<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 11 2026 03:46:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260711T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="11072026-TRY-02" position.sequence="02" ex-ref="11072026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup748258_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup740096_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மிழ்­நாடு அரசு விசா­ரித்­தால் உண்மை உடனே வெளி­வந்து விடும் என்று நினைத்து சி.பி.ஐ. பின்­னால் போய் பதுங்­கிக் கொண்­டார் விஜய். இதற்­குக் கார­ண­மும் பயம்­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கரூ­ரில் பலி­யான அப்­பா­விக் குடும்­பத்­தி­னர் சிலரை ஏமாற்றி அவர்­கள் மூல­மாக சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு வழக்­குப் போட வைத்­தார்­கள். பிரித்­விக் என்ற சிறு­வன் இந்­தச் சம்­ப­வத்­தில் அநி­யா­ய­மாக பலி­யா­னான். அவ­னது தந்தை பன்­னீர்­செல்­வம்,சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு வழக்­குப் போட்­டார். ‘எட்டு ஆண்­டு­க­ளாக நானும் பன்­னீர்­செல்­வ­மும்  பிரிந்து வாழ்­கி­றோம். என் குழந்தை இறந்­த­போ­து­கூட அவர் வர­வில்லை’ என்று அந்­தச் சிறு­வ­னின் தாய் ஷர்­மிளா பேட்டி கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்­தச் சம்­ப­வத்­தில் சந்­திரா என்­ப­வர் இறந்து போனார். அவ­ரது கண­வர் செல்­வ­ராஜ் பேரில் சி.பி.ஐ. கேட்டு மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. செய்தி வெளி­யா­ன­தும், ‘அர­சாங்க வேலை வாங்­கித் தரு­வ­தா­கச் சொல்லி கையெ­ழுத்து கேட்­டார்­கள். போட்­டேன். சி.பி.ஐ. கேட்டு நான் மனு போட­வில்லை’ என்று சொன்­னார் செல்­வ­ராஜ். இப்­படி பல்­வேறு கேவ­லங்­க­ளைச் செய்­தார்­கள் விஜய் கட்சி நிர்­வா­கி­கள். சி.பி.ஐ. கேட்டு ஓடி­யது பயத்­தி­னால்­தானே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காவல் துறை அதி­காரி அஸ்ரா கர்க் தலை­மை­யில் சிறப்பு புல­னாய்­வுக் குழுவை சென்னை உயர்­நீ­தி­மன்­றம் அமைத்­தது. அதை எதிர்த்து உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஆதவ் அர்­ஜுனா மேல்­மு­றை­யீடு செய்­தார். ‘அஸ்ரா கர்க்                  தலை­மை­யி­லான சிறப்பு புல­னாய்­வுக் குழுவை ரத்து செய்ய வேண்­டும்’ என்று கோரிக்கை வைத்­தார். இது­வும் பயத்­தி­னால்­தானே? ‘அஸ்ரா கர்க் விசா­ரித்­தால் உண்மை வெளி­யில் வந்­து­வி­டும்’ என்று தானே பயந்­தார்­கள்.  அதே அஸ்ரா கர்க்­தான் இன்­றைய த.வெ.க. ஆட்­சி­யில் புல­னாய்­வுப்                      பிரி­வைக் கவ­னிக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கரூர் வழக்கை சி.பி.ஐ. விசா­ரிக்­க­லாம் என்று 13.10.2025 அன்று உச்­ச­நீ­தி­மன்­றம்  தீர்ப்­ப­ளித்­தது. நீதி­ய­ர­சர்­கள் ஜே.கே. மகேஸ்­வரி, என்.வி. அஞ்­ச­ரியா ஆகி­யோர் கொண்ட அமர்வு அது. சி.பி.ஐ. விசா­ர­ணை­யைக் கண்­கா­ணிக்க ஓய்வு பெற்ற நீதி­பதி ரஸ்­தோகி தலை­மை­யில் மூவர் குழு­வை­யும் நீதி­மன்­றம் அமைத்­தது. அது­வரை விஜய்­யும் விஜய் கட்சி நிர்­வா­கி­க­ளும் பதுங்­கித்­தான் இருந்­தார்­கள். இவர்­கள்  பயத்­தைப் பற்­றிப் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆட்­சிக்கு வந்­த­தும் கரூர் காவல் துறை அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட காவ­லர்­கள் 19 பேரை இட­மாற்­றம் செய்­தது பயத்­தின் வெளிப்­பா­டு­தான். உள்­து­றையை கையில் எடுத்­த­தும் முத­ல­மைச்­சர் விஜய் போட்ட முதல் கையெ­ழுத்து இது­தான். எத­னால் இந்த பயம்? அந்த 19 பேரை  மாற்­றி­ய­தால் உண்மை மாறி விடுமா? அவர்­களை  கரூ­ரில் இருந்து மாற்­றி­ய­தால் அவர்­கள்­தான் மாறி விடு­வார்­களா? விஜய்க்கு மனச்­சாட்சி  இல்­லா­மல் இருக்­க­லாம். அவர்­க­ளுக்கு மனச்­சாட்சி  இருக்­கத்­தான்  செய்­யும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது எதற்­காக திடீர் கரூர் பய­ணம்? சாட்­சி­க­ளான அந்­தக் குடும்­பத்­தி­னர் தனக்கு எதி­ராக மாறி விடக்  கூடாது  என்­ப­து­தானே?  