<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,815" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 12 2026 03:50:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260712T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12072026-VLR-03" position.sequence="03" ex-ref="12072026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">கரூர் மேடையில் விஜய்யின் கண்றாவி நாடகம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup759761_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தன்­னு­டைய அலட்­சி­யத்­தி­னா­லும் பொறுப்­பின்­மை­யி­னா­லும் கரூ­ரில் 41 உயிர்­கள் பலி­யா­னது குறித்து கொஞ்­சம்­கூட இரக்­க­மே­யில்­லா­மல், மன­சாட்­சி­யைத் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு,  இடைத்­தேர்­த­லுக்­கான பிரச்­சா­ரத்தை ஜூலை 10 அன்று நடத்­தி­யி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சினி­மா­வில் விஜய் ஹீரோ­வாக இருக்­க­லாம். அர­சி­யல் மேடை­யில் கோமா­ளி­யாக, அது­வும் பொய்யை மட்­டுமே பேசி, சொந்­தக் கட்­சிக்­கா­ரர்­க­ளி­டம் கை­தட்­டல் வாங்­கும் கொடூ­ரக் கோமா­ளி­யா­கத் தன்னை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2025ஆம் ஆண்டு செப்­டம்­பர் 27ஆம் நாள் ஏறத்­தாழ 7 மணி நேரம் தாம­த­மாக கரூ­ருக்கு விஜய் பிரச்­சா­ரம் செய்­யச் சென்­ற­தால், நீண்ட நேரம் காத்­தி­ருந்த கூட்­டத்­தி­னர் நெரி­ச­லுக்­குள்­ளா­கி­யும், தண்­ணீர் இல்­லா­மல் மயங்­கி­யும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட நிலை­யில், கூட்­டத்­தி­ன­ரில் 41 பேர் இறந்து போனார்­கள். அப்­போ­தைய திரா­விட மாடல் அர­சும் அதன் முத­ல­மைச்­ச­ரும் விரைந்து நட­வ­டிக்கை எடுத்­த­து­டன், முத­ல­மைச்­சரே  உட­ன­டி­யாக கரூர் சென்று நில­வ­ரத்தை அறிந்து, உயிர்ப்­ப­லி­கள் மேலும் அதி­க­மா­கா­மல் பாது­காத்­தார். ஆனால், இந்த ரீல் ஹீரோ விஜய், தனக்­கா­கக் காத்­தி­ருந்­த­வர்­கள் பலி­யா­வ­தைப் பார்த்­த­ப­டியே, எந்தச் சல­ன­மும் இல்­லா­மல் பிரச்­சார வாக­னத்தை விட்டு இறங்கி, காரில் திருச்­சிக்கு விரைந்து வந்து, அங்­கி­ருந்து சென்­னைக்கு விமா­னத்­தில் பறந்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருச்சி விமான நிலை­யத்­தில் விஜய்யை ஊட­கத்­தி­னர் பார்த்­த­தும், “சார்.. 30 பேருக்கு மேல செத்­துப் போயி­ருக்­காங்க சார்.. ஏதா­வது சொல்­லிட்­டுப் போங்க சார்” என்று கேட்­ட­போது, அவர்­க­ளுக்கு முதுகு காட்­டி­ய­படி ஓட்­ட­மும் நடை­யு­மாகச் சென்ற பொறுப்­பற்ற கோழை­தான் விஜய். அதன்­பி­றகு, கரூர் பக்­கமே வர­வில்லை. தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­கும் கரூ­ருக்கு வர­வில்லை. 285 நாட்­கள் கழித்து, கரூ­ருக்கு வந்து முத­லைக் கண்­ணீர் வடித்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">41 உயிர்ப்­ப­லி­க­ளுக்கு இவர் மீது பழி போட்­டு­விட்­ட­தாம் தி.மு.