<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,423,493,1503" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 10 2026 16:25:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260711T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11072026-VLR-05" position.sequence="05" ex-ref="11072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">திரு­வள்­ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்­து­வக் கல்­லூரி</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">மருத்­து­வ­ம­னை­யில் த.வெ.க. ஆட்­சி­யின் அவல நிலை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Nagaikanthavad_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerarkal2_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">திரு­வள்­ளூர் ஜூலை 11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">திரு­வள்­ளூர் மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை வளா­கம் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் பெரி­ய­குப்­பம் கிரா­மத்­தில் 8.48 ஏக்­கர் பரப்­ப­ள­வில் 6 அடுக்கு கொண்ட மருத்­து­வ­மனை கட்­டி­டம் கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 3 இலட்­சத்து 60 ஆயி­ரம் சதுர அடி பரப்­ப­ள­வில் தற்­போது 1000 படுக்கை வச­தி­யு­டன் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">இதில் பொது மருத்­துவ பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதி­தீ­விர சிகிச்சை பிரிவு, விபத்து மற்­றும் அவ­சர சிகிச்சை பிரிவு, மயக்­க­வி­யல் துறை, பல் நல­வி­யல் துறை, எலும்­பி­யல் மற்­றும் முட­நீக்­கி­யல் துறை, கண்­ம­ருத்­து­வத் துறை, காது மூக்கு தொண்டை மருத்­து­வத்­துறை, தோல் மருத்­து­வத்­துறை, நெஞ்­சக மற்­றும் காச நோய் மருத்­து­வத்­துறை, இரத்த வங்கி, தீக் காயங்­கள் சிகிச்சை அளிக்­கும் பிரிவு, மன­நல மருத்­து­வத்­துறை, மேம்­ப­டுத்­தப்­பட்ட மத்­திய ஆய்­வ­கம், கதி­ரி­யக்­க­வி­யல் துறை, இயன்­முறை சிகிச்சை பிரிவு, திரவ நச்சு நீக்­கி­யல் பிரிவு மற்­றும் 10 அறுவை சிகிச்சை அரங்­க­மும், 98 படுக்கை வச­தி­யு­டன், 6 திவிர, அதி­தீ­விர, உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரி­வும் உள்­ளது. இதில் அனைத்து வித­மான உயிர் காக்­கும் சிகிச்சை அளிக்­கும் இயந்­தி­ரங்­கள் உள்­ளன. மகப்­பேறு மற்­றும் தாய்­சேய் நல சிகிச்சை பிரி­வுக்­கென 200 படுக்கை வச­தி­கள் கொண்ட  எம்­சி­எச் வார்டு தற்­பொ­ழுது செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">இந்த மருத்­து­வ­மனை செயல்­பட தொடங்­கி­யது முதல் நாள்­தோ­றும் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வெளி நோயா­ளி­கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்­கின்­ற­னர். திரு­வள்­ளூர் மாவட்­டம் மட்­டு­மல்ல அது ராணிப்­பேட்டை மாவட்­டத்தை சேர்ந்த அரக்­கோ­ணம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் ஏற்­ப­டும் விபத்­துக்­கள் மற்­றும் அங்கு தீர்க்­கப்­ப­டாத நோய்­க­ளுக்கு இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்­கின்­ற­னர்.இந்­நி­லை­யில் திரு­வள்­ளூர் மற்­றும் சுற்­று­வட்­டார பகு­தி­களை சேர்ந்த கிராம மக்­கள் தங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள உடல் உபா­தை­க­ளுக்கு மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று செல்­வ­துண்டு. அவ்­வாறு வரும்  புற நோயா­ளி­க­ளுக்கு துண்டு சீட்டு ஒன்று எழுதி கொடுத்து அதை பதி­வேற்­றம் செய்து மருத்­து­வர்­கள் சிகிச்சை அளித்து வந்­த­னர். இந்த தவெக ஆட்­சி­யில் மருத்­து­வ­ம­னை­யில் ஆயி­ரம் கணக்­கில் வரும் புற­நோ­யா­ளி­கள் குடி­நீர் வசதி,கழி­வ­றை­கள் மூடியே கிடக்­கின்­றன.