<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,65,957,1144" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 09 2026 03:53:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260709T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09072026-VLR-05" position.sequence="05" ex-ref="09072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">இந்தித் திணிப்பு:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="38">அசாம் மாநிலத்தின் கதியும்! தமிழ்நாட்டின் நிலையும்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="38"> </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup753159_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்திய ஒன்றியத்தின் வடகிழக்குப் பகுதியின் வாசலாக இருக்கும் அசாம் மாநிலத்தில், அங்கு ஆள்கின்ற பா.ஜ.க. அரசு இந்தி மொழியை அசாம் மாநிலத்தின் ஆட்சிமொழி (அலுவல் மொழி) பட்டியலில் இணைத்துள்ளது. ஏற்கனவே அசாமி, ஆங்கிலம், போடோ ஆகிய 3 மொழிகள் அசாம் மாநிலத்தின் ஆட்சி மொழிகளாக உள்ளன. நான்காவதாக இந்தியை வலுக்கட்டாயமாக ஆட்சி மொழியாக்கியுள்ளது, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமை யிலான பா.ஜ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அசாம் மாநிலம் மொழி உரிமையில் தனி அடையாளம் கொண்ட மாநிலமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே வங்காள மாகாணத்துடன் இணைந்திருந்த அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைத் தனியாகப் பிரித்து அசாம் மாகாணமாக ஆக்கியதுடன், அசாமி-போடோ ஆகிய மொழிகளைப் பேசுகிறவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியா குடியரசு நாடான அதே  1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் அசாம் தனி மாநிலமானது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் படுவதற்கு முன்பே, அசாம் மொழி பேசும் மக்களுக்கான மாநிலம் உருவானதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தன் மாநிலத்தில் உள்ள அசாமி, போடோ ஆகிய இரு மொழிகளும் இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளில் இடம்பிடித்திருக்கும் நிலையில், தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் இந்த மூன்று மொழிகளையும் அசாம் மாநிலத்தின் ஆட்சி மொழிகளாக்கினர். போடோ மொழி பேசுபவர்கள் அசாம் மாநிலத்தின் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் சமவெளிப் பழங்குடியினர். அவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமானப் பண்பாட்டைக்  கொண்டவர்கள். இந்த நிலையில் எதற்காக இந்தியை நான்காவது ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அறிவித்தி ருக்கிறது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்தி, ‘தேசிய மொழி’ (ராஷ்ட்ர பாஷா) என்பதால் அதனை மாநிலத்தின் ஆட்சி மொழியாக்குகிறோம் என்று அசாம் மாநில சட்டமன்றக் கூட்டத்தின் முதல் நாளான ஜூலை 6ந் தேதி, அதன் பேரவைத் தலைவர் ரஞ்சித்குமார் தாஸ் அறிவித்தார். இந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழி அல்ல. ஆனால், அசாம் முதல் தமிழ்நாடு வரை இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற மோசடிப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்படுகிறது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்தி என்பது இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழி. ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் 
பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட  வடமாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளதால் அந்த மாநிலங்களில் அது அலுவல் மொழியாக உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்தியாவுக்கெனத் தனியாக ஒரு  தேசிய மொழி கிடையாது. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றி ருக்கும் 22 மொழிகளும், அதில் இடம்பெறக் காத்திருக்கும் மொழிகளும் இந்தியாவின் மொழிகள்தான். ஆனால், இந்தியைத் திணிப்பதற்கு, 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முயற்சிக்காக, அதனை தேசிய மொழி என்று சொல்லி, பொய்யானக் கருத்தைப் பரப்பி வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் அந்தப் பொய்யை அதிகாரப்பூர்வமானதாக மாற்றி, இந்தி மொழியை நான்காவது ஆட்சி மொழியாக்கியுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அசாம் மாநிலசட்டமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக ‘அசாம் லெஜிஸ்லேடிவ் அசெம்ப்ளி‘ என்ற தொலைக்காட்சி சேனலும் இயங்கி வருகிறது. அதனை ‘அசாம் விதான் சபா டி.வி.‘ எனப் பெயர் மாற்றம் செய்துள்ள அசாம் பா.ஜ.க. அரசு, அந்த டி.வி. சேனலின் இலச்சினையில் இடம்பெற்றிருந்த போடோ  எழுத்துகளையும் நீக்கிவிட்டது. இதனை எதிர்த்து அனைத்து போடோ மாணவர்கள் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. போடோ மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா இதற்கு சப்பைக்கட்டான காரணம் சொல்லி, சமூக வலைத்தளத்தில் சால்ஜாப்பு செய்திருக்கிறார். அசாம் மாநிலத்தின் கதியை நினைத்து அசாமி, போடோ மொழி பேசும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சொந்த மாநில மக்கள் பேசும் மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியைத் திணித்து,  மெல்ல மெல்ல மாநில மொழிகளை அழிக்கும் மோசமான செயல்பாடு, இந்தியாவின் வட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு, இப்போது அது வடகிழக்கு மாகாண நுழைவாயிலுக்குள் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலமாக மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது பாடத்திட்டத்தின் கீழ் வரும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி-சமஸ்கிருதம் கட்டாயம் என்பதை உறுதி செய்துவிட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்றிய பா.ஜ.க. அரசும், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களும் இந்தித் திணிப்பைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றையெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாளன்று, தி.மு.கழக ஆட்சியின் முதல்வராக இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இன்று வரை அது நிலைப்பெற்றி ருக்கிறது. தற்போது தமிழ்நாட்டை ஆளும் 
த.வெ.க. அரசின் ஆளுநர்உரையில்கூட,  அண்ணாவின் இருமொழிக்கொள்கைக் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த.வெ.க. அரசின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று அறிவித்துவிட்டு, 1000 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்குத் தடையின்மைச் சான்று வழங்கிவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறது த.வெ.க. அரசு. இந்தப் பள்ளிகள் வாயிலாக இந்தித் திணிப்புக்கு கொல்லைப்புற வாசல் திறக்கப்பட்டுள்ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து, அங்கு படிக்கும் மாணவியிடம் தனது இங்கிலீஷ் திமிரைக் காட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இதற்கு முன், தன்னிடம் பேட்டி கேட்ட ஆங்கிலத் தொலைக்காட்சி சேனலுக்கு இந்தியில் பேட்டி கொடுத்தார். இந்தியில் பேசினால்தான் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்குப் புரியும் என்று அதற்கு வியாக்கியானம் செய்தார்.  இந்திதான் இந்த  நாட்டின் தேசிய மொழி என்ற மோசடியான கருத்தை நம்புகிறவராகவும், அதனைப் பரப்புகிறவராகும் தமிழ்நாட்டின் அமைச்சர் இருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அசாம் மாநிலத்தில் நான்காவது ஆட்சி மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அந்த மாநிலத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியான காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர் வாசித்அலி சவுத்ரியும், இந்திக்குப் பச்சைக் கொடிக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் த.வெ.க. கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கெடுத்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திராவிட இயக்கங்கள், “வாழ்க” என்று முழங்கியபோது, அதற்குப் பதிலாக, ‘ஜே’ போட்டதும், பெயருக்கு முன் ‘திரு’ என்கிற தமிழ்ச் சொல்லுக்குப் பதில், பெயருக்குப் பின்னால் ‘ஜி’ போட்டு அழைத்ததும்  தமிழ்நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய கலாச்சார மாகும். அதன் நீட்சியாக பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூட்டம் செயல்பட்டு வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் நேரடியாகப் பங்கேற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தன் வளர்ப்புகளை ஊடுருவச் செய்திருக்கிறது. அசாமின் கதியைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் நிலை என்னாகுமோ?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>