<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,962,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 07 2026 03:53:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07072026-VLR-06" position.sequence="06" ex-ref="07072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கேந்­தி­ரிய வித்­யா­லயா பள்­ளி­களில் தமிழ் புறக்­க­ணிப்­புக்­குக் கண்­ட­னம்! மதம் மாறிய பிற்­ப­டுத்­தப்­பட்ட முஸ்­லிம்­க­ளின் இட ஒதுக்­கீட்டு உரி­மை­யைப் பாது­காக்க வேண்­டும்!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">NCERT பாடத்­திட்­டத்­தில் மதச்­சார்­பின்மை நீக்­கப்­பட்டு, மத­வா­தக் கருத்­து­கள் புகுத்­தப்­ப­டு­வ­தற்­குக் கண்­ட­னம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சேலத்­தில் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி தலை­மை­யில் நடை­பெற்ற – திரா­வி­டர் கழ­கப் பொதுக்­கு­ழு­வில் தீர்­மா­னங்கள்! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Viduthalaither_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal2_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">சேலம், ஜூலை 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">மதம் மாறிய பிற்­ப­டுத்­தப்­பட்ட முஸ்­லிம்­க­ளின் இட­ஒ­துக்­கீட்டு உரி­மை­யைப் பாது­காக்க வலி­யு­றுத்­தி­யும்,  கேந்­தி­ரிய வித்­யா­ல­யங்­க­ளில் தமிழ் புறக்­க­ணிப்­புக்­கும், என்­சி­இ­ஆர்டி   பாடத்­திட்­டத்­தில் மதச்­சார்­பின்மை நீக்­கப்­பட்டு, மத­வா­தக் கருத்­து­கள் புகுத்­தப்­ப­டு­வ­தற்­கும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­தும், ஜாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­பைக் குறை­யின்றி முழுமை யாகச் செயல்­ப­டுத்­தக் கோரி­யும், நெய்­வே­லி­யில் தனி­யார் மயத்­தைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­டு­வது உள்­பட 19 தீர்­மா­னங்­கள் திரா­வி­டர் கழ­கப் பொதுக்­கு­ழு­வில் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">4.7.2026 அன்று  சேலம் – 
கே.எம்.பி. திரு­மண மண்­ட­பத்­தில் திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கி.வீர­மணி அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்ற திரா­வி­டர் கழ­கப் பொதுக்­கு­ழு­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் 
வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இடை­வி­டாத பிரச்­சா­ரம், போராட்­டக் களம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">காணும் தோழர்­க­ளுக்­குப் பாராட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இயக்­கம் என்­பது இயங்­கிக் கொண்டே இருப்­பது என்ற தமி­ழர் தலை­வர் ஆசி­ரி­யர் அவர்­க­ளின் மொழிக்­கேற்ப, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல் முடிந்த பிற­கான இரண்டு மாத காலங்­க­ளுக்­குள் இடை­வி­டாத பிரச்­சா­ரம், போராட்­டம் என தொடர்ந்து இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் கழ­கத் தோழர்­க­ளின் உழைப்­புக்­கும், ஊக்­கத்­துக்­கும் இப் பொதுக் குழு தனது பாராட்­டைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒகே­னக்­கல், கல்­லக்­கு­றிச்சி, திரு­வா­ரூர், லால்­கு­டி–­கீ­ழ­வா­ளாடி, குற்­றா­லம் பயிற்­சிப்­பட்­ட­றை­கள், ஜூன் 3 முத்­த­மி­ழ­றி ­ஞர் கலை­ஞர் பிறந்­த­நா­ளை­ யொட்டி நான்கு மாநி­லங்­களில் 103  திரா­வி­டர் எழுச்சி நாள் கூட்­டங்­கள், மேக­தாது அணைத் திட்­டத்­தைக் கண்­டித்­துத் திரு­வா­ரூ­ரில் ஆர்ப்­பாட்­டம், நீட் தேர்வு முறை­கே­டு­க­ளைக் கண்­டித்­துத் தமிழ்­நாட்­டின் அனைத்து நக­ரங்­க­ளி­லும் கண்­டன ஆர்ப்­பாட்­டம், நீட் மறு­தேர்வு நடத்தி மாண­வர் தற்­கொ­லை­க­ளைத் தூண்­டு­வ­தைக் கண்­டித்து சென்­னை­யி­லும், திரு­வா­ரூ­ரி­லும் மாண­வர் கழக ஆர்ப்­பாட்­டங்­கள், எதிர்­நீச்­ச­லில் வென்ற பெரி­யார் கூட்­டங்­கள், 1000 