<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 07 2026 03:46:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07072026-TRY-02" position.sequence="02" ex-ref="07072026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">கவிழ்ந்து கிடப்பதைக் கவிழ்க்கத் தேவையில்லை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup740096_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘நா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ட்­டில் இருக்­கும் சூழ்­நி­லை­யைப் பார்த்­தால் எப்­போது வேண்­டு­மா­னா­லும் தேர்­தல் வர­லாம். மூன்று மாதத்­திலோ, ஆறு மாதத்­திலோ கூட வர­லாம். எப்­போது தேர்­தல் வந்­தா­லும் தயா­ராக இருங்­கள்’’ என்று தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சொன்­னார்­கள். உடனே ‘போலி ஜன­நா­ய­க­னின்’ காப்­பா­ளர்­கள் பொங்­கு­கி­றார்­கள். ‘அவர் எப்­படி அப்­ப­டிச் சொல்­ல­லாம்? மக்­கள் தீர்ப்பை ஏற்க வேண்­டும்’ என்று ராஜாவை மிஞ்­சிய ராஜ விசு­வா­சி­யா­கக் 
கூவு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">180 தொகு­தி­க­ளைக் கைப்­பற்றி ஆட்சி அமைத்­துள்­ளாரா  விஜய்? 
160 தொகு­தி­க­ளைக்  கைப்­பற்றி ஆட்சி அமைத்­துள்­ளாரா  விஜய்? பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கத் தேவை­யான 118 இடங்­க­ளை­யா­வது அவ­ருக்கு கொடுத்­தார்­களா தமிழ்­நாட்டு மக்­கள்? இல்லை. 108 இடங்­க­ளில் தான் விஜய் வென்­றார். அவ­ருக்கு முத­ல­மைச்­சர் மகு­டத்தை தமிழ்­நாட்டு மக்­கள் சூட்­ட­வில்லை. கடன் வாங்கி, பிச்சை எடுத்து, பல­ரை­யும் ஏமாற்றி, பொய் சொல்லி, இன்­னும் பல காரி­யங்­க­ளைச் செய்து முத­ல­மைச்­சர் பத­வி­யில் விஜய் உட்­கார்ந்து இருக்­கி­றார். எனவே இது ஆடும் நாற்­காலி என்­பது நம்மை விட விஜய்க்கு நன்கு தெரி­யும். இது கவி­ழும் நாற்­காலி என்­ப­தும் நம்மை விட விஜய்க்கு நன்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் ஆட்சி அமைக்க ஆத­ரவு தந்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்­சர் பதவி தரு­கி­றோம். வாரி­யத் தலை­வர் பதவி தரு­கி­றோம் என்று பொய் வாக்­கு­றுதி தரப்­பட்­டது. கொறடா உத்­த­ரவை மீறி­னால் இவர்­கள் பதவி போய்­வி­டும் என்று அனை­வ­ருக்­கும் தெரி­யும். அப்­ப­டிச் சொல்லி ஏமாற்­றி­னார்­கள். அத­னால் 25 பேர் விஜய் ஆட்­சிக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்­கள். பதவி கிடைக்­க­வில்லை என்­ற­தும் 19 பேர் மீண்­டும் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மையை ஏற்­றுக் கொண்டு போய்­விட்­டார்­கள். அதா­வது விஜய்க்கு 
ஆத­ர­வாக வாக்­க­ளித்த 19 பேர் இப்­போது விஜய் ஆட்­சிக்கு எதி­ரான மன­நி­லை­யில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விஜய்க்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் 
இப்­போது எம்.எல்.ஏ.வாகவே இல்லை. நாளையே நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் வந்­தால் இவர்­க­ளால் வாக்­க­ளிக்க முடி­யாது. இவர்­கள் அனை­வ­ரும் குதிரை பேரம் நடத்தி  ராஜி­னாமா செய்ய வைக்­கப்­பட்­ட­வர்­கள். ‘நீங்­கள் 
ராஜி­னாமா செய்­தால், இடைத்­தேர்­தல் வரும். இடைத்­தேர்­தல் நடந்­தால் 
உங்­களை வேட்­பா­ளர் ஆக்கி ஜெயிக்க வைக்­கி­றேன்’ என்று விஜய் ஜீபூம்பா பாணி­யில் கொடுத்த பசப்­புக்கு பல்­லி­ளித்து ராஜி­னாமா செய்­த­வர்­கள் இவர்­கள். இவர்­க­ளது ராஜி­னாமா நாட­கத்­தின் சதிக்­காட்­சி­களை தேர்­தல் ஆணை­யம் அறி­யும். எனவே இப்­போ­தைக்கு இந்த ஆறு தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் வரப்­போ­வது இல்லை. ‘ஜன­நா­ய­கன்’ ரிலீஸ் போலவே கிடப்­பில் போட்ட விஷ­ய­மாக இந்த ஆறு தொகுதி நிலைமை ஆகப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காங்­கி­ரஸ் கட்சி இரண்டு அமைச்­சர் பத­விக்­காக விஜய்யை ஆத­ரிக்­கி­றது. ‘தேர்­த­லுக்கு முன்பு போயி­ருந்­தால் 70 எம்.எல்.