<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 12 2026 03:50:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260712T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12072026-VLR-02" position.sequence="02" ex-ref="12072026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">இன்று போல் அன்றும் நேரத்திற்கு வந்திருந்தால் உயிரிழப்பே நேர்ந்திருக்காது: </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">ஜோசப் விஜயின் முதுகுதான், கரூர் மக்களின் நினைவுச் சின்னம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">முன்னாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் பதிலடி</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sivasankarpett_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="WhatsAppImage_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூலை 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜ­யின் முதுகு தான் கரூர் மக்­க­ளின் நினை­வுச்­சின்­னம். இன்று போல அன்­றும் நேரத்­திற்கு வந்­தி­ருந்தால் உயி­ரி­ழப்பே நேர்ந்திருக்காது. ஜன­நா­ய­கன் பட இசை வெளி­யீட்டு விழா­வில் மகிழ்ச்­சி­யோடு நட­னம் ஆடி­விட்டு.. வலி வேத­னையா.? நீங்க ரொம்ப “டீ ஆத்­து­றீங்­கன்னு” மக்­க­ளுக்கு தெரி­யும் என்று கரூ­ரில் முதல்­வர் விஜய் பேசிய பேச்­சிற்கு தி.மு.க. முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் பதி­லடி கொடுத்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று கரூ­ருக்கு சென்று பேசி உள்­ளார் முதல்­வர் விஜய். சில நாட்­கள் முன்பு இடைத்­தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­காக திருச்சி கிழக்­கிற்கு சென்­றி­ருந்­தார் முதல்­வர் விஜய். இன்று திருச்­சி­யில் இருந்து கரூர் சென்­றதை போல அன்றே கரூர் சென்­றி­ருக்­க­லாம். ஆனால் அப்­போது போக­வில்லை. அதற்கு கார­ணம் ஷோபா மாடல் கட்­சி­யில் கரூர் எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர் இணை­யட்­டும் எம்.எல்.ஏ பத­வியை ராஜி­னாமா செய்­யட்­டும். அதன் பின் இடைத்­தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்கு செல்­ல­லாம் என விஜய் காத்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று திருச்­சிக்கு போன­திற்கு கார­ணம் இடைத்­தேர்­தல் இன்று கரூர் சென்­ற­தற்கு கார­ணம் இடைத்­தேர்­தல். அந்த இடைத்­தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் எம்.ஆர் விஜய பாஸ்­கரை அரு­கில் வைத்து கொண்டு ஊழல் பற்றி          எல்­லாம் பேசு­கி­றார். 100 கோடி ரூபாய்           மதிப்­புள்ள  நில  அப­க­ரிப்பு  வழக்­கில் தலை­ம­றை­வாக இருந்து கைது செய்­யப்­பட்­ட­வர் தான் இந்த விஜ­ய­பாஸ்­கர். விரா­லி­மலை 
முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­பாஸ்­கரை குட்கா வழக்கு விசா­ர­ணைக்கு வர சொல்லி உள்­ளது நீதி­மன்­றம். இவர்­களை அரு­கில் வைத்­துக்­கொண்டு ஊழலை ஒழிப்­பேன் என்று பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மீண்­டும் மீண்­டும் அவர் சொல்ல வரும் நரேட்­டிவ் திரா­விட முன்­னேற்ற கழ­கம் தான் எல்­லா­வற்­றிற்­கும் கார­ணம் என்­பது. அதே­போல கரூர்ல நடந்த சம்­ப­வத்­திற்கு திரா­விட முன்­னேற்ற கழ­கம் தான் கார­ணம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் பேசும் போது தெரிந்தோ தெரி­யா­மலோ அவ­ரு­டைய ஸ்கிரிப்ட் ரைட்­டர் கொடுத்­ததை அப்­ப­டியே பேசி­யி­ருக்­கி­றார். ஒரு முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்­றி­ருக்­கி­றோம் என்ற எண்­ணம் இன்­னும் அவ­ருக்கு இல்லை. தற்­போது தான் ஒரு முத­ல­மைச்­சர் என்ற நினைவே இன்றி பேசி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல்­வ­ரா­கிய அவ­ருக்கு கீழ் இருக்­கும் காவல்­து­றையை இன்­றைக்கு அவரே குற்­றம் சாட்டி பேசி­யி­ருக்­கி­றார். காவல்­துறை என்­பது ஒரு இன்ஸ்­டி­டி­யூ­ஷன், அது எப்­போ­தும் இருக்­கும், யார் ஆட்­சிக்கு வந்­தா­லும் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கரூ­ரி­லி­ருந்து சென்­னைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஓடி வந்­தது யார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா ஆதா­ர­மில்­லா­மல் காவல்­து­றையை பற்றி பேச­லாம், ஏன் என்­றால் அவர் ஏற்­க­னவே ‘புரட்சி வெடிக்­கும், ஜென்சி புரட்சி வெடிக்­கும்’ என்று பதிவு போட்­டு­விட்டு அதற்கு ஜாமீன் கேட்டு கோர்ட்­டுக்கு போகும்­போது தன்னை பற்றி ஒரு தக­வலை நீதி­மன்­றத்­தில் கூறி இருப்­பார். ஆகவே அதே தக­வலை இப்­போ­தும் கூறி தப்­பித்­துக் கொள்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஒரு முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற பிறகு விஜய் அவர்­கள் காவல் துறையை குற்­றம் சொல்­வது என்­பது மிக தவ­றான செயல், தவ­றான முன்­னு­தா­ர­ணம். இதுக்கு ரியா­க்ஷன் அந்த துறை­யில இருந்தே எப்­படி இருக்­கும் என்­பதை போக போகத்­தான் பார்க்­க­ணும். எனவே அவர் வந்து தன்­னு­டைய முது­கில் இருக்­கிற கறையை மறைப்­ப­தற்கு மற்­ற­வர்­களை குற்­றம் சொல்­வ­து­தான் தன்­னு­டைய வழக்­கம் என்­பது போல, காவல்­து­றைக்கு அன்­றைக்கு ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­வர்­கள் வழி­காட்­டி­னார்­கள் என்று பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, இன்­னும் திரைப்­ப­டத்தை விட்டு அவர் வெளி­யில் வரல. ‘ஓடு ஓடு ஓடு’ என்று அதுக்கு வேற செய்கை காட்­டு­கி­றார். அதுக்கு எங்­க­ளு­டைய முன்­னாள் அமைச்­சர் செந்­தில் பாலாஜி மிக அழ­காக பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்: “ஓடு ஓடு ஓடு என்று... கரூர் சம்­ப­வம் நடந்த அன்று சம்­ப­வம் முடிந்த பிறகு கரூ­ரி­லி­ருந்து சென்­னைக்கு ஓடி வந்­தது யார் என்று நாட்­டுக்கே தெரி­யும்.” அந்த ‘ஓடு ஓடு ஓடு’ என்­ப­தற்கு அவர்­தான் உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல கரூ­ரில் நினைவு சின்­னம் அமைப்­போம் என்று சொல்­லி­யி­ருக்­காரு. ஏற்­க­னவே மக்­கள் மனத்­தில