<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,757" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 30 2026 16:50:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260701T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01072026-VLR-07" position.sequence="07" ex-ref="01072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">ஜென்–z தி.மு.க.வின­ரைக் குறி வைத்து சோத­னை­கள்; கைது­கள்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">ஆளுங்­கட்­சி­யின் மக்­கள் விரோ­தப்­போக்கை அம்­ப­லப்­ப­டுத்­து­வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தஞ்சை மாவட்­டக் கழக முன்­னாள் இளை­ஞர் அணி நிர்­வாகி ராஜேந்­தி­ரன் இல்ல திரு­மண விழா­வில் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhayasir_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தஞ்சை, ஜூலை 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தஞ்சை மாவட்ட  இளை­ஞர் அணி முன்­னாள் துணை அமைப்­பா­ளர் டி.இரா­ஜேந்­தி­ரன் அவர்­க­ளின் மகன் டி.ஆர்.முத்து – பிரி­ய­தர்­சினி இணை­ய­ரின் திரு­ம­ணத்தை, திரு­வோ­ணம் அருகே சுக்­கி­ரன்­வி­டு­தி­யில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்டமன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்­துரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தஞ்சை மாவட்­டத்­தின் இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ள­ரா­கச் சிறப்­பா­கப் பணி­யாற்­றிய அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­க­ளின் அன்பு மகன் தம்பி முத்து, சகோ­தரி பிரி­ய­தர்­ஷினி இணை­ய­ரு­டைய திரு­ம­ணத்தை உங்­க­ளின் முன்­னி­லை­யில் நடத்தி வைப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரு­வோ­ணம் வடக்கு ஒன்­றி­யக் கழ­கம் சார்­பாக வருகை தந்­தி­ருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­கள் எனக்­குக் காலை­யி­லி­ருந்து மிகச் சிறப்­பான ஏற்­பா­டு­களை, வர­வேற்பை நீங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அதற்கு முத­லில் என்­னு­டைய நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­தி­ருக்­கி­றது. ஆனால், இங்கு இருக்­கக்­கூ­டிய உடன்­பி­றப்­பு­கள் உங்­க­ளின் எழுச்­சியை, உற்­சா­கத்­தைப் பார்க்­கும்­பொ­ழுது, ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போது எவ்­வ­ளவு எழுச்­சி­யாக இருந்­தோமோ, எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போது அதை­விட இன்­னும் வேக­மாக நீங்­கள் எல்­லாம் இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­க­ளைப் பற்றி உங்­க­ளி­டத்­தில் நான் எடுத்­துச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரிந்­த­வர்­தான். அவ­ரைப் பற்றி ஒன்­றி­ரண்டு விஷ­யங்­களை மட்­டும் உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">1979–ஆம் ஆண்டே தன்­னைக் கழ­கத்­தோடு இணைத்­துக்­கொண்­ட­வர்­தான் அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­கள். இந்த திரு­மண நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வ­தில் எனக்­கென்ன கூடு­தல் பெருமை என்­றால், அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­கள் இளை­ஞர் அணி­யி­லி­ருந்து வளர்த்­தெ­டுக்­கப்­பட்­ட­வர், ஆளாக்­கப்­பட்­ட­வர். எனவே, எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக மட்­டு­மல்ல கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ராக