<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,1209" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 13:00:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30062026-TRY-07" position.sequence="07" ex-ref="30062026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">பேரிடரில் சிக்கியிருக்கும்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தஞ்சை திருமண விழாவில் – சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="mdspeech1_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="mdspeech2_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தஞ்­சா­வூர், ஜூன் 30 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு தற்­போது பேரி­ட­ரில் மாட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது. அந்­தப் பேரி­ட­ரில் இருந்து தமிழ்­நாட்டை மீட்க வேண்­டி­யது நம் அனை­வ­ரின் பொறுப்பு என்று சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் திரு­மண விழா­வொன்­றில் வாழ்த்­துக்­களை வழங்­கும் நிகழ்ச்­சி­யில் 
தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தஞ்சை மத்­திய மாவட்­டக் கழக அய­லக அணி நிர்­வாகி முத்­த­மிழ்ச்­செல்­வன் இல்ல திரு­மண விழா­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய வாழ்த்­துரை வரு­மாறு: –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தஞ்சை மத்­திய மாவட்­டக் கழக அய­லக அணி­யின் தலை­வர் அண்­ணன் முத்­த­மிழ்ச்­ செல்­வன்- தில­க­வதி ஆகி­யோ­ரின் அன்பு மகன்  தம்பி மல­ர­வன், மறைந்த டி.எஸ்.கிருஷ்­ணன்- அமுதா ஆகி­யோ­ரின் அன்பு மகள் சகோ­தரி காவியா  திரு­ம­ணத்தை உங்­க­ளு­டைய             முன்­னி­லை­யில் நடத்­தி­வைப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் திரு­ம­ணத்­தைப் பொறுத்­த­வரை கழ­கக் குடும்­பங்­க­ளுக்கே உரிய வகை­யில்  ஒரு சிறப்­பான சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ண­மாக இங்கே நடந்­தி­ருக்­கி­றது. இன்­னும் சொல்­லப்­போ­னால், இது வெறும் திரு­மண விழாவா அல்­லது கழக நிகழ்ச்­சியா என்று கேட்­கின்ற அள­வுக்கு ஒரத்­த­நாடு முழுக்க இன்­றைக்கு, கருப்­பு-­சி­வப்­புக் கொடி எல்லா இடங்­க­ளி­லும் பறந்து கொண்­டி­ருக்­கி­றது. அண்­ணன் 
முத்­த­மிழ்ச்­செல்­வ­னைப் பொறுத்­த­வரை 
கழ­கத்­தின் மீதும் தலை­வர் அவர்­கள் மீதும், கலை­ஞர் அவர்­கள் மீதும் என் மீதும் மிகுந்த பாசம் கொண்­ட­வர் அண்­ணன் முத்­த­மிழ்ச்­செல்­வன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரு­டைய திரு­ம­ணத்தை மறைந்த முன்­னாள் அமைச்­சர் ஐயா கோ.சி.மணி அவர்­கள்­தான் நடத்­தி­வைத்­தார். அண்­ண­னு­டைய மூத்த மக­னுக்கு நம்­மு­டைய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்­தான் ‘கதி­ர­வன்’ என்று பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றார். இன்­னும் சொல்­லப்­போ­னால், இந்­தத் திரு­மண மண்­ட­பம்­கூட அண்­ண­னு­டை­யது என்று சொன்­னார்­கள். இந்­தப் பகு­தி­யில் நடக்­கக்­கூ­டிய அனைத்து கழக நிகழ்ச்­சி­க­ளும் இந்­தத் திரு­மண மண்­ட­பத்­தில்­தான். அண்­ணன் முத்­த­மிழ்ச்­செல்­வன் அவர்­க­ளு­டைய உத­வி­யால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்கே