<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,75,957,781" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 04 2026 15:07:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260705T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="05072026-MDU-05" position.sequence="05" ex-ref="05072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="53">50 நாள் த.வெ.க ஆட்சி! திமிர்தான் இருக்குது..  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="50">திறமையோ திராணியோ இல்லை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743399_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘ஹனிமூன்’ காலம் என்ற பெயரில், தன் மீது விமர்சனங்களே வைக்கக்கூடாது என்று கதறும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி 50 நாட்களைக் கடந்திருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் இந்திய அளவில் உயர்ந்திருந்த தமிழ்நாட்டின் பெருமையை–, மாண்பை, சிதைத்து–சீரழித்திருப்பதுதான் த.வெ.க. அரசின் ‘சாதனை’யாக வெளிப்பட்டிருக்கிறது. சட்டங்க ளுக்கும் மரபுகளுக்கும் நாங்கள் அப்பாற்பட்ட வர்கள் என்பது போல அடாவடித்தனமாக நடந்து கொள்வதை விஜய் தொடங்கி, அவருடைய அமைச்சர்கள்,  எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என எல்லாரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பதவியேற்பு விழா மேடையிலேயே கண்ணியமற்ற முறையில், சினிமா பஞ்ச் வசனம் பேசி தன் தரத்தை வெளிப்படுத்திய விஜய், சட்டமன்றத்திலும் மனப்பாடம் செய்யப்பட்ட பஞ்ச் வசனங்களையும், அவை மரபுக்கு மாறான மோசமான செய்கைகளையும் செய்து காட்டினார். பொதுமக்களே முகம் சுளிக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருந்தன. முதலமைச்சரை மிஞ்சிய நிழல் முதல்வரான ஆதவ் அர்ஜூனா, த.வெ.க கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, சி.பி.ஐ விசாரணையில் உள்ள கரூர் விஜய் கூட்ட நெரிசல் உயிர்ப்பலிகள் தொடர்பாக அவதூறான குற்றச்சாட்டுகளை வாய் கூசாமல் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மரத்துக்கு மரம் தாவும் உயிரினம் போல பல கட்சிகள் தாவி, தற்போது அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார் வாயைத் திறந்தாலே பொய்தான் கொட்டுகிறது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த.வெ.க அமைச்சர்களைப் பார்த்து சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரே, “நீங்கள் பேசுவது பொய். அப்படியெல்லாம் நடக்கவில்லை” என்று சொல்லக் கூடிய அளவில் வரம்பு மீறிய பேச்சுகளும், திமிர்த்தனமான தடித்த சொற்களும் த.வெ.க.வின் வெளிப்பாடாக உள்ளது. இப்படிப் பேசினால், அதை ரீல்ஸ்களாக வெட்டி, சமூக வலை தளங்களில் பரப்பி விடலாம் என்பதும், ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும்என்பதைத் தவிர, வேறு எந்த உருப்படியான செயல்பாடுகளோ, பதவிக்குரிய பொறுப்புணர்ச்சியோ முதலமைச்சர் தொடங்கி த.வெ.க.வில் உள்ள யாரிடமும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திமிர்த்தனம் என்பதுதான் ஹீரோயிசம் என்கிற சினிமாத்தனமே 50 நாட்களைக் கடந்த த.வெ.க ஆட்சியில் வெளிப்பட்டுள்ளது. திறமையை வெளிப்படுத்தும் எந்த ஒரு செயல்பாடோ, துணிச்சலும் திராணியும் கொண்ட நடவடிக்கைகளோ ஒன்றுகூட கிடையாது.  50 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை, அவை மக்களுக்கு என்ன பயனைத் தந்திருக்கின்றன என்பதற்கு பல்லை இளிக்கும் ‘சிங்கப் பெண்’ திட்டமும், ஷாக் அடிக்கும் மின்சாரக் கட்டணத்துடனான 200 யூனிட் திட்டமுமே சாட்சியாக உள்ளன. முந்தைய ஆட்சிகளில் வழங்கப்பட்ட 100 யூனிட் வரையிலான கட்டணமில்லா மின்சாரத்தின் போது பொதுமக்கள் செலுத்திய மின்சாரக் கட்டணத்தைவிட, இந்த 50 நாள் ஆட்சியின் 200 யூனிட் மின்சாரத் திட்டத்திற்குப் பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் செலுத்தப்படுகின்ற மின்கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘சிங்கப் பெண்’ திட்டத்தை சினிமா பாணியில் அறிமுகப்படுத்தினார் முதல்வர் விஜய். ஆனால், அந்த சிங்கத் திட்டத்திற்கு நகமும் கிடையாது, பற்களும் கிடையாது என்கிற அளவில்தான் அதிகார வரம்புகள் உள்ளன. திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகும், தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. அதில் த.