<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="505,66,959,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 10 2026 03:52:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260710T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10072026-VLR-05" position.sequence="05" ex-ref="10072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="68">நாடக ஆட்சியும் நயவஞ்சக ஊடகங்களும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup754852_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெ.க. அமைச்­சர் ஒரு­வர் பள்­ளிக் குழந்­தை­ க­ளி­டம் ஆங்­கில அறிவை சோதித்­தும், அதன்  சட்டமன்ற உறுப்­பினர் ஒரு­வர் ஒரு லாரியை நிறுத்தி அதன் டயரை ஆய்வு செய்­தும்  ’தூய ஆட்­சியை’ நிலை நிறுத்­திக் ­கொண்­டி­ருக்­கும்­போது அரசு வழக்­க­றி­ஞர் பத­வி­கள் ஐந்து இலட்­சம் ரூபாய் முதல் முப்­பது இலட்­சம் வரை விற்­கப்­ப­டும் ‘பொற்­கால’ ஆட்சி குறித்து 
த.வெ.க. வைச் சேர்ந்த ஒரு­வரே நீதி­மன்­றத்­தில் புகார் மனு தாக்­கல் செய்­தி­ருக்­கும் சூழ­லில் இந்த நாடக ஆட்சி அரங்­கேற்­றும் நாட­கங்­க­ளும்  அதற்கு துணை நடி­கர்­க­ளாக  நடித்­துக்­கொண்­டி­ருக்­கும் ஊட­கங்­கள் ஆடும் ஆட்­ட­மும் கொஞ்­ச­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதில் போட்­டியே ‘ ரூட்’ மாஃபி­யா­வுக்­கும் தமி­ழக வெகு­சன ஊட­கங்­க­ளுக்­கும்­தான். அர­சுக்கு ஆத­ர­வா­க­வும் தி.மு.க.வுக்கு எதி­ரா­க­வும் பொய்­க­ளை­யும் புனை­சு­ருட்­டு­க­ளை­யும் அதி­கம் பரப்­பு­வது யார் என்­ப­தில்­தான் போட்டி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கரூர் விவ­கா­ரம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ருக்கு முத­ல­மைச்­சர் விஜய் செல்­வதை தடுக்க தி.மு.க. உச்­ச­நீ­தி­மன்­றம் செல்­கி­றது என்ற பொய் ­பி­ர­சா­ரத்தை ஊட­கங்­கள் கடந்த சில நாட்­க­ளாக உக்­கி­ர­மாக முன்­னெ­டுத்­தன. அதில் துளி­யே­னும் உண்மை இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க. அமைப்புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி உச்­ச­
நீ­தி­மன்­றத்­தி­டம் வைத்த கோரிக்கை த.வெ.க. அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா ‘‘கரூர் சம்­ப­வத்­திற்­காக கணக்­குத் தீர்ப்­போம், தன் மக­னின் அர­சி­யல் வெற்­றிக்­காக ஸ்டாலின் அரசு காவல் துறையை வைத்து மக்­களை கொன்று குவித்­தது’’ என்று பேசு­கி­றார். நீதி­மன்ற விசா­ர­ணை­யி­லி­ருக்­கும் ஒரு வழக்கு குறித்து ஒரு அமைச்­சர் இவ்­வாறு பேசு­வது விசா­ர­ணையை பாதிக்­கும். எனவே அவர் மீது நீதி மன்ற வழக்கு தொடர வேண்­டும்,  வழக்­கில் சம்­பந்­தப்­பட்ட கட்சி ஆட்­சி­ய­தி­கா­ரத்­தில் இருப்­ப­தால் இந்த சம்­ப­வம் தொட­ராக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் பொது வெளி­யில் பேசக் ­கூ­டாது, பாதிக்­க­பட்ட மக்­க­ளுக்கு நல உத­வி­களோ அரசு வேலை­வாய்ப்போ வழங்­கு­வது அர­சின் உரிமை, ஆனால் அது கரூர் சம்­ப­வம் வழக்கு விசா­ர­ணை­யில் இருப்­ப­தால் நீதி­மன்­றத்­தின் வழி­காட்­டு­த­லுக்கு உட்­பட்டு அவை வழங்­கப்­ப­ட­வேண்­டும்’’ அவ்­வ­ள­வு­தான் தி.