<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 03 2026 14:19:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260704T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04072026-TRY-05" position.sequence="05" ex-ref="04072026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.07.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">தி.மு.க. மீது அவதூறு பரப்பி வரும் த.வெ.க. அரசு!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">குதிரை பேரத்தில் ‘No 1’ குற்றவாளி விஜய்தான்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="34">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் – சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்  இ.பரந்தாமன் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup735826_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="paranthamanc_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூலை 4-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">குதிரை பேரத்­தில் ‘No 1’ குற்­ற­வாளி விஜய்­தான் என்­றும், தி.மு.க. மீது அவ­தூறு பரப்­பி­வ­ரு­கி­றது த.வெ.க. அரசு என்­றும்,  கழக சட்­டத்­துறை இணைச்­செ­ய­லா­ள­ரும் – முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­மன் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் இ.பரந்­தா­மன் அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குதிரை பேரத்­தில் No 1 குற்­ற­வாளி விஜய் தான். விஜய் சர்க்­கார் ஒரு குதிரை பேர சர்க்­கார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குதி­ரை­பேர குற்ற செய­லில் ஈடு­பட்டு வரு­கிற விஜய் அரசு. ஆட்சி பொறுப்பு ஏற்று இந்த 50 நாட்­க­ளாக ஒரு அவல ஆட்­சியை நடத்­திக்­கொண்டு வரு­கி­றது. அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் மீது குற்­றம் சுமத்­து­வ­தற்­கும் பழி போடு­வ­தற்­காக, குதி­ரை­பேர அர­சி­யலை தி.மு.க.  முன்­னெ­டுத்­தி­ ருக்­கி­றது என்­கின்ற ஜமக்­கா­ளத்­தில் வடி­கட்­டிய பொய்யை நேற்­றைக்கு அமைச்­சர் நிர்­மல் குமார் தனது பேட்­டி­யின் வாயி­லாக தெரி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">த.வெ.க. ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மைனா­ரிட்டி ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் அரசு என்­பது 150, 160 தொகு­தி­க­ளில் இமா­லய வெற்றி பெற்று அமைந்த ஆட்சி அல்ல இது ஒரு மைனா­ரிட்டி ஆட்சி. 108 இடங்­க­ளில் வெற்றி பெற்ற விஜய் அரசு தனது ஒரு தொகு­தியை ராஜி­னாமா செய்த பிறகு 107ஆக குறைந்து, பிறகு நீதி­மன்­றத்­தி­னு­டைய தடை உத்­த­ர­வால், ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வாக்­க­ளிப்­ப­தற்­குத் தடை விதித்த பின் 106ஆக குறைந்­தது. சபா­நா­ய­க­ரு­டைய ஒரு வாக்கை கழித்­தால் 105 தான். வெறும் 105 இடங்­களை வைத்­துக்­கொண்ட விஜய் அரசு மிக பல­மான ஒரு அரசு போன்­றும் இந்த அரசை சீர்­கு­லைப்­ப­தற்கு, இந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்கு திரா­விட முன்­னேற்ற கழ­கம் சதி செய்­வ­தாக ஒரு நகைச்­சு­வையை அரங்­கேற்றி வரு­கி­றார்­கள். விஜய் அர­சாங்­கம் என்­றைக்­கும் கவி­ழக்­கூ­டிய ஒரு சூழ்­நி­லை­யில் இருக்­கி­றது என்று ஒரு சாதா­ரண பாமர மக்­க­ளுக்கு கூட தமிழ்­நாட்­டில் இன்­றைக்கு தெரி­யும். அர­சி­யல் புரி­தல் உள்­ள­வர்­கள் எல்­லோ­ருக்­கும் தெரி­யும். அது ஒன்­றும் ஒரு பெரிய எக்கு கோட்­டை­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு கோபு­ரம் அல்ல. ஒரு சீட்டு கட்டு போல­தான் விஜய் அரசு இன்­றைக்கு இருக்­கி­றது. ஒரு காத்து அடித்­தால் கூட சரி­கின்ற நிலை­யில் தான் இருக்­குதே தவிர வலு­வான ஆட்­சியோ அதி­கா­ரமோ அவர்­க­ளுக்கு இல்லை. எனவே அதை மறந்து தினம் தினம் இவர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது குற்­றம் சுமத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அ.