<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1191,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 01 2026 16:36:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260702T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02072026-VLR-01" position.sequence="01" ex-ref="02072026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க அனுமதி நீட்டிப்பு!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">த.வெ.க. அரசின்  இரட்டை  வேடம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="30">கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் கண்டனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1261738_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanimozhiadph_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூலை 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம  சுரங்கம்  அமைக்க  த.வெ.க. அரசு அனுமதியை நீட்டித்திருப்பது தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். “இது த.வெ.க. அரசின்இரட்டை  வேடம்’’  என்று  கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழிகருணாநிதி எம்.பி.  தமது  சமூக  வலைதளப்பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கன்­னி­யா­கு­மரி  மாவட்­டம், மண­வா­ளக்­கு­றிச்­சி­யில் செயல்­பட்டு வரும் ஒன்­றியஅர­சின் இந்­திய அரிய மணல் ஆலைக்கு,அணு­சக்தி கனி­மங்­களை வெட்­டி­யெ­டுப்­ப­தற்­கான கால அனு­ம­தியை மேலும் ஓராண்­டுக்கு  நீட்­டித்து  த.வெ.க. அரசு    உத்­த­ர­விட்­டுள்­ளது. கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தின்   கிள்­ளி­யூர்   தாலு­கா­வுக்­குட்­பட்ட கீழ் மிடா­லம், மிடா­லம்,இன­யம் புத்­தன்­துறை, ஏழு­தே­சம் மற்­றும்கொல்­லங்­கோடு ஆகிய 5 முக்­கிய 
கட­லோ­ரக் கிரா­மங்­க­ளில், சுமார் 1,144 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் அணு தாது­ம­ணல் (இல்­ம­னைட், ருட்­டைல், ஜிர்­கான்,மோன­சைட்) வெட்டி எடுக்­கும் நட­      வ­டிக்­கைக்­காக பூர்­வாங்க பணி­களை மத்­திய பொதுத்­துறை நிறு­வ­ன­மான ஐ.ஆர்.­இ.­எல். தீவி­ரப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு தக்­க­லை­யில் உள்ள பத்­ம­ நா­ப­பு­ரம் சார் ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் கருத்­து­ கேட்பு கூட்­டம் நடத்த திட்­ட­மி­டப்­   பட்­டி­ருந்­தது. கட­லோர கிராம மக்­க­ளின் கடும் எதிர்ப்பு கார­ண­மாக கருத்து கேட்பு கூட்­டம் ரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதற்­கி­டையே இத்­திட்­டம் நாட்­டின் வியூக   முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது எனக் கூறி, இதற்­கான பொது­மக்­கள் கருத்து கேட்­புக் கூட்­டங்­கள் நடத்­து­வ­தி­லி­ருந்து ஒன்­றிய சுற்­றுச்­சூ­ழல் அமைச்­ச­கம் கடந்த 2025 ஜூலை மாதம் விலக்கு அளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­தொ­டர்ந்து, இத்­திட்­டத்­திற்­கான இறுதி அனு­ம­தி­யைப் பெறும் நோக்­கில், ஐ.ஆர்.­இ.­எல். நிறு­வ­னம் கடந்த மார்ச் 26 அன்று, ஒன்­றிய அர­சி­டம் புதிய கட­லோர ஒழுங்­கு­முறை மண்­டல ஒப்­பு­தல் கோரி விண்­ணப்­பித்­தது. இத்­திட்­டம் முழு­மை­யாக செயல்­பாட்­டுக்கு வந்­தால், ஆண்­டுக்கு 15 லட்­சம் டன் அணு தாதுக்­கள் வெட்டி எடுக்­கப்­ப­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், சமீ­பத்­திய ஒன்­றிய பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்­டுள்ள அரி­ய­வகை கனிம வழித்­த­டங்­கள் அமைக்­கும் திட்­ட­மும் இதற்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் ஹைட்ரோ கார்­பன் திட்­டம் மீன­வர்­­  களின் எதிர்ப்­பால் ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே முடங்­கி­யுள்ள வேளை­யில்,      தமி­ழ­கத்­தில் முத­ல­மைச்­சர் விஜய்  தலை­மை­யி­லான த.வெ.க. கூட்­டணி அரசு பொறுப்­பேற்­றுள்ள நிலை­யில், ஒன்­றிய அர­சு­டன் இணக்­க­மான உறவு என்ற புதிய அணு­கு­மு­றையை முன்­னெ­டுத்­துள்­ளது. இந்­நி­லை­யில், கன்­னி­யா­ கு­மரி மாவட்­டம், மண­வா­ளக்­கு­றிச்­சி­யில் செயல்­பட்டு வரும் ஒன்­றிய அர­சின் இந்­திய அரிய மணல் ஆலை அணு­சக்தி கனி­மங்­களை வெட்­டி­யெ­டுப்­ப­தற்­கான கால அனு­ம­தியை மேலும் ஓராண்­டுக்கு நீட்­டித்து   த.வெ.க.  