இந்த திரு­ம­ணத்தை நடத்தி வைப்­ப­தில் நான் மிகுந்த பெரு­மை­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­கள் ஒன்­றிய இளை­ஞர் அணி பொறுப்­பா­ள­ராக, பிறகு மாவட்ட இளை­ஞர் அணி­யின் துணை அமைப்­பா­ளர்  என்று  பல்­வேறு  பொறுப்­பு­க­ளில்  சிறப்­பா­கப்  பணி­யாற்­றி­ய­வர். கழ­கம் அறி­வித்த அனைத்­துப் போராட்­டத்­தி­லும் பங்­கேற்­றுச்      சிறை சென்­றி­ருக்­கக் கூடி­ய­வர்­தான் அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">1990–ஆம் ஆண்டு நம் கழ­கத் தலை­வர் அவர்­கள் தலை­மை­யில்­தான் அண்­ணன் ராஜேந்­தி­ரன் அவர்­க­ளின் திரு­ம­ணம் நடந்­தது. இன்­றைக்கு அண்­ண­னு­டைய மகன் திரு­ம­ணத்தை நான் நடத்தி வைக்­கின்ற வாய்ப்பை பெற்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">சோஃபா மாடல் கொடு­மை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைக்கு இந்த புதிய ஆட்சி, சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு நாடு என்ன நிலை­மை­யில் இருக்­கி­றது என்று உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும். அனை­வ­ரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். குறிப்­பாக, சட்­ட­மன்ற நிகழ்­வு­களை இன்­றைக்கு அனை­வ­ரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். ஆளுங்­கட்சி வரி­சை­யில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் அடிக்­கின்ற கூத்­து­களை நீங்­கள் தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். நானும் இங்கு இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நேர­லை­யில், நேரி­லேயே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அந்த கொடு­மை­கள் எல்­லாம் நேரில் பார்க்­கின்ற வாய்ப்பு எங்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">`தேசிய கீதம்’ இரண்டு முறை பாடு­கி­றீர்­களே, தமிழ்த்­தாய் வாழ்த்தை மட்­டும் ஏன் ஒரு முறை­தான் பாடு­கி­றீர்­கள் என்று கேட்­டால் அதற்கு முத­ல­மைச்­ச­ரி­ட­மி­ருந்து பதில் கிடை­யாது. இதற்கு முன்பு இருந்த முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் அவைக்­குள் வந்த உடனே, எதி­ரில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை எல்­லாம் பார்த்து வணக்­கம் வைப்­பார்­கள். ஆனால், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் அவைக்­குள் வந்த உடனே, எந்த ஆங்­கி­ளில் எத்­தனை கேமரா இருக்­கி­றது என்­ப­தைப் பார்ப்­ப­து­தான் முதல் வேலை­யாக வைத்­தி­ருக்­கி­றார். அத­னால், எங்­க­ளுக்­கெல்­லாம் சந்­தே­கம் வந்­து­வி­டு­கி­றது. அந்த அவைக்­குள் நாங்­கள் நுழைந்த உடனே, இது என்ன சட்­ட­மன்­றமா, இல்லை சினிமா திரை­ய­ரங்­கமா, இல்லை ஷூட்­டிங் ஸ்பாட்டா என்று கேட்­கும் அள­வுக்கு இன்­றைக்கு சட்­ட­மன்­றத்தை ஆளுங்­கட்­சி­யி­னர் மாற்றி வைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த அள­வுக்கு முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் தொடர்ந்து தன்­னு­டைய நடிப்­புத் திறனை ஒவ்­வொரு நாளும் காட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">முத்­து­வேல் கரு­ணா­நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">ஸ்டாலின்­தான் ஆள்­கி­றார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டு­மல்ல, அவைக்­குள் கதை சொல்­கி­றேன்என்று எதை எதையோ உள­றிக்­கொண்டு இருக்­கி­றார். நம் தலை­வரை அவர் தேடிக்­கொண்டு இருக்­கி­றா­ராம். நம் தலை­வர் என்­றைக்­குமே