<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 06 2026 22:50:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07072026-VLR-05" position.sequence="05" ex-ref="07072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">தமிழ்நாட்டை மன்னராட்சி காலத்திற்குக் கொண்டு செல்லும் நடிகர் விஜயின் அரசு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame747896_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup748281_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M5bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M6bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">ஆ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">று மாதம் வரை புதிய ஆட்­சிக்கு அவ­கா­சம் கொடுக்க வேண்­டும் என்று அதன் ஆத­ர­வா­ளர்­கள் பல­ரும் கூறு­கின்­ற­னர். உண்­மை­தான். நடி­கர் விஜய் அளித்த அசாத்­தி­ய­மான வாக்­கு­று­தி­களை ஏன் நிறை­வேற்­ற­வில்லை என்று கேட்­டால் இந்த ஆறு­மாத அவ­கா­சத்­தைக் கோர­லாம். ஆனால் ஆட்சி தான்­தோன்­றித்­த­ன­மாக நடந்­தால், முத­ல­மைச்­சர் எந்த குள­று­ப­டி­க­ளுக்­கும் பொறுப்­பேற்­கா­மல் இருந்­தால் அதை விமர்­சிக்க ஆறு­மா­தம் காத்­தி­ருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விஜய் ஆட்­சி­யின் அடிப்­படை பிரச்­சினை என்­ன­வென்­றால் அவர் ஆட்­சிக்கு வந்த முறை­தான். அவர் ஜோசப் விஜய் என்ற தனி நப­ராக மக்­க­ளி­டையே பணி­யாற்றி, கட்­சிப் பணி­யாற்றி, அதன் மூலம் தலை­வ­ராக உரு­வெ­டுத்து ஆட்­சிக்கு வர­வில்லை. திரைப்­ப­டங்களில் கதா­நா­ய­க­னாக பிறர் இயக்­கத்­தில், பிறர் எழு­திய கதை­யில், அவர்­கள் எழு­திய வச­னத்­தைப் பேசி நடித்து, அதன் மூலம் மக்­க­ளைக் கவர்ந்து. அந்த திரைக் 
க­தாநா­யக பிம்­ப­மா­கத்­தான் ஆட்­சிக்கு வந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் கட்­சிக்­கா­ரர்­க­ளி­டமே அவர் நெருங்­கிப் பழ­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. புஸ்ஸி ஆனந்த் என்­ப­வர்­தான் அவுட்­சோர்­ஸிங் முறை­யில் கட்­சிக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­னார். கடைசி நேரத்­தில் பல்­வேறு கட்­சி­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள், குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­கள் என பல­ரும் வேட்­பா­ளர்­க­ளாக தேர்­வா­னார்­கள். ஆனால் எல்லா தொகு­தி­க­ளி­லும் விஜயே நிற்­ப­தாக நினைத்து அந்­தந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று விஜய் கூறி­னார். இது ஒரு தொகு­தி­யின் வாக்­கா­ளர்­கள் தங்­கள் பிர­தி­நி­தி­யைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்ற நடை­மு­றை­யையே