<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="387,32,957,920" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 30 2026 03:49:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30062026-TRY-06" position.sequence="06" ex-ref="30062026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">30.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தேர்தல் களத்தை தனியே சந்திப்பதுதான் வெற்றிக்கான வழித்தடமாக அமையும்!!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup730712_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ழ­கத்­த­லை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் சமீ­பத்­தில் திரு­வா­ரூ­ரில் முன்­னாள் அமைச்­சர் கழ­கத்­தின் செயல்­வீ­ரர் உ.மதி­வா­ணன் அவர்­கள் இல்­லத்­தி­ரு­மண நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றும்­பொ­ழுது, இன்­றைய அர­சி­யல் மாறு­பட்ட சூழ்­நி­லை­யில் கழ­கச் செயல்­வீ­ரர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் தேர்­தல் குறித்த ஒரு­க­ருத்தை  பரி­சீ­லிப்­ப­தாக அறி­வித்­துள்­ளார்­கள். இனி­வ­ரும் தேர்­தல்­க­ளத்­தில் எந்த வடி­வத்­தி­லும் அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­டணி தேவை­யில்லை என்ற கழ­கத்­த­வர்­க­ளின் கோரிக்­கையை பரி­சீ­லிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்­கள். இந்த கோரிக்­கையை பரி­சீ­லிக்க வேண்­டும் என்ற வேண்­டு­கோளை வலி­யு­றுத்­தும் நோக்­கில் அதற்­கான கார­ணங்­க­ளை­யும், கால­மாற்­றத்­தின் தாக்­கங்­க­ளை­யும், மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் இந்­தக் கட்­டு­ரை­யின் மூலம் விளக்­கிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் அர­சி­யல் களத்­தில், இந்­திய அர­சி­யல் சட்­டம்  1949 ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜன­வ­ரித் திங்­கள் 26 ஆம் நாள் குடி­ய­ரசு தினத்­தன்று அம­லுக்கு வந்­தது. அந்த அடிப்­ப­டை­யில் 1952-1957-1962 ஆகிய ஆண்­டு­க­ளில் நாடா­ளு­மன்­றத்­திற்­கும், சட்­ட­மன்­றங்­க­ளுக்­கும் தேர்­தல்­கள் நடை­பெற்­றது. பின்­னர் 1967ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கூட்­ட­ணிக்­கட்­சி­க­ளான இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்சி, சுதந்­தி­ராக் கட்சி, பார்­வர்டு பிளாக், இந்­திய யூனி­யன் முஸ்­லிம்­லீக் கட்சி, பிரஜா சோச­லிஸ்ட் கட்சி, சம்­யுக்தா சோச­லிஸ்ட் கட்சி ஆகிய அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து வெற்­றி­பெற்று பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் திரா­விட முன்­னேற்­றக்­க­ழக ஆட்சி அமைந்­தது. இந்­தத் தேர்­த­லில்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முதன்­மு­த­லாக தேர்­த­லில், காங்­கி­ரஸ் கட்­சிக்கு எதி­ரான வாக்­கு­கள் சித­றா­மல் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­க­வும், காங்­கி­ரஸ் கட்­சி­யின் எதேச்­ச­தி­கா­ரப்­போக்கை தடுக்­கும் கட்­டாய சூழ்­நி­லை­யில் உரு­வாக்­கப் பட்­ட­து­தான் தமி­ழ­கத்­தில் உத­ய­மான முதல் தேர்­தல் கூட்­டணி யாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அர­சி­யல் தேர்­தல் கூட்­டணி உரு­வா­வ­தற்கு கார­ணம் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யின் எதேச்­ச­தி­கார மக்­கள் விரோத நட­வ­டிக் கைகள்­தான் என்­பதை அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் உணர்ந்­தி­ருக்­கி­றது. மேலும், அன்­றைய அர­சி­யல் காலக்­கட்­டத்­தில் நாடு