<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,765,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 01 2026 03:42:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260701T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01072026-MDU-07" position.sequence="07" ex-ref="01072026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் போதை ஆசா­மி­க­ளுக்கு அறி­வுரை கூற முடி­யாத</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">முத­ல­மைச்­சர், போதை ஒழிப்­புக்கு ஓட்­டப்­பந்­த­யம் நடத்தி என்ன பயன்?</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="60"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">போராட்­டம் தொட­ரும் என முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு ஆவே­சப் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Pressmeetseka_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Pressmeetseka1_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூலை1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கழக மாண­வ­ரணி சார்­பில் தமி­ழக வெற்றி கழக அமைச்­சர்  சரத்­கு­மார் பொது­வெ­ளி­யில் போதைப் பொருள் உப­யோ­கப்­ப­டுத்­தி­யதை கண்­டித்து ஒருங்­கி­ணைந்த சென்னை. மாவட்ட  மாண­வர் அணி சார்­பில் சென்னை , எழும்­பூர், ராஜ­ரத்­தி­னம் விளை­யாட்டு மைதா­னம் அரு­கில் 29.6.2026 திங்­கட்­கி­ழமை காலை 9.30 மணி அள­வில் நடை­பெ­ற­வி­ருந்த ஆர்­பாட்­டம்  முறை­யாக அனு­மதி கேட்­ட­ போ­தும் அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலை­யில்100க்கும் மேற்­பட்ட கழ­கத் தோழர்­களை  அதி­கா­லை­யில் வலுக்­கட்­டா­ய­மாக கைது செய்­த­தால்  காலை 10.00 மணி­ய­ள­வில் சென்னை கிழக்கு மாவட்ட கழ­கச்  செய­லா­ளர்  பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ அவர்­கள் தலை­மை­யில் மேயர் பிரியா ராஜன்,கழக மாண­வர் அணி செய­லா­ளர் ஈரோடு வீர­மணி, கழக மருத்­துவ அணிச் செய­லா­ளர் டாக்­டர் நா. எழி­லன், தமி­ழன் பிர­சன்னா மற்­றும் 2500க்கும் மேற்­பட்­டோர்  புர­சை­வாக்­கம் டவுட்­டன் பகு­தி­யில் ஊர்­வ­ல­மாக சென்று  சாலையை மறித்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">234 பெண்­கள் உள்­பட 690 பேர் கைது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில் 690 பேரை போலீ­சார் கைது செய்­த­னர். அதில் 234 பெண்­கள் கைதா­யி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் பி.கே.மூர்த்தி, கே.எஸ்.எம்.நாதன், கே. சந்­துரு, சி.மகேஷ் குமார், பகுதி செய­லா­ளர்­கள் ஐசி­எப் வ.முர­ளி­த­ரன்,  எ.நாக­ரா­ஜன், செ.தமிழ்­வேந்­தன், எம்.சாமிகண்ணு, வே.வாசு, கோபி கூ.பீ.ஜெயின், ஜோசப் சாமு­வேல், டி.எஸ்.பி. ராஜ­கோ­பால், எம்.டி.ஆர்.நாக­ராஜ், எஸ்.ராஜ­சே­கர், எஸ்.முரளி மற்­றும் மாமன்ற உறுப்­பி­னர்­கள், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள், மாவட்ட / பகுதி / வட்ட அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் 
கலந்­து­கொண்டு ஆர்ப்­ப­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில்­சென்னை கிழக்கு மாவட்ட கழக செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. அவர்­கள் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஸ்டேடி­யத்­தில் அமர்ந்து கிரிக்­கெட்போட்­டி­யைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­போது, போதை மாத்­தி­ரை­யைப் பொடி­யாக்கி அதனை நுக­ரும் பணி­க­ளில் அமைச்­சர் ஈடு­பட்­டி­ருந்­ததை, தமிழ்­நாட்­டின் உள்ள அனைத்து ஊட­கங்­க­ளும், அதே­போன்று