<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,68,958,1065" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 16:41:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260630T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30062026-VLR-07" position.sequence="07" ex-ref="30062026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">பொய்­யிலே பிறந்து… பொய்­யிலே வளர்ந்து…</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup730731_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லோ­ரை­யும் விலைக்கு வாங்­க­லாம் என த.வெ.கவின் அதி­கார போதைக்­கும் எதை வேண்­டு­மா­னா­லும் விற்­க­லாம் எனும் வைகோ­வின் பேரா­சைக்­கும் முதன்­மு­த­லாக ஒரு அடி விழுந்­தி­ ருக்­கி­றது. த.வெ.க குதிரை பேரத்­தில் ஈடு­ப­டு­கி­றது என எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் பகி­ரங்­க­மாக குற்­றம்­சாட்­டி­ய­போது, ‘அய்யோ நாங்­களா நாங்­கள் தூய சக்தி ஆயிற்றே ‘ என்­றெல்­லாம் நாட­கம் ஆடி­ய­வர்­க­ளுக்கு வைகோ ஒரு முடி­வுரை எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வென்ற இரண்டு ம.தி.மு.க எம்.எல்.ஏக்­க­ளை­யும் ராஜி­னாமா செய்து அழைத்து வாருங்­கள் நான் அவர்­க­ளுக்­காக இடைத்­தேர்­த­லில் பிரச்­சா­ரம் செய்­கி­றேன்’ என்று முதல்­வர் விஜய் சொன்­னதை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். எதிர்க்­கட்சி எம்.எல்.ஏக்­களை ராஜி­னாமா செய்ய வைத்து தன்­பக்­கம் இழுக்­கும் குதி­ரை­பேர  யுத்­தி­யின் நாய­க­னான அமித்­ஷா­கூட இவ்­வ­ளவு துணிச்­ச­லாக தன்னை வெளிப்­ப­டுத்­திக் கொண்­ட­தில்லை. குதிரை பேர அர­சி­ய­லின் நாய­க­னாக த.வெ.க தலை­வர் திகழ்­கி­றார் என்­பதை தனது வாக்­கு­மூ­லத்­தின் மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் வைகோ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இந்த வெட்­கக்­கேட்டை மறைக்க அவர் முன்­வைக்­கும் வாதம் என்ன தெரி­யுமா? ’’எங்­கள் கட்சி எம்.எல்.ஏக்­களை ராஜி­னாமா செய்­ய­வி­டா­மல் தி.மு.க தடுக்­கி­றது. அதில் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ம.தி.மு.கவி­லி­ருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்­து­விட்­டார். இன்­னொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  ம.தி.மு.கவில் தொடர்ந்­தா­லும் எம்.எல்.ஏ பத­வியை ராஜி­னாமா செய்ய மறுத்­து­விட்­டார். இது­மட்­டும் குதி­ரை­பே­ரம் இல்­லையா’’  என்று கேட்­கி­றார். இதை­விட கேவ­ல­மான ஒரு வாதம் இருக்­க­மு­டி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கூட்­ட­ணி­யில் ஒரு கட்சி வேட்­பா­ளர் அந்த கூட்­ட­ணி­யின் முதன்மை கட்சி சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வென்ற பிறகு கூட்­ட­ணியை முறிப்­பது மட்­டு­மல்ல அந்த எம்.எல்.ஏக்­க­ளை­யும் ராஜி­னாமா செய்­யச்­சொல்லி நிர்ப்­ப ந்­திப்­பது பச்­சை­யான வெளிப்­ப­டை­யான குதி­ரை­பே­ரம். மேலும் சட்­டப்­ப­டியே ஒரு­வர் இன்­னொரு கட்சி சின்­னத்­தில் நின்று போட்­டி­யி­டும்­போது தனது கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யையே ராஜி­னாமா செய்­து­விட்­டு­தான் போட்­டி­யி­டு­கி­றார். அந்­த­வ­கை­யில் சட்­டப்­படி அந்த இரண்டு உறுப்­பி­னர்­க­ளும் ம.