<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="383,785,958,1488" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 09 2026 23:49:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260710T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10072026-MDU-02" position.sequence="02" ex-ref="10072026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">மாணவர்களுக்கு – பாடப் புத்தகம் வழங்கவில்லை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">படிக்க முடியாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூலை 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் பள்­ளி­கள் திறக்­கப்­பட்டு ஒரு­மாத காலம் ஆகி­யும் பாடப்­புத்­த­கங்­கள் முழு­மை­யாக வழங்­கப்­ப­டா­த­தால் அர­சுப்­பள்ளி மாண­வ–­ மா­ண­வி­கள் பாதிப்­புக்­குள்­ளாகி வரு­கின்­ற­னர். தமி­ழ­கத்­தில் அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­கள், தனி­யார் மெட்­ரிக். பள்­ளி­கள் என மொத்­தம் 55,000–க்கும் மேற்­பட்ட பள்­ளி­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. அவற்­றில் சுமார் 1.15 கோடி மாணவ, மாண­வி­கள் படித்து வரு­கின்­ற­னர். இந்­தப் பள்­ளி­க­ளில் 1 முதல் 9ம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு கடந்த கல்­வி­யாண்­டில் (2025–2026) இறு­தித் தேர்­வு­கள் முடிந்­த­தும் ஏப்.17ம் தேதி முதல் கோடை விடு­முறை விடப்­பட்­டது. இதை­ய­டுத்து 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை­யி­லான அனைத்து வகுப்­பு­க­ளுக்­கும் ஜூன் 4ம் தேதி பள்­ளி­கள் திறக்­கப்­ப­டும் என பள்­ளிக் கல்­வித் துறை அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">பள்­ளி­கள் திறக்­கப்­ பட்ட முதல் நாளி­லேயே அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­க­ளில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு தமி­ழக அர­சின் சார்­பில் விலை­ யில்லா பாட­நூல்­கள், நோட்­டுப் புத்­த­கங்­கள், சீரு­டை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்டு ஒரு மாதம் ஆன பிற­கும், தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள அர­சுப் பள்­ளி­க­ளில் பயி­லும் பல மாண­வர்­க­ளுக்கு இன்­னும் சில பாடப்­புத்­த­கங்­கள் கிடைக்­க­வில்லை. பெரும்­பா­லான பள்­ளி­க­ளில், பாதி மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே பாடப்­புத்­த­கங்­கள் கிடைத்­து ள்­ள­தாக ஆசி­ரி­யர்­கள் கூறு­கின்­ற­னர். அது­வும் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே பாட­புத்­த­கங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், பள்­ளித் தலை­வர்­கள் குறிப்­பிட்ட தேவை­க­ளுக்கு ஏற்ப புத்­த­கங்­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பள்­ளிக் கல்­வித் துறை அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">வகுப்­பு­கள் தொடங்கி ஒரு மாதம் ஆகி­யும்,மாநி­லம் முழு­வ­தும் உள்ள பல அர­சுப் பள்­ளி­க­ளுக்கு, குறிப்­பாக 4ம் வகுப்பு மற்­றும் 5ம் வகுப்­பு­க­ளுக்­கான பாடப்­புத்­த­கங்­கள் இன்­னும் கிடைக்­க­வில்லை. இந்­தக் கல்­வி­யாண்­டில் அமல்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றாம் மற்­றும் மூன்­றாம் வகுப்­பு­க­ளுக்­கான புதிய பாடத்­திட்­டத்­திற்கு ஏற்ப பாடங்­க­ளைத் திட்­ட­மிட உதவ வேண்­டிய கையே­டும் தங்­க­ளுக்கு இன்­னும் கிடைக்­க­வில்லை என்று பல ஆசி­ரி­யர்­க­ளும் கூறு­கின்­ற­னர். தவெக அரசு பதவி ஏற்று 50 நாளை கடந்து விட்­டது. மே 10ம் தேதி பதவி ஏற்பு நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">அப்­போதே கல்வி அமைச்­ச­ராக ராஜ்­மோ­கன் பதவி ஏற்று விட்­டார். ஆனால் அவர் மற்ற துறை­கள் குறித்த கேள்­வி­க­ளுக்­கெல்­லாம் பட்­டி­மன்­றத்­தில் பதில் சொல்­வ­து­போல பதில் சொல்­கி­றார். ஆனால் சொந்த துறை­யில் இது­வரை மாண­வர்­க­ளுக்கு பாடப் புத்­த­கங்­கள் வழங்­கா­தது குறித்து அவர் நேர­டி­யாக எந்த பதி­லை­யும் கூறா­மல் உள்­ளார். அதே­நே­ரத்­தில் பாடப் புத்­த­கங்­கள் வழங்க