அந்த நினைவு சின்­னம் இருக்­கி­றது. திருச்சி விமான நிலை­யத்­தில பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், ஊட­கத்தை சேர்ந்­த­ வர்­கள் “சார் சார் சார். . “ என்று கூப்­பிட்டு கரூ­ரில் மக்­கள் இறந்­தது பற்றி கேட்ட போது ஒரு வேக நடை போட்­டாரே, இன்­றைக்கு சொன்ன அந்த ‘ஓடு ஓடு ஓடு’ என்ற முதுகு, கரூர் மக்­க­ளுக்­கும் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் நினைவு சின்­ன­மாக அவர்­கள் மன­திலே என்­றும் இருக்­கும். நீங்க அமைக்­கப் போற நினைவு சின்­னம் “ ஒரு நடி­கர் பிரச்­சா­ரத்­துக்கு வரு­வ­தாக சொல்­லிட்டு நேரத்­திற்கு வரா­மல் தாம­த­மாக வந்த கார­ணத்­தி­ னால் 41 பேர் உயி­ரி­ழந்­தார்­கள்” என்­பதைகால காலத்­திற்­கும் நாட்டு மக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பொய்­யான குற்­றச்­சாட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ஸ்டாலின் சார்’ SOP போட்டு தடுத்­திட்­டாங்க எனறு கூறி­னார், அதே ‘ஸ்டாலின் சார்’ போட்ட SOP-தானே இன்­னைக்கு நீங்க பின்­பற்றி இருக்­கீங்க? நீங்­க­தான் முத­ல­மைச்­சர் ஆயிட்­டீங்­களே, பிறகு ஏன் அதை பின்­பற்­ற­ணும்? அதை பின்­பற்­றி­னால்­தான் எந்த பிரச்­ச­னை­யும் இல்­லா­மல் உயி­ரி­ழப்பு இல்­லா­மல் இந்த கூட்­டங்­களை நடத்த முடி­யும் என்­பதை இப்ப நீங்க உணர்ந்­துட்டு இருக்­கீங்க, ஆனா அதையே குற்­றச்­சாட்டா சொல்­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று நீங்க கரூ­ருக்கு வரும்­போது இதே­போல பந்­தல் அமைத்து, சேர் போட்டு, ஸ்நாக்­ஸோட குடி­தண்­ணீர் வழங்கி, இன்­னைக்கு மாதிரி அடை­யாள அட்டை வரை கொடுத்து இருந்­தால் அன்று இந்த விபத்து நடந்­தி­ருக்­காதே, உயிர்­களை பாது­காத்­தி­ருக்­க­லாமே. கரூர் நிகழ்­வுக்கு வரும்­போது காவல்­துறை எச்­ச­ரிக்கை செய்­ய­வில்லை என ஒரு பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார். கரூர்க்கு போகும்­போது கூட்­டம் அதி­கமா இருக்கு உங்­களை முன்­னா ­டியே நிறுத்த சொல்லி காவல் துறை­யில சொல்­லி­யி­ருக்­காங்க. அது காவல்­துறை விசா­ரணை, சிபி­ஐ-­­ல­யும் சொல்­லி­யி­ருக்­காங்க. ஆனால் “எங்­க­ளு­டைய திரைப்­பட யூனிட் அங்க உள்ள கேம­ரா­வோட காத்­தி­ருக்கு” என்று நீங்க உள்ள போனீங்க. போன­தற்கு கார­ணம் நீங்­க­ளும் உங்க திரைப்­பட யூனிட்­டும்­தான். அத­னால்­தான் இந்த விபத்து நிகழ்ந்­தது என்­பது பட்­ட­வர்த்­த­ன­மாக எல்­லோ­ருக்­கும் தெரிந்த செய்தி. ஆனால் அதை இன்­னைக்கு மறைப்­ப­தற்கு காவல்­துறைஅலர்ட் செய்­யல அப்­ப­டின்னு சொன்­னீங்க. இன்­னைக்கு டைமுக்கு போன நீங்க அன்று அந்த டைமுக்கு போயி­ருந்­தீங்­க­னா­லும் இந்த பிரச்­சனை எழுந்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே பேசு­வ­தற்கு முன்­னால் அந்த ஸ்கிரிப்ட்டை ஒரு மனப்­பா­டம் பண்­ற­துக்கு முன்­னா­டியே நீங்க மன­சுல உள்­வாங்கி படிச்­சி­ருந்­தீங்­கன்னா, இதுல சொல்ற குற்­றச்­சாட்டு முழு­தும் நம்­ம­ளையே தானே சொல்ற மாதிரி இருக்­குது என்ற எண்­ணம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ருக்கு நீங்க போற­துக்கு முன்­னாடி உங்க தலைமைகழ­கத்­தில இருந்து 27-.09.