<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1224" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 30 2026 16:50:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260701T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01072026-VLR-05" position.sequence="05" ex-ref="01072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup733796_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup734036_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M7_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டந்த ஐந்­தாண்­டு­க­ளாக டில்லி உள்­ளிட்ட இந்­திய பெரு­ந­க­ரங்­க­ளில், முற்­போக்­கான, முதிர்ச்­சி­யுள்ள அர­சி­யல் பார்­வை­யா­ளர்­க­ளி­டையே, ஊக்­க­மிக்க இளை­ஞர்­க­ளி­டையே பேசும்­போது தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­க­ளைப் பார்த்து அவர்­கள் கூறும் வச­னம் ஒன்று இருந்­தது: “உங்­க­ளுக்கு என்ன, ஸ்டாலின் இருக்­கி­றார்!” என்­ப­து­தான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனெ­னில் ஒன்­றிய அர­சி­லும் சரி, பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளி­லும் சரி நடக்­கும் அர­சி­யல் நாக­ரீ­க­மற்ற, பண்­பாட்டு முதுற்­சி­யற்ற, நெறி­களுக்கு புறம்­பான செயல்­களை பார்க்­கும்­போ­தெல்­லாம் தமிழ்­நாட்­டில் நடக்­கும் தி.மு.க. ஆட்சி உண்­மை­யி­லேயே அவர்­க­ளுக்கு ஏக்­கப் பெரு­மூச்சை வர­வ­ழைப்­ப­தாக இருந்­தது. ஸ்டாலின் ஆட்­சி­யில் தமிழ்­நாட்டு அரசு மக்­க­ளாட்­சி­யின் மாண்பை உயர்த்­து­வ­தாக இருந்­தது. மக்­கள் நலத்­திட்­டங்­க­ளும், பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், கல்வி, அறி­வுப்­புல மறு­ம­லர்ச்­சி­யும் இணைந்து நடப்­ப­தாக இருந்­தது. அத­னால்­தான் பிற மாநி­லங்­க­ளில் உள்ள முற்­போக்­கா­ளர்­கள் தமிழ்­நாட்டை முன்­மா­தி­ரி­யா­கப் பார்த்­தார்­கள். பா.ஜ.க. வெறுப்­ப­ர­சி­யல் அலையை தடுக்­கும் அர­ணா­கப் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு முற்­றி­லும் மாறாக மற்­றொரு சாரார் எப்­போ­தும் இருப்­பார்­கள். அது “இந்து- இந்தி- 
இந்­தியா” என்ற கருத்­தி­யலை ஏற்­கும் அணி. பார்ப்­ப­ன-­ப­னியா மேலா­திக்­கத்­தினை உயர்த்­திப்­பி­டிக்­கும் அணி. பல்­வேறு கட்­சி­க­ளி­லும் இதற்­கான ஆட்­கள் இருப்­பார்­கள். தி.மு.க. என்­றுமேஆபத்து; நெருப்பு. நெருப்பை அணைக்க வேண்­டு­மா­னால் சாக்­கடை ஜலத்­தைக் கூட எடுத்து வீச­லாம் என்­ப­து­தான் அவர்­கள் கொள்கை. ராகுல் காந்­திக்­கும், விஜய்க்­கும் பால­மாக இருக்­கும் 
பிர­வீன் சக்­ர­வர்த்­தி­யின் நேர்­கா­ணலை துக்­ளக் பத்­தி­ரிகை வெளி­யிட்­டி­ருப்­ப­தைக் காண­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சங்­கி­க­ளின் செயல்­முறை  தி.மு.க-.விற்கு 
