குள், இரண்டு ஆண்டு காலத்­துக்­குள் செயல்­பாட்­டுக்கு வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில் தோல் பொருட்­கள் 
அல்­லாத கால­ணிப் பூங்கா, ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னத்­துக் ­கான பணி­பு­ரி­யும் மக­ளிர் விடுதி ஆகி­யவை முன்­மா­தி­ரி­யான முத­லீட்டு முயற்­சி­கள்.   இன்­னும் ஏரா­ள­மான முத­லீட்­டுத் திட்­டங்­கள் மூலம் 12.6 லட்­சம் கோடி ரூபாய் முத­லீட்டு உறு­தி­மொ­ழி­களை பெற்­றுள்­ள­தாக  முன்­னாள் தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்­பிட்­டுள்­ளார். அதி­லி­ருந்து 50 
சத­வீ­தம் முத­லீட்­டுத் திட்­டங்­கள் நடை­மு­றைக்கு வந்­தி­ருந்­தா­லும் , அதும் பெரும் முயற்­சி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இலக்­கும் தொலை­நோக்­கும்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் வரவு செலவு இலக்கை 2030 ஆம் ஆண்­டுக்­குள் 1 லட்­சம் கோடி டால­ராக உயர்த்­து­வது என முந்­தைய திமுக அர­சின் இலக்­கிற்கு, இந்த தொழில் முத­லீட்­டுத் திட்­டங்­கள் பெரும் பக்­க­ப­ல­மாக இருந்­தவை.   முந்­தைய அர­சின் இலக்­கும், தொழில் வளர்ச்­சி­க­ளும்­தான் இந்­திய அள­வி­லான பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் தமிழ்­நாட்­டின் பங்­க­ளிப்­பாக 14 
சத­வீத பொரு­ளா­தா­ரத்தை எட்­டி­யது என­லாம். முந்­தைய இரண்டு ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி இரட்டைஇலக்­கத்­தைத் தொட்­டுள்­ளது. 2024- –25 ஆம் நிதி­யாண்­டில் 11.2 % , 2025-–26 ஆம் நிதி­யாண்­டில் 13.16 % சத­வீத பொரு­ளா­தார வளர்ச்சி கண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021 ஆம் ஆண்­டில் தமிழ்­நாட்­டில் திரா­விட மாடல் ஆட்சி உரு­வாக்­கத்­துக்கு முன்­பி­ருந்த புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை 2032 தான். ஆனால், 2026 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்­சி­யின் இறு­தி­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ’ஸ்டார்ட் அப்’ தொழில் முயற்­சி­க­ளின் எண்­ணிக்கை 14,700. 
இந்­திய அள­வில் மிகச் சிறப்­பான இடத்­தில் தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில் முயற்­சி­கள் உள்­ளன. ஆசிய 
அள­வில் சென்னை மிக முக்­கி­ய­மான மைய­மாக வளர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக திரு.விஜய் அவர்­கள், கடந்த சில நாட்­க­ளுக்கு முன்­னர் நிதி ஆயோக் கூட்­டத்­தில் வாசித்த அறிக்­கை­யி­லேயே, இந்த வளர்ச்­சியை பதிவு செய்­துள்­ளார்.  அதி­லும் குறிப்­பாக, அந்த புள்­ளி­வி­வ­ரங்­கள் அனைத்­தும் நிதி ஆயோக் வெளி­யிட்­ட­வை­தான் என்­பது முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தக­வல்­க­ளும், தர­வு­க­ளும் கண் முன்னே இருக்­கும் நிலை­யில், முந்­தைய ஆட்­சி­யின் முழு செயல்­மு­றை­யை­யும் புறக்­க­ணித்து, குற்­றம் சாட்­டு­வது 
அர­சி­யல் வச­தி­யாக இருக்­க­லாம்; ஆனால் அது பொருளாதார விளக்­க­மாக இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே இன்­னொரு கேள்­வி­யும் எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லீட்­டா­ளர்­கள் தமிழ்­நாட்டை விட்டு வெளி­யே­றி­ய­தற்கு ஊழல்­தான் கார­ணம் என்­றால், அந்த ஊழலை செய்­த­வர்­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்த அதி­காரி?  எந்த அமைச்­சர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்த நிறு­வ­னம் புகார் அளித்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறு­வ­னங்­க­ளி­டம் ’கமி­ஷன் கரப்­ஷன்’ நடந்­துள்­ளது என கண்­டு­பி­டிக்­கத் தெரிந்த அமைச்­ச­ருக்கு, கண்­டு­பி­டித்­ததை வெளிப்­ப­டுத்­து­வதை யார் 
தடுத்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆதா­ரங்­கள் இருந்­தால் வெளி­யி­டுங்­கள்.  
