<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,64,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 30 2026 16:50:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260701T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01072026-VLR-04" position.sequence="04" ex-ref="01072026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup733983_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup732612_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘200ரூபாய்உ.பி.க்கள்’ என்று எகத்­தா­ளம் பேசிய விஜய்­யின் விசில் ரசி­கக் கூட்­டத்­திற்­கும், த.வெ.க அர­சுக்­கும் சரி­யான பதி­ல­டி­யைத் தந்­துள்­ளது தி.முக. மாண­வ­ரணி. “நாங்­கள் இரண்­டா­யி­ரம் ஆண்டு கால ஆரிய ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரான திரா­வி­டத் தீப்­பி­ழம்­பு­கள். உங்­க­ளைப் போல ஓடி ஒளி­கிற தலை­வ­னைக் கொண்ட கூட்­ட­மல்ல” என்­பதை தி.மு.க. உடன்­பி­றப்­பு­கள், ‘பவு­டர்’ அமைச்­சர் மீதான நட­வ­டிக்­கையை வலி­யு­றுத்­திய வலி­மை­மி­குந்த போராட்­டத்­தின் மூல­மா­கத் தமிழ்­நாடு 
முழு­வ­தும் மெய்ப்­பித்­துள்­ள­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பேர­றி­ஞர் அண்ணா காலத்­தில் 1953ஆம் 
ஆண்­டில் மும்­மு­னைப் போராட்­டம் அறி­விக்­கப்
­பட்­டது. களம் கண்­ட­னர் கழ­கத்­தி­னர். அண்ணா உள்­ளிட்ட கழ­கத்­தின்  நிர்­வா­கி­கள், போராட்­டத்­திற்கு 
முன்­ன­தா­கவே கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்­கள்.  மூன்­றா­வது முனை­யான கல்­லக்­கு­டிப் போராட்­டக் களத்­தில் தண்­ட­வா­ளத்­தில் தலை­வைத்­துப் படுத்து தமி­ழைக் காத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அவ­ரைத் தொடர்ந்து கழ­கத்­தின் மேலும் இரண்டு அணி­கள் அங்கே களம் கண்­டன. தடி­யடி, துப்­பாக்­கிச்­சூடு, உயிர்ப்­ப­லி­கள் என அன்­றைய காங்­கி­ரஸ் ஆட்­சி­யின் காவல்­து­றை­யி­ன­ரின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு அஞ்­சா­மல் மாதக்­க­ணக்­கில் சிறை கண்­ட­னர் தி.மு.க.வினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்தி ஆதிக்­கத்தை எதிர்த்து நடந்த மொழிப் போராட்­டத்­தில், தமி­ழுக்­காக உயி­ரைக் கொடை­யாக வழங்­கிய தொண்­டர்­க­ளைக் கொண்ட வர­லாற்­றுப் பெருமை தி.மு.கவுக்கு உண்டு.  பாளை­யங்­கோட்­டை­யில் தனி­மைச் சிறையை எதிர்­கொண்­ட­வர் கலை­ஞர். எமர்­ஜென்சி எனும் ஜன­நா­ய­கத்­தின் மீதான தாக்­கு­தலை எதிர்த்து, கலை­ஞர் முன்­னெ­டுத்த இந்­தி­யா­வின் இரண்­டா­வது சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் மிசா சட்­டத்­தின் கீழ் சிறை­யை­யும் சித்­தி­ர­வ­தை­யை­யும் எதிர்க்­கொண்ட நெஞ்­சு­றுதி மிக்க தலை­வ­ரின் தலை­மை­யில் இயங்­கு­கிற இயக்­கம் இது. ஈழத்­த­மி­ழர் உரிமை காக்­கும் போராட்­டங்­க­ளி­லும், இந்­தித் திணிப்பை எதிர்த்து கழ­கம் நடத்­திய சட்ட நகல் எரிப்­புப் போராட்­டத்­தி­லும் கலை­ஞர், பேரா­சி­ரி­யர் உள்­ளிட்ட தலை­வர்­க­ளு­டன் சிறை சென்­ற­வர்­தான் இன்­றைய நம் கழ­கத் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">போராட்­டக் கள­மும் சிறை­வா­ச­மும்  தி.