<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 07 2026 03:32:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07072026-CBE-05" position.sequence="05" ex-ref="07072026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு பயணிப்பவர்கள் தி.மு.கழகத்தினர்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="78">‘சோபா மாடல்’ அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup747730_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup747818_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup739138_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.8">சென்னை, ஜூலை. 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.8">ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு பயணிப்பவர்கள் தி.மு.கழகத்தினர் ‘சோபா மாடல்’ அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">சென்­னை­யில், சென்னை தென்­மேற்கு மாவட்ட 
தி.மு.கழ­கம் சார்­பில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 103-வது பிறந்­த­நாள் விழாவை, ஜூன் மாதம் முழு­வ­தும் புத்­தெ­ழுச்­சி­யு­டன் கொண்­டா­டிய கழக நிர்­வா­கி­ க­ளுக்­கான பாராட்டு விழா, மாவட்­டச் செய­லா­ளர் மயிலை த.வேலு தலை­மை­யில் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. இதில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு கழக நிர்­வா­கி­க­ளைப் பாராட்­டிப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">விழா­வில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய எழுச்­சி­மிக்க உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">சென்னை தென்­மேற்கு மாவட்­டக் கழ­கம் சார்­பாக, ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். இந்த நிகழ்ச்­சியை இவ்­வ­ளவு சிறப்­பா­க­வும், எழுச்­சி­யோ­டும் ஏற்­பாடு செய்­தி­ருக்­கக்­கூ­டிய நம் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் வேலு அவர்­க­ளுக்கு என் பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் அனை­வ­ரின் சார்­பா­கத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">கழக நிர்­வா­கி­கள் சந்­திப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">4-ஆம் தேதி தேர்­தல் முடி­வு­கள் வந்­தன. கிட்­ட­தட்ட இரண்டு மாதங்­கள் கடந்­து­விட்­டோம். இந்த இரண்டு மாதங்­க­ளாக தின­மும் காலை­யும் மாலை­யும் அண்ணா அறி­வா­ல­யத்­தி­லும் சரி, என் அலு­வ­ல­கத்­தி­லும் சரி, கழக நிர்­வா­கி­கள், பல்­வேறு மாவட்­டங்­க­ளில் இருந்து தின­மும் வரு­கி­றார்­கள். இளை­ஞர்­கள், கழக நிர்­வா­கி­க­ளென அத்­தனை பேரை­யும், அத்­தனை அணி­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் தின­மும் மாலை­யில் இரண்டு மணி நேரம், காலை­யில் ஒரு மணி நேரம் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அப்­படி நேற்று சந்­தித்­துக்­கொண்டு இருக்­கும்­போ­து­தான், நம் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் இங்கு சொன்­ன­து­போல, நேற்று சென்று கேட்­டேன், `எதிர்­பார்க்­கவே இல்லை அவர் வரு­வார்’ என்று, உடனே ஒப்­புக்­கொண்­டார் என்று சொன்­னார். நான் வந்­த­தில் அவ­ருக்கு மகிழ்ச்­சியா இல்லை அதிர்ச்­சியா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. நானும் தின­மும் ஒரே இடத்­தில் நின்று எல்­லா­ரை­யும் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றோமே, இன்­றைக்கு முத்­த­மிழ் பேர­வை­யில்  எல்­லா­ரை­யும் சந்­திப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">தின­மும் பல்­வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றோம், நாளைக்கு ஒரு நாள் தென்­மேற்கு மாவட்­டத்தை மட்­டும் சந்­திப்­போம் என்று நான் நேற்று நினைக்­க­வில்லை, இப்­போது நினைக்­கி­றேன். அண்­ணன் வேலு அவர்­கள் என் மீது மிகுந்த அன்பு கொண்­ட­வர், பாசம் கொண்­ட­வர், உரிமை கொண்­ட­வர். அவர் எந்த நிகழ்ச்­சிக்கு அழைத்­தா­லும் உட­ன­டி­யாக நான், அதி­லும் தென்­மேற்கு மாவட்­டம் என் மன­துக்கு மிக­வும் நெருக்­க­மான ஒரு மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">என்­றைக்­கும் ஜெ.