-2025 அன்­றைக்கு 12 மணிக்கு வந்­து­ரு­வா­ருன்னு அறி­விப்பு கொடுத்­தாங்க. உங்க தலைமை கழ­கம் அறி­விப்பு கொடுத்­த­தோட இல்­லா­மல், உங்க பொதுச்­செ­ய­லா­ளர் புஸ்ஸி ஆனந்த் அவர்­கள் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில அதை பேட்­டி­யாக கொடுத்த வீடியோ இன்­றைக்­கும் யூடி­யூ­பில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மலே­சி­யா­வில் இசை மகிழ்ச்சியோடு நடனம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே எல்லா விதத்­தி­லும் பார்த்­தால் நீங்க உங்­க­ளு­டைய தவறை முழு­வ­தும் மறைத்­து­விட்டு, மீண்­டும் மீண்­டும் கரூர் சம்­ப­வத்­தில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் உங்­கள் மீது குற்­றம் சுமத்­து­கி­றது என்று சொன்­னீங்க. உண்­மை­யில் அன்று எங்­கள் தலை­வர் என்ன சொன்­னாரு? “எந்த ஒரு அர­சி­யல் கட்சி தலை­வ­ரும் தன்­னு­டைய அர­சி­யல் கட்­சியை சேர்ந்த தொண்­டர்­கள் உயி­ரி­ழப்­பதை விரும்ப மாட்­டார்­கள்” என்று மிக பெருந்­தன்­மையா சொன்­னார். கார­ணம் அவர் உயர்ந்த உள்­ளம் கொண்ட ஒரு மனி­தர். அவ­ருக்­கும் உங்­க­ளுக்­கும் எந்த விதத்­தி­லும் ஒப்­பிட முடி­யாது. நாங்­கள் குற்­றம் சுமத்த வேண்­டும் என்று முடிவு செய்­தி­ருந்­தால் வழக்கே போட சொல்­லி­யி­ருக்­க­லாம்.வழக்கே போட்­டி­ருந்­தால் இன்­னைக்கு என்னநிலைமை இருந்­தி­ருக்­கும்? ஆனால் எங்­கள் தலை­வர் பெருந்­தன்மை காட்­டி­ய­த­னால், இன்­றைக்கு நீங்­கள் மன­சுல பட்­ட­தெல்­லாம் வாயில வந்­த­தெல்­லாம் பேசிட்டு இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்­தது பேசும் போது ஒரு வச­னம் சொல்­லி­யி­ருக்­கீங்க: “எவ்­வ­ளவு உய­ரத்­திற்கு சென்­றா­லும் மன­திற்கு ஏற்­பட்ட காயங்­களை மறக்க முடி­யாது. என் வாழ்­வில் அதிக வலி காயம் கொடுத்­தது கரூர் சம்­ப­வம்­தான். மக்­களை சந்­திக்­க­வும் மக்­க­ளி­டம் பேச­வுமே கரூ­ருக்கு வந்­தேன்” அப்­ப­டின்னு சொன்­ன­வரு வந்­தது எத்­தனை நாள் கழித்து? அந்த சம்­ப­வம் நடந்து 285 நாள் கழித்து இப்­ப­தான் வர்­றாரு. அன்று தான் எங்க திரா­விட முன்­னேற்ற கழக ஆட்சி உங்­களை போக­வி­டா­மல் தடுத்­தது என்று சொன்­னீங்க, இப்ப உங்­கள் ஆட்சி அமைந்து ரெண்டு மாதம் ஆகுது, முன்­னா­டியே போயி­ருக்­க­லாமே, ஏன் போகல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த காயம் வலி எல்­லாம் அப்­ப­டியே இருந்­துதா அந்த 285 நாளுன்னு கேட்டா, இடை­யில வந்து உங்­க­ளு­டைய மன­திற்கு பிடித்­த­வர்­கள் வீட்டு கல்­யா­ணத்­துல சிறப்பா கலந்­துக்­கிட்­டீங்க. பிறகு டிசம்­பர் 27 உங்­க­ளு­டைய திரைப்­ப­ட­மான ‘ஜன­நா­ய­கம்’ திரைப்­பட இசை வெளி­யீட்டு விழா மலே­சி­யா­வில் நடந்­த­போது போய் கலந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்­சி­யோடு நட­ன­மும் ஆடி­னீர்­கள். ஆனா உங்­க­ளுக்கு மன­திலே வலி­யும் காய­மும் கரூர் போற வரைக்­கும் இருந்­த­துன்னு சொல்­றீங்க. அப்­பு­றம் உங்க பிறந்த நாளை மிக சிறப்பா கொண்­டா­டு­னீங்க. இதெல்­லாம் செஞ்­சு­கிட்டு “எனக்கு மன­தில் வலி இருந்­தது, காயம் இருந்­தது, நான் கரூர் வந்­து­தான் இதெல்­லாம் ஆத்­திக்­கி­றேன்” என்று சொல்­வது ரொம்ப டீ ஆத்­து­றீங்­கன்னு மக்­க­ளுக்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பெண்­கள் பாது­காப்­பிற்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நட­வ­டிக்கை என்ன?