தி.மு.க உறுப்­பி­னர்­களே கிடை­யாது. முக்­கி­ய­மாக வைகோ­விற்கு அவர்­களை விற்­ப­தற்­கான உரிமை கிடை­யாது. அவர்­கள் முழுக்க முழுக்க தி.மு.க சின்­னத்­தில் போட்­டி­யிட்டு தி.மு.க வாக்­கு­களை பெற்று சட்­ட­மன்­றம் சென்­ற­வர்­கள். அவர்­களை ராஜி­னாமா செய்­யச்­சொல்லி நிர்­பந்­திப்­ப­தும் அந்த காலி­யி­டங்­களை த.வெ.கவிற்கு தாரை­வார்க்க திட்­ட­மி­டு­வ­தும், அவர்­களை த.வெ.கவி­டம் கொண்­டு­போய் ஒப்­ப­டைக்க முயற்­சிப்­ப­தும் அர­சி­யல் கீழ்­மை­யின்உச்­ச­கட்­டம். அந்த இரண்டு ம.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வர் வைகோ­வின் இந்த கீழ்­மையை எதிர்த்து தி.மு.கவில் தன்னை இணைத்­துக் கொண்­டார். இன்­னொ­ரு­வர் தான் ம.தி.மு.கவில் இருந்­தா­லும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்ய முடி­யாது என்று கூறி­விட்­டார். இரண்டு பேருக்­கா­க­வும் த.வெ.கவி­டம் பேரம்­பே­சி­விட்­டு­வந்த வைகோ­விற்கு இப்­போது என்ன செய்­வ­தென்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ இந்த கூட்­டணி முறி­விற்கு முன்­வைக்­கும் கார­ணங்­க­ளி­லா­வது ஏதே­னும் நாண­யம் இருக்­கி­றதா? அவர் சொல்­லும் முத­லா­வது கார­ணம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டச் சொல்லி தி.மு.க நெருக்­கடி கொடுத்­த­தாம். ம.தி.மு.கவிற்கு குறைந்­த­பட்ச வாக்­கு­வங்­கி­கூட இல்லைஎன்­பதை தெரிந்­து­தான் தி.மு.க உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட வைகோ­வைக் கேட்­டுக்­கொண்­டது. அதி­லும் ஒரு தொகு­தி­யில் ம.தி.மு.க சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­லாம் என்று சொன்­ன­போது கூட, ‘ இல்லை நாங்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டு­கி­றோம் ‘ என்று சொன்­ன­வர் வைகோ. இப்­போது நரம்­பில்­லாத நாக்கு மாற்­றிப் பேசு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் இட­து­சா­ரி­க­ளும் வி.சி.கவும் முஸ்­லீம் லீக்­கும் அவ­ர­வர் சின்­னத்­தில் போட்­டி­யிட தி.மு.க இணங்­கி­ய­போது ம.தி.மு.கவை மட்­டும் கட்­டா­யப்­ப­டுத்த என்ன அவ­சி­யம் இருக்­கி­றது. அப்­ப­டியே கட்­டா­ய­ப­டுத்­தி­யி­ருந்­தால் கூட்­ட­ணியை விட்டு போவ­தில் அவ­ருக்கு என்ன தடை இருந்­தது? அப்­போ­தும் யாரா­வது வரு­வார்­களா என த.வெ.க கதவை திறந்­து­வைத்­து­தான் காத்­துக்­கொண்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ­வின் துய­ரம் என்­ன­வென்­றால் த.வெ.க அதிக இடங்­க­ளைப் பெற்று அதே­ச­ம­யம் பெரும்­பான்மை இல்­லாத சூழல் ஏற்­ப­டும் என்று அவர் கற்­ப­னை­கூட செய்­ய­வில்லை. தி.மு.க கூட்­டணி கட்­சி­கள் ஒவ்­வொன்­றாக த.வெ.க பக்­கம் போன­தும் தனக்­கும் விழ­வேண்­டிய ‘லாட்­டரி ‘ ஒரு நம்­ப­ரில் தவ­றி­யது போல வைகோ மன­மு­டைந்து விட்­டார். கார­ணம் தன் கட்­சியை சேர்ந்­த­வர்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வென்­ற­தால் அவர்­க­ளைக் கூட்­டிக்­கொண்டு கிளம்ப கட்­சித்­தா­வல் தடைச்­சட்­டம் பெரும் தடை­யாக மாறி­விட்­டது. ஒரு விதத்­தில் த.