அன்­ப­ழகனை மறக்க மாட்­டேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இன்­றைக்­குச் சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி வரி­சை­யில் உட்­கார்ந்­தி­ருக்­கி­றோம், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நான் உட்­கார்ந்­தி­ருக்­கி­றேன் என்­றால், சட்­டப்­பே­ர­வை­யில் நம் கழ­கத் தலை­வர் அவர்­கள் இல்­லா­மல் எவ்­வ­ளவு நான் தவிக்­கி­றேனோ, அதே அள­வுக்கு மறைந்த அண்­ணன் ஜெ.அன்­ப­ழ­கன் அவர்­களை இழந்­தும் தவிக்­கி­றேன். கார­ணம், என்னை அர­சி­ய­லுக்கு இழுத்­துக்­கொண்டு வந்­த­வர் அன்­ப­ழ­கன் அவர்­கள்­தான். அந்த நன்­றியை நான் என்­றைக்­குமே மறக்க மாட்­டேன். அவர்­கள் குடும்­பத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளும் நிச்­ச­யம் மறக்க மாட்­டார்­கள். இன்­றைக்­குப் பல்­வேறு இடங்­க­ளுக்­குச் சென்­றி­ருக்­க­லாம், அது ரொம்ப நாள் தாங்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நான், நம் ராஜா அன்­ப­ழ­க­னைப் பற்­றிப் பேசிக்­கொண்டு இருக்­கி­றேன். வந்­த­வு­டனே கேட்­டேன், ராஜா எங்கே என்று கேட்­டேன். இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் என் அன்­புச் சகோ­த­ரர் ராஜா எங்கே என்று கேட்­டேன். கொடைக்­கா­ன­லுக்­குப் போய்­விட்­டார் என்று நம் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சொன்­னார். தமி­ழச்சி அக்கா காதில் வேறு என்­னவோ விழுந்­து­விட்­டது, பயந்­து­விட்­டார்­கள். என்ன தம்பி எங்கே போயி­ருக்­கி­றார்? கொடைக்­கா­ன­லுக்­குத்­தான் போயி­ருக்­கி­றார், கவ­லைப்­ப­டா­தீர்­கள், பதற்­றப்­ப­டா­தீர்­கள் என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">நன்றி அறி­விப்­புக் கூட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இந்த இரண்டு மாதங்­க­ளில் தின­மும் கழ­கத்­தி­ன­ரைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றோம். தலை­வர் அவர்­கள் காலை­யில் அறி­வா­ல­யத்­தில் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். நான் வெற்­றி­பெற்ற சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் தேர்­தல் முடி­வு­கள் வந்த அடுத்த நான்கு நாட்­க­ளில் சென்று நன்றி சொன்­னேன். அங்கு இருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­களை எல்­லாம் சந்­தித்து, ஒரு நன்றி அறி­விப்­புக் கூட்­டம் நடந்­தது. அதன் பிறகு இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் கூட்­டத்தை, அனைத்து மாவட்­டங்­க­ளில் இருந்­தும் அனைத்து அமைப்­பா­ளர்­க­ளை­யும் வரச்­சொல்லி, தலை­வர் தலை­மை­யில் ஒரு கூட்­டத்தை நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அதன் பிறகு நான் கலந்­து­கொள்­கின்ற, ஒரு அரங்­கத்­தில் நடை­பெ­றக்­கூ­டிய கழக நிர்­வா­கி­க­ளைச் சந்­திக்­கக்­கூ­டிய ஒரு கூட்­டம் என்­றால், அது முதல் கூட்­ட­மாக, தேர்­தல் முடி­வுக்­குப் பிறகு நான் பங்­கேற்­கின்ற முதல் கழ­கக் கூட்­டம் இந்த தென்­மேற்கு மாவட்­டத்­தில் இன்­றைக்கு நடக்­கக்­கூ­டிய இந்­தக் கூட்­டம். முத­லில் அதற்­கும் இந்த நேரத்­தில் அண்­ணன் வேலு அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">கலை­ஞ­ரின் 103-வது பிறந்­த­நாளை முன்­னிட்டு, இந்த ஜூன் மாதம் முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 250 நிகழ்ச்­சி­கள், சரி­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் 256 நலத்­திட்ட நிகழ்ச்­சி­களை நீங்­கள் நடத்தி இருக்­கி­றீர்­கள். ஆட்­சி­யில் இருக்­கும்­போது நடத்­து­வது பெரிய விஷ­யம் கிடை­யாது. அது ஒன்­றும் பெரிய சாதனை கிடை­யாது. ஆனால், ஆட்சி இல்­லா­த­போ­தும் நாங்­கள் இன்­றைக்­கும் மக்­க­ளோ­டு­தான் நிற்­கி­றோம், மக்­கள் பக்­கம் நிற்­கி­றோம், மக்­கள் பணி­கள்­தான் எங்­க­ளுக்கு