மு.க. கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதில் முத­ல­மைச்­சரை கரூ­ருக்கு போக­கூ­டாது என்ற கோரிக்கை எங்கே இருக்­கி­றது? அல்­லது நீதி­பதி குறிப்­பிட்­ட­து­போல முத­ல­மைச்­ச­ரின் பேச்­சு­ரிமை பாதிக்­கும் அம்­சம் எங்கே இருக்­கி­றது? ஒரு முக்­கி­ய­மான வழக்கு சம்­பந்­த­மாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் சாட்­சி­களை ‘influence’ செய்­யவோ ‘manipulate’ செய்­யவோ கூடாது என கேட்­பது சுதந்­தி­மான விசா­ர­ணைக்கு­ கான அடிப்­ப­டைக் கோரிக்கை இல்­லையா? ‘ என மகன் போனா­லும் பர­வா­யில்லை, விஜய் ஆட்­சிக்கு வர­ணும்’, ’என் தம்பி போனா­லும் பர­வா­யில்லை விஜய் ஆட்­சிக்கு வர­ணும்’ என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையே பேச வைத்­த­வர்­க­ளின் வர­லாற்­றோடு இந்­தப் பிரச்­சி­னையை சேர்த்­துப் பார்க்­க­ வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போதே தி.மு.க. அரசு தலா பத்து இலட்­சம் ரூபாயை இறந்­தோர் குடும்­பத்­திற்கு நிவா­ர­ண­மாக வழங்­கி­யது. பல வாரங்­க­ளுக்கு பிறகு விஜய் அந்த மக்­களை தன்  இடத்­திற்கு வர­வ­ழைத்து தலா இரு­பது இலட்­சம் ரூபாயை வழங்­கி­னார். மக்­க­ளுக்கு உத­வி­கள் வழங்­கு­வ­தில் ஆட்­சே­பணை இல்லை. ஆனால் இப்­போது மறு­ப­டி­யும் மறு­நி­வா­ர­ணம் வழங்­கப்­ப­டு­வ­தன் நோக்­கம் என்ன?  கரூர் சம்­ப­வத்­தின் ரத்த சாட்­சி­கள் அவர்­கள் என்­ப­தா­லும் கரூ­ரில் இடைத் தேர்­தல் வரு­கி­றது என்­ப­தா­லும் அன்றி வேறென்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உச்­ச­நீ­தி­மன்­றம் ‘இந்த வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட சிறப்பு விசா­ர­ணைக்­கு­ழு­வின் பார்­வை­யில் இருப்­ப­தால் அவர்­க­ளி­டம் முறை­யி­டுங்­கள்’ என்­ற­தன் அடிப்­ப­டை­யில் அந்த வழக்கு திரும்­பப் பெறப்­பட்டு சிறப்பு புல­னாய்­வுக்கு குழு­வி­டம் முறை­யிட்­டுள்­ளது. இது ஒரு சாதா­ரண நீதி­மன்ற நடை­முறை. உடனே ஊட­கங்­க­ளில் தலைப்­புச் செய்தி  ‘விஜய் கரூர் செல்ல இருந்த தடை நீங்­கி­யது, தி.மு.க.வுக்கு நீதி மன்­றத்­தில் கடும் பின்­ன­டைவு’ என்­றெல்­லாம் பொய்­களை வாரி இறைத்­தார்­கள். யார் தடை கோரி­னார்­கள்? கோராத தடையை நீதி மன்­றம் எப்­படி நீக்க முடி­யும்? ஒரு குறைந்த பட்ச அறம் கூட இல்­லாதா இழி­நி­லைக்க்கு உங்­களை எது கொண்டு சென்­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செந்­தில் பாலாஜி விவ­கா­ரம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே போன்ற ஒரு பொய்ப்­ரப்­பு­ரை­யைத்­தான் முன்­னாள் அமைச்­சர்செந்­தில் பாலாஜி மற்­றும் அவ­ரது சகோ­த­ரர்­மீது  ஊட­கங்­கள் பரப்பி வரு­கின்­றன. த.வெ.