எதி­ராக மக்­க­ளி­டையே ஓயா­மல் வதந்­தி­க­ளைப் பரப்­பு­வ­து­தான். அது இந்து மதத்­திற்கு எதி­ரா­னது என்­பார்­கள்; கோயில்­களை இடிக்­கி­றார்­கள் 
என்­பார்­கள்; இந்­திய ஒற்­று­மைக்கு எதி­ரா­னது என்­பார்­கள்; ஊழல் தலை­வி­ரித்து ஆடு­கி­றது என்று பெரும் கட்­டுக்­க­தை­களை பரப்­பு­வார்­கள்; தி.மு.க. தலித் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ரா­னது. அவர்­க­ளுக்கு எது­வும் செய்­ய­வில்லை என்று ஒரு சாரார் ஒரு தலை­பட்­ச­மான கருத்­துக்­களை பிரச்­சா­ரம் செய்­வார்­கள். மற்­றும் சிலர் தமிழ் தேசி­யத்தை வீணாக்­கி­விட்­டது என்று சொல்லி பிள­வு­வாத சிந்­த­னை­ க­ளைத் தூண்­டு­வார்­கள். இவை எல்­லா­வற்­றிற்­கும் இந்­திய பெருந்­தே­சிய நல்­லாசி கிடைக்­கும். எப்­ப­டி­யா­வது தி.மு.க. ஆட்சி தொட­ரக்­கூ­டாது. அந்த கட்சி பல­வீ­ன­ம­டைய வேண்­டும். அர­சி­ய­லில் இருந்து அகற்­றப்­பட வேண்­டும் என்­பதே அவர்­களது ஒரே நோக்­க­மாக இருக்­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெகு­ஜன மன­நிலை என்­பது எப்­போ­துமே பிள­வு­பட்­டது. அது ஒரு வகை­யில் என்­ன­தான் ஏற்­றத்­தாழ்வு இருந்­தா­லும், நிலை­பட்ட சமூக அமைப்­பின் பாது­காப்பை விரும்­பக்­கூ­டிய பிற்­போக்கு மன நிலைஇருக்­கும். சமூக மாற்­றம் வேண்­டும் என்று நினைக்­கும்; ஆனால் நிலைத்­தன்­மைக்­கும் ஏங்­கும். அது­தான் தி.மு.க. எதிர்ப்­பா­ளர்­க­ளின் பெரும்­ப­லம். தி.மு.க. அர­சி­யல் என்­றுமே எதிர்­நீச்­சல் அர­சி­ய­லாக இருக்க வேண்­டிய சூழ்­நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை நன்­றா­கப் புரிந்த தி.மு.க. எதிர்ப்பு 
அர­சி­யல் தலை­வர்­கள் முதல் வேலை­யாக மாங்­காடு, மூகாம்­பிகை என்று கோயில்­க­ளுக்கு செல்­வார்­கள். அது பக்தி என்று கூறப்­ப­டும்; ஆனால் மக்­கள் அதை பிற்­போக்கு நிலைத்­தன்­மை­யின் குறி­யீ­டாக புரிந்­து­கொள்­வார்­கள். காலம் கால­மாக, தெய்­வங்­கள், பூசாரி வர்க்­கம், மன்­னர்­கள் என்ற அர­ச­மைப்பு உள­வி­ய­லின் தொடர்ச்சி, 
பழ­மை­வாத ஏக்­கம் இதில் செயல்­ப­டு­வது தி.மு.க. எதிர்ப்­புக்கு வலுச்­சேர்க்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அரை நூற்­றாண்­டுக்­கா­லம் தி.மு.க.-வை வழி­ந­டத்­திய கலை­ஞர் வைணைவ சீலர் ராமா­னு­ஜர் வாழ்க்கை வர­லாற்­றி­னையே தொலை­காட்­சித் தொட­ராக எழுதி, அவ­ரது ஜாதி வேற்­று­மைக்கு எதி­ரான முற்­போக்கு சிந்­த­னையை பாராட்­டி­னா­லும் தனிப்­பட்ட முறை­யில் மத வழி­பாட்டை மேற்­கொண்­ட­தில்லை. அந்த வழி­யி­லேயே ஸ்டாலி­னும் பய­ணிக்­கி­றார். இந்த தலை­மைப் பண்பு இந்­துத்­துவ கருத்­தி­யல் மேலா­திக்­கத்­திற்கு