வெ.க. நிர்வாகிகள்தான் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாகவும், காவல்துறை செய்திகள் வாயிலாகவும் அறிய முடிகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க.வைச் சேர்ந்த பெண்மணி ஒருவரே, தனக்கு நடந்த பாலியல் கொடுமையில் த.வெ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் மீது வெளிப்படையாகப் புகார் தெரிவித்தும், சிங்கப்பெண்ணும் வரவில்லை. காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போதைப் பொருளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சரே ஓடினார் என்று பெருமை பீற்றினார்கள். ஆனால், த.வெ.க அமைச்சரே பவுடர் பயன்படுத்தும் ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியாகி, வேலியே பயிரை மேயும் அபாயத்தை அம்பலப்படுத்தியது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்று வீரவசனம் பேசியவர் விஜய். அரசு வழக்கறிஞர் பதவிக்காக அமைச்சர் முதல் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வரை லஞ்சம் வாங்கி வருவதை சொந்தக் கட்சி நிர்வாகியே அம்பலப்படுத்தி யுள்ளார். மதுபான பார் தொடங்கி, கனிமவளம் வரை எல்லாவற்றிலும் லஞ்சமும் ஊழலும்தான் தலைவிரித்தாடுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திறமையற்ற நிர்வாகத்திற்கு இவையனைத்தும் சாட்சிகளாக இருக்கின்றன என்றால், இரக்கமற்ற அரசாக விஜய் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவில்தற்போது வரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிகழ்வு சாட்சியாக உள்ளது. முதல்வர் விஜய் இது குறித்து அக்கறை செலுத்தவுமில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை. கரூரில் தன்னைப் பார்ப்பதற்காக நீண்டநேரம் காத்திருந்த கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த போதே, அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுத்தவரிடம், இரக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கத் துடிக்கும் அதிகாரத் திமிர் கொண்ட விஜய் அரசிடம், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் ஒன்றியபா.ஜ.க அரசை நோக்கி குரல் கொடுக்கும் திராணியோ துணிச்சலோ துளியும் இல்லை. டெல்லிக்கு சலாம் அடித்து, குட்டிக்கரணம் போடும் முதுகெலும்பற்ற நிலையில்தான் விஜய் அரசு உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்டமன்றத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடவேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டால், “அப்படியே செய்கிறோம் ஐயா” என்று சரணடை கிறார்கள். தமிழ்நாடு மும்மொழித் திட்டத்தை ஏற்காத நிலையில், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மூன்று மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விஜய் அரசோ, தமிழ்நாட்டில் புதிதாக 1000 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதியளித்து, மும்மொழித் திட்டத்தை செயல் 
படுத்துவதற்கு பின்வாசலைத் திறந்து விட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை வி.பி.ஜி–ராம்–ஜி என்று மோடி அரசு மாற்றியதுடன், இத்திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பைக் குறைத்துவிட்டு, மாநில அரசின் நிதிப்பங்களிப்பை அதிகமாக்கி யிருப்பதால், கடும் நிதிச்சுமையை மாநிலங்கள் சந்திக்க வேண்டியுள்ளன. அதனால்தான், திராவிட மாடல் அரசு இத்திட்டத்தை ஏற்க முடியாது என சட்டமன்றத்தில் முடிவெடுத்தது. அந்த முடிவுக்கு மாறாக,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் புதிய 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, “நாங்கள் உங்கள் அடிமைதான்” என்று ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு சிக்னல் தந்திருக்கிறது த.வெ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நியமனப் பதவியில் உள்ள ஆளுநர், அதுவும் பொறுப்பு ஆளுநராக இருக்கும் அர்லேகர் மதுரையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, “வைகை ஆற்றை ஆளுநர் மாளிகையே சுத்தம் செய்யும்” என்கிறார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான ஆளுநரின் இந்த அத்துமீறிய செயல்பாட்டை எதிர்த்து, ‘பஞ்ச்’ டயலாக்  பேசும் துணிச்சல்கூட விஜய்க்கு இல்லை. 50 நாட்களிலேயே ‘ஃப்ளாப்’ ஆகியிருக்கிறது த.வெ.க ஆட்சி எனும் காட்சி.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>