மாற்­றி­யது. வேட்­பா­ளர் யாரென்றே தெரி­யா­மல் விஜ­யின் விசில் சின்­னத்­திற்கு மக்­கள் வாக்­க­ளித்­த­தில் தேர்­தல் நடை­முறை பொரு­ளி­ழந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக்­கள் விஜய் என்­னும் கதா­நா­யக பிம்­பத்­திற்கு வாக்­க­ளித்­தார்­கள். ஆனால் அவரை முதல்­வ­ராக வைத்­துக்­கொண்டு யார், யாரோ ஆட்சி செய்­கி­றார்­களா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. ஏனெ­னில் விஜய் எதைக் குறித்­தும் பேசு­வ­தில்லை. ஊட­கங்­களை 
சந்­திப்­ப­தில்லை. கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­வ­தில்லை. பொறுப்­பேற்­ப­தில்லை. இத­னால் மக்­கள் எந்த பிம்­பத்திற்கு வாக்­க­ளித்­தார்­களோ அந்த பிம்­பத்­திற்கு உரி­ய­வர்­தான் ஆட்சி செய்­கி­றாரா என்ற கேள்வி 
எழு­கி­றது. இது வெறும் குறி­யீ­டாக அரி­ய­ணையை அலங்­க­ரித்த மன்­னர்­களை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. அத­னால் நாம் சற்றே விரி­வாக மன்­ன­ராட்­சிக்­கும், மக்­க­ளாட்­சிக்­கு­மான வேறு­பா­டு­களை ஆராய வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மன்­ன­ராட்சி: ஒரு ஃபிளாஷ்­பேக்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மானு­டம் சில ஆயி­ரம் ஆண்­டு­கள் மன்­ன­ராட்­சி­யைத்­தான் பின்­பற்­றி­யது. ஆனால் அதன் வடி­வம் குடி­ய­ர­சாக இருக்க வேண்­டும் என்ற முயற்­சி­யும் தொடர்ந்து பல­வ­கை­க­ளில் நடக்­கத்­தான் செய்­தது. குடி­ய­ர­சிற்­கும், முடி­யாட்­சிக்­கும் என்ன முரண்­பாடு அல்­லது வேறு­பாடு என்­பதை நாம் முத­லில் சிந்­திக்க வேண்­டும். குடி­ய­ரசு என்­பது விழு­மி­யங்­க­ளின், தர்­மத்­தின், சட்­டத்­தின் ஆட்சி. மன்­னர் என்று ஒரு­வர் இருந்­தா­லும் அவ­ரும் அந்த விதி­க­ளுக்­குக் கட்­டுப்­பட்­டு­தான் ஆட்சி செய்ய வேண்­டும் என்­பதே குடி­ய­ர­சின் தத்­து­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கண்­ண­கி­யின் சிலம்­பில் உள்­ளது மாணிக்­கப் பரல் என்று தெரிந்­த­தும் கோவ­ல­னுக்கு தவ­று­த­லாக மரண தண்­டனை விதித்த பாண்­டிய மன்­னன் “­­பொன் செய் கொல்­லன்-­­தன் சொல் கேட்ட யானோ அர­சன்? யானே கள்­வன்” என்று கூறி உயிர் விட்­ட­தா­கச் சிலப்­ப­தி­கா­ரம் கூறு­வது இதைத்­தான். அதா­வது, மன்­ன­ராக இருந்­தா­லும் அவரை விட அற நெறி பெரி­யது. அவ­ரும் அதற்­குக் கட்­டுப்­பட்­ட­வர்­தான். நெறி­பி­ற­ழா­மல் செம்­மை­யாக கோலோச்­சு­வதே செங்­கோல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி அர­சன் நெறி­யு­டன் ஆட்சி செய்­யா­மல் தன் ஆதிக்­கத்தை செலுத்­தி­னால், குடி­ந­பர்­கள் அவரை எதிர்க்­க­லாம் என்­ப­தற்­கும் தமிழ் பண்­பாட்­டின் உதா­ர­ண­மாக திரு­நா­வுக்­க­ர­ச­ரின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“நாமார்க்­கும் குடி­யல்­லோம்; நமனை