<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 00:18:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260708T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08072026-VLR-06" position.sequence="06" ex-ref="08072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">மாற்று அரசியலா? மோசடி அரசியலா?</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup750232_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தி­யா­வி­லேயே யாரும் எதிர்­பா­ராத ஒரு முடி­வாக தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல் முடிவு அமைந்­து­விட்­டது. பல­ருக்கு இது பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சில­ருக்கு குழப்­பம், சில­ருக்கு கோபம், சில­ருக்கு அவ­நம்­பிக்கை, சில­ருக்கோ, “அடுத்து தமிழ்­நாட்­டில் என்ன நடக்­குமோ?” என்ற கவலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் முடிந்து இரு மாதங்­கள் கடந்த நிலை­யி­லும், இன்­னும் பலர் இந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“மாற்று அர­சி­யல்”, “தூய சக்தி” போன்ற கவர்ச்­சி­க­ர­மான முழக்­கங்­க­ளு­டன் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யுள்ள விஜய்­யின் த.வெ.க., 50 நாட்­க­ளுக்­குள் தனது உண்மை முகத்தை வெளி­காட்­டத் தொடங்­கி­விட்­டது. குதி­ரைப் பேரம், பல ஆயி­ரம் கோடி ரூபாய் கனி­ம­வ­ளக் கொள்­ளைக்­கான ஏற்­பா­டு­கள், கார்­ப­ரேட் சேவை, வாக்­கு­று­தி­க­ளைக் காற்­றில் பறக்­க­வி­டும் மோடி பாணி­யி­லான “கோய­பல்ஸ்” பரப்­பு­ரை­கள் அனைத்­தும் கொடி­கட்­டிப் பறக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘வானத்­தையே வில்­லாக வளைப்­போம்’ என்ற அள­வுக்கு தேர்­தல் வாக்­கு­று­தி­களை வாரி வழங்­கி­விட்டு, ஆட்­சிக்கு வந்­த­தும் “கஜானா காலி”, “தி.மு.க. மட்­டும் உடனே செய்­து­விட்­டதா?” என முந்­தைய ஆட்­சி­யின் மீது பழி போடும் ஏமாற்று அர­சி­யலை, முதல் நாளில் இருந்தே விஜய்­யின் அரசு தொடங்­கி­விட்­டது. தமிழ்­நாடு அர­சின் மொத்த கடன் 9.2 லட்­சம் கோடி என்­பது ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பே தெரிந்த கணக்கு. அப்­படி இருக்­கும்­போது, மக்­களை ஏமாற்ற வாக்­கு­றுதி மட்­டும் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் பரப்­பு­ரை­யில், ஐந்து ஏக்­க­ருக்கு குறை­வாக நிலம் வைத்­தி­ருக்­கும் விவ­சா­யி­க­ளுக்கு ‘முழு பயிர்­க­டன் தள்­ளு­படி’ என முழங்­கி­னார் விஜய். ஆனால் தமிழ்­நாட்­டில் 70% விவ­சா­யி­கள் 5 ஏக்­க­ருக்கு கீழ் உள்­ள­வர்­கள். ஆட்­சிக்கு வந்­த­தும் அவர்­க­ளுக்கு குறு விவ­சா­யி­கள் என்­றால் ரூ.50,000 வரை­யி­லும், பெரு விவ­சா­யி­க­ளுக்கு வெறும் ரூ.5,000 மட்­டுமே தள்­ளு­படி என பச்­சைத் துரோ­கம் இழைத்­துள்­ளார். சொன்­னது 100% தள்­ளு­படி. செய்­தது 0%. இதற்கு எதிர்ப்பு கிளம்­பி­ய­வு­டன், தள்­ளு­படி செய்­யப்­பட்ட தொகையை 45 நாட்­க­ளுக்­குள் 