முக்­கி­யம் என்று சொல்லி, அதைச் செய்­து­காட்­டு­கிற ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அதில் முதன்­மை­யான மாவட்­டம் நம் தென்­மேற்கு மாவட்­டம் என்று சொல்­வது மிகப்­பெ­ரிய ஒரு பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">கலை­ஞ­ரின்  உடன்­பி­றப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஆட்­சி­யில் இல்லை என்ற உடனே மற்ற கட்­சி­கள் எல்­லாம் என்ன செய்­தி­ருப்­பார்­கள்? வீட்­டுக்­குள்ளே சென்று பூட்­டிக்­கொண்டு தூங்க ஆரம்­பித்­தி­ருப்­பார்­கள். அடுத்த ஐந்து வரு­டம் கழித்து வெளியே வரு­வோம்; அப்­ப­டித்­தான் மற்ற இயக்­கங்­கள் எல்­லாம் இருந்­தி­ருக்­கும். ஆனால், நாம் மற்­ற­வர்­களை மாதிரி கிடை­யாது. நாம் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள். நம் தலை­வர் நம்மை அப்­படி வளர்க்­க­வில்லை. எந்த நிலை­யா­னா­லும் மக்­க­ளோடு என்­றைக்­கும் நிற்­போம் என்­ப­தைத் தொடர்ந்து நிரூ­பித்­துக்­கொண்டு இருக்­கக்­கூ­டிய தொண்­டர்­கள், நம் உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அது வெற்­றியோ தோல்­வியோ, வீதிக்கு வந்து மக்­க­ளுக்­காக உழைப்­ப­வர்­கள்­தான் உண்­மை­யான கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் என்று மீண்­டும் மீண்­டும் நாம் நிரூ­பிப்­போம். அதற்கு இந்த அரங்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு உதா­ர­ணம், ஒரு எடுத்­துக்­காட்டு என்று சொன்­னால் அது மிகை­யா­காது. ஏனென்­றால், நாம் பார்க்­காத வெற்­றி­யும் கிடை­யாது, நாம் சந்­திக்­காத தோல்­வி­யும் கிடை­யாது. வெற்றி வந்­தால் தலைக்­க­ணத்­தில் நாம் ஆடி­ய­தும் கிடை­யாது. தோற்­று­விட்­டால், வீட்­டில் உட்­கார்ந்து முடங்கி அடங்­கி­ய­தும் கிடை­யாது. என்­றைக்­குமே மக்­கள் பணிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இது­தான் நம் கலை­ஞர் நமக்­குச் சொல்­லிக் கொடுத்­தது. அந்த வழி­யில்­தான் நம் தலை­வர் அவர்­கள் நம்மை வழி­ந­டத்­திக்­கொண்டு இருக்­கி­றார்.  ஏனென்­றால், தேர்­தல் முடி­வுக்கு பிறகு இன்­றைக்கு ஒவ்­வொரு நாளும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றோம். என்­னென்ன கூத்­து­கள் எல்­லாம் இன்­றைக்கு நடந்­து­கொண்டு இருக்­கின்­றன, அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நிலைமை என்ன ஆயிற்று என்­ப­தை­யும் இன்­றைக்­குப் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றோம். கிட்­ட­தட்ட பாதி­யாக உடைத்­து­விட்­டார்­கள். ஆனால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை அவர்­க­ளால் தொட்­டுப் பார்க்க முடிந்­ததா? யாரா­லும் முடி­யாது, எந்­தக் கொம்­ப­னா­லும் தொட்­டுக்­கூ­டப் பார்க்க முடி­யாது, நினைத்­துக்­கூ­டப் பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஆனால் என்ன ஒரு அழகு என்­றால், நாம் முன்பு இருந்­ததை விட, ஆளுங்­கட்­சி­யாக இருந்­ததை விட, இன்­றைக்கு எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போ­து­தான் இன்­னும் வேக­மாக, இன்­னும் சிறப்­பா­கச் செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றோம். இன்­னும் உறு­தி­யோடு செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றோம். அது­தான் தி.மு.க-வின் அழகு. அது­தான் இந்த இயக்­கத்­தின் பெரு­மை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">60 நாளில் ஏதா­வது ஒரு திட்­டம்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அ.தி.மு.க-வை இவ்­வ­ளவு எளி­தாக அசைத்­துப் பார்க்­கி­றோமே, ஆனால் ஏன் தி.மு.