அஞ்­சோம்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்ற கூற்று விளங்­கு­கி­றது. திரு­நா­வுக்­க­ர­சர் சைவ­ராக மாறி­ய­போது அவரை தண்­டிக்க முற்­பட்ட பல்­லவ மன்­ன­னுக்கு அஞ்­சி­டா­மல் அவர் பாடி­யது இந்த வரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த உதா­ர­ணங்­க­ளி­லி­ருந்து நாம் என்ன புரிந்­து­கொள்­ள­லாம் என்­றால் மன்­ன­ராட்சி என்­பது எல்லா காலங்­க­ளி­லும் வெறும் சர்­வா­தி­கா­ரமோ, எதேச்­ச­தி­கா­ரமோ, கொடு­கோண்­மையோ கிடை­யாது. அது­வும் பொது­வான அற­நெ­றி­கள், குடி­க­ளின் நலன், அவர்­கள் சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்றை அனு­ச­ரித்தே நடக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­தான் முக்­கி­ய­மா­னது. எல்லா காலத்­தி­லும் மூன்று அம்­சங்­கள் தவிர்க்க 
முடி­யா­தவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்று, சமூக ஒழுங்கை உரு­வாக்­கும், பாது­காக்­கும் பொது­நெ­றி­கள், விழு­மி­யங்­கள், சட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு, குடி­ந­பர்­க­ளின் உரி­மை­கள். அதா­வது அவர்­க­ளது விருப்­பத்­திற்­கேற்ப பொது நெறி­க­ளுக்கு உட்­பட்டு வாழும் உரிமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூன்று, சமூக இயக்­கத்தை நிர்­வ­கிக்­கும் அர­சின் தலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மனித நாக­ரீ­கங்­கள் எல்­லாம் மன்­ன­ராட்­சி­யில்­தான் தழைத்­தோங்­கின. கலை­க­ளும், இலக்­கி­ய­மும், அறி­வி­ய­லும் வளர்ந்­தன. அதற்­கான கார­ணம் இந்த மூன்று அம்­சங்­க­ளும் அவ்­வப்­போது ஒத்­தி­சை­வு­டன் இயங்­கி­ய­து­தான். அப்­படி நடக்­கா­த­போது போர்­க­ளும், வன்­மு­றை­யும். பொது ஒழுங்­கின் சீர்­கு­லை­வு­க­ளும் ஏற்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மன்­ன­ராட்­சி­யின் குறை­கள் எவை­யென்­றால் மன்­னர் என்ற தனி­ந­ப­ரி­டம் இறை­யாண்மை என்­பது மொத்­த­மும் குடி­யி­ருக்­கும்; அவ­ரா­கப் பார்த்து அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்க வேண்­டும். ஆலோ­சித்து முடி­வெ­டுக்க வேண்­டும் என்­ப­னவே. நல்ல திற­மை­யான அர­சர் அமைந்­து­விட்­டால் அவர் பொறுப்­பாக கலந்­தா­லோ­சித்து முடி­வெ­டுப்­பார். தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­பார். அற­நெ­றி­களை அனு­ச­ரிப்­பார். அசோ­கர், அக்­பர் என்று உதா­ர­ணங்­க­ளைச் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­ப­டி­யில்­லா­மல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திற­மை­யற்ற அர­சர் அமைந்­தால், அவ­ரைச் சுற்­றி­யுள்­ள­வர்­கள் அவ­ரைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஆளா­ளுக்கு