அறப் போராட்­டக் கள வீரர்­க­ளின் பட்­டி­யல் திரட்­டும் பணி­கள் என இடை­வி­டாது இயங்­கும் தோழர்­க­ளின் உழைப்­புக்­கும், இவற்றை மிஞ்­சும் வகை­யில் செயல்­வே­கம் கொண்டு, தந்தை பெரி­யார் விட்­டுச் சென்ற பணி­களை, அவர் போட்­டுத் தந்த பாதை­யில் எவ்­வித சப­லங்­க­ளுக்­கும் ஆட்­ப­டா­மல் செய்­து­மு­டிக்­கும் பணி­யில் இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் தமி­ழர் தலை­வர் ஆசி­ரி­யர் அவர்­க­ளின் உழைப்­புக்­கும் இப் பொதுக் குழு வாழ்த்­து­க­ளை­யும், நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஹிந்­துப் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கங்­க­ளைச் சேர்ந்த வர்­கள் இஸ்­லாம் மதத்­திற்கு மாறிய பின்­னர், அவர்­கள் முன்பு அனு­ப­வித்து வந்த பிற்­ப­டுத்­தப்­ பட்­டோர் இட ஒதுக்­கீட்டு உரி­மையை மறுக்­கும் வகை­யில், சென்னை உயர்­நீ­தி­மன்­றம் வழங்­கி­யுள்ள அண்­மைய தீர்ப்பு – சமூக நீதி­யின் அடிப்­ப­டைக் கொள்­கை­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தா­கும். சமூக மற்­றும் கல்வி ரீதி­யான பிற்­ப­டுத்­தப்­பட்ட நிலை மத மாற்­றத்­தால் மறைந்து விடாது என்­ப­தால், பாதிக்­கப்­ப­டும் மக்­க­ளின் இட­ஒ­துக்­கீட்டு உரி­மை­யைப் பாது­காக்க தமிழ்­நாடு அரசு உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என இப்­பொ­துக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேந்­தி­ரிய வித்­யா­லயா பள்­ளி­க­ளில் சமஸ்­கி­ருத ஆசி­ரி­யர் பணி­யி­டங்­க­ளைக் கட்­டா­ய­மாக நிரப்­பும் நிலை­யில், தமிழ் ஆசி­ரி­யர் பணி­யி­டங்­கள் போதுமான அள­வில் ஏற்­ப­டுத்­தப்­ப­டா­தது மொழிச் சமத்து வத்­திற்­கும் கூட்­டாட்சி தத்­து­வத்­திற்­கும் எதி­ரா­ன­தா­கும். தமிழ்­நாட்­டில் செயல்­ப­டும் அனைத்து கேந்­தி­ரிய வித்­யா­லயா பள்­ளி­க­ளி­லும் தமிழ் மொழிக் கல்­விக்கு உரிய முக்­கி­யத்­து­வம் வழங்கி, தமிழ் ஆசி­ரி­யர் பணி­யி­டங்­களை உட­ன­டி­யாக உரு­வாக்கி நிரப்ப வேண்­டும் என்று ஒன்­றிய அர­சை­யும், கேந்­தி­ரிய வித்­யா­லயா  நிர்­வா­கத்­தை­யும் இப்­பொ­துக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது. மேலும்,ஒரே மொழியை முன்­னி­றுத்­தும்எந்த நட­வ­டிக்­கை­யை­யும்இப்­பொ­துக்­குழு கண்­டிக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­திய அர­ச­மைப்­பின் அடிப்­ப­டைக் கோட்­பாடு களில் ஒன்­றான மதச்­சார்­பின்மை (Secularism) குறித்த கருத்­துக்­களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்­றும் பயிற்­சிக் கவுன்­சில் (NCERT) பாடப்­புத்­த­கங்­க­ளில் இருந்து குறைத்து அல்­லது நீக்­கும் முயற்­சி­க­ளும், அதற்கு மாற்­றாக இந்து மத உணர்­வு­கள், புரா­ணக் கதை­கள் மற்­றும் அறி­வி­யல் அடிப்­ப­டை­யற்ற மூட­நம்­பிக்­கைக் கருத்­து­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் போக்­கும் நாட்­டின் கல்வி மற்­றும் சமூக முன்­னேற்­றத்­திற்கு ஆபத்­தா­ன­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எனவே, கல்­வித்­து­றை­யில் காவி­ம­ய­மாக்­கல் மற்­றும் மத­வா­தத் திணிப்­பைக் கைவிட்டு, இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் மதச்­சார்­பின்மை, அறி­வி­யல் மனப்­பான்மை மற்­றும் சமூக நீதிக் கொள்­கை­க­ளுக்கு ஏற்ப பாடத்­திட்­டங்­களை வடி­வ­மைக்க வேண்­டும் என்று ஒன்­றிய அர­சை­யும் NCERT அமைப்­பை­யும் இப்­பொ­துக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது. மேலும், கல்­வியை மத­வாத மற்­றும் மூட­நம்­பிக்­கைக் கரு­வி­யாக மாற்­றும் அனைத்து முயற்­சி­க­ளை­ யும் இப்­பொ­துக்­குழு வன்மை யாகக் கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வெளி­நாட்டு நிதிப் பங்­க­ளிப்பு 