க-வை நம்­மால் கொஞ்­சம் கூடச் சீண்­டிப் பார்க்க முடி­ய­வில்­லை­ யென்று இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி கிட்­ட­தட்­டத் திண­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அத­னால், இன்­றைக்கு ஏரா­ள­மான அவ­தூறு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் தினந்­தோ­றும் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இன்­றைக்கு இந்த சோஃபா மாடல் ஆட்சி அமைந்து கிட்­டத்­தட்ட 60 நாள்­க­ளுக்கு மேல் ஆயிற்று. நாம் யோசித்­துப்­பார்க்க வேண்­டும் மக்­க­ளுக்கு ஏதா­வது ஒரு திட்­டத்தை இந்த 60 நாளில் கொடுத்து இருக்­கி­றார்­களா? நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னேன். மக­ளிர் உரி­மைத் தொகையை நிறுத்­தி­வி­டா­தீர்­கள். அதைத் தய­வு­செய்து கொடுங்­கள். அது­மா­திரி தமிழ் புதல்­வன் திட்­டம், புது­மைப் பெண் திட்­டம், மாண­வர்­க­ளுக்­கான கல்வி ஊக்­கத்­தொகை நாம் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம் அதை நிறுத்­தி­வி­டா­தீர்­கள் என்று சொன்ன உடனே அந்­தத் திட்­டத்­தைக் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">முதல் நாள்  நான்கு கையெ­ழுத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நம் திட்­டங்­களை அப்­ப­டியே தொடர்ந்து கொண்டு இருக்­கி­றார்­கள் இன்­றைக்கு வந்த அரசு. ஏதா­வது புதி­தா­கக் கொடுத்து இருக்­கி­றார்­களா? ஏதா­வது புதுத் திட்­டம் கொடுத்து இருக்­கி­றார்­களா? நினைத்­துப் பாருங்­கள் 2021 என்ன நிலைமை? கோவிட் பெருந்­தொற்று, நிதி நெருக்­கடி அந்த நிலை­மை­யில்­தான் நாம் ஆட்­சிக்கு வந்­தோம். அன்­றைக்கு நம் தலை­வர் அன்­றைக்கு முத­ல­மைச்­சர் ஆன­வு­டனே முதல் நாள் நான்கு கையெ­ழுத்­துப் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">கொரோனா நிவா­ரண நிதி 4,000 ரூபாய் உட­ன­டி­யாக நம் அரசு அன்­றைக்கு கொடுத்­தது. முத­ல­மைச்­சர் கொடுத்­தார். முதல் நாள் முதல் கையெ­ழுத்­துப் போட்­டார், மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம். பெட்­ரோல் விலையை லிட்­ட­ருக்கு 3 ரூபாய் குறைத்­துக் காட்­டி­னார் நம் தலை­வர். ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்­தார் நம் தலை­வர். அது­மட்­டு­மல்ல, கொரோனா சிகிச்­சைக்­கா­கத் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யி­லும் அரசு மருத்­து­வக் காப்­பீடு செல்­லும் என்று நம் தலை­வர் அன்­றைக்கு அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஆனால், இன்­றைக்கு வந்த ஆட்­சி­யா­ளர்­கள் என்ன செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">ஆய்­வுக்­குச் சென்­றால் ‘ரீல்ஸ்!’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">எப்­ப­டியோ ரீல்ஸ் போட்டு ஆட்­சிக்கு வந்­து­விட்­டோம். அத­னால், இன்­றைக்கு இந்த ஆட்­சி­யை­யும் ரீல்ஸ் போட்டே நடத்­தி­வி­டு­வோம் என்று எதற்­கெ­டுத்­தா­லும் ரீல்ஸ். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தொகு­திக்­குப் போனாலே, பாதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு என்ன தொகுதி என்று அவர்­க­ளுக்கே தெரி­ய­வில்லை. பக்­கத்­துத் தொகு­திக்கு சென்று நன்றி சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். வாக்­கா­ளர் சொல்­கி­றார்­கள், நீங்­கள் இந்­தத் தொகுதி கிடை­யாது பக்­கத்­துத் தொகு­தி­யில் நன்றி சொல்­லுங்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அமைச்­சர்­கள் ஆய்­வுக்­குச் சென்­றால் அங்­கே­யும் ரீல்ஸ். முத­ல­மைச்­ச­ரின் அலு­வ­ல­கத்­தி­லும் ரீல்ஸ் போடு­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ரைப் பார்க்­கப் போகி­ற­வர் எல்­லாம் ரீல்ஸ் எடுத்­துப் போடு­கி­றார்­கள். கிட்­டத்­தட்ட ஒரு ரீல்ஸ் ஆட்­சி­யாக இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">எங்கு பார்த்­தா­லும் கரண்ட் கட். இன்­றைக்கு எப்­படி இவ்­வ­ளவு நேரம் கரண்ட கட்­டா­கா­மல் இருக்­கி­றது என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. ஜென­ரேட்­ட­ரில் ஓடிக்­கொண்டு இருக்­கி­றதா? எங்­குப் பார்த்­தா­லும் இன்­றைக்கு பவர் கட். திரும்­பும் பக்­க­மெல்­லாம் இன்­றைக்­குப் பாலி­யல் வன்­கொ­டு­மை­கள். அது­வும் ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரில் ஆரம்­பித்து, அவர்­க­ளின் நிர்­வா­கி­கள் வரைக்­கும் ஒவ்­வொ­ருத்­த­ரும் இந்த குற்­றச்­சாட்­டு­க­ளில், இந்த வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இந்த அர­சின் அமைச்­சர் ஒரு­வர் சமீ­பத்­தில் செய்த கூத்தை நாம் அத்­தனை பேரும் பார்த்து அதிர்ச்சி அடைந்­தோம். `தக் லைஃப்’ என்று போட்டு ஒரு ரீல்ஸ் போடு­கி­றார். ஐ.