<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,75,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 14:38:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30062026-CBE-03" position.sequence="03" ex-ref="30062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்; தயாராய் இருப்போம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை... முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup730993_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="1000803552_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ருக்கு ஒரு ‘சேர்’ போட்டு உட்­கார வைத்­தோம். ஆனால், அந்­தச் சேரை எடுத்­து­விட்டு, தரை­யில் உட்­கார்ந்து அந்த நாட­கத்­தைப் பார்த்­தார். ஏன் என்­றால், பின்­னால் உட்­கார்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­குத் தெரி­யாது என்று சேரை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டு, தரை­யில் உட்­கார்ந்து, மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள் அந்த நாட­கத்­தைப் பார்த்­தார் என்­பது 
வர­லாறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இந்த இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நான் உங்­களை வர­வேற்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அன்று நான் ஒரு சாதா­ர­ணத் தொண்­ட­னாக – இளை­ஞ­னாக இருந்­தேன்; இன்று அதே இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக இருந்து, உங்­கள் அனை­வ­ரை­யும் வருக வருக வருக என வர­வேற்­கும் வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் பென்­ஜ­மின் அவர்­களை, நீண்ட கால­மாக நான் கவ­னித்து வரு­கி­றேன். அவ­ரு­டைய உழைப்­பைப் பற்றி எனக்கு நன்­றா­கத்தெரி­யும். அவர் அ.தி.மு.க.வில் இணைந்துபல ஆண்­டு­கள் உண்­மை­யாக உழைத்­த­வர்; ஓயா­மல் உழைத்­த­வர். எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் அஞ்­சா­மல் உழைத்­த­வர்; வேகத்­தோ­டும், விவே­கத்­தோ­டும் உழைத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வில்­லி­வாக்­கம் ஒன்­றி­யச் செய­லா­ள­ராக, சென்னை 145–ஆவது வார்­டின் மாமன்ற உறுப்­பி­ன­ராக, மாந­க­ராட்­சி­யின் துணை மேய­ரா­கப் படிப்­ப­டி­யாக உயர்ந்து, சென்னை மாந­க­ரம் முழு­வ­தும் அறி­மு­க­மா­ன­வர். 2016–ஆம் ஆண்டு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மது­ர­வா­யல் தொகு­தி­யில் வென்று, ஊர­கத் தொழில் துறை அமைச்­ச­ரா­கச் செயல்­பட்­டி­ருக்­கிறார். அவர் அமைச்­ச­ராக இருந்­த­போது, நான் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தேன். நாங்­கள் கேள்­வி­கள் கேட்­கிற நேரத்­தில், பல அமைச்­சர்­கள் பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், பென்­ஜ­மின் அவர்­கள் பதில் சொல்­கி­றார் என்று சொன்­னால், நாங்­கள் கொஞ்­சம் உஷா­ராக இருப்­போம். ஏன் என்­றால், புள்ளி விவ­ரத்­தோடு, ஆதா­ரங்­க­ளோடு எதை­யும் ஆணித்­த­ர­மாக அழுத்­த­மாக எடுத்­துச் சொல்­லக் கூடி­ய­வர். அந்த இளை­ஞர் 
சட்­ட­மன்­றத்­தில் அமைச்­ச­ராக இருந்து பதில் சொல்­வதை நாங்­கள் ரசித்­த­துண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டிப்­பட்ட உழைப்­பிற்­கும் அனு­ப­வத்­திற்­கும் சொந்­தக்­கா­ர­ரான நம்­மு­டைய அரு­மைச் சகோ­த­ரர் பென்­ஜ­மின் அவர்­கள் கழ­கத்தை நோக்கி வந்­தி­ருப்­ப­தில், உங்­களை எல்­லாம் விட நான் அதிக 