ஒழுங்குமுறைத் திருத்­தத் சட்­டத்­தைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">(Foreign Contribution Regulation Act) திரும்­பப் பெற­வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசி­யம், ஒரே கலாச்­சா­ரம், ஒரே தேர்­தல் என்ற நோக்­கில் ஹிந்து ராஜ்­ஜி­யம் அமைப்பு என்­ப­து­தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் இலக்­கா­கும். இந்­தக் கொள்­கை­யைக் கொண்ட ஒன்­றிய அரசு, சிறு­பான்மை மக்­க­ளைக் குறி வைத்­துத் தாக்­கு­தல் நடத்­து­வது, அவர்­கள் கூறும் ‘‘தேசி­யத்­திற்கே’’ ஊறு­வி­ளை­விக்­கக் கூடி­யது என்று இப்­பொ­துக் குழு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வெளி­நா­டு­க­ளில் இருந்து நிதி உதவி நன்­கொடை பெறு­தல் போன்­ற­வற்­றிற்­குச்  சட்ட ரீதி­யான விதி­முறை கள் ஏற்­கெ­னவே இருக்­கத்­தான் செய்­கின்­றன. தவறுகளைக் களை­தல் என்ற சாக்­கில் உரி­மைப் பறிப்பு – கடும் தண்­ட­னை­க­ளும், 
அச்­சு­றுத்­த­லும் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘பி.எம்.கேர் ஃபண்ட்’ என்ற ஒன்றை, ஒன்­றிய பி.ஜே.பி. அரசு உரு­வாக்கி வைத்­துள்­ளது. இதற்கு வந்து குவி­யும் நிதி­க­ளுக்­குக் கணக்கு வழக்­குக் கிடை­யாது. வெளிப்­ப­டைத்­தன்மை என்­பது இல்லை. சி.ஏ.ஜி. என்ற இந்­தி­யத் தலை­மைக் கணக்­குக்கு உட்­பட்­ட­தும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­திற்­கும் (RTI) உட்­பட்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த இலட்­ச­ணத்­தில், இந்­திய ஒன்­றிய அரசு சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு வெளி­நா­டு­க­ளில் இருந்து கிடைக்­கும் நன்­கொடை­க­ளால்நடத்­தப்­ப­டும் கல்வி, மருத்­து­வம் உள்­ளிட்ட அறப்­ப­ணி­களை மறைமுக­மாக முடக்­கு­வதுகண்­டிக்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கட்­சிக்கு அப்­பாற்­பட்ட முறை­யில் ஒன்று திரண்டு ஒன்­றிய பி.ஜே.பி. அர­சின் மத­வா­தக் கண்­ணோட்­டத்­தோடு கொண்டு வரப்­பட்­டுள்ள FCRA சட்­டத்தை எதிர்த்து முறி­ ய­டிக்­க­ வேண்­டு­மாய் இப்­பொ­துக்­குழு கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">33 விழுக்­காடு மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உட­ன­டி­யா­கச் செயல்­ப­டுத்­துக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நாடா­ளு­மன்­றத்­தி­லும், சட்­ட­மன்­றங்­க­ளி­லும் பெண்­களுக்கு 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு வழங்­கும் பிரச்­சினை 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீடித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இதற்­கான சட்­டத்தை கடந்த 2023 செப்­டம்­பர் 28–ஆம் தேதியே அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 106–ஆம் திருத்­த­மா­கக் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­த­லைப் பெற்று நிறை­வே­றி­ 
விட்­டது. ஆனால், அதை உட­ன­டி­யாக நடைமுறைப்  
ப­டுத்­தா­மல், மூன்று ஆண்­டு­க­ளா­கத் தள்­ளிப் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. அதற்­குப் பதி­லாக, அச் சட்­டத்தை, மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்ற இடங்­களை அதி­கப்­ப­டுத்­தும் சட்­டத்­து­ட­னும், தொகுதி மறு சீர­மைப்­பு­ட­ னும் முடிச்­சுப் போட்டு, தென்­னிந்­திய மாநி­லங்­க­ளின் உரி­மை­யைப் பறிக்­க­வும், எதிர்க்­கட்சி களின் வலி­மை­யைக் குறைத்து சர்­வா­தி­ கார நாடாக இந்­தி­யாவை மாற்­ற­வும்  ஒன்­றிய பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்­தது. இதனை எதிர்க்­கட்­சி­கள் இணைந்து முறி­ய­டித்­தன. இத­னைச் சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த பா.ஜ.