பி.எல் மேட்ச் பார்க்­கப் போகும்­போது 500 ருபாய் நோட்டை வைத்து ஒரு மொபைல் போன், கிரெ­டிட் கார்டு இதை­யெல்­லாம் வைத்து, ஒரு மாத்­தி­ரை­யைப் பொடி­யாக்கி, என்­ன­வென்று கேட்­டால், குழந்­தைக்கு உடம்பு சரி­யில்லை, காய்ச்­சல், பாரா­சிட்­ட­மால் மாத்­தி­ரை­யைப் பொடி­யாக்கி கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றேன் என்று ஒரு அமைச்­சர் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இதற்­காக இந்த அரசு ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்­ததா என்று பார்த்­தீர்­கள் என்­றால், எந்த நட­வ­டிக்­கை­யும் கிடை­யாது. ஆனால், அவர் என்ன பொடி­யாக்­கு­கி­றார் என்­பதை ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டுக்­கும், நாம்  கண்­கூ­டா­கப் பார்த்­தோம். நம் அத்­தனை பேருக்­கும் தெரி­யும். அந்த அமைச்­சர் மேல் ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்­தாரா? எந்த நட­வ­டிக்­கை­யும் இந்த அரசு எடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">ஆளுங்­கட்சி நிர்­வா­கியே புகார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இன்­னொரு பக்­கம் அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் இன்­றைக்கு லஞ்­சம் தலை­வி­ரித்து ஆடிக்­கொண்டு இருக்­கி­றது. இதை நான் சொல்­ல­வில்லை. ஆளுங்­கட்­சி­யின் வழக்­க­றி­ஞர்­கள் அணி நிர்­வாகி ஒரு­வர் ஒரு புகார் கொடுத்­தி­ருக்­கி­றார். நீதி­மன்­றத்­தில் வழக்கு போட்­டி­ருக்­கி­றார். அந்­தக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­துக்கு லட்­சக்­க­ணக்­கில் பணம் வாங்கி இருக்­கி­றார் என்று அந்­தக் கட்­சி­யின் நிர்­வா­கியே இன்­றைக்­குப் புகார் கொடுத்­தி­ருக்­கி­றார். இது­வ­ரைக்­கும் எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இன்­றைக்கு அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ருத்­த­ரை­யும் பார்த்­தீர்­கள் என்­றால், என்னஅவர்­க­ளு­டைய பயோ­டேட்­டாவை எடுத்­துப் பாருங்­கள், அடி­தடி புகார் இருக்­கிற ஒரு­வர் அமைச்­சர். இன்­னொரு அமைச்­ச­ரின் மேல் நில அப­க­ரிப்­புப் புகார் அவ­ரும் ஒரு அமைச்­சர். இன்­னொ­ருத்­தர் வேலை வாங்­கித் தரு­கி­றேன் என்று சொல்­லிப் பணம் பறித்­தது என்று ஒரு அமைச்­சர். இதெல்­லாம் கூடப் பர­வா­யில்லை சட்­ட­மன்­றத்­தில் உட்­கார்ந்து எதிரே பார்க்­கும்­போது பார்த்­தீர்­கள் என்­றால், ஒரு அமைச்­சர் திருட்டு விசிடி விற்­ற­வர். இன்­னொரு அமைச்­சர் பிளாக்­கில் டிக்­கெட் விற்­ற­வர். இன்­னொரு அமைச்­சர் பிளாக்­கில் லாட்­டரி டிக்­கெட் விற்­ற­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இவர்­கள் எல்­லாம் இன்­றைக்கு அமைச்­சர்­க­ளாக சட்­ட­மன்­றத்­தில் பெயர் சொல்­லத் தேவை­யில்லை உங்­க­ளுக்கே தெரி­யும் மக்­க­ளுக்­கும் தெரி­யும். இப்­ப­டிப் பட்­டி­யல் நீண்டு போய்க்­கொண்டே இருக்­கி­றது. இவர்­க­ளெல்­லாம் யார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்த மக்­க­ளுக்கே தெரி­ய­வில்லை. முத­ல­மைச்­ச­ருக்­கும் தெரி­ய­வில்லை எங்­க­ளுக்­கும் தெரி­ய­வில்லை. யார் அமைச்­சர், யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று தெரி­ய­வில்லை. ஆனால் இவர்­கள் யார் மேலே­யும் இங்கு இருக்­கக்­கூ­டிய அரசு ஒரு வழக்கு கூடப் போட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஆனால், நம் இயக்­கத்­தைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர்­கள், இன்­றைக்­குக் களத்­தில் சிறப்­பாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இளைய தலை­முறை (Gen Z) இளை­ஞர்­கள், தன்­னிச்­சை­யாக வந்து இருக்­கக்­கூ­டிய இளைய தலை­முறை (Gen Z) இளை­ஞர்­கள் எல்­லாம் இன்­றைக்­குக் குறி வைத்து அவர்­கள் மேலெல்­லாம் இந்த அரசு பொய் வழக்கு போட்­டுப் பய­மு­றுத்­தப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">உருட்­டல் மிரட்­டல்­க­ளுக்கு பயப்­ப­டாத இயக்­கம் தி.