க. அரசு. தமிழ்­நாடே விஜய்­யின் இரக்­க­மற்ற தன்­மையை விமர்­சித்த நிலை­யில்,  அன்­றைய முத­ல­மைச்­சர் நம் கழ­கத் தலை­வர்­தான், ‘‘எந்த ஓர் அர­சி­யல் தலை­வ­ரும் தன் தொண்­டர்­கள் இறப்­பதை விரும்­ப­மாட்­டார்­கள்” என்று தனக்கே உரிய அர­சி­யல் முதிர்ச்­சி­யு­டன் அறி­வித்­தார். கத்­துக்­குட்­டி­யும் வெத்­து­வேட்­டு­மான விஜய், திரும்­பத் திரும்ப தன் மீது பழி போட்­ட­தா­கப் பொய் பேசித் திரி­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­த­லுக்கு முன் தொடங்­கிய விஜய்­யின் பொய்ப் பிரச்­சா­ரம், இடைத்­தேர்­தல் வரக்­கூ­டிய நேரத்­தி­லும் முடி­ய­வில்லை. அதே மேடை, அதே நாட­கம், அதே பொய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ரில் ஜூலை 10ந் தேதி அவர் செய்த பிரச்­சா­ரத்­தில் ஏதே­னும் ஒரே­யொரு உண்மை பேசி­யி­ருப்­பாரா? அத்­த­னை­யும் பொய்­கள்­தான். அதில் ஒரு­ சி­ல­வற்­றைப் பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 1- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்சி வந்­த­தும் இலஞ்­ச­மும் ஊழ­லும் ஒழிந்­து­விட்­ட­தாம். பொது­மக்­க­ளி­டம் யாரா­வது இலஞ்­சம் கேட்­டால், விஜய் ஆட்சி நடக்­கி­றது என்று சொல்ல வேண்­டு­மாம். சென்னை திரு­வொற்­றி­யூ­ரில் வீடு கட்­டும் நடுத்­த­ரக் குடும்­பத்துப் பெண்­ம­ணி­யி­டம் த.வெ.க நிர்­வாகி லஞ்­சப் பணம் கேட்டு தொந்­த­ரவு செய்­வ­தை­யும், பணம் தரா­விட்­டால் வீடு கட்ட முடி­யாது என மிரட்­டு­வ­தா­க­வும் ஊட­கத்­தி­ன­ரி­டம் கண்­ணீ­ரு­டன் பேசி­யி­ருக்­கி­றார்­கள். த.வெ.க. வழக்­க­றி­ஞர் அமைப்­பின் நிர்­வா­கியே, அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்கு 10 இலட்­சம் முதல் 30 இலட்­சம் வரை லஞ்­சம் கேட்­கி­றார்­கள் என்று, அமைச்­சர் புஸ்ஸி ஆனந்த் பெயரை இழுத்­துப் புகார் செய்­தி­ருக்­கி­றார். என்ன நட­வ­டிக்கை எடுத்­து­விட்­டார் விஜய்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செங்­கல் சூளை­யில் வசூல், வாரச்­சந்­தை­யில் வசூல் மிரட்­டல் என த.வெ.க.வின­ரின் அடா­வ­டி­கள் நாள்­தோ­றும் வெளிப்­ப­டு­கின்­றன. அண்­மை­யில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க.வில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கும் 
அ.தி.மு.க.வின் முன்­னாள் அமைச்­சர்­க­ளான இரண்டு விஜ­ய­பாஸ்­கர்­களை வைத்­துக்­கொண்டு, அதி­லும் ஒரு விஜ­ய­பாஸ்­கரை மேடை­யி­லேயே வைத்­துக்­கொண்டு, ‘ஊழலை ஒழித்­து­விட்­டோம்’ என்று எப்­ப­டித்­தான் சிரிக்­கா­மல் ‘பஞ்ச்’ டய­லாக் பேசு­கி­றார் முதல்­வர் விஜய்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 2 –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">- த.வெ.க. ஆட்சி வந்த பிற­கு­தான், பொது­மக்­கள் அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு வந்­தால், அதி­கா­ரி­கள் அவர்­களை மிகுந்த மரி­யா­தை­யு­டன் நடத்­து ­கி­றார்­க­ளாம். இது­வும் விஜய் பேச்­சு­தான். அதே திரு­வொற்­றி­யூ­ரில், த.வெ.