எதி­ரான சம­ர­ச­மற்ற நிலை­பாட்டை உணர்த்­து­வதாக இருக்­கி­றது. தனிப்­பட்ட கட­வுள் பக்தி வேறு, மத அடை­யா­ள­வா­தம் வேறு என்­றா­லும், தலை­வர்­கள் பகுத்­த­றிவு சார்ந்­த­வர்­க­ளாக இருப்­பது பொது­வெ­ளி­யில் மதச்­சார்­பின்­மையை வலுப்­படுத்­து­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை­யெல்­லாம் இணைந்­து­தான் திடீ­ரென நடி­கர் விஜய் 107 தொகு­தி­க­ளில் நிறுத்­திய திடீர், குபீர் வேட்­பா­ளர்­கள் அவர் முகத்­தால் வெற்­றி­பெற்று, இப்­போது ஒரு கூட்­டணி அர­சொன்று அமைந்­துள்­ளது. பெரும்­பான்மை இல்­லா­த­தால் ஆட்சி அமைப்­ப­தில் சிக்­கல் ஏற்­பட்டு ஆளு­னர் ஆட்சி என்ற மறை­முக பா.ஜ.க. ஆட்சி ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்று சொல்லி தி.மு.க கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ், வி.சி.க, முஸ்­லீம் லீக் ஆகிய கட்­சி­கள் இப்­போது த.வெ.க அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றுள்­ளன. இரண்டு கம்­யூ­னிஸ்டு கட்­சி­க­ளும் வெளி­யி­லி­ருந்து ஆத­ரவு தரு­கின்­றன. ம.தி.மு.க. தலை­வர் வைகோ­வும் விஜயை சந்­தித்­துப் பேசி விட்டு, தி.மு.க. கூட்­ட­ணி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த சூழ்­நி­லை­யில் இரண்டு முக்­கி­ய­மான கேள்­வி­கள் எழு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒன்று, விஜய் உண்­மை­யி­லேயே பா.ஜ.க. எதிர்ப்­பா­ளர் என்று கருதி 
தி.மு.க. தலை­மை­யில் மத­ச்சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்ற கட்­சி­கள் விஜய் 
அர­சின் அலங்­கோ­லங்­கள் மீதான விமர்­ச­னங் 
­க­ளுக்கு பொது­மன்­றத்­தில் தடுப்­ப­ரண் அமைத்து செயல்­ப­டு­வது சரியா? இரண்டு, ஆளு­னர் ஆட்சி வரக்­கூ­டாது என்­ப­தற்­காக விஜய் அரசு தமிழ்­நாட்டு நலன்­களை சீர்­கு­லைப்­பதை வேடிக்கை பார்க்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விஜ­யின் பா.ஜ.க. எதிர்ப்­பின் போலித்­த­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜோசப் விஜய் பா.ஜ.க. ஆத­ர­வா­ளர் கிடை­யாது என்று பல­ரும் கரு­து­கி­றார்­கள். காங்­கி­ரஸ் கட்­சியை அமைச்­ச­ர­வை­யில் இணைத்­துள்­ளார், ராகுல் காந்­தியை பத­வி­யேற்பு விழா­விற்கு அழைத்­தார், கம்­யூ­னிஸ்டு கட்சி அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் சென்று ஆத­ரவு கேட்­டார், ஏன் பெரி­யார் திட­லுக்­குக் கூடச் சென்­றார் ஆகி­யவை கார­ணங்­கள். ஆனால் காங்­கி­ரஸ், தி.மு.க. பிரி­வது பா.ஜ.க.-விற்கு எவ்­வ­ளவு பெரிய ஆதா­யம் என்­பதை யாரும் பேசு­வ­தில்லை. இந்­தியா கூட்­ட­ணி­யில் கடு­மை­யான சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்­வ­ரும் 2029 தேர்­த­லி­லும் பா.ஜ.க. 
ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்­டு­மா­னால் காங்­கி­ர­ஸும், மாநில கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து செயல்­பட்­டால்­தான் இய­லும். அவ்­வா­றாக செயல்­பட காங்­கி­ரஸ் மீது மாநில கட்­சி­கள் நம்­பிக்கை வைக்­க­வேண்­டும். தி.மு.க-.வுடன் கூட்­ட­ணி­ ய­மைத்து போட்­டி­யிட்­டு­விட்டு த.வெ.க. ஆத­ர­வாக மாறி­யுள்­ளது காங்­கி­ர­ஸின் நம்­ப­கத்­தன்­மையை பெரு­ம­ளவு பாதித்­துள்­ளது. அதன் மூலம் பா.ஜ.க.-விற்கு பெரி­ய­தொரு நன்­மையை செய்­துள்­ளார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. காங்­கி­ரஸ் கூட்­டணி உண்­மை­யிலேயே காங்­கி­ரஸை பலப்­ப­டுத்­தும் என்­றால் பா.ஜ.க. எவ்­வ­ளவு பதட்­டம் அடைந்­தி­ருக்க வேண்­டும்? எங்­க­ளுக்கு 2026 சட்­ட­மன்­றத் தேர்­தல் முக்­கி­ய­மல்ல, 2029 நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­தான் முக்­கி­யம் என்று அறி­வித்த பா.ஜ.க. எத­னால் இப்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது? ஐந்­தாண்­டு­க­ளாக இல்­லாத அதி­ச­ய­மாக ஆளு­னர் ஏன் முழுஒத்­து­ழைப்­புத் தந்து சட்­ட­மன்­றத்­தில் உரை நிகழ்த்­து­கி­றார்? ஏன் வி.சி.க. அமைச்­சர் வன்னி அரசுபா.ஜ.க.-வை விமர்­சித்­துப் பேசும்­போது அவைத்­த­லை­வர் அவ­ச­ர­மா­கக் குறுக்­கி­டு­கி­றார்? கொள்கை எதிரி, பாசிச பா.ஜ.க.-வை விமர்­சித்­தால் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இதற்­கெல்­லாம் பின்­ன­ணி­யில் ஒரு விடை தெரி­யாத கேள்வி இருக்­கி­றது. சி.பி.ஐ. கரூர் நெரி­சல் மர­ணம் குறித்த விசா­ர­ணை­யில் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றது? ஏன் தேர்­த­லுக்கு முன் இரண்டு முறை விஜய் டில்­லிக்கு அழைக்­கப்­பட்­டார்? ஏன் இரண்­டா­வது முறை சி.பி.ஐ அலு­வ­லக வளா­கத்­தி­லி­ருந்தே வெற்­றிக் குறி காட்­டி­ய­படி பவ­னி­வர அனு­ம­திக்­கப்­பட்­டார்? அந்த விசா­ர­ணை­யின் முடி­வு­கள் ஏன் இன்­னும் வெளி­யா­க­வில்லை? இன்­னும் எத்­தனை மாதங்­கள் அதற்­குத் தேவை? அந்த விசா­ர­ணை­யைக் கண்­கா­ணிக்க அமர்த்­தப்­பட்ட ஓய்­வு­பெற்ற உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி என்ன செய்­கி­றார்? இறந்­து­போன அந்த 41 உயிர்­க­ளுக்கு நியா­யம் வழங்­கு­வது யார்? மக்­கள் பொது இடங்­க­ளில் பா.ஜ.க. விஜயை கட்­டுப்­ப­டுத்த அந்த விசா­ர­ணையை பயன்­ப­டுத்­து­கி­றது என்று பேசு­கி­றார்­கள். இது­தான் சட்­டத்­தின் ஆட்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் எந்த பிரச்­சினை குறித்­தும் பொது­வெளி­யில் பேசா­மல், அறிக்­கை­கள் விடா­மல் இருப்­பதன் மர்­மம் என்ன? ஊட­கங்­களை ஏன் சந்­திப்­ப­தில்லை? கொள்கை எதிரி குறித்து எது­வுமே பேசா­மல் எப்­படி தன் கொள்­கை­களை மக்­க­ளி­டம் கொண்டு செல்­வ­தில் வெற்றி பெறு­வார்? கொள்கை எதி­ரி­கள் தொடர்ந்து பிரச்­சா­ரம் செய்­கிறார்­களே? அது குறித்து அவ­ருக்கு கவலை 
இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு யூடி­யூப் சேன­லில் ராகுல் காந்தி- ஜோசப் விஜய் இணைப்­புப் பாலம் பிர­வீன் சக்­ர­வர்த்­தி­யின் நேர்­கா­ணல் ஒன்று மிக­வும் சுவா­ர­சி­ய­மாக இருக்­கும். அது வடி­வேலு நடித்த ஒரு நகைச்­சு­வைக் காட்­சியை நினை­வு­ப­டுத்­து­வ­தாக இருக்­கும். அந்த காட்­சி­யில் போலீ­ஸால் துரத்­தப்­ப­டும் திரு­டன் ஒரு­வன் வடி­வே­லு­வி­டம் “என்னை போலீஸ் துரத்­திக்­கொண்டு வரு­கி­றார்­கள். நான் உங்­க­ளி­டம் என்ன சொன்­னேன் என்று கேட்­பார்­கள். ஒன்­னும் சொல்­லீ­டா­தீங்க” என்று கூறி­விட்டு ஆற்­றில் குதித்­து­வி­டு­வான். போலீஸ் வடி­வே­லு­வி­டம் அவன் என்ன சொன்­னான் என்று கேட்­கும்­போது வடி­வேலு அவன் சொன்­ன­தைக் கூறு­வார். போலீஸ் அவன் சொன்­ன­தைக் கேட்­காதே, அவன் என்ன சொன்­னான் என்று சொல் என்று கேட்­பார்­கள். வடி­வேலு அவன் அதைத்­தான் சார் சொன்­னான் என்று கூறு­வார். போலீஸ் என்­னத்தை சொல்­லி­டா­தீங்க என்று சொன்­னான் அதைச்­சொல் என்று கேட்­பார்­கள். வடி­வேலு மீண்­டும் மீண்­டும் சொல்­லி­டா­தீங்க என்­று­தான் சொன்­னான் என்று சொல்லி அடி­வாங்­கு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­போல, நேர்­கா­ணல் செய்­ப­வர் பிர­வீன் சக்­ர­வர்த்­தி­யி­டம் பா.ஜ.க. கொள்கை எதிரி என்று அவர் எப்­படி சொல்­கி­றார் என்று கேட்­பார். பிர­வீன் சக்­ர­வர்த்தி அவர்­தான் சொல்­கி­றாரே என்று சொல்­வார். சரி, நீங்­கள் அதை எப்­படி ஏற்­றுக்­கொள்­கி­றீர்­கள் என்று கேட்­பார். பிர­வீன் சலிக்­கா­மல், அவர்­தான் கொள்கை எதிரி என்று சொல்­லி­விட்­டாரே என்­பார். அதை எப்­படி நம்­பு­கி­றீர்­கள் 
என்­றால் மக்­க­ளைக் கேளுங்­கள், விஜ­யின் கொள்கை எதிரி யாரென்று, அவர்­கள் சொல்­வார்­கள் என்­பார். சரி, நீங்­கள் எப்­படி சொல்­கி­றீர்­கள்என்­றால் நான் எப்­படி சொல்­ல­மு­டி­யும் அவர் சொல்­கி­றார், மக்­கள் சொல்­கி­றார்­கள் என்­பார். உண்­மை­யி­லேயே வடி­வேலு காமெடி போல சிரிப்­பாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜோசப் விஜய் பா.ஜ.க. தன்­னு­டைய கொள்கை எதிரி என்று சொன்­ன­தால் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த சில கட்­சி­கள் அவரை ஆத­ரிக்­கின்­றன. அவர் ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன. அவர்­கள் ஆத­ரவு அளிப்­ப­து­தான் அவர் பா.ஜ.க.