<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 11 2026 14:54:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260712T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12072026-TRY-04" position.sequence="04" ex-ref="12072026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">முன்னாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் பேட்டி...!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஒரு முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற பிறகு விஜய் அவர்­கள் காவல் துறையை குற்­றம் சொல்­வது என்­பது மிக தவ­றான செயல், தவ­றான முன்­னு­தா­ர­ணம். இதுக்கு ரியா­க்ஷன் அந்த துறை­யில இருந்தே எப்­படி இருக்­கும் என்­பதை போக போகத்­தான் பார்க்­க­ணும். எனவே அவர் வந்து தன்­னு­டைய முது­கில் இருக்­கிற கரையை மறைப்­ப­தற்கு மற்­ற­வர்­களை குற்­றம் சொல்­வ­து­தான் தன்­னு­டைய வழக்­கம் என்­பது போல, காவல்­து­றைக்கு அன்­றைக்கு ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­வர்­கள் வழி­காட்­டி­னார்­கள் என்று பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, இன்­னும் திரைப்­ப­டத்தை விட்டு அவர் வெளி­யில் வரல. ‘ஓடு ஓடு ஓடு’ என்று அதுக்கு வேற செய்கை காட்­டு­கி­றார். அதுக்கு எங்­க­ளு­டைய முன்­னாள் அமைச்­சர் செந்­தில் பாலாஜி மிக அழ­காக பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்: “ஓடு ஓடு ஓடு என்று... கரூர் சம்­ப­வம் நடந்த அன்று சம்­ப­வம் முடிந்த பிறகு கரூ­ரி­லி­ருந்து சென்­னைக்கு ஓடி வந்­தது யார் என்று நாட்­டுக்கே தெரி­யும்.” அந்த ‘ஓடு ஓடு ஓடு’ என்­ப­தற்கு அவர்­தான் உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல கரூ­ரில் நினைவு சின்­னம் அமைப்­போம் என்று சொல்­லி­யி­ருக்­காரு. ஏற்­க­னவே மக்­கள் மனத்­தில அந்த நினைவு சின்­னம் இருக்­கி­றது. திருச்சி விமான நிலை­யத்­தில பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், ஊட­கத்தை சேர்ந்­த­ வர்­கள் “சார் சார் சார். . “ என்று கூப்­பிட்டு கரூ­ரில் மக்­கள் இறந்­தது பற்றி கேட்ட போது ஒரு வேக நடை போட்­டாரே, இன்­றைக்கு சொன்ன அந்த ‘ஓடு ஓடு ஓடு’ என்ற முதுகு, கரூர் மக்­க­ளுக்­கும் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் நினைவு சின்­ன­மாக அவர்­கள் மன­திலே என்­றும் இருக்­கும். நீங்க அமைக்­கப் போற நினைவு சின்­னம் “ ஒரு நடி­கர் பிரச்­சா­ரத்­துக்கு வரு­வ­தாக சொல்­லிட்டு நேரத்­திற்கு வரா­மல் தாம­த­மாக வந்த கார­ணத்­தி­னால் 41 பேர் உயி­ரி­ழந்­தார்­கள்” என்­பதை கால காலத்­திற்­கும் நாட்டு மக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பொய்­யான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">குற்­றச்­சாட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ஸ்டாலின் சார்’ SOP போட்டு தடுத்­திட்­டாங்க எனறு கூறி­னார், அதே ‘ஸ்டாலின் சார்’ போட்ட SOP-தானே இன்­னைக்கு நீங்க பின்­பற்றி இருக்­கீங்க? நீங்­க­தான் முத­ல­மைச்­சர் ஆயிட்­டீங்­களே, பிறகு ஏன் அதை பின்­பற்­ற­ணும்? அதை பின்­பற்­றி­னால்­தான் எந்த பிரச்­ச­னை­யும் இல்­லா­மல் உயி­ரி­ழப்பு இல்­லா­மல் இந்த கூட்­டங்­களை நடத்த முடி­யும் என்­பதை இப்ப நீங்க உணர்ந்­துட்டு இருக்­கீங்க, ஆனா அதையே குற்­றச்­சாட்டா சொல்­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று நீங்க கரூ­ருக்கு வரும்­போது இதே­போல பந்­தல் அமைத்து, சேர் போட்டு, ஸ்நாக்­ஸோட குடி­தண்­ணீர் வழங்கி, இன்­னைக்கு மாதிரிஅடை­யாள அட்டைவரை கொடுத்து இருந்­தால் அன்று இந்த விபத்து நடந்­தி­ருக்­காதே, உயர்­களை பாது­காத்­தி­ருக்­க­லாமே. கரூர் நிகழ்­வுக்கு வரும்­போது காவல்­துறை எச்­ச­ரிக்கை செய்­ய­வில்லை என ஒரு பொய்­யான 
குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார். கரூர்க்கு போகும்­போது கூட்­டம் அதி­கமா இருக்கு உங்­களை முன்­னா­டியே நிறுத்த சொல்லி காவல் துறை­யில சொல்­லி­யி­ருக்­காங்க. அது காவல்­துறை விசா­ரணை, சிபி­ஐ-­­ல­யும் சொல்­லி­யி­ருக்­காங்க. ஆனால் “எங்­க­ளு­டைய திரைப்­பட யூனிட் அங்க உள்ள கேம­ரா­வோட காத்­தி­ருக்கு” என்று நீங்க உள்ள போனீங்க. போன­தற்கு கார­ணம் நீங்­க­ளும் உங்க திரைப்­பட யூனிட்­டும்­தான். அத­னால்­தான் இந்த விபத்து நிகழ்ந்­தது என்­பது பட்­ட­வர்த்­த­ன­மாக எல்­லோ­ருக்­கும் தெரிந்த செய்தி. ஆனால் அதை இன்­னைக்கு மறைப்­ப­தற்கு காவல்­துறை அலர்ட் செய்­யல அப்­ப­டின்னு சொன்­னீங்க. இன்­னைக்கு டைமுக்கு போன நீங்க அன்று அந்த டைமுக்கு போயி­ருந்­தீங்­க­னா­லும் இந்த பிரச்­சனை எழுந்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே பேசு­வ­தற்கு முன்­னால் அந்த ஸ்கிரிப்ட்டை ஒரு மனப்­பா­டம் பண்­ற­துக்கு முன்­னா­டியே நீங்க மன­சுல உள்­வாங்கி படிச்­சி­ருந்­தீங்­க ன்னா, இதுல சொல்ற குற்­றச்­சாட்டு முழு­தும் நம்­ம­ளையே தானே சொல்ற மாதிரி இருக்­குது என்ற எண்­ணம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ருக்கு நீங்க போற­துக்கு முன்­னாடி உங்க தலைமை கழ­கத்­தில இருந்து 27-09-2025 அன்­றைக்கு 12 மணிக்கு வந்­து­ரு­வா­ருன்னு அறி­விப்பு கொடுத்­தாங்க. உங்க தலைமை கழ­கம் அறி­விப்பு கொடுத்­த­தோட இல்­லா­மல், உங்க பொதுச்­செ­ய­லா­ளர் புஸி ஆனந்த் அவர்­கள் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில அதை பேட்­டி­யாக கொடுத்த வீடியோ இன்­றைக்­கும் யூடி­யூ­பில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மலே­சி­யா­வில் இசை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மகிழ்ச்சியோடு நடனம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே எல்லா விதத்­தி­லும் பார்த்­தால் நீங்க உங்­க­ளு­டைய தவறை முழு­வ­தும் மறைத்­து­விட்டு, மீண்­டும் மீண்­டும் கரூர் சம்­ப­வத்­தில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் உங்­கள் மீது குற்­றம் சுமத்­து­கி­றது என்று சொன்­னீங்க. உண்­மை­யில் அன்று எங்­கள் தலை­வர் என்ன சொன்­னாரு? “எந்த ஒரு அர­சி­யல் கட்சி தலை­வ­ரும் தன்­னு­டைய அர­சி­யல் கட்­சியை சேர்ந்த தொண்­டர்­கள் உயி­ரி­ழப்­பதை விரும்ப மாட்­டார்­கள்” என்று மிக பெருந்­தன்­மையா சொன்­னார். கார­ணம் அவர் உயர்ந்த உள்­ளம் கொண்ட ஒரு மனி­தர். அவ­ருக்­கும் உங்­க­ளுக்­கும் எந்த விதத்­தி­லும் ஒப்­பிட முடி­யாது. நாங்­கள் குற்­றம் சுமத்த வேண்­டும் என்று முடிவு செய்­தி­ருந்­தால் வழக்கே போட சொல்­லி­யி­ருக்­க­லாம். வழக்கே போட்­டி­ருந்­தால் இன்­னைக்கு என்ன நிலைமை இருந்­தி­ருக்­கும்? ஆனால் எங்­கள் தலை­வர் பெருந்­தன்மை காட்­டி­ய­த­னால், இன்­றைக்கு நீங்­கள் மன­சுல பட்­ட­தெல்­லாம் வாயில வந்­த­தெல்­லாம் பேசிட்டு இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்­ததுபேசும் போது ஒரு வச­னம் சொல்­லி­யி­ருக்­கீங்க: “எவ்­வ­ளவு உய­ரத்­திற்கு சென்­றா­லும் மன­திற்கு ஏற்­பட்ட காயங்­களை மறக்க முடி­யாது. என் வாழ்­வில் அதிக வலி காயம் கொடுத்­தது கரூர் சம்­ப­வம்­தான். மக்­களை சந்­திக்­க­வும் மக்­க­ளி­டம் பேச­வுமே கரூ­ருக்கு வந்­தேன்” அப்­ப­டின்னு சொன்­ன­வரு வந்­தது எத்­தனை நாள் கழித்து? அந்த சம்­ப­வம் நடந்து 285 நாள் கழித்து இப்­ப­தான் வர்­றாரு. அன்று தான் எங்க திரா­விட முன்­னேற்ற கழக ஆட்சி உங்­களை போக­வி­டா­மல் தடுத்­தது என்று சொன்­னீங்க, இப்ப உங்­கள் ஆட்சி அமைந்து ரெண்டு மாதம் ஆகுது, முன்­னா­டியே போயி­ருக்­க­லாமே, ஏன் போகல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த காயம் வலி எல்­லாம் அப்­ப­டியே இருந்­துதா அந்த 285 நாளுன்னு கேட்டா, இடை­யில வந்து உங்­க­ளு­டைய மன­திற்கு பிடித்­த­வர்­கள் வீட்டு கல்­யா­ணத்­துல சிறப்பா கலந்­துக்­கிட்­டீங்க. பிறகு டிசம்­பர் 27 உங்­க­ளு­டைய திரைப்­ப­ட­மான ‘ஜன­நா­ய­கம்’ திரைப்­பட இசை வெளி­யீட்டு விழா மலே­சி­யா­வில் நடந்­த­போது போய் கலந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்­சி­யோடு நட­ன­மும் ஆடி­னீர்­கள். ஆனா உங்­க­ளுக்கு மன­திலே வலி­யும் காய­மும் கரூர் போற வரைக்­கும் இருந்­த­துன்னு சொல்­றீங்க. அப்­பு­றம் உங்க பிறந்த நாளை மிக சிறப்பா கொண்­டா­டு­னீங்க. இதெல்­லாம் செஞ்­சு­கிட்டு “எனக்கு மன­தில் வலி இருந்­தது, காயம் இருந்­தது, நான் கரூர் வந்­து­தான் இதெல்­லாம் ஆத்­திக்­கி­றேன்” என்று சொல்­வது ரொம்ப டீ ஆத்­து­றீங்­கன்னு