<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 07 2026 03:38:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072026-CHN-06" position.sequence="06" ex-ref="07072026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">மாற்று அரசியலா? மோசடி அரசியலா?</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup748599_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்தியாவிலேயே யாரும் எதிர்பாராத ஒரு முடிவாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அமைந்துவிட்டது. பலருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு குழப்பம், சிலருக்கு கோபம், சிலருக்கு அவநம்பிக்கை, சிலருக்கோ, “அடுத்து தமிழ்நாட்டில் என்ன நடக்குமோ?” என்ற கவலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்தல் முடிந்து இரு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் பலர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“மாற்று அரசியல்”, “தூய சக்தி” போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள விஜய்யின் த.வெ.க., 50 நாட்களுக்குள் தனது உண்மை முகத்தை வெளிகாட்டத் தொடங்கிவிட்டது. குதிரைப் பேரம், பல ஆயிரம் கோடி ரூபாய் கனிமவளக் கொள்ளைக்கான ஏற்பாடுகள், கார்பரேட் சேவை, வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் மோடி பாணியிலான “கோயபல்ஸ்” பரப்புரைகள் அனைத்தும் கொடிகட்டிப் பறக்கின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘வானத்தையே வில்லாக வளைப்போம்’ என்ற அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் “கஜானா காலி”, “தி.மு.க. மட்டும் உடனே செய்துவிட்டதா?” என முந்தைய ஆட்சியின் மீது பழி போடும் ஏமாற்று அரசியலை, முதல் நாளில் இருந்தே விஜய்யின் அரசு தொடங்கிவிட்டது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 9.2 லட்சம் கோடி என்பது ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தெரிந்த கணக்கு. அப்படி இருக்கும்போது, மக்களை ஏமாற்ற வாக்குறுதி மட்டும் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்தல் பரப்புரையில், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ‘முழு பயிர்கடன் தள்ளுபடி’ என முழங்கினார் விஜய். ஆனால் தமிழ்நாட்டில் 70% விவசாயிகள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்கள். ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு குறு விவசாயிகள் என்றால் ரூ.50,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு வெறும் ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி என பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். சொன்னது 100% தள்ளுபடி. செய்தது 0%. இதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தும்படி 2024-இல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு வித்துள்ளதாகக் கூறி, தனது துரோகத்தை த.வெ.க. அரசு மூடிமறைக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விவசாயிகளுக்கான மானியங்கள், சலுகைகளை வெட்டிச் சுருக்க வேண்டுமென்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையில்தான் ரிசர்வ் வங்கி இக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த விவசாய விரோத கட்டுப்பாட்டிற்கு எதிராக வாய்திறக்காமலும், கட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்காமலும் மக்களுக்குத் துரோகமிழைக்கிறது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதைப் போலவே, 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக த.வெ.க. அரசு அறிவித்தது. ஆனால் மூடப்பட்டதாக சொன்ன கடைகளில் 60% க்கும் மேல் வெறும் 100 மீட்டர் தள்ளி வைத்து மீண்டும் திறந்துவிட்டார்கள். எங்கெங்கு கடைகள் மூடப்பட்டன என எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தனியார்மயமாக்குவது குறித்து த.வெ.க. அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதாவது, “போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க., ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதையின் பிடியில் சிக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதைப்போலவே “மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்ற வாக்குறுதியும் மோசடி என அம்பலமாகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் என்பது, கணக்கு போட்டால் மாதம் 250 யூனிட் தான். திமுக அரசு ஏற்கனவே மாதம் 100 யூனிட் கொடுக்கிறது. தவெக கூடுதலாக தருவது வெறும் 150 யூனிட் மட்டுமே. இதை வார்த்தை ஜாலம் காட்டி த.வெ.க-.வினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க – அ.தி.மு.க-வுடன் போட்டி போட்டுக்கொண்டு த.வெ.க. வாக்குறுதிகளை வாரி வழங்கியது. எதிர்பாராத வகையில் ஆட்சியில் அமர்ந்ததும், உடனே எதுவும் செய்ய முடியாது என தமிழ்நாட்டின் நிதிநிலையை காரணம் காட்டி, தனது இணைய அடியாட்படை மூலம் Reels போட்டு மக்களை ஏய்க்கும் கேவலமான உத்தியைக் கையாளுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.க-வுக்கு அடிபணியத் தயாராகிவிட்ட ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரத் தலையீட்டை எதிர்த்து தமிழ்நாடு தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வர் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், “முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை” என்ற உயர்கல்வி அமைச்சரின் பேச்சு, மாநில உரிமையைப் பறிகொடுக்கத் தயார் என்ற மறைமுகச் செய்தியை மோடி அரசுக்குச் சொல்வதாக உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பக்ரீத்துக்கு முந்தைய நாளில், பொது இடங்களில் மாடு, கன்று வெட்ட தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து விஜய் அரசு வாயே திறக்கவில்லை. அதே சமயத்தில் கச்சத்தீவு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினால் “No Comments” என நழுவுகின்றனர் த.