அரசு  அதி­ர­டி­யாக உத்­த­ர­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழக அர­சின் இயற்கை வளங்­கள் துறை சார்­பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சா­ணை­யில், கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் கிள்­ளி­யூர் தாலு­கா­வில் உள்ள பல்­வேறுகிரா­மங்­க­ளில் தாது மணல் எடுப்­ப­தற்­காகஒதுக்­கப்­பட்­டி­ருந்த இடங்­க­ளுக்­கான காலா­வதி தேதியை நீட்­டிக்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி, 1957-ஆம் ஆண்­டின் கனி­மங்­கள் மற்­றும் சுரங்­கங்­கள் (மேம்­பாடு மற்­றும் ஒழுங்­கு­முறை) சட்­டத்­தின் கீழ் இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிள்­ளி­யூர் தாலு­கா­வில் உள்ள கீழ்­மி­டா­லம்-ஏ, மிடா­லம்-பி, இன­யம்­புத்­தன்­துறை, எழு­தே­சம்-ஏ, எழு­தே­சம்-பி, எழு­தே­சம்-சி, கொல்­லங்­கோ­டு-ஏ மற்­றும் கொல்­லங்­கோ­டு-பி ஆகிய கிரா­மங்­க­ளுக்கு உட்­பட்ட மொத்­தம் 1144.06.18 ஹெக்­டேர் நிலப்­ப­ரப்­பில் அணு­சக்தி கனி­மங்­களை வெட்­டி­யெ­டுக்க இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐ.ஆர்.இ.எல் நிறு­வ­னத்­தின் கோரிக்­கை­யை­யும், புவி­யி­யல் மற்­றும் சுரங்­கத் துறை இயக்­கு­ந­ரின் பரிந்­து­ரை­யை­யும் ஏற்று, இந்த சுரங்க ஒதுக்­கீடு காலத்தை 10.06.2027 வரை ஓராண்டு காலத்­திற்கு நீட்­டித்து தமி­ழக அரசு முடி­வெ­டுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­கான உத்­த­ரவை தமி­ழக அர­சின் முதன்­மைச் செய­லா­ளர் (பொறுப்பு) சுன்­சோங்­கம் ஜடக் சிரு பிறப்­பித்­துள்­ளார். இந்த உத்­த­ர­வின் நகல்­கள் கன்­னி­யா­கு­மரி மாவட்ட கலெக்­டர், இந்­திய அணு­சக்­தித் துறை மற்­றும் ஐ.ஆர்.இ.எல் நிறு­வ­னத்­தின் தலை­மைப் பொது மேலா­ளர் ஆகி­யோ­ருக்­குத் தகுந்த நட­வ­டிக்­கைக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த அனு­மதி நீட்­டிப்­பின் மூலம் மண­வா­ளக்­கு­றிச்சி அரிய மணல் ஆலை­யின் உற்­பத்­திப் பணி­கள் எவ்­வி­தத் தடங்­க­லும் இன்­றித் தொடர்­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழக அர­சின் இந்த நீட்­டிப்பு உத்­த­ரவை தொடர்ந்து, கடற்­கரை மணல் அணு கனிம சுரங்க திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான கட­லோர ஒழுங்­கு­முறை அனு­ம­தி­யைப் பெறும் முயற்­சியை ஐஆர்­இ­எல் மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால் இந்த திட்­டத்­திற்கு கிள்­ளி­யூர் மற்­றும் சுற்­று­வட்­டார கட­லோர கிராம மக்­க­ளி­டையே நீண்­ட­கா­ல­மாக எதிர்ப்பு நிலவி வரு­வ­தால், அர­சின் புதிய நீட்­டிப்பு உத்­த­ரவு மீண்­டும் பொது­மக்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">* தவெக செயற்­கு­ழு­வில் கண்­ட­ன­மும்... தமிழ்­நாடு அர­சின் அனு­ம­தி­யும்....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தவெக மாநில செயற்­குழு கூட்­டம் 3.11.2024ல் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில், கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் அணுக் கனி­மங்­களை அகழ்ந்­தெ­டுக்­கும் சுரங்­கத் திட்­டத்­திற்கு எதி­ரா­கக் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதில், 21வது தீர்­மா­ன­மாக ‘இயற்­கைத் தாயின் செல்­லப் பிள்­ளை­யா­கத் திக­ழும் கன்­னி­யா­கு­மரி பகு­தி­யில், அணுக் கனி­மங்­களை அகழ்ந்­தெ­டுக்­கும் சுரங்­கத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஒன்­றிய அரசு முயற்சி மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­ட­மா­னது தென் தமி­ழ­கத்தை பாழ்­ப­டுத்­தும் மற்­று­மொரு முயற்­சியே என்று இக்­கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. நமது மண்­ணை­யும், மக்­க­ளை­யும் பாழ்­ப­டுத்­தும் இது­போன்ற அபா­யம் விளை­விக்­கும் நாச­கார மற்­றும் நச்­சுத் திட்­டங்­களை ஒன்­றிய அரசு உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும் என்று தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் செயற்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இயற்கை வளங்­க­ளைப் பாது­காப்­ப­தி­லும், மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உறுதி செய்­வ­தி­லும் த.வெ.க உறு­தி­யாக இருக்­கும் என்­றும், சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கேடு விளை­விக்­கும் இத்­த­கைய திட்­டங்­களை எக்­கா­ர­ணம் கொண்­டும் அனு­ம­திக்க முடி­யாது என்­றும் அக்­கட்­சி­யின் தலைமை தெரி­வித்­துள்­ளது. இந்­த­நி­லை­யில் சுரங்க பணி­க­ளுக்­கான அனு­ம­தியை ஓராண்­டுக்கு நீட்­டித்து தவெக அரசு ஆணை பிறப்­பித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>