<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 03:50:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260708T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08072026-VLR-02" position.sequence="02" ex-ref="08072026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">அடுத்­த­டுத்து சிக்­கும் அமைச்­சர்­கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup740096_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வம் தொடர்­பாக சி.பி.ஐ. வழக்கு, 
வரு­மான வரி  வழக்­கு­கள்,  செங்­கல்­பட்டு நீதி­மன்­றத்­தில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் தாக்­கல்  செய்­யப்­பட்ட மண­வி­லக்கு வழக்கு – என பல்­வேறு வழக்­கு­க­ளில் சிக்கி இருப்­ப­வர்­தான் இன்­றைய முத­ல­மைச்­சர் விஜய்.  அவ­ரைப்  போலவே  அவ­ரது  அமைச்­சர்­கள்  ஒவ்­வொ­ரு­வ­ரும் 
அடுத்­த­டுத்து பல்­வேறு வழக்­கு­க­ளி­லும் புகார்­க­ளி­லும் சிக்கி வரு­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் புஸ்ஸி ஆனந்த் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் இவர். விஜய் வரும் நேரத்தை மாற்­றிச் சொல்லிமக்­களை முன்­கூட்­டியே வர வைத்­த­வர் இவர்­தான்.  நிர்­வா­கி­கள் நிய­ம­னம்,வேட்­பா­ளர் தேர்வு ஆகி­யவை குறித்து புகார்  பெட்டி வைத்­தாலே  போதும்  ஆனந்த் மீது ஏரா­ள­மான புகார்­கள் குவி­யும். இந்த நிலை­மை­யில், ஐந்து லட்­சம் முதல் 30 லட்­சம் ரூபாய் வரை லஞ்­சம் பெற்­றுக்­கொண்டு, அரசு வழக்­க­றி­ஞர்­களை நிய­மிப்­ப­தாக அவர் மீது சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விழுப்­பு­ரம் மாவட்­டம் சாலா­மேடு பகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரும், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் வழக்­க­றி­ஞர் அணி இணை செய­லா­ள­ரு­மான 
எம்.ஞான­சௌந்­தரி தாக்­கல் செய்­துள்ள வழக்­கில், அரசு வழக்­க­றி­ஞர்
 நிய­ம­னத்­துக்கு விண்­ணப்­பம் செய்­வ­தற்­கான கெடு ஜூன் 29ஆம் தேதி மாலை என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், அன்­றைய தினம்  பிற்­ப­க­லி­லேயே  நிய­மன பட்­டி­யல் என வாட்ஸ் அப்­பில் தக­வல் பர­வி­ய­தா­க­வும், இது­கு­றித்து மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் விசா­ரித்­த­போது அது­தான் இறுதி பட்­டி­யல் என கூறி­ய­தால் அதிர்ச்சி அடைந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­துக்கு 5 லட்­சம் ரூபாய் முதல் 30 
லட்­சம் ரூபாய் வரை லஞ்­சம் பெற்­றுக்­கொண்டு, அரசு வழக்­க­றி­ஞர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர்; த.வெ.க. மாவட்­டச் செய­லா­ளர் மோகன்­ராஜ் 
மற்­றும் மாவட்ட ஆட்­சி­யர் ஆகி­யோர் கூட்­டு­சேர்ந்­தும், த.வெ.க. பொதுச் செய­லா­ள­ரும், அமைச்­ச­ரு­மான புஸ்ஸி ஆனந்த் பரிந்­துரை அடிப்­ப­டை­          யி­லும், இந்த நிய­ம­னங்­கள் நடந்­துள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளார். இவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய பொறுப்பு முதல்­வர் விஜய்க்கு இருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில்  தனக்கு வாய்ப்­ப­ளித்து  நிய­ம­னங்­கள்  மேற்­கொள்ள உத்­த­ர­வி­ட­வும்,  அது­வரை  அறி­விப்­பா­ணைக்கு தடை­வி­திக்க வேண்­டும் என்­றும் கோரிக்கை வைத்­துள்­ளார். இதே மாதி­ரி­யான நிய­ம­னக் குற்­றச்­சாட்­டு­கள் வந்து கொண்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் பல நாட்­கள் தலை­ம­றை­வாக இருந்­த­வர் இவர். கரூர் வழக்கை இப்­போது சி.பி.ஐ. விசா­ரித்து வரு­கி­றது. த.வெ.