யூடி­யூப் போன்ற தனி­யார் இணை­யச் சேனல்­க­ளும் என்று ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நா­டும் வெளி­யிட்­டி­ருந்த வேளை­யில், அது­கு­றித்து அர­சின் கவ­னத்தை ஈர்க்­க­வும், சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்­க­வும், திரா­விட முன்­னேற்­றக் கழக மாண­வ­ரணி சார்­பில் போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">போராட்­டத்­திற்கு முறை­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அனு­மதி கேட்­டோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு அந்­தப் போராட்­டம், சென்னை மாவட்­டத்­தில் ஒரே இடத்­தில் ராஜ­ரத்­தி­னம் ஸ்டேடி­யம் அரு­கில் போரா­டு­வ­தற்கு – ஆர்ப்­பாட்­டம் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தோம். அது அனு­ம­திக்­கப்­பட்ட இடம். அது குறித்து முறை­யாக நேற்­றைக்கே மனு அளித்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் முத­லில் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கில் அனு­மதி கேட்­டி­ருந்­தோம். ஆனால், அங்கு கம்­யூ­னிஸ்ட் பேரி­யக்­கத்­தின் ஆர்ப்­பாட்­டம் இருப்­ப­தால், “நீங்­கள் ராஜ­ரத்­தி­னம் ஸ்டேடி­யத்­தில் நடத்­திக் கொள்­கி­றீர்­களா?” என்று கேட்­டார்­கள். நாங்­க­ளும், ராஜ­ரத்­தி­னம் ஸ்டேடி­யத்­தில் நடத்­திக் கொள்­கி­றோம் என்று ஒப்­பு­தல் அளித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்று காலை­யில் அது சம்­பந்­த­மான மேடை அமைக்­கும் பணி­கள் தொடங்­கு­கி­ற­போது, இரு­பத்­தைந்­திற்­கும் மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர், குறிப்­பாக, எழும்­பூர் காவல்­துறை ஆணை­யா­ளர் ராஜேந்­தி­ரன், அந்­தப் பகு­தி­யின் காவல்­துறை உதவி ஆணை­யா­ளர் ஜெக­தீஷ், ஒரு முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், வழக்­க­றி­ஞர் என்று கூடப் பாரா­மல் கழுத்­தில் கையை வைத்து வாக­னத்­தில் ஏற்­று­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் நாய­கன் வழி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">எங்­கள் போராட்­டம் தொட­ரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த மேடை அமைப்­ப­தற்­கும், ஒலி–­ஒளி அமைப்­ப­தற்­கும் கொண்டு வரப்­பட்­டி­ருந்த வாக­னங்­க­ளைப் பறி­மு­தல் செய்து கொண்டு சென்­ற­து­டன், மேடை அமைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தொழி­லா­ளர்­க­ளை­யும் கைது செய்­தி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்ன தீவி­ர­வாத இயக்­கத்­திற்கு ஆத­ர­வா­கவா போராட்­டக் களத்­தில் இருக்­கி­றது? நியா­ய­மான கோரிக்­கை­களை வற்­பு­றுத்­த­வும், கேட்­காத காதி­ன­ராக இருக்­கும் இந்த அர­சாங்­கத்­தின் செவி­க­ளுக்கு சென்று சேர்­வ­தற்­கும், கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­கா­க­வும்­தான் இந்த ஆர்ப்­பாட்­டம்! இது வெறும் ‘டிரெய்­லர்’தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கட்­ட­ளையை ஏற்று, ஒரு இடத்­தில் நடத்த இருந்த ஆர்ப்­பாட்­டத்தை, சென்­னை­யில் மூன்று இடங்­க­ளில் மாற்றி, கைது நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருப்­பது எங்­க­ளது இயக்­கத்­திற்கு மேலும் உத்­வே­கத்தை அளிக்­கும். அடிக்க அடிக்க எழு­கின்ற பந்­தா­க­வும், அரைக்க அரைக்க மணக்­கின்ற சந்­த­ன­மா­க­வும், தீட்­டத் தீட்ட ஜொலிக்­கின்ற வைர­மா­க­வும் திகழ்­ப­வர் திரா­விட மாடல் ஆட்­சி­யின் நாய­கன். நெருக்­க­டி­யையே சிரித்து முகத்­து­டன் 24 வய­தில் சந்­தித்­த­வர். அவ­ரு­டைய படை, சிறைக்கு அஞ்­சாது. கொடுஞ்­சி­றைச்­சாலை என்­றா­லும் சரி, அல்­லது