<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,64,957,1032" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 03:54:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260629T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29062026-VLR-05" position.sequence="05" ex-ref="29062026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தேர்தல் களத்தை தனியே சந்திப்பதுதான் வெற்றிக்கான வழித்தடமாக அமையும்!!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup728848_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ழகத்தலைவர் தளபதியார் அவர்கள் சமீபத்தில் திருவாரூரில் முன்னாள் அமைச்சர் கழகத்தின் செயல்வீரர் உ.மதிவாணன் அவர்கள் இல்லத்திருமண நிகழ்ச்சியில் உரையாற்றும்பொழுது, இன்றைய அரசியல் மாறுபட்ட சூழ்நிலையில் கழகச் செயல்வீரர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தல் குறித்த ஒருகருத்தை  பரிசீலிப்பதாக அறிவித்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களத்தில் எந்த வடிவத்திலும் அரசியல் கட்சிகளின் கூட்டணி தேவையில்லை என்ற கழகத்தவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்தும் நோக்கில் அதற்கான காரணங்களையும், காலமாற்றத்தின் தாக்கங்களையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் இந்தக் கட்டுரையின் மூலம் விளக்கிட விரும்புகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், இந்திய அரசியல் சட்டம்  1949 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று அமலுக்கு வந்தது. அந்த அடிப்படையில் 1952-1957-1962 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றது. பின்னர் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திராக் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி அமைந்தது. இந்தத் தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரப்போக்கை தடுக்கும் கட்டாய சூழ்நிலையில் உருவாக்கப் பட்டதுதான் தமிழகத்தில் உதயமான முதல் தேர்தல் கூட்டணி யாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசியல் தேர்தல் கூட்டணி உருவாவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் எதேச்சதிகார மக்கள் விரோத நடவடிக் கைகள்தான் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கிறது. மேலும், அன்றைய அரசியல் காலக்கட்டத்தில் நாடு விடுதலைப் பெற்றப்பின்னர், காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி திசைமாறிச் சென்றதாலும், தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், “இந்தி” மொழியை ஆட்சிமொழியாக திணிக்க முற்பட்டமையாலும், தேசியமையக் கொள்கையில், காங்கிரஸ் கட்சி பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருந்தமையாலும், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோல்வியடையச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு முன்னர் 1952 - 1957 - 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பான வாக்குகள் சிதறிக் 
கிடந்தமையால், காங்கிரஸ் கட்சியை அந்த தேர்தல்களில் தோற்கடிக்க இயலவில்லை என்பதை கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில், அறிந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை ஒன்றுதிரட்டும் வகையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல்கூட்டணி அமைத்தார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்றையக் காலகட்டத்தில் மக்கள் விரோத அரசாக மாறிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணியின் முக்கியமான நோக்கமாகும். மக்கள் நலனுக்கும்,  மாநில உரிமைகளுக்கும், இந்தி திணிப்பிற்கும்  எதிரான   காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டியது தலையாய தேசிய கடமை என்ற அடிப்படையில்தான் அன்றைய தினம் தேர்தல் கூட்டணி உபயமானது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனைத் தொடர்ந்து 1971இல் பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, இந்திய ஒன்றியத்தின் புரட்சிகரமான “மன்னர்மானிய ஒழிப்பு”, “வங்கிகள் தேசியமையம்” என்ற புரட்சிகரமான சமதர்மக் கோட்பாட்டை ஆதரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில், 1972 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய சட்டமன்றத்திற்கான தேர்தலை, முன்கூட்டி எதிர்கொள்ளும் வகையில் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு 1971 ஆம் ஆண்டு திருமதி.இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 184 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்றைய காலகட்டத்தில் புரட்சிகரமான “தேசியமையக் கொள்கையும்”, “மன்னர்மானிய ஒழிப்பும்” தேர்தல் கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனைத் தொடர்ந்து 1977இல் “மிசா” காலக்கொடுமைகளை எதிர்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தேர்தல்களத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தத் தேர்தலில் தேர்தல் கூட்டணி என்பது ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. எம்.ஜி.ஆரின்  கவர்ச்சி அரசியல், பிற அரசியல் சக்திகளை புறந்தள்ளிவிட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல்கால கூட்டணி என்பது வாடிக்கையான ஓர் அரசியல் நடவடிக்கையாக அரசியல் தேர்தல்களத்தில் மாற்றப்பட்டுவிட்டது. குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் (Common Minimum Programmes) அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணிகளின் கொள்கைவரையறை படிப்படியாக கரைந்துபோய்விட்டது. இத்தகைய அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னர், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்ற நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. எனவே கொள்கை அடிப்படையில், குறைந்தபட்ச பொதுத்திட்டங்களின் அடிப்படையிலும், கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் கூட்டணி என்பது முற்றிலும் மறைந்துபோன நிலையில், மக்களுடைய மனோபாவம் பிரதான அரசியல் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் திட்டங்கள் ஆகியவற்றை நோக்கித்தான் பொது மக்களின் கவனம் ஈர்க்கப் படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த அடிப்படையில்தான் வாக்காளர்கள் தங்கள் முடிவுகளை மேற்கொள் கின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் தேர்தல் கூட்டணி என்கின்ற அரசியல் ஏற்பாட்டை தவிர்த்துவிட்டு சுதந்திரமாக இயக்கம் ஏற்றுக்கொண்டுள்ள சித்தாந்தங்களின் அடிப்படையில், திட்டங்களை மக்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும் முன்வைத்து அவற்றை பிரச்சாரங்களின் மூலமாகவும், நவீன அரசியல் சாதனங்கள் மூலமாகவும் மக்களுக்கு செய்திகளைக் கொண்டு சேர்த்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, இன்றைய அறிவியல் சாதனங்கள் உச்சம் தொட்ட நிலையில் எந்த அரசியல் கருத்துக்களானாலும், மக்களைக்கூட்டி, அவர்களுக்கு முன்னால் கொள்கைக்கோட்பாட்டு திட்டங்களையும் விளக்குவதைவிட நவீன அரசியல் சாதனங்களான “வாட்ஸ் ஆப்”, “இன்ஸ்டாகிராம்”, “ரீல்ஸ்”, “வீடியோ” ஆகிய அறிவியல் தொடர்பு சாதனங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்து விடலாம் என்பதே இன்றைய எதார்த்தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் உச்சம் தொட்ட வாழ்வியல் களத்தில் தேர்தல் காலங்களில் கூட்டணி வைத்து தான் கொள்கை பிரச்சாரம் செய்து மக்களின் மனங்களை வென்றிட வேண்டும் என்ற அவசியமோ, நிர்ப்பந்தமோ இல்லை மாறாக அரசியல் கூட்டணியோ அல்லது மக்களை ஓரிடத்தில் கூட்டுவது என்கின்ற முறைகளையும் தாண்டி ஒவ்வொரு இல்லங்களில் உள்ள ஒவ்வொரு தனி நபரையும் இந்த அறிவியல் சாதனங்கள் மூலம் நேரடியாக சந்திப்பதற்கான அறிவியல் சாதனங்கள் மூலமான நவீன ஏற்பாட்டை விரைந்து மேற்கொண்டு கூட்டணி அரசியலை புறந்தள்ளிவிட்டு அறிவியல் சாதனங்கள் மூலம் ஒவ்வொரு இல்லத்தில் உள்ளவர்களின் உள்ளத்தை தன் பக்கம் திருப்புவதன் மூலம் கூட்டணி இல்லாத, கொள்கையை அடித்தளமாக கொண்ட இந்த மாற்றங்களை  உருவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்றே வெற்றியினை ஈட்ட முடியும் என்பதே  திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் வேட்கையும், விருப்பமுமாகும்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>