வின் கொள்கை எதிரி என்­ப­தற்கு ஆதா­ரம். மற்­ற­படி அவர் நெற்­றி­யில் பொட்டு, தோளில் கோட்டு என்று சபையை அலங்­க­ரித்­தால் போதும் என்­ப­து­தான் புரி­த­லாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. ஆட்சி அலங்­கோ­லங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­னர் உரைக்கு நன்றி தெரி­வித்­துப் பேசிய முதல்­வர், எதிர்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்கு முறை­யா­கப் பதில் சொல்­லா­மல் ஏதேதோ பேசி­விட்டு இறு­தி­யில் நான் ஒரு சைகை செய்­யட்­டுமா என்று கேட்­கி­றார். அவைத்­த­லை­வர் “செய்­யுங்­கள் பிர­புவே!” என்ற வகை­யில் விந­ய­மாக அனு­ம­திக்­கி­றார்.  உடனே ஏதோ கழுத்தை அறுப்­ப­து­போல ஒரு சைகை செய்­கி­றார். எல்­லோ­ரும் சிரிக்­கி­றார்­கள். எட்டு கோடி பேர் வாழும், உல­கின் பண்­டைய பண்­பாட்­டைக் கொண்ட மக்­க­ளின் சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் செய்­யும் செயலா இது என்று யாரும் கேட்­ப­தில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அடுத்த முறை முதல்­வர் நட­ன­மா­டவா என்று கேட்­டா­லும் கேட்­க­லாம். ஏற்­க­னவே அமைச்­சர்­கள் பள்­ளி­க­ளில் குத்­தாட்­டம் போட்டு ஆட்­சி­யின் மேன்­மையை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். அவர்­க­ளும் சேர்ந்து சட்­ட­மன்­றத்­தில் ஆட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தலை­ந­கர் டில்­லி­யில் தமிழ்­நாட்டு அர­சின் சிறப்­புப் பிர­தி­நி­தி­யாக விஜய் நடித்து சென்­சா­ரால் முடக்­கப்­பட்ட ஜன­நா­ய­கன் படத்­தைத் தயா­ரித்த வெங்­கட் நாரா­யணா என்­ப­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு இது­வரை அரசு நிர்­வா­கத்­து­டனோ, அர­சி­ய­லு­டனோ எந்த தொடர்­பும் கிடை­யாது. தனி­யார் கம்­பெ­னி­களை நட த்தியுள்­ளார். இப்­போது ரியல் எஸ்­டேட், திரைப்­பட தயா­ரிப்பு ஆகி­ய­வற்­றில் ஈடு­ப­டும் கம்­பெ­னியை நடத்தி வரு­கி­றார். ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த இவர் பெங்­க­ளூ­ரு­வில் வசித்து வரு­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர் எந்த அடிப்­ப­டை­யில் தமிழ்­நாடு அர­சின் சிறப்­புப் பிர­தி­நி­தி­யாக, அமைச்­சர்­க­ளுக்கு இணை­யான அந்­தஸ்த்­து­டன் இயங்க நிய­மிக்­கப்­ப­டு­கி­றார் என்­பது பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே அவ­ரு­டைய மேலா­ள­ராக அவ­ரு­டைய படங்­க­ளில் பணி­பு­ரிந்­த­வ­ரும், தேர்­தல் பிர­சா­ரத்­திற்­காக ரூட் என்ற அமைப்பை நடத்­தி­ய­வ­ரு­மான ஜெக­தீஷ் பழ­னி­சாமி அவ­ரு­டைய தனி உத­வி­யா­ள­ராக அர­சால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. இப்­படி திரைத்­து­றை­ யில் தன்­னு­டன் பணி­யாற்­றி­ய­வர்­க­ளையே 