மு.க.!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நான் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­குச் சொல்­வது, நீங்­கள் இல்லை, உங்க தாத்­தாவே வந்­தா­லும் தி.மு.க.காரன் இந்த உருட்­டல் மிரட்­டல் வேலைக்கு எல்­லாம் பயப்­பட மாட்­டான் அதற்­கெல்­லாம் பயப்­ப­டக்­கூ­டிய ஆட்­கள் நாங்­கள் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஏன், நேற்று முன்­தி­னம் என்ன நடந்­தது? நம் முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் அவர்­க­ளைக் கைது செய்­தார்­கள். கைது செய்து அவ­ரைக் கூட்­டிக்­கொண்டு சென்று என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்? உங்­கள் வீட்­டுக்கு ஒரு சோஃபா அனுப்பி வைக்­கி­றோம், நீங்­கள் ராஜி­னாமா செய்­து­விட்டு எங்­க­ளு­டைய கட்­சி­யில் வந்து சேர்ந்­து­வி­டுங்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். நம் அனிதா அண்­ணன் ரொம்­பத் தெளி­வா­கவே, சொல்­லி­விட்­டார் எனக்கு உங்­கள் சோஃபா எல்­லாம் தேவை­யில்லை, எங்­கள் தள­பதி என்ன சொல்­கி­றாரோ, எங்­கள் தலை­வர் என்ன சொல்­கி­றாரோ அதன்­ப­டி­தான் நான் கேட்­பேன் என்று அதை­யும் அடித்து உடைத்­து­விட்­டோம். நம் வழக்­க­றி­ஞர்­கள் ஆளுங்­கட்­சி­யின் அந்­தச் சதித்­திட்­டத்­தை­யும் இன்­றைக்கு முறி­ய­டித்­துக் காட்­டி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">இள­நீர்க் கடை நகைச்­சுவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஒரு படத்­தில் நீங்­கள் ஒரு நகைச்­சு­வைக் காட்­சி­யைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். கவுண்­ட­மணி ஒரு இள­நீர் கடை வைத்­தி­ருப்­பார். எதிர் பக்­கத்­தி­லேயே செந்­தி­லும் ஒரு இள­நீர் கடை போட நினைப்­பார். கவுண்­ட­மணி அவர்­க­ளி­டம் நிறைய இள­நீர் இருக்­கும். அவர் உத­வி­யா­ள­ராக நம் அண்­ணன் வடி­வேல் அவர்­கள் இருப்­பார். எதிர்க் கடை­யில் போட்­டி­ருக்­கக்­கூ­டிய செந்­தில் அவர்­க­ளுக்­கும் வடி­வே­லுக்­கும் ஒரு புரி­தல் வந்­து­வி­டும். என்ன செய்­வார் ஒவ்­வொரு இள­நீ­ரா­கக் கயிறு கட்டி எதிர்க் கடைக்கு அனுப்­பி­வி­டு­வார், அவர் பெரிய கடைக்­கா­ரர் ஆகி­வி­டு­வார். இன்­றைக்கு அந்த வேலையை இந்த த.வெ.க அரசு செய்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இவ்­வ­ள­வும் செய்­து­விட்டு எதுற்­கெ­டுத்­தா­லும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்­டணி சேர முயற்சி செய்­தார்­கள், தின­மும் காலை­யில் எழுந்த உடனே இது­தான் அவர்­க­ளுக்கு வச­னமே. அது­மட்­டு­மில்லை இன்­றைக்கு அவர்­கள் ஆட்­சியை கவிழ்க்க, நாம் முயற்சி செய்­துக்­கொண்டு இருக்­கி­றோ­மாம். இவர்­கள் ஆட்சி நடக்­கிற லட்­ச­ணத்­தைப் பார்த்­தால், நாமெல்­லாம் ஒன்­றும் செய்­யத் தேவையே இல்லை மக்­களே நிச்­ச­யம் விரை­வில் கவிழ்த்து விட்­டு­வி­டு­வார்­கள். எவ்­வ­ளவு நாள் தாங்­கிக்­கொள்ள முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">ஒவ்­வொரு நாளும் அவர்­கள் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னரை இழுக்­கப் பார்க்­கி­றோம் என்று நம்­மைப் பற்றி கூறு­கி­றார்­கள். யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்றே தெரி­யாது ஐயா, அவரை எப்­படி இழுக்க முடி­யும்? ஆனால் உண்­மை­யில் என்ன நடந்­து­கொண்டு இருக்­கி­றது? இன்­றைக்கு அடுத்த கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை ஒவ்­வொ­ரு­வ­ராக இள­நீர் இழுப்­பது மாதிரி இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய அரசு, இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் அவர்­கள் இழுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">முத­ல­மைச்­சர் சட்­ட­மன்­றத்­தில் பேசும்­போது பேசி­னார், விட­மாட்­டேன், தொட­மாட்­டேன், தொட்­ட­வனை விட­மாட்­டேன் என்று சொன்­னார். சொன்­னதை இன்­றைக்­குச் செய்­து­கொண்டு இருக்­கி­றார். ஒரு அ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைக் கூட விட­மாட்­டேன், அது­வும் குறிப்­பாக ஊழல் வழக்கு யார் யார் மேல் இருக்­கி­றதோ அவ­னை­யெல்­லாம் விட­மாட்­டேன், வேறு யாரும் தொட்­டு­விட விட­மாட்­டேன், நான் மட்­டும்­தான் தொடு­வேன் என்று சட்­ட­ச­பை­யில் சொன்­னதை நாங்­கள் கூட நினைத்­தோம். சரி, பஞ்ச் டய­லாக்­தான் பேசு­கி­றார் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">எங்­க­ளுக்கு சில நேரம் சந்­தே­கம்­கூட ஏற்­ப­டு­வ­துண்டு. நாம் சட்­ட­மன்­றத்­துக்­குத்­தான் வந்­தி­ருக்­கி­றோமா? இல்லை ஏதா­வது திரை­ய­ரங்­கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க வந்­தி­ருக்­கி­றோமா? அந்த நிலை­மை­யில்­தான் இன்­றைக்­குச் சட்­ட­மன்­றம் நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அன்­றைக்கு முத­ல­மைச்­சர் சொன்­னதை இன்­றைக்­குச் செய்­து­காட்­டிக்­கொண்டு இருக்­கி­றார். `தூய சக்தி’ `தூய சக்தி’ என்று சொன்­னார். `தூர்ந்த சக்தி’ என்­றார். பெயர் சொல்­வ­தற்கே கூச்­சப்­பட்­டார். அத­னால்­தான் நம் தலை­வர் சொன்­னார்­கள், `தூர்ந்த சக்­தி­யி­ட­மி­ருந்து இழுத்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­களே, இப்­படி காய்ந்து போன சக்­தி­யாக இருக்­கி­றீர்­களே’ என்று நம் தலை­வர் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">கல்­லாப்­பெட்டி கூட்­டணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நாம் பா.ஜ.க-வைச் சொல்­வோம் வாசிங் மெஷின் என்று, இன்­றைக்கு அதற்­குப் போட்­டி­யாக ஒரு குட்டி வாசிங் மெஷி­னாக இந்த அரசு, த.வெ.க அரசு நடந்­து­கொண்டு இருக்­கி­றது.  கல்­லாப்­பெட்டி கூட்­டணி. நான் மறந்­தா­லும் மக்­கள் மறக்க மாட்­டார்­கள். நாம் இதை ஒவ்­வொரு நாளும் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும். கடந்த தேர்­த­லில் தோற்­று­விட்­டோம் என்று சொல்­கி­றோமே, ஒன்றை ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள். தேர்­த­லில் நாம் எதிரி யார் என்று தெரி­யா­மல் இருந்­து­விட்­டோம். இப்­போது தெரிந்­து­விட்­டது. எதி­ரி­யைத் தோற்­க­டித்­து­விட்­டோம். யாரைத் தோற்­க­டிக்க வேண்­டும் என்று வேலை செய்­தோமோ, அவர்­க­ளைத் தோற்­க­டித்­து­விட்­டோம். ஊரெல்­லாம் சென்று ஓட்டு கேட்­டோம். தெருத்­தெ­ரு­வாக சென்று கேட்­டோம், நான் மாவட்ட மாவட்­ட­மாக, தொகுதி தொகு­தி­யாக சென்­றேன்.  40 நாள் சென்­றேன். நாம் வீட்­டுக்­குள் ஓட்­டுக் கேட்க மறந்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நம் போனில் அதை பதிவு செய்ய மறந்­து­விட்­டோம். இப்­போது எங்­க­ளுக்கு எதிரி யார் என்று தெரி­யும். அடுத்த தேர்­த­லில் சும்­மா­வெல்­லாம் விட்­டு­விட மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இது­தான் இன்­றைக்கு இந்த சோஃபா மாடல் அர­சின் லட்­ச­ணம். ஆனால் இன்­றைக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால் இதெல்­லாம் அவர்­கள் கூடப் புதி­தா­கக் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார்­கள் பார்த்­தீர்­களா, நம் தலை­வர் பெய­ரைச் சொல்லி, நம் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளை­யெல்­லாம் சொல்லி, வாக்கு வாங்கி, நம் உடன்­பி­றப்­பு­க­ளின் உழைப்­பால் இன்­றைக்­குச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராகி இன்­றைக்­குச் சில பேர் அமைச்­ச­ரா­கவே ஆகி­விட்­டார்­கள். அவர்­க­ளெல்­லாம் யாரா­வது வாயைத் திறக்­கி­றார்­களா என்று பார்த்­தீர்­கள் என்­றால், விமர்­ச­னம் செய்­வது கிடை­யாது. ஏனென்­றால், சோஃபா­வைப் பிடுங்­கிக்­கொண்டு போவார்­கள் அல்­லவா? அத­னால் இன்­றைக்கு இந்­தக் கூத்­தை­யெல்­லாம் வாயை