காவல்­து­றை­யின் தடி­ய­டிப் பிர­யோ­கம் என்­றா­லும் சரி, சிரித்த முகத்­தோடு சிறைச்­செல்ல தயார், தயார், தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இந்த அர­சு­தான் எங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">போராட்­டத்­திற்கு தள்­ளி­யுள்­ளது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு அரசு எங்­களை எப்­படி அணு­கு­கி­றதோ, அதே போன்று தமிழ்­நாடு அர­சி­டம் எங்­க­ளு­டைய அணு­கு­முறை இருக்­கும் என்­ப­தைத் தெரி­வித்து, இந்­தப் போராட்­டம் தொட­ரும், தொட­ரும், தொட­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">செய்­தி­யா­ளர்:–காவல்­துறை, ஐந்து முழு வேலை நாட்­க­ளுக்கு முன்­பாக போராட்­டத்­திற்கு உண்­டான அனு­மதி கேட்க வேண்­டும். அவ்­வாறு கேட்­கா­த­த­னால்­தான் நாங்­கள் அனு­மதி கொடுக்­க­வில்லை என்று சொல்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பி.கே.சேகர்­பாபு:–நான் 45 ஆண்டு காலம் அர­சி­யல் இயக்­கத்­தில் பய­ணிப்­ப­வன். இது­போன்ற போராட்­டங்­க­ளில் ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி என இரண்­டி­லும் இருந்­த­வன். காவல்­துறை நினைத்­தால், ஒரு­நாள் அன்றே கூட அனு­மதி கேட்­டால் கொடுத்து நடை­பெற்ற போராட்­டங்­கள் ஏரா­ள­மாக உள்­ளன. எனவே மறுக்­கி­றோம் என்­றால்,முறை­யாக எங்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­தி­ருந்­தால், நாங்­கள் நீதி­மன்­றத்தை நாடி இருப்­போம் அல்­லது நீங்­கள் சொல்­வது போன்று சட்­டத்­திற்கு உட்­பட்டு கூட நாங்­கள் வந்­தி­ருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­கள் அனு­மதி மீது எந்­த­வி­த­மான தக­வ­லை­யும் தெரி­விக்­கா­மல், காலை­யிலே மேடை அமைப்­ப­வர்­க­ளைக் நீங்­கள் கைது செய்­யும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­தால்­தான், தற்­போது இங்கு நாங்­கள் சாலை மறி­யல் செய்ய வேண்­டிய சூழ்­நி­லைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளோம். போராட்­டக் களத்­திற்கு தி.மு.கவா­கச் செல்­ல­வில்லை; இந்த அர­சு­தான் எங்­க­ளைப் போராட்­டக் களத்­திற்கு தள்­ளி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">மக்­க­ளுக்­கான போராட்­டம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">செய்­தி­யா­ளர்:–தி.மு.க. எப்­போ­தும் மக்­கள் பிரச்­சி­னை­க­ளுக்­காக போரா­டு­கிற இயக்­கம். மக்­க­ளுக்கு பாதிப்­பில்­லா­மல் இருக்­கும். ஆனால் இன்­றைக்கு, சாலை மறி­ய­லி­னால் ஒரு மணி நேரத்­திற்கு மேலாக இந்­தச் சாலை­யில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் இருக்­கி­றது என்­பது குறித்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பி.கே.சேகர்­பாபு:–இது­வும் மக்­க­ளுக்­கா­கத்­தான் நாங்­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். முத­ல­மைச்­சர் வரும்­போது சாலை­யில் ஏற்­ப­டும் போக்­கு­வ­ரத்து நெரி­சலை விட­வும், கரூ­ரில் ஏற்­பட்ட சம்­ப­வத்­தில் 41 உயிர்­கள் பலி­யா­னதை விட­வும், இது ஒன்­றும் பெரி­ய­தல்ல. தமிழ்­நாட்­டின் மனித வளத்­தைக் காக்­க­வும், தமிழ்­நாட்­டின் போதை கலாச்­சா­ரத்தை ஒழிக்­க­வும் தான் நாங்­கள் போரா­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் ஒரு அமைச்­சரே போதை பழக்­கத்­திற்கு ஆளா­கி­யுள்­ளார். கடந்த இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு ‘மாரத்­தான்’ ஓடி­ய­தில் என்ன பயன்? தன் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் போதை ஆசா­மி­க­ளுக்கே அறி­வுரை சொல்ல இய­லாத முத­ல­மைச்­சர், போதை ஒழிப்­பிற்­காக ஓட்­டப்­பந்­த­யம் நடத்தி என்ன