ஏ., ஒரு துணை முத­ல­மைச்­சர், பத்து மந்­தி­ரி­கள் வாங்கி இருக்­க­லாம்’ என்று இப்­போதே துணை முத­ல­மைச்­ச­ரா­கவே  பேசி வரு­கி­றார் போக்சோ புகழ் அமைச்­சர் விஸ்­வ­நா­தன். இவர்­கள் உள்­ளாட்­சித் தேர்­த­லில் விஜய்யை ஒரு வழி செய்து விடு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் ஆட்­சியை ஆத­ரித்து வாக்­க­ளித்த இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யும், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யும், ‘த.வெ.க.வின் கூட்­ட­ணி­யில் நாங்­கள் இல்லை’ என்று சொல்லி விஜய் நடத்­திய கூட்­ட­ணிக்  கட்­சி­கள் கூட்­டத்­தில் கலந்து கொள்­ள­வில்லை. அந்­த­ள­வுக்கு விஜய் ஆட்­சியை ஆத­ரிக்க வெட்­க­மாக இருக்­கி­றது கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளுக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விஜய் ஆட்­சிக்­கும், கட்­சிக்­கும் ஆத­ரவு தந்து விஜய் கட்­சி­யோடு கூட்­டணி சேர்ந்­துள்­ளார் வைகோ. ‘உங்­கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரு­வ­ரை­யும் 
ராஜி­னாமா செய்­யச் சொல்­லுங்­கள். இடைத்­தேர்­த­லுக்கு நானே வந்து பிரச்­சாரம் செய்து ஜெயிக்க வைக்­கி­றேன்’ என்று விஜய் சொன்­னதை வைகோவே பொது­வெ­ளி­யில் சொல்லி குதிரை பேரத்தை உறுதி செய்­துள்­ளார். இவ­ரது 
வாக்­கு­மூ­லமே போதும் குதிரை பேரம் நடந்­ததை உறுதி செய்­வ­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காதர் மொய்­தீன் கட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில், விஜய் ஆட்­சிக்கு ஆத­ரவு என்று காதர்­மொய்­தீன் கட்சி அதி­கா­ரப்­பூர்­வ­மாக கடி­தம் கொடுப்­ப­தற்கு முன்பே, தங்­க­ளுக்கு இந்­தக் கட்­சி­யின் ஒரு எம்.எல்.ஏ. ஆத­ரவு இருக்­கி­றது என்று ஆளு­ந­ருக்கு விஜய் கடி­தம் கொடுத்து விட்­டார். ஒரு­வேளை 
காதர் மொய்­தீன் ஆத­ரிக்­க­வில்லை என்­றால் அந்த எம்.எல்.ஏ.வும் கட்சி மாறி இருப்­பார். அது­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அ.ம.மு.க.வின் ஒரு உறுப்­பி­னர் ஆத­ரவு என்­பது அப்­பட்­ட­மான குதிரை பேரம் ஆகும். இதற்கு வீடியோ ஆதா­ரங்­கள் இருக்­கி­றது. இது தொடர்­பாக 
நுங்­கம்­பாக்­கம் காவல் நிலை­யத்­தில் டி.டி.வி. தின­க­ரன் புகார் கொடுத்­துள்­ளார். ஆளு­ந­ரி­ட­மும் வாக்­கு­மூ­லம் கொடுத்­துள்­ளார். ஒரு அமைச்­சர் பத­விக்­காக, 
விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி விஜய் ஆட்­சியை ஆத­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவை அனைத்­தும் சேர்ந்து தான் விஜய் முத­ல­மைச்­ச­ராக நீடிக்­கக் 
கார­ணமே தவிர, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, மிகப்­பெ­ரிய செல்­வாக்­கோடு அவர் அம­ர­வு­மில்லை. அப்­படி அமர்ந்­த­வர் கவிழ்ந்து போவார் என்று நாம் சொல்­ல­வு­மில்லை. அவரே கவிழ்ந்து தான் கிடக்­கி­றார். கவிழ்ந்து கிடப்­ப­வ­ரைக் கவிழ்க்­கத் தேவை­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவர் கவிழ்ந்து கிடக்­கி­றார் என்­ப­தற்கு உதா­ர­ணம் தான், சட்­ட­மன்ற 
உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கி­ற­வர்­களை ராஜி­னாமா செய்ய வைப்­பது ஆகும். தன்னை ஆத­ரிக்­கும் யாரை­யும் விஜய் நம்­ப­வில்லை. நம்­பத் தயா­ராக இல்லை. ‘தங்­களை வெற்றி பெற வைத்­த­வ­ரையே காலை வாரி­விட்டு வந்­த­வர்­கள் இவர்­கள்’ என்­பதை விஜய் அறி­ய­மாட்­டாரா? அத­னால் தான் இவர்­களை விட தன்­னையே நம்­பு­கி­றார் விஜய். கூட்­ட­ணிக் கூட்­டம் எல்­லாம் 
முள்­வே­லிக்கு பெயிண்ட் அடிக்­கும் காரி­யங்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பல்­வேறு பேரங்­க­ளின் மூல­மாக அ.தி.மு.க. உறுப்­பி­னர்­களை  விஜய் 
ராஜி­னாமா செய்ய வைக்­கி­றார். 12 பேர் வரை ராஜி­னாமா செய்ய வைப்­பது 
அவ­ரது திட்­டம். இதற்கு யார் முத­லீடு செய்­கி­றார்­கள், எவ்­வ­ளவு முத­லீடு 
செய்­யப்­ப­டு­கி­றது என்­பதை அதி­கார மட்­டங்­கள் அறிந்­த­வர்­கள் அறி­வார்­கள். இது யாரு­டைய ஆட்சி, யாரு­டைய நல­னுக்­கான ஆட்சி இது என்­ப­தை­யும் அனை­வ­ரும் அறி­வோம். இந்த முகத்­திரை கொஞ்­சம் கொஞ்­ச­மாக விரை­வில் 
கிழி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கவி­ழும் போது மொத்­த­மாய்த் தெரி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>