க. அர­சின் நிர்­வாக அவ­லட்­ச­ணத்­தால் இரவு முழு­ வ­தும் ஏற்­பட்ட மின்­த­டை­யைப் பொறுக்­க­மு­டி­யா­மல் மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­திற்­குச் சென்ற பொது­மக்­களை அங்­கி­ருந்த அதி­கா­ரி­க­ளும் அலு­வ­லர்­க­ளும் எந்­த­ அள­வுக்கு இழி­வு­ப­டுத்தி விரட்­டி­னர் என்­பது ஊட­கங்­க­ளி­லேயே வீடி­யோ­வாக வெளி­யா­கி­யுள்­ளது. ‘ரீல்ஸ்’ முதல்­வ­ருக்கு இதை­யெல்­லாம் பார்க்க நேர­மில்­லையா? விருப்­ப­மில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 3 –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று விஜய் பேசத் தொடங்­கி­ய­தும் எதிர்க்­கட்­சி­யான தி.மு.க.வின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வெளியே ஓடி­விட்­டார்­க­ளாம். கரூர் நாடக மேடை­யில் விஜய்­யின் அண்­டப்­பு­ளுகு வச­னம் இது. ஆளு­நர் உரை மீதான விவா­தங்­க­ளுக்­குப் பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் என்ற முறை­யில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விஜய் பேசும்­போது, ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று குற்­றம்­சாட்­டி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான தி.மு.க.வின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் எழுந்து, “எந்த பார்ட்டி? எந்த பார்ட்­டிக்­கான ஃபண்ட் என்­பதை ஆதா­ரத்­து­டன் தெரி­விக்க வேண்­டும். அப்­போ­து­தான் முத­ல­மைச்­சர் வைக்­கும் குற்­றச்­சாட்­டுக்கு எங்­க­ளால் ஆதா­ரங்­க­ளு­டன் பதில் சொல்ல முடி­யும்’‘ என்று பேர­வைத் தலை­வ­ரி­டம் தெளி­வா­கச் சொன்­னார். அதன்­பி­ற­கா­வது, எந்த பார்ட்டி? எவ்­வ­ளவு ஃபண்ட்? என்று 
சட்­ட­மன்­றத்­தில் ஏதே­னும் புள்­ளி­வி­வ­ரத்­து­டன் முத­ல­மைச்­சர் பேசி­னாரா? அவ­தூ­று­களை மட்­டுமே அவர் தொடர்ந்து பேசி­ய­தா­லும், அதை பேர­வைத்­த­லை­வர் அனு­ம­தித்­த­தா­லும் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய ஜன­நா­யக நெறி­மு­றைப்­படி தி.மு.க.வினர் வெளி­ந­டப்பு செய்­த­னர். 
சட்­ட­மன்­றத்­தில் ஆதா­ரம் காட்­டிப் பேச 
வக்­கில்­லாத விஜய்க்கு, கரூர் மேடை நாட­கத்­தி­லும் ஆதா­ரத்­தைக் காட்­டும் தெம்­பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ரில் கடந்த செப்­டம்­ப­ரில், ‘பாட்­டி­லுக்கு பத்து ரூபாய்’ என்று பாட்டு பாடிய விஜய், இந்த முறை அந்­தக் கரூ­ரில் ஏன் பாட­வில்லை? பாடி­னால், பாட்­டி­லுக்கு 20 ரூபாய் என்று பாட­வேண்­டி­யி­ருக்­கும். அந்த பாட்­டில் ஃபண்ட், எந்த பார்ட்­டிக்­கான ஃபண்ட் என்று வெளிப்­ப­டை­யா­கப் பேச விஜய்­யால் முடி­யுமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 4 –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரான செந்­தில்­பா­லாஜி எம்.எல்.ஏ ஊரை­விட்டு ஓடி­விட்­டார் என்று பச்­சைப் பொய் ஒன்றை விஜய் அந்த மேடை­யில் அவிழ்த்­து­விட்டு, ‘ஓடு..ஓடு..ஓடு..’ என்று பாட்­டும் பாடித் தன் தரம் இவ்­வ­ள­வு­தான் என்­ப­தைக் காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செந்­தில்­பா­லாஜி எங்கே ஓடி­னார்? விஜய்­தான் நேருக்கு நேர் எதிர்­கொள்­ளத் துணிச்­ச­லின்றி, தன்­னு­டைய கரூர் கூட்­டத்­துக்கு முன்­பாக செந்­தில்­பா­லா­ஜி­யைக் கைது செய்ய வேண்­டும் என்­றும், கரூர் உயிர்ப்­ப­லி­கள் நடந்­த­போது விசா­ரணை நடத்­திய காவல்­துறை அதி­கா­ரி­கள் ஒரு­வர் கூட அந்த மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டாது என்­றும் முடி­வெ­டுத்து, செந்­தில் பாலாஜி மீது பொய்­வ­ழக்­குப் போட்­டும், கால்­து­றை­ யி­னர் மீது பணி­யிட மாற்ற நட­வ­டிக்கை எடுத்­து­விட்­டும்­தான் கரூ­ருக்கு வந்­தார். ஒரு ஹீரோ­வுக்கு ஏன் இத்­தனை பயம்? எதற்­காக அதி­கா­ரத் துஷ்­பி­ர­யோ­கம்? விஜய் அரசு போட்ட பொய் வழக்கை 