தேடிக் கண்­டு­பி­டிக்­கிற இடத்­தில் இருந்­த­வர் இல்லை. எப்­பொ­ழு­துமே மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்­த­வர்­தான், இன்­றைக்­கும் இருப்­ப­வர்­தான் நம் தலை­வர். மக்­க­ளின் இத­யத்­தில் பல்­வேறு திட்­டங்­கள் மூலம் இருக்­கி­றார். தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழந்­தா­லும் தில்­லாக, தெம்­பா­கப் போய் தொகுதி மக்­க­ளைச் சந்­தித்து நன்றி சொன்­ன­வர் நம் தலை­வர் அவர்­கள் என்­பதை இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் அவர்­கள் மறந்­து­விட்­டார். ஆனால், பெரம்­பூர் தொகு­தி­யில் இவர் வெற்றி பெற்­றாரே, இது­வ­ரைக்­கும் ஒரு முறை­யா­வது சென்று மக்­க­ளுக்கு நன்றி சொன்­னாரா என்று பார்த்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மிசா காலத்­தில்  காவல்­துறை தேடி­ய­போது, தானா­கச் சென்று கைதா­ன­வர் நம் தலை­வர் அவர்­கள்.  நம் தலை­வ­ரு­டைய பெயரை எங்­கும் தேட வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இன்­றைக்­குக் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம், புது­மைப் பெண் திட்­டம், இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளில் நம் தலை­வர்அவர்­கள் இருக்­கி­றார். இந்­தத் திட்­டங்­க­ளைத் தவிர்க்க முடி­யா­மல், நிறுத்த முடி­யா­மல் இந்த சோஃபா மாடல் அரசு இன்­றைக்­குத் தவித்­துக்­கொண்டு, திண­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இந்­தத் திட்­டங்­க­ளில் கை வைக்க வேண்­டும் என்று நினைத்­த­போது இந்த அர­சுக்கு நிச்­ச­யம் ஒரு பயம் வந்­தி­ருக்­கும். அந்­தப் பயம் இருக்­கிற வரைக்­கும் தமிழ்­நாட்டை ஆண்டு கொண்­டி­ருப்­பது நம் தலை­வர்­தான், திரு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்­தான். ஆகவே, `குரளி வித்தை’ காட்­டு­கிற  இந்த வேலையை நிறுத்தி வைத்­து­விட்டு, முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் இந்த அர­சும் ஆக்­கப்­பூர்­வ­மான பணி­க­ளைச் செய்ய வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">இது­தான் ஊழல் லட்­ச­ணமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவர்­க­ளின் ஆட்­சி­யில் இன்­றைக்கு மக்­கள் மின்­சா­ரம் எங்கே என்று தேடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். நன்­றாக இருந்த சட்­டம் ஒழுங்கு எங்கே போயிற்று என்று மக்­கள் இன்­றைக்­குத் தேடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக நம் தலை­வர் ஆட்­சி­யில் சரி­யாக ஜூன் 12 அன்று மேட்­டூர் அணையை நம் தலை­வர் அவர்­கள் திறந்து விட்­டார்­கள். ஆனால், இந்த ஆட்­சி­யில் அது நடந்­தி­ருக்­கி­றதா என்று பார்த்­தீர்­கள் என்­றால், இல்லை. எனவே, தண்­ணீர் எங்கே என்று இன்­றைக்கு மக்­கள் தேடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். மொத்­தத்­தில் தமிழ்­நாட்­டில் ஆட்சி என்று ஒன்று நடந்­தது அல்­லவா, அது இப்­போது எங்கே என்று இன்­றைக்­குத் தமிழ்­நாட்டு மக்­கள் தேட ஆரம்­பித்­துள்­ளார்­கள். அருகே உள்ள புதுக்­கோட்டை மாவட்­டத்­தி­லி­ருந்து ஒரு­வர் ஆளுங்­கட்­சி­யில் சேரப்­போ­வ­தா­கத் தின­மும் செய்­தி­கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வ­ளவு நாள் ஊழல் சக்­தி­யாக இருந்த அவர், இனி­மேல் தூய சக்தி ஆகி­வி­டு­வார். இது­தான் இந்த அர­சி­னு­டைய ஊழல் ஒழிப்பு லட்­ச­ணம் என்­பதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால், தொடர்ந்து தி.மு.க.வின­ரைக் குறி­வைத்து, அது­வும் ஜென்சி தி.