<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 16:34:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30062026-VLR-03" position.sequence="03" ex-ref="30062026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="51">ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, அதல பாதாளம் போகும் சூழ்நிலை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="141">தமிழ்நாட்டைக் காக்கும் கடமை தி.மு.க.விற்குத்தான் இருக்கிறது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5000–க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்வில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup731861_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="1000803549bw_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="1000803548Bw_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை, ஜூன் 30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“ஆட்சி மாற்­றம் நிகழ்ந்த ஒரே மாதத்­திற்­குள்­ளேயே, தமிழ்­நாடு அத­ல­பா­தா­ளத்­திற்­குப் போகும் சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கிறது” என்­றும், “தமிழ்­நாட்­டைக் காக்­கும் பொறுப்­பும் கட­மை­யும் தி.மு.கழ­கத்­திற்­குத்­தான் அதி­க­மாக இருக்­கி­றது” என்­றும் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், சென்னை, வான­க­ரத்­தில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் தி.மு.கழ­கத்­தில் இணை­ந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­நி­கழ்­வில் கழ­கத்­தில் இணைந்­த­வர்­களை வர­வேற்று கழ­கத் தலை­வர் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தாய்க் கழ­க­மாம் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் மகிழ்ச்­சி­யோடு, உறு­தி­யோடு, உற்­சா­கத்­தோடு வந்து இணைந்­தி­ருக்­கும் உங்­கள் அனை­வ­ரை­யும் முத­லில் வருக! வருக! என நான் வர­வேற்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில் தலை­மைத் தொண்­ட­னாக உங்­கள் அனை­வ­ரை­யும் நான் வர­வேற்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கலை­ஞர் அரை நூற்­றாண்டு காலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தாங்­கிப் பிடித்த இயக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எழு­பத்­தைந்துஆண்­டு­க­ளைக் கடந்து, பவள விழா கண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு நீங்­கள் எல்­லாம் வந்­தி­ருக்­கி­றீர்­கள். ஒரு முறை, இரண்டு முறை அல்ல; ஆறுமுறை தமிழ்­நாட்டை ஆட்சி செய்து, அனைத்து வகை­க­ளி­லும் இந்த மாநி­லத்தை வளர்த்­தெ­டுத்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு நீங்­கள் எல்­லாம் வந்­தி­ருக்­கி­றீர்­கள். நவீ­னத் தமிழ்­நாட்­டைக் கட்­ட­மைத்த சிற்­பி­யான முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், அரை நூற்­றாண்டு காலம் தாங்­கிப் பிடித்த தனிப்­பெ­ரும் இயக்­கத்­திற்கு நீங்­கள் எல்­லாம் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">எம்.ஜி.ஆர். பொரு­ளா­ள­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">இருந்த இயக்­கம் இது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது­மட்­டு­மல்ல, மக்­கள் தில­கம் 
எம்.ஜி.ஆர். அவர்­கள் இருந்த கழ­கத்­திற்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள். அது­மட்­டுமா, அவர் பொரு­ளா­ள­ராக இருந்து செயல்­பட்ட இயக்­கத்­திற்கு நீங்­கள் வந்­தி­ருக்­கி­றீர்­கள். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டுத்­தான் அவர் முதன்­மு­த­லில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றி பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தனிக்­கட்சி கண்ட பிற­கும், தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளைச் சட்­ட­மன்­றத்­தில் ஒரு­வர் பேரைக் குறிப்­பிட்­டுப் பேசி­ய­போது, அன்­றைக்கு சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­ச­ராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்­கள், அதைக் கண்­டித்­தார். என்ன சொல்­லிக் கண்­டித்­தார் தெரி­யுமா? “உங்­க­ளுக்கு நான் தலை­வ­ராக இருக்­க­லாம்; ஆனால் எனக்­குத் தலை­வர் கலை­ஞர்­தான்” என்று சொல்லி, அந்த வார்த்­தையை வாபஸ் வாங்­கச் சொன்­னார். இது வர­லாறு!  (கைதட்­டல்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">‘நான் நடித்த நாட­கத்­திற்­குத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தலை­மை­யேற்­றார் எம்.ஜி.ஆர்.’!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனக்கு என்ன பெருமை என்­றால், நான் பள்­ளிக்­கூ­டத்­தில் மாண­வ­னாக படித்­துக் கொண்­டி­ருந்­த­போது, சென்னை – சைதாப்­பேட்­டைப் பகு­தி­யில், ஒரு பிரச்­சார நாட­கம் நடத்­தி­னேன். அந்த நாட­கத்­திற்கு யார் தலைமை என்­றால், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள். அவரே நேர­டி­யாக அந்த நாட­கத்­தைப் பார்க்க வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ருக்கு ஒரு ‘சேர்’ போட்டு உட்­கார வைத்­தோம். ஆனால், அந்­தச் சேரை எடுத்­து­விட்டு, தரை­யில் உட்­கார்ந்து அந்த நாட­கத்­தைப் பார்த்­தார். ஏன் என்­றால், பின்­னால் உட்­கார்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­குத் தெரி­யாது என்று சேரை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டு, தரை­யில் உட்­கார்ந்து,மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள் அந்தநாட­கத்­தைப் பார்த்­தார் என்­பது வர­லாறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">இந்த இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">நான் உங்­களை வர­வேற்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அன்று நான் ஒரு சாதா­ர­ணத் தொண்­ட­னாக – இளை­ஞ­னாக இருந்­தேன்; இன்று அதே இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக இருந்து, உங்­கள் அனை­வ­ரை­யும் வருக வருக வருக என வர­வேற்­கும் வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் பென்­ஜ­மின் அவர்­களை, நீண்ட கால­மாக நான் கவ­னித்து வரு­கி­றேன். அவ­ரு­டைய உழைப்­பைப் பற்றி எனக்கு 
நன்­றா­கத்தெரி­யும். அவர் அ.தி.மு.க.வில் இணைந்துபல ஆண்­டு­கள்உண்­மை­யாக உழைத்­த­வர்; ஓயா­மல் உழைத்­த­வர். எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல்அஞ்­சா­மல் உழைத்­த­வர்; வேகத்­தோ­டும்,விவே­கத்­தோ­டும் உழைத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வில்­லி­வாக்­கம் ஒன்­றி­யச் செய­லா­ள­ராக, சென்னை 145–ஆவது வார்­டின் மாமன்ற உறுப்­பி­ன­ராக, மாந­க­ராட்­சி­யின் துணை மேய­ரா­கப் படிப்­ப­டி­யாக உயர்ந்து, சென்னை மாந­க­ரம் முழு­வ­தும் அறி­மு­க­மா­ன­வர். 2016–ஆம் ஆண்டுநடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மது­ர­வா­யல் தொகு­தி­யில் வென்று, ஊர­கத் தொழில் துறை அமைச்­ச­ரா­கச் செயல்­பட்­டி­ருக்­கிறார். அவர் அமைச்­ச­ராக இருந்­த­போது, நான் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தேன். நாங்­கள் கேள்­வி­கள் கேட்­கிற நேரத்­தில், பல அமைச்­சர்­கள் பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், பென்­ஜ­மின் அவர்­கள் பதில் சொல்­கி­றார் என்று சொன்­னால், நாங்­கள் கொஞ்­சம் உஷா­ராக இருப்­போம். ஏன் என்­றால், புள்ளி விவ­ரத்­தோடு, ஆதா­ரங்­க­ளோடு எதை­யும் ஆணித்­த­ர­மாக அழுத்­த­மாக எடுத்­துச் சொல்­லக் கூடி­ய­வர். அந்த இளை­ஞர் சட்­ட­மன்­றத்­தில் அமைச்­ச­ராக இருந்து பதில் சொல்­வதை நாங்­கள் ரசித்­த­துண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டிப்­பட்ட உழைப்­பிற்­கும் அனு­ப­வத்­திற்­கும் சொந்­தக்­கா­ர­ரான நம்­மு­டைய அரு­மைச் சகோ­த­ரர் பென்­ஜ­மின் அவர்­கள் கழ­கத்தை நோக்கி வந்­தி­ருப்­ப­தில், உங்­களை எல்­லாம் விட நான் அதிக 