க. மேற்­கொண்ட முயற்­சி­யும் தோற்­றுப் போனது. ஏற்­கெ­னவே 454 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வு­டன் பெரும்­பான்­மை­யாக நிறை­வே­றிய சட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தா­மல்,   வேறு சாக்கு போக்­கு­கள் சொல்­லா­மல், வேறு எத­னு­ட­னும் முடிச்­சு­க­ளைப் போடா­மல், சமூ­க­நீ­தி­யு­டன் கூடிய பாலின நீதி­யாக, முதல்­கட்­ட­ மாக மக­ளி­ருக்­கான 33% இட­ஒ­துக்­கீட்டை வர­வி­ருக்­கும் மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும், 2029 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் நடை­மு­றைப் படுத்த வேண்­டும் என்­றும், அடுத்து, இது 50% ஆக உயர்த்­தப்­பட வேண்­டும் என்­றும் இப் பொதுக் குழு வலி­யு­றுத்­து­கி­றது. இதனை வலி­யு­றுத்தி, நாடெங்­கும் மக­ளி­ரணி, திரா­விட மக­ளிர் பாசறை சார்­பில் பிரச்­சா­ரங்­க­ளும், போராட்­டங்­க­ளும் நடத்­து­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­ப­டு ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தொகுதி மறு­வ­ரை­யறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">என்ற  சூழ்ச்­சிப் பொறி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மக்­கள் தொகைக்­கேற்ப நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களை அதி­கப்­ப­டுத்­து­வது என்ற பா.ஜ.க.வின் திட்­ட­மும், சட்ட மாக்­கும் முயற்­சி­கள், சூழ்ச்­சி ­யும், ஆபத்­தும் நிறைந்த ஓர் ஏமாற்று வித்­தை­யா­கும். தற்­போது இருக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்க உரிய நேரம் ஒதுக்க இய­ல­வில்லை; கூடு தலாக 300 பேருக்கு எப்­படி நேரம் ஒதுக்க முடி­யும்? தற்­போ­தி­ருக்­கும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யில், கூடு­தல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான தொகுதி மேம்­பாட்டு நிதி­களை எப்­படி வழங்க முடி­யும்? மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த ஒன்­றிய அரசு மேற்­கொண்ட முடி­வைச் சரி­யா­கச் செயல்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளுக்­குத் தண்­டனை வழங்­கு­வது போல, அவர்­க­ளுக்­குக் குறைந்த தொகு­தி­க­ளை­யும், ஒன்­றிய அர­சின் திட்­ட­மான குடும்­பக் கட்­டுப்­பாட்டைசெயல்­ப­டுத்­தாத கார­ணத்­தால், மக்­கள் தொகை நிறைந்த மாநி­லங்­க­ளுக்கு அதிக தொகு­தி­க­ளை­யும் ஒதுக்­கு­வது நியா­யமா? தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­பதை, எண்­ணிக்­கையை மாற்­றா­மல், மாநி­லங்­க­ளுக்­குள்­ளேயே செய்ய முடி­யும் என்ற 2001 ஆம் ஆண்டு மாதி­ரி­யைச் செயல்­ப­டுத்­தா­மல் தென்­மா­நி­லங்­க­ளின் உரி­மை­யைப் பறிப்­பதா? என்­பன போன்ற எந்­தக் கேள்­விக்­கும் பதி­ல­ளிக்­கா­மல், இந்­தி­யாவைஒற்­றை­யாட்­சி­யின் கீழ், ஆர்.எஸ்.எஸ். அதி­கா­ரத்­தின் கீழ் கொண்­டு­வ­ரச் செய்­யப்­ப­டும் இத்திட்­டங்­ ­களுக்கு திரா­வி­டர் கழ­கப் பொதுக் குழு கடும் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கட்­சி­மா­றி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சட்­டத் திருத்­தம் தேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அர­சி­யல் கட்­சி­க­ளில்இணைந்து, சட்­ட­மன்­றத்­திற்­கும், நாடா­ளு­மன்­றத்­திற்­கும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் பிர­தி­நி­தி­கள், நினைத்த மாத்­தி­ரத்­தில் கட்சி மாறிச் செல்­வ­தும், அதற்கு ஈடான பத­வி­கள் உள்­ளிட்ட பலன்­க­ளைப் பெறு­வ­தும் ஜன­நா­ய­கத்­தைக் கேலிக் கூத்­தாக்­கும் அவ­லங்­க­ளா­கும். கட்­சித் தாவல் தடைச் சட்­டம், 1985 ஆம் ஆண்டே கொண்டு வரப்­பட்­டி­ருந்­தா­லும், புதுப் புது வழி­க­ளில் இத்­த­கைய தாவல்­கள் நடந்­து­கொண்டே இருக்­கின்­றன. ஒன்­றிய பா.ஜ.க. அரசு அமைந்­த­தி­லி­ருந்து, இந்­தியா முழு­வ­தும் பல்­வேறு மாநி­லங்­க­ளில் இந்த வகை­யில் தான் பா.ஜ.க. ஆட்­சி­ய­மைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­த­லில் தாங்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட கட்­சியை விட்­டு­விட்டு, வேறு ஒரு கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்து ஆட்­சி­ய­மைக்க வழி­கோ­லு­வ­தும், கொள்­கை­கள், பிரச்­சி­னை­ க­ளின் அடிப்­ப­டை­யில் அல்­லா­மல் பத விக்­கா­க­வும், பணத்­துக்­கா­க­வும், வேறு பல சுய­நல கார­ணங்­க­ளுக்­கா­க­வும் மொத்­த­ மாக ஒரு கட்­சியை விட்­டு­ விட்டு ஓடு­வ­தும், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஒரு சில நாட்­க­ளி­லேயோ, மாதங்­க­ளி­லேயோ பத­வியை விட்டு விலகி, வேறு ஒரு கட்­சி­யில் இணைந்து மீண்­டும் தேர்­த­லில் போட்­டி­யிட்டு பத­வி­யைப் பிடிப்­ப­து­மா­கச் சட்­டத்தை வளைத்து, நெளித்து ஜன­நா­ய­கத்­தின் குரல்­வ­ளையை நெறிக்­கும் செயல்­கள் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டும். ஒரு கட்­சிக்கோ, ஓர் ஆட்சி அமை­வ­தற்கோ ஆத­ர­வ­ளித்­துத் தேர்ந்­தெ­டுத்த மக்­களை ஏமாற்­றும் அவ­ம­திக்­கும் செயல் இது! இவர்­கள் பதவி வில­கு­வ­தால், இன்­னோர் இடைத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்டு, மக்­கள் வரிப்­ப­ணம் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதற்­குத் தண்­ட­னை­யாக, அடுத்த 5 ஆண்­டு­கள் உள்­ளாட்சி நிர்­வா­கங்­கள் உள்­ளிட்ட எந்­தத் தேர்­த­லி­லும் அவர்­கள் நிற்க முடி­யாத வகை­யி­லும், தேவை­யின்றி இடைத்­தேர்­த­லைத் திணித்­த­தற்­காக, அச் செல­வு­களை ஈடு­கட்­டத் தண்­டம் கட்­டும் வகை­யி­லும் சட்­டத் திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும். மேலும், முக்­கிய தேர்­தல் சீர்­தி­ருத்­தங்­கள் அவ­சி­யம் என்­றும் இப் பொதுக் குழு வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அயோத்தி ராமன் கோயில் நன்­கொடை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முறை கேட்டு வழக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சி.பி.அய் விசா­ரிக்க வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. வின் அர­சி­யல் முத­லீ­டாக, பாபர் மசூ­தியை இடித்து, அயோத்­தி­யில் அதே இடத்­தில் கட்­டப்­பட்ட ராமன் கோயில் உண்­டி­யல் வசூ­லில் ஏரா­ள­மான முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முத­லில் இது குறித்­துப் பேச மறுத்­த­வர்­கள், பின்­னர் உ.பி. அர­சின் மூலமே ஒரு விசா­ர­ணைக் குழுவை அமைத்­துள்­ள­னர். இது போதாது. நடந்­தி­ருக்­கும் முறை­கேட்­டில் உள்ள பெரும் தொடர்­பு­களை மூடி மறைக்­கும் ஆபத்து இருப்­ப­தாக எழும் சந்­தே­கத்­தைப் போக்­கும்­வ­கை­யில், இவ்­வ­ழக்கு சி.பி.அய்வசம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்­டும். எந்த நிர்­பந்­தங்­க­ளுக்­கும் ஆட்­ப­டா­மல் வழக்கு விசா­ரிக்­கப்­பட வேண்­டும் என்று இப் பொதுக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பொரு­ளா­தார ரீதி­யி­லான (EWS)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இட­ஒ­துக்­கீட்டு மோசடி முற்­றாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ரத்து செய்­யப்­பட வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் அடிக்­கட்­டு­மா­னங்­க­ளுக்கு மாறாக, இட­ஒ­துக்­கீட்­டுக்­குப் பொரு­ளா­தார அள­வு­கோ­லைத் திணித்து, அதி­லும் உயர்­ஜா­தி­யி­ன­ருக்கு மட்­டும் பயன்­பெற வழி­வ­குத்துஉரு­வாக்­கப் ­பட்­டதே, 10% பொரு­ளா­தா­ரத்­தில் நலிந்த அரியவகை ஏழை­க­ளுக்­கான இட­பிள்­யூ­எஸ். (EWS) என்­ப­தா­கும். 50%க்கு மேல் இட­ஒ­துக்­கீடு போகக் கூடாது என்ற தங்­கள் தீர்ப்­பையே தளர்த்­திக் கொண்டு இதற்கு மட்­டும் விதி­வி­லக்கு கொடுத்­தது நீதி­ மன்­றம். உயர்­ஜா­தி­யி­ன­ரின் வழக்­க­மான தகுதி – திறமை என்ற கூப்­பா­டு­களை விடுத்து, தங்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்­டில் மட்­டும் மிகக் குறைந்த மதிப்­பெண்­களே போதும் என்­பதை ஏற்­றுக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதன் அடுத்த கட்­ட­மாக, தங்­க­ளின் பொரு­ளா­தார நிலை­யை­யும், வரு­மா­னத்­தை­யும் குறைத்­தும், மறைத்­தும் பல உயர்­ஜா­தி­யி­னர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்­வு­க­ளில் போட்­டி­யிட்­டுத் தேர்ச்சி பெற்­றி­ருப்­பது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. அத் தேர்வு முடி­வு­கள் ரத்து செய்­யப்­பட்டு, உரிய விசா­ரணை நடை­பெற வேண்­டும் என்­ப­து­டன், இத்­த­கைய மோச­டி­க­ளுக்­குச் சந்­தே­க­மில்­லா­மல் வழி­வ­குக்­கும் பொரு­ளா­தார ரீதியிலான இட­ஒ­துக்­கீடு 