முக்­கிய பொறுப்­பு­க­ளில் அமர்த்­து­வது அரசு நிர்­வா­கத்தை நடத்த எப்­படி உத­வும் என்ற கேள்வி எழுந்­துள்­ளது. தனி உத­வி­யா­ள­ரா­வது அவ­ரு­டைய தனிப்­பட்ட பிரச்­சினை. ஆனால் அர­சின் பிர­தி­நி­தி­யாக டில்­லி­யில் எப்­படி அவ­ரு­டைய திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் செயல்­பட முடி­யும் என்­பது பெரும் வியப்­ப­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இன்­னொரு அமைச்­சர் சரத்­கு­மார் ஐயத்­திற்­கு­ரிய விதத்­தில் செல்­பே­சி­யில் கிரெ­டிட் கார்­டால் வெள்­ளைப் பொடி ஒன்றை திரட்டி ஐநூறு ரூபாய்த்­தா­ளில் சேர்த்­தும் காணொலி ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளில் பர­வ­லா­கி­யுள்­ளது. அது போதைப்­பொ­ருள் என்று பல­ரா­லும் கூறப்­ப­டு­கி­றது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">. சர்ச்சை இப்­போது தொலை­காட்­சி­யி­லும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. அந்த வீடி­யோவை அவரே “தக் லைஃப்” என்ற தலைப்­பு­டன் நண்­பர்­க­ளுக்­குப் பகிர்ந்த தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த சர்ச்சை வெடித்­ததை அடுத்து அவர் குழந்­தைக்கு மாத்­திரை பொடி செய்து கொடுத்­த­தாக விளக்­க­ம­ளித்­துள்­ளார். ஆனால் மாத்­தி­ரையை அப்­படி பொடிப்­பார்­களா, அதற்கு ஏன் தக் லைஃப் என்று பெயர் கொடுக்க வேண்­டும் என்று கேள்வி எழுப்­பப் படு­கி­றது. ஏற்­க­னவே வேறு சில அமைச்­சர்­கள் குடி­யு­டன் தொடர்­பு­ப­டுத்­திய சர்ச்­சை­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிய அமைச்­ச­ர­வை­தானே, சில பிரச்­சி­னை­ கள் ஏற்­ப­டத்­தான் செய்­யும். சிறிது அவ­கா­சம் கொடுக்க வேண்­டும் என்று பல­ரால் கூறப்­ப­டு­ 
கி­றது. இந்த அலங்­கோ­லங்­க­ளுக்­கெல்­லாம் மூல கார­ணம் ஒன்று இருக்­கி­றது. அது என்­ன­வென்­றால் முதல்­வர் விஜ­யின் மெளன விர­தம். மக்­கள் அவரை நம்­பித்­தான் வாக்­க­ளித்­தார்­கள். அவரே அப்­ப­டித்­தான் பிரச்­சா­ரம் செய்­தார். எல்லா தொகு­தி­க­ளி­லும் நான் தான் போட்­டி­யி­டு­கி­றேன் என்­றார். இப்­போது மக்­கள் அமைச்­சர்­க­ளைக் குறித்து, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் குறித்து கேள்வி எழுப்­பும்­போது அவர் மெள­னம் காக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெங்­கட் நாரா­ய­ணாவை ஏன் மாநி­லப் பிர­தி­நி­தி­யாக நிய­மிக்­கி­றேன் என்று முதல்­வர் விளக்­க­ம­ளிக்க வேண்­டாமா? அவ­ருக்கு அவ்­வாறு நிய­மிக்க அதி­கா­ரம் இருக்­கி­றது, உரிமை இருக்­கி­றதா என்­றால் அதனை மக்­க­ளுக்கு