கவின் குதி­ரை­பேர அர­சி­யல் தொடர்ந்து அம்­ப­ல­மாகி வரு­வதை மடை­மாற்ற புனை­யப்­பட்ட கட்­டுக் கதை­தான் செந்­தில் பாலாஜி ஒரு த.வெ.க சட்­ட­மன்ற உறுப்­பி­னரை சபா­நா­ய­கர்­மீ­தான நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்­தில் எதிர்த்து வாக்­க­ளிக்க தூண்­டி­னார்  என்­ப­தும், அரசை கவிழ்க்க சதி  செய்­தார் என்­ப­தும். எந்த ஆதா­ர­மும் இன்றி, அடிப்­ப­டைத் தர்க்­க­மும் இன்றி  சொல்­லப்­பட்ட குற்­றச்­சாட்­டினை காவல்­துறை ஒரு போலி வழக்­காக பதிவு செய்­தது. சம்­பந்­தமே இல்­லாத சிலர் கைது செய்­யப்­பட்டு இந்த வழக்­கினை ஜோடிக்க முயன்­ற­னர். செந்­தில் பாலா­ஜி­யும் அவ­ரது சகோ­த­ர­ரும் தலை­ம­றை­வாக இருப்­ப­தா­க­வும் அவர்­களை காவல்­துறை  ‘ லுக் அவுட் ‘ நோட்­டீஸ் ‘ தேடி வரு­வ­தா­க­வும் விமான நிலை­யங்­க­ளில் அவர்­கள் தப்­பிச் சென்­று­வி­டா­த­படி கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் செய்­தி­கள் பரப்­பப்­பட்­டன. என்ன அப்­ப­டிச் செய்­தார் செந்­தில் பாலாஜி?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. சட்­டத்­துறை செய­லா­ளர் என்.ஆர் இளங்கோ நீதி­மன்­றத்­தில் ஆணித்­த­ர­மான வாதங்­களை எடுத்­து­ரைத்­தார்.‘‘குற்­றம் சாட்­டி­யி­ருக்­கும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  இளை­ய­ராஜா தன்னை செந்­தில் பாலாஜி தரப்பு 26 ஆந்­தேதி தொடர்­பு­கொண்­ட­தாக 29 ஆம் தேதி புகார் செய்­கி­றார்? அந்த மூன்று நாட்­கள் என்ன செய்­தார்? சதித்­திட்­டத்தை யோசித்­துக்­கொண்­டி­ருந்­தாரா? செந்­தில் பாலா­ஜி­யையோ அவ­ரது சகோ­தர்­க­ளையோ கைது செய்­ய­பட்­ட­வர்­கள் சந்­தித்­தற் ­கான சாட்­சி­யங்­களோ அல்­லது குரல் பதி­களோ உண்டா? ஆனால் தி.மு.க.வின் மீது களங்­கம் கற்­பிக்­கும் வகை­யில் அர­சுத் தரப்­பி­லி­ருந்து ’அர­சைக் கவிழ்க்­கும் எண்­ணத்­தோடு’ இது செய்­யப்­பட்­டது  என்று சொல்­லிக்­கொண்டு வந்­தார்­கள். அப்­ப­டியே செய்­தி­க­ளும் வெளி­யி­டப்­பட்­டன. ஆனால் அந்­தப் புகா­ரில் அர­சைக் கவிழ்க்­கும் சதி என குறிப்­பி­டப்­பட்­ட­தாக தக­வல் இல்லை. காவல்­து­றை­யி­ன­ரும் அரசு செய்­திக் குறிப்­பு­க­ளி­லும் ’அர­சைக் கவிழ்க்­கும்’ என்ற வார்த்­தையை சேர்த்தே எழுதி வந்­த­னர். இதை நாங்­கள் சுட்­டிக் காட்டி வாதா­டி­ய­தும் செந்­தில் பாலாஜி, அசோக் குமார் ஜாமீன் மனுவை எதிர்த்த வழக்­கில் ‘ அரசை கவிழ்க்­கும் ‘ என்ற வார்த்­தையை நீக்கி விட்­டார்­கள்’, மொத்த முதல் தக­வல் அறிக்­கை­யும் சொல்­லப்­பட்ட எந்­தக் குற்­றச் சாட்­டிற்­கும் ஆதா­ரம் இல்லை என்று இரு­வ­ருக்­கும் நீதி­மன்­றம் முன் ஜாமீன் வழங்­கி­யது’’ என்று குறிப்­பி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அரசு, காவல்­துறை, ஊட­கங்­கள் அனைத்­தும் ஒன்­றா­கச் சேர்ந்­து­கொண்டு எப்­படி அவ­தூ­று­க­ளை­யும் கட்­டுக் கதை­க­ளை­யும் பரப்­பு­கி­றார்­கள் என்­ப­தற்கு இது ஒரு உதா­ர­ணம். அனிதா ராதா­கி­ருஷ்­ணன் கைது, தி.மு.க ஜென்ஸீ இளை­ஞர்­கள் கைது போன்­ற­வற்­றில் நடந்­தது போல செந்­தில் பாலாஜி விவ­கா­ரத்­தி­லும் த.வெ.க அர­சும் அதன் கூலிப்­படை ஊட­கங்­க­ளும் மூக்கு உடை­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நாட­கத்­தில் சில நகைச்­சுவை 