அதி­கா­ரம் செய்­வார்­கள். நெறி­க­ளும், கட்­டுப்­பா­டு­க­ளும் பல­வீ­னப்­ப­டும். அர­சரே தீய குணங்­க­ளு­டன் இருந்­தால், ஆடம்­ப­ரப் பிரி­ய­ராக, அதி­கார வெறி கொண்­ட­வ­ராக இருந்­தால் இன்­னும் பெரிய சிக்­கல் ­தான். அவரை எப்­படி யார் கட்­டுப்­ப­டுத்­து­வது, நெறிப்­ப­டுத்­து­வது என்­பது சவா­லாக மாறி­வி­டும். அரசு சீர்­கு­லைந்து, நாடு அந்­நி­ய­ரி­டம் அடி­மைப்­ப­டும். மக்­கள் பெரும் துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­வார்­கள். அத­னால்­தான் சங்க இலக்­கி­யத்­தில் மோசி­கீ­ர­னார் “மன்­னன் உயிர்த்தே மலர்­தலை உல­கம்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பதி­னைந்­தாம் நூற்­றாண்­டில் அச்சு ஊட­க­மும், முத­லீட்­டிய நடை­மு­றை­க­ளும் பெரு­கிய போது குடி­ய­ரசு தத்­து­வம் மீண்­டும் வலு­வ­டை­யத் துவங்­கி­யது. தனி நப­ரி­டம் அதி­கா­ரம் குவி­யக்­கூ­டாது, மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைக் கொண்ட சபை­களே முடி­வு­களை எடுக்க வேண்­டும் என்ற எண்­ணம் வலுப்­பெற்­றது. மன்­னரே இருந்­தா­லும், அவர் அதி­கா­ரங்­கள் அந்த சபை­க­ளுக்கு கட்­டுப்­பட்டு இருக்க வேண்­டும் என்ற எண்­ணம் உரு­வா­னது. அதன் பிறகே மக்­க­ளாட்சி சிந்­த­னை­க­ளும், அவற்றை நடை­மு­றைப்­­படுத்த தேசி­ய­வாத சிந்­த­னை­க­ளும் உரு­வா­யின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நவீன மக்­க­ளாட்­சி­யில் தலை­மைப் பொறுப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நவீன மக்­க­ளாட்சி தனி நப­ரி­டம் அதி­கா­ரம் குவி­வதை முற்­றி­லும் தவிர்க்க விரும்­பி­யது. அது எல்லா மனி­தர்­க­ளும் சம­மா­ன­வர்­கள் என்­றது. “சுதந்­தி­ரம், சமத்­து­வம், சகோ­த­ரத்­து­வம்” என்ற புதிய மானு­ட­வாத முழக்­கம் உரு­வா­னது. ஒவ்­வொரு மனி­த­ரும் பகுத்­த­றி­வு­டன் சிந்­தித்து தேர்­வு­களை மேற்­கொள்­ளும் உரிமை கொண்­ட­வர்­கள் என்று உண­ரப்­பட்­டது. எனவே சமூக ஒழுங்கு என்­பது அனை­வ­ரும் விவா­தித்து, சிந்­தித்து வகுக்­கும் சட்­டங்­க­ளாக இருக்க வேண்­டும், சமூக ஒப்­பந்­த­மாக இருக்க வேண்­டும் என்று கரு­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டி­யெல்­லாம் சிந்­த­னை­கள் உரு­வா­னா­லும், எந்த ஒரு அமைப்­பி­லுமே தலைப் பொறுப்­பில் ஒரு­வர் இருக்க வேண்­டும் என்ற தேவை­யும் தொடர்ந்­தது. என்ன கார­ணம் என்­றால் என்ன செய்­ய­லாம் என்­ப­தற்கு பல்­வேறு விடை­கள் தோன்­றும்­போது, ஒன்­றைத்­தான் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும். அப்­போது அந்த இறுதி முடிவை எடுக்­கும் நிலை­யில் ஒரு­வர் தலை­வ­ராக இருப்­ப­து­தான் வசதி. இது­தான் கூட்­டி­யக்­கத்­தின் இன்­றி­ய­மை­யாமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழங்­கு­டி­யி­னர் பத்து