மு.க. வின­ருக்கு வாழ்­வின் ஒரு பகுதி. பொது­வாழ்­வின் விழுப்­புண்­கள்- வீரத்­த­ழும்­பு­கள். “நாங்க வீட்­டை­விட்டு வெளியே வரும்­போதே வாய்க்­க­ரிசி போட்­டுத்­தான் வரோம்” என்று தென்­சென்னை மாவட்­டக் கழக முன்­னாள்  செய­லா­ளர் மாவீ­ரன் ஜெ.அன்­ப­ழ­கன் சொன்­னது ஒவ்­வொரு உடன்­பி­றப்­பின் உள்­ளத்து உணர்­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">76 ஆண்­டு­கால வர­லாறு கொண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அறப்­போர்க் களத்­தில் இரண்டு நிகழ்­வு­களை இங்கே குறிப்­பிட்­டுச் சொல்­வது 
பொருத்­த­மாக இருக்­கும். முதல் நிகழ்வு, ஈழத்­த­மி­ழர் விவ­கா­ரத்­தில் கழ­கம் நடத்­திய கண்­டன ஆர்ப்­பாட்­டப் பேரணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இலங்­கை­யில் வாழும் தமி­ழர்­க­ளுக்­காக எவ்­வித அர­சி­யல் பல­னு­மின்றி உண்­மை­யா­கப் பாடு­பட்ட ஒரே இயக்­கம் தி.மு.கழ­கம் மட்­டும்­தான். இலங்­கை­யில் அமைதி ஏற்­ப­டு­வ­தற்­காக, 1985ஆம் ஆண்­டில் பூடான் நாட்­டின் தலை­ந­க­ரான திம்பு நக­ரில் இந்­தியா முன்­னெ­டுத்த முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்தை பலன் தர­வில்லை. பேச்­சு­வார்த்­தை­யின் ஒரு­சார்­பான முடிவை இலங்­கைத் தமி­ழர் பிர­தி­நி­தி­கள் ஏற்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பேச்­சு­வார்த்தை முறிந்த நிலை­யில், சென்­னை­யில் தங்­கி­யி­ருந்த இலங்­கைத் தமி­ழர் தலை­வர்­களை இந்­தி­யாவை விட்டு வெளி­யேற்ற முடிவு செய்து, முதல்­கட்­ட­மாக ஆண்­டன் பால­சிங்­கம், சந்­தி­ர­ஹா­சன், சத்­தி­யேந்­திரா ஆகிய மூவ­ரை­யும் நாடு கடத்­தும் உத்­த­ர­வைப் பிறப்­பித்த ஒன்­றிய அரசு, அதை மாநி­லத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர். தலை­மை­யி­லான அ.தி.மு.க. அரசு மூலம் நிறை­வேற்­றத் தொடங்­கி­யது. மூவ­ரும் எம்.ஜி.ஆர். அர­சால் கைது செய்­யப்­பட்ட நிலை­யில், நாடு கடத்­தும் முடி­வைக் கண்­டித்து, தி.மு.க சார்­பில் கண்­டன ஆர்ப்­பாட்­டப் பேரணி நடை­பெ­றும் என அறி­வித்­தார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தலை­மைக் கழ­கத்­தின் அறி­விப்­புக்­கும் ஆர்ப்­பாட்­டப் பேர­ணிக்­கும் இடை­யில் 10 மணி நேரம் மட்­டுமே அவ­கா­சம் இருந்­தது. அந்த குறு­கிய நேரத்­திற்­குள் 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாளன்று சென்­னை­யில் 3 இலட்­சம் பேர் திரண்ட மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டப் பேர­ணியை நடத்தி ஒன்­றி­ய-­–மா­நில அர­சு­களை நடுங்­கச் செய்­த­து­டன், மூவ­ரை­யும் நாடு