காட்­சி­கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க அரசு தனி­யார் மெட்­ரி­கு­லே­ஷன் பள்­ளி­க­ளுக்கு வரன்­மு­றை­யற்ற அனு­மதி, மாநி­லத்­தின் நிதிச்­சு­ மையை அதி­க­ரிக்­கும் வி.பி.ஜி.ராம்ஜி திட்­டத்­திற்கு அனு­மதி , ஆளு­நர் தன்­னி­டமே மக்­கள் புகார்­கள் தர­லாம்  என சொல்லி போட்டி அரசு நடத்­து­வற்கு அனு­மதி, பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் தேடு­தல் குழுவை மூன்­லி­ருந்து ஐந்­தாக உயர்த்திதி.மு.க. அரசு போரா­டிப் பெற்ற துணை­ வேந்­தரை நிய­மிக்­கும் உரிமை அர­சுக்கே எனும் உத்­த­ரவை நீர்த்­து­போ­கச் செய்­வ­தற்கு துணை­யாக செயல்­ப­டு­தல் என பல துன்­பி­யல் சம்­பங்­களை அரங்­கேற்­றிக் கொண்­டி­ருக்­கும்­போது கொஞ்­சம் பொழுது போக்­கிற்­காக சில நகைச்­சுவை காட்­சி­க­ளும் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதில் திரு­மா­வ­ள­வ­னுக்­கும் வைகோ­விற்­கும் நடந்த மோதல் சுவா­ர­சி­ய­மா­னது.திரு­மா­வ­ள­வன்  ‘அமைச்­ச­ர­வை­யில் சேர்ந்­தாலே த.வெ.க. கூட்­ட­ணி­யில் சேர்ந்­து­விட்­ட­தாக அர்த்­தம் இல்லை. தி.மு.க.வு­ட­னான நட்பு தொடர்­கி­றது’ என்று கூறி­யி­ருந்­தார். உடனே காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் மாணிக்­கம் தாகூர் திரு­மா­வ­ள­வன் மீது பாய்து‘‘அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றாலே அதில் நீங்­க­ளும் ஒரு அங்­கம்­தான். வார்த்தை விளை­யாட்டுவேண்­டாம்” என்­றார். மாணிக்­கம் தாகூரை துரோ­கத்­தின் போட்­டி­யில் முந்த முயற்­சிக்­கும் வைகோ இது தொடர்­பான கேள்­விக்கு‘‘திரு­மா­வ­ள­வ­னின் இந்­தக் கருத்­துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்­டும்’’ என்று கிண்­ட­ல­ டித்­தார். இதற்கு திருமா வள­வன் ‘நோபல் பரிசு கிடைத்­தால் வைகோ விற்கு நன்றி’ என பதி­லடி கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ம.கவி­டம் த.வெ.க. காட்டி வரும் நெருக்­கம் திரு­மா­வ­ள­வனை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது. தங்­கள் அர­சி­யல் எதிர்­கா­லம் குறித்த நிச்­ச­ய­மின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பா.ம.க. வந்­தால் த.வெ.க.விற்கு இடது சாரி­களோ வி.சி.க.வோ தேவை­யில்லை. இவர்­களை கழற்­றி­வி­டும் நோக்­கத்­தில்­தான் மாணிக்­கம் தாகூ­ரை­யும் வைகோ­வை­யும் வைத்து த,வெ.க.,   வி.சி.க. தலை­வரை வெளிப்­ப­டை­யா­கத் தாக்­கு­கி­றார்­கள் என்று கருத இட­மி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வி.சி.க. கூட்­ட­ணிக்­கட்­சி­க­ளோடு மட்­டு­மல்ல, தனக்­குள்­ளும் கடும் முரண்­பாட்டை சந்­தித்து வரு­கி­றது. 