ம.மு.க. எம்.எல்.ஏ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கடத்­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குதிரை பேரத்தை செய்­கி­றது யார்? இன்­றைக்கு விஜய் சர்க்­கார் குதிரை பேர சர்க்­கார் என்று நாங்­கள் குற்­றம்­சாட்­டு­கி­றோம். ஆட்சி பொறுப்பு ஏற்­ப­தற்கு முன்பு மே 4–ஆம் தேதி ரிசல்ட் வந்­த­தில் இருந்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10–ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்­கின்ற வரை இதற்­கி­டை­யில் தங்­க­ளுக்­கான பலத்தை பெருக்­கு­வ­தற்­காக எத்­த­னையோ பேரங்­களை நடத்­தி­னார்­கள். அதில் ஒன்­று­தான் மே 7–ஆம் தேதி அ.ம.மு.க. கட்­சியை சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னரை முகத்தை மூடிக்­கொண்டு இனோவா காரில் வர­வைத்து சந்­தித்­தது. அது உண்­மையா இல்­லையா என்­பது நாட்டு மக்­க­ளுக்கு தெரி­யும். அதை பற்றி இன்­று­வரை வாய் திறந்து பேசா­மல் இருப்­பது விஜய் அர­சாங்­கம். எனது கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னரை கடத்தி சென்­றி­ருக்­கி­றார்­கள். எங்­க­ளு­டைய கையெ­ழுத்தை போலி­யாக பயன்­ப­டுத்தி கடி­தம் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்று டி.டி.வி. தின­க­ரன் அவர்­கள் காவல் நிலை­யத்­தில் புகார் கொடுத்­தாரே அந்த புகாரை இன்­று­வரை பதிவு செய்­ய­வில்லை காவல்­துறை. ஆனால் நேற்­றைக்கு ஒரு நாட­கத்தை அரங்­கேற்றி திரா­விட முன்­னேற்ற கழ­கத்தை சார்ந்த முன்­னாள் அமைச்­சர் அவ­ருக்கு தொடர்பு இருக்­கி­றது என்­பது போல­வும் மூன்று பேரை கைது செய்து இதோ பார் தி.மு.க. குதிரை பேரம் செய்­வ­தற்­காக முயற்சி செய்­தார்­கள் என்று ஒரு நாட­கத்தை அரங்­கேற்றி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் சார்­பாக எங்­க­ளு­டைய அமைப்­புச் செய­லா­ளர்மேதகு ஆளு­ன­ரி­டத்­திலே கடி­தம் கொடுத்­தி­ருக்­கி­றார். லஞ்ச ஒழிப்பு துறை­யி­டத்­திலே கடி­தம் கொடுத்­தி­ருக்­கி­றார். என்ன கார­ணம்? 7–ஆம் தேதி அ.ம.மு.க. கட்­சி­யி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னரை நீங்­கள் வழுக்­கட்­டா­ய­மாக கடத்தி சென்­றி­ருக்­கி­றீர்­கள். அது ஒரு குற்­றச்­சாட்டு. அதன் பிறகு சட்­ட­மன்­றத்­தில் 144 வாக்­கு­களை எப்­படி பெற முடிந்­தது. எல்லா கட்­சி­யி­னு­டைய தலை­வர்­க­ளை­யும் போய் விஜய் சந்­தித்த விஜய் அ.தி.மு.க.வில் மட்­டும் அதன் தலை­மை­யு­டன் முரண்­பட்ட எம்.எல்..ஏ.க்களை சந்­தித்­தார். கட்சி தலை­மை­யு­டன் கருத்து வேறு­பாடு கார­ண­மாக பிரிந்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு குழுவை சென்று சந்­தித்­தது குதிரை பேரமா இல்­லையா? அதி­முக கட்சி தலை­வர் கொடுத்த அந்த கொறடா உத்­த­ரவை மீறி 25 அதி­முக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் விஜய் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்­களே அதன் பின்­னால் நடந்த பேரம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­மையை மீறி அந்த 25 பேர் வாக்­க­ளித்­த­தற்கு கைமா­றி­யது என்ன என்­பதை விஜய் விளக்க வேண்­டும். யார் குதிரை பேர அர­சி­யலை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதை நாட்டு மக்­கள் நன்­றாக கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். 