கடத்­தும் உத்­த­ர­வைத் திரும்­பப் பெறா­விட்­டால், இந்­தி­யப் பிர­த­ம­ருக்கு  கருப்­புக் கொடி காட்­டும் போராட்­டத்தை நடத்­து­வோம் என்று ஆர்ப்­பாட்­டத்­தின் முடி­வில் எச்­ச­ரிக்கை அறி­விப்பை கலை­ஞர் வெளி­யிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு முழு­வ­தும் ரயில் மறி­யல் போராட்­டம் என­வும் அறி­விக்­கப்­பட்­டது. அனைத்து ரயில்­க­ளை­யும் ரயில்வே நிர்­வா­கமே நிறுத்­தி­விட்­டது.  தி.மு.க வலி­மை­யு­டன் முன்­னெ­டுத்த போராட்­டத்­தால் சந்­தி­ர­ஹா­சன், பால­சிங்­கம், சத்­தி­யேந்­திரா என்று ஒவ்­வொ­ரு­வர் மீதான நாடு கடத்­தல் உத்­த­ர­வைத் தனித்­த­னி­யா­கத் திரும்­பப் பெற்­றது 
இந்­திய ஒன்­றிய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மற்­றொரு நிகழ்வு, 2012ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தி.மு.க.வால் நடத்­தப்­பட்ட சிறை நிரப்­பும் போராட்­ட­மா­கும். அப்­போது செல்வி.ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அ.தி.மு.க.வின் அடா­வடி அரா­ஜக அரசு நடந்து கொண்­டி­ருந்­தது. தி.மு.க நிர்­வா­கி­கள் மீது பொய்­யான வழக்­கு­கள் போடப்­பட்­டன. நில 
அப­க­ரிப்பு வழக்கு போடு­வ­தற்­கா­கவே தனிச் சட்­டம் கொண்டு வந்­தார் ஜெய­ல­லிதா. அத்­து­டன் விலை­வாசி உயர்வு, மின்­கட்­ட­னம்- ‘பேருந்­து­கட்­ட­ணம்-’ பால் கட்­ட­ணம் ஆகி­யவை உயர்த்­தப்­பட்டு பொது­மக்­கள் பெரும் அவ­திக்­குள்­ளா­யி­னர். இவற்­றைக் கண்­டித்து தி.மு.க. சார்­பில் சிறை நிரப்­பும் மறி­யல் 
போராட்­டத்தை அறி­வித்­தார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">போராட்­டத்தை முன்­னெ­டுக்­கும் பொறுப்பு அப்­போ­தைய இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரான இன்­றைய கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தார் கலை­ஞர். கழ­கத்­தின் அனைத்­துத் தரப்­பை­யும் அவர் ஒருங்­கி­ணைத்­தார். போராட்ட நாளன்று தமிழ்­நாடே கருப்­பு-­சி­வப்­புக் கொடிக் காடாக மாறி­யது. தலை­ந­க­ரம் சென்­னை­யில் தள­பதி தலை­மை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான உடன்­பி­றப்­பு­கள் மறி­ய­லில் ஈடு­பட்டு கைதா­கி­னர். மக­ளி­ர­ணி­யி­னரை மறி­யல் களத்­தில் இறக்கி, அவர்­க­ளு­டன் கைதா­னார் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. இளை­ஞ­ர­ணி­யி­னர் பெரு­ம­ள­வில் 
கைதா­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தலை­வர் கலை­ஞ­ரின் ஆணைக்­கி­ணங்க, இன்­றைய நம் கழ­கத் தலை­வர் 2012ல் முன்­னெ­டுத்த சிறை நிரப்­பும் போராட்­டத்­தில் ஆண்­க­ளும் பெண்­க­ளு­மாக ஒன்­றரை இலட்­சம் உடன்­பி­றப்­பு­கள் தமிழ்­நாடு முழு­வ­தும் கைதா­கி­னர். எத்­தனை நாட்­கள் வேண்­டு­மா­னா­லும் சிறைக்­குச் செல்­லத் தயா­ராக இருக்­கி­றோம் என்று சொல்­வது போல துணி­ம­ணி ­களை கைப்­பெட்­டி­க­ளில் எடுத்து வந்­தி­ருந்­த­னர். ஆட்­சி­யில் இல்­லா­விட்­டா­லும், கலை­ஞ­ரின் கட்­ட­ளையே ஏற்று, கழ­கத்­தின் கடை­சித் தொண்­டன்­கூட களம் காண்­பான். சிறைக்கு அஞ்­ச­மாட்­டான் என்று அணி திரண்டு, ஜெய­ல­லி­தா­வின் ஆண­வத்தை நொறுக்­கி­யது தி.