வி.சி.க.வின் முண்­ணனி தலை­வர்­கள் பலர் கடும் அதி­ருப்­தி­யில் இருக்­கின்­ற­னர். ‘ ஆதி திரா­வி­டர் நலத்­துறை’ என்ற பெயரை சமூக நீதித் துறை என மாற்­றும் முடிவை வி.சி.க.வின் பொதுச் செய­லா­ள­ரும்  நாடா­ளு­மன்ற உறுப்­பி­று­மான ரவிக்­கு­மார் கடு­மை­யாக் எதிர்த்­துள்­ளார். ‘ ஆதி திரா­வி­டர் நலத்­துறை என்ற பெயரை மாற்­ற­வேண்­டும்  என வல­து­சாரி சார்­பு­கொண்ட சிலர் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே  வலி­யு­றுத்து வந்­த­னர். எனி­னும் இதற்கு முன்­பி­ருந்த தி.முக, அ.தி.மு.க அர­சு­கள் இணங்­க­வில்லை. ஆதி திரா­வி­டர் என்ற சாதி கடந்த, சம­யச் சார்­பற்ற அடை­யா­ளத்தை கொச்­சை­யாக புரிந்­து­கொள்­ப ­வர்­கள்­தான் அதை மாற்ற வேண்­டும் எனக்­கோ­ரு­கி­றார்­கள். அந்­தக் கோரிக்­கையை இந்த த.வெ.க. அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருப்­பது வேதனை அளிக்­கி­றது’’ என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் தனது கட்சி பொதுச் செய­லா­ள­ரின் கருத்தை வி.சி.க சார்­பில் அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள வன்­னி­ய­ரசு மறுக்­கி­றார். ‘‘சமூக நீதித்­துறை  என்ற பெயர் மாற்­றம் சரி­யா­கத்­தான் வைக்­கப்­பட்­டுள்­ளது. முதல்­வர் விஜய் தொலை­நோக்­கோடு இந்­தப் பெயரை வைத்­துள்­ளார்’’ என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கூட்­டணி நிலைப்­பாடு குறித்த குழப்­பம், கொள்கை குறித்த குழப்­பம் என வி.சி.க. தடு­மா­றி­கொண்­டி­ருக்­கி­றது. பா.ஜ.க. நாடு­மு­ழுக்க இருந்த தலித் இயக்­கங்­களை சிதைத்து தனக்­கான உதிரி இயக்­கங்­க­ளாக மாற்­றி­யி­ருக்­கி­றது. இப்­போது த.வெ.க மூலம் தமிழ்­நாட்­டில் அதை நிகழ்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றது. தி.மு.க. கூட்­ட­ணியை 
த.வெ.க.வை நம்பி முறித்­ததற்­கான விலையை முத­லில் வி.சி.க. கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. மற்­ற­வர்­க­ளும் விரை­வில் கொடுப்­பார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>