<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,752" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 30 2026 03:36:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30062026-CHN-07" position.sequence="07" ex-ref="30062026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">30.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">சென்னை முதல் குமரி வரை­ சம்­ப­வம்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">தமிழ்­நாட்­டில் சட்­டம் – ஒழுங்கு சீர்­கேடு – ஒரே நாளில் 7 பேர் படு­கொலை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">பொது­மக்­கள் அச்­சம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup732704_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, ஜூன் 30</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் த.வெ.க. அரசு பொறுப்­பேற்­ற­தில் இருந்து சட்­டம் ஒழுங்கு சீர்­கெட்­டுள்­ளது. ஒரே நாளில் 7 பேர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. தமி­ழ­கத்­தில் சட்­டம் ஒழுங்கு சந்தி சிரிப்­ப­தாக பல­ரும் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செங்­கல்­பட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">செங்­கல்­பட்டு அடுத்த சிங்­கப்­பெ­ரு­மாள் கோயில் அருகே திருத்­தேரி பகு­தி­யில் வாடகை அறை­யில் நண்­பர்­க­ளு­டன் வசித்து வந்­த­வர் முப்­தாக் (21). இவர் மறை­ம­லை­ந­கர் பகு­தி­யில் அமைந்­துள்ள பாஸ்ட்­புட் கடை­யில் வேலை செய்து வந்­தார். நேற்று முன்­தி­னம் கடை­யில் வேலை முடிந்­த­தும் வழக்­கம் போல தனது அறைக்கு முப்­தாக் நடந்து சென்று கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அப்­போது, அவ்­வ­ழி­யாக வந்த 5 பேர் கும்­பல், திடீ­ரென மறைத்து வைத்­தி­ருந்த அரி­வா­ளால் முப்­தாகை சர­மா­ரி­யாக வெட்டி விட்டு தப்­பி­யது. ரத்த வெள்­ளத்­தில் அலறி துடித்­த­படி கீழே சாய்ந்­தார். தக­வ­ல­றிந்து சிங்­கப்­பெ­ரு­மாள்­கோ­யில் போலீ­சார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று உடலை கைப்­பற்றி பிரேத பரி­சோ­த­னைக்­காக செங்­கல்­பட்டு அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பின்­னர் வழக்கு பதிவு செய்து முப்­தாக்­கு­டன் அறை­யில் தங்­கி­யி­ருந்த 2 பேரை சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்து காவல் நிலை­யத்­துக்கு அழைத்து வந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். மேலும், இன்ஸ்­பெக்­டர் தலை­மை­யில் 2 தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­களை போலீ­சார் வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இச்­சம்­ப­வத்­தால் அப்­ப­கு­தி­யில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சென்­னை­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை மேட­வாக்­கம் அம்­பேத்­கர் நகர், சேரன் தெரு­வில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஷேர் ஆட்­டோ­வில் நெற்­றி­யில் பலத்த காயத்­து­டன் ஒரு­வர் மயங்கி இறந்து கிடப்­ப­தாக பள்­ளிக்­க­ரணை போலீ­சா­ருக்கு தக­வல் கிடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உடனே போலீ­சார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று உடலை கைப்­பற்றி பிரேத பரி­சோ­த­னைக்­காக தாம்­ப­ரம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். பின்­னர் வழக்கு பதிந்து விசா­ரணை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதில் இறந்து கிடந்­த­வர் அதே பகு­தியை சேர்ந்த சுரேஷ் (48) என்­ப­தும் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்­த­வர் என­வும் தெரி­ய­வந்­தது. மேலும் டிரை­வர் இருக்­கை­யின் பின்­பு­றம் பொருத்­தப்­பட்­டி­ருந்த ‘ப’ வடிவ இரும்பு தகட்­டில் சுரே­ஷின் நெற்றி மோதி, இடது கண் புரு­வத்­தின் மேற்­ப­கு­தி­யில் ஆழ­மான வெட்­டுக்­கா­யம் ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அத­னால் அவரை யாரா­வது அடித்து கொலை செய்­தார்­களா அல்­லது ஏதா­வது தக­ராறு