செலுத்­தும்­படி 2024-இல் ரிசர்வ் வங்கி கட்­டுப்­பாடு வித்­துள்­ள­தா­கக் கூறி, தனது துரோ­கத்தை த.வெ.க. அரசு மூடி­ம­றைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விவ­சா­யி­க­ளுக்­கான மானி­யங்­கள், சலு­கை­களை வெட்­டிச் சுருக்க வேண்­டு­மென்ற மறு­கா­ல­னி­யாக்­கக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில்­தான் ரிசர்வ் வங்கி இக்­கட்­டுப்­பாட்டை விதித்­துள்­ளது. இந்த விவ­சாய விரோத கட்­டுப்­பாட்­டிற்கு எதி­ராக வாய்­தி­றக்­கா­ம­லும், கட்­டுப்­பாட்டை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அறி­விக்­கா­ம­லும் மக்­க­ளுக்­குத் துரோ­க­மி­ழைக்­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதைப் போலவே, 717 டாஸ்­மாக் கடை­களை 
மூடு­வ­தாக த.வெ.க. அரசு அறி­வித்­தது. ஆனால் மூடப்­பட்­ட­தாக சொன்ன கடை­க­ளில் 60% க்கும் மேல் வெறும் 100 மீட்­டர் தள்ளி வைத்து மீண்­டும் திறந்­து­விட்­டார்­கள். எங்­கெங்கு கடை­கள் மூடப்­பட்­டன என எந்­தப் பட்­டி­ய­லும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யில், டாஸ்­மாக் சில்­லறை விற்­ப­னைக் கடை­கள் 
மற்­றும்  இணைக்­கப்­பட்ட பார்­களை முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­ய­ள­விலோ தனி­யார்­ம­ய­மாக்­கு­வது குறித்து த.வெ.க. அரசு தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கி­றது. அதா­வது, “போதை­யில்­லாத தமிழ்­நாட்டை 
உரு­வாக்­கு­வோம்” என்று கூறி ஆட்­சிக்கு வந்­துள்ள த.வெ.க., ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டை­யும் போதை­யின் பிடி­யில் சிக்­க­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதைப்­போ­லவே “மாதம் 200 யூனிட் இல­வச மின்­சா­ரம்” என்ற வாக்­கு­று­தி­யும் மோசடி என 
அம்­பல­மா­கி­விட்­டது. இரண்டு மாதங்­க­ளுக்கு 500 யூனிட் என்­பது, கணக்கு போட்­டால் மாதம் 250 யூனிட் தான். தி.மு.க. அரசு ஏற்­க­னவே மாதம் 100 யூனிட் கொடுக்­கி­றது. த.வெ.க. கூடு­த­லாக தரு­வதுவெறும் 150 யூனிட் மட்­டுமே. இதை வார்த்தை ஜாலம்காட்டி த.வெ.க-.வினர் மக்­களை ஏமாற்­று­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது தி.மு.க. – அ.தி.மு.க.-வு­டன் போட்டி போட்­டுக்­கொண்டு த.வெ.க.வாக்­குறுதி ­களை வாரி வழங்­கி­யது. எதிர்­பா­ராத வகை­யில் ஆட்­சி­யில் அமர்ந்­த­தும், உடனே எது­வும் செய்ய முடி­யாது என தமிழ்­நாட்­டின் நிதி­நி­லையை கார­ணம் காட்டி, தனது இணைய அடி­யாட்­படை மூலம் Reels போட்டு மக்­களை ஏய்க்­கும் கேவ­ல­மான உத்­தி­யைக் கையாளு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.க-வுக்கு அடி­ப­ணி­யத் தயா­ரா­கி­விட்ட ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் நிய­மன விவ­கா­ரத்­தில், ஆளு­ந­ரின் அதி­கா­ரத் தலை­யீட்டை எதிர்த்து தமிழ்­நாடு தொடர் போராட்­டத்தை நடத்தி வரு­கி­றது. கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் வேந்­த­ராக ஆளு­ந­ருக்­குப் பதி­லாக முதல்­வர் இருக்க வேண்­டும் என சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்­நி­லை­யில், “முந்­தைய அர­சின் நிலை­பாட்­டைப் பின்­பற்ற வேண்­டிய கட்­டா­ய­மில்லை” என்ற உயர்­கல்வி அமைச்­ச­ரின் பேச்சு, மாநில