<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title"></title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1051,493,1493" />
         <classifier id="numcol" value="4"/>
      <classifier id="ArticleStyle" value=""/>
      <classifier id="Layer" value="Layer 1"/>
         <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 03 2026 03:44:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260703T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="03072026-MDU-05" position.sequence="05" ex-ref="03072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
			</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">சென்னை,ஜூலை,3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">தமி­ழ­கத்­தின் தலை­ந­க­ரான சென்­னை­யின் உள்­கட்­ட­மைப்பு மற்­றும் அன்­றாட நிர்­வா­கத்­தைத் தாங்கி நிற்­கும் சென்னை மாந­க­ராட்சி, தற்­போது கடும் நிதி நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கி­றது. கடந்த ஆட்­சிக் காலத்­தில் முடிக்­கப்­பட்ட பணி­க­ளுக்­கான நிலு­வைத் தொகை ரூ.2000 கோடியை தாண்­டிய நிலை­யில், தற்­போது ஒட்­டு­மொத்த நிலு­வைத் தொகை ரூ.4,000 கோடி­யாக அதி­க­ரித்து, நடப்பு பணி­க­ளையே முடக்­கும் அபா­ய­க­ர­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">முத­ல­மைச்­ச­ரின் நேரடி கட்­டுப்­பாட்­டில் உள்ள நக­ராட்சி நிர்­வாக துறை­யின் கீழ் இயங்­கும் மாந­க­ராட்­சி­யில் ஏற்­பட்­டுள்ள இந்த நிதி முடக்­கம், தற்­போது தவெக ஆட்­சி­யில் முத­ல­மைச்­சர் விஜ­யின் பொறுப்­பில் உள்­ளது. இந்த நெருக்­கடி ஒப்­பந்­த­தா­ரர்­களை மட்­டு­மல்­லாது ஒட்­டு­மொத்த சென்னை மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யை­யும் கேள்­விக்­கு­றி­ யாக்­கி­யுள்­ளது. கடந்த திமுக ஆட்­சிக் காலத்­தில், சென்னை முழு­வ­தும் புதிய தார்ச் சாலை­கள், மழை­நீர் வடி­கால்­வாய்­கள், மேம்­பா­லங்­கள், தெரு­வி­ளக்­கு­கள் என பல்­வேறு சிறப்பு 
திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஆட்சி மாற்­றத்­திற்கு பிறகு, இந்த பணி­களை செய்து முடித்த 40க்கும் மேற்­பட்ட முன்­னணி ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய சுமார் ரூ.2000 கோடி நிலு­வைத் தொகை இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் ஒப்­பந்­த­தா­ரர்­கள் தொழி­லா­ளர் சம்­ப­ளம், மூலப்­பொ­ருள் கடன் ஆகி­ய­வற்றை அடைக்க முடி­யா­மல் கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்கு உள்­ளா­னார்­கள். பழைய நிலு­வை­கள் தீர்க்­கப்­ப­டாத நிலை­யில், தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்ட பில்­கள், தயா­ரிக்­கப்­பட்டு வரும் பில்­கள், நடப்பு பணி­க­ளுக்­கான தொகை என மொத்த நிலுவைரூ.4,000 கோடியை எட்­டி­யுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இது சென்­னை­யின் வளர்ச்­சி­யையே முடக்­கும் பேரா­பத்­தாக மாறி­யுள்­ளது. சென்­னை­யின் பல்­வேறு வார்­டு­க­ளில் தார்ச் சாலை, உட்­புற சாலை சீர­மைப்பு, மழை­நீர் வடி­கால் இணைப்பு, பாலங்­கள் கட்­டும் பணி­கள் அரை­கு­றை­யாக நடை­பெற்று வரு­கின்­றன. கடந்த கால பணி­க­ளுக்­கான பணமே வரா­த­தால், தற்­போ­தைய பணி­க­ளுக்கு தேவை­யான சிமென்ட், கம்பி, தார் போன்ற மூலப்­பொ­ருட் களை