வெ.க அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்ற கட்­சி­க­ளைப் பார்த்து கடும் பொறா­மை­யால் ஏற்­பட்ட ஒரு பதற்­றம் என­லாம். அது­தான் தி.மு.க தன் கைக­ளைக் கட்­டிப்­போட்­டு­விட்­டது என்று கத­று­கி­றார். குதிரை பேரத்­தில் ஈடு­பட முடி­யா­மல் வைகோ என்ற பொய்க்­கால் குதி­ரையை லாயத்­தில் கட்­டி­ய­தால்­தான் இவ்­வ­ளவு கோபம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்­த­தாக வைகோ­வின் இன்­னொரு பொய், தி.மு.க கூட்­ட­ணி­யில் எட்டு வரு­டங்­க­ளாக மன­நெ­ருக்­க­டி­யோடு இருந்­தா­ராம். அந்த மன­நெ­ருக்­க­டி­யோ­டு­தான் முத­லில் தனக்­கும் பிறகு தன் மக­னுக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைப் பெற்­றுக்­கொண்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ தி.மு.கவிற்கு செய்த தொடர் துரோ­கங்­க ­ளுக்­காக கலை­ஞ­ரும் இன்­றைய தி.மு.க தலை­வ­ரும் அவ­ரைத் தொடர்ந்து மன்­னித்­தார்­கள் என்­ப­து­தான் உண்மை. வைகோ இது­வரை வகித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதவி அனைத்­தும் தி.மு.கவின் கரு­ணை­யால் பெற்­றவை. தி.மு.கவை உடைத்து கட்­சியை அழிக்க முயற்­சித்­த­வரை, முன்­னர் ஒரு­முறை தி.மு.க கூட்­ட­ணிக்­குத் துரோ­கம் செய்து அ.தி.மு.க கூட்­ட­ணி­யில் அடைக்­க­லம் ஆன­வரை, மக்­கள்­நல கூட்­ட­ணியை அமைத்து சொற்ப வாக்­கு­க­ளில் 2016இல் தி.மு.கவை ஆட்­சிக்கு வர­வி­டா­மல் தடுத்­த­வரை பா.ஜ.கவிற்கு எதி­ரான ஒரு மத­சார்­பற்ற வலி­மை­யான கூட்­ட­ணியை அமைக்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே தி.மு.க, ம.தி.மு.கவை கூட்­ட­ணி­யில் இணைத்­துக்­கொண்­டது. ஆனால் 2016 தேர்­த­லின்­போது கலை­ஞரை சாதிப்­பெ­யரை சொல்லி இழி­வு­ப­டுத்­திய வைகோவை எந்த தி.மு.க தொண்­ட­னும் இன்­று­வரை மன்­னிக்­கத் தயா­ராக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ சொல்­லும் இரண்­டா­வது கார­ணம் தி.மு.க- அ.தி.மு.க கூட்­டணி அமைக்க முயற்­சித்­தா­க­வும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்­ட­ணி­யில் இருப்­ப­தால் அது மத­சார்­பின்­மைக்கு இழைத்த துரோ­கம் என்­றும் பேசு­கி­றார். நடக்­கவே நடக்­காத ஒன்றை நடந்­த­தாக கூறி தனது இழி செய­லுக்கு நியா­யம் தேடு­கி­றார். பா.ஜ.வோடு தமிழ்­நாட்­டில் கூட்­டணி அமைத்து மோடியை ’வெண்­தாடி பெரி­யார்’ என வியந்­தோ­திய வெட்­கம்­கெட்ட வாய்­தான் வைகோ­வு­டை­யது. இவர்­தான் இப்­போது பாஜ­கவை பற்­றிப் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என எல்­லோ­ரு­ட­மும் மாறி மாறி கூட்­டணி வைக்­க­லாம். ஆனால் தி.மு.க – அ.தி.முக கூட்­டணி என்று ஒருவதந்தி பரப்­பி­னாலே பொங்கி எழுந்­து­வி­டு­வா­ராம். சோறு கண்ட இடம் சொர்க்­கம் என்­பதை மறைக்க எத்­தனை நாட­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைகோ இப்­போது ஆடிக்­கொண்­டி­ருக்­கும் இந்த பசப்பு நாட­கம் அவ­ரது அர­சி­யல் வாழ்­வின் இறுதி அத்­தி­யா­யத்தை எழு­திக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>