உரி­மை­யைப் பறி­கொ­டுக்­கத் தயார் என்ற மறை­மு­கச் செய்­தியை மோடி அர­சுக்­குச் சொல்­வ­தாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பக்­ரீத்­துக்கு முந்­தைய நாளில், பொது இடங்­க­ளில் மாடு, கன்று வெட்ட தடை விதித்த உயர்­நீ­தி­மன்ற உத்­த­ரவு குறித்து விஜய் அரசு வாயே திறக்­க­வில்லை. அதே சம­யத்­தில் கச்­சத்­தீவு பிரச்­சினை குறித்து கேள்வி எழுப்­பி­னால் “No Comments” என நழு­வு­கின்­ற­னர் த.வெ.க. அமைச்­சர்­கள். விஜய்யோ பா.ஜ.க.-வை “கொள்கை எதிரி” என்று கூறி­ய­து­டன் சரி, அதற்­குப் பிறகு எந்த மக்­கள் பிரச்­சி­னை­யி­லும் பா.ஜ.க-.வை விமர்­சிப்­பதே இல்லை. அரசு நிகழ்ச்­சி­க­ளில் ‘வந்தே மாத­ரம்’ பாடு­வ­தைக் கண்­டிக்­கா­மல், தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லுக்கு முதன்மை முக்­கி­யத்­து­வம் கொடுப்­பது பற்றி மோடி­யி­டம் கோரிக்கை வைக்­கும் அள­வுக்கு விஜய் ‘மாவீ­ர­ராக’ இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விஜய், தமிழ்­நாட்­டின் மோடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மோடிக்கு அடி­ப­ணி­வது மட்­டு­மல்ல, விஜய் ஆட்சி நடத்­தும் பாணி­யும் அப்­பட்­ட­மான மோடி பாணியே! பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­திக்­கா­மல், தயா­ரிக்­கப்­பட்ட உரை­கள், ஐ.டி. விங் பரப்­பு­ரை­கள் மூலம் போலி சாத­னைக் கட்­ட­மைப்பை மோடி உரு­வாக்­கு­கி­றார். நாட்­டில் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளுக்­கும் அர­சின் தோல்­விக்­கும் “முந்­தைய ஆட்­சி­தான் கார­ணம்” என்று பல்­லவி பாடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய்­யும் அதே பாதை­யில்­தான் பய­ணிக்­கி­றார். தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யா­த­தற்கு “முந்­தைய ஆட்­சி­தான் கார­ணம், கஜானா காலி” என கோய­பல்ஸ் பாணி­யில் கதை­ய­ளக்­கி­றார். ஒரு முதல்­வ­ராக பத்­தி­ரி­கை­யா­ளர்­களை எதிர்­கொள்­ளத் துணி­வில்­லா­மல் ஓடி ஒளி­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘உல­கத் தலை­வர்’ பிம்­பம் கட்­ட­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதற்­கும் மேலாக, மோடி­யின் ‘விஸ்­வ­குரு’ பிம்­பம் போல, “விஜய் அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்கு உலக அர­சி­ய­லையே தீர்­மா­னிப்­பார்” என அதீத ‘இரட்­ச­கர்’ மற்­றும் ‘உல­கத் தலை­வர்’ பிம்­பத்தை ஜோதி­டர்­கள் மூலம் கட்­ட­மைக்­கி­றார்­கள். ஒரு தலை­வ­ரைக் கேள்­விக்கு அப்­பாற்­பட்­ட­வ­ராக வைத்­தி­ருக்­கும் மோடி­யின் பாசிச பாணி­யையே, விஜய் தன் சினிமா பிம்­பம் 
மற்­றும் ஐ.டி. விங் பரப்­புரை மூலம் தமிழ்­நாட்­டில் அரங்­கேற்­றத் தொடங்­கி­யுள்­ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பில்லை எனப் பொய்மை உரைத்து முதல்­வ­ரான விஜய், த.வெ.