என்­பதே ரத்து செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பொரு­ளா­தார அள­வு­கோல் என்­பது இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்­கும் எதி­ரா­னது என்­ப­தை­யும் இப்­பொ­துக்­குழு சுட்­டிக்­காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">ஜாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­பைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">குறை­யின்றி முழு­மை­யா­கச் செய்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்பை ஜாதி வாரிக் கணக்­கெ­டுப்­பாக அமைக்க வேண்­டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை வேறு வழி­யின்றி ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் ஏற்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­கா­கப் பீகார் தேர்­த­லுக்கு முன்பு பா.ஜ.க. இதை ஒப்­புக் கொண்­டா­லும், அதை முழு­மை­யா­ன­தாக நடத்­தா­மல் 
குள­று­படி செய்­வ­தற்கு முயல்­கி­றதோ என்ற சந்­தே­கம் எல்லா மட்­டத்­தி­லும் எழு­கி­றது. ஒடுக்­கப்­பட்­டோ­ரான பட்­டி­யல் ஜாதி­யி­னர் (SC), பட்­டி­யல் பழங்­கு­டி­யி­னர் (ST) குறித்த விவ­ரங்­கள் முழு­மை­யாக எடுக்­கப்­ப­டு­தல் போலவே, பிற்­ப­டுத் ­தப்­பட்­டோர் குறித்த முழு­மை­யான விவ­ரங்­க­ளும் எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கீழடி அக­ழாய்வு அறிக்­கை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தேவை­யற்ற திருத்­தம் செய்­யக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­விட நாக­ரி­கத்­தின் காலத்­தைக் குறைத்­துக் காட்­டு­வ­தும், அத­னு­டன் கற்­ப­னைக் கதை களைக் கலந்து சிந்து சரஸ்­வதி நாக­ரி­கம் என்று திரிப்­ப­தும், கீழடி நாக­ரி­கத்­தின் தொன்­மைச் சிறப்பை மறைக்க முயல்­வ­தும் திரா­வி­டர் வர­லாற்­றின் மீதான ஆரி­யத்­தின் பண்­பாட்­டுப் படை­யெ­டுப்­பு­களே! இவற்றை ஒரு­போ­தும் மான­முள்ள தமி­ழர்­க­ளால், திரா விடர்­க­ளால் ஏற்க முடி­யாது. உரிய அறி­வி­யல் சான்­று­க­ளோடு அமைந்­துள்ள கீழடி அக ழாய்வு அறிக்­கை­யைத் திருத்­தங்­க­ளின்றி உட­ன­டி­யாக வெளி­யிட வேண்­டும். வர லாற்­றைத் திரிக்க முயன்­றால், தமிழ்­நாடு போராட்­டக் களம் காண வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் இப் பொதுக் குழு எச்­ச­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நெய்­வே­லி­யில் தனி­யார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மயத்­தைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நெய்­வேலி நிலக்­கரி நிறு­வ­னத்­தைப் படிப்­ப­டி­யா­கத் தனி­யார் மய­மாக்­கும் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும், ஒன்­றிய அரசு விற்க முடிவுசெய்­துள்ள 3% பங்­கு­க­ளைத் தமிழ்­நாடு அரசே முழு­மை­யாக வாங்­கிட வலி­யு­றுத்­தி­யும்நெய்­வே­லி­யில், வரும் ஜூலை 7 செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று காலை­யில், தமி­ழர் தலை­வர் தலை­மை­யில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டத்தை நடத்­து­வது என்று தீர்­மா­னிக் 
­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">(அ) இந்­தி­யா­வில் 19 ஆம் நூற்­றாண்­டில் தோன்­றிய சமூ­க­ நீ­திப் போராளி ஜோதி­பா­பூலே அவர்­க­ளின் 200ஆம்ஆண்டு விழா­வை­யும், சாவித்­தி­ரி­பாய் பூலே அவர்­க­ளின் 195 ஆம் ஆண்டு பிறந்த நாளை­யும் திரா­வி­டர் கழ கத்­தின் சார்­பில் “சமூ­க­நீதி மாநாடு” ஆக நடத்தி, அனைத்து இந்­திய அள­வில் சமூக நீதித் தலை­வர்­களை ஒருங்­கி­ணைக்­கும் மாபெ­ரும் விழா­வா­கத் தஞ்­சை­யில் இவ்­வாண்டு நவம்­ப­ரில் நடத்­து­வது என்று முடிவு செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">(ஆ) வைக்­கம் தெருக்­க­ளில் ஒடுக்­கப் பட்­டோரை அனு­ம­திக்க மறுத்த ஸநாத னத்தை எதிர்த்­துப் பெரி­யார் நடத்­திய போராட்­டத்­தின் வெற்­றி­யைத் தொடர்ந்து, சுய­ம­ரி­யாதை இயக்­கம் நடத்­திய கோயில் நுழை­வுப் போராட்­டங்­க­ளின் தொடக்­கம் திரு­வண்­ணா 