இத­னால் துர்­நாற்­றம் வீசு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">ஆனால் கடந்த திமுக ஆட்­சி­யின் போது வெளி நோயா­ளி­கள் ஒரு முறை வந்­த­வர்­கள் அடுத்த முறை வரும்­போது மீண்­டும் வரி­சை­யில் நின்று வாங்­கா­மல் நேர­டி­யாக நோய் சம்­பந்­தப்­பட்ட  மருத்­து­வரை நேரில் சென்று சிகிச்சை பெற ஏது­வாக வெளி நோயாளி அட்டை ஒன்று வழங்க உத்­த­ர­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">அதன்­படி மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் திரு­வள்­ளூர் மாவட்­டத்தை சேர்ந்த எந்த ஒரு நோயா­ளி­யும் இங்கு பதிவு செய்­யும் போது தனது பெயர், முக­வரி, செல்­போன் எண், ரத்த வகை போன்ற விவ­ரங்­களை அதில் பதி­விட்டு அட்டை ஒன்றை வழங்­கு­வார்­கள். அந்த அட்­டையை ஒரு முறை வந்­த­வர்­கள் மற்­றொரு முறை வரும்­போது மருத்­து­வர்­களை பார்ப்­ப­தற்­கான சீட்டு வாங்க வரி­சை­யில் நிற்­கா­மல் நேர­டி­யாக மருத்­து­வரை சென்று பார்க்க ஏது­வாக இந்த அட்டை உத­வி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">இந்­நி­லை­யில் ஆட்சி மாற்­றத்­திற்கு பிறகு ஆதார் அட்­டை­யை­யும் நோயா­ளி­க­ளி­ட­மி­ருந்து பெற்று அதனை ஆன்­லை­னில் பதி­வேற்­றம் செய்து அந்த லிங்க் கை நோயா­ளி­க­ளின் செல்­போ­னுக்கு அனுப்­பி­வைக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.இந்த லிங்க்கை பயன்­ப­டுத்தி அடுத்த முறை நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னைக்கு வரும் போது வரி­சை­யில் நிற்­கா­மல் செல்­போ­னி­லேயே எந்த நோய்க்கு எந்த மருத்­து­வரை பார்க்க வேண்­டும் போன்ற விவ­ரங்­களை பதிவு செய்து நேர­டி­யாக சென்று பார்க்க உத­வும் என மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">ஆனால் மருத்­து­வ­ம­னைக்கு வரும் நோயா­ளி­யின் முழு விப­ரங்­க­ளை­யும் கணி­னி­யில் பதி­வேற்­றம் செய்து அந்த லிங்க் எடுத்து கொடுப்­ப­தற்கு நேரம் ஆவ­தால் நோயா­ளி­கள் நீண்ட நேரம் வரி­சை­யில் காத்து நிற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக நோயா­ளி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.சாதா­ரண ஏழை எளிய மக்­கள் ஆண்ட்­ராய்டு போன் இல்­லாத பொது­மக்­கள் என்ன செய்­வது எனறு தெரி­யா­மல் இருப்­ப­தா­க­வும் தெரி ­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">மேலும் புற நோயா­ளி­க­ளின் அனு­மதி சீட்­டுக்­காக  கூடு­த­லாக கவுன்ட்­டர்­களை திறந்து நோயா­ளி­களை நீண்ட நேரம் நிற்க வைக்­கா­மல் அனுப்ப ஏது­வாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பொது­மக்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாகை மாவட்­டம் நாகை நக­ரம் நம்­பி­யார் நக­ரில் உள்ள மாணவி ர.ஆசிதா என்­ப­வ­ரின் கல்­விச் செல­வுக்­காக, ரூ.25,000 ம் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் ஆணைக்­கி­ணங்க கழக இளை­ஞர் அணி செய­லா­ள­ரும, தமிழ்­நாடு எதிர்­கட்சி தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் தி.மு.க. இளை­ஞர் அணி அறக்­கட்­டளை சார்­பில் வழங்­கப்­பட்ட தொகைக்­கான காசோ­லையை  நாகை மாவட்ட கழக அலு­வ­ல­கத்­தில் நாகை மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் என்.கௌத­மன் வழங்­கி­னார். உடன் மாவட்ட கழக பொரு­ளா­ளர் மு.லோக­நா­தன் , மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் பி.என். கார்த்தி, துணை அமைப்­பா­ளர் தி.கலை­ய­ர­சன் , மாவட்ட அய­லக அணி துணை அமைப்­பா­ளர் ஆர்.கே.பிர­தீப்,  நகர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்  ஆர்.எஸ்.சத்­தி­யன் உள்­ளிட்­டோர் உட­னி­ருந்­த­னர்..</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>