பேர் வேட்­டைக்குப் புறப்­பட்­டால் கிழக்கே போவதா, மேற்கே போவதா என்ற கேள்வி எழும். ஆளா­ளுக்கு ஒரு கார­ணம் கூறி விவா­திக்­க­லாம்; ஆனால் ஒற்றை முடி­வைத்­தான் எடுக்க வேண்­டும். அத­னால்­தான் அந்தக் குழு­வுக்கு தலை­வர் இருக்க வேண்­டும். அந்தத் தலை­வர் எல்லா கருத்­துக்­க­ளை­யும் கேட்­டு­விட்டு இறுதி முடிவு எடுக்க வேண்­டும். இதே சூழ்­நி­லை­தான் பத்­தா­யி­ரம் கோடி வியா­பா­ரம் செய்­யும் கார்ப்­ப­ரேட் கம்­பெ­னிக்­கும். ஒரு தொழிற்­சா­லையை தொடங்­கு­வதா அல்­லது ஒரு தொழிற்­சா­லையை மூடு­வதா என்ற கேள்வி எழும்­போது பல்­வேறு நிர்­வா­கி­கள் பல கருத்­துக்­க­ளைச் சொல்­வார்­கள். சி.இ.ஓ என்ற தலை­மைச் செய­ல­தி­காரி ஒரு­வர் இருந்­தால்­தான் அவர் ஒற்றை முடிவை எடுத்து செயல்­ப­டுத்த முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு பள்­ளிக்­குத் தலைமை ஆசி­ரி­யர் வேண்­டும்; ஒரு நாட­கக் குழு­விற்கு, திரைப்­ப­டத்­திற்கு இயக்­கு­னர் வேண்­டும்; ஒரு விளை­யாட்டு அணிக்கு காப்­டன் வேண்­டும்; ராணு­வத்­திற்­குத் தள­பதி வேண்­டும்; ஒரு குடும்­பத்­திற்­கும் தலை­வனோ, தலை­வியோ வேண்­டும். அதே போல ஒரு நாட்­டினை மக்­கள் பிர­தி­நி­தி­கள் அவை ஆண்­டா­லும், அதி­லும் ஒரு தலைமை அமைச்­சர், பிர­த­மரோ, முதல்­வரோ ஏதோ ஒரு பெய­ரில் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒற்றை முடி­வெ­டுக்க ஒரு­வரே தலை­மைப்­பொ­றுப்­பில் இருக்க வேண்­டும் என்­றா­லும், நவீன சிந்­த­னை­யில் அவர் விதி­மு­றை­க­ளுக்கு முழு­வ­தும் கட்­டுப்­பட்­ட­வர் என்­ப­து­டன். பிற­ரு­டன் அவ­சி­யம் கலந்­தா­லோ­சிக்க வேண்­டி­ய­வர். அவ­ரது அதி­கா­ரங்­கள் பல உப அமைப்­பு­க­ளி­டம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டும். மன்­ன­ராட்­சி­யில் அவர் விரும்­பி­னால் பகி­ரும் அதி­கா­ரம், நவீன அமைப்­பு­க­ளில் சட்ட ரீதி­யா­க­வும், நெறி­மு­றை­கள் படி­யும் கட்­டா­ய­மாக பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறு­வன அள­வில் பகிர்ந்­த­ளிப்­பது மட்­டுமே மக்­க­ளாட்­சியை உறுதி செய்­யாது. அதற்­கும் மேலாம் பொது­மன்ற சிந்­தனை, விவா­தம், பகுத்­த­றிவு என்­பது மிக முக்­கி­ய­மா­னது. அவ்­வா­றான சிந்­த­னை­யில், பகுத்­த­றி­வில், விவா­தங்­க­ளில் உரு­வா­கும் விழு­மி­யங்­களே குடி­ய­ரசை வழி 