­ம­லை­யில் நடந்­த­தா­கும். 1927–ஆம் ஆண்டு நடை­பெற்ற இக் கோயில் நுழை­வுப் போராட்­டத்­தின் நூற்­றாண்டு விழா இவ்­வாண்டு தொடங்­கு­கி­றது. அத­னை­யொட்டி, அனைத்து ஜாதி­யி­னர் அர்ச்­ச­கர் என்ற நிலையை எல்லா கோயில்க ளுக்­கும் விரி­வு­ப­டுத்­த­வும், கோயில்­க­ளில் இருந்த தீண்­டாமை நீக்­கப்­பட்­டதை எடுத்து விளக்­க­வும் பிரச்­சா­ரங்­­ களைப் பல வகை­யில் திட்­ட­மிட்டு நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">(இ) சிந்­து­வெளி நாக­ரி­கத்­தைக் கண்டு உல­குக்­குச் சொன்­ன­தன் மூலம், திரா­விட நாக­ரி­கத்­தின் பரப்­பும், வர­லா­றும் எத்­த­கை­யது என்­பதை வர­லாற்­றுச் சான்­று­க­ளு­டன் விளக்­கக் கார­ண­மான சர்.ஜான் மார்­ஷ­லின் 150–ஆம் ஆண்­டை­யொட்டி, சிந்­து­வெளி நாக­ரி­கம் அறி­விக்­கப்­பட்ட செப்­டம் ­பர் 20 அன்று தமிழ்­நாடு முழு­வ­தும் “திரா­வி­டப் பண்­பாட்­டுப் பாது­காப்பு நாளாக” நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­ப­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இரு சக்­கர வாக­னப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பரப்­புரை பய­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘நீட்’ திணிப்­பை­யும், சமூ­க­நீ­தியை ஒழிக்­கும் பொரு­ளா­தார இட­ஒ­துக்­கீட்­டை­யும் (EWS) ரத்து செய்ய வலி­யு­றுத்தி திரா­விட மாண­வர் கழ­கம், திரா­விட மக­ளிர் பாசறை,  திரா­வி­டர் கழக இளை­ஞ­ர­ணி­யின் சார்­பில் இரு சக்­கர வாக­னப் பரப்­பு­ரை­களை ஜூலை இறுதி வாரத்­தில், ஏழு வெவ்­வேறு மய்­யங்­க­ளில் இருந்து தொடங்கி நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சமூக ஊட­கப் பயிற்­சிப் பட்­டறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சமூக ஊட­கங்­களே இன்­றைய கருத்து ருவாக்­கக் களங்­க­ளாக இருப்­ப­து­டன், இளை­ஞர்­க­ளின் நேரத்­தைப் பெரி­தும் கொலை செய்­யும் ஊட­க­மாக இருக்­கும் சூழ­லில், உண்­மைச் செய்­தி­க­ளைப் புரிந்­து­கொள்­ள­ வும், சமூக ஊட­கங்­க­ளைப் பய­னுள்ள வகை­யில் பயன்­ப­டுத்­த­வும், உரிய எச்­ச­ரிக்­கை­க­ளு­டன் அவற்றை அணு­க­வும் இளை­ஞர்­க­ளைப் பயிற்­று­விக்­கும் வகை­யில் நாடெங்­கும் 100 பயிற்­சிப் பட்­ட­றை­களை இன்­றைய 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளை­ஞர்­கள் (பாலின பேத­மற்று) அனை­வ­ருக்­கும் உட­ன­டி­யா­கத் தொடங்கிநடத்­து­வது என்­றும் தீர்­மா­னிக் ­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆண­வப் படு­கொ­லை­க­ளைத் தடுக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சட்­டத்தை விரை­வா­கக் கொண்­டு­வ­ருக!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் ஜாதி மறுப்­புக் காதல் திரு­ம­ணம் செய்­வோர் ஆண­வப் படு கொலை­க­ளுக்கு உள்­ளா­கும் கொடுமை கவ­லை­ய­ளிக்­கும் வகை­யில் அண்­மைக் காலத்­தில் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. கடந்த மூன்று மாதங்­க­ளில் மட்­டும் 8 ஆண­வப் படு­கொ­லை­கள் நடை­பெற்­றுள்­ளன என்று செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அண்­மை­யில் கூட மயி­லா­டு­து­றை­யில் இளம் வய­தில் இத்­த­கைய கொடுமை நடந்து விசா­ர­ணை­யில் உள்­ளது. காவல்­ து­றை­யின் நுண்­ண­றி­வுப் படை மூலம் முன்­கூட்­டியே பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் தக்க வழி­மு­றை­க­ளு­டன் கூடிய சட்­டம் விரைந்து நிறை­வேற்­றப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தமிழ்­நாடு அர­சைத் திரா­வி­டர் கழ­கப் பொதுக் குழு வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">புதிய அர­சி­யல் சூழ­லில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இயக்­கத்­தின் நிலைப்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அறிவு ஆசான் தந்தை பெரி­யார் அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட திரா­வி­டர் கழ­கம், தேர்­த­லில் நின்று, பத­வி­க­ளைப் பெற்று  