பலன்? அதற்­கா­கத்­தான் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வுக்கு இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அச்­சு­றுத்­த­லுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அஞ்ச மாட்­டோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது­வும் மக்­க­ளுக்­குத் தொந்­த­ரவு கொடுப்­ப­தற்­காக அல்ல. நாங்­கள் கேட்ட இடத்­தில் முறை­யாக அனு­ம­தித்­தி­ருந்­தால், முழக்­கங்­களை எழுப்­பி­விட்டு கலைந்து சென்­றி­ருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் காட்­டாற்று வெள்­ளம். பல தடை­க­ளைத் கடந்து வரும் இயக்­கம். இது நீரோடை, தொடர்ந்து ஓடிக்­கொண்டே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அச்­சு­றுத்­தல்­க­ளாலோ, மிரட்­டல்­க­ளாலோ அடி பணிய வைக்க முடி­யாது என்­ப­தற்கு, இது ஒரு ‘டிரெய்­ல­ரா­கக்’ இன்­றைக்கு காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர்  பதவி விலக வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">செய்­தி­யா­ளர்:–அந்த அமைச்­சர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று எதிர்­பார்க்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பி.கே.சேகர்­பாபு:–நிச்­ச­ய­மாக அவரை பதவி நீக்­கம் செய்ய வேண்­டும். அது ஒரு பாட­மாக இருக்க வேண்­டும். அவரை மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டும். அவர் ‘கொக்­கைன்’ உப­யோ­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றாரா என்று ஆய்­வ­றிக்கை கேட்க வேண்­டும். இந்­தப் பாடம் தமிழ்­நாட்­டில் இருக்­கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும் ஒரு பாட­மாக அமை­யும் என்­ப­தால் தான் இதை வற்­பு­றுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நேற்று முன்தினம் மாலை விடு­தலை ஆன பின் முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு செய்­தி­            யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது : –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புதி­தாக ஏற்­பட்­டுள்ளதற்­குறி அர­சாங்­கத்­தில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் நிலையும் அறி­யா­மல், தேர்­த­லில் அவ­சர கோலத்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பல­னாக இன்­றைக்கு ஒரு அமைச்­சரின் பின்­ன­ணி­யைப் பார்த்தால் ஒரு குடும்­பத்­தையே கையில்  உருட்­டுக்­கட்டை வைத்து அடித்து நொறுக்­கு­கின்ற அமைச்­சர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு அமைச்­சர் பார்த்­தால் குழந்­தை­யின் காலை பிடித்து பாலி­யல் சீண்­டல் செய்­யக்­கூ­டிய அமைச்­சர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு அமைச்­ச­ரைப் பார்த்­தால் வாயைத் திறந்­தாலே அண்டப் புளுகு, ஆகா­சப் புளுகு என்­பார்­கள்.  ஆனால் தார்ப்­பாயில் வடி­கட்­டி புளுகிக் கொண்டு இருக்­கின்ற  அமைச்­சர் மார்­டின் மாஃபியா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடிக்­கின்ற மழை­யில் கரைந்து போகின்ற மண்­ணாங்­கட்­டிக் கூட்­டம் நாங்­கள் அல்ல. அடிக்­கின்ற தூசி காற்­றால் பறக்­கின்ற பேப்­பர் அல்ல. கொள்­கை­யால் உயர்ந்து நிற்­கின்ற இம­யத்­தின் உய­ரத்­தைக் கொண்ட உறு­தி­மிக்க தலை­வர் முன்­னாள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் எங்­கள் உயி­ரி­னும் மேலான அன்பு தலை­வர் தள­பதி அவர்­கள் இயக்­கு­கின்ற இயக்­கம் என்­ப­தால் இந்த இயக்­கத்தை தொட்­டுப் பார்க்­க­வும் ஆட்டிப் பார்க்கவும்அசைத்­துப் பார்க்­க­வும் முடி­யாது என்­பதை இந்த போராட்­டத்­தின் வாயி­லாக தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>