விடு­த­லைப் பெற்­றப்­பின்­னர், காங்­கி­ரஸ் கட்­சி­யி­னு­டைய ஆட்சி திசை­மா­றிச் சென்­ற­தா­லும், தமிழ்­நாட்­டைப் பொருத்­த­மட்­டில், “இந்தி” மொழியை ஆட்­சி­மொ­ழி­யாக திணிக்க முற்­பட்­ட­மை­யா­லும், தேசி­ய­மை­யக் கொள்­கை­யில், காங்­கி­ரஸ் கட்சி பெரும் முத­லா­ளி­க­ளுக்கு சாத­க­மாக இருந்­த­மை­யா­லும், மக்­கள் விரோத காங்­கி­ரஸ் கட்­சியை தேர்­த­லில் தோல்­வி­ய­டை­யச் செய்ய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யில் அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும் தமிழ்­நாட்­டில் ஒன்­றி­ணைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு முன்­னர் 1952 - 1957 - 1962 ஆகிய தேர்­தல்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு எதிர்ப்­பான வாக்­கு­கள் சித­றிக்  கிடந்­த­மை­யால், காங்­கி­ரஸ் கட்­சியை அந்த தேர்­தல்­க­ளில் தோற்­க­டிக்க இய­ல­வில்லை என்­பதை கடந்­த­கால அனு­ப­வத்­தின் அடிப்­ப­டை­யில், அறிந்த பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் காங்­கி­ரஸ் எதிர்ப்பு உணர்வை ஒன்­று­தி­ரட்­டும் வகை­யில், காங்­கி­ரஸ் கட்­சிக்கு எதிர்ப்­பான அர­சி­யல் கட்­சி­களை ஒன்­றி­ணைத்து தேர்­தல்­கூட்­டணி அமைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றை­யக் கால­கட்­டத்­தில் மக்­கள் விரோத அர­சாக மாறி­விட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆட்­சியை அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­பதே பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட தேர்­தல் கூட்­ட­ணி­யின் முக்­கி­ய­மான நோக்­க­மா­கும். மக்­கள் நல­னுக்­கும்,  மாநில உரி­மை­க­ளுக்­கும், இந்தி திணிப்­பிற்­கும்  எதி­ரான   காங்­கி­ரஸ் கட்­சி­யி­னு­டைய ஆட்சி அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது தலை­யாய தேசிய கடமை என்ற அடிப்­ப­டை­யில்­தான் அன்­றைய தினம் தேர்­தல் கூட்­டணி உப­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைத் தொடர்ந்து 1971இல் பேர­றி­ஞர் அண்­ணா­வின் மறை­விற்­குப் பின்­னர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்த பொழுது, இந்­திய ஒன்­றி­யத்­தின் புரட்­சி­க­ர­மான “மன்­னர்­மா­னிய ஒழிப்பு”, “வங்­கி­கள் தேசி­ய­மை­யம்” என்ற புரட்­சி­க­ர­மான சம­தர்­மக் கோட்­பாட்டை ஆத­ரிக்­கும் நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில், 1972 ஆம் ஆண்டு நடை­பெற வேண்­டிய சட்­ட­மன்­றத்­திற்­கான தேர்­தலை, முன்­கூட்டி எதிர்­கொள்­ளும் வகை­யில் சட்­ட­மன்­றத்தை கலைத்­து­விட்டு 1971ஆம் ஆண்டு திரு­மதி.இந்­திரா காந்தி தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் கட்­சி­யோடு கூட்­டணி அமைத்து 184 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று வர­லாறு படைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றைய கால­கட்­டத்­தில் புரட்­சி­க­ர­மான “தேசி­ய­மை­யக் கொள்­கை­யும்”, “மன்­னர்­மா­னிய ஒழிப்­பும்” தேர்­தல் கூட்­ட­ணிக்கு அடித்­த­ள­மாக அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைத் தொடர்ந்து 1977இல் “மிசா” காலக்­கொ­டு­மை­களை எதிர்­கொண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எம்.ஜி.ஆரால் தொடங்­கப்­பட்ட அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை எதிர்த்து தேர்­தல்­க­ளத்­தில் வெற்றி வாய்ப்பை இழந்­தது. இந்­தத் தேர்­த­லில் தேர்­தல் கூட்­டணி என்­பது ஒரு பொருட்­டாக கரு­தப்­ப­ட­வில்லை. எம்.ஜி.