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு முத­ல­மைச்­ச­ரான பிறகு முத­ல­மைச்­ச­ருக்­கான தகு­தி­யோடு பேசு­வதை விடுத்து மற்­ற­தெல்­லாம் பேசிக்­கிட்டு இருக்­கீங்க. உங்க ஆட்சி அமைந்த பிறகு என்­னென்ன செஞ்­சி­ருக்­கோம்னு விளக்­க­மாக சொல்­லாம அப்­படி மேலோட்­டமா போயிட்டே இருந்­தீங்க. பெண்­கள் பாது­காப்­பு­தானே திரா­விட முன்­னேற்ற ஆட்­சி­யில் நீங்­கள் மிகப்­பெ­ரிய குற்­ற­மாக சுமத்­தி­னீர்­கள், அந்த பெண்­கள் பாது­காப்­பிற்கு இந்த ஆட்­சி­யில் நீங்­கள் என்ன நட­வ­டிக்கை எடுத்­தீங்­கன்னு சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சொன்­னால் உங்க கட்சி ஸ்ரீவை­குண்­டம் எம்­எல்ஏ விஜய் சர­வ­ணன் அவ­ரு­டைய வழக்கே உங்­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டிய இடத்­திற்கு வரும். உங்க கட்­சியை சேர்ந்தஒரு பெண் அவர் மீது புகார் அளித்து, ஊட­கங்­கள்ல பேட்டி கொடுத்து அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­ கி­றார். ஆனால் யாரும் அதை பற்றி வாய் திறப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்ப கடை­சியா என்ன ஆச்சு? விஜய் சர­வ­ண­னுக்கு துப்­பாக்கி ஏந்­திய போலீஸ் பாது­காப்பு போட்டு இருக்­கீங்க. அவர் துப்­பாக்கி தூக்­கிட்டு போய் லாரி டயரை செக் பண்­ணிட்டு இருக்­கி­றாரு. ஒரு­வேளை இவ­ரால ஏற்­க­னவே பதிக்­க­பட்ட அந்த பெண் போல இன்­னும் வேறு சம்­ப­வம் ஏதும் நடந்து புகார் வந்­தி­டக்­கூ­டாது என்று நினைத்து அந்த பெண்­களை பாது­காக்க இவ­ருக்கு போலீஸ் பாது­காப்பு கொடுத்­தீங்­களோ என்­னமோ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல்ல உங்க கூட்­டத்­தில இருக்­கி­ற­வங்க என்ன பண்­றாங்­கன்னு பாருங்க. இங்க ஆலந்­தூர்ல ஒரு பகுதி செய­லா­ளர் வேம்­புளி, அவர் மீது ஒரு பெண் பாலி­யல் வழக்கு கொடுத்­தி­ருக்­கி­றார். பெண்­களை ஆபா­ச­மாக வீடியோ எடுத்து மிரட்­டிய சேலத்துமணி­கண்­டன்... இப்­படி பட்­டி­யல் நீண்டு கொண்டே போகும். இப்­படி உங்­க­ளுக்கு எதை சொல்லி நீங்­கள் ஆட்­சிக்கு வந்­தீர்­களோ அதை சரி­யாக செய்­தீர்­களா என்று முதல்ல பாருங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வழக்­க­றி­ஞர் நியம­னத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">லட்­சக்­க­ணக்­கில் லஞ்­சம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊழல் வழக்குபற்றி சொல்­ல­ணும்னா இன்­றைக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் சந்தி சிரிக்­குது. வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­திற்கு லஞ்­ச­மாக