அள­வில் மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பென்­ஜ­மி­னுக்கு கழ­கத்­தின் சார்­பில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இத­யப்­பூர்­வ­மான நன்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவர் ஏற்­கெ­னவே அண்ணா அறி­வா­ல­யத்­திற்கு வந்து, முறை­யாக உறுப்­பி­ன­ரா­கப் பதிவு செய்து, என்­னைப் போன்ற நம்­மு­டைய முன்­னோ­டி­கள் முன்­னி­லை­யில் வந்து சேர்ந்­தி­ருந்­தா­லும், இன்­றைக்கு இந்த வட்­டா­ரத்­தில் இருக்­கும் தோழர்­களை, தாய்­மார்­களை, சகோ­த­ரர்­களை – சகோ­த­ரி­களை, இளை­ஞர்­களை எல்­லாம் ஒன்று திரட்டி, கழ­கத்­தில் இணை­யும் நிகழ்ச்­சி­யாக, ஒரு மாபெ­ரும் விழா­வாக, இந்த வட்­டா­ரத்­தின் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வர­லாற்­றில் பதி­வாக இருக்­கும் ஒரு நிகழ்ச்­சி­யாக இதை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். அதற்­காக நான் மீண்­டும் மீண்­டும் தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில், இந்த மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில், என்­னு­டைய இத­யப்­பூர்­வ­மான நன்­றியை பென்­ஜ­மின் அவர்­க­ளுக்­கும், மற்­ற­வர்­க­ளுக்­கும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">‘கொள்­கை­தான் முக்­கி­யம்’ என –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கழ­கத்­தில் சேர்ந்­துள்­ளீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பொது­வாக, ஒரு தேர்­தல் முடிந்­த­வு­டன், வெற்றி பெற்ற இயக்­கத்தை நோக்கி நிறை­யப் பேர் சேர்­வார்­கள். எதிர்க்­கட்­சி­யில் இருந்து விலகி, ஆளுங்­கட்­சிக்­குத்­தான் நிறை­யப் பேர் சென்று சேர்­வார்­கள். ஆனால் இங்கு என்ன என்­றால், எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் நீங்­கள் சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள் என்­றால், நீங்­கள் பத­விக்­காக அல்ல; பவு­சுக்­காக அல்ல; பொறுப்­புக்­காக அல்ல; நீங்­கள் எல்­லாம் “கொள்­கை­தான் முக்­கி­யம்” என்று உணர்­வோடு வந்து சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள். அது­தான் பாராட்­டப்­பட வேண்­டிய ஒரு விஷ­யம். உண்­மை­யி­லேயே பெரு­மைப்­பட வேண்­டிய விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வலி­மை­யாக இருந்­தால்­தான், தமிழ்­நாட்­டைக் காப்­பாற்ற முடி­யும் என்று நம்பி இந்த இயக்­கத்­தில் வந்து சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அனைத்து தரப்­பி­ன­ரை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கவர்ந்த கழக அர­சின் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக, எந்­தத் துறையை எடுத்­தா­லும், இது­வரை தமிழ்­நாடு கண்­டி­ராத வளர்ச்­சியை, நம்­மு­டைய தமிழ்­நாடு பார்த்­தது. இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ரம் கொண்ட மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை நாம் உயர்த்­தி­னோம். ‘தின­மும் ஒரு திட்­டம்’ என்று சொல்­லத்­தக்க வகை­யில் திட்­டங்­களை உரு­வாக்­கி­னோம். அனைத்­துத் தரப்பு மக்­க­ளை­யும் நாம் கவ­ரும் வகை­யில் திட்­டங்­கள் தீட்­டி­னோம். திட்­டங்­கள் மக்­க­ளி­டம் சென்று சேர்ந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நமது ஆட்­சி­யின் மீது இருந்த நம்­பிக்­கை­யால்­தான், தமிழ்­நாட்டை நோக்­கிப் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லி­ருந்து, பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து உலக அள­வில் மிகப்­பெரிய நிறு­வ­னங்­கள் எல்­லாம் வந்­தன; தொழில் தொடங்­கி­னார்­கள். அது­மட்­டு­மல்ல, அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கி­யது. அண்டை மாநி­லங்­க­ளில் ஆட்சி செய்­யும், அர­சி­யல் ரீதி­யாக நமக்கு எதி­ர­ணி­யில் இருக்­கும் தலை­வர்­கள்­கூட இதனை வெளிப்­ப­டை­யா­கப் பாராட்­டி­னார்­கள்; சில பேர் பொறா­மைப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், இப்­போது ஆட்சி மாற்­றம் நடந்­தி­ருக்­கி­றது. ஆட்சி