­ந­டத்­தும்.இதற்கு மிக­வும் அவ­சி­ய­மா­னது தலை­வர்­க­ளின் சிந்­த­னைப் பகிர்வு. அவர்­கள் எண்­ணங்­க­ளைப் பகிர்­வ­தும், பிறர் எண்­ணங்­க­ளு­டன் பொது­மன்­றத்­தில் உரை­யா­டு­வ­துமே மக்­க­ளாட்­சி­யின் அடி­நா­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நடி­கர் விஜய் ஏன் மன்­ன­ரா­கப் பார்க்­கி­றார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தனது திரைப்­பிம்­பத்தை முத­லீடு செய்து ஆட்­சிக்கு வந்­து­விட்ட ஜோசப் விஜ­யால் அர­சி­யல் தலை­வ­ராக மாற இய­ல­வில்லை. அவ­ரால் பிரச்­சி­னை­க­ளைக் குறித்து சிந்­தித்து, தன் சிந்­த­னை­க­ளைப் பேசி, பகிர்ந்து ஆட்சி செய்ய இய­ல­வில்லை. அத­னால் ஊட­கங்­களை சந்­திப்­ப­தையே தவிர்க்­கி­றார். அவ­ரால் கேள்­வி­களை எதிர்­கொண்டு சிந்­தித்து பதில் சொல்ல இய­லாது. ஏனெ­னில் அந்த அளவு அவர் அர­சி­யல் பிரச்­சி­னை­களை பயின்­ற­தாக, ஆராய்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­களை அவ­ரது தனி ஆலோ­ச­கர்­க­ளாக அல்­லது செய­லர்­க­ளாக நிய­மித்­துக்­கொள்­கி­றார். அவ­ரது வியூக வகுப்­பா­ள­ரா­கச் செயல்­பட்ட ஜான் ஆரோக்­கி­ய­சாமி ஒரு­வர். அவ­ரு­டைய நெருங்­கிய நண்­ப­ரும், ஆந்­திர தொழி­ல­தி­ப­ரு­மான விஷ்ணு ரெட்டி என்­ப­வர் மற்­றொ­ரு­வர். அவ­ரு­டைய திரைப்­ப­டங்­கள் தயா­ரிப்­பில் பங்­கெ­டுத்த ஜெக­தீஷ் பழ­னி­சாமி என்­ப­வர் அவ­ரது தனிச்­செ­ய­லர். இந்த ஒட்­டு­மொத்த குழு­வும் ஒரு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உள்­வட்­ட­மாக,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக்­கால அரண்­மனை அதி­கார மைய­மாக விளங்­கு­கி­றது என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு வெளியே, அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள ஆதவ் அர்­ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்­கோட்­டை­யன், நிர்­மல் குமார் உள்­ளிட்ட சிலர் ஊட­கங்­க­ளி­டம் பேசு­கி­றார்­கள். அர­சின் நிலை­பாட்டை, கட்சி நிலை­பாட்டை தெரி­விக்­கி­றார்­கள். இவர்­கள் அதி­கா­ரத்­தின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வெளி­வட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போல இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது போன்ற உள்­வட்­டம், வெளி­வட்­டம் எல்­லாம் பல்­வேறு ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மும் இருப்­ப­துண்டு. ஏன், அவ­சி­யம் உரு­வா­கியே தீரும் என்­று­கூட சொல்­ல­லாம். அதே போல முத­ல­மைச்­சர்­களோ, பிர­த­மர்­களோ அவர்­க­ளா­கவே எல்லா முடி­வு­க­ளை­யும் எடுக்­கவே முடி­யாது. எடுக்க மாட்­டார்­கள். பல சம­யங்­க­ளில் சந்­தர்ப்ப வச­மாக சிலர் முதல்­வ­ரா­கவோ, பிர­த­ம­ரா­கவோ ஆகி­வி­டு­வார்­கள். அவர்­கள் பெரும்­பா­லும் குறி­யீட்­டுத் தலை­மை­யாக இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ண­மாக பீஹா­ரில் லாலு யாதவ் கைது செய்­யப்­பட்­ட­போது, அவர் மனைவி ராப்ரி தேவி முதல்­வ­ராக்­கப்­பட்­டார். அவர் பிற கட்­சிக்­கா­ரர்­கள் துணை­யு­டன் ஆட்சி செய்து, அடுத்த வந்த தேர்­த­லில் வெற்­றி­யும் பெற்­றார். அது­வரை குடும்­பத் தலை­வி­யாக