இயங்­கும், ஓர் அர­சி­யல் கட்சி அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாறாக, தேர்­த­லில் நிற்­கா­விட்­டா­லும்­கூட, தேர்­த­லில் மக்­க­ளுக்கு வழி­காட்­டும் இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­த­லில் திரா­வி­டர் கழ­கத்­தின் ஆத­ரவு பெற்­ற­வர்­கள் சிற்­சில கட்­டங்­க­ளில் தோல்­வி­களைச் சந்­தித்­தி­ருந்­தா­லும், அந்­தத் தோல்­வி­க­ளையே தந்தை பெரி­யார் கொள்­கை­யின் வெற்­றி­யாக மாற்­றிக் காட்­டி­டும் மாற்­றத்­தை­யும் பெற்று, கழ­கத்­தின் பணி தொடர்ந்­தி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் தோல்­வி­க­ளுக்­கும் – கொள்­கைத் தோல்­வி­க­ளுக்­கும் பெருத்த மாறு­பாடு உண்டு என்­ப­தைப் புரியவைத்து, தனது லட்­சி­யப் பணி­யைத் தொடர  வழி­காட்­டி­ய­வர் தந்தை பெரி­யார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க. கூட்­ட­ணியை, தி.மு.க.வின் கொள்­கைத் தாய்க் கழ­கம் என்­ப­தா­லும், அதன் ஒப்­பற்ற ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் சரித்­திர சாத­னை­க­ளுக்­கா­க­வும் நாம் ஆத ரித்­துப் பிரச்­சா­ரம் செய்­தும், மீண்­டும் தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பைத் தமிழ்­நாட்டு வாக்­கா­ளர்­கள் தரா­மல், அதன் பெரும் சாத­னை­க­ளைப் புறந்­தள்ளி, சில வேத­னை­க­ளையோ அல்­லது மாற்­றம் என்­ப­தற்­கா­கவோ திரு.ஜோசப் விஜய் அவர்க ளது கட்­சி­யான தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு வாக்­க­ளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதே­நே­ரத்­தில், அக்­கட்­சிக்­கும் அறு­திப் பெரும்­பான்­மை­யு­டன் (Absolute Majority)  ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பினை வழங்­கா­மல் 108 இடங்­க­ளையே தந்து தீர்ப்­ப­ளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி என்ற பெய­ரால், மறை­மு­க­மாக தமிழ்­நாடு வன்­மை­யாக எதிர்த்­து­வ­ரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ஆட்சி என்ற மத­வாத ஆட்சி அமைந்­து­வி­டக் கூடாது என்ற ஒரு கார­ணம் கூறி, தி.மு.க. கூட்­ட­ணி­ யி­லி­ருந்த சில கட்­சி­கள் ஆத­ரவு தந்து, அதன்­மூ­லம் விஜய் அவர்­க­ளது கட்சிஅறு­திப் பெரும்­பான்மை அடைந்து, ஓர் ஆட்­சியை அமைக்­கும் சூழல் ஏற்­பட்­டது. தி.மு.க.விற்கு தனித்த எதிர்க்­கட்­சி­யாக அமர்ந்­தி­டும் வாய்ப்­பினை மக்­கள் தந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க.வுடன் திரா­வி­டர் கழ­கத்­திற்கு உள்ள உறவு, ‘தாய் – பிள்ளை உறவு!’ அந்த உறவு தொடர்ந்து இருக்­கும். அதே நேரத்­தில், ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்­சி­கள் யாரா­யி­னும், நமக்கு எப்­போ­தும் உள்ள கொள்­கைப் பார்­வையே தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நட்­பில் சம­ர­சம் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கொள்­கை­யில் சம­ர­சம் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பிரச்­சா­ர­மும், போராட்­ட­மும் திரா விடர் கழ­கத்­து­டன் பிரிக்க முடி­யாத இரட்­டை­யர்­கள் என்ற முறை­யில் வெறும் போராட்­டத்­திற்­காக எந்­தப் போராட்­ட­மும் நடத்­த­மாட்­டோம். கொள்­கைப் பாது­காப்­பிற்­குப் போராட்­டம் நடத்­திட தயங்­க­மாட்­டோம் –அது மாநில அர­சா­னா­லும், ஒன்­றிய அர­சா­னா­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நமது கொள்­கைப் பய­ணம் வழக்­கம்­போல, தொய்­வின்­றித் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லையோ, சதுர்­கச்­சேரி அர­சி­ய­லையோ திரா­வி­டர் கழ­கம் ஒரு­போ­தும் ஏற்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இலக்கை அடை­யும் வரை என்­றும் ஓய­மாட்­டோம்; அதற்கு சாயக்­கூ­டாத இடத்­தில் சாய­வும் மாட்­டோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேற்­கண்ட தீர்­மா­னங்­கள் திரா­வி­டர் கழ­கப் பொதுக்­கு­ழு­வில் நிறைவேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>