அள­வில் மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">பென்­ஜ­மி­னுக்கு கழ­கத்­தின் சார்­பில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">இத­யப்­பூர்­வ­மான நன்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவர் ஏற்­கெ­னவே அண்ணா அறி­வா­ல­யத்­திற்கு வந்து, முறை­யாக உறுப்­பி­ன­ரா­கப் பதிவு செய்து, என்­னைப் போன்ற நம்­மு­டைய முன்­னோ­டி­கள் முன்­னி­லை­யில் வந்து சேர்ந்­தி­ருந்­தா­லும், இன்­றைக்கு இந்த வட்­டா­ரத்­தில் இருக்­கும் தோழர்­களை, தாய்­மார்­களை, சகோ­த­ரர்­களை – சகோ­த­ரி­களை, இளை­ஞர்­களை எல்­லாம் ஒன்று திரட்டி, கழ­கத்­தில் இணை­யும் நிகழ்ச்­சி­யாக, ஒரு மாபெ­ரும் விழா­வாக, இந்த வட்­டா­ரத்­தின் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வர­லாற்­றில் பதி­வாக இருக்­கும் ஒரு நிகழ்ச்­சி­யாக இதை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். அதற்­காக நான் மீண்­டும் மீண்­டும் தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில், இந்த மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில், என்­னு­டைய இத­யப்­பூர்­வ­மான நன்­றியை பென்­ஜ­மின் அவர்­க­ளுக்­கும், மற்­ற­வர்­க­ளுக்­கும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">‘கொள்­கை­தான் முக்­கி­யம்’ என –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கழ­கத்­தில் சேர்ந்­துள்­ளீர்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பொது­வாக, ஒரு தேர்­தல் முடிந்­த­வு­டன், வெற்றி பெற்ற இயக்­கத்தை நோக்கி நிறை­யப் பேர் சேர்­வார்­கள். எதிர்க்­கட்­சி­யில்இருந்து விலகி, ஆளுங்­கட்­சிக்­குத்­தான் நிறை­யப் பேர் சென்று சேர்­வார்­கள். ஆனால் இங்கு என்ன என்­றால், எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்­தில் நீங்­கள் சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள் என்­றால், நீங்­கள் பத­விக்­காக அல்ல; பவு­சுக்­காக அல்ல; பொறுப்­புக்­காக அல்ல; நீங்­கள் எல்­லாம் “கொள்­கை­தான் முக்­கி­யம்” என்று உணர்­வோடு வந்து சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள். அது­தான் பாராட்­டப்­பட வேண்­டியஒரு விஷ­யம். உண்­மை­யி­லேயே பெரு­மைப்­பட வேண்­டிய விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வலி­மை­யாக இருந்­தால்­தான், தமிழ்­நாட்­டைக்காப்­பாற்ற முடி­யும் என்று நம்பி இந்த இயக்­கத்­தில் வந்து சேர்ந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கவர்ந்த கழக அர­சின் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக, எந்­தத் துறையை எடுத்­தா­லும், இது­வரை தமிழ்­நாடு கண்­டி­ராத வளர்ச்­சியை, நம்­மு­டைய தமிழ்­நாடு பார்த்­தது. இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ ரம் கொண்ட மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை நாம் உயர்த்­தி­னோம். ‘தின­மும் ஒரு 
திட்­டம்’ என்று சொல்­லத்­தக்க வகை­யில் 
திட்­டங்­களை உரு­வாக்­கி­னோம். அனைத்­துத் தரப்பு மக்­க­ளை­யும் நாம் கவ­ரும் வகை­யில் திட்­டங்­கள் தீட்­டி­னோம். 
திட்­டங்­கள் மக்­க­ளி­டம் சென்று சேர்ந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நமது ஆட்­சி­யின் மீது இருந்த நம்­பிக்­கை­யால்­தான், தமிழ்­நாட்டை நோக்­கிப் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லி­ருந்து, பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து உலக அள­வில் மிகப்­பெரிய நிறு­வ­னங்­கள் எல்­லாம் வந்­தன; தொழில் தொடங்­கி­னார்­கள். அது­மட்­டு­மல்ல, அனைத்து மாவட்­டங்­க­ளி­லும்வேலை­வாய்ப்­பு­கள்பெரு­கி­யது. அண்டைமாநி­லங்­க­ளில் ஆட்சி செய்­யும், அர­சி­யல் ரீதி­யாக நமக்கு எதி­ர­ணி­யில் இருக்­கும் தலை­வர்­கள்­கூட இதனை வெளிப்­ப­டை­யா­கப் பாராட்­டி­னார்­கள்;சில பேர் பொறா­மைப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், இப்­போது ஆட்சி மாற்­றம் நடந்­தி­ருக்­கி­றது. ஆட்சிமாற்­றம் நிகழ்ந்த ஒரே மாதத்­திற்­குள்­ளேயே, தமிழ்­நாடுஇன்­றைக்கு அத­ல­பா­தா­ளத்­திற்­குப் போகும்ஒரு சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொழில் நிறு­வ­னங்­கள் இந்­தப் புதிய ஆட்­சியை நம்­பித் தமிழ்­நாட்­டுக்கு வரப்­பயப்­ப­டு­கி­றார்­கள், தயங்­கு­கி­றார்­கள்; அத­னால், வேறு மாநி­லங்­க­ளுக்­குச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள். என்ன கார­ணம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சட்­டம்–­ஒ­ழுங்­கைப் பற்­றிச் சொல்­லவே தேவை­யில்லை. பாலி­யல் கொடு­மை­கள், போதை மருந்து நட­மாட்­டம், பெட்­ரோல் குண்டு வீச்சு, அரி­வாள் வெட்­டு­கள், கொள்­ளை­கள் மற்­றும் அரா­ஜ­கங்­கள் – டி.