10 பேருக்கு அமைச்­சர் பதவி. 20 பேருக்கு வாரிய தலை­வர் பதவி என பொய் வாக்­கு­று­தியை கொடுத்து விஜய் அவர்­கள் அதி­மு­க­வின் ஒரு குழு­வி­டம் பேரம் பேசி சட்ட சிக்­கல் ஏற்­பட்­டு­வி­டும் என்ற ஒரே கார­ணத்­திற்­காக பின்­னங்­கால் பிட­ரி­யில் அடிக்க அவர்­கள் தங்­க­ளு­டைய அர­சி­யல் நகர்­வு­களை பின்­னோக்கி எடுத்­துச் சென்­றி­ருக்­கி­றார்­கள். அத­னு­டைய விலை­தான் இன்­றைக்கு ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ராஜி­னாமா செய்து கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வைகோ பகி­ரங்­க­மாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சொன்­னது குதிரை பேரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன் எல்­லா­வற்­றிற்­கும் முத்­தாய்ப்­பாக அகில இந்­திய அர­சி­யல் உல­கில் மிக நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மான ம.தி.மு.க. தலை­வர் வைகோ அவர்­கள் வெளிப்­ப­டை­யாக சொல்லி இருக்­கி­றார். நான் முதல்­வரை 27 ஜூன் அன்று சந்­தித்­தேன். நாங்­கள் இரு­வ­ரும் தனி­யாக ஒரு மணி நேரம் பேசி­னோம். திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நின்று வென்ற அந்த இரண்டு பேரை ராஜ­னாமா செய்ய சொல்­லுங்­கள். இடைத்­தேர்­தல் வரும். நான் வந்து பிரச்­சா­ரம் செய்து வெற்றி பெற செய்­கி­றேன் என்று முதல்­வர்  விஜய் சொன்­ன­தாக வைகோ அவர்­கள் பகி­ரங்­க­மாக சொல்லி இருக்­கி­றார். இது குதிரை பேரம் இல்­லையா? இதற்கு விலை போனது என்ன? எவ்­வ­ளவு பணம் கைமா­றி­யது? இதை­யெல்­லாம் த.வெ.க. கட்­சி­யில் இருக்­கி­ற­வர்­கள் மறந்­து­விட்டு இன்று தி.மு.க.வை பார்த்து குற்­றம் கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘பொய் நரேட்­டிவ்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">29–ஆம் தேதி த.வெ.க. வினு­டைய ஊத்­தங்­கரை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் காவல் நிலை­யத்­தில் ஒரு புகார் கொடுத்­த­தாக சொல்­லு­கி­றார்­கள். காவல் துறை­யி­னு­டைய செய்தி குறிப்­பில் இந்த தொலை­பேசி தொடர்­பு­கள் எந்த தேதி­யில் ஏற்­பட்­டது என்­பதை இது­நாள் வரை சொல்­ல­வில்லை. ஆனால் 29ஆம் தேதி புகார் கொடுத்­த­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. இந்த புகார் பெறு­வ­தற்கு முன்பே திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று சொல்­லப்­ப­டு­கிற நபர்­க­ளு­டைய வீட்­டு­க­ளுக்கு சென்று ரைடு செய்­த­தாக சொல்­லு­கி­றார்­கள். புகார் வாங்­கு­வ­தற்கு முன்பே எப்­படி இவங்க ரைடு போறாங்க.? 29–ஆம் தேதி புகார் பெற்ற உடனே திரு­வல்­லிக்­ கேணி காவல் துறை­யி­னர் வந்து கைது செய்­கி­றார்­கள் என்று சொன்­னால் வைகோ அவர்­கள் சொன்ன வாக்­கு­மூ­லம் அடிப்­ப­டை­யில் நாங்­கள் கொடுத்­தி­ருக்­கின்ற அந்த புகார் மனு மீது நட­வ­டிக்கை எடுத்து லஞ்ச ஒழிப்பு துறை ஏன் இது­வரை வைகோவை விசா­ரிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது தி.மு.க.வின் இந்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் வைகோ அவ­ரு­டைய பேச்­சின் அடிப்­ப­டை­யில் No.1 குற்­ற­வாளி தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் விஜய். இதை­யெல்­லாம் மூடி மறைப்­ப­தற்­காக திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது சேற்­றை­வாரி வீசு­வ­தற்­காகஇது போன்ற ‘பொய் நரேட்­டிவ்’ அர­சி­யலை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">த.