மக்­க­ளுக்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெண்­கள் பாது­காப்­பிற்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நட­வ­டிக்கை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு முத­ல­மைச்­ச­ரான பிறகு முத­ல­மைச்­ச­ருக்­கான தகு­தி­யோடு பேசு­வதை விடுத்து மற்­ற­தெல்­லாம் பேசிக்­கிட்டு இருக்­கீங்க. உங்க ஆட்சி அமைந்த பிறகு என்­னென்ன செஞ்­சி­ருக்­கோம்னு விளக்­க­மாக சொல்­லாம அப்­படி மேலோட்­டமா போயிட்டே இருந்­தீங்க. பெண்­கள் பாது­காப்­பு­தானே திரா­விட முன்­னேற்ற ஆட்­சி­யில் நீங்­கள் மிகப்­பெ­ரிய குற்­ற­மாக சுமத்­தி­னீர்­கள், அந்த பெண்­கள் பாது­காப்­பிற்கு இந்த ஆட்­சி­யில் நீங்­கள் என்ன நட­வ­டிக்கை எடுத்­தீங்­கன்னு சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சொன்­னால் உங்க கட்சி ஸ்ரீவை­குண்­டம் எம்­எல்ஏ விஜய் சர­வ­ணன் அவ­ரு­டைய வழக்கே உங்­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டிய இடத்­திற்கு வரும். உங்க கட்­சியை சேர்ந்த ஒரு பெண் அவர் மீது புகார்அளித்து, ஊட­கங்­கள்ல பேட்டி கொடுத்து அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கி­றார். ஆனால் யாரும் அதை பற்றி வாய் திறப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்ப கடை­சியா என்ன ஆச்சு? விஜய் சர­வ­ண­னுக்கு துப்­பாக்கி ஏந்­திய போலீஸ் பாது­காப்பு போட்டு இருக்­கீங்க. அவர் துப்­பாக்கி தூக்­கிட்டு போய் லாரி டயரை செக் பண்­ணிட்டு இருக்­கி­றாரு. ஒரு­வேளை இவ­ரால ஏற்­க­னவே பதிக்­க­பட்ட அந்த பெண் போல இன்­னும் வேறு சம்­ப­வம் ஏதும் நடந்து புகார் வந்­தி­டக்­கூ­டாது என்று நினைத்து அந்த பெண்­களை பாது­காக்க இவ­ருக்கு போலீஸ் பாது­காப்பு கொடுத்­தீங்­களோ என்­னமோ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல்ல உங்க கூட்­டத்­தில இருக்­கி­ற­வங்க என்ன பண்­றாங்­கன்னு பாருங்க. இங்க ஆலந்­தூர்ல ஒரு பகுதி செய­லா­ளர் வேம்­புளி, அவர் மீது ஒரு பெண் பாலி­யல் வழக்கு கொடுத்­தி­ருக்­கி­றார். பெண்­களை ஆபா­ச­மாக வீடியோ எடுத்து மிரட்­டிய சேலத்து மணி­கண்­டன்... இப்­படி பட்­டி­யல் நீண்டு கொண்டே போகும். இப்­படி உங்­க­ளுக்கு எதை சொல்லி நீங்­கள் ஆட்­சிக்கு வந்­தீர்­களோ அதை சரி­யாக செய்­தீர்­களா என்று முதல்ல பாருங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வழக்­க­றி­ஞர் நியம­னத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">லட்­சக்­க­ணக்­கில் லஞ்­சம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊழல் வழக்க பற்றி சொல்­ல­ணும்னா இன்­றைக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் சந்தி சிரிக்­குது. வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­திற்கு லஞ்­ச­மாக இவ்­வ­ளவு பணம் வாங்கி இருக்­காங்­கன்னு என்­பதை திரா­விட முன்­னேற்ற கழ­கம் குற்­றம் சொல்­ல­வில்லை உங்­கள் தவெக கட்­சியை சேர்ந்த ஒரு