மாற்­றம் நிகழ்ந்த ஒரே மாதத்­திற்­குள்­ளேயே, தமிழ்­நாடு இன்­றைக்கு அத­ல­பா­தா­ளத்­திற்­குப் போகும் ஒரு சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொழில் நிறு­வ­னங்­கள் இந்­தப் புதிய ஆட்­சியை நம்­பித் தமிழ்­நாட்­டுக்கு வரப்­பயப்­ப­டு­கி­றார்­கள், தயங்­கு­கி­றார்­கள்; அத­னால், வேறு மாநி­லங்­க­ளுக்­குச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள். என்ன கார­ணம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சட்­டம்–­ஒ­ழுங்­கைப் பற்­றிச் சொல்­லவே தேவை­யில்லை. பாலி­யல் கொடு­மை­கள், போதை மருந்து நட­மாட்­டம், பெட்­ரோல் குண்டு வீச்சு, அரி­வாள் வெட்­டு­கள், கொள்­ளை­கள் மற்­றும் அரா­ஜ­கங்­கள் – டி.வி.யைப் பார்த்­தாலே, பேப்­ப­ரைப் படித்­தாலே இந்­தச் செய்­தி­கள்­தான் நம் கண்­க­ளில் படு­கின்­றன. அதி­லும் குறிப்­பாக, நிறைய குற்­றங்­க­ளில் ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­களே சம்­பந்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள். அது­தான் வேதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­க­ளைத் திசை­தி­ருப்­பும் வேலை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இன்­றைய ஆட்­சி­யி­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு பக்­கத்­தில், மின்­வெட்டு, விவ­சா­யி­கள் போராட்­டம் எனப் பல்­வேறு பிரச்­சி­னை­கள். ஆனால், எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல், “டேக் டைவர்­ஷன்” என்று திசை­தி­ருப்­பும் வேலை­க­ளில் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, இவர்­க­ளு­டைய இந்த ‘டெக்­னிக்’ மக்­க­ளுக்கு இப்­போது புரிய ஆரம்­பித்­து­விட்­டது. இப்­போ­து­தான் பேச ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். “தவறு செய்­து­விட்­டோம்” என வாக்­க­ளித்­த­வர்­க­ளும் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள்; வாக்­க­ளிக்­கா­த­வர்­களும் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள். அவர்­களே தன்­னெ­ழுச்­சி­யா­கப் பல இடங்­க­ளில் இப்­போது போராட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். இன்­றைக்கு அமைச்­சர்­கள் எங்­கா­வது காரில் நிகழ்ச்­சிக்­குச் செல்­லும்­போது, வழி­ம­றித்­துக் கேள்வி கேட்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள். இந்­தச் சூழ­லில், மக்­க­ளுக்­குத் துணை­யாக நாம்­தான் இருக்க 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டைக் காக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பொறுப்பு நமக்கே அதி­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டைக் காக்­கும் பொறுப்­பும் கட­மை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­குத்­தான் அதி­க­மாக இருக்­கி­றது. ஏன் என்­றால், நாம் பார்த்­துப் பார்த்து வளர்த்த தமிழ்­நாட்டை, சீர­ழிய விடக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழப்­பது என்­பது, ஏதோ பெரிய வீழ்ச்சி அல்ல. எத்­த­னையோ வெற்­றி­யைப் பார்த்­தி­ருக்­கி­றோம்; எத்­த­னையோ தோல்­வி­யை­யும் பார்த்­தி­ருக்­கி­றோம். தி.மு.க.வைப் போன்று, வெற்றி பெற்ற கட்­சி­யும் கிடை­யாது; தோல்வி அடைந்த கட்­சி­யும் கிடை­யாது. அத­னால்­தான் சொல்­கி­றேன், தி.மு.க.