வாங்க அவர்­க­ளி­டம் பணப்­பு­ழக்­கம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">கட்­டு­மான பணி­க­ளில் ஈடு­பட்­டுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான தினக்­கூலி மற்­றும் வட­மா­நில தொழி­லா­ளர்­க­ளுக்கு வாராந்­திர சம்­ப­ளம் வழங்க முடி­யாத நிலை உள்­ளது. கையில் நிதி இல்­லா­த­தால், பல இடங்­க­ளில் ஒப்­பந்­த­தா­ரர்­கள்பணி­களை பாதி­யி­லேயே நிறுத்தி வைத்­துள்­ள­னர். ஒரு­பு­றம் நடப்பு பணி­க­ளுக்­கான காலக்­கெடு நெருங்­கு­வ­தால், மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் பணி­களை விரைந்து முடிக்­கும்­படி ஒப்­பந்­த­தா­ரர்­களை வற்­பு­றுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">மறு­பு­றம், பழைய பாக்­கியை கொடுத்­தால்­தான் புதிய பணி­களை தொடர முடி­யும் என்று ஒப்­பந்­த­தா­ரர்­கள் கைவி­ரிக்­கின்­ற­னர். வங்­கி­க­ளி­லும், தனி­யா­ரி­ட­மும் வாங்­கிய கடன்­க­ளுக்­கான வட்டி நாளுக்கு நாள் உயர்ந்து வரு­வ­தால், பல ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் திவா­லா­கும் நிலை­யில் உள்­ளன. குறிப்­பாக சென்­னை­யின் பல வார்­டு­க­ளில் மழை­நீர் வடி­கால் மற்­றும் சாலை பணி­க­ளுக்­காக தோண்­டப்­பட்ட பள்­ளங்­கள் மூடப்­ப­டா­மல் அப்­ப­டியே கிடக்­கின்­றன. வட­கி­ழக்­குப் பரு­வ­மழை நெருங்­கும் வேளை­யில், மழை­நீர் வடி­கால் பணி­கள் பாதி­யில் நிற்­பது பெரும் வெள்ள அபா­யத்தை உரு­வாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அரை­கு­றை­யான சாலை பணி­க­ளால் அன்­றாட போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பித்து, வாகன ஓட்­டி­க­ளும் பொது­மக்­க­ளும் கடும் அவ­திக்கு உள்­ளா­கின்­ற­னர். இது­மட்­டு­மல்­லா­மல் ரூ.4,000 கோடி பற்­றாக்­கு­றை­யின் தாக்­கம் மாந­க­ராட்­சி­யின் தின­சரி நிர்­வா­கத்­தை­யும் அசைத்­துப் பார்க்­கி­றது. மாந­க­ராட்­சி­யின் சொந்த வரு­வாய் அனைத்­தும் பழைய கடன்­களை அடைப்­ப­தற்கே சரி­யாக இருப்­ப­தால், தூய்­மைப் பணி­யா­ளர்­கள், தற்­கா­லிக ஊழி­யர்­கள், அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­க­ளின் மாதாந்­திர ஊதி­ய­மும் வரும் மாதங்­க­ளில் தடை­யின்றி வழங்­கப்­ப­டுமா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நக­ராட்சி நிர்­வா­கத் துறை தற்­போது முத­ல­மைச்­சர் விஜய்­யின் நேரடி பொறுப்­பில் உள்ள நிலை­யில், இந்­தப் பிரச்­னைக்கு தீர்வு காண்­பது அவ­சர தேவை­யாக மாறி­யுள்­ளது. முத­ல­மைச்­சர் விஜய் உட­ன­டி­யாக தலை­யிட்டு, சென்னை மாந­க­ராட்­சிக்கு சிறப்பு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும். மழைக்­கா­லம் நெருங்­கு­வ­தால், மழை­நீர் வடி­கால் மற்­றும் சாலை பணி­க­ளுக்­கான நிலுவை தொகையை முத­லில் விடு­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">மாந­க­ராட்­சி­யின் வரு­வாயை பெருக்­க­வும், செல­வி­னங்­களை முறைப்­ப­டுத்­த­வும் நிரந்­த­ரத் தீர்வு காண வேண்­டும் என­வும், சென்னை மாந­க­ராட்சி ஊழி­யர்­க­ளுக்கு சரி­யான நேரத்­தில் சம்­ப­ளம் கொடுக்க வேண்­டு­மென மாந­கா­ரட்சி அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­ யுள்­ள­னர். நக­ராட்சி நிர்­வா­கத் துறையை வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­பதே அனைத்­துத் தரப்­பி­ன­ரின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>