கார­ண­மாக ஆட்­டோ­வில் ேமாத வைத்து கொலை செய்­தார்­களா என்ற கோணத்­தில் விசா­ரித்து வரு­கின்­ற­னர். இவ­ருக்கு சலோமி என்ற மனை­வி­யும், சந்­தோஷ் (19), கார்த்­தி­கே­யன் (16) என்ற 2 மகன்­க­ளும் இருப்­ப­தும் தெரி­ய­வந்­தது. மேலும், குடும்­பத்தை பிரிந்து தனி­யாக வசிப்­ப­தும் சர்க்­கரை நோயால் அவ­திப்­பட்டு வந்­த­தும் தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­மரி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் ஈத்­தா­மொழி அருகே உள்ள புதூர் அடுத்த கண்­ணம்­பி­விளை பகு­தியை சேர்ந்­த­வர் சிங்­கம் (60). கதம்பை லோடு ஏற்­றும் தொழி­லாளி. சிங்­கத்­துக்கு மது குடிக்­கும் பழக்­கம் உண்டு. அவ்­வப்­போது நண்­பர்­க­ளு­டன் சேர்ந்­தும் மது அருந்­து­வது வழக்­கம் ஆகும். இதே போல் கண்­ணம்­பி­விளை பகு­தியை சேர்ந்­த­வர் லிங்­க­சாமி (49). கொத்­த­னார். இவ­ருக்கு திரு­ம­ண­மா­க­வில்லை. நேற்று இரவு சிங்­கம், லிங்­க­சாமி மற்­றும் சிலர் சேர்ந்து அந்த பகு­தி­யில் உள்ள ஒரு காலி­ம­னை­யில் அமர்ந்து மது அருந்­திக் கொண்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­த­நி­லை­யில் இன்று காலை அவர்­கள் மது அருந்­திய இடத்­தில் சிங்­கம், லிங்­க­சாமி இரு­வ­ரும் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு கிடந்­த­னர். இதில் லிங்­க­சா­மிக்கு கல்­லால் கழுத்து, முகம் உள்­ளிட்ட இடங்­க­ளில் குத்து காயங்­கள் இருந்­தன. சிங்­கத்­துக்கு கழுத்து நெரிக்­கப்­பட்டு இருந்­தது. பின் தலை­யி­லும் காயம் இருந்­தது. இது குறித்து தக­வ­ல­றிந்த ஈத்­தா­மொழி போலீ­சார் சம்­பவ இடத்­துக்கு விரைந்­த­னர். இரு­வ­ரின் உடல்­க­ளை­யும் கைப்­பற்றி பிரேத பரி­சோ­த­னைக்­காக ஆசா­ரிப்­பள்­ளம் அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். இரண்டு பேரும் கொலை செய்­யப்­பட்டு கிடந்த தக­வல் அறிந்­த­தும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர், உற­வி­னர்­கள், பொது­மக்­கள் திரண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">2 பேர் கொலைக்­கான கார­ணம் என்ன என்­பது உட­ன­டி­யாக தெரிய வில்லை. மொத்­தம் 4 பேர் சேர்ந்து மது அருந்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. 2 பேர் கொலை செய்­யப்­பட்ட நிலை­யில், மற்ற 2 பேர் யார்? என்­பது தொடர்­பாக விசா­ரணை நடந்து வரு­கி­றது. இதற்­காக 2 தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவர்­கள் சந்­தே­கத்­தின் பேரில் கண்­ணம்­பி­வி­ளையை சேர்ந்த 2 பேரை பிடித்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">3 பேர் படு­கொலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குமரி மாவட்­டத்­தில் வார இறுதி நாட்­க­ளில் அதிக குற்ற சம்­ப­வங்­கள் நடக்­கின்­றன. நேற்று மாலை­யில், நாகர்­கோ­வில் அடுத்த புதுக்­கி­ரா­மம் அருகே தனி­யார் பள்­ளி­யில், கட்­டிட தொழி­லா­ளி­யு­டன் ஏற்­பட்ட தக­ரா­றில் சக தொழாளி தலை­யில் கல்லை தூக்கி போட்டு கொன்­றார். இந்த கொலை நடந்த சில மணி நேரத்­தில், கண்­ணம்­பி­வி­ளை­யில் இரட்டை கொலை நடந்­துள்­ளது. ஒரே நாளில் 3 பேர் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரு­வண்­ணா­மலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரு­வண்­ணா­மலை மாவட்­டம் செய்­யாறு அடுத்த வெம்­பாக்­கம் தாலுகா குத்­த­னூர் கிரா­மத்தை சேர்ந்­த­வர் துலுக்­கா­னம் (44), விவ­சாயி. இவ­ரது மனைவி கற்­ப­கம்(36). இவர்­க­ளுக்கு சுகா­சில், துஷ்­யந்த் ஆகிய 2 மகன்­கள், தூது­ம­லர் என்ற மகள் உள்­ள­னர். துலுக்­கா­னத்­தின் அண்­ணன்­கள் சேகர், எத்­து­ராஜ். இவர்­க­ளுக்கு சொந்­த­மான 3 ஏக்­கர் நிலம் தனித்­த­னி­யாக உள்­ளது. சேகர் கடந்த 2 ஆண்­டுக்கு முன் இறந்­து­விட்­டார். இவ­ரது மகன்­கள் சத்­தி­ய­மூர்த்தி(34). சக்­தி­வேல்(32). இந்­நி­லை­யில் துலுக்­கா­ன­மும், சத்­தி­ய­மூர்த்­தி­யும் சேர்ந்து பயி­ரி­டும் ஒரு விவ­சாய நிலத்­தில், சத்­தி­ய­மூர்த்தி வீடு கட்ட திட்­ட­மிட்­டார். இதற்­காக துலுக்­கா­னத்­தி­டம் அனு­மதி கேட்­டுள்­ளார். அதற்கு துலுக்­கா­னம், இரு­வ­ருக்­கும் பொது­வாக