தொடர்ந்து நடந்து கொண்­டி­ருக்­கி­றது. ஆகவே, இப்­ப­டிப்­பட்ட கழ­கக் குடும்­பத்­தின் திரு­ம­ணத்தை நடத்­தி­வைப்­ப­தில் மிகுந்த பெரு­மை­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிறைய வழக்­க­றி­ஞர்­கள் தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மண­மக்­கள் இரு­வ­ரும் வழக்­க­றி­ஞர்­க­ளாக இருக்­கி­றார்­கள். இதில் மிகுந்த மகிழ்ச்சி என்­ன­வென்­றால், இன்­றைக்­குக் கழ­கத்­திற்கு இந்த நேரத்­தில் நிறைய வழக்­க­றி­ஞர்­கள் தேவைப்­ப­டு­கி­றார்­கள். ஏனென்­றால் உங்­க­ளுக்­குத் தெரி­யும், இன்­றைக்கு அமைந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த சோஃபா மாடல் ஆட்­சி­யி­னு­டைய போலி பிம்­பம், கடந்த ஒரு மாதத்­தில் அடித்­துத் துவைக்­கப்­பட்டு, நொறுங்­கிக் கிடக்­கி­றது. ஒவ்­வொரு நாளும் இந்த ஆட்­சி­யி­னு­டைய அவ­லங்­களை எல்­லாம் மக்­கள் புரிந்­து­கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு இந்த அர­சு­டைய தவ­று­களை, சறுக்­கல்­களை எல்­லாம் இளை­ஞர்­கள் தட்­டிக்­கேட்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள். ஆனால் அப்­ப­டித் தட்­டிக்­கேட்­கிற இளை­ஞர்­களை, நம்­மு­டைய கழ­கத்­தி­னரை, கைது­செய்­கிற வேலையை இன்­றைக்கு இந்த அரசு, சோஃபா மாடல் அரசு ஆரம்­பித்து இருக்­கி­றார்­கள். ஆகவே, இது­போன்ற அடக்­கு­மு­றை­களை எதிர்­கொள்ள நிச்­ச­யம் நமக்கு நிறைய வழக்­க­றி­ஞர்­கள் தேவை. அந்த வகை­யில் இந்த மேடை­யி­லேயே நமக்கு இரண்டு வழக்­க­றி­ஞர்­கள், அது­வும் ஜோடி­யான வழக்­க­றி­ஞர்­கள் நம் இயக்­கத்­திற்கு கிடைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எங்கு பார்த்­தா­லும் மின்­வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தூய சக்தி, தூய சக்தி என்று சொன்­ன­வர்­கள் ஆட்­சிக்கு வந்­த­தும் என்ன செய்­தார்­கள் என்று நீங்க அத்­தனை பேரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள். ஆட்­சிக்கு வந்த ஐந்­தா­வது நிமி­டமே குதிரை பேரத்தை ஆரம்­பி்த்­தார்­கள்; பிற கட்­சி­க­ளுக்கு முத­லில் சோஃபா போகும், சோஃபா­வுக்கு பின்­னா­லேயே நம்­மு­டைய முத­ல­மைச்­சர் சோஃபா­வைத் துரத்­திக்­கொண்டே போவார். பிறகு, முத­ல­மைச்­சர் பின்­னா­லேயே அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் ராஜி­னாமா கடி­தத்­தோடு அவர்­க­ளும் வரி­சை­யில் வரு­வ­தை­யெல்­லாம் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு இந்த காட்­சி­தான் தமிழ்­நாட்­டில் ஒரு மாத­மாக ரிப்­பீட் மோடில் தின­மும் இது ஒரு செய்­தி­யாக வந்­து­கொண்டு இருக்­கி­றது. அது­மட்­டும் இல்லை, இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் எங்­கெங்கு பார்த்­தா­லும் மின்­வெட்டு. எனக்கு என்ன ஆச்­ச­ரி­யம் என்­றால், இந்த நேரம் வரைக்­கும் இந்த மண்­ட­பத்­தில் மின்­வெட்டு ஆகா­மல் இருக்­கி­றது. ஜென­ரேட்­ட­ரில் ஓடிக்­கொண்டு இருக்­கி­றது என்று நினைக்­கி­றேன். அது­வும் குறிப்­பாக இந்த ஒரத்­த­நாடு பகு­தி­யில் பல கிரா­மங்­க­ளில், நள்­ளி­ர­வு­க­ளில் மின்­வெட்டு ஆகிக்­கொண்டு இருக்­கி­றது. அது தொடர்­க­தை­யாக இருக்­கி­றது. விவ­சா­யி­கள் இன்­றைக்கு இத­னால் மிக­வும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பயிர்க்­க­டன் தள்­ளு­படி மோசடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னொரு செய்தி. நம்­மு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, 2021-ஆம் ஆண்­டி­லி­ருந்து 2025-ஆம் ஆண்டு வரைக்­கும் சரி­யாக ஜூன் 12-ஆம் தேதி அன்று மேட்­டூ­ரில் அணை­யி­லி­ருந்து டெல்டா பாச­னத்­துக்­கா­கத் தண்­ணீரை திறந்துவைத்­தார். ஆனால் இந்த அரசு, இந்த ஆண்டு இன்­னும் மேட்­டூர் அணை­யைத் திறக்­க­வில்லை. அது­மட்­டும் இல்லை, குறுவை சாகு­ப­டிக்கு அவர்­கள் அறி­வித்த ‘ஸ்பெஷல் பேக்­கேஜ் பத்­தாது (சிறப்­புத்­தொ­குப்பு) என்று இன்­றைக்கு விவ­சா­யி­கள் அத்­தனை பேரும் சாலை­க­ளுக்கு வந்து போரா­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை சட்­ட­மன்­றத்­தில் சொன்ன உடனே முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார், ‘திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னர் தூண்­டு­த­லி­னால்விவ­சா­யி­கள் போராட்­டத்­திற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்’, என்று. விவ­சா­யி­க­ளு­டைய போராட்­டத்­தை­யும் கொச்­சைப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார் இங்கே இருக்­கக்­கூ­டிய நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­த­லின்­போது, ‘5 ஏக்­கர் வரைக்­கும் பயிர்க்­க­டன் தள்­ளு­படி’, என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார். ஆனால் அதெல்­லாம் செய்­தாரா? என்­பதை நீங்­கள் யோசித்­துப் பார்க்க வேண்­டும். முத­லில் ஒரு லட்­சம் வரைக்­கும் பயிர்க்­க­டன் வாங்­கி­யி­ருந்­தால் வெறும் 5,000 ரூபாய் தள்­ளு­படி என்று அறி­வித்­தார்­கள். அதி­லும் பார்த்­தீர்­கள் என்­றால் சிறு விவ­சாயி, குறு விவ­சாயி என்று தரம் பிரித்­தார்­கள். அதன் பிறகு 75,000 வரைக்­கும் தள்­ளு­படி என்று சொன்­னார்­கள். அதி­லும் இப்­போது ஒரே வீட்­டில் இரண்டு பேர், மூன்று பேர் கடன் வாங்­கி­யி­ருந்­தாலோ, அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், பென்­ஷன் வாங்­கு­ப­வர்­கள் இருந்­தாலோ அவர்­க­ளுக்­கெல்­லாம் பயிர்க்­க­டன் தள்­ளு­படி இல்லை என்­ப­தை­யும் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­டம்ஒழுங்கு சீர்­கு­லைவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது எல்­லா­வற்­றை­யும் விட மிகப்­பெ­ரிய ஒரு கொடுமை சட்ட ஒழுங்கு சீர்­கு­லைவு. இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­னு­டைய சட்ட ஒழுங்கு எந்த அள­வில் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும், ஒரு அத­ல­பா­தா­ளத்­தில், படு­கு­ழி­யில் இன்­றைக்கு இந்த ஆட்­சி­யா­ளர்­கள் தள்ளி இருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் கழ­கம் சார்­பா­கச் சட்­ட­மன்­றத்­தில் நாங்­கள் எல்­லாம் பேசி­னோம். ஆனால் அதற்­கெல்­லாம் முத­ல­மைச்­சர், பதில் சொன்­னாரா என்று பார்த்­தீர்­கள் என்­றால் ஒரு பதி­லும் கிடை­யாது. ஆளுங்­கட்­சி­யி­னர்சட்­ட­ச­பை­யில் என்­னென்ன கூத்­த­டித்­தார்­கள் என்று நீங்­கள் அத்­தனை பேரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­க­ளுக்­கெல்­லாம் ஒரு சந்­தே­கம், இது சட்­ட­மன்­றமா, இல்லை சினிமா தியேட்­டரா, இல்லை ஏதா­வது ஒரு சூட்­டிங் ஸ்பாட்­டுக்கு வந்­து­விட்­டோமா என்று கேட்­கிற அள­வுக்கு இன்­றைக்­குச் சட்­ட­மன்­றத்­தின் தரத்­தையே ஆளுங்­கட்­சி­யி­னர் குறைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், எதற்­கெ­டுத்­தா­லும் ‘தி.