வின் இருப்பு என்­பது வெறும் வாக்­குச் சாவ­டி­க­ளைத் தாண்டி, லட்­சக்­க­ணக்­கான உடன்­பி­றப்­பு­க­ளின் இத­யங்­க­ளில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பேர­றி­ஞர் அண்­ணா­வால் 1949–ஆம் ஆண்டு கொட்­டும் மழை­யில் வட­சென்னை ராபின்­சன் பூங்­கா­வில் தொடங்கி வைக்­கப்­பட்ட திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம், தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு, இன்று வலி­மை­யான அமைப்­போடு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உண்­மைத் தொண்­டர்­க­ளான உடன்­பி­றப்­பு­க­ளின் வியர்­வை­யா­லும், இரத்­தத்­தா­லும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்த இயக்­கத்தை எந்­தக் கொம்­ப­னா­லும் வீழ்த்த முடி­யாது; தொட்­டுக் கூட பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கட்­ட­மைப்பே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கழ­கத்­தின் பெரிய பலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உடன்­பி­றப்­பு­க­ளின் உழைப்­பும், நமது இயக்­கத்­தின் கட்­ட­மைப்­பும்­தான் கழ­கத்­தின் பெரிய பலம். அதைத்­தான் இந்த இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக நான் அதி­க­மான அள­விற்கு நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீங்­கள் நினைத்­துப் பாருங்­கள்... நாம் எத்­த­னையோ திட்­டங்­களை, எத்­த­னையோ சாத­னை­க­ளைச் செய்து முடித்­தி­ருக்­கி­றோம். உதா­ர­ணத்­திற்கு ஒன்­றி­ரண்டு மட்­டும் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“மக­ளிர் உரி­மைத் தொகை, நாம் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் வழங்­கு­வோம்!” என்று சொன்­னோம். அதே­போன்று, ஆயி­ரம் ரூபாய் மாதா­மா­தம் 15–ஆம் தேதி ஒவ்­வொரு மக­ளி­ருக்­கும் வங்­கிக் கணக்­கில் போடப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­போன்று, பேருந்­து­க­ளில் பய­ணம் செய்­யும் மக­ளிர் கட்­ட­ண­மின்­றிப் பய­ணம் செய்­வ­தற்­கான உத்­த­ர­வும் வழங்­கப்­பட்டு, அது­வும் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. பள்­ளிப் படிப்பை முடித்து, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­கள் – மாண­வி­யர்­கள், மேற்­ப­டிப்­புக்­குச் செல்­லும் வச­தி ­யில்­லாத குடும்­பத்­தில் லட்­சக்­க­ணக்­கா­ன­வர்­கள் இருக்­கி­றார்­கள் என்­பதை அறிந்து, அதற்­காக தமிழ்ப்­பு­தல்­வன் – புது­மைப் பெண் திட்­டங்­க­ளின் சார்­பில் மாதம் 
ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று, காலை உண­வுத் திட்­டம், இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல; உல­கத்­தி­லேயே எங்­கும் கிடை­யாது. நம்­மைப் பார்த்­து­தான் லண்­டன் மாந­க­ரத்­தி­லும், கனடா நாட்­டி­லும் இன்­றைக்கு அந்­தத் திட்­டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. பல மாநி­லங்­களி­லும் இப்­போது நடக்­கத் தொடங்­கி
­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமி­ழக வர­லாற்­றில் என்­றைக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நமது பெயர் நிலைத்­தி­ருக்­கும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டிற்­குத் ‘தமிழ்­நாடு’ என்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் கொண்­டு­வந்து பெயர் வைத்­த­போது, “தமிழ்­நாடு, தமிழ்­நாடு, தமிழ்­நாடு” என்று மூன்று முறை முழங்கி, “தமிழ்­நாடு வாழ்க, தமிழ்­நாடு வாழ்க” என்று சொல்ல வைத்து, அப்­போது அண்ணா சொன்­னார், “இந்­தத் தமிழ்­நாட்­டிற்கு ‘தமிழ்­நாடு’ என்று பெயர் இருக்­கும் வரைக்­கும், அண்­ணா­துரை என்ற என்­னு­டைய பெயர் மக்­கள் மன­தில் இருக்­கும். அதை யாரா­லும் மாற்ற 