பெண் வழக்­க­றி­ஞர் ஞான­சௌந்­தரி என்­கி­ற­வங்க வழக்கு தொடுக்­கி­றாங்க. திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் சார்­பா­க­வும் லஞ்ச ஒழிப்பு துறை­யில புகார் கொடுக்­கப்­பட்­டி­ருக்­குது. உங்­கள் ஊழ­லற்ற ஆட்­சிக்கு வேற சாட்சி எல்­லாம் வேணாம், உங்க அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னமே போதுங்­கிற நிலை­மை­தான் இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல வேலூர்ல செங்­கல் சூளைக்கு மாத மாதம் லஞ்­சம் கொடுக்­க­ணும்னு கேட்­டது உங்க நிர்­வாகி, அவங்க மேல நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கீங்­களா? இங்க திரு­வொற்­றி­யூர்ல உங்க பகுதி செய­லா­ளர் ராகுல் என்­கி­ற­வரு வீடு கட்­டு­வ­தற்கு ஒரு பெண்­ணி­டம் 50,000 பணம் கேட்­டார் என்று புகார் வருது. இப்­படி உங்­க­ளு­டைய நிர்­வா­கி­கள் எல்லா இடங்­க­ளி­லும் ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளோடு இன்­றைக்கு பொது­வெ­ளி­யிலே வந்து அம்­ப­ளப்­பட்டு நிற்­கின்­ற­னர். அப்­பு­றம் சொல்­றார் ஒவ்­வொரு அலு­வ­ல­கத்­துக்­கும் போய் பாருங்க எங்­க­யா­வது ஊழல் இருக்கா, லஞ்­சம் இருக்­கான்னு. அது அரசு அலு­வ­ல­கம் எல்­லாம் விடுங்க, பனை­யூர் கட்சி ஆபீஸ்ல அந்த சனிக்­கி­ழமை சனிக்­கி­ழமை நின்­னாலே போதும் – சி. விஜ­ய­பாஸ்­கர் வராரா, எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர் வராரா, இல்லை கடந்த காலங்­க­ளில் இருந்த அமைச்­சர்­கள் வராங்­க­ளானு, இவர்­க­ளுக்கு ஒவ்­வொ­ருத்­த­ருக்­கும் என்­னென்ன வழக்கு இருக்கு, அது என்ன வழக்கு, இதெல்­லாம் தெரிந்­து­தானே நீங்க உங்க வாஷிங் மெஷின்ல போட்டு வெளுத்­திட்டு இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தினம் தினம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக்­கள் போராட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வாஷிங் மெஷின்ல போட்டு நீங்க வெளுத்து கொண்டு வர்ற கதையை இன்­றைக்கு நாடே பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. எனவே இந்த ஊழல், பெண்­கள் பாது­காப்பு இதெல்­லாம் நீங்க பேசு­வ­தற்­கும் உங்­கள் ஆட்­சிக்­கும் எந்த விதத்­தி­லும் தொடர்­பில்­லா­மல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தினம் தினம் மக்­கள்போராட்­டம் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். நேற்று வரைக்­கும் மின்­சார பிரச்­ச­னைக்­காக போரா­டு­வது தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. விவ­சா­யி­கள் போரா­டிக் கொண்­டுள்­ள­னர். இன்­றைக்கு மக்­கள் பய­ணிக்­கின்ற அந்த விடி­யல் பயண பேருந்­து­கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. விடி­யல் பேருந்­து­க­ளில் இருந்து விடி­யல் என்ற வார்த்தை நீக்­க­பட்­டுள்­ளது. நான் முதல்­வன்னு