மு.க. தான் கார­ணம்’, என்­கின்ற ரெடி­மேட் பதிலை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் வைத்­தி­ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய தலை­வர் செய்த பணி­க­ளால் நல்­லது நடந்­தால் அதற்­கும் சேர்ந்து இந்த ஆட்­சி­யா­ளர்­கள் இன்­றைக்கு ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அதுவே ஏதா­வது பிரச்­சினை என்­றால், ‘தி.மு.க. தான் கார­ணம்’, என்­கின்ற ரெடி­மேட் பதி­லை­யும் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எங்­கும் நிறைந்­தி­ருக்­கி­றார் தலை­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டும் இல்லை, நம்­மு­டைய தலை­வ­ரைச் சிறு­மைப்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு, நம் தலை­வரை முத­ல­மைச்­சர் தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார் என்­றும் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னார். நம் தலை­வர் என்­றைக்­கும் தேடிக் கண்­டு­பி­டிக்­கிற இடத்­தில் இருந்­ததே கிடை­யாது. மிசா காலத்­தில் தலை­வ­ரைத் தேடி போலீஸ் கோபா­ல­பு­ரம் இல்­லத்­திற்கு அவ­ரைக் கைது செய்­வ­தற்கு அன்று வந்­தார்­கள். அப்­போது கலை­ஞர் அவர்­கள் சொன்ன பதில், ‘என்­னு­டைய மகன் கழக நிகழ்ச்­சிக்­காக வெளி­யூர் போயி­ருக்­கி­றார், வந்­த­தும் நானே உங்­க­ளி­டம் அனுப்பி வைக்­கி­றேன்’, என்று சொன்­ன­வர்­தான் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். கலை­ஞர் சொன்­ன­படி கழ­கப்­பணி முடிந்து வந்த நம்­மு­டைய தலை­வரை உட­ன­டி­யா­கக் காவல் நிலை­யத்­திற்கு அனுப்­பி­வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு மக­ளிர் உரி­மைத் தொகை, புது­மைப் பெண், தமிழ்ப் புதல்­வன், நான் முதல்­வன் திட்­டங்­கள் மூல­மாக இன்­றைக்கு நம்­மு­டைய தலை­வர் தமிழ்­நாடு முழுக்க இருக்­கி­றார், எங்­கும் நிறைந்­தி­ருக்­கி­றார். தின­மும் மக்­க­ளோடு மக்­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர் நம்­மு­டைய தலை­வர் அவர்­கள். மக்­க­ளு­டைய இத­யங்­க­ளில் இருக்­கக்­கூ­டி­ய­வர் நம்­மு­டைய தலை­வர் அவர்­கள். ஆனால், அதே நேரத்­தில், முத­ல­மைச்­ச­ரின் பெரம்­பூர் தொகுதி மக்­கள் என்ன தெரி­யுமா சொல்­கி­றார்­கள்? ‘நாங்­கள் எல்­லாம் தெரி­யா­மல் ஒரு­வரை வெற்றி பெறச் செய்­து­விட்­டோம். அவர் எங்கே போனார்? யாரா­வது பார்த்­தீர்­களா?’ என்று கேட்­கிற அள­வுக்கு இன்­றைக்கு பெரம்­பூர் சட்­ட­மன்­றத் தொகுதி மக்­கள் புலம்­பிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பேரி­ட­ரில் தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஆட்­சி­யில் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் யாரைத் தேடிக்­கொண்டு இருக்­கி­றது? மின்­சா­ரத்­தைத் தேடிக்­கொண்டு இருக்­கி­றது. கடந்த ஐந்து வரு­டம் நன்­றாக இருந்த சட்­டம்-­ஒ­ழுங்கை இன்­றைக்கு மக்­கள் தேடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஆகவே, கிண்­டல் செய்­வ­தாக நினைத்து முத­ல­மைச்­சர் அவரை அவரே இன்­றைக்கு எக்ஸ்­போஸ் செய்ய ஆரம்­பி்த்­தி­ருக்­கி­றார். இன்­னும் அவர் சட்­ட­மன்­றத்­தில் நட­னம் மட்­டும்­தான் ஆட­வில்லை. அடுத்த