மு.க.வின­ரைக் குறி வைத்­துப் பல சோத­னை­கள் நடத்­து­கி­றார்­கள், கைது நட­வ­டிக்­கை­யில் இறங்கி இருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் முறி­ய­டிக்க வேண்­டி­யது நம் கடமை. இந்த ஆட்­சி­யா­ள­ரு­டைய அநி­யா­யங்­களை உடன்­பி­றப்­பு­க­ளாக நாம் ஒன்­றாக இருந்து தோலு­ரித்­துக் காட்ட வேண்­டும். இந்த அர­சி­னு­டைய மக்­கள் விரோத செயல்­பா­டு­க­ளைத் தொடர்ந்து நாம் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும். அதை மன­தில் வைத்­துக்­கொண்டு கழக உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள் அத்­தனை பேரும் தீவி­ர­மா­கக் கள­மாட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதே­போல் மண­மக்­கள் இரண்டு பேருக்­கும் என்­னு­டைய அறி­வுரை என்­ன­வென்­றால், இரண்டு பேரும் விட்­டுக்­கொ­டுத்து, அதே நேரத்­தில் சுய­ம­ரி­யா­தை­யோடு சிறந்த நண்­பர்­க­ளாக இரு­வ­ரும் உங்­க­ளின் திரு­மண வாழ்க்­கையை அமைத்­துக்­கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, உங்­க­ளுக்­குப் பிறக்க இருக்­கக்­கூ­டிய குழந்தை அது ஆண் குழந்­தை­யாக இருந்­தா­லும் சரி, பெண் குழந்­தை­யாக இருந்­தா­லும் ஒரு அழ­கான தமிழ்ப் பெயரை நீங்­கள் சூட்ட வேண்­டும் என்று உங்­கள் அத்­தனை பேர் சார்­பா­கக் கேட்­டுக்­கொண்டு, மண­மக்­க­ளுக்கு மீண்­டும் உங்­கள் அத்­தனை பேர் சார்­பாக என்­னு­டைய வாழ்த்­து­க­ளைக் கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான துரை சந்­தி­ர­சே­க­ரன், முன்­னாள் அமைச்­சர்­கள் ரகு­பதி, அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, பழ­னி­மா­ணிக்­கம், கோவி.செழி­யன், மெய்­ய­நா­தன், வைத்­தி­ய­லிங்­கம், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் செல்­லப்­பாண்­டி­யன், பழ­னி­வேல், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முர­சொலி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணா­துரை, மருத்­து­வர் முத்­து­ராஜா, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அப்­துல்லா, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ராமச்­சந்­தி­ரன், நீல­மே­கம், ரெங்­க­சாமி, மகேஷ் கிருஷ்­ண­சாமி, மாந­கர செய­லா­ளர் தமி­ழ­ழ­கன், சன் ராம­நா­தன், ராஜேஷ், துணை மேயர்­கள் மருத்­து­வர் அஞ்­சு­கம் பூபதி, லியா­கத் அலி, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் செல்­வம், கீரை தமிழ்­ராஜா, கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் சந்­தி­ர­சே­கர், சுப.தமி­ழ­ழ­கன், சுப.சர­வ­ணன், கருப்­பையா, கன­க­வல்லி, ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் நடு­வூர் செல்­வ­ராஜ், முரு­கை­யன், செல்ல ரமேஷ்­கு­மார், கார்த்­தி­கே­யன், முத்­துக் கிருஷ்­ணன், பேரூர் கழக செய­லா­ளர் முரு­கே­சன், திரா­வி­டக் கதி­ர­வன், துரை ஜெயக்­கு­மார், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் சண்­மு­கம், முகில்­வேந்­தன், மாந­கர அமைப்­பா­ளர் வாசிம் ராஜா, துணை அமைப்­பா­ளர்­கள் செந்­த­மிழ்ச்­செல்­வன், சுரேஷ், வெங்­க­டே­சன், கார்த்­திக், உத­ய­நிதி, ஹரி­த­ரன், மருத்­து­வர் சந்­தி­ர­சே­க­ரன், வீர­மணி, சிவக்­கு­மார், அன்­சாரி பாஷித், மாந­கர துணை அமைப்­பா­ளர் மதி­பா­லன், ஒன்­றிய இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் பிரபு, செல்­லத்­துரை, அழ­கிரி, ஐயப்­பன், பேரூர் அமைப்­பா­ளர் ஃபரூக், உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>