இவ்­வ­ளவு பணம் வாங்கி இருக்­காங்­கன்னு என்­பதை திரா­விட முன்­னேற்ற கழ­கம் குற்­றம் சொல்­ல­வில்லை உங்­கள் தவெக கட்­சியை சேர்ந்த ஒரு பெண் வழக்­க­றி­ஞர் ஞான­சௌந்­தரி என்­கி­ற­வங்க வழக்கு தொடுக்­கி­ றாங்க. திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் சார்­பா­க­வும் லஞ்ச ஒழிப்பு துறை­யில புகார் கொடுக்­கப்­பட்­டி­ருக்­குது. உங்­கள் ஊழ­லற்ற ஆட்­சிக்கு வேற சாட்சி எல்­லாம் வேணாம், உங்க அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னமே போதுங்­கிற நிலை­மை­தான் இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல வேலூர்ல செங்­கல் சூளைக்குமாத மாதம் லஞ்­சம் கொடுக்­க­ணும்னு கேட்­டது உங்க நிர்­வாகி, அவங்க மேல நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கீங்­களா? இங்க திரு­வொற்­றி­யூர்ல உங்க பகுதி செய­லா­ளர் ராகுல் என்­கி­ற­வரு வீடு கட்­டு­வ­தற்கு ஒரு பெண்­ணி­டம் 50,000 பணம் கேட்­டார் என்று புகார் வருது. இப்­படி உங்­க­ளு­டைய நிர்­வா­கி­கள் எல்லா இடங்­க­ளி­லும் ஊழல் குற்­றச்­சாட்­டு ­க­ளோடு இன்­றைக்கு பொது­வெ­ளி­யிலே வந்து அம்­ப­ளப்­பட்டு நிற்­கின்­ற­னர். அப்­பு­றம் சொல்­றார் ஒவ்­வொரு அலு­வ­ல­கத்­துக்­கும் போய் பாருங்க எங்­க­யா­வது ஊழல் இருக்கா, லஞ்­சம் இருக்­கான்னு. அது அரசு அலு­வ­ல­கம் எல்­லாம் விடுங்க, பனை­யூர் கட்சி ஆபீஸ்லஅந்த சனிக்­கி­ழமை சனிக்­கி­ழமை நின்­னாலே போதும் – சி. விஜ­ய­பாஸ்­கர் வராரா, எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர் வராரா, இல்லை கடந்த காலங்­க­ளில் இருந்த அமைச்­சர்­கள் வராங்­க­ளானு, இவர்­க­ளுக்கு ஒவ்­வொ­ருத்­த­ருக்­கும் என்­னென்ன வழக்கு இருக்கு, அது என்ன வழக்கு, இதெல்­லாம் தெரிந்­து­தானே நீங்க உங்க வாஷிங் மெஷின்ல போட்டு வெளுத்­திட்டு இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தினம் தினம் மக்­கள் போராட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வாஷிங் மெஷின்ல போட்டு நீங்க வெளுத்து கொண்டு வர்ற கதையை இன்­றைக்கு நாடே பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. எனவே இந்த ஊழல், பெண்­கள் பாது­காப்பு இதெல்­லாம் நீங்க பேசு­வ­தற்­கும் உங்­கள் ஆட்­சிக்­கும் எந்த விதத்­தி­லும் தொடர்­பில்­லா­மல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தினம் தினம் மக்­கள் போராட்­டம் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். நேற்று வரைக்­கும் மின்­சார பிரச்­ச­னைக்­காக போரா­டு­வது தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. விவ­சா­யி­கள் போரா­டிக் கொண்­டுள்­ள­னர். இன்­றைக்கு மக்­கள் பய­ணிக்­கின்ற அந்த விடி­யல் பயண பேருந்­து­கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. விடி­யல் பேருந்­து­க­ளில் இருந்து விடி­யல் என்ற வார்த்தை நீக்­க­பட்­டுள்­ளது. நான் முதல்­வன்னு இருந்­தால் எங்க கழக தலை­வர் தள­பதி ஞாப­கம்­தான் வரும் என்று அந்த பெய­ரை­யும் மாற்றிவிட்­டீர்­கள். அதே­போல விடி­யலை எடுத்­துட்டு