கூட்­டத்­தொ­ட­ரில் நிச்­ச­யம் ஒரு நட­னப் பெர்ஃ­பார்­மன்­ஸும் இருக்­கும் என்­பது எங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆகவே, இன்­றைக்கு தமிழ்­நாடு இவ்­வ­ளவு பெரிய ஒரு பேரி­ட­ரில் மாட்­டிக்­கொண்டு இருக்­கி­றது. இந்த பேரி­ட­ரி­லி­ருந்து தமிழ்­நாட்டை மீட்க வேண்­டி­யது நம்­மு­டைய பொறுப்பு, உடன்­பி­றப்­பு­க­ளா­கிய நம்­மு­டைய பொறுப்பு. அதற்­காக நாம் அனை­வ­ரும் வருங்­கா­லத்­தில் ஒற்­று­மை­யோடு உழைக்க வேண்­டும். நாம் பார்க்­காத வெற்­றி­யும் கிடை­யாது, நாம் பார்க்­காத தோல்­வி­யும் கிடை­யாது. கட்­சி­யை­யும் தலை­வ­ரை­யும் மன­தில் வைத்து நம்­மு­டைய பணி­க­ளை­யெல்­லாம் நாம் வகுத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நேரத்­தில், மண­மக்­க­ளுக்கு அனை­வ­ரின் சார்­பாக ஒரு வேண்­டு­கோள். நீங்­கள் ஒற்­று­மை­யோடு இருக்க வேண்­டும். விட்­டுக் கொடுக்­கக்­கூ­டிய விஷ­யங்­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுத்து, அதே நேரத்­தில் சுய­ம­ரி­யா­தையை எந்த நேரத்­தி­லும் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் உங்­க­ளு­டைய வாழ்க்­கையை நீங்­கள் அமைத்­துக்­கொள்ள வேண்­டும். உங்­க­ளுக்­குப் பிறக்­கக்­கூ­டிய குழந்­தைக்கு அழ­கிய ஒரு தமிழ்ப் பெயரை நீங்­கள் சூட்ட வேண்­டும் என்று கூறிக்­கொண்டு, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி, மண­மக்­க­ளுக்கு உங்­கள் அனை­வ­ரின் சார்­பாக மீண்­டும் என் வாழ்த்­து­க­ளைக் கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலந்­து­கொண்­ட­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான துரைச்­சந்­தி­ர­சே­க­ரன், முன்­னாள் அமைச்­சர்­கள் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, கோவி செழி­யன், பழனி மாணிக்­கம், வைத்­தி­லிங்­கம், மாவட்ட கழ­கப் பொறுப்­பா­ளர் பழ­னி­வேல், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முர­சொலி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணா­துரை, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ராமச்­சந்­தி­ரன், டி.கே.ஜி.நீல­மே­கம், ரங்­க­சாமி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் செல்­வம், மாந­க­ரச் செய­லா­ளர் சண்.இரா­ம­நா­தன், துணை மேயர் மருத்­து­வர் அஞ்­சு­கம் பூபதி, திரா­வி­டர் கழக மாநில ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் குண­சே­க­ரன், ஜெயக்­கு­மார், ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர்­கள் அரு­ளா­னந்­த­சாமி, செல்­வ­ராஜ், முரு­கை­யன், ரமேஷ்­கு­மார், கார்த்­தி­கே­யன், பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் கிருஷ்­ண­கு­மார், திரா­விட கதி­ர­வன், துரை ஜெயக்­கு­மார் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முகில் வேந்­தன், துணை அமைப்­பா­ளர்­கள் செந்­த­மிழ்ச்­செல்­வன், கார்த்தி, சுரேஷ்­கு­மார், ஹரி­த­ரன், ராஜேஷ்­கண்ணா, வெங்­க­டே­சன், உத­ய­நிதி, மாந­கர அமைப்­பா­ளர் வாசிம் ராஜா, துணை அமைப்­பா­ளர் மதி­பா­லன், ஒன்­றிய அமைப்­பா­ளர்­கள் இளந்­த­மி­ழன், அப்­பாத்­துரை மற்­றும் பல கழக முன்­ன­ணி­யி­னர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>