செந்­தில்­பா­லாஜி சட்­ட­ரீ­தி­யாகச் சந்­தித்து, முன்­ஜா­மீன் பெற்று, இங்­கு­தான் இருக்­கி­றார். கரூ­ரி­லி­ருந்து கடந்த செப்­டம்­பர் மாதம் 27ஆம் தேதியே ஓடி­ய­வர் விஜய்­தானே, அவ­ருக்­குத்­தானே அவர் பாடிய பாட்டு பொருந்­தும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 5 –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓட்­டுக்­குப் பணம் கொடுக்­கும் வழக்­கத்தை ஒழித்து, த.வெ.க ஆட்­சிக்கு வந்­துள்­ள­தா­கப் பெருமை பேசிக் 
கொள்­கி­றார் விஜய். த.வெ.க.வின் ஓம­லூர் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்­ட­வர், கட்­சிக் கூட்­டத்­தி­லேயே வெளிப்­ப­டை­யாக 
‘ஓட்­டுக்கு 2000 ரூபாய் கொடுத்­தது’ குறித்துப் பேசி­யதை விஜய் வச­தி­யாக மறந்து போய்­வி­டு­கி­றார். ஒரு வேட்­பா­ளர் வெளியே சொல்­லி­விட்­டார். மற்­ற­வர்­க­ளின் யோக்­கி­யதை இனி மெல்ல மெல்ல வெளியே வரும். ஓட்­டுக்­குப் பணம், மாற்­றுக் கட்சி வேட்­பா­ளர்­க­ளி­டம் நடத்­திய பேரம் அனைத்­தும் ஊர­றிந்த ரக­சி­யங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 6- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">- த.வெ.க ஆட்சி வந்­த­தும் பல திட்­டங்­கள் நிறை­.ேவற்­றப்­பட்டு விட்­ட­தாக விஜய் கூச்­ச­மே­யின்றி பேசி­னார். தேர்­த­லுக்கு முன்பு அவர் பேசிய போதெல்­லாம் ‘‘நிறை­வேற்­றக்­கூ­டிய வாக்­கு­று­தி­க­ளைத்­தான் கொடுப்­பேன்’’ என்­றார். கரூர் கூட்­டத்­தில் தன் வாக்­கு­று­தி­களை  priority (முன்­னு­ரிமை) அடிப்­ப­டை­யில் நிறை­வேற்­று­வேன் என்­கி­றார். விஜய் அவ­ரது படங்­க­ளில் இரட்டை வேடங்­க­ளில் நடித்­தி­ருக்­க­லாம். ஆனால், இரட்டை நாக்­கு­டன் பேசக்­கூ­டாது. த.வெ.க ஆட்­சி­யின் திட்­டங்­கள் பற்றி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரூ­ரில் பேசிய விஜய், அவர் தொடங்­கி­வைத்த ‘சிங்­கப் பெண்’ திட்­டம் பற்றி ஏன் பேச­வில்லை? பெண்­கள் பாது­காப்பு பற்றி ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன் கூப்­பாடு போட்­ட­வர், இப்­போது ஆட்­சி­யா­ளர்­களே ‘போக்சோ’ சட்­டத்தை எதிர்­கொள்­ளும் நெருக்­க­டி­யில் இருக்­கும்­போது, ஏன் அது பற்றி வாய் திறக்க மறுக்­கி­றார்? நேர்­மை­யான ஆட்சி நடத்­து­வ­தாக இருந்­தி­ருந்­தால், த.வெ.க.வின் எம்.எல்.ஏ., நிர்­வா­கி­கள் ஆகி­யோர்­தான் சிங்­கப்­பெண்­க­ளின் பிடி­யில் சிக்­கி­யி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘யோக்­கி­யன் வரு­கி­றார்..சொம்­பைத் தூக்கி உள்ளே வை’ என்­பது போலத்­தான், கரூர் மேடை­யில் விஜய் நடத்­திய கண்­றாவி நாட­கம் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>