வெ.க. அமைச்­சர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மீது குற்­றச்­சாட்­டு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சிக்கு வந்து 54 நாட்­க­ளில் என்ன நிர்­வா­கத்தை இவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளு­டைய அமைச்­சர் மேல் போதை பவு­டரை பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டு உள்­ளது. இது­நாள் வரை விஜய் வாய் திறக்­க­வில்லை. திரு­வை­குண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மீது நேர­டி­யாக விஜ­யி­னு­டைய ரசி­கை­யாக இருக்­கக்­கூ­டிய அந்த அம்­மை­யார் குற்­றம் சுமத்தி இருக்­கி­றார். அது குறித்து இது­வரை விஜய் வாய் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் இன்­றைக்கு போதை ஊசி­கள் அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­பட்டு இளம் பெண்­க­ளும் இளை­ஞர்­க­ளும் மர­ண­ம­டைந்து வரு­கி­றார்­கள். அதை பற்றி இந்த அரசு கண்­டு­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆவின் பால் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அதை பற்றி இந்த அரசு கண்டு கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரிசி விலை இன்­றைக்கு ஏறி இருக்­கி­றது. அதை பற்றி இந்த அரசு கண்­டு­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கஞ்­சாக்­களை வண்டி வண்­டி­யாக கடத்­து­கி­றார்­கள். தவெக நிர்­வா­கி­களே இந்த குற்­றச் செயல் ஈடு­பட்­ட­தாக ஆதா­ரப்­பூர்­வ­மாக ஊடங்­க­ளில் வந்­தி­ருக்­கி­றது. இது குறித்து தவெக தரப்­பி­லி­ருந்து எந்த பதி­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி இவர்­கள் நிர்­வாக திற­னற்ற ஆட்­சி­யால் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய இந்த அவ­லங்­களை எல்­லாம் மூடி மறைப்­ப­தற்­காக திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் மீது இத்­த­கைய பழி­களை குற்­றங்­களை சுமத்­து­கி­றார்­கள். ஆட்சி திற­னற்ற பதவி போதை­யில் இருக்­கும் ஒரு முத­ல­மைச்­ச­ரின் இய­லா­மையை மூடி மறைக்க இந்த நாடக்­கங்­களை நடத்­து­கி­றார்­கள். கண்­டென்­டக்­கா­க­வும் , ரீல்ஸ்­கா­க­வும் சோசி­யல் மீடி­யா­வில் தின­மும் இவர்­கள் வைர­லாக வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் வாய்க்கு வந்­ததை எல்­லாம் அமைச்­சர்­கள் பேசி கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவ்­வ­ளவு நாள் இவர்­கள் சினிமா தியேட்­ட­ரில் பிளாக் டிக்­கெட் வித்­தி­ருக்­க­லாம். ஆனால் இன்று இவர்­கள் அமைச்­சர்­கள். அதன் மாண்­ப­றிந்து நடந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு கட்­சி­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மாறி வந்­த­வர் நிர்­மல் குமார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு அமைச்­சர் பொறுப்பு என்­பது ஆதா­ரத்­தோடு பேச வேண்­டும். நேற்று நிர்­மல் குமார் வாய்­கி­ழிய பேசு­கி­றாரே எங்­க­ளு­டைய தலை­வர் அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்க வேண்­டும் என்று ஒவ்­வொரு கட்­சி­யாக ஒதுங்கி வந்­த­வர்­தான் நிர்­மல் குமார். பா.ஜ.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. என கடை­சி­யாக இன்­றைக்கு தஞ்­சம் புகுந்து த.வெ.க.