க. ஆட்­சி­யில் தலை­வி­ரித்­தா­டும் பெண்­கள், குழந்­தை­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் குறித்து வாய்­தி­றக்­க­வில்லை. கஞ்சா, போதைப்­பொ­ருள் விற்­ப­னையை தடுக்­க­வில்லை. அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் ஒரு அமைச்­சரே போதைப் பொரு­ளைப் பயன்­ப­டுத்­தும் வீடியோ வெளி­வந்து பெரும் சர்ச்­சைக்கு உள்­ளாகி இருக்­கி­றது. தலித் மக்­கள் மீதான ஆண­வப் படு­கொ­லை­கள், சாதி­யத் தாக்­கு­தல்­க­ளும் மூடி­ம­றைக்­கப்­ப­டு­கின்­றன. கொள்­ளை­ய­டிப்­பதை மட்­டுமே முழு­மு­தற் நோக்­க­மாக த.வெ.க-வி­னர் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மறு­பு­றம், பா.ஜ.க. கொல்­லைப்­பு­ற­மாக நுழை­வதைத் தடுப்­ப­தற்­காக த.வெ.க. ஆட்­சிக்கு ஆத­ர­வளித்­த­தா­கக் கூறிய தி.மு.க-வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள், முந்­தைய ஆட்­சி­யைப் போலவே தற்­போ­தும் த.வெ.க. அரசை விமர்­சிக்­கா­மல் வேடிக்கை பார்க்­கின்­றன. விஜய்க்கு எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி 
ஆத­ரவு அளிக்­கின்­றன. இன்­னொரு பக்­கம், 
“த.வெ.க. ஆர்.எஸ்.எஸ்-­ஸின் பிள்ளை” என விமர்­சித்­து­வந்த வி.சி.க., இன்று அமைச்­ச­ர­வை­யில் இடம் கிடைத்­த­தும், ஆளுங்­கட்­சி­யின் அத்­து­மீ­றல்­க­ளுக்­கும், ஜோதி­டர் நிய­ம­னம் முதல் டெல்லி சிறப்பு பிர­தி­நிதி நிய­ம­னம் வரை அபத்­தங்­க­ளுக்­கும் வக்­கா­லத்து வாங்­கும் நிலைக்கு சென்­று­விட்­டது. இந்­தப் போக்­கு­கள், இக்­கட்­சி­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் இருந்த 
செல்­வாக்கை அழிப்­ப­தோடு, அணி­க­ளி­டம் சந்­தர்ப்­ப­வா­தத்தை ஊட்டி வளர்க்­க­வுமே பயன்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">புதி­தாக வந்­தி­ருக்­கி­றார்­கள் என ஆறு மாதம் 
அமை­தி­யா­கக் காத்­தி­ருக்­கச் சொல்­வ­தில் எந்த 
அர்த்­த­மு­மில்லை. த.வெ.க. ஆட்­சி­யின் தொடக்­கமே இவ்­வளவு மோச­மா­ன­தாக இருக்­கும்­போது, ஜன­நாயக சக்­தி­கள் இப்­போது பேச­வில்லை என்­றால், நாளை பேச இடமே இருக்­காது. தமிழ்­நாட்­டின் சமூக­நீதி, மொழி உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மதச்­சார்­பின்மை, மாநில உரிமை போன்­ற­வற்றை 
உள்­ள­டக்­கிய அர­சி­யல் பாரம்­ப­ரி­யத்­தைத் தக்­க­வைக்க மறுக்­கும் த.வெ.க. கும்­ப­லின் கவர்ச்­சி­வாத – பிழைப்­பு­வா­தப் போக்கை மக்­க­ளி­டம் உட­னுக்­கு­டன் தோலு­ரிக்க வேண்­டிய நேரம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சுருக்­க­மா­கச் சொன்­னால்: வாக்­கு­றுதி 100 சத­வி­கி­தம். செயல் 5 சத­வி­கி­தம். பாணி 100 சத­வி­கி­தம் மோடி கோய­பல்ஸ் பாணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் ஆட்­சி­யின் முக­மூ­டியை இப்­போது கிழிக்­கா­விட்­டால், அது சாதா­ரண ஊழல் ஆட்­சி­யாக மட்­டும் நிற்­காது; கேள்வி கேட்­கும் மக்­க­ளை­யும் ஜன­நா­யக சக்­தி­க­ளை­யும் ஒடுக்­கக்­கூ­டிய எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா பாணி­யி­லான கொள்ளை ஆட்­சி­யாக, பாசி­சக் கும்­ப­லுக்கு வழி­ய­மைக்­கும் ஆட்­சி­யாக வலுப்­பெ­றும். தமிழ்­நாட்­டில் பாசிச கும்­பல் காலூன்றவிடா­மல் எதிர்ப்­ப­தும், விஜய் ஆட்­சி­யின் மக்­கள்­வி­ரோ­தப் போக்­கு­களை எதிர்ப்­ப­தும் வேறு­வே­றா­ன­தல்ல…</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>