இருந்­தால் எங்க கழக தலை­வர் தள­பதி ஞாப­கம்­தான் வரும் என்று அந்த பெய­ரை­யும் மாற்றி விட்­டீர்­கள். அதே­போல விடி­யலை எடுத்­துட்டு மக­ளிர் பய­ணம்... இப்­ப­டியே போயிட்டே இருந்­தால் நீங்க ஒரு கட்­டத்­துல தமிழ்­நாடு அரசு என்று அறி­ஞர் அண்ணா பெயர் வைத்­தார், ஆகவே அதை­யும் மாத்­தி­ட­லாம்னு வந்து நிப்­பீங்­கன்னு நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மிஸ்­டர் விஜய், உங்க ஸ்டைல்ல சொன்­னால் ‘ப்ரோ விஜய்’, இல்ல ‘விஜய் சார்’, எப்­படி சொன்­னா­லும் சொல்­றேன் – இடைத்­தேர்­தல் பிரச்­சா­ர த்­துக்கு போயிட்டு நேரா ஓட்டை கேட்­டுட்டு வந்­து­ருங்க. அங்க வந்து தேவை­யற்ற வச­னங்­கள் எல்­லாம் பேசிட்டு இருக்க வேணாம். ஒரு ஆட்சி அமைந்­தால் அந்த ஆட்சி மக்­க­ளுக்­கான ஆட்­சி­யாக இருக்க வேண்­டும், தன்­னு­டைய கட்­சிக்­கான ஆட்­சி­யாக இருக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­கள் மகிழ்ச்சி அடை­வ­தற்­கா­கத்­தான் நீங்க போய் ஒவ்­வொரு இடத்­தி­ல­யும் பேசிட்டு இருக்­கீங்க. வைப் பண்ணா போதும், அவங்க வந்து பார்த்து மகிழ்ச்­சியா நமக்கு ஆத­ரவா தொடர்­வாங்­கன்னு நினைக்­க­றீர்­கள். மீதி வாக்­க­ளிக்­காத 65% மக்­கள் தமிழ்­நாட்­டில்­தான் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நினை­வில் வைத்­துக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­சரா பொறுப்­பேற்­கும்­போது சொன்­னார், “வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்­கும், வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்­கும் சேர்த்­து­தான் முத­ல­மைச்­சர் என்ற பதவி, அவர்­க­ளை­யும் அர­வ­ணைத்து அவர்­க­ளுக்­கான பணியை செய்­வேன்” என்று சொன்­னார். ஆனால் நீங்­கள் அதற்கு இன்­னும் உங்­களை தயார்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை. இன்­னும் நீங்­கள் முத­ல­மைச்­ச­ராக மன­த­ள­வில் மக்­க­ளுக்­கான பிரச்­ச­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு முன்­வ­ர­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் தவெக கட்சி தலை­வ­ரா­கவே உள்­ளீர்­கள். மக்­கள் எல்லா நேரத்­தி­லும் ஒரே மாதி­ரி­யாக இருக்க மாட்­டாங்க. நீங்க முன்­னாடி பேசும்­போது வெறும் அகப்­பையை எப்­படி வேணா­லும் சுத்­து­னீங்க, இப்ப அப்­படி இல்லை, நீங்க சுத்­துற அகப்­பை­யில அதி­கா­ரம் இருக்­கி­றது. ரொம்ப சுத்­து­னீங்­கன்னா அதி­கா­ரம் கீழ வெளி­யில வந்து விழுந்­து­ ரும். அத­னால் பேசும்­பொ­ழுது நிதா­னத்­தோடு, முத­ல­மைச்­சர் என்ற பத­விக்­கான நாக­ரீ­கத்­தோடு நீங்­கள் பேச வேண்­டும்.அதோடு இந்த சோபா மாடல் வேலை­களை நிறுத்­திக்­கொண்டு மக்­க­ளுக்­கான பணி­களை தொடர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் சிவ­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>