மூடிக்­கொண்டு வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்­து­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">அடுத்து வரு­கின்ற நாட்­க­ளில், நாம் மக்­க­ளி­டம் இவற்­றை­யெல்­லாம் எடுத்­துச் சொல்ல வேண்­டும். அண்ணா சொன்­னது மாதிரி, பதவி என்­பது நம் தோளில் இருக்­கிற துண்டு மாதிரி. ஆனால் கொள்கை என்­ப­து­தான் நம் இடுப்­பில் கட்­டி­யி­ருக்­கக்­கூ­டிய வேட்டி. அது­தான் ரொம்ப முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">மிசா­வையே பார்த்­த­வர்­கள், அவ­ச­ர­நி­லையை பார்த்­த­வர்­கள் தி.மு.க.வினர் தொண்­டர்­கள். இவை­யெல்­லாம் எம்­மாத்­தி­ரம்? இவற்­றை­யெல்­லாம் தூசு போல தட்­டி­விட்­டுப் போய்க்­கொண்டே இருப்­போம். நேற்று வந்த அந்­தக் கட்­சி­யின் மிரட்­டல், உருட்­டல்­க­ளுக்­கெல்­லாம் பயப்­ப­டு­கிற கட்­சிக்­கா­ரர்­கள் தி.மு.க கிடை­யாது. அதற்­கெல்­லாம் வேறு யாரை­யா­வது பார்த்­துக்­கொள்­ளுங்­கள். என்­றைக்­குமே களத்­தில் நிற்­போம், மக்­க­ளோடு நிற்­போம். ஆகவே, இவற்­றை­யெல்­லாம் மன­தில் வைத்­துக்­கொண்டு நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு நாளும் உழைக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">நீங்­கள் அனை­வ­ரும் ஒற்­று­மை­யோடு கழ­கப் பணி­க­ளில், மக்­கள் பணி­யில் ஈடு­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, நம் தலை­வ­ரின் வழி­காட்­டு­த­லின்­படி, எப்­போ­துமே நான் உங்­க­ளோடு நிற்­பேன், உங்­க­ளோடு தோளோடு தோள் கொடுத்து நிற்­பேன். நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து இந்த சோஃபா மாடல் அர­சின் அவ­லங்­க­ளை­யெல்­லாம் மக்­க­ளி­டம் தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">தேர்­தல் மூல­மாக ஜன­நா­யக அடிப்­ப­டை­யில், மறு­ப­டி­யும் நம் தலை­வர் தலை­மை­யில் திரா­விட மாடல் ஆட்­சியை நிச்­ச­யம் தமிழ்­நாட்­டில் அமைப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">கலை­ஞர் அவர்­கள் பிறந்­த­நாளை முன்­னிட்டு, மிகச்­சி­றப்­பான நலத்­திட்ட உத­வி­க­ளெல்­லாம் செய்த உங்­கள் அத்­தனை பேரை­யும் மீண்­டும் வாழ்த்தி, கலை­ஞர் புகழ் ஓங்­கட்­டும். இந்­நி­கழ்ச்­சியை மிக­வும் சிறப்­பாக ஏற்­பாடு செய்த மாவட்­டக் கழ­கத்­துக்­கும் நம் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் அண்­ணன் வேலு அவர்­க­ளுக்­கும் மீண்­டும் என்­னு­டைய பாராட்­டு­க­ளைத் தெரி­வித்து, வந்த மாவட்ட நிர்­வா­கி­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">இவ்­வாறு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.8">மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் த.வேலு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் சந்­தி­ர­சே­கர், நந்­த­னம் வேதா, சத்யா, மலர், அன்­ப­ழ­கன், தங்­கம், பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் முரளி, நந்­த­னம் மதி, ஏழு­மலை, கோ.சு.மணி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் வில்­ல­வன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் செல்வி சௌந்­த­ர­ரா­ஜன், அம்­பேத்­கர், எம்.ஆறு­மு­கம், அணி­க­ளின் மாவட்ட அமைப்­பா­ளர்­கள் சர­வ­ணன், கணேஷ் பாண்­டி­யன், கதி­ர­வன், அந்­தோணி, பானு சலீம், விஜய் வெங்­க­டேஷ், வடி­வேல், சத்­தி­ய­மூர்த்தி, சண்­மு­க­சுந்­த­ரம், வெங்­கட்­ரா­மன், முத்­த­மிழ் பேரவை அறக்­கட்­ட­ளைத் தலை­வர் ராமா­னு­ஜம், இளை­ஞர் அணி மாவட்­டத் துணை அமைப்­பா­ளர்­கள் உமா­சங்­கர், அஸ்­வின் குமார், விக்­னேஸ்­வ­ரன், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் துரை பார்த்­தி­பன், பொன்­னு­சாமி, மாமன்ற உறுப்­பி­னர்­கள் கீதா முரளி, ரேவதி, விமலா கிருஷ்­ண­மூர்த்தி, பாஸ்­கர், கோமதி மணி­வண்­ணன், கீர்த்­திகா பாஸ்­கர், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் ஜெக­தீஷ், திவான், மணி­ரத்­தி­னம் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>