அரசு முறை­யான நட­வ­டிக்கை எடுக்­க­ வில்லை என்று கல்­வி­யா­ளர்­க­ளி­டம் இருந்து குற்­றச்­சாட்­டு­கள் வரத் தொடங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பெற்றோர் அதிர்ச்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">மூன்­றாம் வகுப்பு படிக்­கும் குழந்­தை­யின்தாய் ஒரு­வர் கூறு­கை­யில்:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளுக்­குத் தமிழ் மற்­றும் ஆங்­கி­லப் பாடப்­புத்­த­கங்­கள் கிடைத்­தன, ஆனால் மற்ற பாடங்­க­ளுக்­கா­னவை கிடைக்­க­வில்லை. என்குழந்தை பாட­வே­ளை­க­ளில் குறிப்­பு­கள் எடுத்து அவற்­றைப் பயன்­ப­டுத்­திப் படிக்­கி­றாள், ஆனால் அவள் படிப்­பது சரியா என்­ப­தைச் சரி­பார்க்க எங்­க­ளுக்குவழி­யில்லை,” என்று அவர் கூறி­னார். பாடப்­புத்­த­கங்­க­ளின் பிடி­எப் பதிப்­பு­கள் கிடைக்­கின்­ற­னவா என்­ப­தும் தங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று பெற்­றோர்­க­ளும் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">அதே­போல், நாமக்­கல் மாவட்­டம், பள்­ளிப்­பா­ளை­யம் அரசு ஆண்­கள் மேல்­நி­லைப்­பள்­ளி­ யில், 8ம் வகுப்பு படிக்­கும் ஒரு மாண­வன், கடந்த 4ம் தேதி வீடியோ ஒன்றை வெளி­யிட்­டார். அதில் அவர், ‘வணக்­கம், நான், பள்­ளிப்­பா­ளை­யம் அரசு ஆண்­கள் மேல்­நி­லைப்­பள்­ளி­யில், 8ம் வகுப்பு படிக்­கி­றேன். என்னை போன்ற சில மாண­வர்­க­ளுக்கு, இன்­னும் புத்­த­கம் வழங்­க­வில்லை. ஆசி­ரி­ய­ரி­டம் கேட்­டால், ‘அக்­கம் பக்­கத்­தி­ன­ரி­டம் வாங்கி படி’ என்­கின்­ற­னர். புத்­த­கம் இல்­லா­மல் படிப்­ப­தற்கு சிர­ம­மாக உள்­ளது. புத்­த­கம் வழங்­கு­மாறு பணி­வு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்’ என, தெரி­வித்­தி­ருந்­தார். இந்த வீடி­யோவை மற்ற மாண­வர்­க­ளின் பெற்­றோர் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">இது குறித்து, பள்­ளிப்­பா­ளை­யம் அரசு ஆண்­கள் மேல்­நி­லைப்­பள்ளி தலை­மை­யா­சி­ரி­யர் உமா மகேஷ்­வ­ர­னி­டம் கேட்ட போது, “கடந்­தாண்டு, 8ம் வகுப்­பில், 33 மாண­வர்­கள் படித்­த­னர். இந்­தாண்டு, 44 பேர் படிக்­கின்­ற­னர். 33 மாண­வர்­க­ளுக்கு, அரசு புத்­த­கம் வழங்கி உள்­ளது. அதை வாங்கி மாண­வர்­க­ளுக்கு வழங்கி உள்­ளோம். வீடியோ வெளி­யிட்ட மாண­வர், ஆங்­கில வழிக்­கல்வி மாண­வர். அவ­ருக்கு, புத்­த­கம் வழங்கி விட்­டோம். மீத­முள்ள மாண­வர்­க­ளுக்கு, வரும், 10ம் தேதிக்­குள் புத்­த­கங்­களை வழங்­கி­வி­டு­வோம்,” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு முழு­வ­தும் இது­போன்று அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் ஏற்­பட்­டுள்ள சிர­மங்­களை பார்க்­கை­யில், அர­சுப் பள்­ளி­க­ளில் 50 சத­வீத மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே பாடப்­புத்­த­கங்­கள் இது­வரை விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது. பல பள்­ளி­க­ளில் முழு­மை­யாக பாடப்­புத்­த­கங்­கள் இன்­னும் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. பாடப்­புத்­த­கங்­கள் இல்­லா­ம­லேயே அரசு பள்­ளி­க­ளில் மாண­வர்­கள் படித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">பாடப்­புத்­த­கங்­கள் முழு­மை­யாக வழங்­கப்­ப­டா­த­தால் மாண­வர்­கள் கல்வி கற்­ப­தில் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­னர். ஆசி­ரி­யர்­கள் பாடம் நடத்­தும்­போது எடுக்­கும் குறிப்பை வைத்து மாண­வர்­கள் பயின்று வரு­கின்­ற­னர். இதற்கு பல கல்­வி­யா­ளர்­க­ளும் கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்து வரு­கின்­ற­னர். எல்­லா­ருக்­கும் எல்­லாமே சென்று சேர்­கி­றதா என முத­ல­மைச்­சர் பார்க்க சொல்லி இருக்­கி­றார். ஏதே­னும் சிறு தவ­று­கள் நடந்­தா­லும் அதில் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் சமீ­பத்­தில் கூறி இருந்­தார். அவ்­வாறு கூறி­ய­வ­ருக்கு அர­சுப்­பள்ளி மாண­வர்­க­ளில் கத­றல் கேட்­க ­வில்லை போல என்­கின்­ற­னர் சமூக ஆர்­வ­லர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>