வெ.க. அமைச்சர்கள். விஜய்யோ பா.ஜ.க-வை “கொள்கை எதிரி” என்று கூறியதுடன் சரி, அதற்குப் பிறகு எந்த மக்கள் பிரச்சினையிலும் பா.ஜ.க-வை விமர்சிப்பதே இல்லை. அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவதைக் கண்டிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பது பற்றி மோடியிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு விஜய் ‘மாவீரராக’ இருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விஜய், தமிழ்நாட்டின் மோடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மோடிக்கு அடிபணிவது மட்டுமல்ல, விஜய் ஆட்சி நடத்தும் பாணியும் அப்பட்டமான மோடி பாணியே! பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், தயாரிக்கப்பட்ட உரைகள், ஐ.டி. விங் பரப்புரைகள் மூலம் போலி சாதனைக் கட்டமைப்பை மோடி உருவாக்குகிறார். நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அரசின் தோல்விக்கும் “முந்தைய ஆட்சிதான் காரணம்” என்று பல்லவி பாடுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய்யும் அதே பாதையில்தான் பயணிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு “முந்தைய ஆட்சிதான் காரணம், கஜானா காலி” என கோயபல்ஸ் பாணியில் கதையளக்கிறார். ஒரு முதல்வராக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் ஓடி ஒளிகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘உலகத் தலைவர்’ பிம்பம் கட்டமைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதற்கும் மேலாக, மோடியின் ‘விஸ்வகுரு’ பிம்பம் போல, “விஜய் அடுத்த 50 ஆண்டுகளுக்கு உலக அரசியலையே தீர்மானிப்பார்” என அதீத ‘இரட்சகர்’ மற்றும் ‘உலகத் தலைவர்’ பிம்பத்தை ஜோதிடர்கள் மூலம் கட்டமைக்கிறார்கள். ஒரு தலைவரைக் கேள்விக்கு அப்பாற்பட்டவராக வைத்திருக்கும் மோடியின் பாசிச பாணியையே, விஜய் தன் சினிமா பிம்பம் மற்றும் ஐ.டி. விங் பரப்புரை மூலம் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் தொடங்கியுள்ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனப் பொய்மை உரைத்து முதல்வரான விஜய், த.வெ.க. ஆட்சியில் தலைவிரித்தாடும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து வாய்திறக்கவில்லை. கஞ்சா, போதைப்பொருள் விற்பனையை தடுக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரே போதைப் பொருளைப் பயன்படுத்தும் வீடியோ வெளிவந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களும் மூடிமறைக்கப்படுகின்றன. கொள்ளையடிப்பதை மட்டுமே முழுமுதற் நோக்கமாக த.வெ.க-வினர் மேற்கொண்டு வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மறுபுறம், பா.ஜ.க. கொல்லைப்புறமாக நுழைவதைத் தடுப்பதற்காக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவளித்ததாகக் கூறிய தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள், முந்தைய ஆட்சியைப் போலவே தற்போதும் த.வெ.க. அரசை விமர்சிக்காமல் வேடிக்கை பார்க்கின்றன. விஜய்க்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு அளிக்கின்றன. இன்னொரு பக்கம், “த.வெ.க. ஆர்.எஸ்.எஸ்-ஸின் பிள்ளை” என விமர்சித்துவந்த வி.சி.க., இன்று அமைச்சரவையில் இடம் கிடைத்ததும், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கும், ஜோதிடர் நியமனம் முதல் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் வரை அபத்தங்களுக்கும் வக்காலத்து வாங்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்தப் போக்குகள், இக்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அழிப்பதோடு, அணிகளிடம் சந்தர்ப்பவாதத்தை ஊட்டி வளர்க்கவுமே பயன்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">புதிதாக வந்திருக்கிறார்கள் என ஆறு மாதம் அமைதியாகக் காத்திருக்கச் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. த.வெ.க. ஆட்சியின் தொடக்கமே இவ்வளவு மோசமானதாக இருக்கும்போது, ஜனநாயக சக்திகள் இப்போது பேசவில்லை என்றால், நாளை பேச இடமே இருக்காது. தமிழ்நாட்டின் சமூகநீதி, மொழி உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய அரசியல் பாரம்பரியத்தைத் தக்கவைக்க மறுக்கும் த.வெ.க. கும்பலின் கவர்ச்சிவாத – பிழைப்புவாதப் போக்கை மக்களிடம் உடனுக்குடன் தோலுரிக்க வேண்டிய நேரம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சுருக்கமாகச் சொன்னால்: வாக்குறுதி 100 சதவிகிதம். செயல் 5 சதவிகிதம். பாணி 100 சதவிகிதம் மோடி கோயபல்ஸ் பாணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் ஆட்சியின் முகமூடியை இப்போது கிழிக்காவிட்டால், அது சாதாரண ஊழல் ஆட்சியாக மட்டும் நிற்காது; கேள்வி கேட்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கக்கூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாணியிலான கொள்ளை ஆட்சியாக, பாசிசக் கும்பலுக்கு வழியமைக்கும் ஆட்சியாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் பாசிச கும்பல் காலூன்ற விடாமல் எதிர்ப்பதும், விஜய் ஆட்சியின் மக்கள்விரோதப் போக்குகளை எதிர்ப்பதும்வேறுவேறானதல்ல…</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>