விளங்­கிய ராப்ரி தேவி அவ­ரா­கவே ஆட்சி நிர்­வா­கத்தை செய்­தி­ருப்­பார் என்­பது சாத்­தி­ய­மல்ல. அவ­ரைச் சுற்­றி­யி­ருந்த அமைச்­சர்­கள், செய­லர்­கள், உத­வி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­று­தான் ஆட்சி செய்­தி­ருப்­பார் என்­பது உறுதி. ஆனால் அவர் விரை­வில் பொறுப்­பேற்­க­வும். முடிவு எடுக்­க­வும் பழ­கிக் கொண்­டார் என்று கூறப்­ப­டு­கி­றது. அவர் மக்­க­ளி­டம், கட்­சிக்­கா­ரர்­க­ளி­டம் எளி­தில் பழ­கக் கூடி­ய­வ­ரா­க­வும் இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜ­யின் பிரச்­சினை என்­ன­வென்­றால் அவ­ரது ஆலோ­சர்­க­ளான ஜான் ஆரோக்­கி­ய­சா­மி­யும், விஷ்ணு ரெட்­டி­யும் அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கே அவ­ரு­டன் வரு­கி­றார்­கள் என்­ப­து­தான். இது தொடர்­பாக எதிர்க்­கட்­சி­கள் ஆளு­ன­ரி­டம் புகார் செய்­துள்­ளன. அதைக் குறித்­தும் விஜய் எந்தக் கருத்­தை­யும் தெரி­விப்­ப­தில்லை. உள­வுத்­துறை அறிக்­கை­கள் கூட விஜய் உள்­வட்ட உறுப்­பி ­னர்­க­ளால் படிக்­கப்­ப­டு­வ­தாக பேச்சு எழுந்­துள்­ளது. இது போல பொது­மன்­றத்­தில் எழும் குற்­றச்­சாட்­டு க­ளுக்கு அப்­பாற்­பட்ட, எந்தக் குர­லா­லும் எட்ட முடி­யாத ஒரு ஆட்­சி­ய­தி­கார பிம்­ப­மா­கவே அவர் இருக்­கி­றார். அது­தான் அவரை மன்­னர்­கால நடை­மு­றைக்­குக் கொண்டு செல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திடீர் போர்ப்­படை போல திரட்­டப்­ப­டும் கட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வர­லாற்­றில் பெரும்­பா­லும் மன்­னர்­க­ளி­டையே நிலை­யான படை­வீ­ரர்­கள் மிக­வும் குறை­வா­கவே இருப்­பார்­கள். போர் என்று வந்­து­விட்­டால் முர­சொ­லித்து படைக்கு ஆட்­களை சேர்ப்­பார்­கள். படை­யில் சேர்­வது ஆபத்து என்­றா­லும், அத­னால் சில ஆதா­யங்­க­ளும், மரி­யா­தை­யும், எதிரி நாட்டை சூறை­யா­டும் வாய்ப்­பும் வீரர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்­ப­தால் குடி­மக்­கள் வந்து சேர்­வார்­கள். இவ்­வாறு திரட்­டப்­ப­டும் படைக்கு பயிற்­சி­ய­ளித்து, அணி­வ­குத்து நடத்த திற­மை­யான தள­ப­தி­கள் தேவை. இல்­லா­விட்­டால் நெல்­லிக்­காய் மூட்டை போல சித­றி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரை­நா­யக பிம்­பத்­தின் மூலம் ஆட்­சிக்கு வந்த பின் விஜய்க்கு கட்­சிக் கட்­டு­மா­னம் அவ­சி­யம் தேவைப்­ப­டு­கி­றது. ஏனெ­னில் கட்­சி­தான் ஆட்­சிக்­கும் மக்­க­ளுக்கு இடையே பால­மாக இருக்­கும். இல்­லா­விட்­டால் அந்த இடை­வெ­ளி­யில் எதிர்­கட்சி புகுந்­து­வி­டும். இன்ஸ்­டா­கி­ராம், வாட்ஸ் அப் மூலம் தேர்­தல் பிர­ச்சா­ரம் செய்­தது போல ஆட்சி செய்­வது கடி­னம். அத­னால்­தான் இப்­போது முழு மூச்­சாக அ.