நிறு­வ­னங்­க­ளின் பெயர்­களை சொல்­லுங்­கள். வெள்ளை அறிக்கை வெளி­யி­டுங்­கள். ஊழல் நடந்­தி­ருந்­தால் குற்­ற­வா­ளி­களை கைது செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குப் பதி­லாக ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களை மட்­டும் மீண்­டும் மீண்­டும் கூறி­னால், அது தொழில்­துறை கொள்கை விவா­த­மாக அல்ல; அர­சி­யல் பிரச்­சா­ர­மாக மட்­டுமே பார்க்­கப்­ப­டும். ஆதா­ரங்­க­ளு­டன் கூறப்­ப­டும் குற்­றச்­சாட்டு வேறு; அர­சி­யல் மேடை­யில் வீசப்­ப­டும் குற்­றச்­சாட்டு வேறு. இரண்­டுக்­கும் மலை­ய­ளவு வித்­தி­யா­சங்­கள் உள்­ளதை தேர்­த­லுக்கு முன் த.வெ.க. அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்­கும், தேர்­த­லுக்கு பின்­னர் த.வெ.க. ஆட்­சி­யில் அறி­விக்­கப்­ப­டும் திட்­டங்­க­ளுமே சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆந்­திர முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு அவர்­க­ளின் மக­னும்,  ஆந்­திர மாநில தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் தொழில்த் துறை அமைச்­ச­ரான நாரா லோகேஷ், சமீ­பத்­தில் ஒரு நிகழ்ச்­சி­யில் பேசு­கை­யில்,   தமிழ்­நாட்­டில் முந்­தைய தி.மு.க. ஆட்சி, தொழில் முத­லீ­டு­க­ளைத் திரட்­டு­வ­தில் மிக­வும் நேர்­மை­யா­க­வும், தொழில்­மு­றை­யா­க­வும் செயல்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­ட­தைக் கவ­னிக்க வேண்­டும். எந்­த­வொரு நிறு­வ­ன­ மும் தி.மு.க. அரசு லஞ்­சம் கேட்­ட­தா­கத் தன்­னி­டம் கூறிய­ தில்லை என்­றும் அவர் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நீண்ட கால இலக்­கு­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு பெரிய தொழில் திட்­டம் அர­சி­யல் ஆட்­சி­மாற்­றத்­தால் மட்­டும் நிகழ்ந்துவிட முடி­யாது. அது தொலை­நோக்­கும் இலக்­கும் கொண்­டது. பல ஆண்­டு­கள் நீளும் செயல்­மு­றை­யும்­கூட. இது­தான் எதார்த்­த­மான உண்மை. ஆனால், ஆட்சி பொறுப்­புக்கு வந்த 30 நாட்­க­ளி­லேயே, புள்­ளி­வி­வ­ரங்­களை மறைத்து ’முந்­தைய அர­சின் தவ­று­கள்’ என்று கூறும் அணு­கு­முறை எவ்­வ­ளவு நம்­ப­க­மா­னது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யில், இன்று ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் மறந்­து­வி­டக் கூடாத ஒரு விஷ­யம் இருக்­கி­றது.  அவர்­களே இன்று பெரு­மை­யாக அறி­விக்­கும் சில முத­லீ­டு­கள், முந்­தைய ஆட்­சிக் காலத்­தில் தொடங்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளின் தொடர்ச்­சி­தான் என்று தொழில்­துறை வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய தொழில்­துறை மாநி­லங்­க­ளில் ஒன்று. ஆட்­டோ­மொ­பைல், மின்­னணு உற்­பத்தி, புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல், ஏற்­று­மதி, தக­வல் தொழில்­நுட்­பம் என பல துறை­க­ளில் மாநி­லம் கட்­டி­யெ­ழுப்­பிய அடித்­த­ளம் ஒரு நாளில் 
உரு­வா­ன­தல்ல. பல பத்­தாண்­டு­க­ளாக ஆட்­சி­யில் இருந்த திரா­வி­டக் கட்­சி­கள் உரு­வாக்­கிய கட்­ட­மைப்­பின் விளை­வு­கள். குறிப்­பாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தொலை­நோக்­கும், இலக்­கும் தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சி­யில் பின்­னிப் பிணைந்­துள்­ளது.   அந்த வர­லாற்றை மறைத்து வைத்து, “25 முத­லீ­டு­கள் போய்­விட்­டன” என்று கூறு­வது அர­சி­யல் வன்­ம­மாக இருக்­க­லாம். ஆனால் தமிழ்­நாட்­டின் தொழில்­துறை வளர்ச்சி பற்­றிய விவா­த­மாக இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏனென்­றால் தொழில்­துறை முத­லீ­டு­கள் உணர்ச்­சி­க­ர­மான ’ரீல்ஸ்’­­க­ளால் வரு­வ­தில்லை. நாயக பிம்­பத்­தால் ஆட்­சியை பிடித்­தி­ருக்­க­லாம். ஆனால், தொழில் முத­லீ­டு­கள் வரு­வ­தற்கு தேவை நம்­ப­கத்­தன்மை.  அந்த நம்­ப­கத் தன்­மையை உரு­வாக்­கு­வது அர­சின் கடமை; முந்­தைய தி.மு.க. அரசு அதை சிறப்­பா­கச் செய்­தது.  இந்த அர­சி­டம்  நம்­ப­கத்­தன்மை இல்லை. முன்­னுக்­குப் பின் முர­ணான குற்­றச்­சாட்டு­ களை மட்­டும் முன்­வைக்­கி­றது. தமிழ்­நாட்­டின் இரட்டை இலக்க பொரு­ளா­தார வளர்ச்­சியை தக்க வைக்க வேண்­டு­மெ­னில், இலக்­கும் தொலை­நோக்­கும் வேண்­டும். இல்­லை­யெ­னில், பொரு­ளா­தா­ரம் பெருத்­துக் கொண்­டி­ருக்­கும் வயிறு ; புள்­ளி ­வி­வரங்­கள் காட்­டிக் கொடுத்து விடும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>