வி.யைப் பார்த்­தாலே, பேப்­ப­ரைப் படித்­தாலே இந்­தச் செய்­தி­கள்­தான் நம் கண்­களில் படு­கின்­றன. அதி­லும் குறிப்­பாக, நிறைய குற்­றங்­க­ளில் ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­களே சம்­பந்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள். அது­தான் வேதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">மக்­க­ளைத் திசை­தி­ருப்­பும் வேலை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">இன்­றைய ஆட்­சி­யி­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு பக்­கத்­தில், மின்­வெட்டு, விவ­சா­யி­கள் போராட்­டம் எனப் பல்­வேறு பிரச்­சி­னை­கள். ஆனால், எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல், “டேக் டைவர்­ஷன்” என்று திசை­தி­ருப்­பும் வேலை­க­ளில் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, இவர்­க­ளு­டைய இந்த ‘டெக்­னிக்’மக்­க­ளுக்கு இப்­போது புரிய ஆரம்­பித்­து­விட்­டது. இப்­போ­து­தான் பேச ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். “தவறு செய்­து­விட்­டோம்” என வாக்­க­ளித்­த­வர்­களும் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள்; வாக்­க­ளிக்­கா­த­வர்­களும் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள். அவர்­களே தன்­னெ­ழுச்­சி­யா­கப் பல இடங்­க­ளில் இப்­போது போராட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். இன்­றைக்கு அமைச்­சர்­கள் எங்­கா­வது காரில் நிகழ்ச்­சிக்­குச் செல்­லும்­போது, வழி­ம­றித்­துக் கேள்வி கேட்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள். இந்­தச் சூழ­லில், மக்­க­ளுக்­குத் துணை­யாக நாம்­தான் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டைக் காக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">பொறுப்பு நமக்கே அதி­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டைக் காக்­கும் பொறுப்­பும் கட­மை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­குத்­தான் அதி­க­மாக இருக்­கி­றது. ஏன் என்­றால், நாம் பார்த்­துப் பார்த்து வளர்த்த தமிழ்­நாட்டை, சீர­ழிய விடக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழப்­பது என்­பது, ஏதோ பெரிய வீழ்ச்சி அல்ல. எத்­த­னையோ வெற்­றி­யைப் பார்த்­தி­ருக்­கி­றோம்; எத்­த­னையோ தோல்­வி­யை­யும் பார்த்­தி­ருக்­கி­றோம். தி.மு.க. வைப் போன்று, வெற்றி பெற்ற கட்­சி­யும் கிடை­யாது; தோல்வி அடைந்த கட்­சி­யும் கிடை­யாது. அத­னால்­தான் சொல்­கி­றேன், தி.மு.க.வின் இருப்பு என்­பது வெறும் வாக்­குச் சாவ­டி­க­ளைத் தாண்டி, லட்­சக்­கணக்­கான உடன்­பி­றப்­பு­க­ளின் இத­யங்­களில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பேர­றி­ஞர் அண்­ணா­வால் 1949–ஆம்ஆண்டு கொட்­டும் மழை­யில் வட­சென்னைராபின்­சன் பூங்­கா­வில் தொடங்கிவைக்­கப்­பட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு, இன்று வலி­மை­யான அமைப்­போடு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உண்­மைத் தொண்­டர்­க­ளான உடன்­பி­றப்­பு­க­ளின் வியர்­வை­யா­லும், இரத்­தத்­தா­லும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்தஇயக்­கத்தை எந்­தக் கொம்­ப­னா­லும் வீழ்த்தமுடி­யாது; தொட்­டுக் கூட பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கட்­ட­மைப்பே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கழ­கத்­தின் பெரிய பலம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உடன்­பி­றப்­பு­க­ளின் உழைப்­பும், நமதுஇயக்­கத்­தின் கட்­ட­மைப்­பும்­தான் கழ­கத்­தின் பெரிய பலம். அதைத்­தான் இந்த இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக நான் அதி­க­மான அள­விற்கு நம்­பு­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>