இ.அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க. என பல்­வேறு கட்­சி­களை வளைத்­துப் போட முழு மூச்­சாக இறங்­கி­யுள்­ளது த.வெ.க. அப்­படி செய்­தா­லும் எந்த அளவு ஒரு கட்­சிக் கட்­ட­மைப்பை உரு­வாக்க முடி­யும் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏனெ­னில் அ.இ.அ.தி.மு.க-வே திரை­பிம்ப தலை­மை­யில் இயங்­கி­ய­து­தான். அதன் கட்­சிக் கட்­ட­மைப்பே வலு­வா­னது என்று சொல்ல முடி­யாது. அத­னால்­தான் தொடர்ந்து அந்த கட்­சி­யில் உரு­வான ஆற்­றல் மிக்க தலை­வர்­கள் தி.மு.க-வில் இணைந்து விடு­வார்­கள். அ.இ.அ.தி.மு.க திரவ வடி­வில் இயங்­குமே தவிர, திட வடி­வில் இயங்க முடி­யாது. ஆனால் காற்று போல அரு­வ­மாக இருக்­கும் த.வெ.க-விற்கு திரவ வடி­வ­மா­வது இப்­போது தேவை என்­ப­தால்­தான் அ.இ.அ.தி.மு.க-வை கைப்­பற்ற தொடர்ந்து முயற்­சிக்­கி­றது. இது­வும் தமிழ்­நாடு இது­வரை காணாத மன்­ன­ராட்­சித் தரு­ணம் என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக அமை­வ­து­தான் விஜ­யின் கரூர் விஜ­யம். அவ­ரது பொறுப்­பற்ற திட்­ட­மி­டல், கூட்­டக்­காட்சி அர­சி­யல், கட்சி அணி­யி­ன­ரின் அனு­ப­வ­மின்மை, திற­மை­யின்மை, அவ­ரது ரசி­கர்­க­ளின் வெறித்­த­ன­மான பிம்ப வழி­பாடு ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்ட நெரி­சல் மர­ணங்­க­ளின் களங்­கத்தை இப்­போது எப்­ப­டி­யா­வது நேர் செய்­து­விட வேண்­டும் என நினைக்­கி­றார், இது­வரை விஜய் அந்த துயர நிகழ்­விற்­கான தன்­னு­டைய பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு வருத்­தம் தெரி­விக்­க­வே­யில்லை என்­பது முக்­கி­ய­மா­னது. அவர் மீது பிறர் பழி போடு­கி­றார்­கள் என்­றார்: இப்­போது ஆதவ் அர்­ஜுனா அபத்­த­மாக காவல்­துறை மீது பழி­போ­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அது போதா­தென்று அந்த நெரி­ச­லில் உயி­ரி­ழந்த நாற்­பத்­தோரு பேரின் குடும்­பத்­தில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கு அரசு வேலை வழங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார் விஜய். எந்த அளவு மன்­ன­ராட்சி மனோ­பா­வத்­தில் இருக்­கி­றார் என்­ப­தற்கு இதுவே சிறந்த உதா­ர­ணம். அவர் கட்சி நிகழ்ச்­சி­யில் ஏற்­பட்ட விபத்­திற்கு எதற்கு தமிழ்­நாட்டு அரசு இழப்­பீடு தர­வேண்­டும் என்­பது முக்­கி­ய­மான கேள்வி. அவரே சொந்­தப் பணத்­தி­லி­ருந்து ஆளுக்கு ஒரு கோடி கொடுக்­க­லாம்; கட்சி நிதி­யி­ லி­ருந்து கொடுக்­க­லாம். அரசு இழப்­பீடு தர வேண்­டும், வேலை வாய்ப்பு தர வேண்­டும் என்ற எண்­ணம் வன்­மை­யான கண்­ட­னத்­திற்கு உரி­யது. தன்னை மன்­ன­ராககரு­திக்­கொள்­ப­வ­ரால்­தான்இப்­படி 
சிந்­திக்க முடி­யும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>