முடி­யாது” என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது­போன்று, மக­ளிர் உரி­மைத் திட்­ட­மாக இருந்­தா­லும், மக­ளி­ருக்கு இல­வ­சப் பேருந்­துப் பய­ணத் திட்­ட­மாக இருந்­தா­லும், காலை உண­வுத் திட்­ட­மாக இருந்­தா­லும், புது­மைப்­பெண் திட்­ட­மாக இருந்­தா­லும், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­ட­மாக இருந்­தா­லும், இந்­தத் திட்­டங்­களை யாரா­லும் நிறுத்த முடி­யாது. அந்­தத் திட்­டங்­கள் இருக்­கும் வரை­யில் இந்த அடி­யேன் ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்­கும். அது­தான் எனக்­குப் பெருமை; அது­தான் இந்த இயக்­கத்­திற்­குப் பெருமை;அது­தான் உங்­க­ளுக்­கும் பெருமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே, தமிழ்­நாட்­டின் வளத்­திற்­கும், நலத்­திற்­கும் உண்­மை­யான காவல் அரண் தி.மு.க.தான் என்ற புக­ழைக் காப்­பாற்­றும் வகை­யில் நாம் தொடர்ந்து பணி­யாற்­று­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கழ­கத்­தின் வெற்­றிக்கு இப்­போ­தி­ருந்தே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பாடு­ப­டத் தொடங்­கு­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் எப்­போது வேண்­டு­மா­னா­லும் வர­லாம்; விரை­வில் வர­லாம்; மூன்று மாதங்­கள் கழித்து வர­லாம்; ஆறு மாதங்­கள் கழித்து வர­லாம்; ஏன் என்­றால், இப்­போது நடை­பெ­றும் ஆட்சி என்­பது, மெஜா­ரிட்­டி­யோடு அவர்­கள் வெற்றி பெற­ வில்லை. ‘மெஜா­ரிட்டி’ என்­றால் என்ன? 118–ஆவது வர வேண்­டும். அவர்­கள் வெற்றி பெற்­றது 108 தான். தி.மு.க.தான் வெற்றி பெற வேண்­டும்; ஸ்டாலின்­தான் முத­ல­மைச்­ச­ராக வேண்­டும் என்று தமிழ்­நாட்டு மக்­கள் வாக்­க­ளித்­தீர்­கள்
அல்­லவா...! நம்­மு­டன் இருந்த அந்­தக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் ஆத­ர­வில்­தான் இன்­றைக்கு இந்த வண்டி ஓடிக் கொண்­டி­ருக்­கி­றது. அவ்­வாறு ஓடும் வண்டி, எங்கே சென்று நிற்­கப் போகி­றது என்று தெரி­ய­வில்லை. ஆனால், எப்­போது எது நடந்­தா­லும் நாம் அதற்­குத் தயா­ராக இருக்க வேண்­டும். எந்த நேரத்­தி­லும் தேர்­தல் வர­லாம்;எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் வர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாம் அதற்கு நூறு சத­வீ­தம் தயா­ராக இருக்க வேண்­டும்! எனவே, கழ­கத்­தின் வெற்­றிக்கு இந்த நிமி­டத்­தி­லி­ருந்தே உழைக்­கத் தொடங்­கு­வோம், பாடு­ப­டு­வோம், பணி­யாற்­று­வோம் என்ற உறுதி எடுக்­கும் நிகழ்ச்­சி­யாக இந்த நிகழ்ச்­சியை நாம் பயன்­ப­டுத்­திக் கொள்ள விரும்­பு­ 
கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உண்­மை­யாக உழை­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அதற்­கான அங்­கீ­கா­ரம் தேடி வரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே, தாய்க்­க­ழ­கத்­தைத் தேடி வந்­தி­ருக்­கும் முன்­னாள் அமைச்­சர் நம்­மு­டைய இனிய சகோ­த­ரர் பென்­ஜ­மின் அவர்­க­ளை­யும், அவ­ரோடு வந்து சேர்ந்­தி­ருக்­கும் உங்­கள் அனை­வ­ரை­யும் மீண்­டும் ஒரு­முறை வருக வருக! வருக! என்று வர­வேற்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உண்­மை­யாக உழை­யுங்­கள்; உங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் நிச்­ச­யம் உங்­க­ளைத் தேடி வரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறுகழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் – கழ­கத்­தில் இணைந்­த­வர்­களை வர­வேற்று உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை – வானகரம் – ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் (28.6.2026), மாலை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5000–க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் அவர்களுக்கு, பெஞ்சமின் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பொற்ற போது எடுத்த படம். உடன் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் –முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், மதுரவாயல் பகுதிச் செயலாளர்கள் காரம்பாக்கம் க.கணபதி, நொளம்பூர் வே.ராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>