மக­ளிர் பய­ணம்... இப்­ப­டியே போயிட்டே இருந்­தால் நீங்க ஒரு கட்­டத்­துல தமிழ்­நாடு அரசு என்று அறி­ஞர் அண்ணா பெயர் வைத்­தார், ஆகவே அதை­யும் மாத்­தி­ட­லாம்னு வந்து நிப்­பீங்­கன்னு நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மிஸ்­டர் விஜய், உங்க ஸ்டைல்ல சொன்­னால் ‘ப்ரோ விஜய்’, இல்ல ‘விஜய் சார்’, எப்­படி சொன்­னா­லும் சொல்­றேன் – இடைத்­தேர்­தல் பிரச்­சா­ரத்­துக்கு போயிட்டு நேரா ஓட்டை கேட்­டுட்டு வந்­து­ருங்க. அங்க வந்து தேவை­யற்ற வச­னங்­கள் எல்­லாம் பேசிட்டு இருக்க வேணாம். ஒரு ஆட்சி அமைந்­தால் அந்த ஆட்சி மக்­க­ளுக்­கான ஆட்­சி­யாக இருக்க வேண்­டும், தன்­னு­டைய கட்­சிக்­கான ஆட்­சி­யாக இருக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­கள் மகிழ்ச்சி அடை­வ­தற்­கா­கத்­தான் நீங்க போய் ஒவ்­வொரு இடத்­தி­ல­யும் பேசிட்டு இருக்­கீங்க. வைப் பண்ணா போதும், அவங்க வந்து பார்த்து மகிழ்ச்­சியா நமக்கு ஆத­ரவா தொடர்­வாங்­கன்னு நினைக்­க­றீர்­கள். மீதி வாக்­க­ளிக்­காத 65% மக்­கள் தமிழ்­நாட்­டில்­தான் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நினை­வில் வைத்­துக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­சரா பொறுப்­பேற்­கும்­போது சொன்­னார், “வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்­கும், வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்­கும் சேர்த்­து­தான் முத­ல­மைச்­சர் என்ற பதவி, அவர்­க­ளை­யும் அர­வ­ணைத்து அவர்­க­ளுக்­கான பணியை செய்­வேன்” என்று சொன்­னார். ஆனால் நீங்­கள் அதற்கு இன்­னும் உங்­களை தயார்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை. இன்­னும் நீங்­கள் முத­ல­மைச்­ச­ராக மன­த­ள­வில் மக்­க­ளுக்­கான பிரச்­ச­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு முன்­வ­ர­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் தவெக கட்சி தலை­வ­ரா­கவே உள்­ளீர்­கள். மக்­கள் எல்லா நேரத்­தி­லும் ஒரே மாதி­ரி­யாக இருக்க மாட்­டாங்க. நீங்க முன்­னாடி பேசும்­போது வெறும் அகப்­பையை எப்­படி வேணா­லும் சுத்­து­னீங்க, இப்ப அப்­படி இல்லை, நீங்க சுத்­துற அகப்­பை­யில அதி­கா­ரம் இருக்­கி­றது. ரொம்ப சுத்­து­னீங்­கன்னா அதி­கா­ரம் கீழ வெளி­யில வந்து விழுந்­து­ ரும். அத­னால் பேசும்­பொ­ழுது நிதா­னத்­தோடு, முத­ல­மைச்­சர் என்ற பத­விக்­கான நாக­ரீ­கத்­தோடு நீங்­கள் பேச வேண்­டும். அதோடு இந்த சோபா மாடல் வேலை­களை நிறுத்­திக்­கொண்டு மக்­க­ளுக்­கான பணி­களை தொடர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் 
சிவ­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதல் வீரர் - – மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (11.7.2026) சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள்  கே.ஆர்.பெரியகருப்பன்,  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மேயர் திருமதி. பிரியா, துணை மேயர்  
மு.மகேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>