வழியை விட்­டு­விட்டு வீடு கட்­டிக்­கொள்­ளும்­படி கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதை­ய­டுத்து வீடு கட்ட தொடங்­கிய சத்­தி­ய­மூர்த்தி, வீடு கட்­டு­வ­தற்­கான மண்ணை நேற்று மாலை கொட்­டி­யுள்­ளார். அப்­போது துலுக்­கா­னம் பயி­ரிட்­டுள்ள வேர்க்­க­டலை செடி­கள் மீது மண் கொட்­டி­யுள்­ளது. நேற்­றி­ரவு நிலத்­திற்கு சென்ற துலுக்­கா­னம், வேர்க்­க­டலை செடி­கள் மீது மண் கொட்­டி­யி­ருப்­பதை பார்த்து அதிர்ச்சி அடைந்­தார். சத்­தி­ய­மூர்த்­தி­யி­டம் சென்று தட்­டிக்­கேட்­டார். இத­னால் இரு­வ­ருக்­கும் தக­ராறு ஏற்­பட்­டது. அப்­போது, அங்கு வந்த சத்­தி­ய­மூர்த்­தி­யின் தம்பி சக்­தி­வேல்(32), தாய் சரளா, மனைவி கார்த்­திகா, சக்­தி­வேல் மனைவி சந்­திரா ஆகி­யோர் சேர்ந்து, துலுக்­கா­னத்தை சர­மா­ரி­யாக தாக்­கி­யுள்­ள­னர். மேலும் கத்­தி­யால் வெட்­டி­யுள்­ள­னர். இதில் படு­கா­யம் அடைந்த துலுக்­கா­னம் மயங்கி விழுந்­தார். அவரை எத்­து­ராஜ் மற்­றும் குடும்­பத்­தி­னர் மீட்டு வெம்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அங்கு பரி­சோ­தித்த டாக்­டர்­கள், துலுக்­கா­னம் ஏற்­க­னவே இறந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது­கு­றித்து போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து சத்­தி­ய­மூர்த்தி, சக்­தி­வேல், சரளா, கார்த்­திகா, சந்­திரா ஆகிய 5 பேரை­யும் இன்று காலை கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காரைக்­குடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சிவ­கங்கை மாவட்­டம், காரைக்­குடி ஆனந்தா நகர் பகு­தி­யில் புதிய பஸ்­நி­லை­யம் அருகே, வாலி­பர் ஒரு­வர் வெட்டி படு­கொலை செய்­யப்­பட்டு கிடப்­ப­தாக, இன்று காலை போலீ­சா­ருக்கு தக­வல் கிடைத்­தது. இதன்­பே­ரில், சம்­பவ இடத்­துக்கு சென்ற காரைக்­குடி வடக்கு போலீ­சார் கொலை­யான வாலி­ப­ரின் உடலை பார்­வை­யிட்டு விசா­ரணை நடத்­தி­னர். கொலை­யா­ன­வ­ருக்கு 30 வயது இருக்­கும், பேண்ட், சர்ட் அணிந்­தி­ருந்­தார். தலை­யில் காயங்­கள் மற்­றும் உட­லில் பலத்த வெட்­டுக் காயங்­கள் இருந்­தன. இடது கையில் ஆதித்தி என்ற பெய­ரும், வலது கையில் காவியா என்ற பெய­ரும் பச்சை குத்­தப்­பட்­டுள்­ளது. பின்­னர் போலீ­சார் உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக காரைக்­குடி அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். மேலும் வழக்­குப்­ப­திந்து கொலை­யா­ன­வர் யார்? எந்த ஊரைச் சேர்ந்­த­வர்? முன்­வி­ரோ­தத்­தில் கொலை நடந்­ததா அல்­லது வேறு ஏதே­னும் கார­ணமா என விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சோழ­வந்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மதுரை மாவட்­டம், சோழ­வந்­தான் அருகே விக்­கி­ர­மங்­க­லம் கல்­பு­ளிச்­சான்­பட்­டியை சேர்ந்­த­வர் சித்­திக் (25). நேற்று இரவு செக்­கா­னூ­ர­ணி-­விக்­கி­ர­மங்­க­லம் சாலை­யில் குளத்­து­பட்டி பகு­தி­யில் வந்து கொண்­டி­ருந்­தார். அப்­போது இவரை ஒரு கும்­பல் வழி­ம­றித்து பயங்­கர ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­யுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த சித்­திக் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். தக­வ­ல­றிந்து வந்த விக்­கி­ர­மங்­க­லம் போலீ­சார் அவ­ரது உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக மதுரை அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். கடந்த 2024ம் ஆண்டு சித்­திக், அவ­ரது அண்­ண­னும் சேர்ந்து ஒரு­வரை கொலை செய்­துள்­ள­னர். அதற்கு பழிக்­குப்­ப­ழி­யாக இந்த சம்­ப­வம் நடந்­ததா அல்­லது வேறு கார­ணமா என போலீ­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தவெக ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தில் இருந்து தமி­ழ­கத்­தில் சட்­டம் ஒழுங்கு சந்தி சிரிப்­ப­தா­க­வும், நாள்­தோ­றும் கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­மு­றை­கள் அதி­க­ரித்து வரு­கி­றது என்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>