க. ஆட்­சி­யில் குதிரை பேரம் நடப்­ப­தாக உச்­ச­நீ­தி­மன்­றம்,  உயர்­நீ­தி­மன்­றம்,  தேர்­தல்  ஆணை­யம்  ஆகிய   இடங்­க­ளில் பல்­வேறு புகார் மனுக்­கள் பதி­வாகி வரு­கி­றது. இவை அனைத்­தி­லும் சிக்­கப் போகி­ற­வர் இவர்­தான். இவ­ரது மனைவி மீது லாட்­டரி தொடர்­பான வழக்­கு­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் நிர்­மல்­கு­மார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் இவர். ‘கூட்­டம் அதி­க­மாக இருக்­கி­றது, விஜய் வரத் தாம­த­      மா­னால் அசம்­பா­வி­தம் நடக்­கும், எனவே அவரை சீக்­கி­ரம் வரச் சொல்­லுங்­கள்’ என்று காவல் துறை அதி­கா­ரி­கள் சொன்­னது இவ­ரி­டம்­தான். இது  முதல்  தக­வல் அறிக்­கை­யி­லேயே    இருக்­கி­றது.   குதிரை   பேர வழக்­கு­க­ளி­லும் சிக்­கு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் மரிய வில்­சன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நிதி அமைச்­ச­ரான இவர், கட்­டை­யைத் தூக்கி ஒரு குடும்­பத்­தைத் தாக்­கும் வீடியோ இணைய தளத்­தில் பரவி அனை­வ­ரும் பார்த்த காட்­சி­கள் ஆகும். மரிய வில்­ச­னுக்­கும் அவ­ரது அண்­ணன் மரிய குளோத்­துக்­கும் இடையே சொத்­துப் பிரச்­சினை இருந்­துள்­ளது. 8.8.2022 ஆம் நாள் புதுச்­சே­ரி­யில் உள்ள மரிய குளோத்­தின்  வீட்­டுக்­குச் சென்று அவ­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கட்­டையை வைத்து தாக்கி இருக்­கி­றார் மரிய வில்­சன். கத­றக் கதற தாக்கி இருக்­கி­றார். வீட்­டில் இருந்த பொருட்­க­ளை­யும் அடித்து உடைத்­துள்­ளார். கொலை மிரட்­டல் விடுத்­துள்­ளார். இது தொடர்­பாக லாஸ்­பேட்டை காவல் நிலை­யத்­தில் புகார் தரப்­பட்­டது. மரி­ய­வில்­சன், அவ­ரது அப்பா நெஸ்­தோஸ் ஆகி­யோர் மீது ஆறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்கு பதி­யப்­பட்­டுள்­ளது. மரி­ய­வில்­சன், கடந்த 
4 ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­திற்கு நேரில் சென்­றி­ருக்க வேண்­டும். ஆனால் போக­வில்லை. அவரை மீண்­டும் 10 ஆம் தேதி­யன்று வரச் சொல்லி இருக்­கி­றது நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் சரத்­கு­மார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பொது இடத்­தில் போதை மருந்­தைப் பயன்­ப­டுத்தி மாட்­டிக் கொண்­ட­வர் இவர். ‘குழந்­தைக்கு மாத்­தி­ரையை நசுக்­கிக் 
கொடுத்­தேன்’ என்­பதை அந்­தக் குழந்தை கூட ஏற்­றுக் கொள்­ளாது. இது 
மட்­டு­மல்ல, பல வீடி­யோக்­கள் வந்து கொண்டு இருக்­கி­றது. இந்த வீடி­யோக்­களை வெளி­யிட்­டார் என்று சொல்லி சில­ருக்கு கொலை மிரட்­டல் விடுத்த புகா­ரும் பதி­வாகி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">*அமைச்­சர் விஸ்­வ­நா­தன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் பிறந்த நாளை முன்­னிட்டு மாரத்­தான் ஓட்­டம் நடை­பெற்­றுள்­ளது. அதில் ஓடிய மாண­வி­கள் காலை நீட்டி உட்­கார்ந்­தி­ருந்தபோது  அரு­வெ­றுப்­பாக  நடந்து  கொண்­டுள்­ளார் உயர் கல்வி அமைச்­சர் விஸ்­வ­நா­தன். மாண­வி­க­ளது காலைத் தொட்­டும், அவர்­க­ளது விரல்­க­ளுக்கு சொடுக்கு எடுத்­தும் மிக மோச­மாக நடந்து கொண்­டார். இவை அனைத்­தும் போக்சோ சட்­டப்­படி குற்­றங்­கள் ஆகும். இவர் மீது போக்சோ சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று குழந்­தை­கள் நல அமைப்­பு­கள் டெல்லி குழந்­தை­கள் ஆணை­யத்­துக்கு புகார் அனுப்பி இருக்­கின்­றன. ஆளு­ந­ரி­டம் பா.ஜ.க. நேர­டி­யாக புகார் தந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">– இப்­படி லஞ்­சம், ஊழல், 41 பேர் மர­ணம், பாலி­யல், போக்சோ, போதைமருந்து, அடி­த­டி­கள், தாக்­கு­தல்­கள், குதிரை பேரம் இப்­படி தண்­ட­னைச் சட்­டத்­தின்அனைத்து பிரி­வு­க­ளி­லும்  பல்­வேறு வழக்­கு­க­ளில் தூய­சக்தி அமைச்­சர்­கள் துர்­நாற்­றம்  அடிக்­கும் வகை­யில் சிக்கி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>