மு.கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஜெய­ல­லிதா அர­சாங்­கம் இப்­ப­டி­யொரு போராட்­டத்தை எதிர்­பார்க்­க­வில்லை. மாலை நெடு­நே­ரம் காத்­தி­ருந்­த­னர் போலீஸ் அதி­கா­ரி­கள். எண்­ணிக்­கை­யைக் குறைத்­துக் காட்ட முயற்­சித்­தும், 94 ஆயி­ரம் பேர் கைது என்­று­தான் அறி­விக்க முடிந்­தது. அத்­தனை பேரை எந்த சிறை­யில் வைப்­பது? தமிழ்­நாட்­டில் உள்ள சிறைச்­சா­லை­கள் போதாது. அனை­வ­ரை­யும் விடு­விக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்த  ஜெய­ல­லி­தாவை விட­வும் மோச­மான ஆட்­சியை நடத்தி வரும் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க.ஆட்­சி­யில் அமைச்­ச­ராக உள்ள சரத்­கு­மார் என்­ப­வர் ‘பவு­டர்’ பயன்­ப­டுத்­தும் ரீல்ஸ் வீடி­யோவை அவரே பதி­விட்­டி­ருந்த நிலை­யில், தவ­றான முன்­னு­தா­ர­ண­மாக உள்ள அந்த அமைச்­சர்  மீது நட­வ­டிக்கை கோரி தி.மு.க மாண­வ­ரணி சார்­பில் ஆர்ப்­பாட்ட
 அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு­நாள் இடை­வெ­ளி­யில், தமிழ்­நாடு முழு­வ­தும் கழக மாண­வ­ர­ணி­யி­ன­ரும் கழக நிர்­வா­கி­க­ளும் ஆயி­ர­மா­யி­ர­மாய் அணி திரண்ட நிலை­யில், ஆர்ப்­பாட்­டத்­திற்கு அனு­மதி மறுத்­தது விஜய் அர­சின் காவல்­துறை. எனி­னும்,  ரீல்ஸ் ஆட்­சி­யின் அலங்­கோ­லத்­தை­யும் ஆபத்­தை­யும் அத­னால் தமிழ்­நாடு எதிர்­கொள்­ளும் அவ­லத்­தை­யும் முழக்­கங்­க­ளாக எழுப்­பி­னர் உடன்­பி­றப்­பு­கள். அமைச்­சர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய அரசு, கழ­கத்­தி­ன­ரைக் கைது செய்­தது. எனி­னும், தமிழ்­நாடு முழு­வ­தும்  
29.-6.-2026 அன்று எழுச்­சி­யு­டன் நடந்த போராட்­டத்­தில் கைதான உடன்­பி­றப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யைக்கண்டு மிரண்ட விஜய் அரசு, மாலை­யில் விடு­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இடைப்­பட்ட நேரத்­தில், கழ­கத்­தி­னர் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மண்­ட­பங்­க­ளில் கொள்கை முழக்­கங்­களை எழுப்­பி­ய­து­டன், பவு­டர் அமைச்­ச­ரின் செய்­கையை ரீல்ஸ் வடி­வில் வெளி­யிட்டு மக்­க­ளி­டம் இந்த ஆட்­சி­யின் அவ­லத்தை கொண்டு சேர்த்­த­னர். சிறைச்­சா­லையை பட்­டி­மன்ற கவி­ய­ரங்க மேடை­க­ளாக மாற்­றிய அன்­றைய தி.மு.க.வின­ரின் மரபு வழி தொடர்ச்­சியை இதில் பார்க்க முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆட்சி வரும்.. போகும்.. தி.மு.க.வின­ரின் கொள்கை உணர்­வும் கழ­கத்­தின் வலி­மை­யும் நிலை­யா­னது என்­பதை மாண­வ­ரணி முன்­னெ­டுத்த 
கழ­கத்­தி­ன­ரின் ஆர்ப்­பாட்­டம் த.வெ.க. அர­சுக்கு உணர்த்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>