விளக்­கச் சொல்­லும் கட­மை­யும் இருக்­கி­றது அல்­லவா? இன்­று­வரை தமிழ்­நாட்­டில் மக்­க­ளாட்­சி­தானே தொடர்­கி­றது. இன்­னும் மன்­ன­ராட்சி ஆக­வில்­லையே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு நாளும் சர்ச்­சைக்­கு­ரிய பிரச்­சி­னை­கள் வெடித்த வண்­ணம் இருக்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஜாதி அடை­யா­ளத்­து­டன் கூடிய அட்­டை­கள் வழங்­கப்­ப­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று செங்­கோட்­டை­யன் கூறு­கி­றார். மூத்த அர­சி­யல்­வா­தி­யான அவ­ருக்கு இதில் அடங்­கி­யுள்ள பிரச்­சினை தெரி­யாதா. ஜாதி அடை­யா­ளம் சில சமூக நீதி சார்ந்த முன்­னு­ரி­மை­ க­ளுக்கு தேவை­தான். ஆனால் அதற்­காக அனை­வர் அடை­யாள அட்­டை­யி­லும் அதனை பொறிப்­பது எப்­படி சரி­யாக இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மற்­றொ­ரு­பு­றம் முஸ்­லீம்­க­ளுக்­கான பிற்­ப­டுத்­தப் ­பட்ட பிரி­வி­ன­ரில் உள்ள உள் இட ஒதுக்­கீடு ரத்து செய்­யப்­பட வேண்­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பு கூறி­யுள்­ளது. இது குறித்து அர­சின் நிலை­பாடு என்ன என்று முதல்­வர் அறி­விக்­க­வில்லை. அரசு மேல்­மு­றை­யீடு செய்­யும் என்று தெரி­கி­றது. ஆனால் முதல்­வர் தன்­னு­டைய கருத்தை வெளிப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் இல்­லையா? எவ்­வ­ளவு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யா­ னா­லும் மெள­னம் மட்­டும்­தான் அவ­ரு­டையே எதிர்­வினை என்­பது அர­சின் நம்­ப­கத்­தன்­மை­யையே குலைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.-வை விஜய் எதிர்க்­கி­றார் என்ற நம்­பிக்­கை­யில் அவரை ஆத­ரிக்­கும் கட்­சி­கள், அவ­ரு­டைய அர­சின் அலங்­கோ­லங்­களை கண்­டிக்க முன்­வர வேண்­டாமா? அந்த கட்­சி­க­ளின் ஆத­ரவை நம்­பா­மல்­தானே அவர் அ.இ.அ.தி.மு.க,, ம.தி.மு.க. 
எம்.எல்.ஏ-.க்­க­ளி­டம் பதவி வில­கச் சொல்லி 
பேசி வரு­கி­றார்? எப்­ப­டி­யா­வது இடைத்­தேர்­தல்­கள் மூலம் தனிப் பெரும்­பான்மை அடைந்­து­விட்­டால் பிறகு முற்­போக்கு சக்­தி­கள் பேச்­சி­னைப் பற்றி 
கவ­லைப்­பட வேண்­டாம்என்­று­தானே அவர் இயங்கு­கிறார்? எந்த நம்­பிக்­கை­யில் அல்­லது கன­வில் அவர் செயல்­பா­டு­களை ஆத­ரித்து தடுப்­ப­ரண் அமைக்­கின்­றன மதச்­சார்பற்ற முற்­போக்­குக் 
கூட்­ட­ணி­யில் இருந்த கட்­சி­கள்? இந்த மர்­மம்­தான் மக்­க­ளைக் குழப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13"> நன்றி: மின்னம்பலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இணைய தளம்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>