ஆரின்  கவர்ச்சி அர­சி­யல், பிற அர­சி­யல் சக்­தி­களை புறந்­தள்­ளி­விட்­டது. இத­னைத் தொடர்ந்து நடை­பெற்ற நாடா­ளு­மன்ற சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளில், தேர்­தல்­கால கூட்­டணி என்­பது வாடிக்­கை­யான ஓர் அர­சி­யல் நட­வ­டிக்­கை­யாக அர­சி­யல் தேர்­தல்­க­ளத்­தில் மாற்­றப்­பட்­டு­விட்­டது. குறைந்­த­பட்ச பொதுத்­திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் (Common Minimum Programmes) அமைக்­கப்­பட்ட தேர்­தல் கூட்­ட­ணி­க­ளின் கொள்­கை­வ­ரை­யறை படிப்­ப­டி­யாக கரைந்­து­போய்­விட்­டது. இத்­த­கைய அர­சி­யல் நிகழ்­வு­க­ளுக்­குப் பின்­னர், “ஆட்­சி­யி­லும் அதி­கா­ரத்­தி­லும் பங்கு” என்ற நிலைப்­பாட்­டில் தமி­ழக வெற்­றிக் கழ­கம் வெற்றி பெற்று கூட்­டணி ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றது. எனவே கொள்கை அடிப்­ப­டை­யில், குறைந்­த­பட்ச பொதுத்­திட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும், கடந்த காலத்­தில் உரு­வாக்­கப்­பட்ட தேர்­தல் கூட்­டணி என்­பது முற்­றி­லும் மறைந்­து­போன நிலை­யில், மக்­க­ளு­டைய மனோ­பா­வம் பிர­தான அர­சி­யல் கட்­சி­யின் கொள்கை கோட்­பா­டு­கள் திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை நோக்­கித்­தான் பொது மக்­க­ளின் கவ­னம் ஈர்க்­கப் படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த அடிப்­ப­டை­யில்­தான் வாக்­கா­ளர்­கள் தங்­கள் முடி­வு­களை மேற்­கொள் கின்­ற­னர். எனவே, இனி­வ­ரும் காலங்­க­ளில் தேர்­தல் கூட்­டணி என்­கின்ற அர­சி­யல் ஏற்­பாட்டை தவிர்த்­து­விட்டு சுதந்­தி­ர­மாக இயக்­கம் ஏற்­றுக்­கொண்­டுள்ள சித்­தாந்­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில், திட்­டங்­களை மக்­க­ளின் பார்­வைக்­கும், பரி­சீ­ல­னைக்­கும் முன்­வைத்து அவற்றை பிரச்­சா­ரங்­க­ளின் மூல­மா­க­வும், நவீன அர­சி­யல் சாத­னங்­கள் மூல­மா­க­வும் மக்­க­ளுக்கு செய்­தி­க­ளைக் கொண்டு சேர்த்­தால் போதும் என்றே தோன்­று­கி­றது. அது­மட்­டு­மல்ல, இன்­றைய அறி­வி­யல் சாத­னங்­கள் உச்­சம் தொட்ட நிலை­யில் எந்த அர­சி­யல் கருத்­துக்­க­ளா­னா­லும், மக்­க­ளைக்­கூட்டி, அவர்­க­ளுக்கு முன்­னால் கொள்­கைக்­கோட்­பாட்டு திட்­டங்­க­ளை­யும் விளக்­கு­வ­தை­விட நவீன அர­சி­யல் சாத­னங்­க­ளான “வாட்ஸ் ஆப்”, “இன்ஸ்­டா­கி­ராம்”, “ரீல்ஸ்”, “வீடியோ” ஆகிய அறி­வி­யல் தொடர்பு சாத­னங்­கள் மூலம் மக்­க­ளுக்கு கொண்டு சேர்த்து விட­லாம் என்­பதே இன்­றைய எதார்த்­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, இன்­றைய அறி­வி­யல் கண்­டு­பி­டிப்­பு­கள் உச்­சம் தொட்ட வாழ்­வி­யல் களத்­தில் தேர்­தல் காலங்­க­ளில் கூட்­டணி வைத்து தான் கொள்கை பிரச்­சா­ரம் செய்து மக்­க­ளின் மனங்­களை வென்­றிட வேண்­டும் என்ற அவ­சி­யமோ, நிர்ப்­பந்­தமோ இல்லை மாறாக அர­சி­யல் கூட்­ட­ணியோ அல்­லது மக்­களை ஓரி­டத்­தில் கூட்­டு­வது என்­கின்ற முறை­க­ளை­யும் தாண்டி ஒவ்­வொரு இல்­லங்­க­ளில் உள்ள ஒவ்­வொரு தனி நப­ரை­யும் இந்த அறி­வி­யல் சாத­னங்­கள் மூலம் நேர­டி­யாக சந்­திப்­ப­தற்­கான அறி­வி­யல் சாத­னங்­கள் மூல­மான நவீன ஏற்­பாட்டை விரைந்து மேற்­கொண்டு கூட்­டணி அர­சி­யலை புறந்­தள்­ளி­விட்டு அறி­வி­யல் சாத­னங்­கள் மூலம் ஒவ்­வொரு இல்­லத்­தில் உள்­ள­வர்­க­ளின் உள்­ளத்தை தன் பக்­கம் திருப்­பு­வ­தன் மூலம் கூட்­டணி இல்­லாத, கொள்­கையை அடித்­த­ள­மாக கொண்ட இந்த மாற்­றங்­களை  உரு­வாக்க திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனித்து நின்றே வெற்­றி­யினை ஈட்ட முடி­யும் என்­பதே  திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தொண்­டர்­க­ளின் வேட்­கை­யும், விருப்­ப­மு­மா­கும்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>