வில் இருக்­கிற நிர்­மல் குமார் எல்­லாம் எங்­க­ளு­டைய தலை­வரை பற்றி பேச துளி­யும் அரு­கதை இல்லை தகு­தி­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்சி உங்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆட்சி நிர்­வா­கத்தை செய்து மக்­க­ளி­டத்­திலே திட்­டங்­களை கொடுத்து உங்­க­ளு­டைய பேரை நிலை­நாட்­டு­வதை விட்­டு­விட்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது நீங்­கள் குற்­றம் சுமத்­து­வீர்­க­ளே ­யா­னால் இது போன்ற தவ­றான செய்­தி­களை பரப்­பு­வீர்­க­ளே­யா­னால் உங்­க­ளுக்கு எங்­க­ளு­டைய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவ­ரு­டைய திரைக்­கதை வச­னம் தான் எனக்கு ஞாப­கத்­திற்கு வரு­கி­றது. அரண்­மனை நாயே அடக்­குடா உன் வாயை என்­கின்ற வச­னத்தை நான் நிர்­மல்­கு­மார் அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விளக்­கம் கேட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆளு­நர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் ஆட்­சிப் பொறுப்பை ஏற்ற நாளி­லி­ருந்து ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ராஜி­னாமா செய்­வ­தற்­கான கார­ணத்தை விளக்க வேண்­டும். மேதகு ஆளு­னர் இரண்டு மூன்று நாட்­க­ளுக்கு முன்பு சபா­நா­ய­கரை அழைத்து பேசி இருக்­கி­றார். அப்­போது திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தி­லி­ருந்து புகார் வரு­கி­றது. எதிர்­கட்­சி­க­ளி­லி­ட­மி­ருந்து புகார் வரு­கி­றது. மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து புகார் வரு­கி­றது. தினந்­தோ­றும் ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ராஜி­னாமா செய்­வ­த­னு­டைய நோக்­கம் என்ன.? என விளக்­கம் கேட்­ட­தாக தக­வல்­கள் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ராஜி­னாமா செய்­வதை நார்­ம­லைஸ் செய்­கி­றார்­கள், ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக ராஜி­னாமா செய்­கி­றார் என்று சொன்­னால் இது சாதா­ர­ண­மான நிகழ்­வாக கடந்து போக முடி­யாது. இது தமிழ்­நாட்­டி­னு­டைய ஜன­நா­ய­கத்­தின் மீதான மிகப்­பெ­ரிய ஒரு தாக்­கு­தல். விஜய் அர­சாங்­கத்­திற்குஎன்ன ஒரு டவுட் என்­றால் இன்று ஆத­ரவு கொடுத்­துள்ள கட்­சி­க­ளின் ஆத­ர­வெல்­லாம் எத்­தனை நாளைக்கு இருக்­கும் என்ற சந்­தே­கம் விஜய்க்கு இருக்­கி­றது. எனவே தனக்கு தேவை­யான பலத்தை உரு­வாக்­கிக் கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக இத்­த­கைய நட­வ­டிக்­கையை மேற்­கொள்­கி­றார். இன்­னும் சொல்­லப்­போ­னால் பாஜக வடி­வ­மைத்து கொடுத்த ஸ்கிரீன் பிளேயை தான் இன்­றைக்கு விஜய் செய்து கொண்­டி­ருக்­கி­றார். பிஜே­பி­னு­டைய ஒரு ட்ராப் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.விற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அடி­ப­ணி­யும் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­கள் ஒரு­வேளை இடைத்­தேர்­த­லில் வெற்றி பெற்று பலம் கிடைத்­து­விட்­டால் இவங்­களை எல்­லாம் கழட்டி விட்­டுட்டு விஜய் பி.ஜே.பி. பக்­கம் நிற்­ப­தற்­கா­கத்­தான் இந்த நாட­கத்தை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த 100 நாள் வேலை­வாய்ப்பு திட்­டம் தமிழ்­நாடு அர­சாங்­கத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி எதிர்த்­தோம். பி.ஜே.பி. ஆளு­கிற மாநி­லங்­கள் மூன்று மாநி­லங்­கள் எதிர்த்து கடி­தம் எழுதி இருக்­கின்­றன. ஆனால் சத்­த­மில்­லா­மல் விஜய் அவர்­கள் 25 ஜூன் அன்று ஒரு அர­சாணை போட்டு அதை நடை­மு­றைப்­ப­டுத்தி உள்­ளார். ஒரு­பக்­கம் பா.ஜ.