கரூர்  இடைத்­தேர்­த­லில்  வெற்றி பெறு­வ­தற்­காக  அல்ல, தன் தலை­யைக் காப்­பாற்­றிக் கொள்­ளவே விஜய் கரூர் செல்­கி­றார். தனது  நாற்­கா­லி­யைக் காப்­பாற்­றிக் கொள்­ளும் பயம், அவ­ரது முகத்­தில் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இறந்­த­வர் குடும்­பத்­தி­னர் வீட்­டுக்­குச் சென்று நேரில் சந்­தித்து ஆறு­தல் கூட சொல்­லா­மல், அவர்­க­ளைச் சென்­னைக்கு வரவழைத்து ஆறு­தல் சொன்­னார் விஜய். இப்­போது மீண்­டும் எதற்­காக கரூர் செல்ல வேண்­டும். தன்­னைக்            காப்­பாற்­றிக் கொள்­ளத்­தான். ‘கரூர்’ அவர் கன­வில் வந்து அந்­த­ள­வுக்கு            ஆட்­டிப் படைக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வ­ளவு பயந்த விஜய், உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தி.மு.க. சார்­பில் அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி மனு­தாக்­கல் செய்­துள்­ளார் என்­ற­தும் மேலும் பயந்து போனார். கரூ­ருக்கு விஜய் செல்­லக்­கூ­டாது என்றோ, பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்கு நிவா­ர­ணம் தரக் கூடாது என்றோ அந்த மனு­வில் குறிப்­பி­ட­வில்லை. உச்­ச­நீ­தி­மன்ற மேற்­பார்­வை­யில் சி.பி.ஐ.  இந்த வழக்கை விசா­ரித்­துக்கொண்டு இருக்­கும் போது, ‘கரூ­ரில் நாங்­கள் தீர்க்க வேண்­டிய கணக்கு இருக்­கி­றது’ என்றோ, ‘போலீஸ்­கா­ரர்­களை வைத்து சதி செய்து கொன்­றார்­கள்’ என்றோ  சொல்­ல­லாமா? என்­பதே  தி.மு.க. எழுப்­பும் கேள்வி ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்­ஜுன், நிர்­மல்­கு­மார் ஆகி­யோர் கரூர் விவ­கா­ரம் தொடர்­பாக பொது­வெ­ளி­யில் பேசு­வ­தற்­குத் தடை விதிக்க வேண்­டும்’ என்­ப­து­தான் அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி அவர்­கள் தாக்­கல் செய்த வழக்கு. ‘இந்த மனுவை நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கா­கத் தாக்­கல் செய்­யுங்­கள்’ என்று உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘விஜய் கரூர் செல்­வது, நிவா­ர­ணம் கொடுப்­பது தொடர்­பான விஷ­யங்­களை உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் இதற்­காக அமைக்­கப்­பட்ட கண்­கா­ணிப்­புக் குழு­வி­டம் கொடுங்­கள்’’ என்று உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் அனு­ம­தி­யும் வழங்கி இருக்­கி­றார்­கள். அதா­வது தி.மு.க.வின் இரண்டு கோரிக்­கை­க­ளை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் ஏற்­றுக் கொண்டு அனு­மதி வழங்கி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.க்கும், சி.பி.ஐ. வழக்கை கண்­கா­ணிக்­கும் குழு­வுக்­கும் அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி மனு அனுப்பி இருக்­கி­றார். நீதி­பதி அஜய் ரஸ்­தோகி தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்­பிய         மனு­வில், ‘‘முத­ல­மைச்­சர் விஜய் கரூர் செல்ல இருக்­கி­றார். அதைக் கண்­கா­ணிக்க வேண்­டும். ஏற்­க­னவே சாட்­சி­யம் அளித்­த­வர்­க­ளின்  சாட்­சி­யங்­கள் உறுதி செய்­யப்­பட வேண்­டும்’’ என்று சொல்லி இருக்­கி­றார். ‘‘சாட்­சி­கள் மீது செல்­வாக்கு செலுத்­து­தல், தடுத்­தல், தலை­யீடு செய்­தல் ஆகிய செயல்­க­ளுக்­காக ஆதவ் அர்­ஜுனா மீது வழக்­குப் பதிவு செய்து விசா­ரிக்க வேண்­டும்’’          என்­றும்  கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கரூ­ருக்கு  விஜய்  செல்­லக்­கூ­டாது  என்றோ,  பாதிக்­கப்­பட்­ட­வர்  குடும்­பங் ­க­ளைச் சந்­திக்­கக் கூடாது என்றோ தி.மு.க. சொல்­ல­வில்லை. ஆனால், ‘கரூர் செல்ல விஜய்க்கு தடை இல்லை’ என்று அனைத்து ஊட­கங்­க­ளி­லும் செய்தி            வர வைக்­கி­றது விஜய் அரசு. நீதி­மன்­றத்­தில் என்ன நடந்­தது என்­ப­தைக்­கூட அறிந்து கொள்­ளா­மல் தலைப்­புச் செய்தி எழு­து­கி­ற­வர்­கள் கையில்  பாரம்­ப­ரிய நாளி­தழ்­கள் சிக்­கி­விட்­டன. என்ன செய்ய?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘தலைப்­புச் செய்­தி­களை’ மாற்­ற­லாம். நடக்க இருப்­பதை மாற்ற முடி­யாது. கரூ­ரில் 41 பேரை தனது விளம்­பர வெறிக்­காக பலி­யிட்ட விஜய், இன்­றல்ல என்­றா­வது ஒரு­நாள் அதற்­கான தண்­ட­னையை அனு­ப­விக்­கத்­தான் வேண்­டும். ‘என்னை இங்க வர­வி­டா­மல் கூட தடுத்­தார்­கள்’ என்று அவர் அழ­லாம். ஆனால் வருங்­கால தண்­ட­னை­யில் இருந்து தப்ப முடி­யாது.  அதை­யும் நாம் பார்க்­கத்­தான் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>