க. சொல்­லு­கிற கட்­ட­ளைக்கு அடி­ப­ணி­வது, இன்­னொரு பக்­கம் தமிழ்­நாட்­டில் ஒரு செக்­கு­லர் முகத்தை முன்­நி­றுத்­து­வது. இது­போன்ற அர­சி­யல் நாட­கத்தை நடத்தி வரு­கிற விஜய் அர­சாங்­கம் மக்­கள் மத்­தி­யில் எக்ஸ்­போஸ் ஆகி வரு­கி­றது. இன்­றைக்கு இளம் தலை­மு­றை­கள் எல்­லாம் ஏன் இந்த அர­சாங்­கத்­துக்கு ஓட்டு போட்­டோம் என நொந்து போய் வீடியோ போட ஆரம்­பிச்­சிட்­டாங்க. இதெல்­லாம் ஒரு மிகப்­பெ­ரிய ஒரு அலை­யாக உரு­வாகி இடைத்­தேர்­த­லில் இவங்க மண்ணை கவ்­வக்­கூ­டிய ஒரு சூழல் ஏற்­ப­டுமோ என்­கின்ற அச்­சத்­தின் கார­ண­மா­கத்­தான், இது போன்ற அர­சி­யல் சித்து விளை­யாட்­டி­களை ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆதா­ரம் இல்­லாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">போலீஸ் ஸ்டேட்­மெண்ட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல்­து­றையை வைத்­துக்­கொண்டு பொலிட்­டிக்­கல் ஸ்டேட்­மெண்ட் கொடுக்­குது இந்த கவர்­மெண்ட். எந்த கவர்­மெண்­டும் செய்­யாத ஒன்று, எந்த கவர்­மெண்­டும் மீறாத ஒரு மரபு, எந்த கவர்­மெண்­டும் மீறாத ஒரு­வ­ரை­மு­றையை இந்த அர­சாங்­கம் மீறி உள்­ளது. இதன் மூல­மாக நாங்­கள் காவல்­துறை தலை­வ­ருக்கு சொல்­லிக் கொள்­வது. ஆத­ராப்­பூர்­வ­மாக நடந்­த­வற்றை மட்­டும் தான் காவல்­துறை வெளி­யிட வேண்­டுமே தவிர பொத்­தாம் பொது­வாக அர­சி­யல் ஸ்டேட்­மெண்ட் விடு­வது சட்­டப்­படி தவறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று காவல்­துறை கைது பண்­ணிய மூன்று பேர் தொடர்­பாக வெளி­யிட்ட பிரஸ் ஸ்டேட்­மெண்ட்ல திரு­நா­வுக்­க­ர­சும் அந்த மற்­றொ­ரு­வ­ரும் செந்­தில் பாலா­ஜி­யி­னு­டைய தம்­பியை சந்­தித்து பேசி­ய­தாக நீங்­கள் சொல்­றீங்க. எந்த வித ஆதா­ர­மும் இல்­லா­மல் அதற்­கான முகாந்­தி­ர­மும் இல்­லா­மல் வெறும் அர­சி­யல் நோக்­கோடு அந்த ஸ்டேட் மெண்ட் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கு. இது போன்ற ஒரு தவ­றான ஸ்டேட்­மெண்ட் போலீஸ் தரப்­பி­லி­ருந்து இனி வரும் என்­றால் திரா­விட முன்­னேற்ற கழ­கம் காவல்­துறை மீது நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுப்­ப­தற்கு தயா­ராக இருப்­போம் என்­பதை இதன் மூல­மாக எச்­ச­ரித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விஜ­யின் பொலிட்­டி­கல் அட்­வை­சர்ஸ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கேபி­னெட் மீட்­டிங்­கில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதோடு, விஜ­யின் பொலிட்­டி­கல் அட்­வை­சர்ஸ் கேபி­னெட் மீட்­டிங்ல உட்­கார வேண்­டிய அவ­சி­யம் என்ன கேபி­னெட் மீட்­டிங்ல உட்­கா­ரு­வ­தற்கு அவர்­க­ளுக்கு என்ன தகுதி இருக்­கி­றது? ரக­சிய காப்பு பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்ட முத­ல­மைச்­சர் அவர்­கள் துறைக்கு அர­சுக்கு சம்­பந்­தம் இல்­லா­த­வர்­கள் எப்­படி தன் பக்­கத்­தில அனு­ம­திக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் திரா­விட முன்­னேற்ற கழ­கம் கேட்­டி­ருக்­கி­றது. இந்த கேள்­வி­க­ளுக்­கெல்­லாம் தவெக அர­சி­ட­மி­ருந்து எந்த பதி­லும் இல்லை. அந்த பதில் சொல்­லக்­கூ­டிய தைரி­யமோ அதற்­கான சரி­யான ஆதா­ரமோ அவர்­க­ளி­டம் இல்லை. என­வே­தான் ஒவ்­வொரு நாளும் ஒரு நரேட்­டிவை செட் பண்ணி இதை திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் மீது மடை மாற்­று­கிற அர­சி­யல் செய்­கி­றார்­கள். இவர்­கள் டைவர்­ஸிவ் பாலி­டிக்ஸ் தான் செய்­கி­றார்­க­ளாவே தவிர நாட்டு மக்­க­ளுக்கு ஒரு நல்ல அர­சி­ய­லை­யும் இவர்­கள் முன்­னெ­டுத்­த­வில்லை எனவே தான் இது விஜய் சர்க்­கார் அல்ல இது குதி­ரை­பேர சர்க்­கார் என கூறு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு  சட்­ட­மன்ற முன்­னாள்  உறுப்­பி­னர் இ.பரந்­தா­மன் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>